Advertisement

மன்னிப்பாயா….9

சற்று நேரம் அழுத கன்யா பின் தன் கண்களை துடைத்துக் கொண்டு,

“ப்ச்….கனி…இன்னைக்கு உன் பிறந்த நாள்….இப்படியா அழுவுறது…..நோ டோன்ட் க்ரை….பேபிமால்ல….வா நாம கேக் வெட்டலாம்….”என்று தனக்கு தானே சாமாதனம் செய்து கொண்டு மெழுகு வர்த்தியை ஊதிவிட்டு அணைத்து,

“ஹாப்பி பர்த்டே டூ மீ…..”என்று அவள் அழுதழுது அடைத்த தொண்டையுடன் கன கொடூரமாக கத்த,அவளின் பின்னே மெல்லிய கை தட்டலுடன் மெல்லிதாக ஒரு ஆணின் குரல் கேட்க,

“அய்யோ…பேய்ய்ய்….பேய்ய்ய்….”என்று அலறிக் கொண்டு எழ அவளின் பின்னே வேர்த்து விழிந்த வியர்வை துடைத்தபடி நின்றிருந்தவன் முகத்தில் அடக்க முடியாத சிரிப்பு வேறு குடிகொண்டிருந்தது.

“ஓய்….உனக்கு வாழ்த்து சொன்னா….நான் உனக்கு பேயா….”என்று இடுப்பில் கை வைத்தபடி கேட்க கன்யா திருதிருவென முழித்தபடி நின்றாள்.

“என்ன அப்படியே நிக்குற….கேக்க வெட்டி எனக்கு கொடு….”என்று அவன் அமர,கன்யாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.காலேஜின் ஹீரோ என்று அழைக்கபடுபவன் தன்னிடம் பேசுகிறான் என்பதே அவளுக்கு ஏதோ மாய லோகத்தில் இருப்பது போல இருந்தது.

“ஹலோ…..ஹலோ….”என்று ஆரியின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள்,

“ஆங்….என்ன கேட்டீங்க….”

“கிழிஞ்சிது போ….எனக்கு தெம்பு இல்ல….நான் போறேன்….”என்று அவன் எழ,

“ஆ….ஆ….இருங்க இருங்க சீனியர்….இருங்க…”என்றவள் வேகமாக அந்த பன்னை அப்படியே அவனிடம் நீட்ட,

“ஓய் என்ன எனக்கு முழுசா கொடுக்குற…பாதி பிச்சு கொடு….”என்று அவளிடம் பாதியை வாங்கி சாப்பிட்டான்.

“சாரி என்கிட்ட இது தான் இருக்கு….”என்று கன்யா தயங்கி கூற,

“அதனால என்ன….சூப்பரா இருக்கு….”என்று அவன் புகழாரம் கேட்டு கன்யாவிற்கு வானில் பறக்காத குறைதான்.

“சரி உன் பேரு என்ன….எதுக்கு நீ அழுத…..”என்று அவன் கேட்க அதுவரை மலர்ந்து இருந்த கன்யாவின் முகம் விழுந்தது.

“ஓகே ஓகே….நான் கேட்கல….நீ சாப்பிடு…”என்றவன் அவளது முகத்தை பார்த்தான்.முதலில் விளையாட்டாக தான் நின்றவன் கிளம்ப நினைக்க அப்போது தான் தடுத்தது கன்யாவின் குரல் அவள் தனக்கு தானே பேசிக் கொள்வதைக் கேட்டவனுக்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது.அதுவும் யாரும் இல்லாதவள் போல பிறந்த நாளை கொண்டாடும் விதம் மனதிற்கு வலிக்க அவளின் வலியை போக்கவே அவளிடம் பேசினான்.

“அச்சோ அப்படி எல்லாம் இல்லை சீனியர்…..பெரிசா ஒண்ணுமில்ல….நான் எங்க அப்பா கிட்ட ஐந்நூறு ரூபாய் பணம் கேட்டேன் கொடுக்கல….அதான்….”என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூற,ஆரிக்கு சிரிப்பு வந்தது.

“சிரிக்காதீங்க சீனியர்….நான் ரொம்ப கோவமா இருக்கேன்….நான் எவ்வளவு ஆசையா பிரியாணி வாங்கி சாப்பிடலாம்னு இருந்தேன் தெரியுமா….எல்லாம் போச்சு…..”என்று அவள் உதட்டை பிதுக்க,

“என்ன பிரண்ட்ஸ்க்கு டிரீட் கொடுக்கவா…..”என்று அவன் கேட்க,

“அட போங்க சீனியர்…..என் பிரண்ட்ஸ்க்கு எல்லாம் டிரிட் கொடுக்கனும்னா அதுக்கு நான் பிரியாணி கடையே தான் வாங்கனும்….இது எனக்கு மட்டும் தான்….”என்று அவள் சிரிக்காமல் கூற,பன்னை தின்று கொண்டிருந்த ஆரிக்கு அவளின் பதிலில் சிரிப்பு பீறிட்டது.

“ஹா ஹா ஹா……வாவ் இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கல….சான்சே இல்லை….”என்று கூறி வயிற்றை பிடித்துக் கொண்டு அவன் சிரிக்க,கன்யாவிற்கு பொசுபொசுவென கோபம் வந்தது.

“சீசீசீனியர்…சிசிரிக்காதீங்க….நான் கோவமா இருக்கேன்னு சொல்லுறேன்ல….”என்று கோவமாக அவனை கழுத்தை நெறிப்பது போல அவள் கைகளை கொண்டு வந்துவிட,ஆரி ஒருநிமிடம் அதிர்ந்துவிட்டான்.அவனது அதிர்ந்த முகத்தை கண்டு கைகளை இறக்கியவள் தன் தலையில் அடித்துக் கொண்டு,

“அச்சோ….கோவத்துல எல்லார்கிட்டேயும் பண்ணுறது போல இவர்கிட்டேயும் பண்ணிட்டேனே…..இப்ப அடிக்க போறாரு….”என்று வாய்விட்டு புலம்ப,

“இன்னைக்கு உனக்கு பர்த் டே அதனால நீ தப்பிச்சிட்ட….”என்று ஆரி கூற,

“ஹிஹிஹி….சாரி சீனியர்…..”என்று அசடு வழிய கூற,

“ம்ம்…ஓகே பிழைச்சு போ….ஆமா உன் நேம் கேட்டேன் சொல்லவே இல்லை….நீ எந்த டிப்பார்மெண்ட்…..”

“அச்சோ மறந்துட்டேன்….என் நேம் ஶ்ரீகன்யா….நானும் உங்க டிபார்மெண்ட் தான் சீனியர்….”என்றவள்,மேலும்

“அப்புறம் சீனியர் உங்ககிட்ட ஒண்ணு சொல்லனும்….சொல்லவா….”என்று தயங்கி கேட்க,ஆரி முகத்தில் சற்று இறுக்கம் ஏற தொடங்கியது கடைசியில் இவளும் மற்ற பெண்கள் தான் போல என்று நினைத்தவன் அமைதியாக,

“சொல்லு….”என்று கேட்க,

“சீனியர்….நீங்க சூப்பரா டான்ஸ் ஆடுறீங்க….எப்பயாவது உங்களை பார்க்கும் போதெல்லாம் இதை சொல்லனும் நினைப்பேன் ஆனா மிஸ் ஆகிடும்….இன்னைக்கு சொல்லிட்டேன்….”என்று கூற,ஆரிக்கு அது வரை இருந்த இறுக்கம் தளர்ந்து முகத்தில் மென்னகை தவழ்ந்தது .

“தேங்க்ஸ்….”என்று முகம் மலர்ந்து கூறினான்.முதன் முதலில் அவனது நடனத்தை ரசித்த பெண் என்று தான் கூற வேண்டும் அன்று நடந்த நிகழ்ச்சிக்கு பின் அவன் சந்தித்த பெண்கள் அனைவரும் அவனின் அழகை மட்டுமே வர்ணை செய்திருக்க இன்று முதல் முறையாக தனது திறமைக்கு பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி அவனுக்கு.

“உங்களுக்கும் தேங்க்ஸ்….என்னோட என் பிறந்த நாள் கொண்டாட்டதில் பங்கு பெற்றதற்கு….”என்று அவள் பதில் கூற,

“ஹா ஹா….ஓஓஓ…அப்படியா….நல்லா பேசுற நீ….”என்று அவன் முகம் மலர்ந்து கூறினான்.

“ம்ம்….அது ஒண்ணு தான் என்கிட்ட இருக்குற திறமையே அதை வைச்சு தான் ஓட்டிக்கிட்டு இருக்கேன்….”என்றுவிட்டு அவளின் கைகளில் சுழற்ற அப்போது அவளது கையில் இருந்த சாவி கீழே விழுந்தது.

“ச்சே….இது வேறு எந்த லூசு தொலைச்சுதோ தெரியலை….”என்று திட்டிக் கொண்டே மைதானத்தை தேட,அவளின் முன்னே ஆரியின் கரம் நீண்டது,

“அந்த லூசு நான் தான் அதை என்கிட்ட கொடு….”என்று கூற,

“அச்சோ….சாரி சாரி….சீனியர்….இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை போல அதான் இப்படி அடிக்கடி டங் ஸிலிப்பாகுது போல…..”என்று அவள் தலையில் அவளே கொட்டிக் கொள்ள,

“சரி சரி கொடு….”என்றவன் அவளின் கைகளில் சாவியை வாங்கிக் கொண்டு,

“சரி கன்யா….நான் கிளம்புறேன்….நீயும் கிளம்பு…டையம் ஆச்சு….”என்று கூற,

“கிளம்ப வேண்டியது தான் சீனியர்….”என்று அவளும் அவனுடன் சேர்ந்தே நடந்தாள்.ஆரி தனது வண்டி இருக்கும் இடம் வந்தவுடன்,

“ஓகே பை….”என்று கூற,

“பை சீனியர்….நாளைக்கு பார்க்கலாம்…”என்று விட்டு அவளும் சென்றுவிட்டாள்.குழந்தை போல துள்ளி குதித்து ஓடும் அவளை பார்த்தவனுக்கு மனதில் சிறு வலி ஒன்று தோன்றி மறைந்தது.தனது இரு சக்கர வாகனத்தை எடுத்தவன் தன் வீட்டை நோக்கி பயணமானான்.அவனின் நினைவுகளில் கன்யாவும் சேர்ந்தே பயணமானாள் என்பது குறிப்பிடதக்கது.

எப்போதும் தன்னுடன் பேச குழைந்து சில பெண்கள் பேசியுள்ளனர்,இல்லையேல் தன்னிடம் நண்பர் என்று கூறி தன்னிடம் நெருங்கி பழக நினைக்கும் பெண்களின் நடுவே கன்யா வேறுவிதமாக பதிந்து போனாள் என்பது உண்மை.

சென்னையில் முக்கிய வீதியில் உள்ளது ஆரியநாதனின் வீடு.ஆரியின் தந்தை குருமூர்த்தி சொந்தமாக சிறு தானியங்கள் விற்கும் கடையொன்றை வைத்துள்ளார்.தாய் சுதா அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.தங்கை தன்யா பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள்.தனது வீட்டில் நுழைந்து வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய வரவேற்பறையில் அவனது தங்கை தன்யா டிவியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓய்….வாலு….உன்னை படிக்க சொன்னா…நீ டிவி பார்த்துக்கிட்டு இருக்க…..எங்க நம்ம டிச்சர் அம்மா….”என்று ஆரி தன்யாவின் தலையில் தட்ட,

“ஆஆஆஆ….அம்மா அண்ணன் என் தலையில் தட்டுறான்…..”என்று அவள் குரல் சமையல் அறையை அடைய,

“ஆரம்பிச்சிடுச்சுங்க….இரண்டும்….இதே வேலையா போச்சு….”என்று திட்டிக் கொண்டே வந்தார் சுதா.

“அம்மா….பாரும்மா….அண்ணன் அடிச்சிக்கிட்டே இருக்கு….”என்று தனு புகார் பத்திரம் வாசிக்க,

“ஏய் சும்மா கத்தாதடி….ஏன்னடா ஆரி….வந்தவுடனே அவகிட்ட சண்டைக்கு போற….”

“பின்ன என்ன டிச்சரம்மா….நான் இப்படி டிவி பார்த்தா எப்படி திட்டுவீங்க….இவ மட்டும் ஜாலியா பார்க்குறா….எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க….இதெல்லாம் நான் ஒத்துக்குவே மாட்டேன்….எனக்கு ஒரு சட்டம் அவளுக்கு ஒரு சட்டமா….”என்று ஆரி சண்டையிட,

“ஓய்….அண்ணா….நானே இப்ப தான் உங்க டிச்சரம்மாகிட்ட கெஞ்சிக்கேட்டு டிவியை போட்டேன்….அதுக்குள்ள நீ வந்து என் சந்தோஷத்தையே கெடுத்துட்ட….”என்று தனு முகத்தை உர் என்று வைத்துக் கொள்ள,

“அச்சோ…என் ஆசை உடன் பிறப்பே….இந்த விஷயம் எனக்கு தெரியாதே….”என்றவன் தங்கையின் அருகே அமர போக,

“டேய் அப்படியே பேசிக்கிட்டே நீ எங்கடா உட்காருர….போ போய் குளிச்சிட்டு வா…..”என்றவர் தனுவிடம் திரும்பி,

“ஏய் உனக்கு இன்னும் அரைமணிநேரம் தான் டையம்….அப்புறம் படிக்கனும்….”என்று கட்டளையாக கூற,தன்யா பாவமாக தலையை ஆட்டினாள்.

ஆரியோ தங்கை பார்த்து,

“நல்லா வேணுமா….”என்று முகத்தை காட்டிவிட்டு தன் அறைக்கு சென்றான்.

வெகு நாட்களுக்கு பிறகு சற்று இதமான மனநிலையுடன் தன் விட்டுற்கு வந்தாள் கன்யா.அவள் வீட்டின் அருகே நெருங்கும் போதே ஏதோ பாட்டு காதை கிழித்துக் கொண்டே கேட்டது.

“அச்சோ இந்த பிசாசு இருக்கா….கனி உன் முகத்தை தொங்க போட்டுக்கிட்டே போ அப்ப தான் உனக்கு நல்லது….”என்று தனக்கு தானே கூறிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.நிதி டிவியில் ஏதோ பாட்டு ஒன்றை வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்க கையில் அம்மா கொடுத்த பஜ்ஜி வேறு இருந்தது.கன்யா நுழைந்தவுடன் அவளை ஏற இறங்க பார்த்த நிதி முகத்தை சுழிக்க,கன்யாவோ அவளை ஒரு பொருளாக கூட மதிக்காமல் சென்றுவிட்டாள்.அதுவே நிதிக்கு கோப தீயை பற்ற வைத்திருந்தது.

தனது அறையில் நுழைந்த கன்யா வேகமாக தன்னை சுத்தபடுத்திக் கொண்டு நேராக சமையல் அறைக்கு சென்று தனக்கான பஜ்ஜியை எடுத்து கொண்டு உண்ண தொடங்க,

“நீ எப்படி வந்த….இந்தா இதை சாப்பிடு…அது கொஞ்சம் ஆறி போச்சு….”என்று அன்பு மகளுக்கு பஜ்ஜியை வைக்க,

“ராம் எங்க….”என்றாள் மகள்.

“அவனுக்கு ஏதோ மேட்ச் இருக்காம் அதான் வந்து பேக்கை வச்சான் போயிட்டான்….”என்று கூறிக் கொண்டிருக்க,

“என்ன அம்மாவும் பொண்ணும் ரகசியம் பேசிக்கிறீங்க….”என்று கழுக்கு மூக்கு வேர்த்தது போல வந்து நின்றாள் நிதி.

“ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லடி…ராம் எங்கனு கேட்டா அதான் பதில் சொல்லிகிட்டு இருந்தேன்….”என்று அன்பு கூற,

“அமா…அக்காவும்,தம்பியும் வீட்டுல இருக்கறதுனாலே பிடிக்காது போல….ஏன்மா நான் எல்லாம் எப்படி ஒழுங்கா இருந்தேன்….இதுக இரண்டும் ஏன்மா இப்படி இருக்குங்க….”என்று தங்கையை சீண்டும் நோக்குடன் நிதி பேச தொடங்க,கன்யாவோ இதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல பஜ்ஜியை ரசித்து திண்று கொண்டிருந்தாள்.

“நிதிமா….மாப்பிள்ளை எப்ப வருவாரு….”என்று பேச்சை மாற்றினார் அன்பு,அவருக்கு நன்கு தெரியுமே நிதியின் பேச்சு எங்கு சென்று முடியும் என்று அவள் தன்னை உயர்த்தியும் மற்ற இருவர்களை தாழ்த்தியும் பேசிக் கொண்டே இருப்பாள் ஒருகட்டத்தில் கன்யா அதற்கு பேச தொடங்க இறுதியில் நிதி தன் கண்களை கசக்கிக் கொண்டு செல்லவாள்.அதற்கு தன் கணவர் மற்ற இருவரையும் வசைமாரி போழிவார்.அதானலே தன் பெரிய மகளிடம் சற்று தனிந்து தான் போவார் அன்பு.

“அவர் இப்ப வரமாட்டார் ம்மா….”என்று நிதியின் வாய் தாய்க்கு பதில் அளித்தாலும் கண்கள் என்னவோ தங்கையை தான் நோட்டம் விட்டபடி இருந்தது.

“நீ என்ன பார்த்தாலும் இன்னைக்கு ஒண்ணும் நடக்க போறது இல்லை குரங்கே…போ…போ…”என்று தனது மனதிற்குள் நக்கல் அடித்துக் கொண்டிருந்தாள் கன்யா.

இன்னைக்கு என்ன இவ இவ்வளவு அமைதியா இருக்கா….என்ன விஷயமா இருக்கும்….”என்று தனக்குள் யோசனை செய்தபடி நிதி நிற்க,கன்யா தன் வயிற்றை நிரப்பிக் கொண்டு தனது அறையில் அடைந்து கொண்டாள்.இனி நிதி வீட்டிற்கு செல்லும் வரை வரமாட்டாள் இது தான் அவளின் வழக்கமும் கூட.

இரவு சாப்பட்டு மேஜையில் ஆரி தனது உணவினை ரசித்து உண்டு கொண்டிருக்க,தனுவோ அவனை வெட்டவா குத்தவா என்று பார்த்துக் கொண்டு இருந்தாள்.பின்னே பிள்ளை பாவம் தாயிடம் கெஞ்சி தனக்கு பிடித்த டிவி போகிராம் பார்க்கலாம் என்று பிளான் செய்திருக்க ஆரி இடையில் வந்து அனைத்தையும் குழப்பிவிட்டு சென்றுவிட்டான் அதனால் சுதா டிவிக்கு தடா போட்டுவிட்டார்.அதனால் வந்த கோபம் தான் இது.

“என்னடா குட்டிமா….என்ன முகம் ஒருமாதிரி இருக்கு….”என்று கேட்டுக் கொண்டே வந்தமர்ந்தார் குருமூர்த்தி.

“ஒண்ணுமில்ல ப்பா…”என்று வாய் கூறினாலும் தன் அண்ணனை முறைக்க தவரவில்லை அவள்.மூர்த்தி அனைத்தையும் கவனித்தாலும் கண்டும் காணாதது போல் இருந்து கொண்டார் மூர்த்தி.பிள்ளைகள் வளரவளர அவர்களின் சில விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்பதை உணர்ந்த மனிதர்.

சின்ன சின்ன சண்டைகள் சச்சரவு வருவது இயல்பு தான் அதை அவர்களிடமே விட்டால் அது பெரிதாகாமல் தீர்ந்துவிடும் இதில் பெற்றவர்கள் தலையிட்டால் அதன் விளைவு வேறு மாதிரி தான் இருக்கும்.அதே நேரம் கன்யாவின் வீட்டில் தனது அறையில் கண்கள் கலங்கி போய் அமர்ந்திருந்தாள் கன்யா.அவளின் அருகில் அமர்ந்து அவளை சமாதானம் செய்தபடி இருந்தான் ஶ்ரீராம்.

Advertisement