Advertisement

மயக்கும் மான்விழியாள் 15

சிவரூபன் மதுவுடன் யாரோ விவாதம் செய்வதை பார்த்து தான் வேகமாக வந்தான்.ஆனால் அவளோ அவனை ஒரு பொருட்டாக மதிக்காது பேசியது கோபத்தைக் கிளறியிருந்தது.ரூபன் மதுவின் கையை அழுத்தமாக பிடித்தபடி முறைத்துக் கொண்டிருக்க அவளோ தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு அவனை பார்பதைத் தவிர்த்தாள்.அவளது செய்கையில் மேலும் கடுப்பானவன்,

“ஏய்…..முதல்ல என் முகத்தை பார்த்து பேசு…”என்று அவளது முகத்தை தன் புறமாக திருப்ப முயல அவனது கையை தட்டியவள் அவன் புறம் திரும்பி,

“பார்த்துட்டேன் போதுமா…கிளம்புங்க இப்ப…இது பொது இடம் நீங்க இப்படி நடந்துக்கிறது நல்லா இல்லை…”என்றவள் தன் ஸ்கூட்டியை கிளப்ப முயல வேகமாக அவளது வண்டியின் சாவியை பிடுங்கியவன்,

“என்னடி ரொம்ப ஓவரா பண்ற…எனக்கே பாடம் எடுக்கிறியா…என்கிட்ட ஒழுங்கா பேசாம இங்கிருந்து நீ போக முடியாது பார்த்துக்க…”என்று கூறியவாறே அவளது ஸ்கூட்டியைப் பிடுங்கி கொண்டான்.ரூபன் கையைவிட்டவுடன்  இவள் நகரப் பார்க்க எங்கே சென்றுவிடுவாளோ என்று எண்ணியவன் வேகமாக அவளது சேலை முந்தியை பிடித்து இழுக்க அவன் இவ்வாறு செய்வான் என்று எதிர்பாராதவள் அவனது நெஞ்சின் மேல் மோதி விழ பார்க்க அவளை விழவிடாமல் இடைவளைத்து பிடித்து நிறுத்தினான் ரூபன்.எங்கே விழுந்துவிடுவாளோ என்று தான் அவளை பிடித்தது ஆனால் அவளது இடையை பிடித்த கைகளோ அவனது சொல் பேச்சை கேட்காமல் இடையில் ஊர்வலம் வர மதுமிதாவிற்கு தான் அவஸ்தையாகி போனது.

மதுமிதாவிற்கு ரூபனின் வருகை ஒருவித எரிச்சல் என்றால் அவனது தொடுகை மேலும் அவளை பலம் இழக்க வைத்துக்கொண்டிருந்தது.இருவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி நிற்க ரூபனோ நீண்ட நாட்கள் பிறகு கிடைத்த தன்னவளின் அருகாமையில் மனம் மயங்கி நின்றான் என்றால் மதுவோ அவனது அணைப்பில் இருந்து தன்னை மீட்க போராடிக்கொண்டிருந்தாள்.

“விடுங்க…விடுங்க…சிவா…என்ன இது பொது இடத்துல…விடுங்கனு சொல்றேன்ல…”என்று மது கத்திக் கொண்டிருக்க அது ரூபன் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை.அவனோ கனவுலகில் மிதப்பவன் போல தன்னை மறந்து நிற்க,

“மதுக்கா…”என்ற நிவேதாவின் அழைப்பு பின்னிருந்து கேட்க அவ்வளவு தான் மது தன் மொத்த பலத்தையும் திரட்டி ரூபனை தள்ளினாள்.அவள் அவ்வாறு தள்ளுவாள் என்று எதிர்பாராதவன் தடிமாறி விழப்போக வேகமாக அவனது கையை பிடித்து நிறத்தியவள்.அவனை அடிக்க கைகளை ஓங்க அதை லாவகமாக தடுத்தான் ரூபன்.

“விடுங்க…விடுங்க…”மது கத்த ஆரம்பிக்க சிலர் இவர்களை காணத் தொடங்கினர்.மற்றவர்கள் பார்வை தங்கள் மேல் விழுவதை உணர்ந்த ரூபன் அவளது கைகளை விட்டுவிட்டு,

“இந்த கை ஓங்குர வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத…தொலைச்சுடுவேன்….”என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்ட,

“ரூபன் அத்தான்…நீங்களா…”என்றபடி அவர்களை நோக்கி வந்தாள் நிவேதா.

ரூபன் நிவேதாவைக் கண்டவுடன் தன் முகத்தை மாற்றி,

“ஆமா நிவி…நானே தான்….எப்படி இருக்கமா…”என்று நலம் விசாரிக்க.

ஏற்கனவே நிவேதா ரூபனைக் கண்டுவிட்டதில் எரிச்சலில் இருந்த மதுமிதாவிற்கு மேலும் கோபம் தலைக்கேற,

“ஏய்…நிவி..வா போகலாம்…”என்று தங்கையின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நகரப் பார்க்க,அவளால் நகர முடியவில்லை.அவளது சேலை முந்தானையை இறுக்கமாக பிடித்தபடி அவளின் பின் நின்றான் சிவரூபன்.மற்றவர் பார்வைக்கு அவன் பிடித்திருப்பது தெரியாது.அதனால் மதுவின் வலப்புறமாக உராயும் படி நின்றவன் அவளின் காதுகளில்,

“நகர்ந்துடுவியா…எங்க நகருப்பார்ப்போம்…”என்று சவால் விட அவனை முறைத்துவிட்டு மது முந்தியை அவன் கைகளில் இருந்து உருவ பார்க்க,

“இப்ப முந்தியை மட்டும் தான் பிடிச்சிருக்கேன்…நகர முயற்சிப் பண்ண…என் கை என் சொல் பேச்சுக் கேக்காது…”என்று கூறிவிட்டு கண்களால் அவளது இடையைக் காட்ட மதுவிற்கு முகம் கோவைப்பழம் போல சிவக்கத் தொடங்கியது.

“என்னடி செல்லம் மாமாவை இப்படி எல்லாம் பார்த்தா…அப்புறம் நடக்குறது எதுக்கும் நான் பொறுப்பில்ல பரவாலயா…”என்று ஒரு மார்க்கமாக கேட்க அவ்வளவு தான் மது நகரவுமில்லை அவனை பார்க்கவுமில்லை.இவர்களின் நெருக்கத்தைக் கண்டு நிவேதா வாய்பிளந்தாள்.

நிவேதா வழக்கம் போல கல்லூரி முடிந்து திரும்பும் போது அவளது கைப்பேசி அழைக்க சுந்தரி தான் அழைத்திருந்தார் மதுமிதா வீடு வரவில்லை என்று கூறியவர் வரும் போது அவளையும் அழைத்துவருமாறு கூறியிருந்தார்.அதனால் தான் நிவேதா மதுவை அழைக்க வந்தது.மார்கேட்டில் அவள் இப்போது தான் வெளியில் சென்றாள் என்று கூறியவுடன்.அவள் வண்டி நிறுத்தும் இடம் வர அங்கே மது ஒரு ஆணின் அணைப்பிலிருந்து விடுபட போராடிக்கொண்டிருக்க நிவேதாவிற்கு பயம் பிடித்துக்கொண்டது.

நிவேதா பயந்தபடி ஓடி வர அப்போது தான் மதுவை அணைத்திருப்பது ரூபன் என்று தெரிய அதுவரை இருந்த பயம் நீங்கி ஒருவித நிம்மதி பரவியது.கிட்டே வர வர அவர்கள் இருவரும் ஏதோ விவாதம் புரிவது போல தெரிய எங்கே மீண்டும் சண்டை வந்துவிடுமோ என்று பயந்து நெருங்கி வந்து அழைத்தாள்.அவள் அழைத்தவுடன் ரூபன் சிரித்த முகமாக பேசியதோடு மட்டுமல்லாமல் மதுவுடன் நெருங்கி நின்றவாரு பேச நிவேதாவிற்கு மனதில் அக்காவின் வாழ்க்கைக்கு விடிவு காலம் வந்துவிட்டது என்று கடவுளுக்கு நன்றி உரைத்தாள்.

“என்ன நிவி எப்படி இருக்கு எங்க பொருத்தம்…” என்று மதுவின் தோள் மீது கைப்போட்டு கேட்க,அவளோ

“சூப்பர் அத்தான்…”என்று கூற மதுவிற்கு மேலும் பற்றிக் கொண்டு வந்தது. நிவியை தன்னால் முடிந்தமட்டும் முறைத்த மது ரூபனிடம்,

“இதுக்கு மேல ஏதாவது செஞ்சீங்க புடவை கிழிஞ்சாலும் பரவாயில்லைனு போயிடுவேன்…”என்று அடிக்குரலில் அவனுக்கு மட்டும் கேட்க்கும்படி வார்த்தைகளை கடித்து துப்ப.

“போனாபோகுதுனு விடுறேன்…இனி பேசாம முகத்தை திருப்பு அப்புறம் இருக்கு…”என்று மிரட்டிவிட்டு தான் கைகளை எடுத்தான்.

நிவேதாவோ இருவரையும் ஒன்றாக கண்ட சந்தோஷத்தில் வாய்பிளந்தபடி பார்த்துக்கொண்டிருக்க அதில் கடுப்பான மது,

“என்னடி வாயபிளந்துக்கிட்டு நிக்குற..வா வண்டியை எடு போகலாம்…”என்று கோபமாக கூற

“நிவி…நீ இருமா…உன்கிட்ட பேசனும்…உங்க அக்காவ வேனா போக சொல்லு…”என்று ரூபன் கூற மதுவிற்கு இதுவரை கடுப்படுத்தி இருந்த கோபம் எல்லையைக் கடந்தது,

“போதும் நிறுத்துங்க சிவா…”என்று கத்தியேவிட்டாள் மது.

“நீங்க யாரு எங்களுக்கு…உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்…உங்க வேலையை நீங்க பாருங்க…ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாதா…”என்று கத்தியவள் அவனிடம் இருந்து தன் சேலையை உருவிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரூபனுக்கு அவளது கோபம் எதனால் என்று புரியத்தான் செய்தது இருந்தும் அவளின் பாராமுகத்தை அவனால் ஏற்கமுடியவில்லை.

“அக்காவுக்காக நான் சாரி கேக்குறேன் அத்தான்…அவ ஏதோ கோபத்துல பேசிட்டா நீங்க தப்பா நினைக்காதீங்க…”என்று நிவி ரூபனிடம் தவிப்பாக கூற அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவன்,

“விடுமா…அவள பத்தி எனக்கு தெரியாதா…”என்றவன் மேலும் ஏதோ கேட்க வர அதற்குள்,

“நிவி இப்போ நீ வரியா இல்லையா…”என்று மது பின்னிருந்து கத்த,

“போமா…இந்தா அவ வண்டி…ராட்சசி எப்படி கத்துறா பாரு…”என்று கூற

“சரி அத்தான்…”என்றவள் மது அறியாத வண்ணம் ரூபனின் கைகளில் சிறிய துண்டு பேப்பரில் தன் கைபேசி எண்ணை திணித்துவிட்டு மதுவின் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றாள்.

“என்னடி கூப்பிட்டே இருக்கேன் நீ கதை அடுச்சிக்கிட்டு இருக்க…ஜோடி பொருத்தம் சூப்பரா…வீட்டுக்கு வாடி வச்சுக்குறேன்…”என்று நிவியிடம் பொரிய,

“இல்லக்கா…இல்லக்கா…”என்று அசடு வழிந்தாள் நிவி. அவளின் பின் வண்டியில் அமர்ந்த மது திரும்பி ரூபனை முறைக்க அவனோ அவள் திரும்புவதற்காகவே காத்திருந்தவன் போல இவள் பார்த்தவுடன் இரு புருவங்களை மேல உயர்த்திவிட்டு கண்ணடிக்க அவனது செய்கையில் அதிர்ந்தவள் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் மனதில் ஒருவித படபடப்பு உண்டாவதை தடுக்கமுடியவில்லை.அவளது அதிர்ந்த முகத்தைக் கண்ட ரூபனுக்கு வெகு நாட்களுக்கு பிறகு அந்த மாலை வேளை இனிமையாக இருந்தது.

Advertisement