Advertisement

மயக்கும் மான்விழியாள் 30-2

மதுமிதா தன் வீட்டில் எல்லோரிடமும் சண்டைப் போட்டு கொண்டிருந்தாள்.அவளின் மனதில் ரூபனின் மேல் உள்ள கோபம் வார்த்தைகளால் வெளி வந்து கொண்டிருந்தது.சுந்தரியோ மகளின் திட்டுகளை காதில் வாங்கினாலும் எதையும் மனதில் பதிய வைக்காமல் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.தான் கூறுவதை காதில் வாங்காமல் வேலை செய்யும் அன்னையைக் கண்டு மதுவிற்கு பிபி இன்னும் ஏறியது.இதில் மேலும் அவளை ஏற்றிவிடும் படி அந்த அறையின் உள்ளே வந்த நிவேதா,

“சித்தி…துணி எல்லாம் எடுத்து வச்சிட்டீங்களா…இந்தாங்க இது சித்தப்பாவுக்கு….”என்று தன் கையில் வைத்திருந்த இரு புதிய சட்டைகளை கொடுத்தவள் மேலும்,

“அப்புறம் சித்தி…ரூபன் அத்தான் போன் பண்ணாங்க…நாளைக்கு காலையில டிபன் எதுவும் செய்ய வேண்டாம்னு சொன்னாங்க….”என்று மேலும் என்ன கூறியிருப்பாளோ அந்த அறையில் இருந்த பூ ஜாடி உடைய என்ன என்று பார்த்தனர் பெண்கள்.

“ஏன்டி நான் ஒருத்தி இங்க காட்டு கத்தலா கத்திக்கிட்டு இருக்கேன்…யாராவது காதுல வாங்குறீங்களா…”என்று கத்த நிவேதா,

“அக்கா இப்ப எதுக்கு இப்படி சத்தம் போட்டு உன் என்ர்ஜியை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க….போ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு…”என்று கூற மதுவிற்கு கோபம் தலைக்கேறி அவளை அடிக்க வர அவளோ மதுவின் கையில் சிக்காமல் ஓடியிருந்தாள்.நிவேதா சென்ற உடன் மது மீண்டும் தாயிடம் தன் பாட்டை தொடங்கினாள்,

“ம்மா…நான் சொல்லுறேன்ல இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்குங்கம்மா நான் அப்பாவை நல்ல ஆயூர்வேதிக் கிளினிக்கு கூட்டிட்டு போறேன்…அவர் காசுல வேணாம்மா….ப்ளீஸ்….”என்று கெஞ்சவே தொடங்கினாள்.ஆம் பூமிநாதனுக்கு ஆயூர்வேதிக் சிகிச்சைக்கு ரூபன் ஏற்பாடு செய்திருந்தான்.அந்த சிகிச்சை எடுக்க அங்கே அவர்கள் கொடுக்கும் இடத்தில் தான் தங்க வேண்டும் என்பது விதிமுறை நோயாளி உடன் ஒருவர் உதவிக்கு இருக்கலாம் அதனால் பூமிநாதனுக்கு உதவியாக சுந்தரியும் இப்போது கிளம்பிக் கொண்டிருந்தார்.

மதுவிற்கு ரூபனுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக இந்த பயணத்தை தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.அவளுக்கு ரூபன் தன் தந்தைக்கு செலவு செய்வது பிடிக்கவில்லை.ஆம் அங்கு நடக்கவிருக்கும் சிகிச்சைக்கு உண்டான பணத்தை ரூபன் ஏற்கனவே கட்டியிருந்தான் அதனால் வந்த கோபம் தான் இது.என் தந்தைக்கு நான் சிகிச்சை செய்ய எனக்கு தெரியும் என்று மது பிடிவாதம் பிடிக்க அதை கேட்கும் நிலையில் தான் அங்கு யாரும் இல்லை.

சுந்தரிக்கு மகள் இவ்வாறு பிடிவாதம் பிடிப்பது சிறுபிள்ளை தனமாகவே இருந்தது.அதனால்,

“மது…ஏன் இப்படி டென்ஷன் ஆகுற…அப்பாக்கு டிரிட்மென்ட்க்கு தான போறோம் ஏன் இவ்வளவு கோபபடுற….”என்று தன்மையாகவே மகளின் கைகளை பிடித்துக் கொண்டு கேட்க மதுவிற்கு பதில் சொல்ல முடியவில்லை.அவளும் தன் தந்தைக்கு குணமாக வேண்டும் என்று எத்தனை முயற்சிகள் எடுத்திருக்கிறாள் தான் ஆனால் அப்போது அவளின் முயற்சிகள் எல்லாம் தனக்கு வரும் சொற்ப சம்பளத்தை வைத்தே அதற்கு மேல் நல்ல மருத்துவம் எல்லாம் அவளுக்கு எட்டா கனியாக தான் இருந்தது.

ரூபன் இப்போது அழைத்து செல்லும் ஆயூர்வேதிக் மருத்தவமனையில் சேர்வர்தற்கே சில லட்சங்கள் செலவாகும் என்று மதுவிற்கு தெரியும்.அதனால் தான் மது சற்று யோசிப்பது.மது அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்ட சுந்தரி,

“என்னடா ஏன் என்னவோ போல இருக்க…”என்று தலை வருடி கேட்க மதுவிற்கு என்ன சொல்லவதென்றே தெரியவில்லை.அவளுக்கும் தந்தையின் உடல் நிலை தேறி வருவதில் மகிழ்ச்சி தான் என்றாலும் தன்னால் அதில் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் அவளை நிதானம் இழக்க செய்யதது.சுந்தரிக்கு புரிந்தது மகளின் தவிப்பு எதனால் என்று அவளின் மனநிலை மாற்றும் பொருட்டு,

“மது…நீ எதை நினைச்சு இவ்வளவு கலங்குறனு எனக்கு தெரியும்…பணத்தை பத்தி இப்ப யோசிக்காத மது..நமக்கு இப்ப அப்பா குணமாகுறது நான் முக்கியம்…நீ நினைக்கலாம் நான் ரொம்ப சுயநலமா யோசிக்குறோனோனு…ஆனா எனக்கு இப்ப தோணுறது எல்லாம் அப்பா குணமாகுறது மட்டும் தான் முக்கியமாபடுது….அப்பா குணமாகிட்டா போதும் அப்புறம் எப்படியாவது பணத்தை நாம கொடுத்திடுலாம்…..நானும் ரூபன்கிட்ட முன்னாடியே இதெல்லாம் சொல்லிட்டேன் மது…..ரூபனும் இதுக்கு ஒத்துக்கிட்டதால தான் நான் அங்க போகவே சம்மதிச்சேன்….”என்று கூறினார்.

“ம்மா….இத முதல்ல சொல்றதுக்கு என்ன…”என்று மகள் குறைபட,அவளை செல்லமாக தட்டிய சுந்தரி,

“நீ எங்கடி என்ன சொல்ல விட்ட ராட்சசி….அதுமட்டும் இல்லாம ரூபன் உன்கிட்ட சொல்லிருப்பான்னு நினைச்சேன்…”என்றவர் மதுவிடம்,

“ஏன் நீ ரூபன் கிட்ட பேசலயா…”என்று கேட்டார்.அதற்கு மது,

“ம்ம்…பேசினேன் மா…”என்று பொய் உரைத்தவள் தனக்கு வேலை இருப்பதாக தன் அறைக்கு வந்துவிட்டாள்.பின்னே அன்னை ஏதாவது கேள்வி கேட்டால் அவளால் இப்போது பதில் சொல்ல முடியாது.ஏனென்றால் அவள் தான் ரூபனுடன் பேசவே இல்லையே அவளின் நினைவு எல்லாம் ஒருவாரத்திற்கு பின் சென்றது.

“இப்ப தான் நான் உங்க அத்தை பொண்ணு….நியாபகத்திற்கு வருதா அத்தான்…”என்று மது கேட்டவுடன் ரூபன் இடத்தில் அமைதி நிலவியது,முகமும் அன்றைய நிகழ்வில் இறுக தொடங்கியது.மது ரூபனின் முக மாற்றத்தைக் கண்டவுடன் தான் கேட்டது தவறோ என்று தோன்ற,

“நான் ஏதோ…”என்று அவள் கூறவற அவளை தடுத்த ரூபன்,

“விழி…நீ ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கனும் அன்னைக்கு நீ செஞ்ச குளறுபடியால எனக்கு உன் மேல ரொம்ப கோபம் தான்…ஏனா எங்க அம்மா எந்த விஷயத்திலேயும் இப்படி கலங்கி நான் பார்த்தது இல்ல…எங்க அப்பா இறந்தபக் கூட தைரியமா இருந்தவங்க அன்னக்கி அப்படி உடைஞ்சி போயிட்டாங்க…அதுவும் உன்னால நீ செஞ்ச கிறுக்கு தனத்தால….இப்பவுமே என்னால நீ செஞ்சத மன்னிக்கவோ ஏத்துக்கவோ முடியல….”என்று ரூபன் மேலும் என்ன கூறி இருப்பானோ அதற்கும் முன்,

“ஏத்துக்க முடியலனா இப்ப எதுக்கு இங்க வந்தீங்க…அப்படியே போயிருக்க வேண்டியது தான….அதான் நான் செஞ்சது எல்லாம் தப்புனு சொல்லிட்டீங்கலே….”என்று ரூபனை உதறிவிட்டு அவள் கத்த ரூபன் அவளை தீர்க்மாக பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.மதுவிற்கு தான் செய்தது தவறு என்று தெரிந்த போதும் அதை ரூபன் சுட்டிக்காட்டுவது பிடிக்கவில்லை.தன்னவனும் தன்னை புரிந்து கொள்ளவில்லையோ என்று தான் மதுவிற்கு தோன்றியது.அதன் வெளிபாடுதான் இந்த கோபம்.

ரூபனுக்கு தன் முன்னே முகம் சிவந்து கத்திக்கொண்டிருக்கும் மதுவை காணும் போது  குழந்தை தவறு செய்துவிட்டு நான் செய்யவில்லை என்று பெரியவர்களிடம் வாதிக்குமே அதுபோல தான் தோன்றியது.இப்போது எது கூறினாலும் மது புரிந்து கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்தவன்,

“விழி…இனி இந்த பேச்சு வேண்டாம் விடு…இதனால நம்ம இரண்டு பேருக்கும் தான் மனகசப்பு உருவாகும்….அதோட நீ உன்னோட நிலையிலிருந்து யோசிக்கிற….என் பக்கத்திலிருந்து யோசி உனக்கு கண்டிப்பா புரியும்…”என்றவன் மேலும்,

“ஒண்ணு மட்டும் நியாபகத்தில வச்சுக்க அந்த சம்பவத்திக்கு அப்புறம் உன் மேல கோபம் மட்டும் தானே தவிர உன்னை நான் என்னைக்குமே வெறுத்தது இல்ல…இப்ப நீ ரொம்ப கோபத்தில இருக்க உன் கோபம் குறைஞ்சதுக்கு அப்புறம் நீ யோசி….”என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

ரூபன் கூறியது அனைத்தும் உண்மை தான் என்ற போதிலும் மதுவால் தான் அதை ஏற்க முடியாமல் போனது.தன்னவனும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்பதிலேயே மனது சுழன்றது.தான் செய்த பிழையால் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமே பதிக்கப்பட்டது என்பதெல்லாம் அவளுக்கு மறந்து போனது.அவளின் புத்தி கூறிகிறது நீ செய்வது தவறு என்று ஆனால் மனது அதை ஏற்க மறுக்கிறது.வீண் பிடிவாதமும்,கோபமும் அர்த்தமற்றது,அதே போல் தான் மதுவின் நிலையும் அதன் பிறகு ரூபன் அவளிடம் பேச முயற்ச்சி செய்யும் போதெல்லாம் மது பேசவில்லை.

ரூபனும் இரண்டு ஒருமுறை அவளிடம் பேச முயற்சி செய்தவன் பின் அவளே தெளிந்து வரட்டும் என்று விட்டுவிட்டான்.அதற்கு ஏற்றார் போல் அவனது வேலையிலும் நெருக்கடி இருக்க அதை கவனிக்கலானான்.இதற்கு இடையில் தன் வீட்டில் உள்ளவர்களிடமும் மதுவை சந்தித்து முதல் இப்போது நடந்தது வரை கூறியவன் தேவகியிடம் தன் திருமணத்திற்கும் பேசி சம்மதம் வாங்கிவிட்டான்.மோகனாவிற்கு கூட தேவகி உடனே ஒத்துக்கொண்டது ஆச்சரியத்தை தர அதை மருமகளிடம் நேரிடையாக கேட்டுவிட்டார்.

மோகனா கேட்டதற்கு தேவகி “அத்த எனக்கு என் மகனை பத்தி நல்லா தெரியும் அவன் மதுவை தவிர வேற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க மாட்டான்….எனக்கு அவன் சந்தோஷத்தை தவிர வேறு எதுவும் முக்கியம் இல்ல…என் கோபத்தை காட்டி அவன் சந்தோஷத்தை நான் அழிக்க விரும்பல….”என்று முடித்துவிட்டார்.

ரூபனுக்கு தேவகியிடம் இருந்து சம்மதம் கிடைத்தவுடன் முன்பிருந்த சிறு தயக்கம் கூட இப்போது இல்லை அதானல் அவன் மதுவின் வீட்டில் உரிமையுடன் சில வேலைகளை செய்தான்.நிர்மலின் துரோகத்தால் ஒடுங்கி இருந்த நித்யாவிடம் பேசி அவளை ஒரு நர்சரியில் ஆசிரியராக சேர்த்துவிட்டான்.எப்போதும் ஓயாமல் பேசும் வசந்தா இப்போது பேச்சு என்பதே இல்லாமல் போனது.மகளின் வாழ்வை எண்ணி கவலை கொள்ள ஆரம்பித்திருந்தவரை சுந்தரி தான் சற்று இயல்பு நிலைக்கு கொண்டு வந்து கொண்டிருந்தார்.

வசந்தாவிற்கு சுந்தரி அனைத்தும் மறந்து தன்னிடம் பேசினாலும் அவரால் ஒன்றமுடியவில்லை மனதில் நெருஞ்சி முள் போன்று அவர் முன் பேசி பேச்சுக்கள் குத்திக் கொண்டிருந்தது.வசந்தாவின் தடுமாற்றம் எதனால் என்று உணர்ந்த சுந்தரியும் அவரிடம் பழைய விஷயங்களை கிளறாமல் சுமூகமாக நடந்து கொண்டார்.ஆனந்த் தான் இப்போது வசந்தாவின் ஒரே ஆறுதல் எப்போதும் பெரியம்மா பெரியம்மா என்று அவரின் பின்னே சுற்றுவான்.

வசந்தாவிற்கு ஆனந்தென்றால் தனி பிரியம் தான்.ஆனால் அதை வெளியில் அதிகம் காட்டிக் கொள்ளமாட்டார்.சுந்தரி வசந்தாவின் மனநிலையை மாற்றும் பொருட்டு ஆனந்திடம் கூறியிருந்தார் பெரியம்மாவை இனி நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.அவனும் சுந்தரி கூறியது போல நடந்துகொண்டான்.வசந்தாவும் தனது கூட்டிலிருந்து வெளிவர தொடங்கியிருந்தார்.

வீடு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது.ரூபன் தினமும் மாலை நேரத்தில் மது விட்டிற்கு சென்று வருவான்.அப்படி அவன் வரும் சமயங்களில் மது அங்கு இருக்கமாட்டாள். ரூபனிடம் கண்ணாமூச்சு ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தாள்.ரூபனும் அவளை காண முயலவில்லை அதுவேறு அவளை இன்னும் சீண்டிவிட்டுருந்தது.அதனால் மதுவிற்கு மனதில் சிறு சுணக்கம் தான் பேசவில்லை என்றால் அவனும் பேசமாட்டானா என்ற கோபம்.அதன் விளைவு தான் ரூபன் பூமிநாதனுக்கு மருத்துவத்தில் உதவுவதற்கு சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.சிவரூபன் கூறியது போலவே பூமிநாதனை ஆயூர்வேதிக் மருத்துவமனையில் சேர்த்துவிட்டான்.

பூமிநாதன் மருத்துவ சிகிச்சைக்கு சென்று ஒரு மாதம் கடந்திருந்தது.இடையில் ஒருமுறை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சென்று பூமிநாதனை பார்த்து வந்தனர்.பூமிநாதன் படுக்கையில் இருந்து இப்போது வீல் சாரில் அமரும் அளவிற்கு முன்னேறி இருந்தார்.அவர் எழுந்து நடப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறியிருந்தனர்.

மேலும் இரண்டு மாதங்கள் சென்றிருந்தது மதுவிற்கும் ரூபனுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி அப்படியே தான் இருந்தது.பூமிநாதனும் சிகிச்சை முடிந்து வீடு வர இருந்தார்,அவர் இப்போது சற்று நடக்க துவங்கியிருந்தார் முழுமையாக இல்லை என்றாலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் நடக்க ஆரம்பித்துவிடுவார் என்று கூறியிருந்தனர்.வீட்டில் உள்ளவர்களுக்கு பூமிநாதன் இந்தளவிற்கு தேறி வந்ததே மகிழ்ச்சியாக இருந்தது.

பூமிநாதன் வீடு வரும் நாளும் வந்தது மதுவின் வீடே சற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.மது மட்டும் எதிலிலும் கலந்து கொள்ளாமல் அனைவரையும் முறைத்துக் கொண்டு நின்றாள்.நித்யாவும்,நிவேதாவும் அவளை சமாதான படுத்த முயன்று தோற்றனர்.கடைசியில் வசந்தா,

“ஏய் அவளுக்கு வேற வேலை இல்லை…சும்மா ஏதாவது புடிச்சிக்கிட்டு மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டு உக்கார்ந்து இருப்பா….நீங்க போய் மத்த வேலைய பாருங்க….”என்று சத்தமிடவும் தான் கலைந்தனர்.அப்போதும் மது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க அவளை முறைத்த வசந்தா,

“இப்ப என்னத்துக்குடி இப்படி மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு உக்கார்ந்து இருக்க…இப்ப அந்த புள்ளை கூட்டிட்டு வரதால உனக்கு என்ன பிரச்சனை….”என்று கேட்க அவரை முறைத்தவள்,

“ஏன் நான் போய் கூட்டிட்டு வரமாட்டேனா…”என்று கோபமாக கேட்க அவளை முறைத்தவர்,

“உன்னை திருத்த முடியாது….நீ இப்படியே மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு உக்கார்ந்துட்டு இரு….”என்று திட்டிவிட்டு சென்றுவிட்டார்.

பூமிநாதனை அழைக்க தான் செல்வேன் என்று மதுமிதா கூறிக்கொண்டிருக்க ரூபனோ அவளை வர வேண்டாம் என்றுவிட்டு அவன் மட்டும் சென்றுவிட்டான்.அதனால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாள்.அவள் சுணக்கம் எல்லாம் தந்தையை காணும் வரையில் தான் அவரைக் கண்டவுடன் அவருடன் மகிழ்ச்சியாக பேச தொடங்கிவிட்டாள்.

பூமிநாதன் வீடு வந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது.மது எப்போதும் போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியதும் தந்தையுடன் சில மணி நேரம் செலவிடுவாள் பின் தான் தன் வேலைகளை தொடங்குவாள்.அன்றும் அவ்வவாறு மாலை வீடு வந்ததும் தந்தையிடம் பேசிக்கொண்டிருக்க அப்போது பூமிநாதன்,

“மதும்மா….அப்பா உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்டா…”என்று பீடிகையுடன் கூற மது தயக்கமாக,

“சொல்லுங்கப்பா… என்ன விஷயம்….”என்றாள்.அவளது தலையை தடவியவரே,

“மது உனக்கும் ரூபனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்…”என்று கூற மது சற்று என்று அவரின் மடியில் இருந்து எழுந்தாள்.

“என்னடா ஏன் இவ்வளவு பதட்டப்படுற….”என்று கேட்டார் மகளின் முகத்தில் வந்து உணர்ச்சிகளை படித்தவாறே.அவருக்கு புரிந்தது வீட்டின் நிலைக்காக மகள் தயங்குகிறாள் என்று.

“ப்பா….இப்ப வேண்டாம் ப்பா…”என்று மெல்லிய குரலில் கூறினாள்.

“ஏன்டா….அப்பா மேல நம்பிக்கை இல்லையா…நான் பார்த்துக் மாட்டேனா வீட்டை…”என்று சரியாக கேட்க,

“ப்ச்…ப்பா நீங்க இப்ப தான் கொஞ்சம் தேறி வந்திருக்கிறீங்க….கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க…”என்று கூற அவளது மூக்கை செல்லமாக ஆட்டியவர்,

“நான் ரொம்ப வருஷமா ரெஸ்ட்ல தான்டா இருந்தேன்…எனக்கு ரெஸ்டெல்லாம் போதும்….”என்று கூறியவர் மகளின் முகம் இன்னும் தெளியாமல் இருக்கவும்,

“என்னடா என்ன ஓடுது உன் மனசுல சொல்லு…..ஒரு அப்பாவா என் பொண்ணுக்கு கல்யாணம் செய்யனும் நினைக்கிறது தப்பில்லைனு நான் நினைக்கிறேன்….ஆனா ஏதோ உன் மனச அரிக்குது மனசவிட்டு சொல்லு…”என்று மதுவை ஊக்க,

“அப்பா…அது…நித்யா அக்கா…இப்படி இருக்கும் போது எனக்கு கல்யாணம் வேண்டாம்ப்பா….”என்று மனதில் உள்ளதை அவள் உரைத்தாள்.

“நான் கல்யாணம் செஞ்சுக்க தயார் தான் மது…ஆனா அதுக்கு முதல்ல விவாகரத்து எனக்கு கிடைக்குனும்….அதுக்கு அப்புறம் தான் நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்…”என்றாள் நித்யா.அப்போது தான் பள்ளியில் இருந்து வந்திருந்தாள்.வந்தவள் பூமிநாதனும்,மதுவும் ஏதோ பேசிக் கொண்டிருக்கவும் அமைதியாக உள்ள போக தான் நினைத்தாள்,அப்போது தன் பெயர் அடிபடவும் அப்படியே நின்று கவனிக்க மது கூறியது அனைத்தையும் காதில் வாங்கியவள் பூமிநாதன் பதில் அளிக்கும் முன் அவள் பேசினாள்.

தன் சித்தப்பாவின் அருகில் வந்து அமர்ந்தவள் மதுவிடம்,

“நான் கண்டிப்பா இன்னோரு கல்யாணம் பண்ணிப்பேன் மது…ஆனா எனக்கு கொஞ்சம் டையம் வேண்ணும்…என்ன பண்ணறது சில காயங்களை நானும் மறக்கனும்ல அதுக்கு தான்…”என்று கூறியவளை ஆதரவாக தலை கோதிய பூமிநாதன்,

“எதுக்கு டா கலங்குற…நான் இருக்கேன் உனக்கு …நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செய்வேன்…இனி நீ அந்த கெடு கெட்டவனை நினைச்சு கலங்க கூடாது புரியுதா…”என்று கூற நித்யாவின் கண்களும் கலங்கியது.இப்படிபட்ட உறவை இத்தனை நாள் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்று மனது கலங்கியது.

பணத்தால் இணைந்த உறவுகளை விட மனதால் இணைந்த உறவுகள் மிகவும் வலிமையானது என்பதை நித்யாவும்,வசந்தாவும் இப்போது புரிந்துகொண்டனர்.இவர்களின் பேச்சை கேட்ட மது அமைதியாக எழுந்து செல்ல பூமிநாதனுக்கு மீண்டும் மனது கலங்க தொடங்கியது.

“சித்தப்பா நீங்க ஒண்ணும் கவலைபடாதீங்க..மது கல்யாணத்துக்கு கண்டிப்பா ஒத்துப்பா…அதுக்கு நான் பொறுப்பு…”என்று தைரியம் மூட்டினாள் நித்யா.

மாடியில் வானத்தை வெறித்தபடி நின்றிருந்தாள் மது அவளிடம் வந்த நித்யா,

“மது…என்ன யோசனை…”என்றாள்.

“அக்கா…அது…இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே…”என்று கேட்க அவளை கூர்மையாக பார்த்த நித்யா,

“மது ஒழுங்கா சொல்லு..உனக்கு ரூபனுக்கு என்ன பிரச்சனை…நானும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன்…அவர் வந்தாலே நீ வீட்ல இருக்குறது இல்ல…என்ன பண்ண நீ சொல்லு….”என்று கேட்டாள்.

“சண்டையா…அதெல்லாம் ஒண்ணும் இல்ல அக்கா…”என்று மது தடுமாற அவளை தன் புறம் திருப்பிய நித்யா,

“மது எனக்கு தெரியும் நீ ஏதோ பேசியிருக்க அதான….சொல்லு..சொல்லுடி…”என்று மதுவின் தோள்களை உலுக்க அதற்கு மேல் முடியாமல் மது அன்று தனக்கு ரூபனுக்கு நடந்தவற்றை கூறினாள்.அவள் கூறியது அனைத்தையும் கேட்ட நித்யா,

“நீ லூசா டி….இப்ப எதுக்கு நீ பழசை  பத்தி பேசுற…அதபத்தி பேசுனா கண்டிப்பா பிரச்சனை தான் வரும்…என்ன சொல்லு நீயும் கொஞ்சம் அவசரப்பட்டுட்ட,அது தான் சாக்குனு நம்ம வீட்டு ஆளுங்களும் அவரை சும்மா விடல….நீ உன்னோட பக்கத்திலேந்து மட்டும் யோசிகிற அவரோட பக்கத்திலேயும் யோசி உனக்கு புரியும்…”என்றவள்

“மது நீ வீட்டை பத்தியும் என்னை பத்தியும் யோசிச்சிக் கிட்டு இருக்காத….இப்ப சித்தப்பாவும் நல்லபடியா குணமாகிட்டாரு நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன்…அதனால வருமானத்துக்கு எந்த பிரச்சனையும் இருக்காது….எப்படியும் அடுத்த மாசம் எனக்கு விவாகரத்து கிடைச்சிடும் அதுக்கு அப்புறம் என் வாழ்க்கை பத்தி யோசிக்கலாம்…இப்ப நீ  உன் கல்யாணத்திக்கு ரெடியாகு…”என்று கூற,

“என்ன அக்கா கடைசியா என்னை மிரட்டுற…”என்று மது கேட்க அப்போது அங்கு வந்த நிவேதா,

“அக்கா என்ன மிரட்டுறது…நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கல நானே உன்னை கடத்திட்டு போய் ரூபன் அத்தானுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுடுவேன் பார்த்துக்க…”என்று மிரட்ட அதுவரை இருந்த இறுக்கமான சூழ்நிலை மறைந்து மகிழ்ச்சி பரவியது.  

Advertisement