Advertisement

மன்னிப்பாயா….13

ஆரியநாதன் கன்யாவிடம் காதலை கூறி இதோ ஒரு மாதம் ஓடிவிட்டது.இருவரும் எப்போதும் போல் தான் பேசிக் கொள்வர்.நட்பு என்ற கோட்டை இருவருமே தாண்ட முற்படவில்லை.ஆரிக்கு இறுதியாண்டு என்பதால் அவன் படிப்பில் அதிக கவனம் செலுத்த கன்யா அவனுக்கு துணையாக இருப்பாள்.அதுவே ஆரிக்கு கன்யாவின் மீது மேலும் ஈர்ப்பை உருவாக்கியது.

கன்யாவிற்கு ஆரியுடன் கழிக்கும் பொழுதுகள் எல்லாம் ஏதோ சொர்கத்தில் இருப்பது போன்றதொரு உணர்வைக் கொடுக்கும்.வீட்டில் இருக்கும் நேரங்களில் அவள் மிக கவனத்துடன் தான் இப்போது எல்லாம் இருப்பது.அதுவும் நிதியின் முன் தன் முகத்தில் எந்த வித உணர்ச்சிகளையும் காட்டமாட்டாள்.ராமிடம் மட்டுமே அவளின் பேச்சுகள் இருக்கும்.காதல் கைகூடிவிட்டது என்றதும் அவள் படிப்பை விடவில்லை முன்பைவிட இப்போது தான் இன்னும் சிரத்தை எடுத்து படிக்கிறாள்.அதற்கு ஆரியும் ஒரு முக்கிய காரணம்.படிப்பு வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்று அவளுக்கு எடுத்துரைத்து அவளை படிக்கும் படி தூண்டினான்.

ஆரிக்கு கன்யாவின் குடும்ப சூழல் சரியில்லை என்பது மட்டும் புரிந்திருந்தது.கன்யாவிடம் கேட்டு அவளை காயப்படுத்த அவன் விரும்பவில்லை அதனால் அவன் முடிந்தளவு அவளுக்கு நல்ல வழிக்காட்டியாகவும் இருக்க முடிவு செய்துவிட்டான்.அதை அவளின் படிப்பு விடயத்தில் இருந்தே ஆரம்பிக்க தொடங்கியிருந்தான்.முதலில் அலுத்துக் கொண்டவளை இழுத்துபிடித்து வைக்க அவன் தான் தலையால் தண்ணீர் குடித்தான் என்று கூற வேண்டும்.பின் ஒருவாரு அவளும் அவனின் சொல் பேச்சு கேட்டு படிக்க தொடங்கினாள்.

ஆரியின் படிப்பு முடிந்து அவன் கடைசியாக கல்லூரி வந்துவிட்டு செல்லும் போது கன்யாவின் முகத்தில் அத்தனை கலக்கம்.அதைக் கண்டு கொண்டவன் அவளிடம் தனியே கடற்கரையில் சந்திக்கும் நேரத்தில்,

“என்ன ஶ்ரீ காலையிலேந்து முகமெல்லாம் கலங்கி போய் இருக்கு????”என்று கேட்க,தன் கலங்கிய கண்களை மறைத்தவாரே,

“இல்லையே சீனியர்….நான்….நான் நல்லா தான் இருக்கேன்…..”என்று கூற,அவளை பற்றி தன்னை முகம் பார்க்கும் படி செய்தவன்,

“ஏய் என்ன பிரச்சனைனு கேட்டேன்….எனக்கு கேட்ட கேள்விக்கு பதில் வரனும்….உனக்கு தெரியும் தான….”என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

“ப்ச்….சீனியர்….வர வர உங்களுக்கு கோபம் ரொம்ப அதிகமா வருது….எப்ப பாரு என்னை இப்படி இழுத்து வைக்குறீங்க….”என்று அவள் குறைபட,அவளின் தலையில் கொட்டிய ஆரி,

“ஏய்….நான் எதுக்கு கோபப்படுறேன்னு புரிஞ்சிக்காம இப்படி சின்ன புள்ள தனமா பேசிக்கிட்டு இருக்க பாரு….உன்னை உன்னை….”என்று மேலும் இரண்டு கொட்டுகளை அவளுக்கு வழங்கினான்.

“ஆஆஆஆஆ….சீனியர்….வலிக்குது விடுங்க…..நானே நீங்க இனி காலேஜ்க்கு வரமாட்டீங்கனு வருத்ததுல இருக்கேன்…..”என்று கூறியவள்,

“அச்சோ உலறிட்டேனே…..உலறிட்டேனே….”என்று அவளே தன் தலையில் தட்டிக் கொள்ள பார்த்துக் கொண்டிருந்த ஆரிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“சிரிக்காதீங்க சீனியர்….கோபமா வருது….”என்று கூற அதற்கும் ஆரியின் முகத்தில் புன்னகை விரிந்தது.

“மண்டு….இதுக்கு யாராவது அழுவாங்களா….இதெல்லாம் வாழ்க்கையின் அடுத்த கட்டம்…படிப்பு முடிஞ்சா அடுத்தது வேலைக்கு போக வேண்டியது தான்….இதுக்கு எல்லாமா அழுவாங்க….”என்று ஆரி கேட்க,

“போங்க சீனியர்….”என்றவள் அமைதியாக கடலை வெறிக்க,

“ப்ச்….ஶ்ரீ….இதுக்கு தான் நான் இந்த காதல் இது எல்லாம் சரியாவராதுனு சொன்னேன்….”என்று கூற,அவனை திரும்பி முறைத்தவள்,

“சீனியர் சில விஷயங்கள் உணர்ச்சி பூர்வமானது….அது…ப்ச்….அது உங்களுக்கு புரியாது….விடுங்க….”என்று கூற ஆரிக்கு அவள் தன்னை பிரிவதில் முகத்தை தூக்கி வைத்துள்ளாள் என்று தான் நினைத்தான்.ஆனால் கன்யாவிற்கு இருக்கும் ஒரே துணை ஆரி மட்டும் தான் என்று அவனுக்கு தெரியாது அதை கன்யாவும் உணர்த்தவில்லை.

ஆரியின் படிப்பு முடிந்து அடுத்த ஒரு மாதத்திலேயே அவனுக்கு வெளிநாடு செல்லவதற்கான விசா வந்துவிட அவன் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது.இதற்கு இடையில் ஒரே ஒரு முறை மட்டுமே அவன் கன்யாவை தனியே சந்தித்தான் அதன் பின் அவளை சந்திக்க முடியவில்லை என்பதைவிட அவனுக்கு நேரம் இல்லை என்பது தான் நிஜம் நிற்க நேரம் இல்லை என்பது தான் உண்மை.

நாளை ஆரியநாதன் கிளம்பும் நாள் என்பதால் ஆரி கன்யாவை பார்க்க அழைத்தவன்,

“ஶ்ரீ….நான் நாளைக்கு ஊருக்கு போறேன்….நீ ஒழுங்கா இருக்கனும்…நல்லா படி….அப்புறம்….அப்புறம்….ஆங்…உன் விளையாட்டு தனத்தை கொஞ்சம் அடக்கி வச்சுக்க…..”என்று அறிவுறைகளாக வழங்க,

“அச்சோ….சீனியர் விட்டுங்க….என்னால முடியல….நான் ஒழுங்கா இருக்கேன்….நீங்க நல்லாபடியா போயிட்டு வாங்க….ஆல் தி பெஸ்ட்….”என்று கன்யா இம்முறை அழவெல்லாம் இல்லை தைரியமாகவே கூறினாள்.ஆரிக்கு அப்படி தான் தோன்றியது,ஆனால் அவள் தன் மனதில் அவனின் பிரிவை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டு தான் இருந்தாள் ஆனால் அதை அவனிடம் கூறவில்லை.வெளியூர்க்கு செல்பவனிடம் எதற்கு இதையெல்லாம் கூற வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாள்.

ஆரியநாதன் வெளிநாட்டிற்கு சென்று ஒரு வருடம் கடந்திருந்தது.கன்யாவும் படிப்பை முடித்துவிட்டு கேம்ப்ஸ் மூலம் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திருந்தாள்.ஶ்ரீநிதி அதற்கு பெரிய ஆர்ப்பாட்டமே செய்தாள் கன்யாவை வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று ஆனால் இந்த முறை இளங்கோவிற்கே பெரிய மகளின் பேச்சு பிடிக்கவில்லை,

“நிதி…..உனக்கு என்ன பிரச்சனை வந்தது கன்யா வேலைக்கு போகறதுனால….ஏன் இதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யுற….”என்று இளங்கோவும் பதிலுக்கு கத்திவிட,நிதியின் வன்மம் பன்மடங்கு பெருகியது.சிலர்க்கு அடுத்தவரின் வாழ்வு செழிப்புடன் இருப்பது பிடிக்காது அது அவர்களின் பிறவி குணம் அதை நாம் மாற்றவும் முடியாது அதே போல் தான் ஶ்ரீநிதி என்பவளும் அவளும் வாழமாட்டாள் பிறரையும் வாழவிடமாட்டாள்.

கன்யாவிற்கு ஆச்சிரியம் தான் தந்தை தனக்கு ஆதரவாக பேசுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.மனதில் முதன் முறையாக தந்தையின் மீது அவளுக்கு சற்று நல்ல அப்பிரியாம் வந்தது.ஆனால் அதற்கு காலம் மிக குறைவு என்பது அவளுக்கு தெரியாதே.இதோ கன்யா தனக்கு பிடித்த வேலையில் அமர்ந்தும் விட்டாள்.

மேலும் நான்கு மாதங்கள் கடந்திருந்தன ஆரி எப்போதும் அவனுக்கு தோதுபடும் நேரத்தில் தான் அவளுக்கு அழைப்பான்.அவனுக்கு படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்று அதில் தான் தன் முழு கவனத்தையும் வைத்திருந்தான்.ஒருபக்கம் படிப்பு மறுபக்கம் வேலை என்று அவனது வாழ்வும் பிஸியாக இருந்தது.ஆரி படிப்புடன் வேலையும் பார்பதால் அவனுக்கு நேரம் சரியாக இருக்கும்.

கன்யாவிற்கு வீடு என்றால் இப்போதெல்லாம் எரிச்சல் மண்டுகிறது அவளின் அன்பு தம்பியும் இப்போது பக்கத்தில் இல்லை என்பதும் சேர்ந்து கொண்டது.ராம் கல்லூரி படிப்பிற்கு கோவையில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க அங்கு விடுதியில் தங்கி படிக்கிறான்.கன்யாவின் ஒரே ஆறுதல் அவன் மட்டும் தான் அவனும் இல்லாதது மேலும் வெறுமையை உருவாக்கியது.

நிதியால் தினமும் பிரச்சனை தான் வீட்டில்.ராம் இருந்தவரை அவன் கன்யாவின் பக்கம் பேசுவான் அவனும் இல்லாதது நிதிக்கு நல்லதாக போக அவளின் ஆட்டம் தான் வீட்டில்.ஆனால் என்னவோ இப்போதெல்லாம் இளங்கோவனுக்கு நிதி ஏதாவது அழுது ஆர்பாட்டாம் பண்ணால் கோபம் வந்து கத்த தொடங்கினார்.அதனால் நிதி தந்தை வந்தால் அமைதியாகி விடுவாள்.இதுவீட்டின் தொடர் கதையாகி போக கன்யா தவித்து போனாள்.

கன்யாவிற்கு வேலை நேரம் விட்டு வீட்டிற்கு செல்வது என்றாலே ஏதோ போர்களத்திற்கு செல்வது போலவே இருக்க தினமும் வேலை முடிந்து கால் நடையாக ஊரை சுற்றி தான் வீட்டிற்கு செல்வாள்.அன்றும் அதே போல் அவள் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவளை உரசியபடி ஒரு கார் வந்து நிற்க பயந்துவிட்டாள்.

“ஆஆஆஆ….யாருடா அது….கண்ணு தெரியாது…..”என்று அவள் திட்ட,

“ம்ம்ம்…தெரியலையே ஶ்ரீ…..உன்னையே பார்த்துக்கிட்டே வந்தேனா….அதான் லைட்டா தட்டிடிச்சு….”என்றபடி காரில் இருந்து இறங்கினான் ஆரியநாதன்.

“சீனியர்…..”என்று அதிர்ந்து பார்த்தவள்,பார்த்துக் கொண்டே இருந்தாள்.அவன் எப்படி சென்றானோ அப்படி தான் இருந்தான்.ஆனால் கன்யாவின் கண்களுக்கு தான் அவன் மிக அழகாக இருப்பதாக தோன்றியது.அதாவது வெளிநாடு சென்றுவந்தாலே ஒருவித கலை தோன்றுமே அது தான் ஆரியின் முகத்திலும் இருந்தது.

“ஏய்….ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ…….”என்று ஆரியின் கத்தலில் நிகழ்வுக்கு வந்தவள்,தன் கையை ஒரு முறை கிள்ளி பார்த்தாள் சுள்ளென வலிக்க,

“ஆஆஆ….நிஜம் தான்….”என்று அவள் கூற,

“ஹா ஹா ஹா…..ஶ்ரீ….முடியலடி உன்னோட….வா….”என்று அழைக்க,

“நீங்க வரேன்னு என்கிட்ட சொல்லவே இல்லை…..போங்க….”என்று பிணக்கு கொண்டு முகத்தை திருப்ப,

“ப்ப்பா…..கோபம் வருதா….உனக்கு ஸர்பிரைசா இருக்கும்னு வந்து நின்னா…..கோபிக்குற நீ…..உதைபடுவ வா வந்து ஏறு….நேரம் இல்லை…..நாளைக்கே போகனும்….”என்று கூறிக் கொண்டே கன்யாவின் கையை பிடித்து காரில் ஏற்றியவாரே ஆரி கூற,

“என்ன நாளைக்கேவா…ஏன் உடனே போகனும்….”என்று கேட்டுக் கொண்டே கன்யா ஏறினாள்.

“ம்ம்…..இங்க தாத்தா எனக்கு எழுதி வச்ச நிலம் ஒண்ணு இருக்கு…..அதில் அப்பா இப்ப கடை கட்டலாம் நினைக்கிறாங்க…..அது சம்மந்தமா தான் நான் வந்தேன்…..வேலை முடிஞ்சிது…..அதான் நாளைக்கு நைட் கிளம்புறேன்….”என்று கூற கன்யாவிற்கு மனதில் கருமேகங்ள் சூழ்ந்த சிறிய மழைச்சாரல்.ஆம் ஆரி வந்திருக்கிறான் என்பது அவளுக்கு மழையை போல குளிர்விக்க ஆனால் அவன் உடனே செல்கிறேன் என்று கூறியது மனதில் மீண்டும் கருமேகம் சூழ்ந்து கொண்டது.

“ம்ம்…..என்ன மேடத்துக்கு உடனே ஊருக்கு போறேன்னு சொன்னவுடனே கோபம் போல…..”என்று அவளை சரியாக கனித்து கேட்க,

“இல்ல….அப்படி எல்லாம் இல்ல….”என்றவளின் பதிலே கூறியது அவளின் மனதை.

“ஶ்ரீ…..ஶ்ரீ….என்னை பாரு….”என்று குனிந்து இருந்த அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன்,அவளின் கலங்கியிருந்த கண்களை தொடைத்துவிட்டு,

“ஶ்ரீ….நான் இப்ப படிச்சிக்கிட்டு இருக்கேன்…உனக்கு தெரியும்ல….என் படிப்பு முடியுற வரை என்னால எதையும் யோசிக்கமுடியாது….நி என்னை புரிஞ்சிப்பல்ல….”என்று கேட்க,

“ப்ச்….சீனியர் கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன்….விடுங்க…சரி எங்க போறோம்…..”என்று கன்யா கேட்க,

“உனக்கு பிடிச்ச இடத்துக்கு…..”என்றவன் வண்டி ஓட்டுவதில் கவனத்தை வைத்தான்.இருவரும் சென்றது கடற்கரை தான்.கன்யாவிற்கு கடற்கரை மிகவும் பிடித்த இடம்.கடல் அலைகளிடம் விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்தவொன்று.இன்று தன்னவனை பார்த்த குஷியில் அவள் கடல் அலைகளில் விளையாடியபடி இருக்க ஆரியின் கண்கள் அவளை ரசித்த வண்ணம் இருந்தன.அவனிற்கு இன்றளவும் நம்ப முடியாதவொன்று தான் இந்த காதல்.இது எப்படி தனக்குள் அதுவும் கன்யா எப்படி என் மனதில் வந்தாள் என்று தனக்குள் கேட்டு பார்த்தவனுக்கு விடை தான் கிடைக்கவில்லை.

கடல் அலைகளில் துள்ளி விளையாடுபவளை பார்த்தவனுக்கு அவளை சீண்டும் எண்ணம் வர,

“ஶ்ரீ…..ஶ்ரீ…..”என்று அழைக்க அவளோ இன்னும் இரண்டு நிமிடம் என்று கைகளை காட்ட,

“போதும் வா…..”என்று கூற,

“ம்ப்ச்….ஏன் சீனியர் உடனே போகனுமா…..”என்று அவள் விளையாட்டு தடைப்பட்டத்தில் கேட்க,

“ம்ம்…அது சரி….எல்லாரும் லவ்ரோட வந்தா அவங்க இரண்டு பேரும் தான் விளையாடுவாங்க…..ஆனா இங்க எல்லாம் வேறையா இருக்கு….”என்று சலித்துக் கொள்ளவது போல ஆரி கூற,

“ம்ம்ம்….நாம என்ன அவங்க மாதிரியா லவ் பண்ணுறோம்….”என்று அவளும் இடக்காகவே கேட்க,

“அடியே என்னையவே மடக்குறியா இரு….உன்னை…..சரி நான் ஒருவேளை வெளிநாட்லே செட்டில் ஆகிட்டா….அங்கேயே மேரேஜ்???”என்று அவனாலே முடிக்க முடியவில்லை.ஆனால் கன்யா கலங்கவெல்லாம் இல்லை அவனின் கண்களை பார்த்துக் கொண்டிருந்தவள் முகத்தை திருப்பி,

“ம்ம்ம்….எனக்கு ஏற்பட்ட பல ஏமாற்றங்கள்ல இதுவும் ஒண்ணுனு நினைச்சிக்கிட்டு போவேன்…வேற என்ன செஞ்சிட முடியும் என்னால….”என்று கடலை வெறித்துக் கொண்டே அவள் கூற,கேட்டுக் கொண்டிருந்த ஆரிக்கு தான் மனதில் சுருக்கென்ற வலி பிறந்தது.இதை நாம் கேட்டிருக்கவே கூடாது என்று தாமதாமாக தான் அவன் உணர்ந்தான்.

“ஏய் நான் சும்மா…சாரிடா….சாரி….நான் தெரியாம கூட இப்படி பேசியிருக்கக் கூடாது….”என்ற ஆரிக்குமே கண்கள் கலங்கிவிட்டது.தன் கைகளால் அவள் முகத்தை ஏந்தியவன்,

“சாரி….சாரிடா கண்ணம்மா….ப்ளீஸ்….”என்று வேண்ட,

“விடுங்க சீனியர்…நான்….நான் வருத்தப்????”என்று அவள் கூறும் முன் அவளின் அதரங்களை தன் ஒற்றை விரலால் முடி செய்தவன்,

“எனக்கு தெரியும் உன் மனசு எவ்வளவு துடிச்சிருக்கும்னு….வேண்டாம்….ப்ச்….உன்னை பார்க்க ஆசையா வந்தேன்….இப்ப நானே இப்படி உன்னை கஷ்டபடுத்திட்டேன்….மன்னிச்சுடுடா…..”என்று கூற,கன்யாவிற்கு ஆரியின் இந்த கலங்கிய முகம் மனதில் ஒருவித வலியுடன் கூடிய இன்பத்தை கொடுத்தது.இதோ இந்த கண்ணீர் எனக்காக எனக்கே எனக்கா மட்டும். தனக்காக உருகும் ஒரு உள்ளத்தைக் கண்டு கன்யாவின் கண்களும் பனிந்து தான் போயின.இந்த இருமனங்களின் சங்கமம் இருவர் கண்களில் விருந்தாக விழுந்தது.ஒன்று யோசனையுடன் படிந்தது என்றால் இன்னொன்று வன்மத்துடன் படிந்தது.

Advertisement