Advertisement

மன்னிப்பாயா….15

அன்பு அழுதபடி சமையல் அறையில் இருந்து வந்தவர் கன்யாவைக் கண்டு,

“கனிமா….”என்று அழைத்தபடி அவளின் அருகே செல்ல,கன்யாவோ ஆரியின் கையை மேலும் இறுக பற்றிக் கொண்டு நின்றாள்.ஆரிக்கும் அவளது மனநிலை புரிய அவளின் கையின் மீது தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்தான்.அதற்குள் ஶ்ரீநிதி கன்யாவுடன் வந்தவனைக் கண்டு சற்று பிரமித்து தான் போனாள்.அவள் தங்கை காதலிப்பவன் சுமாராக தான் இருப்பான் என்று நினைத்திருக்க சகல அம்பசங்களுடன் வந்தவனைக் கண்டு நிதிக்கு வன்மம் தலைக்கேறியது என்று தான் கூற வேண்டும்.

“ஏய் நீ எதுக்கு திரும்பியும் வந்திருக்க…”என்று நிதி அதிகாரமாக கேட்க,கன்யா பதில் கூறும் முன்,

“அதை எதுக்கு நீங்க கேட்குறீங்க…..உங்க அப்பா எங்க….”என்று ஆரி கேட்க,

“ஏய் நீ யாரு….என் வீட்ல வந்து என்னையவே அதிகாரம் பண்ணுற…”என்று நிதிக்கு கோபம் கட்டுக் கடங்காமல் வந்தது.

“ஶ்ரீ….நீ இப்படி உட்காரு….”என்று பக்கத்தில் இருந்த ஒரு இறுக்கையில் அவளை அமர வைத்தவன்,

“உங்க அப்பா எங்கனு தான் கேட்டேன்….”என்று தன் சட்டை ஏற்றியவாரே கேட்க நிதி ஒரு அடி பின் வைத்து,

“அப்பா…அப்பா….”என்று கத்தினாள்.

“என்னமா…என்ன???”என்று கேட்டபடியே வெளியில் வந்தார் இளங்கோ.

“ப்பா…பாருங்கப்பா….நீங்க என்னமோ பயந்தீங்க இவ எங்க போயிருப்பானு….பாருங்க…நல்லா பாருங்க….யார் கூடயோ வந்து நிக்குரா….”என்று நிதி கத்தி கூச்சல் போட,

“நிதி கொஞ்சம் அமைதியா இரு….”என்று அவளின் கணவன் திட்ட,

“உங்களுக்கு என்ன தெரியும் நீங்க வாயை மூடுங்க…..”என்று அவனின் வாயை அடக்கினாள். இளங்கோவோ மகள் வந்துவிட்டாள் என்று மனதில் நிம்மதி பரவ,

“கன்யா….”என்று அழைத்தபடி அவளின் அருகே செல்ல,அவளை மறைத்தார் போல நின்றான் ஆரியநாதன்.தன் வீட்டில் புதிதாக நின்றவனைக் கண்டு புரியாமல் அவர் விழிக்க,

“இவர் தான் ஆரி…ஆரியநாதன்….”என்று கன்யா எடுத்துரைக்க,அதுவரை மகளை கோபத்தில் திட்டிவிட்டோம் அவள் எங்கு சென்றிருப்பாளோ என்று பயந்து தான் அவளின் கல்லூரி நண்பர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தவருக்கு இப்படி மகள் அவள் விரும்பியவனை கூட்டிக் கொண்டு வருவாள் என்று நினைக்கவில்லை.கோபம் கோபம் மட்டுமே இளங்கோவிற்கு தான் அவ்வளவு கூறியபிறகும் இப்படி வந்து நிற்கிறாளே என்று நினைத்தவர்,

“ஓ….இது தான் உன் லவ்வரா….நேரா இவன் கிட்ட போயிட்டியா….”என்று வார்த்தைகளை விட,

“மரியாதை மரியாதையா பேசுங்க….இந்த ராத்திரி நேரத்துல பொண்ணை வீட்டை விட்டு துரத்திட்டு அவ எங்க போனானு கொஞ்சம் கூட வருத்தம் இல்லாம இருக்குற நீங்க எல்லாம்….”என்று ஆரி கூற இளங்கோவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.

“என்ன என்ன சொன்ன….நாங்க வருத்தபடலையா….இவ்வளவு நேரம் இவ எங்க போனாளோனு நான் அவளோட ஒவ்வொரு பிரண்டுக்கா போன் பண்ணி கேட்டு கிட்டு இருக்கேன்…இவ என்னடானா உன்னை கூப்பிட்டு வந்து என்னை அசிங்கபடுத்திக்கிட்டு இருக்கா…”என்றார் ஆற்றாமையில்.

இளங்கோவிற்கு கன்யா தன்னை மதிக்கவில்லை என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது.அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிய முற்பட்டதே இல்லை.இப்போது என்றில்லை எப்போதும் அவர் அறிய முற்பட்டதில்லை என்று தான் கூற வேண்டும்.ஶ்ரீநிதியின் மீது வைத்த அக்கறையில் பாதியாவது மற்ற மக்களிடம் வைத்திருந்தாள் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்திருக்கும்.அவர் தவறை செய்துவிட்டு இப்போது அவளைக் குறை கூறி என்ன பயன்.பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை சம்மாக நடத்த வேண்டும் இல்லையேல் அதன் பின்விளைவுகளை ஏற்று தான் ஆக வேண்டும்.

“என்ன அசிங்கப்படுத்திட்டாங்க உங்களை….ஆங்….என்ன அசிங்கப்படுத்திட்டாங்க உங்களைனு கேட்குறேன்….”என்று ஆரி கோபத்தில் கத்த,கன்யாவிற்கு தான் எங்கே விபரீதம் ஆகிவிடுமோ என்ற பயம் பிடித்துக் கொண்டது.

“சீனியர்…பிரச்சனை வேண்டாம் வாங்க போகலாம்….”என்று கன்யா ஆரியின் கையை பிடிக்க,

“நல்லா நாடகம் ஆடுறடீ நீ….எப்படி எப்படி நீயே உன் லவ்ரை கூடிட்டு வருவ….அவரு என்னடானா விட்டா அப்பா மேலேயே கை வைப்பாரு போலிருக்கு….நீ உடனே அவரை கை பிடிச்சு இழுத்துட்டு போவ….வாவ் சூப்பர்….”என்ற நிதி தன் தந்தையிடம் திரும்பி,

“ப்பா பார்த்தீங்களா…..நான் சொன்னப்ப நீங்க நம்பலை இப்ப பாருங்க….”என்று நிதி இளங்கோவை கன்யாவின் எதிராக திருப்புவதிலேயே இருந்தாள்.அதை ஆரியும் உணர்ந்தான்.

“இங்க பாருங்க…நான் உங்க கிட்ட சண்டை போட வரலை….இவ இங்க தான் இருப்பா….”என்று ஆரி கூற,

“எங்க மானத்தை வாங்குனவ எதுக்கு இங்க வரனும்….நாங்க வேண்டாம்னு தான ஓடிபோனா….ஓடிப்போனவளுக்கு எல்லாம் இங்க இடம் இல்லை,…”என்று நிதியின் குரல் அதிகாரமா ஒலித்தது.

“ச்சீ….நீ எல்லாம் ஒரு பொண்ணா….உன் கூட பொறந்த தங்கச்சியை பத்தி பேசுறோம் என்ற அறிவு இல்லை….”இதுக்கு நீங்க இரண்டு பேரும் அமைதியா இருக்கீங்க என்று அன்புவையும்,இளங்கோவையும் சேர்த்து ஆரி திட்ட,

“அவ என்ன தப்பா சொல்லிட்டா….நாங்க வேண்டாம்னு தான போனா…..இப்ப மட்டும் நாங்க எதுக்கு….போங்க….வெளில போங்க….என்னை மதிக்காத யாரும் இங்க இருக்கனும்னு அவசியமில்லை…..போங்க….”என்று இளங்கோவும் தன் பங்கிற்கு கத்திவிட.அதன் பிறகு ஒருநிமிடம் கூட ஆரி கன்யாவின் வீட்டில் நிற்கவில்லை.கன்யாவை அழைத்துக் கொண்டு அவன் நேராக அவனின் வீட்டிற்கு சென்றுவிட்டான்.

சுதா மகன் இப்படி நடு இரவில் ஒரு பெண்ணுடன் வந்து நிற்பதைக் கண்டு அதிர்ந்தவர்,

“ஆரி யாரு இந்த பொண்ணு???”என்று கேட்டார்.

“ம்மா…இது கன்யா…நான் இவளை விரும்புறேன்….இவ வீட்ல ஒரு பிரச்சனை…அதான் கூட்டிட்டு வந்துட்டேன்…..”என்று கூற சுதாவிற்கு கோபம் தலைக்கேறியது,

“ஆரி….என்ன பண்ணிட்டு வந்திருக்க நீ….முதல்ல இந்த பொண்ணை அவங்க வீட்டல விட்டு வா…”என்றார் கோபமாக,அவருக்கு மகன் இப்படி செய்தது பிடிக்கவில்லை.

“ஆரி என்னப்பா இது….இப்பதான் நான் அவசரப்படமாட்டேனு என்கிட்ட சொன்ன….இப்படி பண்ணிட்டு வந்து நிக்குற….”என்று மூர்த்தியும் தனது பிடித்தமின்மை கூறிவிட,கன்யாவிற்கு அழுகை பீறிக் கொண்டு வந்தது.தனக்கு என்று யாரும் இல்லை என்பது போல் உணர்ந்தாள்.அவளின் எண்ணத்தை உணர்ந்த ஆரி அவளின் கைகளை அழுத்தமாக பிடித்து அழுத்தம் கொடுத்தான்.

“சீ…சீனியர்….என்னை எங்காவது ஹாஸ்ட்டல்ல விட்டுடுங்க….”என்று கன்யா கூற,

“இல்ல ஶ்ரீ….அது…”என்று அவன் யோசிக்க,

“அதான் அந்த பொண்ணே சொல்லுதேடா….உனக்கு என்னடா….”என்று சுதா கூற,மூர்த்தி அமைதியாக மகனை பார்த்திருந்தார்.அவருக்கு புரிகிறது ஏதோ பிரச்சனை என்று ஆனால் இப்போது மகனின் படிப்பு மட்டுமே அவரின் கண்களுக்கு தெரிந்தது.ஆரிக்கும் வேறு வழியிருக்கவில்லை அதனால் கன்யாவை ஒரு லேடீஸ் ஹாஸ்ட்டலில் சேர்த்துவிட்டு வந்தான்.

அன்றைய இரவு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.ஆரிக்கு கன்யாவை இப்படி தனியே விடுவதில் மனதில்லை ஆனால் இப்போது என்ன செய்வது என்ற குழப்ப நிலை.சுதாவிற்கும்,மூரத்திக்கும் மகனின் இந்த செயல் பிடிக்கவில்லை.அதுவும் மூர்த்திக்கு முன்பே இவ்விஷயம் தெரிந்தது வேறு சுதாவிற்கு மேலும் கோபத்தை கொடுத்திருக்க அவர் மூர்த்தியிடமும் கோபத்தை காட்டினார்.

“உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு….அப்படியிருந்தும் நீங்க என்கிட்ட எதுவும் சொல்லல…”என்று மகனின் மீது உள்ள கோபத்தை கணவரிடம் காட்ட,

“சுதா….எனக்கே இன்னைக்கு தான் தெரியும்….நான் உன்கிட்ட சொல்லாம்னு நினைச்சிருந்தேன்….அவன் இப்படி வந்து நிப்பான்னு நான் நினைக்கலை….”என்று மூர்த்தி பாவமாக கூற,சுதாவிற்கு அவரை முறைப்பதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.

அடுத்த நாள் காலை யாருக்கும் காத்திராமல் விடிந்தது.ஆரிக்கு மனது முழுவதும் கன்யாவிடமே தான் இருந்தது.உடனே தனது பேசியை எடுத்து கன்யாவிற்கு அழைக்க அழைப்பு போய் கொண்டே இருந்ததே தவிர எடுக்கப்படவில்லை.இரண்டு,மூன்று முறை அழைத்து பார்த்தவன் அவள் எடுக்கவில்லை என்றவுடன் அவளைக் காண சென்றுவிட்டான்.

கன்யாவோ ஹாஸ்ட்டலில் தனது ரூமில் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.மனதெங்கும் நேற்றைய நிகழ்வையே மனது அசைப்போட்ட படி இருந்தது.அப்போது அவளின் அறைக்கதவை யாரோ தட்ட,அதில் நினைவு வரப்பெற்றவள்,

“ஆங் வரேன்….”என்றுவிட்டு கதவை திறக்க,

“நீ தான் கன்யாவாமா….உன்னை பார்க்க விசிட்டர் வந்திருக்காங்கமா வா….”என்று அந்த பெண்மணி சென்றுவிட்டார்.கன்யாவிற்கு ஏற்கனவே மனதும் உடலும் சோர்வுடன் யார் வந்திருப்பார்கள் ஒருவேலை அப்பா வந்திருப்பாரோ என்று நினைத்துக் கொண்டு கீழே வந்தாள்.அங்கு வரவேற்பறையில் யாரும் இல்லை என்றவுடன் அவள் விழித்தபடி நிற்க,

“உன்னை பார்க்க வந்தவர் வெளியில நிக்குறார்மா….நீ புதுசு இல்ல….அதனால உனக்கு இங்க உள்ள ரூல்ஸ் தெரியாதில்லை….இங்க ஜென்ட்ஸ் அலவோட் இல்லைமா….போ போய் பாரு….”என்று கூறிவிட்டு அவர் செல்ல,கன்யா வெளியில் வர அங்கு தன் இரு சக்கர வாகனத்தில் சாய்ந்தபடி நின்றிருந்தான ஆரி.கன்யா வெளியில் வந்தவுடன் வேகமாக அவளிடம் வந்தவன்,

“ஶ்ரீ….என்ன பண்ண….எவ்வளவு நேரம் உனக்கு போன் பண்ணேன் தெரியுமா….”என்று பரிதவிப்பாக கேட்க நேற்றில் இருந்து தனக்கு யாரும் இல்லையோ என்று மனதளவில் தவித்து போனவளுக்கு ஆரியின் இந்த அக்கறையான அணுகுமுறை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.

எப்போதும் படபட பட்டாஸாக பொரிவள் இன்று அமைதியாக நிறிபதைக் கண்டு ஆரிக்கு பயம் மேலும் அதிகரித்தது என்று தான் கூற வேண்டும்.

“ஶ்ரீ….ஶ்ரீ….”என்று ஆரி அவளின் தோள்களை உலுக்க,அவளோ சுற்றம் மறந்து அவளை இறுக கட்டிக் கொண்டாள்.

“ஏய்….ஶ்ரீ…..ஶ்ரீ….என்ன ஆச்சு….என்னடா….”என்று பதட்டத்துடன் கேட்க,

“சீனியர்…..என்னை உங்க கூடவே கூட்டிட்டு போயிடுறீங்களா….எனக்கு என்னவோ யாரும் இல்லாத மாதிரி இருக்கு….என்னால முடியலை….”என்று கதறி அழ ஆரிக்கு ஒரு நிமிடம் அனைத்தும் சம்பித்த நிலை.மனதில் பல எண்ணங்கள் ஆர்பரிக்க மனது மூளை இரண்டும் சம்பித்த நிலை.கன்யாவோ அவனின் நெஞ்சில் சாய்ந்து அழுதவள் சற்று நேரத்தில் தெளிந்து அவனிடம் இருந்து விலக,அவளை விலகவிடாமல் இழுத்தவன் அவளின் முகத்தை பார்த்து,

“கனி….நான்….”என்று ஏதோ கூறவர,

“சாரி சீனியர்….நான் உங்களை ரொம்ப கஷ்படுத்துறேனா….ஆனா என்னால முடியலை….பொய்யா நடிக்க கூட என்னால முடியலை….”என்று கூற,அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தி,

“ஏய்….ஶ்ரீ….நீ என்கிட்ட இப்படி இருக்குறது தான் எனக்கு வேணும்….நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ஶ்ரீ….”என்று கூற,கன்யாவிற்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.

“என்ன சீனியர்…அது உங்க வீட்ல இப்ப இதுக்கு ஒத்துக்கமாட்டாங்க….”என்று கூற,

“ம்ம்….எனக்கும் தெரியும் ஆனா எனக்கு வேற வழி தெரியலை….”என்று ஆரி கூற,

“இல்லை சீனியர் நான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு உங்கிட்ட அப்படி பேசிட்டேன்….நான்…எனக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்ல….நீங்க பாருங்க….”என்று தன் மனதின் கவலைகள் தன்னுடன் போகட்டும் என்று நினைத்துக் கொண்டு அவனிடம் இருந்து விலக பார்க்க,

“நான் முடிவு பண்ணிட்டேன் கனி இனி நீயே நினைச்சாலும் மாத்த முடியாது…”என்று ஆரியின் குரல் அழுத்ததுடன் ஒலித்தது.

ஆரியிடம் தன் முடிவை தான் கூறினான்.ஆம் முடிவு தான் அவள் தனக்கு என்று யாருமில்லாது போல் இருந்தது என்றவுடன் முடிவு எடுத்துவிட்டான் இனி இவளை தனியாக விடுவதில்லை என்று.அதனால் திருமணம் ஒன்றே இதற்கு தீர்வு என்று முடிவுக்கு வந்துவிட்டான்.இதனால் தன் பெற்றொரிடம் பிரச்சனை வரும் என்று அவனுக்கும் தெரியும் இருந்து கன்யாவை தனியாக விட போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான்.

ஆரி தன் முடிவை வீட்டில் சொன்னவுடன் அவன் நினைத்தது போல் பெற்றவர்கள் இருவரும் சண்டை தான் போட்டனர்.ஆனால் ஆரி தன் முடிவில் இருந்து மாறவில்லை.மூர்த்திக்கு மகனை பற்றி நன்கு தெரியும் ஆதலால் அவர்,

“கொஞ்சம் பொறுமையா இரு ஆரி…அவசரப்படுற நீ….”என்று கூற,ஆரி அவரின் பதிலை காதில் வாங்கவில்லை.முடிவு செய்ததை போல ஆரி,கன்யாவை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டான்.கன்யாவின் வீட்டினருக்கு அவர்களின் திருமணத்தை பற்றி நேரில் சென்று சொல்லிவிட்டு வந்தான்.இளங்கோவோ எனக்கு அப்படி ஒரு மகள் இருந்தாள் என்பதையே மறந்துட்டேன் என்று ஆரியிடம் தன் கோபத்தை காட்ட ஆரியோ அவரைக் கண்டு கொள்ளவில்லை.

ஆரி கன்யாவின் பிரச்சனையில் யூஸ் செல்வதை மேலும் இரு வாரங்கள் தள்ளி போட்டிருந்தான்.திருமணம் முடிந்தவுடன் தனது நண்பன் ஒருவன் வீட்டில் தான் இருந்தனர் கன்யாவும் ஆரியும்.தன் வீட்டிற்கு கன்யாவை அழைத்து சென்றால் வீண் பிரச்சனை வரும் அதோடு கன்யா தன் வீட்டிற்கு வரும் போது அனைவரும் மகிழ்ச்சியுடன் தான் வரவேற்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான்.

ஆரி திருமணம் முடிந்தவுடன் கன்யாவிற்கும் சேர்த்து யூஸ் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் பண்ணிவிட்டான்.

“வேண்டாம் சீனியர்..நான் இருந்துப்பேன்….”என்று மறுத்தவளை ஒரு முறை முறைக்க அவள் அதன் பிறகு அவள் வாய் திறக்கவில்லை.அதன் பிறகு அனைத்தும் மின்னல் வேகத்தில் தான் நடந்தது கன்யா ஆரியின் வாழ்க்கையில்.ஆரியும்,கன்யாவும் யூஸ் வந்து ஒரு வருடம் கடந்திருந்தது.

கன்யா,ஆரியின் வாழ்வில் மகிழ்ச்சியில் தான் சென்றது.இருவரும் கணவன்,மனைவியாக வாழவில்லை ஆனால் நல்ல நண்பர்களாக வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தனர்.ஆரிக்கும் படிப்பு மேலும் ஆறு மாதங்கள் இருந்தன.அதனால் ஆரி எப்போது ஒரு நட்பு என்று கோட்டுக் அப்பால் அவளை பார்க்க கூட இல்லை.கன்யாவும் ஆரி தன்னுடன் இருக்கிறான் என்பதே மனதை இனிக்க செய்தது.அதை தவிர வேறு எந்த எண்ணமும் அவளிடம் இல்லை.

திருமணம் முடிந்து வந்ததில் இருந்து எண்ணி மூன்று முறை தான் தன் வீட்டிற்கு அழைத்திருந்தாள்.ராமும்,அன்புவும் மட்டுமே அவளிடம் பேசுவர்கள் கன்யாவும் அவர்களை தவிர மற்றவர்களை பற்றி கேட்கவும் மாட்டாள்.ஆரி படிப்புடன் வேலையும் செய்வதால் அவனுக்கு அதிலேயே நேரம் சென்றுவிடும்.வீடு வந்தால் கன்யாவுடன் சில நிமிடங்கள் மட்டுமே செலவிடுவான்.கன்யாவிற்கும் ஆரியின் வேலை பளு பற்றி தெரியுமாதலால் அவளும் அவனை அதிகமாக தொந்திரவு செய்யமாட்டாள்.

கன்யாவும் ஆரியுடன் கழிக்கும் நேரங்களை தன் மனதில் பொக்கிஷமாக தான் சேமிப்பாள்.சில மிக சில நேரங்களில் அவளுக்கு மனதில் வேறு சில எதிர்பாரப்புகள் அவளையும் அறியாமல் எட்டி பார்க்கும் அதை ஆரியிடம் அவள் வெளிப்படுத்தியிருந்தாள் ஆரிக்கும் அவளது மனம் புரிந்திருக்கும். அவள் அவனாக புரிந்து செய்வான் என்று நினைத்துவிட அவளுக்கு அங்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்.ஆரியின் மனதில் அப்போது படிப்பை நல்லபடியாக முடிக்க வேண்டும்,தன் வீட்டில் உள்ளவர்களை பழையபடி பேச வைக்க வேண்டும் என்ற எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தது.

பல நேரங்களில் மனிதர்கள் தங்கள் மனதின் எண்ணங்களை வெளிபடுத்தாமல் அதை அடக்கி அடக்கி வைத்தால் ஒரு நாள் வெளியில் வரும் அது போல் தான் கன்யாவின் மனதும் வந்தது.ஆனால் வந்த இடம் அது தான் தவறாக முடிந்துவிட்டது.

Advertisement