Advertisement

மன்னிப்பாயா…..2

தனது மேளாலர் அறையில் தலைகவிழ்ந்து படி நின்றிருந்தாள் கன்யா.அவளின் பக்கத்தில் தவிப்புடன் நின்றிருந்தாள் ராதிகா.

“இப்படி தலை குனிஞ்சி நின்னா எல்லாம் சரியாகிடுமா….கன்யா….”என்று கத்திக் கொண்டிருந்தார் நாதன்.

“எல்லாம் என் நேரம் முதியவரே……நீ திட்டு திட்டு….”என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தாள் கன்யா.

“சார் இந்த ஒரு தடவை எங்களை அனுப்புங்க சார்….”என்று வேண்டுதலாக ராதிகா கேட்க,அவளை முறைத்தவர்,

“போய் என்ன கிழிக்க போறீங்க….போன தடவை போல நம்ம கம்பெனி மானத்த தான் வாங்கிட்டு வருவீங்க….”என்று காட்டமாக கூறினார்.இப்போது ராதிகாவோ கன்யாவை முறைத்து,

“இதெல்லாம் உனக்கு தேவையா….”என்று கண்களால் வினவ,அவளோ பொறுமை என்று தன் கண்களை மூடி திறந்தாள்.

“என்னவோ பண்ணு….”என்று வாயில் முணுமுணுத்தவள் நாதனிடம் கூறிவிட்டு சென்றுவிட்டாள்.கன்யா மட்டும் அதே இடத்தில் அதே நிலையில் இருக்க,

“என்ன தான் நடிச்சாலும் உனக்கு லீவ் கிடையாது…போகலாம்….”என்று கூற,அவரை ஏறிட்டவள்,

“சார்….அப்படுயெல்லாம் சொல்லாதீங்க….நான் உங்களை நம்பி தான் இந்த பிரசன்டேஷன் எல்லாம் ரெடி பண்ணிட்டேன்…சார் ப்ளீஸ்….”என்று கெஞ்சலில் இறங்கினாள்.பின் இப்போது வாதம் புரிந்தால் கண்டிப்பாக தனக்கு விடுமுறை கிடைக்காது என்று உணர்ந்தவள் சற்று இறங்கி கேட்க முடிவு செய்துவிட்டாள்.

“ம்ம் இப்படி தான் போன தடவையும் சொன்ன….”என்றவர் தன் வேலைகளை பார்க்க,கன்யா விடுவதாக இல்லை,

“சார் போன தடவை சரியா தெரியாம பண்ணிட்டோம் இந்த தடவை அப்படி இல்லை சார்….”என்று கண்களின் கனவு மின்ன கூறினாள்.

பூனேவில் ஒரு பெரிய குழுமத்திற்கு அவர்களின் வணிக வளாகத்தை விரிவாக்கம் செய்யவுள்ளனர் அதனால் விருப்பம் உள்ள கம்பெனிகள் தங்கள் டென்டர் கோட் பண்ணலாம் என்று நாளிதழில் வந்திருக்க அதற்கு தான் கன்யா தங்கள் நிறுவனத்தின் பெயரில் தாங்களும் செய்யலாம் என்று நிற்கிறாள்.

அவள் நிற்பதில் எல்லாம் தவறில்லை ஆனால் இதே போல் தான் போன முறை செய்தாள் ஆனால் இவளின் பிரசன்டேஷன் முதல் போட்டியிலேயே தோற்று வெளிவந்தது மட்டும் இல்லாமல் அவர்களின் நிறுவனத்திற்கு கெட்ட பெயரையும் வாங்கிவிட்டது.அதனால் இவர்களை போட்டிக்கு அனுப்பி வைத்த நாதனுக்கும் நல்ல வெகுமதி கிடைக்க மனிதர் நொந்துவிட்டார்.இம்முறை நாதன் நான் எந்த உதவியும் செய்ய போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட கன்யாவின் மூளை அடுத்து யாரை பிடித்து எப்படி கேட்பது என்பதிலேயே இருந்தது.

கன்யாவிற்கு மதியம் வரை வேலை ஓடவில்லை யாரிடம் கேட்டு அனுமதி வாங்குவது என்று யோசனையிலேயே இருந்தாள்.முதலில் மீண்டும் நாதனிடமே சென்று கேட்கலாமா என்று நினைத்தாள் ஆனால் அவர் திடமாக மறுத்திருக்க மீண்டும் போய் நின்றால் அவ்வளவு தான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் எதிரே தோன்றினார் கிரேஸி.

கிரேஸி அதே கம்பெனியில் ஹச்.ஆர் டிபார்மென்டில் வேலை செய்பவர்.அனைவரிடமும் நல்லதோழமையுடன் பழகும் எண்ணம் கொண்டவர் தனக்கு உதவுவார் என்று நம்பிக்கை பிறக்க நேரடியாக அவரிடம் போய் நின்றுவிட்டாள் கன்யா.

கன்யா தயார் செய்த பிரசன்டேஷன்களை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தார் கிரேஸி.கன்யாவோ நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தாள்.கடவுளே எப்படியாவது ஒத்துக்க வச்சுடு என்று மனதிற்குள் வேண்டுதல் வேறு வைத்துக் கொண்டிருந்தாள்.அனைத்தையும் பொறுமையாக பார்த்த கிரேஸி,

“ம்ம்ம்….நல்லா பண்ணியிருக்க கன்யா…..ஆனா இது மட்டும் போதாது….அவங்கெல்லாம் பெரிய புள்ளிங்க இன்னும் எதிர்பார்ப்பாங்க….அது தான் யோசனையா இருக்கு…..”என்று அவர் தாடயை தடவ,இது போதுமே தான் வந்த காரியம் நிறைவேற என்று நினைத்த கன்யா அவரை எப்படியோ பேசியே அனுமதி வாங்கிவிட்டாள்.ஆனால் சில நிபந்தனைகள் உடன் தான் அவளுக்கு அனுமதி கிடைத்தது.இந்த முறை அவளால் ஏதாவது கம்பெனிக்கு கெட்ட பெயர் வந்தாள் அவளை பணியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று மேலிடம் கூறியதை கிரேஸியும் அவளிடம் எச்சரித்துவிட்டே அனுமதி வாங்கி தந்தார்.

தனது படுக்கையில் அமர்ந்து தன் முன்னே கலைந்து கிடக்கும் ஆடைகளேயே பார்த்தபடி இருந்தாள் கன்யா.அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் தனது பெட்டியில் இருந்த ஆடைகள் அனைத்தையும் எடுத்து படுக்கையில் கொட்டியவள் ஒன்றன் பின்னாக் ஒன்றை எடுத்து தனக்கு பொறுத்தமாக இருக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அடியே….நாம போறது பிரசன்டேஷனுக்கு…..பேஷன் ஷோக்கு இல்ல…..”என்று ராதிகா அவள் செய்யும் அலப்பரைகளை கண்டு கிண்டல் செய்ய,

“ம்ம்ம்…..இரண்டுத்துக்கும் தான் போறோம்….”என்று அவளை முறைத்துக் கொண்டே கூற,ராதிகா தலையில் அடித்துக் கொண்டாள்.

“ராது பேபி…..அங்க பெரிய பெரிய கம்பெனியிலேந்து எல்லாம் வருவாங்க….அப்ப நாம பார்க்க கொஞ்சமாச்சும் அழகா இருக்க வேண்டாம்….அதான் பார்த்து பார்த்து எடுத்து வைக்குறேன்….”என்று கன்யா தன் பெரிய விழிகளை  உருட்டிக் கொண்டே கூற,

“அழுகு டி நீ……” என்று அவளை ராதிகா திரிஷ்டி சுத்த,

“யாரு நான் அழகு….போடி போய் கண்ணாடி மாட்டு…..உனக்கு கண்ணு தெரியல….போ..போ….”என்று முகத்தை ஒருமாதிரி வைத்துக் கொண்டு கூற,

“அடியே உன் கண் அசைப்புக்கே எல்லாரும் விழுந்துடுவாங்க டீ….கண்ணழகி….”என்று கண்ணடித்துக் கூறினாள் ராதிகா.கன்யாவின் முகத்தில் மென்னகை மட்டுமே ஆனால் காதுகளில்,

“இதெல்லாம் ஒரு மூஞ்சி இத வேற கண்ணாடியில பார்த்துட்டு இருக்க போடீ……கண்ண பாரு பிதுங்குன முழி…..ஒன்னாவது உன் முகத்தில அழகா இருக்கா….போ….இவெல்லாம் கண்ணாடி பார்க்க வந்துட்டா….”என்ற குரல் கனீர் என்று விழ,

“நீ சொன்னது சரிதான் போல நிதி….அதான் சீனி….”என்று மனதிற்குள் நினைத்தவள் பின் வேகமாக தன் தலையை உலுக்கி,

“இல்ல….இல்ல….அப்படி இருக்காது கனி…..நீ மனசை குழப்பிக்காத….வேணாம் வேணாம்….”என்று அவளையும் மீறி கத்திட,ராதிகா

“என்ன வேண்டாம் கன்யா….”என்று கேட்க,தன் நினைவுகளில் இருந்து கலைந்த கன்யா,

“ஆங் ஒண்ணுமில்லை ராதி….”என்று கூறிவிட்டு தனது உடைகளை எடுத்து வைத்தாள்.

“அப்பப்ப டிரீம்ஸ்க்கு போயிடுற நீ…..”என்று ராதிகா கிண்டல் செய்ய,

“ம்ம்….எல்லாம் பழக்க தோஷம் தான் ராதி…என்ன பண்ண….”என்று அவளை சேர்த்து வாரிவிட்டே சென்றாள்.இவ்வாறு இருவரும் ஒன்றாக பூனே வந்து சேர்ந்தனர்.இம்முறை டென்டர் கோட்டிங் செய்வதற்கு பல வித நிபந்தனைகள் வைத்திருந்தனர் முதலீட்ளார்கள்.அனைத்தையும் படித்த ராதிகாவிற்கு தலைசுத்தியது.

“ஏய் கண்டிப்பா….நாம கண்டிப்பா தோற்த்து தான் போவோம்…..நம்ம கம்பெனிலாம் இப்ப தான் வளர்ந்துகிட்டு வருது அதனால கண்டிப்பா இவங்க சொல்லுறதெல்லாம் செய்யுறது கஷ்டம்….”என்று ராதிகா வருத்தமாக கூற,

“ப்ச்…..ராதி….என்னதிது…..நாம முயற்சி பண்ணுறோம்…..கிடைச்சா சந்தோஷம்….கிடைக்காம போனா நமக்கு இது ஒரு பாடம் அவ்வளவு தான்….”என்று கன்யா கண்ணகளை சிமிட்டி கூற,அவளை விசித்திரமாக பார்த்தாள் ராதிகா.அவள் தன்னையே பார்பதை கண்ட கன்யா என்ன என்று வினவ,

“ஒண்ணுமில்ல….நீ இதுல தோற்று போயி கம்பெனிக்கு கெட்ட பெயராகிடிச்சுனா….உனக்கு வேலையிருக்காது உனக்கு நியாபகம் இருக்குல்ல….”

“ம்ம்ம்…..நல்லாவே நியாபகம் இருக்கு…ராதி….”என்று சாதாரணமாக கூறியவள் ராதிகாவின் புரியாத பார்வை கண்டு புன்கைத்தவாறே,

“எனக்கு என்ன குடும்பமா குட்டியா…..வேமையில்லானா கவலைபட….அதனால இந்த வேலையில்லனா வேற வேலை….”என்று கூறி சென்றவளை காண்கையில் ராதிகாவிற்கு மனது கலங்கியது.

அந்த மிகப்பெரிய வணிக வளாகத்தின் முதல் தளத்தில் தான் இவர்களுக்கான கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.கன்யாவும்,ராதிகாவும் கீழ் தளத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அமர்ந்திருந்தனர்.கன்யாவின் பார்வையோ அவளுக்கு எதிரே தெரிந்த மேல் தளத்தையே சுற்றி வந்து கொண்டிருந்தது.மனதில் ஒருவித அலைபுரிதல் வந்திருப்பாரா கடவுளே வந்திருக்க வேண்டும் என்று அவள் ஆசை கொண்ட ஒருமனம் வேண்டிக் கொண்டது.

“அடியே…..உன்னை தான் இருக்கியா…இல்லை திரும்பியும் டிரீம்ஸ்க்கு போயிட்டியா…..”என்று கன்யாவின் தோள்களை உலுக்க,

“ஆங்….என்ன என்ன கேட்ட ராதி….”என்று திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தவளை முறைத்த ராதிகா,

“சுத்தம்….”என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

“ஏய் இப்ப எதுக்குடி தலையில அடிச்சுக்குர….”என்று அவளின் கையை பிடிக்க,ராதிகாவோ அவளை முறைத்துவிட்டு,

“பின்ன என்னடி நாளைக்கு தான் நம்ம பிரசன்டேஷன்….இப்ப எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்கோம்….”என்று சற்று கடுப்பாகவே கேட்டாள்.அவளுக்கு பயண கலைப்புடன் சேர்ந்து தலைவலியும் இருக்க அதனால் வந்த கோபம் தான் இது.கன்யாவோ இதை எதையும் காதில் வாங்காமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அடியே நான் போறேன்….”என்று ராதிகா வீறு கொண்டு எழுந்துவிட,

“ச்சு….ராதிமா என்னதிது உட்கார்…..உனக்கு ஒரு சர்பரைஸ் வச்சிருக்கேன் கொஞ்சம் வெயிட் பண்ணு…..”என்று கன்யா கூறிக் கொண்டிருக்க,

“ஹாய்…..”என்று ஒரு குரல் இவர்களின் பின்னே கேட்டது.ராதிகாவை தாண்டி பார்த்த கன்யா புன்னகைக்க,ராதிகாவோ அதிர்ந்து நின்றுவிட்டாள்.அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.ஆனால் குரல் அவனுடையது தான் என்று மனது கூற மெல்ல திரும்ப அங்கு முகம் எங்கும் புன்னகையுடன் நின்றிருந்தான் கவின்.

“ஹாய் ரதி…..”என்று கூற,ராதிகாவோ அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்தாள்.கவின் வந்திருக்கிறான் தனக்காகவா திருமணத்திற்கு முன் இவ்வாறு அடிக்கடி சந்திக்க வேண்டாம் என்றவனா இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் என்று பலபல சிந்தனைகளுடன் அவள் நின்றிருக்க,

“ஓய்….ஓய்ய்ய்ய்……ராதி….”என்று அவளின் காதுகளில் கன்யா கத்தவும் நிகழ்வுக்கு வந்தவள்,

“ஆஆஆஆ…..ஏன்டி கத்துன….”என்று தன் காதுகளை தேய்த்துக் கொண்டே கேட்க,

“பின்ன இப்படி சிலை மாதிரி நின்ன அவ என்ன செய்வா….அதான்…..”என்று கவின் அவளை வார,அவனை முறைத்துவிட்டு தன் முகத்தை வேறுபுறம் திருப்பி,

“கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி அடிக்கடி சந்திக்க வேண்டாம்னு சொன்னவர் செய்யுற வேலையா இது….”என்று ராதிகா கோபம் போல கேட்க,

“ஓய் உன்ன யார் பார்க்க வந்தா….நானும் உங்கள மாதிரி தான் டெண்டர் கோட் பண்ண எங்க கம்பெனியிலேந்து என்னை அனுப்புனாங்க…..”என்று கூற ராதிகாவிற்கு முகம் விழுந்துவிட்டது.

“நான் கிறம்புறேன்….”என்று கோபமாக கிளம்ப எத்தனிக்க,அவளின் கைபிடித்த கன்யா,

“இதுல்லாம் ஓவர் கவின்…. நான் வரேன் அவளையும் அழைச்சிட்டுவானு நீங்க தான சொன்னீங்க தான….உங்களுக்காக கூட்டிட்டு வந்தா….இப்படி தான் ராதியை அழ வைக்குறதா….”என்று அவள் முறைத்துக் கொண்டு கேட்க,

“ஓகே ஓகே….ஐ ம் சரண்டர்….”என்று கைகளை தூக்கிவிட்டான்.பின்னே ராதிகாவிற்கு கோபம் வந்தாள் அவனின் பாடு திண்டாட்டம் தான் என்று நன்கு அறிந்தவன் ஆயிற்றே…..அதனாலே இந்த பயம்….”

“ஆங்…..ஆங்….அது….அந்த பயம் இருக்கட்டும்….”என்று கன்யா கெத்து காட்ட,ராதிகா இன்னும் முறைத்துக் கொண்டு தான் இருந்தாள்.கவின் அவளை பாவமாக பார்க்க,கன்யா தான் உதவிக்கு வந்தாள்.

“சரி சரி விடுடி…..ஏதோ அறியா பிள்ளை தெரியாம பண்ணிட்டார்….இன்னைக்கு உன்னை எங்கேயோ அழைச்சிட்டு போறேன் சொன்னார்….போயிட்டு வா….”என்று கூற,ராதிகா ஆச்சிரியமாக கவினை பார்க்க அவனோ ஆமாம் என்னும் விதமாக தலையை ஆட்டினான்.கவினின் புன்னகை ராதிகாவையும் தொற்றிக்கொண்டது அவளும் இளமுறுவலுடன்,

“எங்க….”என்று கேட்க,

“சொன்னா தான் வருவியா….”என்று பதில் கேள்வி வந்தது அவனிடம் இருந்து.கன்யா இருவரையும் சுவாரஸ்சியமாக பார்த்துக் கொண்டிருக்க,

“ப்ச்….கனி தனியா இருப்பா….எப்படி விட்டுட்டு வர…”என்று அவள் கவினிடம் ரகசியம் போல் கேட்க,

“ஓய்….நான் தனியா இருந்ததே இல்ல பாரு…..போடி….என்னை எனக்கு பார்த்துக்க தெரியும்….போயிட்டு வா….”என்று கன்யா புன்னகை முகமாக கூற,

“இல்லடி அது சென்னைனா உனக்கு பழக்கம்….இது புது இடம் எப்படி உன்னை தனியா விட….”என்று ராதிகா தயங்க,

“நல்லா சொல்லு….நான் ஏற்கனவே சொல்லிட்டேன்….நீயும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கோனு….நாம ஜஸ்ட் ஊர சுத்தி பார்க்க போறோம் அவ்வளவு தான்….இதுல என்ன பர்சனல் இருக்கு….வர சொல்லு….”என்று கவினும் கூறினான்.

“அச்சோ போதும் பா…..உங்களுக்கு பர்சனல் இல்ல ஓகே….எனக்கு கொஞ்சம் பர்சனல் வேலை இருக்கே….அதனால தான் வரலைனு சொல்லுறேன்…..”கன்யா சிரித்துக் கொண்டே கூறினாள்.அதன் பிறகு தான் கவினும்,ராதிகாவும் கிளம்பினர்.அவர்கள் சென்றவுடன் மேல் தளத்திற்கு சென்று அங்கிருக்கும் பலகையில் எழுதப்பட்டிருக்கும் கம்பெனியின் பெயர்களை வாசித்தாள்.

xxx கம்பெனி பெயரை மட்டும் ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து பார்த்தாள்.அங்கு தான் அவளவன் வேலை செய்தான்.முதலில் இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு பதிவு செய்யலாமா வேண்டாமா என்று தான் யோசித்துக் கொண்டிருந்தாள் கன்யா.ஆனால் xxx கம்பெனியின் பெயரை பார்த்தவுடன் எதையும் யோசிக்காமல் பதிவு செய்தவிட்டாள்.பிறகு தான் அவள் மேளாலரிடம் கேட்டதே.இதில் தோற்றால் அதன் பின்விளைவுகள் எல்லாம் அவள் அறிந்தது தான் இருந்தும் அவனை காணும் வாய்பை விட மனதில்லை.எப்படியேனும் அவனை பார்த்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தான் இந்த பூனே பயணம் ஆரம்பித்தது.

கன்யாவும் மனதை ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் அவனது நினைவுகளில் இருந்து வெளிவர தான் நினைக்கிறாள் ஆனால் முடியவில்லை.கடைசியாக அவனது கண்கள் கலங்கி இருந்ததா இல்லை நீ என்னை நம்பியது அவ்வளவு தானா என்று அவளை குற்றம்சாட்டியதா என்று பிரித்து அறியாத முடியாதபடி இருந்தது.அந்த கண்கள் இன்று வரை அவளை துரத்திக் கொண்டு தான் இருக்கின்றன.அதில் இருந்து மீள வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்.எப்படியேனும் அவனிடம் இம்முறை பேசிவிட வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.அவளை மீட்க அவளது மணவாளன் வருவானா…..அவளை மன்னிப்பானா…..

Advertisement