Advertisement

மன்னிப்பாயா….23

ராம் பேச்சுவதைக் கேட்ட பின்பு தான் கன்யாவிற்கு மனது சற்று சமன்பட அவள் ஆரியுடன் அவனின் இல்லத்திற்கு புறப்பட முடிவெடுத்தாள்.அன்பு தான் எங்கே மகள் கலங்கி செல்கிறாளோ என்று தவிக்க அவரிடம் வந்தவள்,

“ம்மா….ராம் சொன்னது எல்லாம் நான் கேட்டேன்…எனக்கு எந்த வருத்தமும் இல்லை…நீங்க என்னை பத்தி யோசிக்காம அப்பாவை பாருங்க….நாங்க வரோம்….”என்று கூற,

“கனி என்னடா….நான் அம்மா கூப்பிடுறேன் வீட்டுக்கு வாடா….”என்று அன்பு தன் வாய் முத்தை உதிர்த்துவிட,

“எது நான் இவ்வளவு சொன்ன பிறகு நீங்க கூப்பிடுறீங்க….”என்று ராம் எடக்காகவே கேட்டான் அன்னையிடம்.அன்பு அவனை பாவமாக பார்க்க,ஆரி தான் ராமை சமாளித்தான்.

“விடு ராம்…எதுக்கு இப்ப இதெல்லாம்…வா நாம கார் வந்துட்டான்னு பார்க்கலாம்…..”என்று கூறி அழைத்து சென்றான்.கார் வந்தவுடன் இளங்கோவை அதில் ஏற்ற,அன்பு பின் பக்கம் ஏறி அமர்ந்து கொண்டார்.ராமும்,கன்யாவும் மற்ற சாமான்களை பின் பக்கம் எடுத்து வைத்துவிட்டு வர,

“க்கா நீ கிளம்பு நான் பார்த்துக்குறேன்….”என்று ராம் கூற,இளங்கோவிற்கு அப்போது தான் மகள் தங்களுடன் வரவில்லை என்று தெரிய,

“கனி….கனி…”என்று திரும்பி அழைக்க,அன்பு பயந்துவிட்டார்.

“ராம்….அப்பா….”என்று அவர் கத்திவிட,கன்யாவிடம் பேசிக் கொண்டிருந்தவன் தாயின் அழைப்பில் பயந்து திரும்ப,கன்யாவும்,

“என்னமா….”என்று அவரின் அருகே வர,

“அப்பா….ஏதோ சொல்லுறார்டா…..”என்று அன்பு பதட்டமாக கூற,அதற்குள்,

“கனி….கனி “என்று இளங்கோவின் அழைப்பு கன்யாவை எட்டிவிட்டது.ஆரி டிரைவரிடம் முன் பக்கம் நின்று பேசிக் கொண்டிருந்தவன் இங்க அவர்களின் பதட்ட குரலில் என்ன என்று பார்க்க ஓடி வந்தான்,

“என்ன ஶ்ரீ…”என்று கேட்க,

“தெரியல…அப்பா….கூப்பிடுறார்…”என்றுவிட்டு இளங்கோவிடம் அவள் நெருங்க,கூடவே ராமும் வந்தான்.

“கனி….நீ…நீ….”என்று அவர் பேசமுடியாமல் தவிக்க,

“ராம்…..டாக்டரை கூப்பிடு….”என்று கன்யா பதட்டமாக,

“ஶ்ரீ….அமைதியா இரு…..மாமா ஏதோ சொல்ல ட்ரை பண்ணுறாங்க….வேற ஒண்ணுமில்ல….”என்றவன் இளங்கோவின் அருகில் சென்று,

“என்ன மாமா….கன்யா கிட்ட என்ன சொல்லனும்….”என்று கேட்க அவனின் கைகளை பிடித்துக் கொண்டவர்,

“கனி….வீட்டுக்கு வரலையா…..ஏன் வரலை….”என்று கேட்க,ஆரி அதற்கு பதில் கூறும் முன்,

“நீங்க கூப்பிடுங்க அவளை நம்ம வீட்டுக்கு….அப்ப தான் வருவா….”என்று ராம் அப்போதும் அக்காவை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.இளங்கோவிற்கு அப்போது தான் மகனின் கூற்று புரிந்தது.

“கனி…மாப்பிள்ளையை கூட்டிகிட்டு வீட்டுக்கு வா…..நீங்க இரண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க…நான் தப்பு பண்ணிட்டேன்…அதுக்காக என்னை ஒதுக்கி வச்சிடாதீங்க….”என்று அவர் கலங்க,

“ப்பா…..”என்று கன்யா கலங்கி அவரின் கைகளை பிடித்துக் கொள்ள,

“இப்ப எதுக்கு கலங்குறீங்க…அதான் இப்ப உணர்ந்து கூப்பிட்டீங்களே…வருவா வராம எங்க போயிட போறா…அத்தான் அக்காவை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வாங்க…..”என்று தான் தந்தைக்கும் நல்ல மகன் என்று நிருப்பித்தான்.ஆரிக்கே ராமின் இந்த புரிதல் அத்தனை வியப்பாக இருந்தது இந்த சிறிய வயதில் எத்தனை பொறுமையுடனும்,பொறுப்புடனும் இருக்கிறான் என்று தன் மச்சானின் மீது தனி மரியாதை வந்தது.

“சரி ராம்….நீங்க முன்னாடி போங்க…நாங்க பின்னாடி வரோம்…..”என்று ஆரி கூற,தன் மகன் கூப்பிட்டவுடன் எந்த பிகுவும் பண்ணாது ஒத்துக் கொண்ட ஆரியை வியப்புடன் பார்த்தவர்,

“என்ன மன்னிச்சிடுப்பா…..”என்று மீண்டும் அவனிடம் கூற,

“ப்பா….இப்ப எதுக்கு இப்படி மன்னிப்பு கேட்குறீங்க….நாங்க வீட்டுக்கு வரோம்…பேசிக்கலாம்…”என்று கன்யா கூற,

“மாமா….எனக்கு உங்க மேல கோபம் எல்லாம் இல்லை சின்ன வருத்தம் அதுவும் இப்ப இல்லை….அதனால இப்படி என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்காதீங்க….எனக்கு சங்கடமா இருக்கு….”என்று ஆரி கூற,தன்னை எதிலும் விட்டுக் கொடுக்காத மகன்,மகள்,மருமகன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கடவுளுக்கு நன்றி கூறினார்.

ராம்,அன்பு,இளங்கோ காரில் முன்னே செல்ல,அவர்களின் பின்னே கன்யாவும்,ஆரியும் பின் தொடர்ந்தனர்.காரில் அன்பு,

“ஏன்டா கன்யாவை நாம கூட கார்ல வர சொல்லிருக்கலாம்ல….”என்று கூற,

“ப்ச்…ம்மா…அவ இப்ப தான் முதன் முதல்ல வரா அதனால தான் நான் அத்தானோட வர சொன்னேன்….”என்றவன் மீண்டும் அன்னையிடம்,

“ம்மா….அவ வந்தவுடனே இரண்டு பேரையும் ஆர்த்தி எடுத்து அப்புறம் வீட்டுக்குள்ள கூப்பிடுங்க…”என்று கூற,இளங்கோவிற்கு மகனின் இந்த பேச்சுக்கள் ஒரு தந்தையாக நெகிழ செய்தாலும் தான் தவறியவற்றை உணர்த்திக் கொண்டே தான் இருந்தன அதை அவன் உணர்ந்தானோ என்னவோ அவரின் தோள்களை தொட்டு,

“ப்பா…நான் சொன்னது சரிதானப்பா….”என்று கேட்க,அவனின் கைகளின் மீது தன் கைகளை வைத்து,

“சரி தான் ராம்பா…சரிதான்….அன்பு ராம் சொன்னபடி செய்….”என்றார்.கார் அவர்களின் வீட்டின் முன்பு நிற்க கன்யாவும்,ஆரியும் பின்னாடி வந்து தங்களது வண்டியை நிப்பாட்டினர்.

“ம்மா….போ…..போய் சீக்கிரம் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா…அவ ஒரு அவசர குடுக்கை வேகமா உள்ள வந்துடுவா….போ….”என்று ராம் அன்னனையை அவரசரபடுத்தியவன்,இளங்கோவிடம்,

“ப்பா…..நீங்க கார்லே இருங்க….நான வந்து உங்களை உள்ள கூட்டிட்டு போறேன்….”என்று கூற இளங்கோ புன்னகையுடன் சரி என்னும் விதமாக தலையாட்டினார்.காரில் இருந்து வேகமாக இறங்கிய ராம்,

“அக்கா அத்தான்…இருங்க….”என்று கத்த,வீட்டின் உள்ளே வர இருந்தவர்கள் அங்கே நின்றுவிட்டனர்.

“என்னடா….எதுக்கு நிக்கனும்…சாமான் எல்லாம் எடுத்து வைக்க வேண்டாமா…அம்மா மட்டும் எப்படி எடுப்பாங்க….”என்று கன்யா பொரிய,

“ப்ச்….அத்தான் இவளை வாயை மூட சொல்லுங்க….எப்ப பாரு தொண தொணு பேசிக்கிட்டே இருக்கா எப்படி தான் சமாளிக்கிறீங்களோ….”என்று கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்றான்.

“பார்த்தீங்களா எப்படி பேசிட்டு போறான்னு….”என்று கனி கணவனிடம் முறையிட,

“நீயும் உன் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டேங்குற…அதான் என் மச்சான் திருப்பி கொடுத்துட்டு போறான்…..”என்று ஆரி பெருமையாக கூற,கன்யாவிற்கு முறைப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.இளங்கோ மகளின் முகம் விழுவதை பார்த்தவர்,

“கனிமா….உங்க இரண்டு பேரையும் ஆரத்தி எடுத்து தான் வீட்டுக்குள்ள அழைக்கனும் உன் தம்பி ஆடர் போட்டிருக்கான்….அதான் உன்னை உள்ள விட மாட்டேங்குறான்….”என்று கூற,ஆரி மணையாளை பார்த்து,

“எப்படி என் மச்சான்….”என்று கூற,

“ரொம்ப தான்….”என்று உதட்டை சுளித்துவிட்டு திரும்பி கொண்டாள்.வீட்டின் உள்ளிருந்து அன்பு ஆரத்தி தட்டை எடுத்துக் கொண்டு வர அவரின் பின்னே ராமும் வந்தான்.

“க்கா,அத்தான் சேர்ந்து நில்லுங்க….”என்று கூற,ஆரி கன்யாவின் பக்கத்தில் நின்று அவளின் தோள்களை பிடித்துக் கொண்டான்.அன்பு இருவருக்கும் ஆரத்தி எடுக்க கன்யாவின் விழிகள் கலங்கியது இதெல்லாம் தனக்கு நடக்க வில்லையே என்று மனதின் ஓரத்தில் இருந்தது தான் ஆனால் எதிர்பாராதவிதமாக நடக்க மனதின் பூரிப்பு கண்ணீராக வெளிப்பட்டது.அவளின் உணர்ச்சிகளை புரிந்தவன் அவளை ஒரு கையால் அணைத்து,

“ஶ்ரீ….”என்று அழைக்க நிமிர்ந்து அவனை பார்க்க அந்த காட்சியை அழகாக படம் பிடித்தான் ராம்.இளங்கோ இது அனைத்தையும் மன நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.அதன் பின் இருவரையும் வீட்டின் உள்ளே அன்பு அழைக்க இருவரும் ஒன்றாக வீட்டின் உள் வந்தனர்.கன்யா அன்னைக்கு உதவ போய்விட ஆரியும்,ராமும் இளங்கோவிற்கு உதவி செய்து அவரை வீட்டின் உள் அழைத்து வந்து அறையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் வந்து பேசிக் கொண்டிருந்தனர்.ஆரி தனக்கு வேலை இருப்பதாக கூறி அனைவரிடமும் கூறிவிட்டு கிளம்பியவன் கன்யாவிடம் கண் அசைக்க அவனின் பின்னே வந்தவள்,

“என்ன ஆரி….”

“நான் கிளம்புறேன்….வேலை நிறைய பெண்டிங் இருக்கு…எதாவது தேவைனா போன் பண்ணு…..ம்ம்….அப்புறம்….ம்ம்….”என்று ஏதோ யோசிப்பது போல தடுமாற,

“என்ன ஆரி….சொல்லுங்க….”

“ம்ம்ம்….ஶ்ரீ….எப்ப நம்ம வீட்டுக்கு வருவ….”என்று தன் மனதில் உள்ளதை கேட்டுவிட,கன்யாவின் முகம் அந்தி வானமாக சிவந்து போனது.

“அது….அப்பா….”என்று அவள் தடுமாற,அவளின் கைகளை பற்றியவன் தன் நெஞ்சின் அருகே வைத்துக் கொண்டு,

“சீக்கிரமா வாடீ…அவ்வளவு தான் சொல்லுவேன்…..”என்றுவிட்டு யாரும் வருகிறார்களா என்று ஒரு பார்வை பார்த்து அவளின் கன்னத்தில் அழுந்த அதரத்தை பதித்து விலக,

“அச்சோ என்னதிது…”

“ஏன் உனக்கு தெரியாதா….இல்ல நான் சரியா கொடுக்கலையா….தப்பாச்சே இரு இப்ப கரட்டா கொடுக்குறேன்…”என்றுவிட்டு மீண்டும் இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி கொடுக்க,

“அச்சோ தள்ளி போங்க…யாராவது வந்துட போறாங்க….”

“எல்லாம் பார்த்துட்டு தான் கொடுத்தேன்….”என்று கண்களை சிமிட்ட,கன்யாவிற்கு முகத்தின் சிவப்பு இன்னும் தான் கூடி போனது.

“ஶ்ரீமா…. இப்படி சிவந்தா நான் எப்படி போறது….”என்று மீண்டும் நெருங்க,

“அத்தான்….”என்று கூப்பிட்டபடி ராம் வர வேகமாக அவளிடம் இருந்து நகர்ந்தவன்,

“இவனை….”என்று ஆரி பல்லை கடிக்க,

“என் மச்சான் போல வருமானு சொன்னீங்க…”என்று அவள் கேலியாக சிரிக்க,

“ம்ம்…கிண்டலா….இருடீ தனியா மாட்டுவல்ல அப்ப இருக்கு உனக்கு….”என்று அவளிடன் பல்லிடுக்கில் கூறிவிட்டு ராமிடம் சென்றான்.ராமிடம் சற்று நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான் ஆரி.

இதோ இரண்டு வாரங்கள் அவளின்றி அவன் மட்டும் இந்த அறையில் ஏதோ மூச்சு முட்டுவது போல் இருந்தது அவனுக்கு.தினமும் காலைவேளை அவளின் அழைப்பில் கண்விழிப்பவன் இரவு அவளுடன் பேசியபடி தான் உறங்குவான்.முன்பு எல்லாம் எதற்கும் அவளை தேடாதவன் இப்போது ஒவ்வொன்றுக்கும் அவளை தான் தேடினான். இளங்கோ இப்போது நன்கு தேறியருந்தார்.ஆரி ஒருமுறை குடும்பத்துடன் சென்று பார்த்துவிட்டு வந்திருந்தான்.

தனது அறையில் மடிக்கணினியின் முன்பு அமர்ந்து வேலை என்ற பெயரில் ஏதோ செய்து கொண்டிருந்தான் ஆரி.அவனது மனம் முழுவதும் தன் மணையாளிடமே இருந்தது.இப்போது கூப்பிட்டால் வந்துவிடுவாள் தான் இருந்தும் அங்கு என்ன நிலவரமோ என்று மனது அடித்துக் கொண்டிருந்தது அதுவும் நேற்று இரவு கன்யா ஶ்ரீநிதி வந்து வீட்டில் ரகளை செய்துவிட்டு சென்றதாக கூறியதில் இருந்து மனது ஒருநிலையில் இல்லை.

இன்று காலையில் கூட அவளின் அழைப்பு இல்லை என்பதை இப்போது உணர்ந்தவன் அவளிற்கு அழைக்க அழைப்பு போய் கொண்டே இருந்தது.அதற்கு மேல் அவனால் இருக்க முடியவில்லை உடனே கிளம்பிவிட்டான்.

ஆரி கன்யாவின் வீட்டை அடையும் போது வீட்டின் உள்ளிருந்து இளங்கோவின் கோபக் குரலும்,ராமின் கடுமையான குரலும் கேட்க,வேகமாக வீட்டின் உள்ளே சென்றவன் கன்யாவைக் கண்டு,

“ஶ்ரீ….”என்று அதிர்வுடன் அவளிடம் வர,இளங்கோவிற்கு நெஞ்சம் பிசைந்தது.

கன்யாவின் நெற்றியில் அடிப்பட்டு நெற்றி புடைத்து வீங்கியிருந்தது.கன்யாவின் இருபுறமும் அன்புவும்,ராமும் அமர்ந்திருக்க அன்பு கன்யாவிற்கு நெற்றியில் ஐஸ் கட்டிகளை வைத்தபடி இருந்தார்.இவர்களின் எதிரில் கன்னத்தில் கைகளை வைத்தபடி கன்யாவை வன்மமாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் ஶ்ரீநிதி.

“ஶ்ரீ….என்னடா என்ன….எப்படி அடிப்பட்டது….”என்று ஆரி பதட்டமாக கேட்க,

“அது….கீழ விழுந்துட்டா தம்பி….”என்று அன்பு தடுமாற்றமாக கூற,

“ம்மாஆஆஆஆ…..ஏன் பொய் சொல்லுறீங்க….”என்றவன் ஆரியிடம் திரும்பி,

“என்கிட்ட கேளுங்க த்தான்…இதோ நிக்குறாளே….”என்று ஶ்ரீநிதியை காட்டியவன்,

“இவ தான் அக்காவை தள்ளிவிட்டா….ச்சீ நீ எல்லாம் ஒரு பொண்ணா…”என்று ராம் கோபத்தில் கத்த,ஆரிக்கு கோபம் தலைக்கேறியது,கன்யாவோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை அவளிற்கு மண்டை வலிக்க,கண்கள் மங்கலாக தெரிந்தது.

“ஆரி….தலை வலிக்குது….முடியல…..”என்று முனங்கலாக கன்யா கூற அது ஆரியின் உயிர் வரை தீண்ட கோபமாக இருந்தவன் இப்போது பதட்டமாக,

“ஶ்ரீ…ஶ்ரீ…என்னமா என்னடா…”என்றவன்

“ராம் இங்க பக்கத்தில யாராவது டாக்டர் இருந்தா கூட்டிட்டு வா….போ….”என்று அவனிடம் கத்த,ராமிற்கே இப்போது பயம் பிடித்துக் கொண்டது,ஆரி யாரையும் கருத்தில் கொள்ளாது கன்யாவை தூக்கியவன்,

“இவ ரூம் எது….”என்று கேட்க,அன்பு கை காட்டியவுடன் அவளை அந்த அறைக்குள் அழைத்து செல்லும் முன்,நிதியிடம் நின்றவன்,

“நீங்க எங்கேயும் போக கூடாது….இந்த இடத்தை விட்டு நகர்ந்தீங்க…”என்று ஒற்றை விரலை நீட்டி எச்சிரிக்க,நிதிக்கு மனதில் கிலி பிடித்தது.அவள் இளங்கோவை பார்க்க அவரோ,அவளை கண்டு கொள்ளாமல்,

“அன்பு….போ…கனியை பாரு…..”என்றவர்,

“உன் வீட்டுகாரர் எப்ப வருவாரு….போன் பண்ணு அவருக்கு….நான் பேசனும்….”என்றுவிட்டு எதிரில் இருந்த நாற்காலியில் தளர்ந்து அமர்ந்துவிட்டார்.

“ப்பா….என்னை அவன் மிரட்டிட்டு போறான்….”என்று நிதி கூறி முடிக்கும் முன்,

“பளார்….”அடுத்த கன்னத்தில் இளங்கோவின் கரம் அழுத்தமாக பதிந்திருந்தது.

“இன்னும் ஒரு வார்த்தை என் மாப்பிள்ளையை அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசின….தொலைச்சிடுவேன்….”என்றுவிட்டு பிராகாஷிற்கு அழைப்பு விடுத்தார்.

Advertisement