Advertisement

மயக்கும் மான்விழியாள் 32

மதுமிதா தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள் அந்த அறையில்.அவளது முகமே கலையிழந்தது போல இருந்தது.விட்டால் அழுதுவிடுபவள் போல் அவள் அமர்ந்திருக்க,அவளின் எதிரில் நின்றிருந்த நிவேதாவோ தன் சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டுக் கொண்டிருந்தாள்.சுந்தரி தன் மகளுக்கு புத்திமதி கூறுகிறேன் என்று மதுவை பிழிந்தெடுத்துக் கொண்டிருக்க மதுவிற்கு காதில் இருந்து ரத்தம் வந்துவிடும் போல் இருந்தது.

மது தடுத்து ஏதாவது கூற வந்தாலும் அதற்கும் சுந்தரி புத்தி சொல்ல தொடங்க மதுவின் பாடு சற்று திண்டாட்டம் ஆனது.அவளின் நிலையைக் கண்ட நிவேதாவிற்கு சிரிப்பை அடக்க முடியாமல் வாயை பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க மது அவளை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்துக் கொண்டு நின்றாள்.

யாரேனும் தன்னை காக்க மாட்டார்களா என்று கடவுளுக்கு மது வேண்டுகோள் வைக்க,அவளின் வேண்டுதல் கடவுளை சென்றடைந்ததோ இல்லையோ நித்யாவை சென்றடைந்தது போலும் தன் சித்தியிடம் ஏதோ கேட்க வந்த நித்யா அவர் மதுவை ஒரு வழி செய்து கொண்டிருப்பதைக் கண்டு,

“சித்தி…என்னதிது ஏன் இப்படி மதுவை போட்டு படுத்திரீங்க….”என்று கேட்க சுந்தரியோ,

“நீ சும்மா இரு நித்தி….இவ ஆள் தான் வளந்திருக்காளே தவிர மூளை இன்னும் வளரவே இல்லை….இவ செஞ்ச காரியத்துக்கு அண்ணி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்….இதுல இவ திரும்பியும் ஏதாவது ஏடாகூடமா எதுவும் செய்யக் கூடாது இல்ல அதுக்கு தான் சொல்லுறேன்….”என்று சுந்திர நீண்ட விளக்கம் தர மதுவிற்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

என்ன நினைத்துவிட்டார்கள் என்னை…ஒருமுறை ஏதோ தவறு செய்தால் அதையே பிடித்துக்கொண்டு எனக்கு பொறுப்பு இல்லை என்று கூறுவார்களா???அவ்வளவு தானா என் மேல் உள்ள நம்பிக்கை…இவர்களே இவ்வாறு பேசுகிறார்கள் என்றால் அத்தை???என்று தேவகியை நினைத்த மதுவிற்கு கண்கள் கலங்க தொடங்கியது.

சற்றுமுன் தான் தங்கள் காதல்,கல்யாணத்தில் நிறைவேறியதில் அகமகிழ்ந்து,தன் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்திருக்க அதற்குள் தன் அன்னையின் இத்தகைய பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபம் தலைக்கேறினாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.மதுவின் நிலையை அறிந்த நித்யா தான்  சுந்தரியை அமைதிப்படுத்தி அனுப்பினாள்.

சுந்தரி சென்றவுடன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள் மது.அவளின் நிலைக் கண்ட நித்யாவிற்கும் பாவமாக இருக்க,

“மது…என்னதிது சின்னபுள்ளை மாதிரி கண் கலங்கிட்டு….சந்தோஷமான தருணத்தை ரசிக்கிறதவிட்டுட்டு இப்படி அழலாமா…”என்று மதுவின் தலையை நிமிர்த்தி அவளின் கண்களை துடைக்க மது,

“பார்த்தியா நித்திக்கா..எப்படி பேசிட்டு போறாங்கனு….ஏதோ ஒருதடவ தப்பு செஞ்சுட்டேன் தான் அதுக்காக எனக்கு பொறுப்பே இல்லங்குற மாதிரி பேசிறாங்க….இவங்களே இப்படி பேசினா அத்தை….”என்று மேலும் சொல்ல முடியாமல் அழத்தொடங்க நித்யாவிற்கு இப்போது மதுவின் மனம் நன்கு புரிந்தது.அவளின் தலையை ஆதரவாக கோதியவள்,

“மது நான் சொல்லுறத பொறுமையா ஒருநிமிஷம் கேளு…”என்று கூற மதுவும்,

“சொல்லு…”என்று கூற நித்யா மதுவின் கைகளை பிடித்துக் கொண்டு,

“மது….நீ முதல்ல ஒரு விஷயத்துல தெளிவா இரு…தேவகி அத்தை உன்னை என்னைக்கும் தப்பா நினைச்சிருக்க மாட்டாங்க….நீ நினைக்கலாம் உனக்கு எப்படி தெரியும்னு நான் அவங்க கூட கொஞ்ச நாள் தான் பேசியிருக்கேன்….அதனால சொல்லுறேன் அவங்களுக்கு அன்னக்கி நீ செஞ்ச காரியத்தால உன் மேல கோபம் நிறைய இருந்திருத்திருக்கும் தான் ஆனா உங்க கல்யாண நிச்சயம் செஞ்சது இருந்து அவங்க முகத்துல ஒரு நிறைவை தான் நான் பார்த்தேன்….அதனால அவங்க கண்டிப்பா உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க….அடுத்து சித்தி பேசினதுக் காரணம் அளவுக்கு அதிகமான பயம்…. எங்க நீ துடுக்குதனமா ஏதாவது பேசிடுவியோனு….அவங்க பயப்படுற மாதிரி தான நீயும் இருக்க….”என்று கடைசியில் குற்றம் சாட்டுவது போல நித்யாவும் பேச மதுவிற்கு அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்தது,

“என்ன என்ன நான் என்ன பண்ணேன்….சும்மா என்னையே சொல்லிட்டு இருக்கீங்க எல்லாரும்….”என்று தன் குரலை உயர்த்த நித்யா எதுவும் பேசாமல் முறைக்க,மது அவளின் முக மாறுதலைக் கண்டு அடங்கினாள்.மது அமைதியான உடன் நித்யா,

“இதை தான் சொன்னான்…நான் என்ன சொல்லவறேன்னே நீ முழுசா கேட்காம நீயா எதாவது நினைச்சுக்கிட்டு இப்படி பேசாத…கல்யாணத்துக்கு முதல் நாளும் இப்படி தான் நீ ரூபன் கிட்ட ஏதோ பேசின அதான் சித்தி அவ்வளவு டென்ஷன் ஆனாங்க…இதோ இப்ப கூட சித்தி உன்கிட்ட அவ்வளவு பேசினதுக்கும் உன் முன் கோபம் தான் காரணம்….ஏற்கனவே என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேனு வீட்ல எல்லாருக்கும் பயம் அதனால தான் சித்திக்கும் இன்னும் பயம் அதிகமா இருக்கலாம்….”என்று கோபமாக ஆரம்பித்தவள் குரல் கமற தன் மனதில் உள்ளதை கூறி முடித்தாள்.

“அக்கா….என்னை சொல்லிட்டு நீ இப்ப அழலாமா….வேண்டாம் பழசை நினைக்காத மறக்க முயற்சி செய்…நான் இனி தேவையில்லாம கோபப்படுறத குறைச்சுடுறேன்….நீ அழாதா எனக்கு கஷ்டமா இருக்கு….”என்று மது நித்யாவை அணைத்துக் கொண்டு கூற நித்யாவிற்கு அழுகை சற்று மட்டுப்பட,அப்போது அறையின் உள்ளே வந்த ரூபன்,

“என்ன அக்கா,தங்கை பாசம் கொஞ்சம் அதிகமா இருக்கு…”என்று கேலியாக கூற ரூபனின் குரலைக் கேட்ட இருவரும் திரும்பி பார்க்க அங்கே அறை கதவில் சாய்ந்தபடி நின்றவன்,மது தன்னைக் கண்டதும் அவளை பார்த்து எப்போதும் போல் தன் புருவத்தை உயர்த்திக் காட்ட,மதுவிற்கு நித்யாவின் முன்னே இவ்வாறு செய்கிறானே என்று சங்கடமாக இருந்தது.மதுவின் நிலை உணர்ந்த நித்யா,

“நான் வெளில இருக்கேன்…”என்று விட்டு வெளியில் சென்றுவிட்டாள்.நித்யா சென்றவுடன் மதுவின் அருகில் வந்த ரூபன்,

“என்ன…”என்று மீண்டும் அதே போல் செய்ய மதுவின் கன்னங்கள் இரண்டும் செம்மையுற்றது,அதை அவனிடம் காட்டாமல் மறைக்க முயல அவளது முகத்தை தன் கையால் நிமர்த்தியவன்,

“ரொம்ப அழகா வெட்கப்படுற….”என்று அவளது கன்னங்களை விரல் கொண்டு தீண்ட பெண்ணவளின் தேகம் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது அவனின் தீண்டலில்.அவனின் தொடுகை அவளுக்கு பரிச்சயமே என்றாலும் கணவனான பின் உரிமையுடன் கூடிய அவன் தொடுகையில் உள்ளம் நடுங்க தான் செய்தது.அவளது நடுங்கும் உதடுகளில் தன் விரல் கொண்டு வருட மொத்தமாக நிலைகுலைந்த மது,

“அத்தான்…”என்று மென் குரலில் அழைக்க ரூபனும் அதே மோன நிலையில்,

“விழி…”என்று ஆழ்ந்த குரலில் அழைத்தவன் அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்திருந்தான்.அவனது விரல்கள் மதுவின் உடலில் ஊர்வலம் வர மதுவின் உடலில் புது ரத்தம் பாய்வது போல ஒரு உணர்வு.இருவரும் தங்களை மறந்து தங்கள் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க,

“மதுக்கா….”என்று ஆனந்தின் குரல் அறை வாயிலில் கேட்கவும் முதலில் சுதாரித்த ரூபன் மதுவை விட்டு விலகினான்.மது சுதாரிக்கும் முன்பே ஆனந்த் உள்ளே வந்திருந்தான்.

“அத்தான்,அக்கா நாங்க எல்லோரும் வீட்டுக்கு கிளம்புறோம்..அதான் உங்கள அத்தை கூட்டிட்டு வர சொன்னாங்க….”என்று தகவலைக் கூற மதுவிற்கு என்ன நடக்கிறது என்பது புலப்படவே சில நிமிடங்கள் ஆனது.அவனின் தொடுகையின் தாக்கத்தில் இருந்து வெளிவராமல் அவள் பேந்த பேந்த விழிக்க ஆனந்திற்கு தன் அக்காவின் முகம் ஏன் இவ்வாறு உள்ளது என்று புரியாமல்,

“அக்கா…என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க…”என்று கேட்க அதற்கும் மதுவிடம் இருந்து பதில் இல்லை திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தவளைக் காண்கையில் ரூபனுக்கு சிரிப்பு பீறிட்டது இருந்தும் அவள் நிகழ்வுக்கு வரவில்லை என்பதை உண்ரந்து,

“சரி ஆனந்த் நாங்க வரோம்…நீ போ…”என்று கூற அப்போது தன் அக்காவின் முகம் பார்த்து ஆனந்த் நின்றவன்,

”என்ன ஆச்சு அத்தான் ஏன் அக்கா இப்படி நிக்குறா…”என்று தன் சந்தேக்தை கேட்க,

“ஒண்ணுமில்ல ஆனந்த்…”என்றவன் மதுவின் அருகில் வந்து,

“ஏய் ஏன்டி இப்படி நிக்கிற…அவன் பயப்படுறான் பாரு…”என்று கூற ரூபனின் குரல் மற்றும் தொடுகையில் நிகழ்வுக்கு வந்தவள்,

“எல்லாம் உங்களால….”என்று முறைத்துவிட்டு செல்ல,ரூபனோ இன்னும் ஆரம்பிக்கவேயில்லை அதுக்கே இப்படியா என்று மனதில் நினைத்தவாறே அவளின் பின்னே சென்றான்.மதுவின் குடும்பம் மனநிறைவோடு விடைபெற்றது.போகும்போது கூட சுந்தரி மகளுக்கு அறிவுரை வழங்கிவிட்டு தான் சென்றார்.இம்முறை மது அவரின் பேச்சில் கோபம் கொள்ளாமல் அமைதியாக கேட்டு கொண்டு தலையாட்ட சுந்தரியும் மனநிம்மதியுடன் விடைப்பெற்றார்.

மதுவால் தேவகியுடன் இன்னும் முழுதாக ஒன்றமுடியவில்லை ஒருவித தயக்கம் அவளது மனதை அறித்துக் கொண்டு தான் இருந்தது.தன் வீட்டினர் சென்றவுடன் தன் பாட்டியின் பின்னே சுற்றிக் கொண்டு திரிந்தாள்.தேவகிக்கும் மதுவின் மனநிலை புரிந்ததால் அவரும் மதுவிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார்.இதை கவனித்த ரூபனுக்கு தான் மனது ஒருநிலையில் இல்லை.அவனுக்கு மது,தேவகி இருவருமே முக்கியமானவர்கள்,அதனால் இதை எவ்வாறு சரிசெய்வது என்ற யோசனை மனதில் எழுந்தது.

ரூபனின் மனநிலை அறியாத மதுவிற்கோ இன்றைய இரவு பற்றிய நடுக்கம் மனதில் ஒருபுறம் பயத்தைக் கொடுத்தது.இதோ மது நினைத்தது போல இரவும் வர மதுவை மிதமான அலங்காரத்துடன் ரூபனின் அறைக்கு அனுப்பினர்.மதுவோ தடதடக்கும் இதயத்துடன் ரூபனின் அறைக்குள் வந்தாள்.அறை மிதமான அலங்காரத்துடன் இருக்க ரூபனைக் காணவில்லை எங்கே என்று கண்களால் அலசியவள் குளியல் அறையில் சத்தம் கேட்கவும் சற்று ஆசுவாசமானவள் அறையின் ஜன்னல் அருகே சென்று நின்றுகொண்டாள்.

குளியல் அறையில் இருந்து வெளியில் வந்த ரூபன் மதுவைக் கண்டு மென்னகையுடன் அவளை அறியாவண்ணம் நெருங்கினான்.அவளோ ஏதோ சிந்தனையில் சிக்குண்டவள் போல வானத்தை வெறித்துக் கொண்டிருக்க ரூபன் வந்ததையோ,தன்னிடம் நெருங்கியதையோ அறியவில்லை,அவளுக்கு மனதில் சில சிந்தனைகள் அவற்றை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும் எவ்வாறு ரூபனிடம் கேட்பது என்ற யோசனையில் இருந்தாள்.

மதுவின் அருகில் வந்தவுடன் தான் அவள் ஏதோ யோசனையில் இருப்பது தெரிந்தது.அவளின் யோசனையை கலைக்காமல் அவளை பின்னிருந்து அணைத்தவன்,

“என்ன ஓடிட்டுட்டு இருக்கு என் விழி மனசுல…”என்று கேட்க அப்போது தான் ரூபனின் அருகாமையை உணர்ந்த மதுவிற்கு மனது சற்று நடுங்க தொடங்க அவனின் பிடியில் இருந்து விலக முற்பட்டாள்.மதுவின் விலகலைக் கண்ட ரூபனின் பிடி இன்னும் இறுகியது அதில் மேலும் மது நெளிய அவனின் கைகள் மதுவின் இடையை இறுகி பிடித்தது அவனின் விரல்களின் அழுத்தை தாள முடியாமல் மது,

“அத்தான்….”என்று வெளி வராத குரலில் அழைக்க ரூபனோ மதுவின் கழுத்தில் முகம் புதைத்து தன் இதழலாள் கோலம் போட்டவாறே,

“ம்ம் சொல்லு விழி…”என்று குழைந்து வந்தது ரூபனின் குரல்.அவனது விரல்கள் மதுவின் உடலில் ஊர்ந்து வர்ணஜாலங்களை செய்ய தொடங்க தான் முழுவதும் ரூபனின் வாசமாவதை உணர்ந்தவள்,அவனிடம் தன் மனதில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திய பின் தான் அவனுடன் இணைய முடியும் என்பதை உணர்ந்தவள் அவனின் பிடியில் இருந்து விடுபட முயல ரூபனோ அவனது உலகில் இருந்தான். அவனுக்கு மதுவின் மனநிலை புரியவில்லை.அவளது விலகலை பெரிதாக எடுக்காமல் இருக்க மதுவின் விலகல் போராட்டமாக மாறத் துவங்கிய போது தான் நிகழ்வுக்கு வந்த ரூபன்,

“என்ன மது…என்ன தான் உன் பிரச்சனை….நான் இப்ப என்ன செஞ்சுட்டேனு இப்படி செய்ற…..உனக்கு பிடிக்கலனா இனி கிட்ட வரல போதுமா….”என்று அவளது விலகலை கண்டு எரிச்சல் உற்றவாறே கேட்டவன் தன் படுக்கையில் வந்து அமர்ந்துவிட்டான்.

மதுவிற்கு ரூபனின் கோபம் நியமானது தான் என்றாலும் தன் மனதில் உள்ள சஞ்சலங்களை நீக்கிய பிறகே அவனுடன் தன் இல்லறத்தை தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.அதனாலே தன்னை முயன்று நிதானத்திற்கு கொண்டு வந்தவள்,அவனின் பக்கத்தில் அமர்ந்து அவனது கரங்களுடன் தன் கரத்தினை கோர்த்து,

“அத்தான்….”என்று அழைக்க அவனோ இவளின் புறம் திரும்பவே இல்லை,முகமே இறுகி இருந்தது.அவனது முகத்தை தன் புறம் திருப்பியவள்,

“அத்தான்….ப்ளீஸ்….நான் சொல்றத முதல்ல கேளுங்களேன்….ப்ளீஸ்…”என்றாள்.அவனோ எதுவும் கூறாமல் இப்போதே பேச வேண்டுமா என்று அர்த்தமாக பார்க்க மதுவும்,

“ஆமாம் அத்தான்….இப்பவே பேசனும் ப்ளீஸ்….”என்றாள் அவனின் பார்வையின் அர்த்தததை உணர்ந்து.அவள் இவ்வளவு தூரம் கூறுகிறாள் என்றால் ஏதோ முக்கியமான விஷயமாக தான் இருக்கும் என்பதை உணர்ந்தவன் அவள் புறம் நன்கு திரும்பி,

“சொல்லு…என்ன கேட்கனும் என்கிட்ட….”என்றான் சற்று பொறுமையாக.ஆனால் குரலில் இறுக்கம் இருந்ததாக தான் மதுவிற்கு தோன்றியது.

“அத்தான்…அத்தைக்கு என்னை பிடிக்கும் தான…”என்று தன் மனதில் தோன்றிய முதல் கேள்வியை கேட்க ரூபனோ அவளை நீ என்ன லூசா என்ற ரீதியில் பார்த்தான்.அவனது பார்வையின் அர்த்தை உணர்ந்தவள்,

“அத்தான் நீங்க என்ன நினைக்கிறீங்கனு எனக்கு தெரியும் இருந்தாலும் என் மனசுல தோணினத நான் கேட்டு தெளிவு படுத்திக்கிறேன்….எனக்கு அவங்ககிட்ட பேசக்கூட சங்கடமா இருக்கு அதனால தான்…ப்ளீஸ் சொல்லுங்க இந்த கல்யாணம் அத்தையோட முழு சம்மதத்தோட தான நடந்தது…..”என்று தன் கேள்விக்கு நீண்ட விளக்கம் தர ரூபனுக்கும் அப்போது தான் மதுவின் மனநிலை நன்கு புரிந்தது.இருந்ததும் இவ்வளவு நாள் இல்லாமல் இன்று திடீர் என்று ஏன் இந்த சந்தேகம் என்று அவன் யோசிக்க அதற்கும் பதில் தந்தாள் மது.

தன் அன்னை மாலை கூறியவற்றை கூறியவள்,

“அம்மாக்கே என் மேல நம்பிக்கை இல்லை….அத்தை என்னை நம்புவாங்களா…ஏற்கனவே உனக்கு பொறுப்பில்லனு திட்டியிருக்காங்க….அதனால???”என்று யோசனையுடன் அவள் நிறுத்த அவளது தலையை செல்லமாக தட்டிய ரூபன்,

“மண்டு…இதுதான் உன் மண்டையை குடைஞ்சுதா….நான் பயந்துட்டேன்….”என்று கூறிவிட்டு அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்தவன்,

“உனக்கு பதில் வேணும்னா நீ இப்படியே இருந்தாதான் கிடைக்கும்….”என்று கட்டளையாக கூற மது அவனை முறைக்க முயன்று தோற்றாள்.பின் அவன் கூறியபடி அவனது நெஞ்சில் வாகாக சாய்ந்து முகத்தை மட்டும் நிமிர்த்தி,

“போதுமா…இப்ப சொல்லுங்க….”என்று கேட்க ரூபனுக்கு மனது ஒருநிலையில் இல்லை இருந்தாலும் சொல்லாமல் ஒண்ணும் கிடையாது என்பது போல அவள் இருக்க வேறு வழியில்லாமல் கூறினான்.

“மது அம்மாக்கு உன் மேலே கோபம் இருந்தது உண்மை தான்….என்னை அந்த நிலையில பார்த்ததும்  அம்மாவால தாங்கிக்க முடியல அதனால அப்படி பேசிட்டாங்க…எப்போ நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டோனோ அம்மா என் முகத்தையும் அதுல தெரிஞ்ச மலர்ச்சியும் பார்த்துட்டு…உனக்கு பிடிச்சா எனக்கும் பிடிச்சிருக்கு ரூபா…எப்ப கல்யாணம் பேசட்டடும்னு தான் என்கிட்ட கேட்டாங்க…நான் தான் உங்க வீட்டு நிலையை சொல்லி கொஞ்ச நாள் தள்ளி போட்டேன்….”என்றவன் தன்னையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் நெற்றியில் அழுத்தமாக இதழ் ஒற்றிவிட்டு,

“மெதுவா உங்க வீட்டு பிரச்சனையை முடிச்சிட்டு உன்கிட்ட வந்தா நீ என்கிட்ட முறைச்சிக்கிட்டு நின்னன….என்னடா இது உன் விஷயத்தில ரொம்ப சோதப்புறேனோ எனக்கே ஒரு டவுட் வந்துடுச்சு……எங்க நான் சாதாரணமா பேசி திரும்பவும் சோதப்பிடுவனோனு ஒரு பயம்… அதனால தான் உன்கிட்ட திரும்ப பேச முயற்சி செய்யல….அதான் நேரா மாமாவ பார்த்தேன் பொண்ணு கேட்டேன்….”என்று கூற அதுவரை ரூபனின் தோள்களில் சாய்ந்திருந்த மது வேகமாக எழுந்து,

“என்ன நீங்க அப்பாக்கிட்ட பொண்ணு கேட்டீங்களா????”என்று ஆச்சிரியமாக கேட்டாள்.அவளின் தலையில் கொட்டியவன்,

“உன்னை என்ன சொன்னேன்…”என்று கேட்டுவிட்டு தன் நெஞ்சை காட்ட,மதுவோ அதை கவனிக்கும் நிலையில் இல்லை,

“அய்யோ…அத்தான் இப்ப இதுவா முக்கியம் சொல்லுங்க…”என்றவளுக்கு தேவகி தன்னை தவறாக நினைக்கவில்லை என்பதே அவளின் மன பாரத்தை குறைத்திருக்க இதில் ரூபன் தன் தந்தையிடம் பேசியுள்ளான் என்பது மேலும் மகிழ்ச்சியை தந்தது அதனால் ஆர்வமாக கேட்டாள்,அவளை இழுத்து மீண்டும் தன் மார்பில் போட்டுக் கொண்டவன்,

“ம்ம்…நான் தான் கேட்டேன்…மாமாக்கு ரொம்ப சந்தோஷம்…நானே எப்படி உங்கிட்ட பேசறதுனு யோசிச்கிட்டு இருந்தேன்னு சொன்னார்….மாமா சம்மதம் கிடைச்ச உடனே உன்கிட்ட பேச சொன்னேன்….முதல்ல நீ ரொம்ப யோசிக்கிறதா சொன்னார்…எனக்கு செம்ம கோபம் சரிதான் போடினு போகிடலாமானு தோணுச்சு…”என்று அவன் கூறவும் தன்னை அணைத்திருந்த கைகளை நறுக்கென்று கிள்ளினாள் மது,

“ப்ச்…ஏய் ராட்சசி எதுக்குடி கிள்ளுற….”என்று கத்தியவன் அவளை மேலும் தன் மார்போடு இறுக்க மதுவிற்கு மூச்சு முட்டும் போல் ஆனது.

“அத்தான் முடியல விடுங்க…”என்று சற்று திணறலாகவே கூற,

“திணறுடி…இப்படி தான என்னை திணறவிட்ட…இப்ப நீயும் அனுபவி டி ராட்சசி…”என்றவன் அவளை மேலும் இறுக்க இம்முறை அவளின் முதுகலும்பே உடைந்துவிடும் அளவிற்கு இருந்தது அவனின் அணைப்பு.அவனின் செயலின் வலி தாளாமல் மதுவின் கண்கள் கலங்க தொடங்க அவளது முகமாற்றத்தை கண்டு விட்டவன்.

“இப்ப எதுக்கு கண்ணு கலங்குது தொலைச்சிடுவேன் பார்த்துக்க…”என்றவன் அவளது முதுகை நீவிவிட்டான்.தன் மேல் அதீத கோபம் மற்றும் காதலால் தான் இவ்வளவு செய்கிறான் என்று மதுவிற்குமே புரிந்தது.அதானல் எதிர்வாதம் புரியாமல் அவனின் தோள்களில் சாய்ந்தவள்,

“நான் இனி அழமாட்டேன் அத்தான்…நீங்க சொல்லுங்க…”என்றாள்.

“ஏய் நான் என்ன கதையா சொல்லுறேன்…போடி…”என்று முகம் திருப்ப,அவனின் முகம் திருப்பி,

“அத்தான் என் செல்ல அத்தான் இல்ல ப்ளீஸ்…”என்று கெஞ்ச அவளது கைகளை பிடித்து தடுத்தவன்,

“சரி நான் சொல்லி முடிச்சவுடனே நான் சொல்றது நீ கேட்கனும் ஓகேவா சொல்லு….”என்று விஷமமாக கேட்க தன் முகமும் அகமும் செம்மையுற அதனை மறைக்கும் பொறுட்டு அவனிடமே நெஞ்சில் தஞ்சம் புகுந்து தன் சம்மத்தை தெரிவித்தாள் மது.பின் ரூபன் தான் நித்யாவிடம் பேசியதாக கூறியவன்,

“உன் சம்மதம் வாங்க நான் பட்ட பாடு இருக்கே…”என்று பொய்யாக அலுத்துக் கொள்ள அவனைக் கண்டு அசடு வழிந்தாள் மது.தனக்காக இவ்வளவு செய்துள்ளான் என்ற நினைப்பே அவளை அவனிடம் மேலும் மயங்க செய்ய அவன் மேல் இருந்த காதல் மேலும் கூடி தான் போனது பெண்ணிற்கு.

“கதை முடிஞ்சிடுச்சு விழி…”என்று ரூபனின் குரலில் நிகழ்வுக்கு வந்தாள் மது.

“ஆங்…என்ன அத்தான் சொன்னீங்க…”என்று கேட்க அவளை இழுத்து மேல் போட்டு தன் கட்டிலில் புறண்டவன் அவளின் மேல் படர்ந்திருந்தான்,

“ம்ம்…இனி நோ பேச்சு…ஒன்லி ஆக்‌ஷென் தான்…”என்று கூறி அவளின் இதழ்களளை வன்மையாக கவ்விக் கொண்டான்.மதுவிற்கு என்ன நடக்கிறது என்று உணரும் முன்பே அவளை தன் முத்தால் முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தான் ரூபன்.கணவனின் முத்த ஊர்வலத்தில் பெண்ணவளின் தேகம் மொத்தமும் சிலிர்த்து அடங்க,

“அத்தான்…”என்று சிணுங்களாக ஒலித்தது மதுவின் குரல்,அவளின் செல்ல சிணுங்களுக்கு எல்லாம் தன் இதழ்களால் பரிசினை வழங்க,மது மொத்தமாக அவனில் கரைந்தாள்.தன் இத்தனை நாள் காதல்,காத்திரிப்பு அனைத்தையும் அவளிடம் சேர்பித்தான் அவளின் காதல் கணவன்.தங்கள் காதலின் கரைபுறண்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் இருவரும்.ஆதவன் தன் துயலை கலைக்கும் நேரம் தான் இவர்கள் துயில் கொண்டனர்.

Advertisement