Advertisement

மன்னிப்பாயா….24

கன்யா படுக்கையில் தலையை பிடித்தபடி இருக்க,ஆரி அவளின் பக்கத்தில் அமர்ந்து அவளுக்கு மாத்திரைகளை பிரித்து கொடுத்து கொண்டிருந்தான்.

“இந்தா இதை சாப்பிடு முதல்ல….”என்று மாத்திரை கொடுத்தவன் பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுக்க,கன்யா மாத்திரையை கையில் வைத்துக் கொண்டு கணவனை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் மாத்திரைகளை உண்ணாமல் வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவன்,

“என்ன பார்த்துக் கிட்டே இருக்க சாப்பிடு…”என்று கூற,

“ஹா ஹா….அத்தான் நீங்க எவ்வளவு சொன்னாலும் அவ கேட்க மாட்டா….அவளுக்கு ஊசி,மாத்திரைனாலே அலர்ஜி….”என்று ராம் கூற,

“நீ என்ன சின்ன பிள்ளையா இதுக்கெல்லாம் பயப்பட…ம்ம்…சீக்கிரம் சாப்பிடு….”என்று ஒவ்வொரு மாத்திரையாக அவள் வாயில் திணிக்க கன்யா முழுங்கினாள்.,

ராமிற்கு தமக்கையை பார்க்க சிரிப்பாக இருந்தது.அவனுக்கு தான் அவளை பற்றி நன்கு தெரியுமே சிறுவயதில் இருந்தே மருந்து,மாத்திரை என்று வந்தால் அவனை ஒருவழியாக்கிவிட்டு தான் ஓய்வாள்.ஆனால் இன்று ஆரி கூறியவுடன் அவள் சாப்பிட்ட வேகம் கண்டு சிரிப்பு பீறிட,

“ஹா…ஹா…ஹா….”

“ஏய் எதுக்குடா சிரிக்கிற….உதை வாங்குவ ஓடிடு…”என்று கன்யா கோபத்தில் கத்த,

“ஸ்ரீ….எதுக்கு இப்ப கத்திக்கிட்டு இருக்க…அமைதியா இரு…ராம்…நீ இவ கூடவே இரு…”என்றுவிட்டு எழ,கன்யா வேகமாக ஆரியின் கையை பிடித்து,

“ஆரி வேண்டாம் விடுங்க…அவ ஏதோ கோபத்துல….”என்றவளின் அதரங்களை தன் விரல் கொண்டு மூடியவன்,

“ஸ்ரீ போதும்…எனக்கு தெரியும் நான் பார்த்துக்குறேன்…”என்றவன் ராமிடம் கண்னை காட்டிவிட்டு சென்றான்.

வரவேற்பறையில் இளங்கோ தலையில் கையை வைத்தபடி அமர்ந்திருக்க,அன்பு பெரிய மகளிடம் நெருங்க முடியாமல் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தார்.கன்யாவின் அறையில் இருந்து வெளியில் வந்த ஆரியின் முகம் மீண்டும் கடினம் பெற்றது.

“மாமா….இவங்க ஹஸ்பென்டுக்கு கால் பண்ணி வர சொல்லுங்க….”என்றபடி இளங்கோவின் அருகில் ஆரி தோரணையாக அமர நிதிக்கு உள்ளுக்குள் நடுக்கம் தான் என்றாலும் அதை முகத்தில் காட்டாமல் நின்றாள்.

“வர சொல்லிட்டேன் மாப்பிள்ளை வரார்….”என்ற இளங்கோ மறந்தும் மகளின் முகத்தை பார்க்கவில்லை.அத்தனை கோபம் அவளின் மீது எங்கே வார்த்தைகளை கொட்டி விடுவோமோ என்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டிருந்தார்.

“இங்க நடந்த பிரச்சனை பத்தி நான் கேட்க விருப்படலை….ஆனா இவங்க என் வொய்ப் மேல கை வச்சது தப்பு….பெரிய தப்பு அதுக்கு அவங்க மன்னிப்பு கேட்டு தான் ஆகனும்…”என்று அழுத்தமாக கூற

“நா..நான் எதுக்கு மன்னிப்பு கேட்கனும்….”என்று நிதி எகிற,

“என்ன என்ன சொன்னீங்க…..”என்று கேட்டபடி ஆரி இறுக்கை விட்டு வேகமாக எழுந்து நிற்க,நிதியின் கால்கள் தானாக பிண்ணுக்கு சென்றாலும் அவளின் வாய் அவளை விடுவதாக இல்லை.

“என்ன அடிக்கிர மாதிரி வரீங்க….பார்த்தீங்கலாப்பா…”என்று நிதி தந்தையையும் துணைக்கு அழைக்க,

“அன்பு அவளை வாயை மூடிகிட்டு நிக்க சொல்லு…இல்லை கன்னம் பழுத்துடும்….”என்று எச்சரிக்கை செய்ய,

“ப்பா…எதுக்கு என்னை அடக்குறீங்க…அதுவும் இவன்…”என்று ஆரியை மரியாதை இல்லாமல் வார்த்தையை விட,

“பளார்…..”

“உனக்கு ஒருதடவை சொன்னா புரியாது திரும்பியும் மாப்பிள்ளையை மரியாதை இல்லாம பேசுற….”என்று இளங்கோ மீண்டும் கையை ஓங்கியபடி வர,

“என்னங்க வேண்டாம்…”என்று அன்பு நிதியை தன்பக்கம் இழுத்தவர்,

“ஏன்டீ உனக்கு அறிவில்ல அப்பா கிட்ட எதிர்த்து பேசி வாங்கி கட்டிக்காத ஒழுங்க அமைதியா இரு….”

“மாமா…”என்றபடி வந்தான் பிரகாஷ். அவன் மனதில் பல திட்டத்துடன் தான் மனைவியை அவளின் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.நிதியும் அவனிடம் கூறிவிட்டு தானே வந்தாள் இன்று சென்று தந்தையிடம் பேசி சொத்து பத்திரத்துடன் வருகிறேன் என்றுவிட்டு தானே வந்தாள்.

மாமனார் போனை பார்த்தவுடனே மனைவி ஆரம்பித்துவிட்டாள் அதன் தொடக்கம் தான் இந்த அழைப்பு என்று நினைத்தவன் உடனே வருவதாக கூறினான்.ஆனால் வந்தவனுக்கு வீட்டில் தெரிந்த அமைதி வேறு கூற மனையாளின் முகத்தை பார்த்து என்ன என்று கேட்க அவளோ இது தான் சமயம் என்பது போல் ஓ வென்று அழ தொடங்கி,

“என்னங்க… என்னை  அடிக்க வராங்க….இவ்வளவு நாள் நல்லவளா தெரிஞ்சவ இன்னைக்கு அவ வந்தவுடனே நான் கேட்டவளா போயிட்டேன் ….”என்று நிதி புலம்ப,

“ஆமா ஆமா நீ ரொம்ப நல்ல பொண்ணு தான்….இந்த நல்ல பொண்ணு தான் உடம்பு முடியாத அப்பாவை பார்க்க கூட வரலை…ஆனா சொத்தை மட்டும் கேட்க வந்துட்ட அப்படிதான…..”என்றபடி ராம் வந்தான்.ஆரி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் எதுவும் பேசவில்லை அமைதியாக நடப்பதை கவனிக்க தொடங்கினான்.

“நான் என்ன தப்பா கேட்டுட்டேன்…நான் இவ்வளவு நாள் அப்பாவையும்,அம்மாவையும் பார்த்துக்கிட்டேன் அதனால கேட்டேன்….இதுல என்ன தப்பு இருக்கு….அது மட்டுமா உன்னையும்,அவளை நல்லா படிக்க வச்சாங்க நீங்க நல்லா தான இருக்கீங்க….நான் தான் கஷ்டபடுறேன்…”

“அவங்களுக்கு என்ன செஞ்சேனோ அது தான் உனக்கும் செஞ்சேன் நீ அதை சரியா பயன்படுத்திக்கல அதுக்கு நான் என்ன செய்ய முடியும்…. அப்புறம் என்ன சொன்ன நீ கஷ்டபடுறியா இதை நான் பழைய அப்பாவா இருந்திருந்தா நம்பியிருப்பேன் ஆனா நான் தான் உன்னை நல்லா தெரிஞ்சுக்கிட்டேனே….”என்று இளங்கோ கூற,நிதிக்கு மூச்சே நின்றது போல் ஆனது.

“என்ன நிதிமா இந்த அப்பாவுக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறியா….என் பொண்ணு பொய்சு போனதுல தான் எனக்கு வருத்தம்…”என்றவர் தளர்ந்து அமர,

“அப்பா…”என்றபடி ராம் அவரின் அருகே வர,ஆரி அவரின் கைகளை பற்றி,

“மாமா டென்ஷன் ஆகாதீங்க ப்ளீஸ்…”என்று கூற,அதுவரை நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த அன்புக்கு கணவரின் இந்நிலைக்கு காரணமே நிதி தான் என்று தெரிந்தவுடன் வேகமாக மகளின் அருகே சென்றவர்,

“என்னடீ என்ன பண்ணி வச்ச சொல்லு…சொல்லு….”என்று கேட்டு அவளின் தோள்களை உலுக்க,

“அவகிட்ட எதுக்கு கேக்குற என்கிட்ட கேளு நான் சொல்லுறேன்…நம்ம பொண்ணு நமக்கே தொரியாம வீடு வாங்கியிருக்கா… ஆனா நம்ம கிட்ட பணம் இல்லனு பொய் சொல்லுறா…இது மட்டுமில்லை அவ வீடு வாங்கினதே நாம அவளுக்கு  கொடுக்குற பணத்தில தான் வாங்கியிருக்கா ஆனா நம்மகிட்ட எதுவும் இல்லாத மாதிரி நடிக்கிறா அது தான் என் மனசே விட்டு போச்சு உன்னை எவ்வளவு நம்பினேன்…ச்ச… “என்று இளங்கோ கூற அன்பு நிதியை விட்டு தூரம் சென்று நின்று கொண்டார்.நிதிக்கு புரிந்து போனது இனி தனக்கு யாரும் வீட்டில் துணைக்கு இல்லை என்பது.இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த கன்யா அறையில் இருந்து வெளியில் வந்து,   

“ப்பா ம்மா விடுமா விடு…. தப்பெல்லாம் நீயும் அப்பாவும் பண்ணிட்டு இப்ப வந்து அவளை எதுக்கு குறை சொல்லுறீங்க… “என்று கத்த,இளங்கோ இளைய மகளை பார்க்க முடியாமல் தலைகுனிந்து கொண்டார்.அவள் கூறுவது சரி தானே தாங்கள் தான் இவளை தூக்கி மற்ற இருவரையும் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு தான் இப்போது அனுபவிப்பது என்று தன்னை நொந்து கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

“ஶ்ரீ…உன்னை ரெஸ்ட் எடுக்க தான் சொன்னேன்…”என்றவன் நிதியிடம் திரும்பி

“சாரி கேளுங்க…”என்று தோரணையாக கூற அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷ்,

“என்ன நீங்க என் முன்னாடியே என் வொய்ப திட்டுறீங்க…”என்று வர,

“உன் வொய்ப் வாயையும்,கையையும் அடக்கி வைக்கலனா யாராயிருந்தாலும் இப்படி தான் நடந்துப்பாங்க…ம்ம் உங்களை தான் சாரி கேளுங்க…”என்று நிதியிடம் கூற,அவள் கன்யாவின் முகத்தை கூட பார்க்காமல் சாரி என்று மிக மெல்லியதாக கூற,

“இது உன் மனசுலேந்து வரல எனக்கு தெரியும்…அதனால எனக்கு அது தேவையில்லை….”என்றவள் உள்ளே  சென்றுவிட்டாள்.நிதிக்கு தன்னை யாரும் மதிக்கவில்லை என்று தான் தோன்றியதே தவிர தான் செய்த செயல் தவறு என்று புரிந்து கொள்ளமுயலவில்லை.கன்யா உள்ளே சென்றவுடன் ஆரி இளங்கோவிடம் திரும்பி,

“மாமா நான் நாளைக்கு ஶ்ரீயை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்…”என்று கூற,

“மாப்பிள்ளை அது…”என்று மேலும் சொல்ல முடியாமல் அவர் தடுமாறினார் அவருக்கும் புரிந்து தான் இருந்தது இனி கனியை ஆரி இங்கே விடமாட்டார் என்று இருந்தும் அவனிடம் உரிமையாக கேட்கும் நிலையில் தான் இல்லை என்பதே அவரை மேலும் நிலைகுலை செய்தது.அவரின் நிலை அறிந்த ஆரி,

“மாமா பயப்படாதீங்க நான் உங்க பொண்ணை உங்க கிட்டேந்நு பிரிக்க மாட்டேன் அவ என்னைக்கு உங்க பொண்ணு தான்….அங்க எங்க வீட்டுலேயும் கன்யாவை முறையா அழைக்கனும் அதனால தான் கூட்டிட்டு போறேன்…”என்று கூற இளங்கோ ஆரியை பிரம்மிப்புடன் பார்த்து,

“மாப்பிள்ளை நீங்க வயசுல சின்னவரா இருந்தாலும் மனசு அளவுல பெரியவருனு நிருபிச்சிட்டீங்க…”என்று அவனின் கைகளை பற்றிக் கொண்டு கூறிவிட்டார்.உறவுகளை மதிக்க தெரிந்தால் பல பிளவுகளை நாம் தவிர்க்கலாம் இன்று வேண்டாம் என்று நாம் ஒதுக்கும் உறவுகள் நாளை நமக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிடும்.ஆரி அதை நன்கு உணர்ந்தவன் என்பதால் மனைவியின் பக்க மனிதர்களும் தனக்கு முக்கியமானவர்கள் என்று உணர்த்திவிட்டான்.

Advertisement