Advertisement

மன்னிப்பாயா….6

கனத்த மழையில் காரில் இருந்த இருவரும் கனத்த மனதுடன் இருக்க.ஆரிக்கு கன்யாவின் அழுகை பார்த்து மனதில் சொல்ல முடியாத வலி உருவானது.

“கனி…கனி…”என்று அவளின் தோள்களை தொட,அவளோ எதற்குமே மசியவில்லை,

“கன்யா ஸ்டாப் பிட்….ஸ்டாப் பிட் ப்ளீஸ்….எனக்கு தான் நீ அழுவறது ரொம்ப கஷ்டமா இருக்கு…சோ ப்ளீஸ்…”என்று ஆரியின் குரல் உயர்ந்து ஒலித்தவுடன் தான் கன்யா தன் அழுகையை நிறுத்தினாள்.தேம்பியபடி அவனின் முகத்தை ஏறிட அவனும் அவளை பார்த்துக் கொண்டே,

“நீ இப்படி அழுவுறது எனக்கு தான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி பீல் ஆகுது….இங்க பாரு…..என்னை பாரு கன்யா….”என்று குனிந்து இருந்த அவளின் முகத்தை நிமிர்த்தியவன்,

“கன்யா….நம்ம ரெண்டு பேருமே ஏதோ ஒரு விதத்துல தப்பு செய்யுறோம்னு நினைக்கிறேன்….அன்னைக்கு நடந்ததுல உன் தப்பு இருக்கு தான் நானும் கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாமோனு இப்ப தோணுது….”என்று நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டவன்,அவளை ஒரு முறைபார்த்துவிட்டு திரும்பி வெளியில் பார்த்துக் கொண்டே,

“நம்ம லைப்ல எல்லாமே ரொம்ப வேகமாக நடந்த மாதிரி இல்ல…நாம கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் இல்ல….”என்று கூற கன்யாவின் மனதிற்குள் ஏதோ உடைந்து நொருங்குவது போல் இருந்தது.முகம் மேலும் வெளிறி போய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நம்ம இரண்டு பேரை மட்டும் தான் நாம யோசிச்சிட்டோம்…நம்ம குடும்பம் அதை பத்தி எல்லாம் யோசிக்கவேயில்ல….எங்க அப்பா எவ்வளவோ சொன்னாரு….கொஞ்சம் பொறுமையா இருனு….நான் கேட்கலை…”என்றுஅவன் பாட்டிற்கு தன் மனதில் ஒன்றை நினைத்து கூற அனைத்தும் கன்யாவின் மனதில் வேறு மாதிரி பதிந்து போனது தான் பரிதாபம்.ஒருமுறை அவன் கன்யாவின் முகத்தை பார்த்திருந்தால் சில விஷயங்களை கண்டுபிடித்திருப்பான் ஆனால் விதி அவர்களுக்கு வேறு வைத்திருக்க அவனும் தான் என்ன செய்வான்.

“இல்ல கனி….கனி….”என்று அழைக்க அவளோ ஏதோ உலகில் இருப்பது போல் அமர்ந்திருக்க,அவளது முகமோ சிவந்து போய் கண்கள் இரண்டும் கலங்கி போய் இருந்தது.ஆரி அவள் பழைய நினைவில் கலங்குகிறாள் என்று நினைத்து,

“கனி கனி….ஏய்…”என்று அவளின் தோள்களை உலுக்க,

“ஆங்….”

“ஏய் என்ன அப்பப்ப ஏதோ டிரிம்ஸ்க்கு போயிடுற….”என்று கேட்க

“ஒண்ணும் இல்ல….”என்று உள்ளே போன குரலில் கூற,

“அப்ப ஏதோ இருக்கு….அப்படிதான….”என்றவன் அவளின் முகத்தையே பார்க்க,அவளோ முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

“ப்ச் கனி….நான் உன்னை வீட்டை விட்டு போனு எல்லாம் சொல்லல….அது நீ தான் ரொம்ப பிடிவாதமா….”என்று தடுமாற,விரக்தியாக சிரித்தவள் அவன் புறம் திரும்பி,

“என்னால இயல்பா அங்க இருக்க முடியல….அதான் கிளம்பிட்டேன்….மனசு ரணமா இருந்துச்சு….உங்க கூட இருந்து மேலும் கஷ்டபடுத்த விரும்பல….அதான்….”என்று நீண்ட விளக்கம் கொடுக்க,

“ஏய்….என்னதிது கஷ்டம் அது இதுனு என்னவோ எல்லாம் பேசுற….”என்றவனை பார்த்து ஒரு புன்னகை புரிந்து தன் சீட்டில் சாய்ந்து அமர்ந்தவள் ஏதோ யோசனைக்குள் செல்ல,ஆரியோ அவளையே பார்த்தபடி இருந்தான் முன்னைவிட இப்போது சற்று சதைப்போட்டிருந்தாள் அதுவும் இன்று புடவையில் மேலும் மெருகேரி இருந்தாள்.சற்று நேரம் இருவரிடமும் அமைதியாக செல்ல,கண்விழித்த கன்யா பார்த்தது தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆரியை தான் சற்று என்று எழுந்து அமர்ந்தாள்.

கன்யா கண்ணை மூடியிருக்கும் வரை அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் திடீர் என்று எழுந்து அமரவும் தான் செய்து கொண்டிருந்தது புரிந்து தன் கேசத்தை அழுந்த கோதி தன்னை நிலை படுத்திக் கொண்டு,

“பச் என்னதிது…எவ்வளவோ என்கூட இருந்திருக்கா அப்பெல்லாம் எனக்கு இது மாதிரி தோணினது இல்லையே இப்ப என்னதிது…ஏதோ தோணுது….”என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்க,கன்யா தனது பேக்கை தேட அது காரின் பின் பக்கம் விழுந்திருந்தது அதை எடுக்க அவள் சீட்டில் எழுந்து குனிய அதே நேரம் ஆரியும் முகத்தை திருப்ப அவளின் முன் பக்க மேனி இப்போது ஆரியின் முகத்தின் மீது விழ ஒரு நிமிடம் இருவருமே அதிர்ந்து நின்றுவிட்டனர்.கன்யாவோ வேகமாக தன்னை பின் இழுத்துக் கொள்ள ஆரியோ சிலை போல அமர்ந்துவிட்டான்.

ஆரிக்கு நிகழ்வுக்கு வரவே சில நிமிடங்கள் எடுத்தது.தன் முகத்தில் விழுந்த மென்மைகள் ஒருநிமடம் அவனின் இருதய துடிப்பை நிறுத்தியது என்னவோ உண்மை.கன்யாவின் முகத்தை பார்க்க அதுவோ அதிர்ந்து கண்கள் இரண்டும் வெளியில் வந்துவிடும் போல் இருக்க அவளோ காரின் ஜன்னலை ஒட்டி அமர்ந்துவிட்டாள்.

“ஓய் சாரி….அது நான்….தெரியாம….”என்று அவளிடம் கூற அவளோ தன்னை சமாளித்து கொண்டு

“தெரியும்….”என்று விட்டு மீண்டும் வெளியில் பார்க்க,

“ப்ச்…சரி விடு…இப்ப என்ன எடுக்க வந்த…”என்றவன் பின் பக்கம் பார்க்க அவளின் கைபை விழுந்து இருந்தது.அதை எடுத்து அவளிடம் கொடுக்க வேகமாக வாங்கியவள் அதில் இருந்து இரண்டு சாண்ட்விச்சை எடுத்து ஒன்றை தனக்கும் ஒன்றை அவனுக்கு நீட்டினாள்.அதைக் கண்டவன்,

“ஏய் நீ இன்னும் இதையெல்லாம் விடலையா….வாவ்….ஶ்ரீ….ஶ்ரீ தான்….”என்று அவளின் கன்னத்தை கிள்ளிவிட்டு அவள் நீட்டியது வாங்கிக் கொண்டான்.இது அவர்களின் கல்லூரி பழக்கம் அல்லவா.சாண்ட்விச்சை வாயில் திணித்துக் கொண்டே,

“செம பசி கனி….ஆமா எப்படி கரட்டா இரண்டு வாங்கியிருக்க….”என்று கேட்க,அவளும் தன் சாண்ட்விச்சை வாயில் திணித்துக் கொண்டு,

“எப்போதுமே இரண்டு தான் வாங்குவேன்…..பழக்கமாகிடுச்சு…”என்று கூற,ஆரிக்கு தான் என்னவோ போல் ஆனது.இருவரும் தங்கள் சாப்பாட்டை கொரித்துக் கொண்டிருந்தனர்.ஆரிக்கு அவளின் இந்த அமைதி பிடிக்கவில்லை அவனே பேச்சை தொடர்ந்தான்,

“ம்ம்…அப்புறம் அம்மா,அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க…”என்று கேட்க,கன்யாவிற்கு உணவு தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.அவள் விக்க தொடங்க ஆரி அவளுக்கு தண்ணீரை கொடுத்தான்.

“ஏய் மெதுவா…ஏன் இப்படி ஷாக் ஆகுற….உன் அப்பா.அம்மா பத்தி தான கேட்டேன்….”என்றவன் சற்று என்று தயங்கி பின்,

“ஏய் நீ அவங்க கிட்ட பேசுற தான….”என்று கேட்க,அவளோ இப்போது எது கூறினாலும் பிரச்சனை வரும் என்று உணர்ந்து,

“ஆங் பேசுவேன் பேசுவேன்…”என்று கூற,அவன் அவளை நம்பா பார்வை பார்த்து வைக்க,

“ப்ச் சீனியர் அதான் பேசுவேன்னு சொன்னேன் தான…அப்புறம் எதுக்கு இப்படி பார்க்குறீங்க…”என்று எகிற அப்போது தான் விட்டான்.என்ன தான் தங்கள் திருமணம் நடந்த போது இருவீட்டாரும் தங்களிடம் பேசவில்லை தான் ஆனால் ஆரி எவ்வளவு அவர்கள் தங்களை ஒதுக்கினாலும் பேச வேண்டும் என்று கூறி பேச சொல்லுவான்.அவன் தன் பெற்றோர்களை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டான்.

கன்யா ஆரியுடன் இருந்தவரை தந்தையிடம் பேசவில்லை என்றாலும் தாயிடமும்,தம்பியிடமும் பேசுவாள் தான் அவனிடம் இருந்து பிரிந்து வந்த பிறகு முற்றிலுமாக பேச்சுவார்த்தை நின்று போனது இது ஆரிக்கு தெரியாது.

“சரி கிளம்பலாம்…மழை விட்டுட்டுச்சு…”என்று கூற,கன்யாவும் சரி என்று தலையாட்டினாள்.

“கன்யா…உங்க விட்ல ஏதாவது சொன்னியா…அது நம்ம பத்தி…”என்று தயக்கத்துடன் ஆரி கேட்க,கன்யா இல்லாத வீட்டை பத்தி என்ன பேச என்று மனதிற்குள் நினைத்தவள்,

“இல்லை….எனக்கு இங்க வொர்க் சேஞ்ச் ஆகிருக்குனு மட்டும் தான் சொன்னேன்…அவ்வளவு தான்….அவங்க என்கிட்ட இன்னும் நெருங்கல சீனியர் விடுங்க…”என்று கூற,ஆரிக்கு சற்று கோபம் தான் அவர்கள் சற்று பெறுமையுடன் இருந்திருந்தாள் இவ்வளவு நடந்திருக்காது.ஏன் இப்போதும் தன்னிடம் பேசும் தன் பெற்றொர்கள் கன்யாவிடம் பேசவில்லை தானே என்று நினைத்தவனுக்கு மனதில் மேலும் பாரம் ஏறிக் கொண்டது.

“எனக்கு லெப்ட் சைட் போகனும்….”என்று கன்யாவின் குரலில் கலைந்தவன்,

“ஆங்….ம்ம்ம்…”என்றவன் அவள் கூறுகிற வழியில் வண்டியை செலுத்த பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

“ஆங் கனி….ஐ திங் நீ சொல்லுர வழில போக முடியாது….வேற வழி இருக்கா….”என்று ஆரி கேட்க,

“இல்ல சீனியர்….”என்று கைகளை பிசைந்தபடி கூற,

“ஏய்…அதனால என்ன நான் தங்கியிருக்க ஹோட்டலுக்கு வா….”என்றவன் வண்டியை தான் தங்கியிருக்கும் ஹோட்டலை நோக்கி செலுத்த,

“இல்ல இல்ல வேண்டாம் சீனியர்…நான் என் ஹோட்டலுக்கு போறேன்…”என்று கூற அவளை ஓரவிழியில் பார்த்தவன்,

“ஏன் ஶ்ரீ….என்கூட இருக்க பயமா இருக்கா…இல்லை நான் திரும்பியும் உனக்கு நியாபக படுத்தனுமா நம்மளுக்குள்ள இருக்க ரிலேஷன் ஷிப் என்னனு….”என்று சற்று காரமாகவே கூற,அதிர்ச்சியாகி அவனை திரும்பி பார்த்தவள் வாயை பிளந்தாள்.ஆரிக்கு இது போல் பேசுவது எல்லாம் பிடிக்காத ஒன்று.

“என்ன வாயபிளக்குற…..நானா இப்படி பேசுறேன்னு நினைக்கிறியா….”என்று அவளை சரியாக கணித்து கேட்க,அவளும் ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.அவள் தலை ஆட்டியதில் சிரித்தவன்,

“எல்லாம் என் பொண்டாட்டிக் கிட்டேந்து கத்துகிட்டது தான்….”என்று தன் காலரை எடுத்துவிட்டு கூற,கன்யாவின் முகத்திலும் மென்னகை.அதே நிலையில் இருவரும் ஆரி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்தனர்.

ஆரி கன்யாவை அழைத்துக் கொண்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்தான்.

“நீ ரிப்பெரஷ் பண்ணுறதுனா பண்ணிக்கோ கனி…..நான் இதோ வந்துடுறேன்…..” என்றுவிட்டு ஆரி வெளியில் சென்றுவிட,கன்யாவிற்கு தான் மூச்சு முட்டியது ஏனோ அவளால் அங்கு இருக்கவே முடியவில்லை ஏற்கனவே ஆரியின் வார்த்தைகள் அவளது மனதை புண்ணாக்கியிருக்க அதில் இவ்வாறு இருவருக்குமான தனிமை அவளை இயல்பாக இருக்க விடவில்லை.அதே சிந்தனையுடனே அவள் முகம் கழுவி வர ஆரி மெத்தைக்கு அருகில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தான்.கன்யா யோசனை செய்தபடியே வெளியில் வர அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெள்ளை நிற புடவையில் ஆங்ஆங்கே சிவப்பு  ரோஜாக்கள் இம்ராயிடரி போட பட்டு இருந்தது.தலைக்கு குளித்திருப்பாள் போலும் முடியை விரியவிட்டு இருந்தாள்.இப்போது முகத்தை கழுவி வந்ததில் நீர் திவளைகள் வைரம் போல ஜொலித்தது.இது நாள் வரை அவளை புடவையில் அவன் பார்த்தது இல்லை இப்போது ஏதோ பெரிய பெண் போல் தெரிந்தாள்.ஒருவன் தன்னை பார்வையால் விழுங்கி கொண்டிருக்கிறான் என்பது கூட தெரியாமல் தன் நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்தாள் கன்யா.

ஆரி வந்தது கூட தெரியாது அருகில் இருந்த மெத்தையில் அமர்ந்த கன்யாவிற்கு எப்போதடா இங்கிருந்து செல்லுவோம் என்ற எண்ணம் தான்.சற்று என்று ஒரு  எண்ணம் தோன்ற வேகமாக ஜன்னல் வழியாக வெளியில் பார்க்க மழை சற்று விட்டிருந்தது.

“ப்பா….மழை விட்டிருக்கு….சீனியர் வந்ததும் சொல்லிட்டு கிளம்பிட வேண்டியது தான்….”என்று அவள் பாட்டிற்கு புலம்பிக் கொண்டிருக்க,

“அதுக்கு நான் விடனுமே ஶ்ரீ….”என்று ஆரியின் குரல் வெகு அருகில் கேட்க அதிர்ந்து திரும்பினாள் பெண்.அவளின் அங்கங்கள் திண்ணமான நெஞ்சுடன் மோதி உடலில் புது மின்சாரத்தை பாய்த்தது.ஆரி கன்யாவிடம் பேசும் ஆர்வத்தில் அவர்களின் நெருக்கத்தை கவனிக்கவில்லை.

“நான் உன்னை இப்ப அனுப்புறதா இல்லை கனி….தேவையில்லாத யோசனையெல்லாம் விட்டுடு…”என்று இறுக்கமான முகத்துடன் அவளின் மிக அருகில் நின்று கூற,கன்யாவோ அவனின் நெருக்கம் உணர்ந்து பின் சாய கண்ணாடியில் மோதி நின்றாள்.

“ஏய் பார்த்து….”என்றவன் அவளின் தோள்களை பிடித்து நிறுத்த,கன்யாவோ அவனின் தொடுகையில் மேலும் நெளிந்து,

“ச….சரி சீனியர் விடுங்க….”என்று அவனின் கைகளை எடுத்துவிட அப்போது தான் உணர்ந்தான் இருவரின் நிலையையும்.சற்று என்று விலகி நின்று தன் கேசத்தை கோதிக் கொண்டான்.வந்ததில் இருந்து கன்யாவையே ரசித்துக் கொண்டிருந்தான் ஆரி.அவளோ அவன் இருப்பது கூட தெரியாமல் தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு வரவும் காதை தீட்டி என்ன பேசுகிறாள் என்று கேட்டுக் கொண்டிருக்க அவள் கிளம்பவதிலேயே குறியாக இருப்பது போல் பேசிக் கொண்டிருக்க ஆரிக்கு ஏன் என்று தெரியாமலே கோபம் வந்தது அதனாலே அவனை அறியாமல் அவளிடம் நெருங்கி பேசிவிட்டான்.

“சாரி….நான் கவனிக்கல…”என்று ஆரி திக்கி திணறி கூற,கன்யா தலையை மட்டுமே ஆட்டினாள்.ஆழந்த மூச்சொன்றை இழுத்துவிட்ட ஆரி,

“வா டீ வாங்கிட்டு வந்தேன் சாப்பிடு….இந்த மழைக்கு கொஞ்சம் இதமா இருக்கும்…”என்றுவிட்டு ஒரு கப்பை அவளின் புறம் நீட்ட மறுக்காமல் வாங்கி கொண்டாள்.இருவரும் குடித்து முடிக்கும் வரை பேசவில்லை.

“சீனியர் நா நான் கிளம்புறேனே….”என்று கன்யா மீண்டும் ஆரம்பிக்க,

“ஏய்….உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா….மழை பேஞ்சி ஊர் புல்லா பிளக் அகியிருக்கு….இதுல நீ எப்படி போவ….ஏன் இப்ப என் கூட இருக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை….”என்று சற்று கோபமாகவே கேட்க,கன்யாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது.

“ஏய் சும்மா அழுத…அடிச்சுடுவேன் பார்த்துக்கோ…”என்று ஆரி கைகளை ஓங்க,கன்யா இருக்கின்ற இடத்திலேயே ஒடுங்கிவிட்டாள்.அப்போது தான் செய்த தவறு ஆரிக்கும் புரிய தன் தலையில் அடித்துக் கொண்டவன்,

“ப்ச்….நீ இருக்கியே….என்னை டென்ஷன் பண்ணிக்கிட்டே இரு….”என்று அவன் கூற,கன்யாவிற்கு அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் கோபமாக வெளிபட்டது.

“இது தான்….இதுக்கு தான்….நான் போறேன்னு சொல்லுறேன்…..என்னால உங்களுக்கு எந்த டென்ஷனும் வேண்டாம் அதனால தான் போறேன்னு சொல்லுறேன்…”என்று கன்யா கோபத்தில் முகம் சிவந்து கத்த,ஆரிக்கு கன்யாவின் கோபம் எதனால் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

“நாம என்ன சொல்லிட்டோம்னு இவ இப்ப இப்படி குதிக்கிறா….”என்று நினைத்துக் கொண்டிருக்க,

“நான் சாரினு கேட்டேன்….அதுக்கு ஒரு வார்த்தை மன்னிச்சிட்டேனு சொல்லுறீங்களா…..நான் தப்பு பண்ணிட்டேன் தான் அதுக்காக இப்படியா என்னை அலையவிடுவீங்க….இனி சாரினு கேட்டுக்கிட்டு உங்க கிட்ட வரவேமாட்டேன்…..நான் செஞ்ச தப்புக்கு உணர்ந்து தான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டேன்…நீங்க ஏதுக்கிட்டா ஏதுக்குங்க இல்லனா போங்க….”என்று கன்யா பாட்டிற்கு அவள் போக்கிற்கு பேசிக் கொண்டிருக்க ஆரிக்கு அப்போது ஒன்று புரிந்தது அவள் தான் செய்த தவறை எண்ணி மிகவும் வருந்திகிறாள் என்று.

“கனி…கனி…”என்று ஆரியின் அழைப்பு எல்லாம் அங்கு காற்றில் கரைந்து ஓடிக் கொண்டிருக்க,

“அடேய் ஆரி…இவ விட்ட இன்னைக்கு முழுக்க உன்னை திட்டிக் கிட்டே இருப்பா….அதிரடியா இறங்கு….”என்று தனக்குள் கூறிக் கொண்டு வேகமாக அவளை இழுத்தான்,ஆரி அவ்வாறு இழுப்பான் என்று தெரியாத கன்யா அவனின் மேலே பூமாலை போல விழுந்தாள்.

ஆரியின் மீது கன்யா விழுந்திருக்க,அவளின் புடவை நழுவி அவளின் வழுவழு இடை ஆரியின் கைகளில் இருந்தது.இருவருமே இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் அதிர்ந்த முகத்திலேயே தெரிய கன்யா முயன்று அவனிடம் இருந்து எழ முற்பட அது ஆரிக்கு இன்னும் அவஸ்தையை தான் கூட்டியது.அவளின் முழுவுடலும் அவனின் மேல் இருக்க ஆணவனுக்கு புதிய ராசாயன மாற்றங்களை ஏற்படுத்தியது.

முதலில் மோகவலையில் இருந்து தெளிந்த கன்யா வேகமாக அவனிடம் இருந்து எழுந்து,

“சாரி…சாரி நான் கவனிக்கல….”என்று அவனின் முகத்தை பார்க்காமல் கூற,

“ம்ம்ம்….இட்ஸ் ஓகே…”என்று அவனும் தடுமாறி தான் பதில் அளித்தான்.கன்யா தன் மனைவி தான் ஆனால் அவளை இதுவரை அந்த கோணத்தில் அவன் பார்த்தது இல்லை அப்போது அதற்கு வாய்ப்பும் இருக்கவில்லை.அப்போது தடுமாறாத மனது இன்று அவளிடம் முதல் முறை தடுமாறியது எண்ணவோ உண்மை.

தடுமாறிய மனது தான் காதலின் முதல் படி என்று உணர்ந்தால் ஆரியின் வாழ்க்கை செழிக்கும் இல்லையேல் துலைத்துவிட்டு தான் தேடுவான்.சில விடயங்களில் காலம் சிறந்த தெளிவை தரும் அதேபோல் தான் கன்யா,அரியின் வாழ்வும் காலத்தினால் தான் தெளியும்.

Advertisement