Advertisement

மயக்கும் மான்விழியாள் 31

பூமிநாதனின் மனது நிறைந்து இருந்தது மகளை திருமணக் கோலத்தில் காண்கையில்.அன்று மது எதுவும் பேசாமல் எழுந்து செல்லவும் மனதிற்கு கஷ்டமாக உணர்ந்தவரை நித்யா தேற்றி சென்றிருந்தாலும் மகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று மனதில் சஞ்ஜலத்துடன் தான் இருந்தார்.ஆனால் மது இரு நாட்கள் சென்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த போதும் பூமிநாதன் ஒருவேலை மகள் தான் கூறியதற்காக சம்மதம் கூறுகிறாளோ என்று ஆராய்ச்சி பார்வை தான் பார்த்தார்.தந்தையின் பார்வை உணர்ந்த மது,

“ப்பா நான் முழுமனசா தான் சொல்லுறேன் எனக்கு சம்மதம்….”என்று சற்று நாணத்துடன் கூற பூமிநாதனுக்கு எதையோ வென்ற ஒரு உணர்வு.அதன் பின் நடந்தது எல்லாம் தான் அசுர வேகம் என்று தான் கூற வேண்டும்.மகளின் சம்மதம் கிடைத்த அடுத்த நிமிடம் பூமிநாதன் தேவகிக்கு அழைத்துவிட்டார்.முன்பே ரூபன் அவரிடம் கூறியிருந்தான் தான் தன் அன்னையின் சம்மத்ததை அதனால் அவருக்கு சற்று மனநிம்மதி.தேவகியும் ரூபன் கூறிய பிறகு அவ்வபோது சுந்தரியிடம் நலம் விசாரிப்பார்.

பூமிநாதன் ஏதோ தைரியத்தில் தேவகிக்கு அழைத்துவிட்டார் தான் ஆனால் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தயக்கம்.ஆனால் தேவகிக்கு அந்த தயக்கம் எல்லாம் இல்லை அதனால் அவர் சகஜமாக பேச அதுவே பூமிநாதனுக்கு மனபாரத்தை குறைத்தது.பின் ரூபன் மற்றும் மதுவின் கல்யாண விஷயத்தை பற்றி பேசினார்.தேவகியும் எந்த பிகுவும் பண்ணாமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததோடு அல்லாமல் தூரிதாமாக திருமண ஏற்பாட்டையும் செய்துவிட்டார்.இதோ இன்று மணமக்கள் அழைப்பு.

அலங்கரிக்கப்பட்ட மேடையில் சிவரூபனும்,மதுமிதாவும் நின்று கொண்டிருந்தனர்.அவர்களைக் கண்டு பூமிநாதனுக்கு கண்கள் நிறைந்து போனது.அடர் நீல நிற ஷெர்வானியில் புது மாப்பிள்ளையாக ரூபன் மின்ன,மதுவும் வெளூர் பிங்க் கலர் லெஹன்காவில் மனபெண்ணாக ஜொலித்தாள்.தங்கள் நீண்ட நாள் கனவு இன்று நிஜமானகி போனதில் மனதும் முகமும் மலர்ந்து இருந்தது மதுவிற்கும்,ரூபனுக்கும்.இருவரும் ஒருவர் அறியாமல் மற்றவரை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

ஆம் திருட்டு தனமாக தான் பார்த்துக் கொண்டனர்.இதுவரை பேசிக் கொள்ளவில்லை இருவருக்கும் இருக்கும் இடைவெளி அப்படியே இருந்தது.மதுவிற்கு தான் பேசிவில்லை என்றால் இவன் வந்து சமாதானம் செய்யமாட்டானா அப்போ நானும் பேசமாட்டேன் என்று முறுக்கி கொண்டு திரிய ரூபனோ மதுவின் குழந்தை தனமான செயல்களை மனதிற்குள் ரசித்தாலும் வெளியில் அவளிடம் விரைப்பாகவே காட்டிக் கொண்டான்.என்ன தான் இருவரும் வாய் மொழியாக பேசிக் கொள்ளாவிட்டாலும் இருவரின் கண்களும் அவ்வபோது பேசிக் கொண்டு தான் இருந்தது.

செந்தில்நாதனும்,மோகனாவும் விருந்தினர்களை வரவேற்று கொண்டிருக்க அப்போது அங்கு வந்த ஆனந்தும்,நிவேதாவும்,

“தாத்தா….பாட்டி நீங்க இரண்டு பேரும் போய் சாப்பிடுங்க…..”என்று கூறிக் கொண்டு இருக்க,செந்தில்நாதனோ,

“இருப்பா…இப்ப தான் எல்லாரும் வர ஆரம்பிக்கிறாங்க…இப்ப போனா நல்ல இருக்காது….நீங்க போங்க…”என்று மறுத்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த தேவகி,

“மாமா…நாங்க இங்க பார்த்துக்குறோம்….நீங்க இரண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க…காலையிருந்து நின்னுக்கிட்டு தான் இருக்கீங்க கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க….அப்ப தான் நாளைக்கு கல்யாணத்திக்கு கொஞ்ச நல்ல இருக்கும்….”என்று கூற செந்தில்நாதன் ஏதோ கூற வரும் முன் மோகனா,

“நீ சொல்லுர மாதிரியே நாங்க இப்ப சாப்பிட போறோம்…”என்று கூறியவுடன் நாதனும்,தேவகியும் ஆச்சரியமாக பார்த்தனர்.பின்னே மோகனா முதல் முறையாக மருமகளின் பேச்சை கேட்கிறார் என்றால் ஆச்சிரியம் தானே.ஆனால் அவர்கள் நினைத்தது பொய் என்பது போல மோகனா,

“சாப்பிட்டு திரும்பி வந்து நாங்க தான் நிப்போம்…எங்க பேரன் பேத்திக்கு நாங்க செய்யாம வேற யார் செய்வா…ஒரு நாள் தூக்கம் போறதால ஒண்ணும் ஆகிடாது…வாங்க போவோம்…”என்று நாதனை அழைத்து செல்ல தேவகி முகத்தில் வாடாடத புன்னகை.எப்போதும் மருமகளை ஏதாவது கூறினால் சண்டை பிடிக்கும் செந்தில் நாதன் கூட இன்று மனைவி கூறுவது சரி என்பது போல கூற தேவகிக்கு மனம் நிறைந்து போனது அவர்களின் அன்பில்.

மணமக்கள் அழைப்பு இனிதே நடந்து கொண்டிருந்தது அப்போது ஆர்பாட்டமாக வந்தான் மகேஷ்.அவனைக் கண்டவுடன் ரூபனுக்கு முகம் மலர மதுவிடம் தன் நண்பனை அறிமுகம் செய்தான்.மூவரும் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது மணமக்களை சாப்பிட அழைக்க வந்த நித்யா மூவரும் பேசிக் கொணச்டிருப்பதைக் கண்டு தயங்கி நிற்க ஏதெச்சையாக திரும்பிய மது நித்யாவைக் கண்டுவிட்டாள்.

“என்ன நித்திக்கா…”என்று கேட்க அப்போது தான் ரூபனும்,மகேஷூம் திரும்ப அங்கே அடர் பச்சை கலர் பட்டுத்தி தேவதை என நின்ற நித்யாவைக் கண்டு மகேஷின் மனம் முதல் முறையாக தடுமாறியது.

“நீங்க இரண்டு பேரும் வாங்க சாப்பிடலாம்…”என்று கூறியவள் பக்கத்தில் நின்ற மகேஷையும் அழைத்தாள்.ஏற்கனவே அவளைக் கண்டு தடுமாற்றத்தில் இருந்தவன் அவளே அவனையும் அழைக்கவும் காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படும் இரும்பு போல பின்னே சென்றான்.

மதுவிற்கும்,ரூபனுக்கும் பக்கத்தில் உட்கார ரூபனின் மறுபக்கத்தில் மகேஷ் அமர்ந்தான்.மணமக்களின் பந்தி என்பதால் நித்யா அனைத்தும் கவனித்துக் கொண்டாள்.ரூபனும்,மதுவும் அமைதியாக உண்பதைக் கண்ட மகேஷ்,

“டேய் மச்சி நீங்க லவ் மேரேஜ் தான…”என்று கேட்கவும் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆமாம் என்று கூற அவர்களை விநோதமாக பார்த்தவன்,

“இல்ல நானும் வந்ததுலேந்து பார்க்குறேன் இரண்டு பேரும் பேசிக் கூட மாட்டேங்கிறீங்க…”என்று தன் சந்தேகத்தை கேட்க மது ரூபனை முறைத்துவிட்டு திரும்பிக் கொள்ள ரூபனுக்கு முகத்தில் அரும்பிய புன்னகையை மறைக்கும் விதமாக தன் இதழ்களுக்குள் அடக்க பாடுபட அவனது உடல் குலங்குவதில் அதனைக் கண்டு கொண்ட மது,

“ரொம்ப சிரிக்காதீங்க அத்தான்…கோபமா வருது அடிச்சிடுவேன்….”என்று அவன் காதுகளில் முனகிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.மது சென்றபின் மகேஷின் புறம் திரும்பிய ரூபன் மகேஷிடம்,

“அதெல்லாம் ஒண்ணும்மில்ல மச்சான் அவளுக்கு என் மேல சின்ன கோபம் அதான்…”என்று கண்ணடித்து கூறினான்.

“டேய் என்ன பார்த்து கண்ணெல்லாம் அடிக்காதடா பாவி…”என்று பொய்யாக அலறினான் மகேஷ்.சிறிது நேரத்தில் கௌதமும் அவர்களுடன் சேர நண்பர்கள் கூட்டம் கலைக்கட்டியது.விழா இனிதே முடிந்து நெருங்கிய சொந்தங்கள் மட்டும் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தனர்.விடியற்காலை எழ வேண்டும் என்பதால் மதுவையும் ,அவளுக்கு துணைக்கு நித்யாவையும் மணமகள் அறைக்கு அனுப்பிவிட்டார் சுந்தரி.பூமிநாதன் காலை மூகூர்த்திற்கு உண்டான சில வேலைகளை செய்து கொண்டிருக்க அப்போது அங்கு வந்த ரூபன்,

“மாமா…நீங்க போங்க நான் பார்த்துக்குறேன்….”என்றான்.அவனது அக்கறையில் மனது நெகிந்தவர்,

“சின்ன வேலை தான் மாப்பிள்ளை…நீங்க போங்க…”என்று கூற ரூபன் அவரை முறைத்து,

“எத்தனை தடவை சொல்லிருக்கேன் என்னை ரூபன்னு கூப்பிடுங்கனு…”என்று கண்டிப்புடன் கூற அவனின் தலை கோதி புன்னகைத்தவர்,

“என்ன இருந்தாலும் முறைன்னு ஒண்ணு இருக்குல்ல ப்பா….”என்றவர் கண்கள் கலங்க தொடங்கியது.அவரது மனநிலையை உணர்ந்தவன்,

“மாமா…ப்ளீஸ் பழசை மறக்க முயற்சி செய்ங்க….நம்ம எல்லாருக்கும் அதுதான் நல்லது….”என்ற கூறினான்.பூமிநாதனோ,

“நான் செஞ்ச செயல் அதுமாதிரி தம்பி அதனால தான் குற்றவுணர்ச்சியா இருக்கு….என்னை மன்னிச்சிடுப்பா…”என்று மீண்டும் மன்னிப்பை வேண்ட அப்போது தண்ணீர் எடுக்க தன் அறையில் இருந்து வெளியில் வந்த மது கண்களில் இந்த காட்சி விழ வேகமாக இருவரையும் நோக்கி வந்தவள் தன் தந்தையின் கைகளை கீழே இறக்கி,

“ப்பா…நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேன் இப்படி பண்ணாதீங்கனு….”என்று ரூபனை முறைத்தவரே தந்தையிடம் கேட்க இந்த சமயத்தில் மகளை எதிர்பார்க்காதவர் மகளிடம்,

“இல்லமா இல்லமா..நாங்க சும்மா பேசிக்கிட்டு தான் இருந்தோம்…”என்று மழுப்ப பார்க்க மது ரூபனை சற்று அதிகமாகவே முறைக்க அதைக் கண்டு பூமிநாதன் எங்கே மகள் ரூபனை எதாவது கூறிவிடுவாளோ என்று பயந்து,

“மதும்மா…நான் மாப்பிள்ளைக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்…நீ ஏன் தப்பாவே யோசிக்கிற…நீ போ போய் தூங்கு நாளைக்கு சீக்கிரம் எழனும் இல்ல போ…”என்று அவளை அகற்ற பார்க்க மதுவோ அசைவேனா என்பது போல ரூபனை முறைத்துக் கொண்டு நின்றாள்.பூமிநாதனுக்கு மகளின் பார்வையும் அதற்கு ஏற்றார் போல பதில் பார்வை தரும் ரூபனை கண்டு மனது கலங்க தொடங்கியது அவரைக் காக்க என்றே வந்தார் சுந்தரி,

“இங்க என்ன பண்றீங்க நீங்க…”என்று வர அங்கே மதுவும்,ரூபனும் ஒருவரை ஒருவர் முறைத்த படி நிற்பதைக் கண்டு ஏதோ சரியில்லை ஊகித்தவர் நேரே மதுவிடம் வந்து,

“நீ இங்க என்னடி செய்யுற…”என்று கேட்க,

“தண்ணீ எடுக்க வந்தேன்ம்மா…”என்று பதில் அளித்தாலும் கண்கள் ரூபனை முறைப்பதை தொடர்ந்தது.இது நல்லதிற்கு இல்லை என்று உணர்ந்த சுந்தரி,

“நீ போ நான் கொடுத்தனுப்புறேன்…போ…”என்று கூற மது அசையாமல் இருக்கவும்,

“ஏய் நான் கொடுத்தனுப்புறேனு சொல்லுறேன் இல்ல போ…”என்றவர் மதுவின் பின்னே அவளைத் தேடி வந்த நித்யாவிடம்,

“நித்தி இவளை அழைச்சிட்டு போ…”என்று கூறி மதுவை கிட்டத்தட்ட இழுத்து சென்று நித்யவுடன் அறையில் விட்டவர்.நித்யாவிடம்,

“நித்தி…இனி இவ  எதுக்கும் வெளில வரக் கூடாது…”என்று கட்டளையாக கூறிவிட்டே வந்தார்.

பூமிநாதன் மகள் சென்றவுடன் மகளின் செயலுக்காக மீண்டும் மன்னிப்பை வேண்ட அவரை தடுத்த ரூபன்,

“மாமா…போதும் உங்க பொண்ணு திரும்பி வந்தா நான் மாட்டுனேன்…இதோட இந்த விஷயத்தை மறந்துடுங்க இல்ல என் பாடு தான் திண்டாட்டம் ஆகிடும்…”என்று புலம்ப அவனது பேச்சைக் கேட்டபடி வந்த சுந்தரி,

“என்ன திண்டாட்டம் ஆகும் ஓங்கி ஒரு அறைவச்சா எல்லாம் சரியா போகிடும்…கொஞ்சம் கூட பயமில்லாம எங்க முன்னாடியே முறைச்சிகிட்டு நிக்குறா நீயும் பார்த்துக்கிட்டு நிக்குற…”என்று ரூபனிடம் சுந்தரி ஆதங்கபட அழகாக புன்னகை புரிந்த ரூபன்,

“என்ன அடிக்கிறதா…இதுக்கே இப்படி முறைக்குறா இதுல அடிச்சா நான் அவ்வளவு தான்…”என்றவன்,

“சரி அத்தை நான் போய் தூங்குறேன்…”என்றான்.சுந்தரிக்கும்,பூமிநாதனுக்கும் மனதின் மலர்ச்சி முகத்திலும் பிரதிபலித்தது.

விடியற்காலை முகூர்த்தம் தொடங்க பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்தான் சிவரூபன்.தேவகிக்கு மகனின் முகத்தில் இருந்த வாடாத புன்னகையும்,மலர்ச்சியும் மனநிம்மதியை தந்தது.ஆசைதீர தன் மகனை ரசித்தவர் அவனுக்கு நெற்றியில் விபூதி பூசிவிட்டார்.தன் அன்னை மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார் என்று உணர்ந்த ரூபன் அவரை அணைத்து விடுத்து,

“ம்மா…என்ன இது….”என்று தாயின் கண்ணீரை துடைத்தவாரே கேட்க தேவகியோ எதுவும் பேசும் நிலையில் இல்லை.அப்போது அங்கு வந்த மோகனா,

“என்ன அம்மா,புள்ளை இரண்டு பேரும் இங்க என்ன பண்ணுறீங்க வாங்க முகூர்த்ததுக்கு நேரம் ஆகுது….”என்று அதட்டல் போட்டவுடன் தான் நிகழ்வுக்கு வந்தனர்.மணமேடையில் மணமகனா அமர்ந்து மாலையை வாங்கிக் கொண்டவன் மதுவின் வரவை எதிர் நோக்க,அவன் எதிர்பார்த்த அவனவளும் வந்தாள் அடர் மெரூன் கலர் பட்டு புடவையில் தேவதை போல பொறுமையாக அவள் ரூபனிடம் நெருங்க நெருங்க ரூபனின் மனது தடதடக்க துவங்கியது.சர்வ அலங்காரங்களுடன் தன்னவளைக் கண்டவுடன் மனதில் உள்ள அனைத்தும் நீங்கி ஒரு புத்துணர்வு உருவாகியது.

மதுவின் நிலையோ இதைவிட மோசம் என்று தான் கூற வேண்டும்.சாதாரண உடையிலேயே மனதை அள்ளும் அவனது உருவம் இன்று பட்டு வேட்டி சட்டையில் மேலும் அழகாக காட்ட எங்கே தன்னையும் மீறி அவனிடம் அனைத்தும் மறந்து பேசிவிடுவோமோ என்று பயம் தன்னை கட்டுப்படுத்தவே மிகவும் சிரமம பட வேண்டியிருந்தது.ரூபனின் அருகில் அமர்ந்தவுடன் உடலில் தன்போல் சிலிர்ப்பு உண்டாகி அடங்கியது.

ரூபனக்கோ அனைத்தும் கனவு போல இருந்தது தன் திருமணம் தான் நினைத்ததைவிட பிரம்மாண்டமாக அனைத்து சொந்தங்களும் மனம் நிறைந்து நடத்தி வைப்பதில் அத்தனை மனநிறைவு.தன்போல் தன்னவளின் பக்கம் திரும்பியவன் கைகள் நடுங்கியவாரே தலைகுனிந்து அமர்ந்திருப்பவளைக் கண்டு,

“விழி…”என்றான் அதே ஆழ்ந்த குரலில்.அவனின் குரலில் திரும்பியவள் கண்கள் கலங்கி இருக்க,

“என்னடி…”என்றான்.

“அத்தான் இது இது…”என்று கூற முடியாமல் அவள் தடுமாற,

“இது நிஜம் விழி….நம்ம கல்யாணம் எல்லாரோட ஆசிர்வாத்தோட நடக்குது…”என்று அவள் வாக்கியத்தை ரூபன் முடித்து வைக்க மதுவின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் ரூபனின் விரல்களில் பட்டு தெரித்தது.தன் கண்முன்னே நடப்பது அனைத்தும் நிஜம் என்று மனதில் ஏற்கவே சில நிமிடங்கள் பிடித்தது மதுவிற்கு.அவளின் கைகளை ஆதரவாக பிடித்து அழுத்தம் கொடுத்தான் ரூபன்.

இருமனங்களின் சங்கம்ம் இருகுடுபங்களின் மனநிறைவோடு நிறைவேறியது.இத்தனை நாள் வரை தன் கனவில் தேடிய தன் மான்விழியாளை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான் சிவரூபன்.ரூபனின் கைகளால் மங்கள நாணனை வாங்கி கொண்ட மதுவிற்கு இந்த உலகையே வென்ற ஒரு உணர்வு.தன் கண்களால் அந்த நிமிடங்களை தன் மனபெட்டகத்தில் சேமித்துக் கொண்டிருந்தாள் ரூபனின் மான்விழியாள்.

Advertisement