Advertisement

மன்னிப்பாயா…25 (இறுதி பதிவு)

ஆரியும்,கன்யாவும் ஒன்றாக நிற்க சுதா இருவருக்கும் முகம் நிறைய புன்னகையுடன் ஆரத்தி எடுத்தார்.ஆரி கூறியபடி அடுத்த நாளே தனது மனைவியை அவளின் வீட்டில் இருந்து அழைத்து வந்துவிட்டான்.மூர்த்தி சுதாவிடம் கூறிவிட்டார் மருமகளை நாம் முறைப்படி தான் வரவேற்க வேண்டும் என்று சுதாவுக்கும் கணவர் கூறுவது தான் சரியெனபட சந்தோஷமாக ஒத்துக் கொண்டார்.தன்யாவிற்கு அத்தனை கொண்டாட்டம் தன் அண்ணன் தங்களுடன் வந்துவிட்டான் என்று.

கன்யாவை ஆரியின் வீட்டில் விடுவதற்கு ராம்,அன்பு,இளங்கோ என அனைவருமே வந்திருந்தனர்.இளங்கோவின் உடல்நிலை கருதி ஆரி மறுக்க,

“மாப்பிள்ளை நான் என் சின்ன பொண்ணுக்குனு எதுவும் செஞ்சதில்லை அதனால என்னை தடுக்காதீங்க….”என்று இரைஞ்சுதலாக கூற,ஆரி அதன் பிறகு எதுவும் கூறவில்லை.நல்ல நேரத்தில் கன்யாவும்,ஆரியும் வீட்டின் உள்ளே நுழைய ராம் அதை அழகாக படம் பிடித்தான்.

“முதல்ல விளக்கு ஏத்துமா….”என்று சுதா கூற,கன்யா பூஜையறை சென்று விளக்கை ஏற்றி வணங்கிவிட்டு வந்தாள்.சுதாவும்,தன்யாவும் சமையல் அறையில் வந்தவர்களுக்கு தேனீர் தயாரிக்க செல்ல கன்யாவும் அவர்களின் பின்னே சென்றாள்.

“நீ உட்காருமா நாங்க பார்த்துக்குறோம்….”என்று சுதா கூற,

“பரவாயில்லை அத்தை….நான் போடுறேன்….நீங்க உட்காருங்க….”என்றுவிட்டு தன்யாவிடம்,

“தனு எனக்கு சாமான் எல்லாம் எங்க இருக்குனு சொல்லு….”என்று இயல்பாக பேச சுதாவிற்கு கன்யாவின் இந்த இயல்பான பேச்சு மிகவும் பிடித்துவிட்டது.தன்யாவிற்கும் தன்னிடம் தோழமையுடன் பேசிய அண்ணியை பிடித்துவிட,

“சரி அண்ணி…ம்மா நீ போ நாங்க தான் இன்னைக்கு சமையல் ராஜ்ஜியம்…”என்று கூற,

“ஏய் வாலு உன் எக்‌ஸ்பிரிமன்ட் சமையல் எல்லாம் யாரும் சாப்பிட முடியாது….நீங்க டீ மட்டும் போடுங்க….சாப்பாடு ஹோட்டல்ல சொல்லியாச்சு….சம்மந்திக்கு மட்டும் நான் முன்னாடியே சமைச்சி வச்சுட்டேன்…”என்று சுதா கூற,

“இதெல்லாம் அந்நியாம் நான் ஒத்துக்க மாட்டேன்….”என்று தனு சிறு பிள்ளை போல அடம்பிடிக்க,கன்யாவிற்கு சிரிப்பாக இருந்தது தாய்,மகளின் சண்டையை காண,

“சாரிமா நீ எதுவும் தப்பா எடுத்துக்காத இவ யூடூப் பார்த்து சமைக்குறேன்னு தினமும் எங்களை கொன்னுகிட்டு இருக்கா…..அதனால தான் அப்படி சென்னேன்….”என்று கூற,

“சரி அத்தை நான் டீ மட்டும் போடுறேன்….”என்று கன்யா கூறினாள்.

“இன்னைக்கு எல்லாரும் தப்பிச்சிட்டாங்க ஒரு நாள் கண்டிப்பா என் சாப்பாட்டை சாப்பிட வைப்பேன்…..”என்று தன்யா சபதம் எடுக்க,அவளின் தலையில் தட்டியவர்,

“போ வாலு….”என்றுவிட்டு சுதா சென்றார்.

வரவேற்பறையில் இளங்கோவும்,மூர்த்தியும் பேசிக் கொண்டிருக்க,அன்பு அமைதியாக அமர்ந்திருக்க சுதா அவருடன் அமர்ந்து கொண்டார்.மற்றொரு அறையில்,

“ராம் நீ சொல்லுறத பார்த்தா…உங்க அப்பா இப்போவும் தப்பு தான் பண்ணுறார்….”என்று ஆரி கூற ராமும் அதை ஆமோதிப்பது போல தலையாட்டி,

“ஆமா அத்தான்….எனக்கு இதுல வருப்பமில்லைனு நானும்,கன்யாவும் தெளிவா சொல்லிட்டோம்…..ஆனா அப்பா பிடிவாதமா இருக்கார் அதான் என்ன பண்ணுறதுனு தெரியல….”என்று கவலையாக கூறினான்.நேற்று ஆரி வந்துவிட்டு சென்றவுடன் நிதி,

“என்ன எல்லாரும் ஒண்ணா சேர்ந்துட்டு என்னை ஏமாத்தலாம்னு பார்க்குறீங்கலா….”என்று கத்த,

“முதல்ல இப்படி கத்தி பேசறத நிறுத்து….உன்னை யாரும் இங்க ஏமாத்த நினைக்கல….”என்று ராம் கூற,

“நீ வாயை மூடுடா….நீ குறுக்க வராத….இது எனக்கும் அப்பாக்கும் உள்ளது….”என்றவள் இளங்கோவின் பக்கம் திரும்ப,அதுவரை தனது அறையில் இருந்த கன்யா வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தவள் இளங்கோவிள் முன் நின்றாள்.நிதி தன் முன்னே காளி போல நின்ற தங்கை கண்டு சற்று மிரண்டு தான் விட்டாள்.

“நான் உன்கிட்ட பேசவே விரும்பலை….ப்பா…”என்றவளை தன் கைபிடித்து தன் முன்னே நிறுத்தியவள்,

“என்ன பேசனும் அப்பாகிட்ட அதை சொல்லு….உனக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா…அவரே இப்ப தான் உடம்பு முடியாம ஹாஸ்பிட்டலேந்து வந்திருக்கார் அவரை ஏன் படுத்தி எடுக்குற….உனக்கு என்ன சொத்து தான வேணும்…”என்றவள் மேலும் பேசும் முன் இளங்கோவின் குரல் தடுத்தது,

“தரமுடியாது….ஒரு பைசா தரமாட்டேன்….உனக்கு என் தகுதிக்கு மீறியே செஞ்சிட்டேன்….வெளிய போ….”என்று கோபமாக கத்த,

“ப்பா….அமைதியா இருங்க….நான் பேசுறேன்….”என்ற கன்யாவை இழுத்து தனக்கு பின்னே விட்டு,

“நீ என்ன சொல்லுவனு எனக்கு தெரியும் அதனால நீ அமைதியா இரு…நான் பேசிக்கிறேன்….”என்று கோபமாக கூற,

“ப்பா….உங்களுக்கு உடம்பு சரியில்லை…இதெல்லாம் அப்புறம் பேசலாம்….”என்று ராம் கூறினான்.அவனுக்கு புரிந்துவிட்டது இது இன்று முடியக்கூடிய பிரச்சனையில்லை என்று.

“ஓ….உங்க பொண்ணு வந்தவுடனே நான் இப்ப வேண்டாதவளா ஆயிட்டேன்…..என்னை…..என்னை வெளியில போனு சொல்லிட்டீங்க….பார்த்தீங்களா ம்மா     ….”என்று நிதி தாயை உதவிக்கு அழைக்க,அவரோ முகத்தை திருப்பிக் கொண்டார்.அன்புவிற்கு மனதே விட்டு போனது தாங்கள் தான் தவறு செய்துவிட்டோம் மகளை சரியாக வளர்க்கவில்லை என்று காலம் கடந்த வந்த புத்தி வந்து என்ன பயன்.

“அவளை எதுக்கு கூப்பிடுற….இங்க நான் சொல்லுறது தான் இறுதி உனக்கு எதுவும் கிடையாது கிளம்பு முதல்ல….இல்லை…”என்று விரலை நீட்டி எச்சரிக்க நிதிக்கு அத்தனை கோபமும்,வன்மமும் மீண்டும் தன் தம்பி,தங்கையின் மீது விழ,

“எல்லாம் இதோ இருக்குங்களே….என்று கன்யாவையும்,ராமையும் காட்டியவள் இவங்களால வந்தது என்னை என் அப்பா கிட்டேந்து பிரிச்சுட்டாங்க…”என்று தலையில் அடித்துக் கொண்டு அழ,

“ஏய் முதல்ல இப்படி அழறத நிறுத்து…..”என்று அன்புவின் குரல் உயர்ந்து ஒலிக்க,நிதி அதிர்ந்து தாயை பார்க்க,

“அழுகை நிறுத்துனு சொன்னேன்….இப்படி அழுது அழுது தான் நீ உன்னை நியாப்படுத்தி மத்தவங்க தப்புனு சொல்லுற….நாங்களும் உன்னை தவிக்க விடக் கூடாதுனு மத்த இரண்டையும் விட்டோம்…விட்டோம்….”என்று அன்பு அழ கன்யா என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள்.

“இதோ பாரு நிதி நீ முதல்ல கிளம்பு….ஏற்கனவே ஒருத்தரை இப்ப தான் தேத்தி கொண்டு வந்திருக்கோம்…..அடுத்தவங்களையும் அனுப்பிடாத…”என்று ராம் கையெடுத்து கும்பிட்டே விட்டான்.பிரகாஷ் நிலைமை மேலும் தீவிரம் அடையாமல் இருக்க நிதியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டான்.நடந்த அனைத்தையும் ஆரியிடம் கூற ஆரி ராமிற்கு சில யோசனைகள் சொன்னான்.

“அத்தான் நீங்க சொல்லுறது தான் சரி நான் அப்பா கிட்ட பேசுறேன்….”என்று ராம் சற்று தெம்பாக கூற,

“சரி வா எல்லாரும் நமளை தேட போறாங்க…”என்று கூறி அழைத்து சென்றான்.அன்றை நாள் முழுவதும் கன்யாவின் குடும்பம் ஆரியின் வீட்டில் இருந்து மாலை தான் கிளம்பினர்.ஆரி இளங்கோவிடம் ராமிடம் கூறிய யோசனை மேலோட்டமாக கூறி வைத்தான் அப்போது தான் மச்சான் கூறும் போது மாமனார் யோசிப்பார் என்று நினைத்தான்.

கன்யா சமையல் அறையில் ஏதோ உருட்டி கொண்டிருக்க சுதா,

“இன்னும் நீ இங்க என்ன செய்யுறமா….போ…போய் படு….நாளைக்கு பார்த்துக்கலாம்….”

“இதோ முடிஞ்சிடுச்சு அத்தை….”என்றுவிட்டு பாத்திரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வெளியில் வர ஆரி ஹாலில் அமர்ந்து ஏதோ டீவி பார்த்துக் கொண்டிருந்தான்.

“ப்பா….வந்துட்டியா….எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது உனக்காக…. தேங்க்‌ஸ் மா….”என்று பின்னே வந்த தன் தாயிடம் கூற,கன்யாவிற்கு வெட்கமாக போய்விட்டது.அவள் சங்கடத்துடன் சுதாவை பார்க்க அவரோ தலையசைத்து தனது அறைக்குள் சென்றுவிட்டார்.

“போதும் உன் மாமியாரை பார்த்தது….வா….”என்று அவளின் கையை பிடித்து மாடி ஏற,

“அச்சோ ஆரி….என்ன பண்ணுறீங்க விடுங்க…..”என்று அவள் நெளிய,

“இப்ப யாரும் நம்மளை பார்க்கமாட்டாங்க…அப்படியே பார்த்தாலும் எனக்கு கவலையில்லை….நீ ரொம்ப நெளிஞ்ச நான் தூக்கிட்டு போவேன்…..”என்று கூறி அதன் பின் கன்யா வாயை திறக்கவில்லை.மாடியில் ஒரு அறையின் முன்பு அவளை நிறுத்தியவன்,

“ம்ம்ம்…..திற….”என்று கூற அவனை முறைத்துக் கொண்டே திறந்தவளின் கண்கள் விரிந்தது.அந்த அறையின் சுவற்றில் நீளமாக தொங்கி கொண்டிருந்த அவர்களின் புகைப்படம்.கடற்கரையில் ஆரியின் தோள்களில் கன்யா சாய்ந்து கண்மூடி இருப்பது போல் இருந்தது.வேகமாக அந்த புகைப்படத்தின் அருகே சென்றவள்,

“இது…இது…எப்ப….எப்ப எடுத்தீங்க….என்கிட்ட சொல்லவேயில்லை…..”என்று அவர்களின் படத்தை தடவியபடி கேட்க பின்னிருந்து கன்யாவை கட்டிக் கொண்ட ஆரி இதை உன்கிட்ட காட்டனும்னு தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் என்றவனின் முகம் அவளின் கழுத்தில் புதைய அவனின் மீசை முடியின் குறுகுறுப்பில் நெளிந்த கன்யா,

“ம்ம்….இதென்ன விடுங்க…”என்றவளின் குரல் மேல் எழும்பவேயில்லை,அவளை தன் முகம் பார்க்க திருப்பியவன் அவளின் மதி முகத்தை தன் இரு கைக்களிலும் ஏந்தி,

“கனி எனக்கு உன் அளவு காதலை காட்ட தெரியலைடீ…”என்று கூறி அவளை தன் நெஞ்சிற்குள் புதைத்துக் கொள்ள,அவளும் அவனிடம் இன்னுமே ஒன்றி நின்றாள்.

“ஆரி நான் ஒண்ணு சொல்லவா….”என்று கனி கேட்க,

“ம்ம் சொல்லு ஆனா இப்படி என் நெஞ்சுல சாஞ்சி இருந்தபடியே சொல்லு….”

“என் காதல் உன் காதல் இது என்ன ஆரி….நம்ம இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம் அவ்வளவு தான்….இதுல ஏற்றதாழ்வு எங்கிருந்து வந்தது….”என்றவள் நிமிர்ந்து அவனின் முகத்தை பார்க்க,அவனோ விட்டத்தை வெறித்தபடி நின்றான்.அவனின் முகத்தை தன்னை நோக்கி இழுத்து அவனின் அதரங்களை மென்மையாக முத்தமிட ஆரியின் கண்கள் சற்று கலங்கி போயிருந்தது.

“ப்ச் இது தான வேண்டாம்னு சொல்லுறது போங்க….நீங்க தான பழசை பேசாதனு சொன்னீங்க….இப்ப நீங்க தான் ஆரம்பிக்கிறீங்க….கடந்த காலத்துல நாம இரண்டு பேருமே தப்பு பண்ணியிருக்கோம் இப்ப நாம அதை திருத்தி புது வாழ்க்கை தொடங்கியிருக்கோம் ஆனா உங்களுக்கு அந்த பழசு தான் வேணும்மானா பழசை கட்டிக்கிட்டு அழுங்க….போங்க…..தள்ளுங்க…..”என்று அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ள,ஆரியின் பிடி மேலும் இறுகியது,

“விடுங்க….”என்று அவள் திமிற இவன் இழுக்க என்று இருவரும் ஒருகட்டத்தில் தடுமாறி கட்டிலில் விழ கன்யாவின் மேல் வந்த ஆரி,

“சரி சரி போதும் இனி பழசை நான் நினைக்கலை இப்ப புதுசா பேசவா….”என்று கூற,

“என்ன????”என்றவளின் அடுத்த வார்த்தைகள் ஆரியின் அதரங்களுக்குள் அடங்கியிருந்தது.ஆணவனின் தீண்டல்களில் பெண்ணவள் துடித்து அடங்க,தன் ஒட்டு மொத்த காதலையும் அவளிடம் சேர்ப்பித்து,அவளின் காதலையும் வாங்கிய பிறகே அவளை விட்டான்.

இங்கு இளங்கோவின் வீட்டில் ராமும் இளங்கோவும் ஆரி கூறியதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

“ப்பா…அத்தான் சொல்லுறது தான் சரி…சொத்தை சரி சமமா பிரிங்க நிதிக்கு சேர வேண்டியதை அவ கிட்ட கொடுத்துடலாம்….”என்று கூற,

“ஆமாங்க….ஒரு தடவை தான் நாம ஒருத்தி மட்டும் பார்த்து மத்தவங்களை விட்டோம்….இனி அப்படி வேணாம்…ராம் சொல்லுற படியே செஞ்சிடலாம்….”என்று அன்புவும் கூற,

“ம்ம்…பார்க்கலாம்…நிதிக்கு ஏற்கனவே நிறைய செஞ்சாச்சு….”என்று இறங்கோ தடுமாற,

“ப்பா பழசை விடுங்க….அவளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தலை தான் சொல்லுவா…அவ அவ வாழ்க்கை பார்க்கலை அடுத்தவங்க வாழ்க்கை பார்த்து வாழுறா அதான் பிரச்சனை….அவளை எல்லாம் திருத்த முடியாது….இப்ப நான் சொல்லுறபடி செய்ங்க…”என்று ராம் முடிவாக கூறினான்.

இளங்கோவிற்கும்,அன்புவிற்கும் தாங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்று புரிந்தது.குழந்தையாக இருக்கும் வரை அனைவரும் நல்லவராகளாக தான் இருக்கின்றனர் அவர்கள் வளர்கையில் தான் தீய பாதையில் செல்கின்றனர் அதை பெற்றவர்கள் கவனித்து திருத்தினாலே அவர்களின் வாழ்வு நல்ல முறையில் செல்லும் இல்லையேல் தடுமாறி விடும்.அது போல தான் நிதியும் அவளின் சுயநல குணத்தை பெற்றவர்கள் சிறிய வயதிலேயே கவனித்து திருத்தியிருந்தால் அவள் திருந்தியிருப்பாளோ என்னவோ ஆனால் இனி அவள் பல அடிகளை பட்டு தான் திருந்துவாள் என்பது உறுதி.

எபிலாக்

நான்கு வருடங்களுக்கு பிறகு,

ஆரி இப்போது சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறான்.கன்யாவும் அவனிற்கு உறுதுணையாக இருக்கிறாள்.இன்று ஆரியின் வீடு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

“சுதா எல்லாம் எடுத்து வச்சாச்சா….அங்க மண்டபத்துக்கு போனதுக்கு அப்புறம் இதை வச்சுட்டேன் அதை வச்சுட்டேன்னு சொல்லாத….”என்று மூர்த்தி கூற,

“எல்லாம் எடுத்து வச்சுட்டேங்க….நீங்க டென்ஷன் ஆகாமா இருங்க….சம்மந்தி கிட்ட பேசிட்டீங்களா….”

“ம்ம் அதெல்லாம் பேசிட்டேன் அங்க எல்லாரும் கிளம்பிட்டாங்களாம்….நீ போய் உன் பொண்ணை கிளப்பு….”என்று கூற,

“அவளை கன்யா கிளப்பிடுவா…”

“மருமக செய்யும் தான் ஆனா குட்டிமா விடனுமே….போ…போ….”என்று கூற சுதாவும் மகள் இருக்கும் அறைக்கு சென்றார்.

தன்யாவின் அறையில்,

“அத்தா…..அத்தா….இதை போடு….”என்று தன் பிஞ்சு கைகளில் அங்கிருந்த மேக்கப் கிட்டை நீட்ட,

“அச்சோ….போதும்டா குட்டி இதுவே அதிகம்….இதுக்கு மேல போட்ட பூதம் போல ஆகிடுவேன்…..”என்று தனு கூற,

“ஏற்கனவே அப்படி தான் இருக்க….”என்று ராம் அங்கிருந்த வீடியோ காலில் இருந்த வாரே கூற,

“ஓய் குட்டிமா….இது உன் வேலையா….போ அத்தா உன் கூட டூ…..”என்று குழந்தையிடம் கூற அது உதட்டை பிதுக்கி அழுகைக்கு தயார் ஆனது.

“அச்சோ குட்டி….அத்தை சும்மா விளையாட்டுக்கு சொன்னாடா…”என்று தன் கைகளில் ஏந்திக் கொண்டாள் கன்யா.

“அண்ணி….உங்க கிட்ட எத்தனை தடவை பாப்பாவை தூக்காதீங்கனு சொல்லிருக்கேன்….கொடுங்க….”என்று தனு வாங்க முற்பட,

“வேணாம் வேணாம்….நான் பார்த்துக்குறேன் நீ முதல்ல கிளம்பு….இவ ஆரம்பிச்சா அப்புறம் இவ அப்பாக்கிட்ட பேச்சு வாங்க முடியாது….”என்று கூறிக் கொண்டே திரும்ப,சுதா கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார்.

“கனிமா கொடு குழந்தையை…..உனக்கு ஜுஸ் வச்சிருக்கேன் போய் குடி…”என்றவர்,

“ஏய் சீக்கிரம் கிளம்புடீ….அங்க எல்லாரும் வந்துடுவாங்க….”

“ஆமா ஆமா வந்திடுவாங்க இன்னும் உங்க மாப்பிள்ளை கிளம்பின பாடு இல்லை….இங்க பாருங்க….எங்க கூட அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்காரு….”என்று கைபேசியை நீட்ட அதுவோ எப்போதோ அனைந்திருந்தது.

“எத்தனை தடவை சொல்லியிருக்கேன் உன்கிட்ட மரியாதையா பேசுனு…உனக்கு மாப்பிள்ளையை எதாவது சொல்லனா தூக்கம் வராது இல்ல….”என்று திட்ட தொடங்க தன்யா தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

இன்று ராமிற்கும்,தன்யாவிற்கும் நிச்சியம் மறுநாள் திருமணம்..தன்யாவிற்கு ராமின் மேல் விருப்பம் இருக்க அதை நேரிடையாக பெற்றோரிடம் கூறிவிட்டாள்.சுதாவிற்கும்,மூர்த்திக்குமே அந்த எண்ணம் இருந்தது தான் ஆனால் பேச தயங்கி நிற்க இப்போது மகள் தனது விருப்பத்தை கூறவும் இருவரும் ஆரியிடம் பேசி பின் கன்யாவின் வீட்டில் பேசி முடித்துவிட்டனர். சுதாவிற்கு ராம் என்றால் அத்தனை பிடித்தம் சிறு வயதில் எத்தனை பொறுப்பாக இருக்கிறான் என்று சில்லாகித்து தான் போவார்.அதனால் தன்யா ஏதாவது எக்கு தப்பாக பேசினால் சுதாவிற்கு கோபம் வந்துவிடும்.

வரவேற்பறையில் கன்யா ஜுஸை பருகியபடி இருக்க மாடியில் இருந்து இறங்கினான் ஆரி.அவனின் பார்வை முழுவதும் மனைவியிடமே அரக்கு நிற பட்டில் தங்க நிற தாமரை ஆங்காங்கே இருக்க அதனுடன் அவள் அணிந்திருந்த முத்து தோடும்,மாலையும் பேர்ழகியாகவே காட்டியது.

“ம்ம்….என் இரண்டு மகாராணியும் என்ன சாப்பிடுறீங்க….”என்று கேட்டபடியே கன்யாவின் அருகில் அமர்ந்து அவளின் மேடிட்ட வயிற்றை தடவினான்.

“ம்ம் ஜூஸ் குடிக்கிறோம்….ஆரிப்பா….”என்று அவனின் தோள்களில் சாய,

“என்ன என்ன வேணும்…ம்ம் ரொம்ப ஆசையா கூப்பிடுற….”என்றவன் கைகளும் மனைவிநின் தோள்களை வளைத்தது.

“ஆரிப்பா ஜூஸை குடிக்க முடியல….மீதி வச்சா அத்தை திட்டுவாங்க…நீங்க கொஞ்சம் குடிக்கிறீங்கலா….”என்று குழைந்து கேட்க,

“ம்ம்ம்….நினைச்சேன்டீ…நீ அன்பா கூப்பிடும் போதே ஏதோ இருக்குனு….”என்றவன் அவளின் கொஞ்சும் கண்களில் மயங்கி,

“சரி சரி  அப்படி பார்க்காத…கொடு….”என்று வாங்கி குடித்தான்.

“உனக்கு நான் ஜூஸ் கொடுத்தா….நீ அவன் கிட்ட கொடுத்துட்டு இருக்க…..இரு இன்னொரு டம்பளர் எடுத்துட்டு வரேன்….”என்று கூறியபடி சுதா வர,

“அச்சோ அத்தை இதுக்கு மேல முடியாது….”என்று கன்யா அலற,

“ம்மா விடுமா….”என்றவன் குழந்தை வாங்கி கொண்டான்.கன்யா,ஆரி இருவருக்கும் நான்கு வயதில் வருணிக்கா என்ற மகள் இருக்கிறாள் இப்போது கன்யா நிறைமாதம்.கன்யா சிறு வயதில் பெற முடியாத அத்தனையும் அன்பையும் தன் புகுந்த விட்டில் பெறுகிறாள்.ஆரிக்கு வருணி என்றாள் அத்தனை பிடித்தம் அவளை யாரும் எதுவும் கூற விடமாட்டான்.

“என்னை எல்லாரும கிளம்ப சொல்லிட்டு இப்ப நீங்க மட்டும் உட்கார்ந்து கதை பேசிக்கிட்டு இருக்கீ்ங்க….”என்றபடி தன்யாவும் அமர,

“உன்னை கிளப்புறது தான் பெரிய விஷயம் அதான்….”என்று சுதா கூற,.

“அத்தா…அத்தா….பூ….பூ….”

“என்னடா பூ….பூ….”

“ம்ம்ம்….நீ பூதம் மாதிரி இருக்கியாம்….”என்று சுதா எடுத்துக் கொடுக்க,

“ம்மா….உங்களை…”என்று தன்யா சண்டைக்கு தயாராக, ஆரியும்,கன்யாவும் தாய்,மகளின் செல்ல சண்னடைகளை ரசித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன எல்லாரும் பேசிக்கிட்டு இருக்கீங்க….கிளம்புங்க….”என்று மூர்த்தி அதட்டல் போடவும் தான் அனைவரும் கிளம்பினர்.நிச்சயம் நல்ல முறையில் முடிந்து மறுநாள் திருமணமும் நல்ல முறையில் நடந்தேறியது.தன்யாவின் முகம் மகிழ்ச்சியில் மின்னியது ராமும் தன்னவளின் முகத்தை ரசித்தபடியே அனைத்து சடங்குகளையும் செய்தான்.இளங்கோவிற்கும்,அன்புவிற்கும் மனம் நிறைந்து போனது.இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் அமர்ந்திருந்தது ஶ்ரீநிதி மட்டும் தான்.தனது ஒரு வயது மகனை மடியில் வைத்து கொண்டு அனைத்தையும் மூன்றாம் மனிதரை போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 அன்று ராம் கூறியதை போலவே அடுத்த நாளே இளங்கோ வக்கீல் ஒருவரிடம் பேசி தனது சொத்துகளை மூன்று பங்காக பிரிக்க ஏற்பாடு செய்தார்.முதலில் நிதி இதற்கு ஒத்து வராமல் பேச,

“ஒழுங்கா நான் கொடுக்குறத வாங்கிக்க இல்ல இதுவும் உனக்கு கிடைக்காது….”என்று இளங்கோ முடிவாக கூறிவிட,எப்போது அவளிற்கு பரிந்து பேசும் அம்மாவும் இன்று அமைதியாக இருந்துவிட அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது.அதனால் இளங்கோ கொடுத்ததை வாங்கி கொண்டாள்.அதேநேரம் அவள் மூன்று வருடம் கழித்து தாய்மை அடைய அன்பு மகளை மீண்டும் தாங்க தொடங்கினார்.இது தான் சமயம் என்று நிதி மீண்டும் தன் அதிகாரத்தை பிறந்த வீட்டில் காட்ட தொடங்க,இம்முறை இளங்கோ,

“இங்கபாரு நீ எப்படி எங்களுக்கு பிள்ளையோ அதே போல தான் மத்த இரண்டு பேரும்….அதனால ஒழுங்கா இருக்குறதா இருந்தா இரு….இல்ல உன் வீட்டுக்கு கிளம்பு….”என்று கூறிவிட நிதிக்கு இனி தன் அதிகாரம் இந்த வீட்டில் செல்லாது என்று புரிந்து போனது.அதனால் இப்போதெல்லாம் தாய் வீடு வருவதை குறைத்துக் கொண்டாள்.

ஆரி வீட்டில்,

கன்யா படுக்கையில் மகளை தூங்க வைத்துக் கொண்டிருக்க,ஆரி கைகளில் சுடு தண்ணீர் உடன் வந்தான்.

“கனிமா காலை காட்டு…”

“கொடுங்க நான் வச்சுக்குறேன்….”என்றவளை முறைத்தவன்,

“உன்னை காலை காட்டுனு தான் சொன்னேன்….”என்று கடுமையாக கூற,அதன் பின் கன்யா வாயை திறக்க வில்லை.மனைவிக்கு மென்மையாக பாதங்களில் ஒத்தடம் கொடுத்தவன்,

“எப்படி வீங்கி போயிருக்கு….சொன்னா கேட்குறீயா…..”என்று கடிய,

“கல்யாணம்னா வேலை இருக்க தான் செய்யும்….”என்று கன்யா கூற,நிமிர்ந்து மனைவியை முறைத்தவன் சிகையை கலைத்துவிட்டவள்,

“சும்மா எல்லாத்துக்கும் முகத்தை தூக்க கூடாது….”என்று கூற,ஆரியின் முகத்தில் மென்னகை.புரிதல் அவர்கள் வாழ்வை செழுமையாகவே கொண்டு சென்றது.கணவன்,மனைவி இடத்தில் புரிதல் இருந்தால் பல இன்னல்களை தவிர்த்து விடலாம்.ஆரிக்கும்,கன்யாவிற்கும் பல இன்னல்களை தாண்டிய பிறகு அந்த புரிதல் வந்திருக்க இனி அவர்கள் வாழ்வு என்றும் வலமாகவே இருக்கும்.

(சுபம்)

Advertisement