Advertisement

மன்னிப்பாயா…..12 (2)

ஆரி தனது அறையில் நடை பயின்று கொண்டிருந்தான் மனதில் கன்யா ஏற்படுத்திய சலனமே அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது.

ஆரிக்கு காதல் என்பதில் எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை தான்.ஆனால் அதில் கன்யா என்று வரும் போது மனம் இலகியது என்னவோ மறுக்க முடியாத உண்மை.எப்படியும் திருமணம் என்ற ஒன்று நடக்க போகிறது அது கன்யாவுடன் இருந்தால் நல்லது தான் என்னை புரிந்து கொள்ளவாள் என்று ஆரி மனதில் நினைத்தான்.இந்த நினைப்பு வந்தவுடன் தான் ஆரிக்கு மூச்சே சீரானது போல் ஆனது.

“ஓகே….ஶ்ரீ உனக்கு நல்ல தோழி மட்டும் கிடையாது நல்ல மனைவியாகவும் இருப்பா….எனக்கு நம்பிக்கை இருக்கு….ஆனா அவகிட்ட சில விஷயங்களை நாளைக்கே பேசிடனும் அப்ப தான் சரிவரும்…”என்று தன் மனதிற்குள் முடிவு எடுத்தவுடன் தான் தூக்கமே வந்தது.

ஆனால் கன்யாவோ மனதில் உள்ள பாரத்தை இறக்கியதாலோ என்னவோ மனது சாந்தி அடைந்துவிட்டது.அவளுக்கு ஆரி நாளை என்ன பதில் கூறுவான் என்ற எண்ணமெல்லாம் இல்லை எப்படியும் இல்லை இது சரிவராது என்ற பதில் தான் வரப்போகிறது என்று தவறாக கணித்துவிட்டு நிம்மதியாக உறங்கினாள்.

அடுத்தநாள் கல்லூரி முடிந்து வரும் போது தான் கன்யா ஆரியைக் கண்டது.அவன் காலையிலேயே மாலை சந்திக்கலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டான்.கல்லூரி முடிந்து வெளியில் வந்தவளிடம்,

“வா…பேசனும்….”என்று கூறிக் நேற்று சென்ற இடத்திற்கே சென்றனர்.அங்கு சென்றவுடன் கன்யா,

“சீனியர்…சீக்கிரம் சொல்லுங்க….நான் வீட்டுக்கு போகனும்….என் தம்பிக் கூட நான் இன்னைக்கு சினிமாக்கு போறேன்….”என்று கூற,

“ஏய் நான் நைட் முழுசும் உன்னால தூங்காம இருந்து உன்னை பார்க்க வந்தா….நீ ஜாலியா சினிமாக்கு போறேன்னு சொல்லுற….”என்று ஆரி அவளிடம் செல்லமாக சண்டையிட,அவனை முறைத்த கனி,

“சரி சொல்லுங்க….என்ன பேசனும்…”என்று கேட்க,

“ஓய் உனக்கு ஏதுவும் நியாபகம் இல்லையா….இல்லை என்கிட்ட விளையாடுறீயா….”என்று ஆரி கேட்க,

“ஆங்….அதெல்லாம் இருக்கு….ஆனா எனக்கு தான் உங்க பதில் என்னனு தெரியுமே….”என்று கன்யா சிரித்துக் கொண்டே கூற,

“அப்படியா நான் என்ன சொல்லவேன்னு நினைக்கிற சொல்லு….”

“ம்ம்…அப்படி கேளுங்க….இங்க பாரு கன்யா எனக்கு இந்த காதல் எல்லாம் செட்டாகாது….அதனால இதோட இதெல்லாம் விட்டலாம்….”என்று கூறியவள் மேலும் ஆரியிடம்,

“சீனியர் எனக்கு உங்களை பத்தி தெரியும் இருந்தும் என்னால இயல்பா உங்க கூட இருக்க முடியலை அதனால தான் என் மனசுல உள்ளதை சொன்னேன்….இப்ப கொஞ்சம் தெளிஞ்சிட்டேன்…..ப்ச் விடுங்க….இனி நாம இப்படி பேச முடியாதா அது தான் மனசு கஷ்டமா இருக்கு….”என்று கூறி முடிக்க ஆரியோ கையை தன் கன்னத்தில் தாங்கிய படி கதை கேட்டுக் கொண்டிருந்தான்.

“சீனியர்…என்னதிது நான் எவ்வளவு உருக்கமா சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடானா கதை கேட்குற மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க…..”என்று கன்யா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

“ஆமா….நீ கதை தான் சொன்ன…..”என்று கூற,

“எதே நான் கதை சொன்னேனா….உங்களை….உங்களை…”என்று கூறிக் கொண்டே சுற்றி முற்றும் பார்க்க,

“இரு….இரு அவசரப்படாத நான் இன்னும் முழுசா சொல்லலை அத கேட்டுட்டு என்னை அடி…நீ சொன்னியே ஒரு கதை அது சுத்தமா நல்லா இல்லை…ஸோ போரிங் ஸ்டோரி….”என்று நக்கல் வேறு செய்ய,கொதித்தெழுந்த கன்யா,

“போங்க…போங்க….நான் கிளம்புறேன்….என் தம்பி வெயிட் பண்ணுவான்….”என்று கோபமாக எழுந்து செல்ல ஆயுத்தமாக,அவளது கையை பிடித்து இழுத்த ஆரி,

“சரி இப்ப நான் சொல்லுறத கேளு…எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு….”என்று கூற,கன்யா விழிகளை விரித்து,

“என்ன சொன்னீங்க….”என்று மிக மென்மையாக கேட்க,அவளை மேலும் தன்னை நோக்கி இழுத்து தன் மேல் மோதி இருப்பதை போல் வைத்து அவளின் மூக்கின் மீது தன் மூக்கை உரசி,

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு….”என்று அழுத்தம் திருத்தமாக கூறினான்.கன்யா இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை,மனது படபடவென அடித்து கொண்டது.ஆரியின் மீது கன்யா சாய்ந்த நிலையில் இருப்பது கூட அவளுக்கு தெரியவில்லை.

ஏதோ சத்தில் சுயத்திற்கு வந்தவளுக்கு அப்போது தான் இருக்கும் நிலை உணர்ந்து வேகமாக விலகினாள்.ஆரிக்கும் அப்போது தான் தங்கள் இருவரின் நிலை புரிந்து அவனும் தன் கேசத்தை அழுந்த கோதி தன் மனதில் எழுந்த புதுவித உணர்வை ரசித்தான்.சிறிது நேரம் இருவருக்குள்ளும் மௌனம் மட்டுமே நிலவியது.

“சீனியர் நீங்க….நீங்க…”என்று அவள் பேசமுடியாமல் தவிக்க,அவளின் தோள்களை பிடித்து அழுத்த  மனதின் பாரமோ இல்லை அளவு கடந்த மகிழ்ச்சியின் பாரமோ ஏதோவொன்று அவளின் மனதை அழுத்த தானாகவே அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“என்னடாமா….ஏன் இப்படி எமோஷன் ஆகுற….உன்னை எப்படி எனக்கு பிடிக்காம போகும் நீ நினைச்ச….நீ எனக்கு எப்பவுமே ஸ்பெஷல் தான்….உன்னை எப்படி நான் வேண்டாம்னு சொல்லுவேன்…எப்படியா இருந்தாலும் லைப்ல கல்யாணம் இதெல்லாம் எனக்கு நடக்கதான் போகுது….அது இப்ப உன்கூட….ம்ம் பீல் ஹாப்பி…உன்கூட லைப் ஷர் பண்ணா…நல்லா இருக்கும்னு தோணுது….”என்று அவன் நீண்ட விளக்கம் தர ஏற்கனவே அவனிடம் உருகிய மனது இப்போது முழுவதுமாக சரணடைந்துவிட்டது.

“ஏய் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்…நீ அதுக்கு எல்லாம் ஒத்துக்கனும் இல்ல ஒத்துக்கிட்டு தான் ஆகனும்…”என்று உரிமையுடன் ஆரி சொல்ல,கன்யாவின் தலை தானாக ஆடியது.அவளின் விழிகள் மட்டுமே பேசியது வார்த்தைகள் வரவில்லை.அதை ரசித்தவன் அவளின் கலங்கிய கண்களை துடைத்தவிட்டு.

தனது மேற்படிப்பை பற்றி விளக்கியவன். அதுவரை காத்திருக்க வேண்டும் என்று கூறி,மேலும் சில அறிவுரைகளை வழங்க கன்யாவோ,

“அச்சோ சீனியர்….நான் உங்க பக்கம் கூட வரமாட்டேன்….நீங்க போங்க….”என்று கோபம் போல கூற ஆரி முகத்தில் மென்னகை,

“ஏய்….இந்த காதல் வந்தவுடனே மத்தவங்க மாதிரி நாம இப்படி அடிக்கடி சந்திக்கிறது,போன்ல மணிக்கனகாக பேசுறது….எல்லாம் எனக்கு செட் ஆகாது….அதனால தான் முன்னாடியே உன்கிட்ட சொல்லிடுறேன்…..நீ என்னடானா கோச்சுக்குற…..”என்று கூற,

“உங்களை பத்தி எனக்கு தெரியாது….நான் இதெல்லாம் எதிர்பார்க்கல சீனியர்….ப்ரீயா விடுங்க….”என்று கன்யா இயல்பாக கூற ஆரியின் முகமும்,அகமும் மலர்ந்தது.இது தானே அவன் எதிர்பார்த்த ஒன்று தன்னை புரிந்து கொள்ளும் ஒருவள் இதைவிட என்ன வேண்டும் எனக்கு என்று மனதில் பூரித்து தான் போனான்.இவர்களின் காதல் பூத்து மொட்டுவிட்டு மலரும் முன்பே ஶ்ரீநிதியால் கட்டாய திருமண பந்ததில் தள்ளப்பட்டனர் இருவரும்.

Advertisement