Advertisement

மன்னிப்பாயா…16

நாளை கன்யாவின் பிறந்த நாள் அதோடு ஆரியின் நட்பு அவளுக்கு கிடைத்த நாளும் கூட அதனால் அவளை பொறுத்தவரை அவளின் பிறந்த நாள் என்பதை விட தன் வாழ்க்கையில் தன்னவன் வந்த நாள் என்று தான் நினைத்திருந்தாள்.அதனால் முதல் நாள் காலையில் எழுந்ததில் இருந்து  அவள் அவனின் முகத்தை பார்த்து கொண்டிருக்க அவனோ எப்போதும் போல் தன் வேலைகளிலேயே கவனம் செலுத்த,

“ப்ச்….இவருக்கு எதுவும் நியாபகத்துக்கு இருக்காது…”என்று மனதில் ஆரியை திட்டிக் கொண்டு அவனுக்கு காபி தயாரித்து கொடுத்துவிட்டு,

“சீனியர்….”

“ம்ம்ம்….”என்றவன் கவனம் அவனது மடிக்கணினியில் இருந்தது.நாளை  அவனின் இறுதி தேர்வு அதோடு அவன் வேலை செய்யத புராஜக்ட்டின் முடிவு தெரியவரும் நாளும் கூட அதனால் அவன் அதில் கவனமாக இருந்தான்.

“ப்ச்….”என்றுவிட்டு அவள் நகர அவளின் கையை பிடித்து இழுத்தவன் ஒரு கையால் அவளின் இடைவளைத்து,மற்றொரு கையால் அவள் கொடுத்த காபியை பருகி கொண்டே,

“ம்ம்….சொல்லு ஶ்ரீ….ஏதோ சொல்ல வந்துட்டு சொல்லாம போற….ம்ம்….”என்று அவளின் காது மடலில் முகத்தை தேய்க்க,கன்யாவிற்கு மனதும்,உடலும் சிலிர்த்தது.ஏதோ மாய உலகத்தில் இருப்பது போல இருக்க,

“ஓய் ஶ்ரீ….என்ன அமைதியாகிட்ட…ம்ம்ம்…”என்று அவளின் காதுகளில் ஆரியின் குரல் கிசுகிசுப்பாக ஒலிக்க,கன்யாவால் எதுவும் பேசமுடியவில்லை,அவனின் திடீர் தொடுகை மனதிற்கு இதமாக இருந்தாலும் ஒருவித பதட்டம் இருந்தது.இவ்வளவு நாட்களாக அவனின் அருகாமைக்காக ஏங்கிய மனது இப்போது கிடைக்கவும் முழுதாக ஏற்கவும் முடியவில்லை அதே சமயம் விட்டு விலகவும் மனதில்லை.

“ஓய்….ஶ்ரீ….என்ன அமைதியாகிட்ட….”என்றவன் இப்போது அவளை தன் புறம் திருப்ப,அவளின் முகம் முழுவதும் குங்கும நிறமாக மாறியிருந்தது.கன்யாவை மனைவியாக இதுவரை அவன் பார்த்ததில்லை எங்கே பார்த்தால் தன் கட்டுபாட்டை இழந்து விடுவோம் என்று தான் அவ்வாறு இருந்தான்.இன்று தன்னிடம் ஏதோ கேட்க வந்து அவள் தயங்கி நின்றவிதம் அவனை சற்று இழுத்தது.காலையில் பூத்த மலர் போல ஒரு வித எதிர்ப்பார்ப்புடன் அந்த குண்டு விழிகள் அலைபாய்ந்தபடி அவனையே வட்டமடிக்க அதில் தடுமாறியவன் அவனையும் மீறி அணைத்துவிட்டான் இப்போது விலகும் போது அவளின் முக சிவப்பு அவனுக்கு மேலும் மனதை கிளர,

“ம்ம்ம்….ஶ்ரீ….இன்னைக்கு என்ன உன் கன்னம் இப்படி ரோஸா இருக்கு….”என்றுவிட்டு கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க,கன்னத்தில் இருந்த அதரம் மெல்ல ஊர்ந்து வந்து அவளின் கனி இதழ்களில் இளைப்பாற தொடங்கியது.கன்யாவோ பிடிமானத்திற்கு ஆரியின் சட்டை இறுக பிடித்தாள்.இருவரும் வேறு உலகில் சஞ்சரிக்கும் நேரம் ஆரியின் கைபேசி இசைத்து கரடி வேலை பார்த்தது.இருமுறை பேசி இசைந்து ஓய்ந்தது அதுவரை ஆரிக்கும் தெரியவில்லை கன்யாவின் இதழ்களை மெல்ல விடுவித்து உலகம் மறந்து அவன் கன்யாவின் நெற்றியை முட்டி நிற்க கன்யாவும் உலகம் மறந்து நின்றாள்.

ஆரியின் பேசி இசைக்க முதலில் நிகழ்வுக்கு வந்த ஆரிக்கு அப்போது தான் தான் செய்த காரியம் புரிபட்டது.அவன் விலகியதுமே கன்யாவும் நிகழ்வுக்கு வந்துவிட்டாள்.அவளின் மனது எங்கும் மழை சாரலாக குளிர்ந்து இருந்தது.

தனது பேசியில் பேசிக் கொண்டிருந்த ஆரியின் கண்கள் கன்யாவின் மேல் தான் அவள் முகத்தில் ஏதாவது பிடித்தமின்மை இருக்கிறதா என்று தான் பார்த்துக் கொண்டிருந்தான்.ஆனால் அவளோ ஏதோ மாயலோகத்தில் இருப்பது போல இருக்க ஆரிக்கு சிரிப்பு தான்.பேசியை அனைத்து வைத்துவிட்டு கன்யாவிடம் வந்தவன்,

“ஓய்…..ஶ்ரீ….அது…ம்ம்…”என்று முதல் முறையாக தடுமாறினான் ஆரியநாதன்.கன்யாவுக்கு அந்த சூழ்நிலையை எவ்வாறு கையால என்று தெரியவில்லை.அவளும் அவனிடம் தன் முகத்தை காட்டாமல் வேறு எங்கோ பார்த்தபடி நிற்க,

“ஓய்….ஶ்ரீ….சாரி…”என்றவுடன் அவனை திரும்பி முறைத்த கன்யா வேகமாக வெளியேற,அவளின் பின்னே சென்ற ஆரி அவளின் முன்னே சென்று அவளை இழுத்து நிறுத்தியவன்,

“ஏன் இந்த கோபம்…”

“போங்க சீனியர்….பேசாதீங்க….”என்றுவிட்டு அவள் போக,அவளின் சிவந்த மூக்கை பிடித்து ஆட்டியவன்,

“ம்ம்…..சரி பேசல….அப்ப வேற பேசுவோமா…”என்று அவளின் கன்னங்களில் கோடு இழுக்க,கன்யாவின் முகம் மீண்டும் குங்கும நிறம் கொண்டது.அதை ரசித்தவன் அவளின் கன்னங்களில் இருந்து கையை எடுத்துவிட்டு,

“ஶ்ரீ….இன்னும் கொஞ்ச நாள்….நீ பொறுத்து தான் ஆகனும்….”என்றான் நீண்ட முச்சை இழுத்துவிட்டபடி,

“எனக்கு தெரியும் சீனியர்….நீங்க நாளைக்கு நல்ல எழுதுங்க….ஆனா…”என்று அவனின் முன் கண்களை அழகாக உருட்ட,எப்போதும் அதன் அழகில் மயங்கியவன்,

“ம்ம்…ஆனா…சொல்லுங்க மேடம்…”

“நாளைக்கு ரொம்ப முக்கியமான நாள்….”

“ம்ம்…என்ன நாள் எனக்கு நியாபகம் இல்லையே…”

“எனக்கு தெரியும் நீங்க மறந்திருப்பீங்கனு….”என்றவள் மூக்கை உறுஞ்ச,

“அச்சோ…என் ஶ்ரீ குட்டி….சாரிடா….நீயே சொல்லிடேன்….ப்ளீஸ்….”என்று தன் காதுகளை பிடித்து கெஞ்ச,ஆறடி ஆண்மகன் தன் முன்னே கெஞ்சவது கண்டால் எந்த பெண்ணிற்கு தான் மனது தாங்கும்,

“ம்ம்…சரி சரி போனாது போகுது சொல்லுறேன்….நாளைக்கு என்னோட பிறந்த நாள்…அதோட நாம முதன் முதல்ல சந்திச்ச நாள்…”

“ஹே….அட்வான்ஸ் ஹாப்பி பர்த் டே…..”

“ம்ஹம்….நாளைக்கு ஒரு நாள் என்கூட மட்டும் செலவு பண்ணனும்….ஓகே வா….”என்று கேட்க,

“சரிடா….எக்ஸாம் முடிஞ்சி வந்ததும் எங்காவது வெளியில பேகலாம்….”என்று கூற,

“ப்ராமிஸ்…”என்று அவள் குழந்தை போல கை நீட்ட,

“ப்ராமிஸ்….”என்று அவளின் கைகளில் கை வைத்து சென்றான்.

அடுத்த நாள் காலை அழகாகவே விடிந்தது.ஆரி எழுந்தவன் சீக்கிரமாகவே எக்‌ஸாமிற்கு கிளம்பிவிட்டான்.இதோ கன்யா ஆவலாக எதிர்பார்த்த மாலை நேரம் நெருங்கி கொண்டிருந்தது.கன்யா ஆவலாக ஆரியின் வருகைக்கு எதிர் பார்த்து கொண்டிருந்தாள்.ஆனால் நேரம் கடந்ததே தவிர அவன் வரவில்லை.கன்யாவின் மனதில் சுருக்கென்ற வலி,

“தான் இத்தனை கூறியும் அவன் வரவில்லையே….”என்று ஒரு மனது நினைத்தாலும்,அவனுக்கு ஏதோ வேலை இருந்திருக்கும் என்றொரு மனதும் கூறியது.

“என்னை விட வேலை பெரிதா….அப்போது நான்…எனக்கு என் வார்த்தைக்கு இங்கு மதிப்பில்லையா…”என்று மீண்டும் மனது எடுத்துரைக்க,இருவேறு மனசுழலில் சிக்கி தவித்தாள்.காலையிருந்து பூத்திருந்த முகம் வாடி வதங்கிவிட்டது.இரவு நேரம் பத்தரை நெருங்கும் நேரம் வந்தான் ஆரி.

கன்யாவிற்கு அவனிடம் பேச மனதில்லை எங்கே பேசினால் ஏதாவது கூறிவிடுவோம் என்று அவனுக்கு தேவையான உணவை எடுத்து வைத்துவிட்டு அவள் போய் படுத்துவிட்டாள்.

“ஏய் ஶ்ரீ….எங்க இருக்க…”என்ற ஆரியின் குரலில்,

“நான்….எனக்கு தூக்கம் வருது சீனியர்….”என்றுவிட்டு மீண்டும் படுத்துக் கொள்ள,வேகமாக உள்ளே வந்த ஆரி,

“ஓய்…..வா எந்திரி….வா….உனக்கு ஒரு சர்பிரைஸ் வச்சிருக்கேன்….வா…”என்று அவன் உற்சாகமாக கூற,கன்யாவிற்கு மனதில் சிறு நம்பிக்கை தன்னிடம் கூறாமல் ஏதோ செய்திருப்பானோ என்று எண்ணியாவாறே வரவேற்பறைக்கு வர,அங்கு அவனுடன் வேலை பார்க்கும் சிலர் வந்திருந்தனர்.கன்யா அவர்களை பார்த்து வரவேற்கும் விதமாக புன்னகைக்க அவர்களும் புன்னகைத்தனர்.

“ஓய்….எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா…இன்னைக்கு எங்களோட புராஜக்ட் செலக்ட் ஆகிடுச்சு…அதான் வெளியில பார்டி போயிட்டு வந்தோம்….நான் தான் அவங்களை எல்லாம் அப்படியே நம்ம வீட்டுக்கு இன்வைட் பண்ணேன்….”என்று ஆரி கூறிக் கொண்டிருக்கும் போதே கன்யாவின் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்துவிட்டது.அவனுக்கு நியாபகம் இல்லை தன் பிறந்த நாளை மறந்துவிட்டான் என்ற உள்ள குமுறல் வெளியிலும் வெடித்துவிட,தன் தோளில் இருந்த ஆரியின் கையை தட்டிவிட்டு போக,அதுவரை ஏதோ பேசிக் கொண்டிருந்தவன் கன்யா இவ்வாறு செய்யவும்,அதிர்ந்து,

“ஏய்….ஶ்ரீ….ஶ்ரீ….:”என்று கத்த அவளோ காதில் வாங்காமல் அறைக்குள் சென்றுவிட ஆரிக்கு மற்றவர்கள் முன் கன்யா இவ்வாறு செய்யவும் ஒருமாதிரி ஆகி போனது,

“ஸாரி கைஸ்….ஒன் மினிட்….”என்று அவர்களிடம் மன்னிப்பை வேண்டியவன்,கன்யாவின் அறைக்கு சென்று,

“ஶ்ரீ….வாட் இஸ் திஸ்….ஏன் இப்படி பிகேவ் பண்ண….வா….எல்லாரும் இருக்காங்க…நீ பண்ணுறது நல்லா இல்லை….”என்று ஆரி பல்லை கடித்துக் கொண்டு கூற,

“நான் வரமாட்டேன்….நீங்க போங்க…உங்க பிரண்ட்ஸோட என்ஜாய் பண்ணுங்க….போங்க….”என்று கத்திவிட்டாள்.

“என்ன….என்ன பேசுற நீ….இங்க பாரு…இப்ப நாம எதுவும் பேச வேண்டாம்….எல்லாரும் இருக்காங்க வா….”என்று ஆரிக்கு கோபம் தான் இருந்தும் பொறுமையாக தான் அழைத்தான்.

“நான் தான் வரமுடியாதுனு சொல்லிட்டேன்ல போங்க…”என்று கன்யா பிடிவாதமாக பேச,ஆரிக்கும் பொறுமை பறந்து போனது.

“ஓகே….ஆனா நீ பண்ணறது சரியில்ல….”என்று கோபமாக கத்திவிட்டு வெளியில் சென்றான்.

ஆரியின் நண்பர்களுக்கு கணவன்,மனைவிக்குள் ஏதோ பிரச்சனை என்று புரிய சிறிது நேரம் இருந்துவிட்டு ஆரியிடம் கூறிக் கொண்டு சீக்கிரமாகவே கிளம்பிவிட்டனர்.ஆரியால் எதுவும் செய்ய முடியாமல் போனது.அவர்கள் சென்றவுடன் ஆரி அமைதியாக அமர்ந்துவிட்டான்.உள்ளுக்குள் கோபம் கிளர்ந்து கொண்டு தான் இருந்தது கன்யாவின் மேல்.

கன்யாவிற்கும் ஆரி கோபமாக சென்றவுடன் தான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்காலமோ என்று தோன்றியது தான் ஆனாலும் மனதின் ஏமாற்றம் அவளை எதையும் யோசிக்கவிடவில்லை.சற்று நேரத்தில் வீடு அமைதியாக இருக்கவும் கன்யா எழுந்து வெளியில் வர ஆரி சோபாவில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.

கன்யா மெல்ல நடந்து ஆரியின் அருகே சென்றாள் அவள் வருவது தெரிந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

“சீனியர்…”

“…..”

“சீனியர்…அது இன்னைக்கு நீங்க வரேன்னு சொன்னீங்க….ஏன் வரலை…அதான் கோபம்….”என்று கன்யா கூற,ஆரியிடம் பதில் இல்லை.அவனுக்குமே அப்போது தான் நியாபகம் வந்தது.தன் தவறும் இதில் உள்ளது தான் இருந்தும் அவள் செய்த தவறு தானே என்று நினைத்தவன் அதை கூறவும் செய்தான்.

“என் மேல தப்பு இருக்கு தான் நான் இல்லனு சொல்லல….அதுக்காக நீ பண்ணது சரி கிடையாது ஶ்ரீ….உனக்கும் எனக்கும் பிரச்சனைனா அதை நீ என்கிட்ட தான் காட்டனும் அடுத்தவங்க கிட்ட இல்ல…உன்கிட்டேந்து இதை எதிர்பார்க்கல ஶ்ரீ….”என்று ஆரி கூறி சென்றுவிட்டான்.கன்யாவும் தான் செய்த செயலுக்கு மன்னிப்பை யாசிக்கவில்லை.நான் என்ன செய்தேன் என்று என்னை காக்க வைத்தது தவறு தானே என்று தன்னை நியாபடுத்திக் கொண்டாள்.அன்றுமுதல் இருவருக்குள்ளும் பனி போர் நிகழ தொடங்கியது.

ஆரி கன்யாவிடம் சரியாக பேசுவது இல்லை,கன்யா பேசினால் கேட்டு கொள்வான் ஆனால் முன்பு போல் இல்லை.கன்யாவிற்கு மனதிற்கு கஷ்டமாக இருக்க ஒருநாள் இதை அவள் தனது தாயிடம் பகிர்ந்தாள்,அந்த சமயம் நிதியும் அங்கு இருந்ததால் அவள்,

“என்ன சண்டையா….நல்ல வேணும்….எங்க எல்லாரையும் விட்டுட்டு போனல்ல…அதான்….அந்த பையனை பார்த்தப்பவே எனக்கு சந்தேகம் அவனுக்கு இருக்குற அழகுக்கு அவன் ஏன் இந்த மூஞ்சியை லவ் பண்ணுறேன் சொல்லுறானேனு…இப்ப புரியுது….”என்று தன் மனதில் இருந்த வன்மத்தை கொட்ட,கன்யாவிற்கு ஆரியின் பாராமுகம் மனதை வதைத்திருக்க,இப்போது நிதியின் வார்த்தையும் அவளை நிலையிழக்க செய்திருந்தது.அதனால் கோபத்தில் பேசியை அனைத்துவிட்டாள்.

வீட்டில் இருந்தால் அவளுக்கு ஏதோ மூச்சு முட்டுவது போல் இருக்க  பக்கத்தில் எங்காவது செல்லாம் என்று முடிவெடுத்து வெளியில் வந்துவிட்டாள்.ஆரியுடன் தான் எப்போதும் வெளியில் வருவாள் இன்று தனியாக வெகு தூரம் நடந்து வந்துவிட்டளுக்கு வீட்டிற்கு திரும்பும் பாதை தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள்.

தனது கைபேசியில் ஆரிக்கு அழைப்பு விடுக்க அவன் கட் செய்து வைத்துவிட்டான்.இரண்டு மூன்று முறை அழைத்தவள் அவன் கட் செய்யவும் ஏதோ வேலை போல என்று நினைத்துக் கொண்டு விட்டுவிட்டாள்.அவள் என்ன செய்வது என்று புரியாமல் நிற்க,அப்போது பக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து வெளியில் வந்த ஆரியைக் கண்டு நிம்மதி அடைந்து அவனை நெருங்கும் போது தான் கண்டாள் ஆரியின் கைகளை கோர்த்துக் கொண்டு ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள்.

சாதாரண நாளாக இருந்தாள் அமைதியாக போயிருப்பாள் ஆனால் இன்று அவள் தவித்துக் கொண்டிருக்கும் போது தன் அழைப்பைக் ஏற்காமல் இருந்தது அவளுக்கு தாள முடியவில்லை.மீண்டும் பேசியில் அவள் அழைக்க,ஆரி பேசியை எடுத்து பார்த்துவிட்டு அனைத்து வைப்பதை பார்த்தவளுக்கு கோபம் தலைக்கேற அவர்களின் பின்னே சென்றாள்.அவர்கள் ஒரு ரெஸ்டாரண்டிற்குள் நுழைவதைப் பார்த்தவள் பின்னே சென்று பார்க்க அங்கு ஒரு இறுக்கையில் இருவரும் நெருங்கி அமர்ந்திருக்க கன்யாவிற்கு இருந்த கொஞ்சம் பொறுமையும் பறந்தோட,வேக நடையிட்டு அவர்களின் முன்னே நின்றாள்.

ஆரி கன்யாவை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் அதிர்ந்த பார்வையிலேயே தெரிந்தது.

“ஶ்ரீ….நீ….”

“…..”

“ஶ்ரீ…”

“நான் ஶ்ரீ தான்….ஏன் மறந்து போச்சா….இல்லை….”என்று பக்கத்தில் இருந்த பெண்ணை பார்த்துவிட்டு ஆரியை பார்த்தாள்.அந்த பெண்ணோ இன்னும் ஆரியிடம் நெருங்கி அமர்ந்து கொண்டு,

“ஆமா யார் நீங்க….எதுக்கு என் அத்துவை மிரட்டுறீங்க…”என்று கேட்க,கன்யா உண்மையில் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.கோபம் கண்னை மட்டும் அல்ல அவளின் மூளையும் மழுங்கடித்துவிட்டது.

“ஆரியீயீயீ…இப்ப இந்த நிமிஷம் நீங்க என்கூட வரீங்க….”என்று இருக்கும் இடம் மறந்து கன்யா கத்த,ஒருசிலர் இவர்களை தான் பார்க்க தொடங்கினர்.

“ஶ்ரீ….நீ என்ன பண்ணுற…முதல்ல நீ உட்காரு…”

“முடியாது எந்திரிங்க….”என்றவள் ஆரியின் கைகளை அந்த பெண்ணிடம் இருந்து பிரித்து எடுத்து இழுக்க,ஆரிக்கு பொறுமை பறந்தது,

“ஶ்ரீஶ்ரீ….”என்றவன் அவளின் கைகளை அழுத்தமாக பற்றி,வெளியில் இழுத்து வந்தவன்,

“நீ போ….இங்க நின்னு டிராமா கிரியேட் பண்ணாத….போஓஓஓஓ….”என்று ஆரியும் கத்தவிட்டு அவளை திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.கன்யாவிற்கு விழிகளில் கண்ணீர் நிரம்பிவிட்டது.கன்னங்களில் வழிந்த நீரை துடைக்க தோன்றாமல் எப்படி வீட்டிற்கு செல்வது என்று புரியாமலும் அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள்.

எவ்வளவு நேரம் நின்றிருப்பாள் என்று அவளுக்கே தெரியாது.நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை ஏதோ திக்கு தெரியாத காட்டில் நிற்பது போல அவள் நிற்க,சிறிது நேரம் கழித்து அவளின் கைகளை யாரோ பற்றி இழுக்கவும் நிகழ்வுக்கு வந்தவள்,பயந்து முகத்தை நிமிர்த்த ஆரி தான் அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.

ஆரிக்கும் கன்யாவிடம் பேசாமல் இருப்பது பிடிக்கவில்லை தான் ஆனால் தான் அவளிடம் நெருங்க போய் தானே அவள் தன் மீது எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டாள்.அதனால் இன்னும் சிறிது காலம் விலகி இருப்பது தான் நல்லது என்று தான் விலகி இருந்தான்.ஆனாலும் கன்யாவின் வாடி வதங்கிய முகத்தை கண்டால் அவனால் விலக முடியவில்லை அதனால்  வீட்டிற்கும் தாமதமாக தான் வருவான்.

இன்று ஒரு முக்கிய மீட்டிங்கிற்கா அவன் வந்திருந்த இடத்தில் மித்ராவை சந்தித்தான்.மித்ரா ஆரியின் தூரத்து சொந்தம்.ஒருவகையில் அத்தையின் மகளும் கூட.சிறுவயதில் இருந்து இருவரும் நல்ல நண்பர்கள்.அவள் ஆரியை சாப்பிட அழைக்க அவளுடன் தான் வந்திருந்தான்.ஆனால் வந்த இடத்தில் கன்யா நடந்து கொண்டது அவன் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று.கோபத்தில் அவளை வெளியில் விட்டுவிட்டு வந்துவிட்டான் தான் ஆனால் அவனாலும் இருக்க முடியவில்லை வெளியில் பார்க்க கன்யா அந்த இடத்திலேயே நிற்கவும்,மித்ராவிடம் கூறிவிட்டு வந்துவிட்டான்.

கன்யாவும்,ஆரியும் தங்களின் வீட்டிற்கு வந்து உள்ளே நுழைந்தவுடன்,

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ…..ஆங்…”

“……”

“ஏய்….”என்ற ஆரியின் அதட்டலில் அதிர்ந்து கன்யா அவனின் முகத்தை பார்க்க,ஆரியின் விழிகள் சிவந்து ரௌத்திரத்தை காட்டிக் கொண்டிருந்தது.இதுவரை கன்யா ஆரியை இந்த பரிமாணத்தில் கண்டதில்லை பயத்தில் நா உளற அவள் நிற்க,

“ஏய்….உன்னை தான் கேட்குறேன்….வாயை திற….”என்றவன் அவள் தோள்களை பிடித்து உலுக்க,கன்யாவின் உடல் முழுவதும் ஆடியது.

“என்ன நினைச்சிகிட்டு இருக்க….ஆங்….நீ என்னவேனா பேசுவ நான் பொறுமையா இருப்பேன்னு நினைக்கிறியா….ஆங்…என்ன சொன்ன உன்னை மறந்துட்டேன் சொல்லுற அதுவும் அவ முன்னாடி….அது என்ன அப்படி ஒரு பார்வை எங்க இரண்டு பேரு மேலேயும்….என்ன சந்தேக படுறியா….ஆங்….கேட்குறதுக்கு பதில் சொல்லு ஶ்ரீ….சொல்லு….எப்படி நினைச்ச நீ….நான்…ப்ச்…என்னை பத்தி தெரிஞ்சும் நீ….”என்று கேட்டுக் கொண்டே அவன் கன்யாவை உலுக்க,ஒருகட்டத்தில் கன்யா உடைந்து அழ தொடங்கினாள்.ஆரியும் அவளை உதறிவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

கன்யா ஆரி விட்டு சென்ற இடத்தில் தான் விழுந்து அழுதாள்.அவள் செய்த காரியத்தை நினைத்து  அவளுக்கே அசிங்கமாக போனது.கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்க கூடாதா நான்…என்ன செய்துவிட்டேன்….அய்யோ…நான் ஆரியை சந்தேககிக்கிறனா…. அவன் தான் தன் எல்லாமும் என்று நினைத்திருக்க அவனை எப்படி என்னால் சந்தேகிக்க முடியும்….என்று தனக்குள் கேட்டுக் கொண்டே அழுது கரைந்தவளுக்கு அவள் செய்தது தவறு என்று மட்டும் புரிந்தது.வெகு நேரம் கழித்து தான் ஆரி வந்தான் முகம் முழுவதும் சோர்ந்து காணப்பட்டது.

கன்யா ஆரியை கண்டவுடன் வேகமாக எழுந்து அவனிடம் சென்றவள்,

“சீனியர்….சாரி….நான் வேணும் பண்ணல….நீங்க என் போனை எடுக்கலை….அந்த கோபம்….”என்றவள் காலையில் நடந்தவற்றை கூறினாள்.ஆனால் அதை கேட்கும் நிலையில் தான் ஆரி இல்லை.

“என்னை கொஞ்சம் தனியா விடு கன்யா….”என்று உரைத்துவிட்டு அவன் அறைக்குள் சென்று படுத்துவிட்டான்.கன்யாவிற்கு தான் குற்றவுணர்வாகி போனது.அதன் பின் வந்த நாட்களில் ஆரி மிக அமைதியாக வலம் வந்தான்.கன்யாவிடம் முற்றிலுமாக பேச்சை தவிர்த்துவிட்டான்.கன்யா பலமுறை அவனிடம் மன்னிப்பை வேண்ட ஒருகட்டத்தில்,

“வெறும் சாரினு…..நீ சொல்லுற ஒருவார்த்தை என் மனசுல ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாகாது ஶ்ரீ….என்னை கொஞ்சம் தனியா விடு….”என்று ஆரி கூறிவிட,கன்யாவால் தாங்க முடியவில்லை.மேலும் ஒரு மாதம் கடந்த நிலையில் கன்யாவின் வாழ்வில் எந்த மாறுதலும் இல்லை.கன்யாவால் ஆரியின் இந்த ஒதுக்கத்தை தாங்க முடியாமல் மனதளவில் மிகவும் பாதித்துவிட்டாள்.யாரிடமும் பேச விருப்பமில்லை.தனிமை அவளை கொன்றது.

ஆரியிடம் பேசாமல் அவனுடன் இருப்பது ஏதோ போல இருக்க,அதோடு அவனிடம் பேசாமல் தனக்கு தேவையானதை கேட்கவும் மனதில்லை அதனால் ஒரு முடிவு எடுத்தாள்.அதன் படி இந்தியாவில் வேலைக்கு முயற்சி செய்தாள் பெங்களூரில் அவளுக்கு வேலை கிடைக்க ஆரியிடம் வந்தவள்,

“சீனியர்….”

“….”

“சீனியர்….நான் பண்ணது தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க….என்னால நீங்க இப்படி இருக்கும் போது இங்க இருக்க முடியலை….நான் எனக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்கு….நான் போகவா…”என்று கேட்டாள்,வாய் தான் போகவா என்று கேட்டது மனதோ என்னை போக சொல்லிவிடாதே என்று வேண்டிக் கொண்டிருந்தது.ஆனால் ஆரியோ ஒரே வார்த்தையில் போ என்றுவிட்டான்.அவ்வளவு தான் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட்டாள்.ஆரியிடம் இருந்து தூரம்.இங்கு இருவரின் மீது தவறு இருந்தது ஆனால் அதை பேசி சரி செய்யாமல் விட்டுவிட்டனர்.பேசியிருந்தால் பல இன்னல்களை தவிர்த்திருக்கலாம் ஆனால் விதி அவர்களின் வாழ்வில் விளையாண்டுவிட்டது.

Advertisement