Advertisement

மன்னிப்பாயா…17

இன்று,

யூஸ்ஸில் தனது அறையில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான் ஆரியநாதன்.மனதெங்கும் பாரம் மட்டுமே நிறைந்திருந்தது.அவ்வபோது தனது பேசியையும் எடுத்து பார்த்து கொண்டான்.ஆனால் அவன் நினைத்த ஆளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

“ச்சு….இப்ப பார்த்து தான் ஆபிஸ்ல படுத்துறாங்க….இல்லனா வேலையை விட்டு கூட போயிடலாம்….”என்று நினைத்து கொண்டிருக்க அவனின் பேசி இசைந்தது.வேகமாக அதனை எடுத்தவன்,

“ஹலோ ராதிகா….என்ன ஆச்சு….ஏதாவது தகவல் கிடைச்சுதா…..”என்று வேகமாக கேட்க,

“அது…..இல்லை அண்ணா….”என்றவளின் பதிலில் ஆரியின் மனது மீண்டும் உடைந்தது.

“அண்ணா…அண்ணா….”என்று ராதிகாவின் குரலில் நிகழ்வுக்கு வந்தவன்,

“ஆங்…சொல்லுமா….”

“அண்ணா மனசை விடாதிங்க….கண்டிப்பா கனி பேசுவா….எனக்கு கால் பண்ணுறேன்னு சொன்னா….பண்ணுவா…வெயிட் பண்ணுவோம்….”என்றவளின் குரலும் பிசறி தான் வந்தது.

“ம்ம்…தெரியும் மா….நீ பாரு நான் உன்னை வேற டிஸ்டரப் பண்ணுறேன்….”

“அய்யோ அப்படி எல்லாம் இல்லை….நீங்க பீல் பண்ணாம இருங்க…எனக்கு ஏதாவது தகவல் கிடைச்சா சொல்லுறேன்….”என்று ராதிகா கூற,ஆரியும் சரி என்றுவிட்டு வைத்துவிட்டான்.

“ஶ்ரீ…ஏன்டீ என்னை வதைக்கிற….”என்று புலம்பியவனின் கண்களில் கண்ணீர் துளிகள்,

“இப்படி உன்னை தொலைச்சிட்டு தேடுவேன்னு நினைக்கவே இல்லைடீ….”என்றவன் சோர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.கன்யாவை அன்று ஹோட்டலில் பார்த்தது தான் அதன் பிறகு அவளை காண ஆரி அவளின் ஹோட்டலுக்கு சென்ற போது அவள் சென்றுவிட்டாள் என்றவுடன் மீண்டும் கோபம் தான் அவள் மீது,

“எப்போதும் பொறுமையே கிடையாது….இவளைஐஐஐ…”என்று தன் மனதிற்குள் அவளை திட்டி தீர்த்துவிட்டு தனது அறைக்கு வந்துவன் அவளின் அலுவலக முகவரியை கேட்டு தெரிந்து கொண்டு பெங்களூர் செல்லாம் என்று முடிவுடன் இருக்க அவனின் அலுவலகத்தில் இருந்து முக்கிய வேலை உடனே வரவும் என்று மெயில் வரவும் முதலில் அலுவலகம் சென்று வேலைக்கு ஒருமாதம் விடுப்பு கூறிவிட்டு பெங்களூர் செல்லலாம் என்று நினைத்து அவன் யூஸ் வந்தான்.

இங்கு தான் ஆரி மீண்டும் தவறினான் தன் வாழ்வில் சிலவற்றை உடனே செய்ய வேண்டும் அதை அலட்சியபடுத்தினால் அதன் பின்விளைவுகளை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும்.ஆரி யூஸ் வந்து மூன்று மாதங்கள் வரை அவனிற்கு வேலை பிழிந்து எடுத்துவிட்டது.அதனால் அவன் மீண்டும் கன்யாவை மறந்தான் அதுவே அவன் செய்த மிகப் பெரிய தவறு.

மூன்று மாதம் முடிந்த பிறகு தான் அவனுக்கு கன்யாவின் நியாபகம் வர உடனே பெங்களூர் புறப்பட்டு போனான்.கன்யா வேலை செய்யும் கம்பெனியில் சென்று விசாரிக்க கன்யா வேலையை விட்டு நின்றுவிட்டதாக தகவல் கூற ஆரிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.அவளின் நம்பரும் இல்லை மீண்டும் தவறவிட்டோம் என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.

ப்ச்….ஆரி உனக்கு இந்த லவ்,கல்யாணம் எல்லாம் செட்டே ஆகாது போலடா….நம்பி வந்தவளை இப்படி தொலைச்சுட்டு நிக்குறீயே உனக்கு வெட்கமா இல்லை என்று அவனின் மனசாட்சி அவனை கேலி செய்தது.என்ன செய்வது எங்கு சென்று அவளை கண்டுபிடிப்பது என்று நினைத்து கொண்டிருந்தவனின் முன்னால் நின்றாள் ராதிகா.

“ஹலோ அண்ணா…என்னை தெரியுதா….நான் கன்யா பிரண்ட் ராதிகா….”என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள அப்போது தான் அவனுக்கு அன்று கன்யாவுடன் பார்த்த பெண் என்று புரிய,

“ஹலோ….நான்….என்னை…”என்று அவன் தடுமாற,

“எனக்கு உங்களை நல்லா தெரியும்…..உங்களுக்கு தான் என்னை நியாபகம் இருக்கானு தெரியலை….”

“இல்லை நியாபகம் இருக்கு…அன்னைக்கு ஶ்ரீயோட நீதான இருந்த…இப்ப ஶ்ரீ எங்கமா….இங்க வேலை பார்க்கலையா….”என்று கேட்க அவனை நிதானமாக பார்த்தவள்,

“அது…நான் ஒண்ணு கேட்கலாமா….தப்பா நினைக்கமாட்டீங்களே….”

“சொல்லுமா….நான் நினைக்கமாட்டேன்….எனக்கு என் ஶ்ரீ வேணும் அவ எங்க இருக்கா….”என்று கேட்க,

“இவ்வளவு நாள் ஏன் வரலை….ஏன் அவளை இவ்வளவு நாளா நீங்க தேடலை….”என்று ராதிகா கேட்க,ஆரி தலை குனிந்துவிட்டான் தவறு தானே நான் அவளை விட்டிருக்க கூடாது என்று நினைத்தவனுக்கு மனதே ஆரவில்லை.

“இவ்வளவு நாள் தேடாம இப்ப வந்திருக்கீங்க….அவ இங்க இல்லை….எங்க இருக்கா தெரியாது….”என்று ராதிகா கூற,

“என்னமா இப்படி சொல்லுற….நான் தப்பு பண்ணிட்டேன் தான்….அதுக்கு தான் அவ கிட்ட மன்னிப்பு கேட்டு அவளை என்னோட கூப்பிட்டு போக தான் வந்தேன்….அவ எங்க இருக்கா….தயவு செஞ்சு சொல்லுமா….”என்று ஆரி கெஞ்சலாகவே கேட்டுவிட்டான்.

“எனக்கு தெரியாது அண்ணா…அவ இங்க வந்து ஒன் மந்த் வரைக்கும் இங்க தான் வொர்க் பண்ணிட்டு தான் இருந்தா….இரண்டு மாசம் முன்ன திடீர்னு பேப்பர் போட்டுடா…நான் எவ்வளவோ கேட்டும் அவ பதில் சொல்லல….கடைசியா நான் அவளை பார்த்தது என் கல்யாணத்துல தான் அப்போ,

“ராதி நான் கொஞ்ச நாள் அவுட்டாப் கன்டிரீ போறேன்டீ….”

“ஏய் எங்கடீ….என்ன திடீர் திடீர்னு ஏதோ சொல்லுற….”

“…..”

“என்னடீ பதில் சொல்லு….நான் எவ்வளவோ சொல்லியும் வேலையை விட்ட….இப்ப என்னடானா எங்கோ போறேன்னு சொல்லுற….பேசு கனி….என்னை டென்ஷன் பண்ணாத….”என்று ராதிகா சத்தம் போட,அவளை பார்த்து மென்மையாக புன்னகைத்த கன்யா,

“ராதி…எனக்கு கொஞ்ச நாள் வெளியில இருக்கனும் தோணுது அதான்…ப்ளீஸ் என்னை வேற எதுவும் கேட்காத….”என்று குரல் கமற கன்யா கூற ராதிகா அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.ஆனால் கணவன்,மனைவி பிரச்சனை தீரவில்லை என்பது மட்டும் புரிந்தது.

“அவுட்டாப் கன்டிரியா…எங்கமா போயிருக்கா….அவளுக்கு வெளி நாடு எல்லாம் தனியா போய் பழக்கமில்லை….அச்சோ….எந்த நாடுனு சொன்னாளா….”என்று ஆரி பரபரப்பாக கேட்டான்.

“அண்ணா….எனக்கு அவ எங்க போயிருக்கானு தெரியாது….என்கிட்ட எதுவும் சொல்லல…”என்று ராதிகா கூற,ஆரி தலையை பிடித்து அமர்ந்துவிட்டான்.

ராதிகா கூறிய அனைத்தையும் கேட்ட ஆரியநாதனுக்கு மனது சுக்குநூறாக உடைந்துவிட்டது.என்னை நம்பி வந்தவளை நான் சரியாக கவனிக்கவில்லை அவளை விட்டுவிட்டேன் என்று மனது ஆற்றாமையில் துடித்தது.

“அண்ணா…அண்ணா….”என்று ராதிகாவின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன்,

“ஆங்….என்னமா….”

“இப்படியே உட்கார்ந்து இருந்தா ஒண்ணும் ஆகப்போறதில்லை….கன்யா ரொம்ப தைரியமான பொண்ணு அவ கண்டிப்பா வந்துடுவா….அவளோட மன உளைச்சலை குறைக்கதான போயிருக்கா….கண்டிப்பா வந்துடுவா நீங்க இப்படி….”என்று ராதிகாவிற்கும் அதற்கு மேல் எதுவும் கூற முடியாமல் அவள் அமைதியாகிவிட்டாள்.

ஆரியும் சற்று நேரத்தில் தன்னை தேற்றிக் கொண்டு,

“ம்ம்…ராதிகா எனக்கு ஒரு உதவி செய்யனும்….ஒருவேளை கன்யா உங்க கிட்ட பேசுனா எனக்கு உடனே தகவல் கொடுக்குறீங்களா….”என்றவன் அவனின் கைபேசி எண்ணை கொடுத்துவிட்டு வந்தான். இதன் இடையில் கன்யாவின் வீடு வரைக்கும் விசாரித்துவிட்டான் அவள் அங்கும் செல்லவில்லை என்று தகவல் வந்தது.

அன்றில்  இருந்து இதோ இன்று வரை வாரம் ஒருமுறை ராதிகாவிற்கு தவறாமல் பேசிவிடுவான் கன்யா பற்றிய ஏதாவது தகவல் கிடைக்கித்தா என்று கேட்டு,ஆனால் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை.ஆனால் முன்பெல்லாம் உணராத தனிமையை இப்போது உணர்கிறான்.

நாட்கள் அதன் போக்கில் நகர தொடங்கியது இதோ ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டது கன்யா சென்று இன்று வரை அவள் எங்கு இருக்கிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை ஆரியும் தன்னால் முடிந்த வரை தேடிக் கொண்டிருந்தான்.ஆனால் பலன் தான் இல்லை.இப்போது எல்லாம் வேலையில் கூட அவனால் கவனம் செலுத்த முடியவில்லை மனதெங்கும் தன்னை நம்பி வந்தவளை இப்படி கைவிட்டுவிட்டேனே என்ற எண்ணம் மனதை அரிக்க தொடங்கியிருந்தது.

அன்று காலையில் எழுந்ததில் இருந்தே மனது ஏதோ போலவே இருந்தது ஞாயிற்றுகிழமை என்பதால் பொறுமையாகவே தன் வேலைகளை செய்து கொண்டிருந்தான் அப்போது அவனின் பேசி அழைக்கவும் ராதிகா தான் அழைக்கிறாள் என்று நினைத்து வேகமாக வந்து எடுக்க,அழைத்திருந்தது அவனின் தந்தை.அவன் வீட்டில் தாயை தவிர மற்ற இருவரும் அவனிடம் பேசுவார்கள்.

ஆரியின் தந்தை மூர்த்தி அவனின் திருமணத்தில் இருந்து கோபம் தான் இருந்தாலும் மகனை நெருங்கவும் இல்லை அதே சமயம் தள்ளி வைக்கவும் இல்லை.பொதுவான நலவிசாரிப்புகளுடன் முடித்து கொள்வார் அவனும் அவரை கட்டாய படுத்தபாட்டான்.ஆரியின் தங்கை முதலில் பேச தயங்கினாலும் நாலடைவில் அண்ணனை ஒதுக்க முடியாமல் பேசிவிட்டாள்.ஆனால் அவளும் கன்யாவிடம் பேசமாட்டாள்,அவளை பற்றி எதுவும் கேட்க மாட்டாள் அண்ணன் இவ்வாறு திருமணம் செய்தததில் அவளுக்கு கோபம் அதோடு சுதா வேறு பேசாமல் இருக்க தான் பேசினால் ஏதாவது கூறுவார்களோ என்று நினைத்தவள் பேசவில்லை.ஆரியும் யாரிடமும் கெஞ்சவில்லை அவர்களாக தங்களை ஏற்று கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அவனின் எண்ணம் அதோடு இந்த உறவை மற்றவர்களின் மீது திணித்து ஏற்க வைக்க முயற்ச்சிக்கவில்லை அவன்.

ஆரி தனது பழைய நினைவுகளின் பிடியில் இருக்க கைபேசியின் தொடர் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன்,

“ஹலோ….”

“ஹலோ அண்ணா….எப்படி இருக்க…”என்ற தங்கையின் உற்சாக அழைப்பில் ஆரியின் முகத்திலும் சற்று மகிழ்சியின் சாரல் ஒட்டிக் கொண்டது.

“என்ன தனுமா என்ன விஷயம் திடீர்னு அண்ணன் நினைப்பு வந்திருக்கு…என்ன விஷயம்….”என்று கேட்க,

“ம்ம்…அதை நான் கேட்கனும் போன வருஷம் வந்துட்டு போன அதுக்கு அப்புறம் இங்க வரவேயில்லை…எங்க நினைப்பு எல்லாம் உனக்கு இருக்கா….”என்று அவளும் எகிற,ஆரி தான் சமாதானம் ஆக வேண்டியிருந்தது,

“சரி சரி சொல்லு…என்ன விஷயம்….”

“இரு அப்பா உன்கிட்ட பேசனுமாம்….ப்பா அண்ணன்….”என்று தனு மூர்த்தியின் கையில் கொடுக்க,

“ஆரிப்பா…எப்படி இருக்க….”

“ம்ம்….நல்லாயிருக்கேன்…”என்றவனின் குரலே கூறியது நன்றாக இல்லை என்று,

“என்னடா என்ன விஷயம்….ஏன் ஒருமாதிரி பேசுற….”என்று அவர் கேட்க,மறுமுனையில் மௌனம் மட்டுமே,

“ஏய் ஆரி….என்னனு கேட்குறேன்ல….ஏன் உன் வாய்ஸ் ஒருமாதிரி இருக்கு….உனக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதாவது பிரச்சனையா….”

“எந்த பொண்ணுப்பா????”

“…..”

“என்னப்பா இப்ப நீங்க அமைதியாகிட்டீங்க….எந்த பொண்ணு….நீங்க யாரை சொல்லுரீங்க????”என்ற மகனின் கேள்வியில் இம்முறை மூர்த்தி அமைதியானார்.கன்யாவை பற்றி அவர் இதுவரை கேட்டது கிடையாது இன்று மகனின் குரலில் இருந்த மாற்றத்தில் கேட்டுவிட்டார்.

“என்னப்பா இப்ப நீங்க அமைதியாகிட்டீங்க……அப்ப உங்களுக்கே தெரியுது நீங்க பேசினது தப்புனு…அப்படிதான…ப்ச்….விடுங்க….எனக்கு மூடு அப்செட்டா இருக்கு நான் அப்புறம் கால் பண்ணுறேன் பை….”என்றுவிட்டு ஆரி வைத்துவிட,மூர்த்திக்கு என்னவோ போல் ஆனது.

மகன் செய்தது தவறு தான் இருந்தாலும் அவனின் அச்சமய நெருக்கடியையும் அறிந்தவர் தானே அவர்.அதனால் தானே அவனிடம் முகம் திருப்பாமல் பேசுகிறார்.ஆனால் இன்று அவன் இவ்வாறு கேட்டது தந்தையாக அவரை மிகவும் பாதித்துவிட்டது.கணவர் ஓய்ந்து போய் அமர்ந்திருப்பதை பார்த்த சுதா,

“என்னங்க என்ன ஆச்சு….ஏன் போனை  போனை பார்த்துக்கிட்டு இருக்கீங்க…”என்று கேட்க,அவரை நிமிர்ந்து பார்த்தவர் ஒண்ணுமில்லை என்னும் விதமாக தலையசைக்க,

“என்ன ஏன் உங்க முகம் ஒருமாதிரி இருக்கு….என்ன ஆச்சு…”என்று விடாமல் கேட்க,நடந்த அனைத்தையும் கூறியவர்,

“நான் தப்பு பண்ணிட்டேன் சுதா….என்ன இருந்தாலும் நான் அப்படி பேசியிருக்க கூடாது….அந்த பொண்ணு…இல்ல…இல்ல மருமக….நம்ம வீட்டு மருமகளை….ப்ச்….விடு அவன் குரலே ஏதோ போல இருந்தது….வீடியோ கால் பண்ணவா….”என்று கேட்க அவரை முறைத்த சுதா,

“ஏன் என்கிட்ட கேட்குறீங்க….பேச வேண்டியது தான….”என்று கரகர குரலில் கூறினார்.அவருக்குமே மகனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை தான் இருந்தாலும் அவன் செய்ததது தவறு தானே என்று தினமும் மனபாரத்துடன் தான் இருப்பார்.

“இல்லை….சுதா….அது….நாங்க இத்தனை நாள் வரை அவனுக்கு வீடியோ கால் பேசினது இல்லை….அவன் தான் மருமகளை ஏத்துக்குற வரைக்கும் பேச வேண்டாம்னு சொல்லிட்டான்….அதோட உன் மனசை சங்கடப்படுத்த வேண்டாம்னு தான் வேண்டாம்னு சொன்னான்….ஆனா இன்னைக்கு என்னவோ போல இருக்கு சுதா….அதான்…நீயும் எங்க கூட இரு….ப்ளீஸ்……”என்று கெஞ்சவே செய்ய,

“ஏங்க என்னை சங்கட படுத்துறீங்க…எனக்கே அவன்கிட்ட பேசாம இருக்க முடியலை…மனசெல்லாம் பாரமா இருக்கு….”என்றவரின் குரல் உடைந்துவிட,

“சுதா என்னம்மா நீ……அவன் நம்மை எதிலேயும் விட்டுதரலை….அவன் நம்மகிட்ட பேசினான் தான் நாம தான் ஒதுங்குனோம்….அது அப்ப தப்பா தெரியலை ஆனா இப்ப தப்போ தோணுது….”என்று மூர்த்தியும் கூற,சுதாவும் யோசிக்கலானார்.ஆரியின் வீட்டினரிடத்தில் மாற்றங்கள் ஏற்பட தொடங்க,ஆரியோ கன்யாவை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்தான்.

Advertisement