Advertisement

மன்னிப்பாயா…22

ஆரியும்,ராமும் மருத்துவரை சந்தித்துவிட்டு வந்தனர்.ராமிற்கே ஆரி வந்த பிறகு தான் ஏதோ தெளிவு பிறந்தது போல் இருந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் அத்தான்….எனக்கு….எனக்கு என்ன செய்யறதுனே தெரியலை….நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் மனசு கொஞ்சம் தெளிஞ்சிருக்கு….”என்று கூற,அவனை தோள்களை சுற்றி கை போட்டவன்,

“ஹே….எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற….அதான் டாக்டர் செல்லிட்டாங்கல்ல அப்பாக்கு மைல்ட் அட்டாக் தான் மத்தபடி பயப்பட வேண்டாம்னு….அப்புறம் எதுக்கு இவ்வளவு பயம்….நாங்களும் உன் கூட தான் இருப்போம்….ஜஸ்ட் ஜில் மேன்….”என்று புன்னகை முகமாக கூற,அவனின் புன்னகை ராமையும் வசியம் செய்தது போல,

“உங்க ஸ்மைல் நல்லா இருக்கு…அக்கா அடிக்கடி சொல்லுவா உங்களை பத்தி….நீங்க ஹீரோ போல தான் இருக்கீங்க….”என்று கூற,ஆரிக்கு சற்று வெட்கம் வந்தது,

“ம்ம்…உன் அக்கா தான அவ சொல்லுவா சொல்லுவா….சரியான வாளு….”என்று மனைவியை செல்லமாக திட்டிக் கொண்டான் மனதில்.இருவரும் ஐசியூவை நோக்கி வர அன்பு கன்யாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்தார்.கன்யா எதிரில் இருந்த சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.மனைவி அமர்ந்திருந்த விதம் ஆரிக்கு மனதை பிசைய அவளை நெருங்கும் முன்,

“அண்ணி….”என்றபடி கன்யாவின் அருகே வந்தாள் தன்யா.அவளின் பின்னே சுதாவும் வந்தார்.ஆரிக்கு தன் குடும்பத்தை பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை.அவன் அப்படியே நின்றுவிட்டான்.

கன்யா தன்யாவை கண்டவுடன் உணர்வு வந்து எழ பார்க்க,அவளின் மடியில் படுத்திருந்த அன்புவும் என்னவோ ஏதோ என்று பதறி எழுந்தார்.

“என்ன கனி என்ன…அப்பா….அப்பா நல்லயிருக்காங்கல்ல…”என்று அவர் பதற,

“ம்மா….ஒண்ணுமில்ல….நீங்க பதறாதீங்க….”என்ற அவரை அமைதிபடுத்தி அமர வைக்க,தன்யா அன்புவிற்கு தான் எடுத்துவந்த தண்ணீரை பருக கொடுக்க,கன்யா அதனை வாங்கி அவருக்கு புகட்டினாள்.

“தனு….ம்மா….”என்று அவர்களின் அருகே வந்தான் ஆரியநாதன்.சுதா வெகுநாட்களுக்கு பிறகு மகனை பார்ப்பதால் அவனிடம் பேச நா எழவில்லை அதனால் தலையசைத்தபடி நிற்க,

“ண்ணா….நானும் அம்மாவும் வந்தோம்….அப்பா காரை பார்க் பண்ண போயிருக்காங்க…இப்ப மாமாக்கு எப்படி இருக்கு….”என்று வரிசையாக கேள்விகளை தொடுக்க,பார்த்து கொண்டிருந்த ஆரி தங்கையின் இத்தனை உரிமை பேச்சில் உறைந்து நிற்க,அவனின் கைகளை மெல்ல சுரண்டினாள் அவனின் ஆருயிர் மனைவி.திடீர் என்று கன்யா கையை சுரண்டவும் அவளிடம் திரும்பியவன் என்ன என்று கேட்க,

“இது நிஜமா உங்க தங்கச்சி தானா????”என்று அவள் கேட்க அதற்கு ஆரி பதில் கூறும் முன்,

“அச்சோ….அண்ணி….நம்புங்க….நான் உங்க புருஷனோட தங்கச்சி தான்….”என்று தனு தலையில் கை வைத்து கூற,அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

“தனு சும்மா இரு….கனி இங்க வா….”என்று சுதா அழைக்க,கன்யா திரும்பி ஆரியின் முகத்தை பார்த்தாள்,அவனோ தங்கை பேச்சிலேயே அதிர்ச்சியில் இருந்தவன் இப்போது அன்னை கன்யாவிடம் பேசியதில் ஏதோ அதிசயத்தை பார்த்ததை போல பார்த்துக் கொண்டு நின்றான்.

“அண்ணி….அண்ணா ப்ரீஸ் ஆகிட்டான்….நீங்க வாங்க…”என்று அவளை தனது அன்னையின் அருகில் இழுத்து நிறுத்தியவள்,

“அம்மா…அண்ணி வந்துட்டாங்க என்னனு சொல்லுங்க…”என்று கூற,அவளின் தலையில் செல்லமாக தட்டியவர்,

“இப்ப தான் வந்து இருப்பீங்க….இந்தா….”என்று கூடை அவளிடம் திணித்தவர்,

“அம்மாக்கு முதல்ல சாப்பாடு கொடு….”என்று கூற கன்யாவிற்கும் அப்போது தான் உறைத்தது தாய் என்ன உண்டாரோ தான் கேட்கவில்லையே என்று அவளுக்கு இம்மாதிரி சூழ்நிலையை கையால தெரியவில்லை அதனால் தடுமாறி தான் நின்றாள்.அவள் முகத்தை வைத்தே அவள் மனதை கணித்த சுதா,

“எல்லாம் நல்லது நடக்கும்….நாம தைரியமா இருந்தா தான் அம்மா வை பார்த்துக்க முடியும்….போ…”என்று அவளை ஊக்க,கன்யாவிற்கும் சுதா கூறுவருவது புரிந்து தாயிடம் வந்து,

“அம்மா….வா…முகத்தை அலம்பு….இப்படியே நீயும் இருந்தா அப்பாவை யார் பார்த்துக்க….அப்பாக்கு ஒண்ணுமில்ல….இன்னைக்கு நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க….நீ முதல்ல சரியாகு வா….”என்று கூற,

“என்ன அப்பாவை நார்மல் ஆகிட்டாரா…நான் அவரை பார்க்கலாமா…”என்று அன்பு கேட்க,

“பார்க்கலாங்க…முதல்ல நீங்க தைரியமா இருந்தா தான அவரை பார்க்க முடியும்….வாங்க….”என்று சுதாவும் அன்புவிடம் கூறி அழைக்க மறுக்க முடியாமல் சென்றார்.

“ஆரி…ஆரிப்பா….எப்படா வந்த….”என்றபடி வந்தார் மூர்த்தி.

“இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான்பா…..”

“எப்படி இருக்காங்க…டாக்டர் என்ன சொல்லுருரார்…”என்று மூர்த்தி விசாரிக்க,ஆரியும்,ராமும் மருத்துவர் கூறியதை கூறினர்.

“சரிப்பா…நல்லது….எப்ப நார்மல் வாட்டுக்கு மாத்துவாங்க….”என்று மூர்த்தி கேட்க,

“அப்பா இன்னும் கண் திறக்கலை அங்கிள்….கண்ணு திறந்ததுக்கு அப்பறம் நார்மல் வார்டுக்கு மாத்துறோம்னு சொல்லியிருகாங்க…”என்ற ராம்,

“அத்தான் நீங்க போய் கொஞ்சம் ரிப்பிரஷ் பண்ணிட்டு வாங்க….நான் இங்க இருக்கேன்….”என்று ராம் கூற,

“இல்ல ராம் எனக்கு எதும் பிரச்சனை இல்லை….”என்று அவனும் ராமுடன் அமர்ந்து கொண்டான்.மூர்த்தி மகனிடம் பேசியபடி அமர்ந்திருந்தார்.அப்போது இளங்கோவின் அறையில் இருந்த நர்ஸ் வெளி வந்து,

“சார் உங்க அப்பாக்கு நினைவு வந்துடுச்சி….அவரு யார் பெயரையோ கூப்பிடுறாரு….ஒரு ஆள் மட்டும் உள்ள போய் பாருங்க….”என்று கூற,ராம் வேகமாக எழுந்து தந்தையை காண உள்ளே சென்றான்.

அறையின் உள்ளே ராம் நுழைய இளங்கோ கண்களை திறந்து திறந்து மூடியபடி இருந்தார்.யாரோ வரும் அரவம் கேட்கவும் திரும்பி பார்க்க யாரோ வருகிறார்கள் என்று புரிந்தது ஆனால் யார் என்று சரியாக தெரியவில்லை பார்வை அவருக்கு மங்கலாக தெரிந்தது.

“அப்பா….இப்ப எப்படிபா இருக்கு….”என்றபடி ராம் அருகில் வர அவனின் குரல் வைத்து வந்தது மகன் என்று கண்டு கொண்டவர்,

“ராம்பா….ராம்பா….”என்று அவனின் கைகளை பிடித்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

“ப்பா….ஒண்ணுமில்ல….ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க….கனி அக்கா வந்துட்டா…”என்று ராம் கூற,

“கனி….கனி….”என்று அவளை அழைத்து வரும்படி கைகளால் செய்கை செய்ய,

“இதோ இருங்கப்பா….கூட்டிட்டு வரேன்….”என்று வேகமாக வெளியில் வர,அப்போது தான் அன்புவும்,கன்யாவும் வந்திருந்தனர்.

“க்கா…அப்பா கூப்பிடுறார்…போ….”என்று ராம் கூற கன்யாவிற்கு மனதில் நடுக்கம்,அதற்குள் அன்பு,

“ராம் அப்பா கண் முழிச்சிட்டாரா…ஏன் என்கிட்ட சொல்லல…நான் போய் பார்த்துட்டு வரேன்…”என்று அவர் பதற,

“ம்மா….நீ இரு…க்கா போகட்டும்….நீ பதட்டமா பேசி அவரை பதற வைக்காத…”என்று ராம் சற்று காரமாகவே கூற,அன்புவின் முகம் கூம்பி விட்டது,

“என்னப்பா இது அம்மா கிட்ட ஏன் கோபப்படுற….”என்று மூர்த்தி கேட்க,

“உங்களுக்கு தெரியாது அங்கிள்….இது எல்லாம் இவங்களே இழுத்துவிட்டுகிட்டது…..சும்மா பெரிய பொண்ணு பொண்ணு தூக்கி வச்சி கொண்டாடுனாங்க….அதான் இப்ப இப்படி நிக்குறாங்க….”என்று அவன் மேலும் ஏதும் கூறும் முன்,

“ராம்….”என்று கன்யாவின் அதட்டலில் அமைதியானான்.

“ப்ச்….ராம்…வா…டென்ஷன் ஆகாத….”என்று ஆரி அந்த சூழ்நிலை மாற்ற அவனை தன் பக்கம் இழுத்துக் கொண்டவன் கன்யாவிடம் திரும்பி,

“ஶ்ரீ….போ….போய் பாரு….ஆனா பயப்படக் கூடாது…தைரியமா இருக்கனும்….புரியுதா…போ…நான் இவனை பார்த்துக்குறேன்….”என்றவன்,சுதாவிடமும்,தன்யாவிடமும் அன்புவை கண் காட்ட அவர்களும் அதை புரிந்து கொண்டு தலையாட்டினர்.

தன் மனதில் பலத்தை திரட்டிக் கொண்டு தந்தையின் அறைக்குள் நுழைந்தாள் கன்யா.இளங்கோவின் மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க் இருக்க,அவரின் மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது.மெல்ல அவரின் அருகில் வந்தவள் தன் விரலால் அந்த கண்ணீரை துடைத்தவிட,அந்த மென் ஸ்பரிசத்தை உணர்ந்தவர்,

“கனி…கனிமா….வந்துட்டியா…இந்த அப்பாகிட்ட வந்துட்டியா…”என்று அவளின் கைகளை அவர் பிடித்து கொள்ள,கன்யாவிற்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது.எப்போதும் கர்வத்துடன் தந்தை பார்த்திருக்கிறாள் இப்படி ஓய்ந்து போய் என்று பார்த்தது இல்லை அதுவே அவளை நிலைகுலை வைத்திருந்தது.

“ப்பா…ஒண்ணுமில்ல…இப்படி டென்ஷன் ஆகாதீங்க…”என்று அவள் அவரின் கைகளை பற்றிக் கொண்டு கூற,

“எப்படிமா….எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன் ஒருத்தியை மட்டும் பாரத்து உங்க இரண்டு பேரையும் விட்டுடேனே….”என்றவரின் குரல் உடைந்து வர,

“ப்பா….அதெல்லாம் இல்லை….நீங்க அப்படி இல்லை….”என்று கன்யா கூற,

“இல்ல…இல்ல….நான் உங்களை விட்டுடேன்….எனக்கு இப்ப தான் புரியுது….எனக்கு மன்னிப்பே கிடையாது…என் பிள்ளைகளை தவிக்கவிட்டேன்….”என்று அவர் புலம்ப,கன்யாவிற்கு இளங்கோவை அமைதிபடுத்த தெரியவில்லை அவள் என்ன செய்வது என்று அல்லாட,யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு திரும்ப அவளின் மணாளன் வந்து கொண்டிருந்தான்.

கன்யாவிற்கு ஆரியை பார்த்தும் தான் சற்று தெம்பு வந்தது.தன்னிடம் நெருங்கி வருபவனிடம் கண்களால் தந்தை காட்ட ஆரி தன் கண்களை மூடி திறந்து சமாதானம் செய்து கொண்டே அருகில் வந்து,

“மாமா….”என்று அவன் அழைக்க இளங்கோவின் பிதற்றல்கள் நின்றது.தான் கேட்ட குரல் யாருடையது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்க,

“மாமா….நான் ஆரி….”என்று அவரின் முகம மாற்றத்தை உணர்ந்து கூற,

“மாப்…மாப்பிள்ளை….என்னை மன்னிச்சிடுங்க….”என்று அவனின் கைகளை பிடிக்க அவரின் கைகளை தட்டிக் கொடுத்தவன்,

“மாமா….இப்ப நீங்க ரொம்ப பேசக்கூடாது….அமைதியா இருங்க….அதான் நாங்க வந்துட்டோம்ல….நாங்க இருக்கோம்….”என்றவன்,கன்யாவிற்கும் கண்களை காட்ட,

“ஆமாம் ப்பா….நீங்க முதல்ல சரியாகி வாங்க….அம்மா வேற பயந்துட்டே இருக்காங்க….”என்று கூற,இளங்கோவிற்கு மகள்,மருமகன் பேச்சில் மனது சற்று சமன் பட்டது.ஆனால் மனதின் ரணம் ஆறவில்லை நல்ல உள்ளங்களை காயப்படுத்திவிட்டோம் என்று தன் மனதை வதைத்துக் கொண்டு தான் இருந்தார்.

“ப்பா….இதுவரைக்கும் எங்களுக்கு கொடுக்காத அன்பை இனி கொடுக்கனும் நீங்க நினைச்சா நல்லபடியா திரும்பி வாங்க….நாங்க காத்திட்டு இருக்கோம்….”என்று கன்யா கூறிவிட்டு வெளியில் வந்துவிட்டாள்.ஆரி இனங்கோ சற்று சமாதனம் செய்து தான் வெளி வந்தான்.

இளங்கோவை ஒரு நாள் முழுதாக ஐசியூவில் வைத்திருந்து தான் மறுநாள் தான் வார்டுக்கு மாற்றினர்.அன்பு இளங்கோவை கண்டு மேலும் கலங்கி தான் போனார் ஆனால் அதை முகத்தில் காட்டவில்லை மகன் வேறு ஏற்கனவே திட்டியிருக்க தன்னை இயல்பாக காட்டிக்கொண்டார்.கன்யா அன்புடன் இருந்தாள் ஆரி அவனின் வீட்டிற்கு சென்றிருந்தான்.சுதாவும்,மூர்த்தியும் ஆரியிடம் கன்யாவையும் அழைத்துவரும்படி தான் கூறினர் ஆரி தான் இப்போது வேண்டாம் இளங்கோ நலமடையட்டும் என்று கூறிவிட்டான்.

இளங்கோவின் மருத்துவ வாசம் முடியவே இரண்டு நாட்கள் ஆனது.அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றவுடன் ராமும்,ஆரியும் அனைத்து வேலைகளை பார்க்க,அன்புவும்,கன்யாவும் அறையில் இருந்தவற்றை எடுத்து வைத்து கொண்டிருந்தனர்.

“ம்மா….கிளம்பலாம்….”என்றபடி வந்தான் ராம்.

“கிளம்பலாம்டா….கனி எல்லாம் எடுத்துட்டியானு ஒருதடவை பார்த்துடுடா….”

“நான் எல்லாம் பார்த்துட்டேன் எதுவும் இல்லை….”என்று கூறிக் கொண்டிருக்க,

“க்கா….நீ அத்தான் கூட வீட்டுக்கு கிளம்பு….நாங்க பார்த்துக்குறோம்…..”என்று ராம் கூற,கன்யாவின் முகம் அப்படியே விழுந்துவிட்டது.

“டேய் ராம்….ஏன்டா இப்படி பேசுற….”என்று அன்பு பதறிவிட்டார்.அவர் கலக்கமாக மகளை பார்க்க அவள் கண்கள் கலங்கி கண்ணீர் விழுந்துவிட,

“கனிமா….”

“ம்மா….நான் வெளியில இருக்கேன்….”என்று குரல் தழுதழுக்க கூறிவிட்டு அவள் சென்றுவிட்டாள்,இளங்கோ மருந்தின் தாக்கத்தால் நல்ல உறக்கத்தில் இருந்தார் அதனால் அவருக்கு எதுவும் தெரியவில்லை.

“ஆங் இங்க எல்லாம் முடிஞ்சிடுச்சுபா….இன்னும் ஒன் ஹவர்ல கிளம்பிடுவோம்….”என்று பேசியபடி வந்த ஆரி கண்டது அழுது கொண்டே இளங்கோவின் அறையில் இருந்து வெளி வந்த கன்யாவை தான்.

“ப்பா…அப்புறம் கூப்பிடுறேன்….”என்று கூறி பேசியை வைத்தவன்,

“ஶ்ரீ….”என்று அழைக்க அவளோ எதையும் காதில் வாங்காமல் தேம்பி அழுதபடி இருக்க,

“ஶ்ரீ….”என்று அவளின் தோள்களை தொட,

“ஆரி….ஆரி….”என்று அழுது கொண்டே கட்டிக் கொண்டே ராம் கூறியதை கூற,

“ப்ச்….ஶ்ரீ….இங்க பாரு அழதா….”என்று ஆரியின் சமாதானம் எதுவும் அங்கு எடுபடவில்லை,அவளை தன் கை வளைவில் வைத்துக் கொண்டே இளங்கோ இருக்கும் அறையை திறக்க உள்ளிருந்து ராமின் குரல் உயர்ந்தும்,கரகரத்தும் வந்தது.

“ஏன் வரனும்….”

“என்னடா இப்படி பேசுற….கனி எவ்வளவு மனசு கஷ்டப்பட்டு போறா பார்த்தியா…..”என்று அன்பு கலங்கி கேட்க,

“அவ இப்ப தான் கலங்கருதை பார்க்குறீங்களா….ஏன் எத்தனை நாள் உன் பெரிய பொண்ணால அழுதிருப்பா அப்பெல்லாம் என்ன பண்ணீங்க…..ஆங்….”

“ராம்….”என்று அன்பு அதிர,

“நீங்க தான அவளை வீட்டை விட்டு வெளில அனுப்புனீங்க….இப்ப உங்களுக்கு தேவைனு உடனே அவ உங்களுக்கு தேவையா…அப்படி ஒண்ணும் அவ வர வேண்டாம்….”என்றவனது குரல் உடைந்துவிட்டிருந்தது.அவனுக்குமே அத்தனை வருத்தம் அக்காவை பேசிவிட்டோமே என்று.ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தான் தன் தந்தையாக கன்யாவை வீட்டிற்கு அழைக்கும் வரை அவள் வரவேண்டாம் என்று.

இதை அனைத்தையும் கேட்ட கன்யாவிற்கு தன் தம்பியை நினைத்து அத்தனை பெருமிதமாக இருந்தது.தன் தம்பி தன்னை வெறுக்கவில்லை அவனிற்கு என்னிடம் கோபம் மட்டுமே என்று புரிந்து கொண்டாள்.ஆரியோ அவளின் தோள்களை கிள்ளி,

“பார்த்தியா…என் மச்சானை….”என்று கூற,கன்யா அவனின் நெஞ்சில் அழகாக சாய்ந்து கொண்டாள்.புரிதல் உள்ள உறவில் பிரிவு இருக்காது.

Advertisement