Advertisement

மன்னிப்பாயா….3

அந்த நீண்ட ஹாலில் அங்காங்கே வருகிறவர்கள் அமர வட்ட மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தது.அந்த வட்ட மேஜையில் சிலர் குழுக்களாக தங்கள் பிரசன்டேஷனை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்,சிலர் தனியாக வந்திருந்தனர்.ஶ்ரீகன்யாவும்,ராதிகாவும் அதில் ஒரு மேஜையில் அமர்ந்து இருந்தனர்.ராதிகா தங்களின் பிரசன்டேஷனை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டிருக்க கன்யாவின் விழிகளோ அந்த அறையையே வலம் வந்தபடி இருந்தது.இன்று தான் எதிர்பார்க்கும் நபர் வருவாரா என்று மனதில் வேண்டுதல்களை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ஏய்….இந்த பேஜை லாஸ்டா வைனு சொன்னேன்ல….அப்புறம்….”என்று ராதிகா ஏதோ கூற நிமர அப்போது தான் கவனித்தாள் கன்யாவின் கவனம் இங்கில்லை என்று.ஏற்கனவே ராதிகாவிற்கு மற்றவர்கள் செய்து காட்டிய பிரசன்டேஷன்களை விட தங்களுடையது குறைவு தான் என்று தோன்றியது இதில் இவள் இவ்வாறு எங்கோ வெறித்துக் கொண்டிருப்பது எரிச்சலை மூட்ட,

“கன்யா….”என்று சற்று உரக்க அழைத்துவிட்டாள் ராதிகா.அவள் குரலை உயர்த்தி அழைக்க வேண்டும் என்று அழைக்கவில்லை ஆனால் அனைவரும் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் அவளது குரல் ஓங்கி ஒலித்தது.அதில் அனைவரும் நிமிர்ந்து அவளை பார்க்க ஆனால் பார்க்க வேண்டியவளோ வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.அனைவரிடமும் சாரி என்று கூறிய ராதிகா,

“கன்யா….கன்யா….”என்று அவளின் கைகளை பிடித்து இழுக்க,அதில் சுயத்திற்கு வந்ததவள்,

“ஆங்….என்ன ராதி….”என்று கேட்டாளே தவிர அவளை திரும்பி பார்க்கவில்லை.அவளது பார்வை முழுவதும் வாயிலில் தான் இருந்தது.

“ஏய்…கன்யா…இங்க…இங்க என்னை பாரு….”என்று கோபமாக அவளது முகத்தை பிடித்து தன் பக்கமாக திருப்பிய ராதிகா,

“ஏய்….நான் இங்க கத்திக்கிட்டு இருக்கேன்….நீ யாரைடி பார்த்துக்கிட்டு இருக்க….”என்று கேட்க,

“ம்ம்….என் புருஷனை….”என்று ரசனையாக கன்யா கூற,இப்போது முழிப்பது ராதிகாவின் முறையானது.இவள் என்ன விளையாடுகிறாள் என்று கன்யாவின் முகத்தை பார்க்க அவளோ ரசனை,காதல் அனைத்தையும் ஒருங்கே தன் கண்களில் தேக்கி வைத்துக் கொண்டு வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்த முகத்தில் தான் எத்தனை ஏக்கம்,அதே முகத்துடன் அவளது நடுங்கும் விரல்கள் அவளின் கழுத்தில் இருந்த டாலரை சுழற்றியபடி இருந்தது.

அரங்க வாயிலில் குழுவாக சில ஆண்கள் பேசிக் கொண்டிருந்தனர்.அதில் யாரை கன்யா குறிப்பிடுகிறாள் என்று புரியாமல் ராதிகா விழித்தாள்.அப்போது சாம்பல் நிற கோர்ட் சூட்டுன் வசீகரிக்கும் புன்னகையுடன் உள்ளே வந்தான் ஒருவன்.வந்தவனை ரசிக்காத கண்கள் கிடையாது.ஆறடி உயரம்,நல்ல நிறம் வசீகரிக்கும் முகம் அது சிரித்தால் இன்னும் வசீகரிக்கும் ஹன்செம் பெர்சன் என்று சொல்லுவார்களே அதுபோல் தான் அவனது அழகும்,ஆளுமையும் இருந்தது.

“வாவ்….ஏய் கனி ஆளு செமையா இருக்காரு இல்ல….”என்று ராதிகா கூற,கன்யாவிடம் எந்த பதிலும் இல்லை.ஏதோ தோன்ற அவளை திரும்பி பார்த்த ராதிகா அதிர்ந்தாள்.கண்கள் சற்று கசிந்து காணப்பட்டது,முகம் முன்பை விட சற்று கூடுதலான ரசனை,காதல்,தயக்கம் அனைத்தையும் ஒன்று சேர வந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஶ்ரீகன்யா.

“கனி…..”என்று அவளின் நடுங்கும் கைகளை அழுந்த பற்றினாள் ராதிகா.அதில் சுயத்திற்கு வந்த கன்யா அவளை பார்த்து ஆம் என்னும் விதமாக தலையை ஆட்டிவிட்டு மீண்டும் வரும் அவனையே பார்த்தாள்.முன்பை விட அவனின் அழகு இன்னும் கூடிப்போனது போல் இருந்தது கன்யாவிற்கு.மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம் இவ்வளவு நேரம் அழுத்திக் கொண்டிருந்த அவளது மனம் இப்போது இலகுவாக துடிப்பது போல் இருந்தது.

கன்யாவின் பார்வை அவனையே தொடர,அவனோ நேராக பிரசன்டேஷன் நடக்கும் இடத்திற்கு அருகே சென்றான்,

“ஹாய்…குட் மார்னிங் கைஸ்….ஐ ம் ஆரியநாதன்….”என்று கூறிவிட்டு அவனது பிரசன்டேஷனை பற்றி பேச தொடங்க,கன்யாவிற்கோ அவன் மேடை ஏறியதில் இருந்தே நினைவு இங்கு இல்லை.அவனை முதன் முதலாக கண்ட நாள் தான் நினைவுக்கு வந்தது.

அந்த கல்லூரி அரங்கமே அதிர்ந்து கொண்டிருந்தது.மாணவர்கள் கூட்டமாக குதுகலித்துக் கொண்டிருந்தனர்.அது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்ப்பு பார்ட்டீ.ஶ்ரீகன்யா தனது தோழிகளுடன் நின்றிருந்தாள் அந்த முதலாம் ஆண்டு மாணவர்களுடன்.அனைவரும் ஆர்பரித்துக் கொண்டிருந்த நேரம்,

“இப்போ நம்ம அனைவரும் ரொம்ப எதிர்பாரத்த ஆரியோட டான்ஸ்…..”என்று முடிக்க கூட இல்லை அரங்கமே அதிரும் வண்ணம் மாணவர்களின் ஆர்பாட்டமும்,ஓஓஓஓ என்று பெண்களின் ஆர்வமான கரகோஷமும் கட்டிடத்தையே ஆட்டம் காண வைக்க கன்யாவும் அவளது தோழிகளுக்குமே ஒருவித ஆர்வத்துடன் பார்த்தனர்.சிவப்பு சட்டையை தூக்கி முன் பகுதியை முடிச்சிட்டு,நீள நிற ஜீன்ஸ் பேண்ட்டுடன் தனது நண்பர்கள் பட்டாளத்துடன் வந்தான் ஆரி என்கிற ஆரியநாதன்.

அவனை பார்த்த நொடியே மாணவர்களில் பெண்கள் கோஷம் தான் அதிகமாக இருந்தது.ஒரு குத்து பாடலுக்கு அவன் ஆட மொத்த அரங்கமே ஆடியது என்று தான் கூற வேண்டும்.

“ஏய் அவரு நம்ம டிபார்மென்ட் தானாம்டீ….நமக்கு சீனியராம்….செகண்ட் இயராம்….ஆளூ சூப்பருல….”என்று கன்யாவின் தோழிகளில் ஒருவள் தனக்கு கிடைத்த தகவலைக் கூறினாள்.கன்யா அனைத்தையும் காதில் வாங்கியவள் அவனின் நடனத்தை ரசித்தாள்.உண்மையில் அவ்வளவு அழகாக உடலை வளைத்து ஆடினான் ஆரி அதே போல் அவனது முகம பாவங்களுமே அந்த பாடலுக்கு ஏற்றார் போல் இருந்தது.கன்யாவிற்கு அவனை பார்த்தவுடன் தோன்றியது இது தான்,

“ம்ம்ம்….ஆளு பார்க்க ரொம்ப ஹன்ட்செம்மா இருக்கான்….அதான் பெண்கள் பேன் ஜாஸ்தி இருக்கு போல….”என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.அதற்குள் ஆரியின் நடனம் முடிவடைய அரங்கமே அதிர கைதட்டல் ஒலி தான் கேட்டது. அதே போல் பலத்த கை தட்டல் கேட்க ஶ்ரீகன்யா தூக்கத்தில் இருந்து விழிப்பவள் போல் விழித்தாள்.

ராதிகா தான் அவளை தட்டி நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தாள்.கன்யாவின் கண்கள் ஆரியை தேட அவன் நின்ற இடமோ வெற்றிடமாக இருந்தது.

“அச்சோ அதுக்குள்ள போயிட்டாரா….”என்று அவள் வாய்விட்டே புலம்பினாள்.

“அடியே சைட் அடிச்சது போதும் அடுத்து நம்ம பிரசன்டேஷன் தான்…..எனக்கு பக்கு பக்குனு இருக்கு….நீ என்னடான ஜாலியா இருக்க….”என்று ராதிகா கன்யாவின் காதுகளில் அர்ச்சனை பாட அதைக் கேட்டுகும் நிலையில் அவள் இல்லை.அவளது கண்களோ ஆரியை தேடி அலைந்து கொண்டிருந்தது.

இந்த முறை அவனிடம் போசியே தீர வேண்டும் என்று மனது வேறு இடுத்துறைத்துக் கொண்டிருந்தது.தான் அவ்வளவு திட்டியும் கன்யா அசையாமல் இருக்க அவளின் கைகளில் வலிக்க கிள்ளினாள் ராதிகா.

“ஸ்ஸ்ஸ்…..ஆஆஆஆ…..ஏன்டி கிள்ளுன….”என்று ராதிகாவிடம் திரும்பி கன்யா சண்டைக்கு தயாராக,

“ம்ம் உன் ஆளு எங்க இருக்காருனு தான தேடுற…..”என்று எதைக் கூறினால் அவள் கவனிப்பாள் என்று ஊகித்து கூற,அவள் நினைத்து போலவே,

“எங்க….எங்க….எங்க….எங்கடி….”என்று கன்யா படபடக்க,அதைப் பார்த்த ராதிகாவிற்கு ஒருபுறம் மனதிற்கு கஷ்டமாகவே இருந்தது.இவ்வளவு அன்பை வைத்துக் கொண்டு ஏன் பிரிந்து இருக்கிறாள் என்று நினைக்க மட்டுமே முடிந்தது.

“சொல்லுடீ….”என்று கன்யா ராதிகாவின் கைகளை பற்றி இழுக்க,

“ஆங்….அவரு அந்த பக்கமா போன்ல பேசிக்கிட்டே போனாரு….”என்று அவள் அரங்கத்தின் மறுபக்கத்தை காட்டினாள்.கன்யா அவன் சென்ற திசையை பார்க்க எதுவும் தென்படவில்லை.

“சரி நாம இப்ப பிரசன்டேஷன் பண்ணுறோமா…..இல்லையா….”என்று ராதிகா கேட்க,

“ஏய் என்னடி அதுக்கு தான நாம வந்திருக்கோம்…..”என்று கன்யா கூற,

“ம்ம்….உன்னை பார்த்தா அப்படி தெரியலை….”என்று ராதிகா கூற கன்யா முகத்தில் அசடு வழிந்தது.

“அது….அது…..ரொம்ப நாள் ஆச்சா….அதான்….”என்று இழுக்க,

“போதும்டி இதுக்கே நாங்க எல்லாம் மிதக்க ஆரம்பிச்சிட்டோம்….”என்று ராதிகா அவளை வார,

“பச்….ராதி…நீ வேற….”என்ற கன்யாவின் முகத்தில் இதுவரை கண்டிராத ஒருவித மலர்ச்சி,கண்களில் ஒளி அனைத்தும் குடியேரியிருந்தது.

“இன்னைக்கு தான்டீ அழகு கூடி போய் இருக்க….”என்று மேலும் கிண்டல் பண்ண,

“அடியே போதும் போதும்….அடுத்து நாம தான் போல….”என்று கன்யா கூற,

“அத தான் மேடம் நானும் அரைமணிநேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்….நீ தான் இந்த லோகத்திலேயே இல்லையே….”என்று மேலும் வார,

“சரி சரி…..ரொம்ப வாராத…..வா எல்லாத்தையும் ஒரு தடவை பார்த்திடலாம்….”என்று அவளது வாய் சொன்னாலும் கண்கள் என்வோ ஆரி சென்ற திசையே தான் பார்த்துக் கொண்டிருந்தான,அவளின் எண்ணம் உணர்ந்த ராதிகா,

“கனி….வருவாங்க….டென்ஷன் ஆகாத….”என்று அவளை தேற்ற முயன்றாள்.தோழியை கண்டு மென்னகை புரிந்தவள் நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டு தன்னை சமன் செய்து கொண்டாள்.மனது முழுவதும் வலி அவன் தன்னை ஒருமுறையேனும் பார்க்கவில்லையா,மேடையின் இடதுபுறம் தான் இவர்களின் இருக்கை இருந்தது.மேடையில் இருந்து பார்த்தால் தெரிந்திருக்கும்.ஆனால் ஆரி தன்னை தவிர்க்கவே இவ்வாறு செய்தான் என்று அவளின் மனம் நம்பியது.அப்படியென்றால் இன்னும் அவன் தன்னை மன்னிக்கவில்லை என்று தனக்குள் முடிவு செய்தவளுக்கு மனதில் சொல்லான வலி பிறந்தது.முயன்று தன்னை மீட்டவள் தனது வேலைகளில் கவனத்தை திருப்பினாள்.

தங்களின் பிரசன்டேஷனை சமர்பிக்க ராதிகாவும்,கன்யாவும் மேடையேறினர்.கன்யா தான் அதை தொகுத்து வழங்க இருந்தாள் அனைத்து சைலைடுகளையும் புரஜக்டருடன் இணைத்துவிட்டு அவள் திரும்பும் நேரம் முன்னிருக்கையில் வசீகரிக்கும் புன்னகையுடன் அமர்ந்திருந்தான் ஆரியநாதன்.அவனும் கன்யா நினைத்தை போல் மேடையேறியவுடன் அவளை பார்த்துவிட்டான் தான் ஆனால் கன்யா அளவிற்கு அவனது முகத்தில் எந்தவித ஆர்பரிப்பும் இல்லை மனைவியை கண்வுடன் மனதில் தன்னை போல் ஒரு இறுக்கம் குடி கொண்டது.அவள் கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் மனதில் வலம் வர தன்னை போல் உடலும்,முகமும் இறுக தொடங்கியது.இருக்கும் இடம் கருதி தன்னை நிதானித்துக் கொண்டான்.

ஆரிக்கு நன்கு தெரியும் அவள் தனக்காக தான் வந்திருப்பாள் என்று அதனால் அவளிடம் பேசினால் கண்டிப்பாக அவளை காயப்படுத்திவிடுவோம் என்று கருதி தான் வெளியில் சென்றது.ஆனால் அவளது பரிதவிப்பான விழிகள் அவனை மேலும் செல்லவிடாமல் அலைகழித்தது.தவிப்புடன் தன்னை தேடிக் கொண்டிருந்தவளை விட்டு செல்ல மனம் வரவில்லை அதனாலே திரும்பி வந்தான்.

கன்யா ஆரி சென்றுவிட்டான் என்று நினைத்து கொண்டு தான் மேடையேரினாள் ஆனால் அவனோ வசீகரிக்கும் புன்னகையுடன் அவளின் முன்னே அமர்ந்திருக்க,கன்யாவிற்கு தான் அனைத்தும் மறந்த நிலை.அவள் சிலை போல நின்றுவிட,ராதிகாவிற்கு தான் மனது படபடக்க தொடங்கியது மெல்ல அவளின் அருகில் வந்து,

“கனி செல்லம்….உன்னோட சைட்டிங் வேலை அப்புறம் வச்சிக்கலாம்டீ….இப்போ ஸ்டார் பண்ணு….இன்னைக்கு மாட்டுனோம் அவ்வளவு தான் கிரேஸி மேடம் நம்மளை தலைகீழ தொங்கவிட்டுறுவாங்க….ப்ளீஸ்டா செல்லம் கொஞ்சம் கருணை காட்டு….”என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவளின் காதுகளில் கூற,தன்னை மீட்ட கன்யாவிற்கு அதுவரை இல்லாத பதட்டம் தொற்றிக்கொள்ள,

“ராதுமா….என்னவோ பயமா இருக்குடி….”என்று பதட்டதுடன் கூற,

“என்னாஆஆஆஆ….பயமாஆஆஆஆ….போச்சு…..அடியே நீ தான் முழுசா பிரிப்பரேஷன் பண்ண….இப்ப இப்படி சொல்லுற….இதுக்கு தான் நானும் ஒருதடவை பிரிபேர் பண்ணிக்கிறேன் சொன்னதுக்கு வேண்டாம் எல்லாம் நான் பார்த்துக்குறேனு சொன்ன….அச்சோ பகவானே எனக்கு மயக்கமே வந்துடும் போல இருக்கே….”என்று கூற,

“சரி சரி…மயங்கி விழுந்துடாத….நான் பார்த்துக்குறேன்….”என்று ஏதோ அவளை தைரியம் மூட்டுவது போல் கூறிவிட்டு கன்யா மீண்டும் திரும்பி ஆரம்பிக்க தொடங்க,

“குட் மார்னிங் கைஸ்….”என்றவளுக்கு எதிரில் இருந்தவனின் முகபாவனை மீண்டும் அனைத்தையும் மறக்க செய்தது.

“ப்ச்…..இவரு ஒருத்தரு….நானே ரொம்ப கஷ்டப்பட்டு பேச நினைச்சா….இப்படி உட்கார்ந்து என்னை பார்த்தா அவ்வளவு தான்…..நான் தான் இவரை பார்த்த எல்லாம் மறந்துடுவேனு தெரியும் தான அப்புறம் எதுக்கு இப்படி உட்காரந்து இருக்கார்…..”என்று வாய அசைக்க,ஆரியின் முகம் மலர்ச்சியில் பூத்தது அவளின் வாயசைவில்.அவனுக்கு தான் அவளை நன்கு தெரியுமே,அதனாலே தானே அவன் உட்கார்ந்து இருப்பது.கன்னத்தில் ஒற்றை கையை வைத்துக் கொண்டு ஏதோ கதை கேட்பவன் போல் அவன் அமர்ந்திருக்க,அதற்கும் வசைபாடினாள் அவனின் அருமை மனைவி,

“க்கும்…நான் என்ன இங்க கதையா சொல்லுறேன்….இப்படி உட்கார்ந்து இருக்காரு….”என்று சற்று சத்தமாகவே திட்ட,ஆரியின் முகத்தில் புன்னகை மேலும் விரிந்தது.

“வாட் ஹப்பன்ட்….கோ ஹகேட்….ட்ஸ் கெட்டிங் லேட்….”என்று கீழ் அமர்ந்திருந்தவர்கள் கூற,கன்யா கெஞ்சுதலாக ஆரியை தான் பார்த்தாள்,

“ப்ளீஸ் போங்க….”என்று வாய் அசைக்க,

“ஓகே….ஓகே….ஜில்….ஆல் தி பெஸ்ட்….”என்று அவனும் வாய் அசைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.அவன் சென்றபின்னே அவள் தனது பிரசன்டேஷனை கூற தொடங்கினாள்.ஒருவழியாக அனைத்தையும் கூறி முடிக்க நிறுவனத்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவள் பொறுமையாக பதில் அளித்தாள்.அனைத்தும் முடியும் நேரம்,

“நீங்க சொன்னது எல்லாம் ஓகே தான் கன்யா பட்….நீங்க சொல்லுர சாப்ட்வார் விட பெட்டர் சாப்ட்வார் இருக்கும் போது இதை யூஸ் பண்ணுறதுல டையம் வேஸ்ட் தான்….”என்று ஒருவர் கூற,அவர் கூறிவற்றை இன்முகமாக கேட்டுக் கொண்டிருந்த கன்யா,

“சார்….நீங்க சொல்லுறது சரி தான் நாங்க யூஸ் பண்ணுறது…..பழசு தான்….பட் ஓல்ட் ஈஸ் கோல்ட் அதனால இதுல டையம் அதிகம் ஆனாலும் வோர்க் காரக்டா இருக்கும்….”என்று அவள் கூற,

“ம்ம்ம்……நாட் ஏ பேட் அன்சர்…..குட்….ஐ கன்சீடர் யுவர் பாயிண்ட்….”என்று அவர் கூற,மற்றவர்களும் அதை வழிமொழிந்தனர்.இதை அனைத்தையும் பின் பக்கமாக நின்ற ஆரியநாதன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்த வாய் உன்னை சில நேரம் தான்டி காப்பாதுது….”என்று மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.

கன்யா தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழே வந்து நேராக ஆரியிடம் தான் சென்றாள்.அவள் தன்னை நோக்கி தான் வருவாள் என்று அறிந்தவன் அவளின் இடத்தில் தான் அமர்ந்திருந்தான்.அவனிடம் வந்தவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.ராதிகா அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டாள்.

கன்யா தன் மனதில் அழுத்திக்கிடக்கும் அனைத்தையும் தன்னவனிடம் கூறுவாளா….அவளது பிழையை மன்னிப்பானா ஆரி…..

Advertisement