Advertisement

மன்னிப்பாயா….11

கன்யா மரத்தடியில் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க.அப்போது பக்கத்தில் ஆரியின் குரல் கேட்கவும் அதிர்ந்து,

“சீனியர் நீங்களா….நான் பயந்துட்டேன்….தெரியுமா….”என்று தன் நெஞ்சில் கை வைத்து கூற,அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவளின் அருகில் வெகு இயல்பாக அமர,கன்யாவோ ஆச்சரியமாக அவனை பார்த்துவிட்டு சுற்றத்தை பார்த்தாள்.ஒருசில பெண்கள் இவர்களை பார்த்து ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டு சென்றனர்.

“அச்சோ…சீனியர்…நீங்க என்கூட இப்படி பேசுறது பார்த்து ஏதோ பேசிட்டு போறாங்க….”என்று சிரித்துக் கொண்டே கூற,அவளை கூர்மையாக பார்த்த ஆரி,

“ஏன் உனக்கு ஏதாவது பிரச்சனையா….”என்று கேட்க,

“எனக்கா எனக்கு என்ன பிரச்சனை வர போகுது….உங்களுக்கு தான் பிரச்சனை…உங்க விசிறிங்க எல்லாம் உங்க மேல கோபமாக போறாங்க போங்க…”என்று கிண்டல் பண்ண,

“என்ன என்னோட விசிறிங்களா….யாரது….”என்று ஆரி புரியாமல் கேட்க,

“என்ன சீனியர் நீங்க உங்களுக்கு தெரியாது….சும்மா சொல்லாதீங்க…அன்னைக்கு தான் ஆடிடோரியத்துல பார்த்தேனே….உங்க டான்ஸை பார்க்க எவ்வளவு பொண்ணுங்க கூட்டம்…அவங்க எல்லாம் உங்க விசிறிங்க தான….”என்று கன்யா கேட்க,மென்மையாக புன்னகை புரிந்தவன் அவளிடம் திரும்பி,

“உனக்கு ஒண்ணு தெரியுமா ஶ்ரீ….எனக்கு விசிறிங்கனு யாரும் இல்லை…உன்னை தவிர….நீ தான் முதல் தடவை என்னோட டான்ஸ் நல்லா இருக்குனு சொன்ன தெரியுமா….”என்று புன்னகை முகமாக கூற,

“என்ன நான் தான் உங்க முதல் விசிறியா…நிஜமாவா சொல்லுறீங்க….”என்று கண்கள் விரிய கன்யா கேட்க ஆம் என்று தலையாட்டினான் ஆரி.

“வாவ்….சூப்பர்…அப்ப உங்க முதல் விசிறிக்கு ஏதாவது டிரிட் வைங்க….”என்று ஏதோ ஒரு நினைவில் கன்யா கேட்டுவிட,ஆரியின் முகம் நொடி பொழுது மாறியது.அதை கவனித்த கன்யா அப்போது தான் பேசியது நினைத்து,

“அச்சோ…சாரி சீனியர்…நான் ஏதோ என்னோட பிரண்ட்ஸ்கிட்ட கேக்குற மாதிரி உங்ககிட்டேயும் பழக்க தோஷத்தில கேட்டுட்டேன் சாரி….வெரி சாரி….”என்று கேட்க,ஆரியோ சிரித்துக் கொண்டே,

“இப்ப எதுக்கு இத்தனை சாரி….நான் எதுவும் சொல்லலையே….”என்று கூற,

“இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி முறைச்சீங்க…”என்று கன்யா கேள்வி கேட்க,

“ம்ம்ம்….என் பார்வையே அப்படி தான் இருக்கும்….அதைவிடு…என்னோட முதல் ரசிகைக்கு என்ன வேணும் பிரியாணியா….”என்று கேட்க,

“செம போங்க….எப்படி கரட்டா கண்டுபிடிச்சீங்க….”என்று கேட்க,

“நேத்து தான பீல் பண்ணிக்கிட்டு இருந்த….அதனால என்கிட்ட கேட்டுட்ட போல….சரி வா…வாங்கி தரேன்….”என்று எழ,கன்யாவிற்கு இப்போது உண்மையாக ஆச்சரியமாக இருந்தது.

“என்ன நிஜமாவே எனக்கு டிரிட் கொடுக்குறீங்களா….”அவள் அதைக் கேட்டும்விட,

“ஆமா வா….வாங்கி தரேன்……”என்று ஆரி எழுந்து முன்னே நடக்க தொடங்க,

“அச்சோ சீனியர்….நான் சும்மா உங்கிட்ட விளையாட்டுக்கு தான் கேட்டேன்….அதெல்லாம் வேண்டாம்….”என்று கன்யா மறுக்க,அவளை பொறுமையாக திரும்பி பார்த்த ஆரி,

“என்னை உன்னோட பிரண்டா நினைச்சா வா….”என்று கூறிவிட்டு செல்ல அதன் பிறகு கன்யா எதுவும் பேசவில்லை அவனுடன் அமைதியாக சென்றாள்.இருவரும் உணவகத்திற்கு வந்து உண்டு கொண்டே நிறைய பேசினர்.ஆரிக்கு மனதிற்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றை பேசுபவர்களிடம் இருந்து கன்யா முழுவதும் வேறாக தெரிந்தாள்.அதனால் அவளிடம் பேசுவதில் மேலும் சுவாரஸியம் பிறந்தது.

கன்யாவுடன் ஆரி பேசியது கல்லூரி முழுவதும் பரவி பெரிய விவாத மேடையே நடந்தது.சில பெண்கள் ஆரிக்கு டேஸ்டே இல்லப்பா…போயும் போயும் இவளை தேர்ந்தெடுத்திருக்கான்….என்று கன்யாவின் காது படவே பேசினர்.ஆனால் அதெல்லாம் கண்டு கொள்ளுபவளா அவள் அதையெல்லாம் தூசு போல தட்டிவிட்டு சென்றாள்.அவளின் தோழிகளும் அவளை கிண்டல் செய்ய அவர்களிடமும் அதே போல் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டாள்.மனதில் கள்ளம் இல்லாத வரை அடுத்தவர்கள் என்ன பேசினாலும் மனதிலும்,மூளையிலும் ஏறாது.கன்யாவை பொறுத்தவரை ஆரி அவளுக்கு நல்ல நண்பன் அவ்வளவே.

ஆரியநாதனுக்கு கன்யாவுடன் செலவிடும் நேரங்கள் எல்லாம் இனிமையான பொழுதுகள் என்று தான் கூற வேண்டும்.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நட்பு கிடைப்பது என்பது அரிது அல்லவா.அதனால் கன்யா அவனிற்கு எப்போதும் முதல் நிலை தான்.கல்லூரியில் அவர்களை பற்றிய பேச்சுகளை அவனும் கேட்டான் தான்.மனதிற்குள் கன்யா இதனால் ஏதாவது வருத்தம் அடைவாளோ என்று தான் பயந்தான்.அதை அவளிடம் கேட்கவும் செய்தான்.

“ஶ்ரீ….உன்கிட்ட ஒண்ணு கேட்கனும்….”என்று ஆரி தயக்கத்துடன் கேட்க,

“சொல்லுங்க சீனியர்….”என்று இருவருக்குமான சண்ட்வெஜை பிரித்து ஒன்றை ஆரியின் கையில் கொடுத்துவிட்டு ஒன்றை அவளுக்கு என்று எடுத்துக் கொண்டாள்.கன்யாவிற்கு பிரியாணி பிடிக்கும் என்றால் ஆரிக்கு வெஜ்ஜிடபில் சண்ட்வெஜ் என்றால் மிகவும் பிடிக்கும் என்று அவன் கூறியிருக்க எப்போதெல்லாம் ஆரி பசிக்கிறது என்று கூறுகிறானோ அவனுக்கு வாங்கி வந்துவிடுவாள்.அவள் தந்த சண்ட்வெஜை வாங்கி கொண்டவன் அவளை தான் இமைக்காது பார்த்தான்.

சிவப்பு நிற காட்டன் சுடிதார்,முகத்தில் எந்தவித ஒப்பனையும் இல்லை,ஆனாலும் அழகு.அதைவிட அவள் குண்டு கண்களை உருட்டி பேசினால் நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும்.பல சந்தர்ப்பங்களில் கன்யா ஆரியை கவர்ந்திருக்கிறாள் ஆனால் அதை அவனது மனது உணரவில்லை.ஆரியிடம் இருந்து பதிலேதும் வராமல் அமர்ந்திருக்க கன்யா அவனின் கைகளை கிள்ளவிட,

“ஆஆஆஆ…..ஏய் எதுக்கு இப்படி கிள்ளுன….”என்று கையை தேய்த்துக் கொண்டே கேட்க,

“பின்ன என்ன சீனியர் எத்தனை தடவை உங்களை கூப்பிடுறது…நீங்க என்னனா எங்கையோ பராக்கு பார்த்துகிட்டு இருக்கீங்க….”என்று கன்யா கூற,ஆரிக்கு அப்பொது தான் செய்த காரியம் புரிய தன்னையே நொந்து கொண்டான்.

“ச்ச…ஆரி என்னதிது….அவ உன் பிரண்ட்….”என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

“ஏதோ சொல்லனும்னு சொன்னீங்க….என்ன???”என்று கன்யா கேட்க,

“ம்ம்ம்….அது…நம்ம காலேஜ்ல…நம்ம ரெண்டு பேரையும்….”என்று ஆரி கூற முடியாமல் அவளது முகத்தை பார்த்தான் அதில் ஏதாவது மாறுதல்கள் தெரிகிறதா என்று.ஆனால் அவளோ ஏதோ கதை கேட்பதை போல் அமர்ந்திருக்க,

“ஓய்….நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்….அவங்க கண்டதையும் பேசுறாங்க….நீ எதையும் பெரிசா எடுத்துக்காத உனக்கு புரியுதா…”என்று ஆரி கூற,

“அவங்களுக்கு வேற வேலையில்லை சீனியர் விடுங்க….இந்த கடையில் போடுற சண்ட்வெஜ் மட்டும் எப்படி இவ்வளவு டேஸ்டா இருக்கு சீனியர்….”என்று அவள் முக்கியமான கேள்வியை கேட்க,அவளின் பதிலில் அதிர்ந்த ஆரி,

“ஏய்….ஶ்ரீ….சான்சே இல்லை போ….உன்கிட்ட போய் கேட்டேன் பாரு….”என்று ஆரி அடக்கமாட்டாமல் சிரித்தேவிட்டான்.மனது மிகவும் லேசான உணர்வு.

“சீ….சீனியர் சிரிக்காதீங்க….”என்று அவள் கோபம் போல கூற,ஆரிக்கு மேலும் சிரிப்பு பொங்கியது அவளின் முழி உருட்டலில்.

“போங்க…நான் கோபமா போறேன்….நீங்க சிரிங்க….”என்றுவிட்டு அவள் நடக்க அவளின் கைகளை பிடித்த ஆரி,

“ஏய் கோச்சிக்காத…சும்மா….ஆனா நீ இருக்கியே….போ….ஒரிஜினல் பீசு போ…”என்று சிரித்துக் கொண்டே கூற,கன்யா முறைக்க முயன்று தோற்றாள்.இருவரின் நட்பும் அழகாக கடந்து கொண்டிருந்தது.கன்யாவின் மனதில் ஆரியின் மீது காதல் விதை விழாத வரை.

கன்யா மூன்றாம் ஆண்டில் இருக்க,ஆரியோ இறுதி ஆண்டில் இருந்தான்.ஆரிக்கு இறிதி ஆண்டு என்பதால் வேலைகள் அதிகமாக இருந்தன.அத்தோடு அவன் மேல் படிப்பிற்காக வேறு வெளிநாட்டில் முயற்சி செய்து கொண்டிருந்தான்.எவ்வளவு வேலைகள் இருந்தாலும் கன்யாவிடம் செலவிடும் நேரங்களை விடாமாட்டான் ஆரி.

அன்றும் காலை அதே போல் அவன் கன்யாவிற்காக காத்துக் கொண்டிருக்க,கன்யா எப்போதும் போல் வந்தாள்.ஆனால் நடையில் துள்ளல் இல்லை முகத்தில் தெளிவில்லை அழுதிருப்பாள் போலும் முகம் சற்று வீங்கியிருந்தது.அவள் மனதில் ஏதோ யோசித்துக் கொண்டு ஆரியை கடந்து செல்ல,

“ஶ்ரீ…”என்று உரக்க அழைத்திருந்தான் ஆரி.அவனின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவள் திரும்பி பார்க்க,அங்கு இவர்கள் எப்போதும் அமர்ந்து பேசும் மரத்தடியில் ஆரி அமர்ந்திருந்தான்.இந்த நேரத்தில் அவனைக் கண்டவளுக்கு சற்று அதிர்ச்சி தான் இருந்தும் தன்னை மீட்டுக் கொண்டு அவனை நெருங்கினாள்.

“ஹாய் சீனியர்…என்ன இன்னைக்கு நீங்க சீக்கிரம் வந்துட்டீங்க….”என்று கேட்டாள்.அவள் தான் எப்போதும் முதலில் வந்து அவனிற்காக அமர்ந்திருப்பாள்.

“அது இருக்கட்டும் என்ன ஆச்சு….ஏன் அழுதுறுக்க….எனி பிராபிளம்….”என்று ஆரி கூர்மையாக அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே கேட்க கன்யாவிற்கு ஒருநிமிடம் திக் என்று இருந்தது.தன் மனக்காயம் தன்னுடன் போகட்டும் என்று நினைத்தவள்,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல சீனியர்…”என்று மழுப்பலாக பதில் தர,

“ஓகே சொல்ல இஷ்டம் இல்லனா விடு ஶ்ரீ….அதுக்காக பொய் சொல்லாத….எனக்கு பிடிக்காது உனக்கு தெரியுமில்ல…”என்று சற்று காரமாகவே கூறினான் ஆரி.

ஆரி எதையும் கனியிடம் மறைக்க மாட்டான் அவளிடம் பகிர்ந்து சில சமயங்களில் அவள் கூறுவதைக் கூட பொறுமையாக கேட்டு அதன்படி கூட செய்திருக்கிறான்.அதே போல் அவளும் தன்னிடம் இருப்பாள் என்ற நம்பிக்கையில் தான் கேட்டது ஆனால் அவள் பொய்யுரைக்க அவனுக்கு உரிமை கோபம் வந்துவிட்டது.அதாவது என்னிடமே நீ மறைப்பாயா எனக்கு நீ முதன்மையாக இருப்பது போல உனக்கு நான் இல்லையா உனக்கு என்று மனதிற்குள் சிறிய உரிமை போராட்டம்.

“அச்சோ ஏன் இப்படி கோச்சுக்கிறீங்க சீனியர்…என் கஷ்டம் என்னோடு போகட்டும்னு தான் உங்ககிட்ட சொல்லல…”என்று கன்யா தன் மனதை மறையாது கூற,

“உனக்கு ஒரு கஷ்டம்னா நீ முதல்ல என்கிட்ட தான் சொல்லனும்…சொல்லு என்ன பிரச்சனை…அதுவும் நீ அழுவுற அளவுக்கு என்ன நடந்துச்சு….”என்று கோபமாகவே கேட்க,முதன் முறை ஆரியின் இந்த அக்கறையான பேச்சில் கன்யாவின் மனதில் சிறிது சலனம் தோன்றியது.

எப்போதும் அவள் விஷயத்தில் ஆரி அக்கறையாக தான் இருப்பான் ஆனால் இன்று யாருமில்லாமல் இருப்பது போன்று சற்று முன்னே வரை தோன்றிக் கொண்டிருந்தது அந்த உணர்வை அவனது இந்த கனிவான பேச்சு மாற்றியிருந்தது.தன்னிடம் அவன் காட்டும் பரிவு மிகவும் பிடித்திருந்தது இது காலம் முழுவதும் என்கூடவே வராதா என்ற ஏக்கம் பிறந்தது.

“ஏய் கனி…ஏய் கனி….”என்று ஆரி உரக்க அழைக்க,

“ஆங்…சொல்லுங்க சீனியர்….”என்று கன்யா கேட்க,

“என்ன ம்மா என்ன பிரச்சனை யாராவது ஏதாவது வம்பு பண்ணுறாங்களா…”என்று சற்று பயந்து தான் போனான் ஆரி.கன்யா கண்கள் எல்லாம் கலங்கி இல்லை என்பது போல தலையை ஆட்டினாள்.திடீர் என்று அழவும் பதட்டமான ஆரி,

“ஏய் ஏன் அழற…என்னாச்சு…சொல்லுமா…என்ன…”

“ஒ….ஒண்ணுமில்ல சீனியர்….கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுடேன்…அவ்வளவு தான்….”என்றவளின் கைகளை பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு,

“என்மேல நம்பிக்கை இருந்தா சொல்லு…”என்று அவன் கூறி முடிக்கும் முன் அவனின் வாயை தன் விரல்கள் கொண்டு மூடியவள்,

“சீனியர் என்ன வார்த்தை பேசுறீங்க நீங்க….எனக்கு இன்னும் அழுகை வரவைக்கிறீங்க…நீங்க….”என்று கன்யா மேலும் வெதும்பினாள்.அவளை சற்று நேரம் அழவிட்டவன் பின்,

“அழுதிட்டியா….இப்ப ஓகேவா….”என்று கேட்க,அவள் ஆம் என்று தலையாட்டியவுடன்,

“இப்ப சொல்லு…”

“என்ன சொல்ல எல்லாம் எங்க வீட்டுல ஒரு குரங்கு இருக்கு அது பண்ணுற வேலை தான்….”என்று கன்யாவின் முகத்தில் மித மிஞ்சிய வேதனையின் சாயல்.அதைக் கண்ட ஆரிக்கு மனது என்னவோ போல் ஆனது.

“என்னடா ம்மா….என்கிட்ட சொல்லு…”என்று ஆதரவாக கேட்க,

“எங்க அக்கா…அவளுக்கு என்னை அவ்வளவா பிடிக்காது….அதனால இப்ப எனக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்துட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கனு நிக்குறா….அதுக்கு எங்க வீட்டு ஆளுங்களும்…தலையாட்டுறாங்க…அதான் கடுப்பா இருக்கு….”என்று கூற ஆரிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன உங்க அக்காவுக்கு உன்னை பிடிக்காதா….என்ன சொல்லுற நீ…அதை விடு நீ இன்னும் படிச்சு கூட முடிக்கல அதுக்குள்ள எதுக்கு கல்யாணம்….என்னதிது ரப்பிஷா இருக்கு….உங்க அப்பா அவருமா ஒண்ணுமே சொல்லல…”என்று கேட்டான்.

கன்யா ஆரியிடம் தன் வீட்டை பற்றி அதிகமாக பேசமாட்டாள்.ஆரியுடன் அவள் செலவிடும் நிமிடங்கள் மிகவும் பொக்கீஷமானவை அதனால் அதில் தன் குடும்பத்தை பற்றிக் கூறி தன் மனதை மேலும் காயப்படுத்திக் கொள்ள விரும்பமாட்டாள்.

ஆரி கூறியதைக் கேட்டவளுக்கு சிரிப்பு தான் வந்தது கூடவே ஒருவித ஏக்கமும் இந்த அன்பு தனக்கு நிலைக்காதே என்று மனதில் மேலும் பாரம் ஏறி அமர்ந்து கொண்டது.

“ப்ச் ஶ்ரீ….நீ இதுக்கு எல்லாம் பீல் பண்ணாத….நான் வேணா உங்க வீட்டுல பேசட்டுமா….”என்று கேட்க,கன்யா ஆரியை ஒருமுறை ஆழ்ந்து பார்த்துவிட்டு,

“வேணாம் சீனியர் நான் பார்த்துக்குறேன்…”என்று கூற,

“என்ன பார்த்துக்குற…இதோ இப்ப இப்படி அழுதுகிட்டு வர….”என்று ஆரி ஆறமாட்டாமல் கேட்க,விரக்கத்தியாக சிரித்தவள்,

“ம்ம்…அழக்கூடாதுனு தான் நானும் நினைக்குறேன் ஆனா…ப்ச் விடுங்க சீனயர் எனக்கு இதெல்லாம் பழகிடுச்சு…”என்று கூற ஆரியின் முகத்தில் மிதமிஞ்சிய வேதனையின் சாயல் ஏதோ மனதிற்குள் போட்டு மருகுகிறாள் என்னிடம் கூறவும் அவளுக்கு விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்டான்.

“இங்க பாரு ஶ்ரீ…ஒண்ணை மட்டும் நியாபகம் வச்சுக்க….நான் உனக்கு எப்போதும் இருப்பேன்…ஓகே….”என்று கூற,கன்யா மெலிதாக புன்னகைத்து தலையாட்டினாள்.

“ஏய் என்ன நான் சும்மா சொல்லுறேன்னு நினைக்கிறியா….நீ எனக்கு எப்பவுமே ஸ்பெஷல் தான் ஶ்ரீ…”என்று ஆத்மார்த்தமாக உரைத்தான்.

“நிஜமாவா சீனியர்….நான் உங்களுக்கு ஸ்பெஷலா…”என்று கன்யா கரகரப்பாக தொண்டை அடைக்க கேட்க,

“ஆமா….எனக்கு எப்போதும் நீ ஸ்பெஷல் தான்….புரியுதா…உனக்கு நான் எப்போதும் இருப்பேன்….”என்று அவள் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருந்தான் ஆரியநாதன்.

“ம்ம்ம்….”என்று அவள் தலையாட்ட,அவளின் ஆடிய தலையை பிடித்து ஆட்டிவிட்டு,

“சரி வா…”என்று அழைக்க,

“எங்க சீனியர்…”

“ப்ச்…வா…நீ சாப்பிட்டது போல தெரியலை வா….சாப்பிடு…”என்று அவளை கல்லூரி கேண்டீனிற்கு அழைத்து சென்றான்.

தனக்காக யாரும் இருக்கமாட்டார்களா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருந்த கன்யாவிற்கு ஆரியின் இந்த புரிதலான பேச்சு மனதை குளிர செய்தது.காதலின் முதல் படி புரிதல் தான்.தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருந்த கன்யாவின் மனதில் ஆரி கல்லை எறிந்திருந்தான்.இதனால் ஏற்படும் சலன அலைகளில் கன்யா தத்தளித்து தான் கரையேறுவாள்.

Advertisement