Advertisement

மன்னிப்பாயா….10

இரவு சற்று நேரமே வந்திருந்தார் இளங்கோ அவருடனே அன்று பிரசாத்தும் வந்துவிட அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர்.எப்போதும் கன்யாவும்,ராமும் நிதி வீட்டிற்கு செல்லும் வரை ரூமை விட்டு வெளியில் வரமாட்டார்கள்.இளங்கோ எப்போதும் இரவு தாமதமாக தான் வருவார் அதனால் அவருக்கு இதெல்லாம் தெரியாது.இரவு உணவிற்கு தேவையானவற்றை அன்பு எடுத்து வைத்துக் கொண்டிருக்க,

“அன்பு….எங்க கனியும்,ராமும் காணும்….அவங்க சாப்பிட்டாங்களா….”என்று விசாரிக்க,இன்று தங்கையை எதில் மாட்டிவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நிதிக்கு இது நல்ல வாய்ப்பாகி போனது.

“அவ நாங்க போனதுக்கு அப்புறம் தான் வருவாப்பா….அவ கூட அந்த தம்பி பயலும் கூட்டு….”என்று நிதி தந்தைக்கு எடுத்துக் கொடுக்க,அன்புக்கு பயம் பிடித்துக் கொண்டது.அவர்,

“இல்லங்க அவளுக்கு கொஞ்சம் தலைவலினு சொன்னா அதான் படுத்திருப்பா….நீங்க சாப்பிடுங்க….நான் அப்புறமா அவளுக்கும்,ராமுக்கும் சாப்பாடு கொடுத்துக்குறேன்….”என்று கூற அவரை முறைத்த இளங்கோ அமைதியாக சாப்பாட்டில் கை வைக்க போக,நிதிக்கு புஸ் என்று ஆனது.அவளுக்கு இன்று எப்படியாவது கன்யாவை திட்டு வாங்க வைக்க வேண்டும் எப்படி எப்படி என்று யோசனை செய்தவள் தன் கணவனை பார்க்க அவனோ தனக்கு சாப்பாடு தான் முக்கியம் என்ற நிலையில் சாப்பாட்டுக் கொண்டிருந்தான்.

“ஆங்…ப்பா….இன்னும் உங்க கிட்ட சொல்லனும் ப்பா….”என்று நிதி ஆரம்பிக்க,

“நிதிமா….இந்தா உனக்கு சுட சுட தோசையிருந்தா தான சாப்பிடுவ….சாப்பிடுமா….”என்று மகளின் வாயை அடக்க பார்த்தார்.அவருக்கு புரிந்துவிட்டது பெரிய மகள் ஏதோ பிரச்சனை கிளப்ப அடி போடுகிறாள் என்று.புரிந்து என்ன பயன் அதை கணவரிடம் சொல்ல முடியாதே அதனால் மகளின் கவனத்தை சாப்பாட்டின் பக்கம் திருப்பினார்.ஆனால் நிதி இன்று விடுவதாக இல்லை என்பது போல,

“ப்பா….கேளுங்கப்பா….”என்று அவரிடமே போக,

“நிதிமா இந்தா உனக்கு பிடிச்ச கார சட்னி….நீ சாப்பிடுமா….பாரு நீ கிளம்பனும்ல….”என்று கூற

“ஓ….நான் இனி இந்த வீட்டு பொண்ணு இல்லைல….அதான் நான் பேசினா அம்மா தடுக்குறாங்க….”என்று கண்களை கசக்க,

“அன்புபுபு….என்னதிது….என் பொண்ணு எப்போதும் இந்த வீட்டுக்கு முக்கியம் தான்….இன்னொருவாட்டி இப்படி செஞ்ச நான் சும்மா இருக்க மாட்டேன்….நீ சொல்லுடாமா….என்ன விஷயம்…..”என்று இளங்கோ கூற,அன்புக்கு தன் கைகளை பிசைவதைவிட வெறும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

“என்னம்மா சொல்லு…என்ன விஷயம்….”என்று இளங்கோ மேலும் ஊக்க,இது இது தானே வேண்டும் எனக்கு என்று நினைத்த நிதி,

“ப்பா….இந்த க்யா இருக்காள…அவ நாங்க வந்தா வாங்கனு கூட ஒரு வார்த்தை கூப்பிடறது இல்லைப்பா….எப்ப நான் வந்தாலும் அந்த ரூம்க்குள்ள போய் நுழைஞ்சிக்குறா….இவ கூட அந்த தம்பி பயலும் நான் வந்தவுடனேயே மட்டைய தூக்கிக்கிட்டு எங்கையோ போயிடுறான்….”என்று கூறிக் கொண்டிருக்கும் போதே,

“கன்யா….ராம்….”என்று உரக்க அழைத்திருந்தார் இளங்கோ.

தங்களது அறையில் படுத்துக் கொண்டிருந்த கன்யாவிற்கு இளங்கோவின் அழைப்பை கேட்டதும் சற்று பயம் பிடித்துக் கொண்டது.தந்தை இந்த நேரத்திற்கு எல்லாம் வரமாட்டரே என்று யோசித்துக் கொண்டிருக்க அதற்குள் இருமுறை இளங்கோ அழைத்துவிட்டார்.

“க்கா….க்கா….வா அப்பா….கூப்பிடுறார்….என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டார்….”என்று கூறிக் கொண்டே ராம் வெளியில் செல்ல,கன்யாவிற்கு மனதிற்குள் திக்திக் என்று இருந்தது.தந்தையின் அழைப்பில் இருந்தே அவர் ஏதோ கோபமாக உள்ளார் என்று புரிந்துவிட்டது கன்யாவிற்கு.

“அச்சோ…இந்த பெரிய குரங்கு என்ன சொல்லுச்சுனு தெரியலையே….இன்னைக்கு தான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன் அது உனக்கு பிடிக்கலையா….கடவுளே காப்பாத்து….”என்று வேண்டிக் கொண்டே செல்ல,

“ஏய்….கனி எவ்வளவு நேரம் அப்பா உன்னை கூப்பிடுறாங்க….நீ ஆடி அசைஞ்சு வர….”என்று நிதி வன்மத்துடன் பேச,கன்யாவிற்கு அவளை அங்கேயே கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல் இருந்தது.

“நிதிக்கா….கனிக்காவுக்கு உடம்பு முடியல அதான் படித்திருந்தா……நான் தான் அவளை எழுப்பிவிட்டு வந்தேன்….”என்று ராம் கூற,

“நீ என்னடா….எப்போதும் உன் அக்காவுக்கு சப்போர்ட் பண்ணவேண்டியது….”என்று அவனை அடக்க,ராம் கோபமாக ஏதோ கூற வர அவனது கையை பிடித்து தடுத்த கன்யா பேச வேண்டாம் என்பது போல் கூறினாள்.அதை கண்ட நிதிக்கு மேலும் எரிவது போல் இருந்தது.

“ஏன்டா என்னை எதிரி மாதிரி பார்க்குற…நானும் உனக்கு அக்கா தான்டா….”என்று நிதி கண்ணை கசக்க,

“நிதி நீ அமைதியா இரு….கன்யா வீட்டுக்கு வந்தவங்க கிட்ட எப்படி நடந்துக்கனும்னு உனக்கு தெரியாது….இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி பொறுப்பில்லாம இருப்ப….நிதி என்ன செய்தானு நீ அவளை இப்படி நடத்துற….ஆங்….”என்று இளங்கோ கோபமாக கேட்க,கன்யா அமைதியாக நின்றாள்.பின்னே எதாவது பேசினால் அதற்கும் தப்பர்த்தம் தான் கற்பிப்பார் அதனால் அமைதியாக இருப்பதே மேல் என்று நினைத்து நிற்க,

“பார்த்தீங்களாப்பா….நீங்க பேசுறீங்க….அவ ஏதாவது பேசுறாளா பாருங்க…”என்று நிதி தந்தையை மேலும் ஏத்திவிட,ஏற்கனவே மகள் தன்னிடம் பேசாமல் இருப்பதில் எரிச்சலிருந்தவருக்கு இது மேலும் கோபத்தை தர,

“ஏய் நான் உன்கிட்ட தான கேக்குறேன் பதில் சொல்லமாட்ட….அப்படி என்ன உனக்கு பிடிவாதம்…”என்று இளங்கோ கையை ஓங்கிவிட,

“ப்பா….”

“என்னங்க…..”என்ற குரல்கள் ஒலித்தது.ஆனால் கன்யாவோ இருந்த இடத்தில் நகரவில்லை அதே சமயம் வாயை திறக்கவும் இல்லை அமைதியாக தனது கன்னத்தை காட்டியபடி நின்றாள்.அடிக்க கையை ஓங்கிய இளங்கோ மகள் கன்னத்தை காட்டியபடி நிற்கவும் கையை அந்தரத்திலேயே நிறுத்திவிட்டார்.மகள் நின்ற கோலம் ஏனோ தகப்பனை அசைத்து பார்த்தது.கையை இறக்கி அவள் முகத்தை பார்க்க அதில் இருந்தது என்ன என்று அவரால் யூகிக்க முடியவில்லை ஆனால் அவளின் கண்க்லோ நிர்முலமாக இருந்தது.

“போதும் நிறுத்துங்கப்பா….இப்ப எதுக்கு அக்காவை அடிக்க கை ஓங்குறீங்க….”என்று ராம் கன்யாவை தன் பின்னே இழுத்துவிட்டு தந்தையின் முன் நின்றான்.அன்புவிற்கு ராம் எதிர் பேச உள்ளம் நடுங்க தொடங்க,

“டேய் ராம்….இது என்ன அப்பாவை எதிர்த்து பேசுறது….”என்று கண்டித்தார்.ஶ்ரீநிதிக்கு தந்தை கை ஓங்கியது பார்த்தும் முகத்தில் சற்று சந்தோஷம் எட்டி பார்த்தது ஆனால் அவர் அடிக்காமல் இறக்கவும்,

“ச்சை இன்னைக்கு தப்பிச்சிட்டா….”என்று மனதில் வன்மமாக நினைத்தாள்.

“ம்மா…நீங்க சும்மா இருங்க…”என்று ராம் தாயை அடக்கினான்.

“டேய் நீ என்னடா இப்பவே அப்பாவை எதிர்த்து பேசுற….எல்லாம் இவ கத்துக்கொடுக்குறது….”என்று நிதி மீண்டும் ஆரம்பிக்க,

“க்கா நீ சும்மா இரு….இன்னைக்கு அவ பிறந்த நாள் இது இங்க இருக்குற யாருக்காவது தெரியுமா….”என்று கேட்க,இளங்கோ அதிர்ந்து பார்க்க,அன்புவோ தேதியை பார்த்தார்.

“ம்ம்ம்….இப்ப பாருங்க….உங்க பொண்ணு பிறந்த நாள் கூட உங்களுக்கு மறந்து போச்சு….”என்று ராம் அதற்கும் காய்ந்தான்.இன்று காலையில் கன்யாவிற்கு அவன் தான் ஒரு சாக்லேட் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து கூறியது.

“வா க்கா அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல் செஞ்சிருக்காங்கனு பார்ப்போம்….”என்று அவன் தமக்கையை துரிதபடுத்த,அவளோ,

“ராம் அம்மாக்கும்,அப்பாக்கும் கண்டிப்பா நியாபகம் இருக்காது…..நீ ஏன் வீணா கற்பனை பண்ணுற….”என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்.அவள் கூறியது போல் தான் அன்றை நாளும் சென்றது காலையிலேயே ராம் தாயிடம் சண்டைக்கு செல்ல கன்யா தான் அவனை சமாதனபடுத்தி பள்ளிக்கு அனுப்பியது.

“டேய் இப்ப என்ன அம்மா வேலையில மறந்து இருப்பாங்க….அதுக்கு அப்பாவை எதிர்த்து பேசுவியா நீ….”என்று நிதி எகிறி கொண்டு நின்றாள்.

“ஓஓஓ….மறந்துட்டாங்க….ஆனா உன் பிறந்த நாள் மட்டும் மறக்க மாட்டாங்க இல்ல நிதிக்கா…அது எப்படி….”என்று ராம் நிதியிடம் கேட்க,நிதிக்கு திக் என்று இருந்தது.அவள் எப்போதும் தன் பிறந்த நாள் வந்தால் முதல் வாரத்திலிருந்தே தந்தையிடமும்,தாயிடமும் என்னனென செய்ய வேண்டும் என்று சொல்லி தனக்கு தேவையானதை வாங்கிவிடுவாளே.இதெல்லாம் இப்போது இவனிடம் கூறவா முடியும் என்று வாயை கம் வைத்து போல் ஒட்ட வைத்துக் கொண்டாள்.

“என்னக்கா பேச்சையே காணும்…அமைதியாகிட்ட….”என்று ராம் நிதியிடம் கேட்க,

“ராம் விடு….இப்ப எதுக்கு இதெல்லாம் விடு….”என்று கன்யா கூற,ராம் அவளை பாவமாக பார்த்தான்.

“எனக்கு தூக்கம் வருது நான் போறேன்….”என்று கூறிவிட்டு யார் பதிலையும் எதிர்பார்க்காமல் அறைக்குள் சென்றுவிட்டாள்.இளங்கோ போகும் மகளையே மன நிறைந்த வலியிடன் பார்த்துக் கொண்டிருந்தார்.எதிலோ தோற்றது போல் ஒரு உணர்வு.தன் மகன் தன்னை எதிர்த்து நின்றது எல்லாம் அவருக்கு கருத்தில் பதியவில்லை அவரின் கண்கள் முழுவதும் கன்யா மட்டுமே நின்றாள்.ஏன் என்னை இப்படி ஒதுக்குகிறாள் இவள் நான் பெற்ற மகள் என்னிடம் ஒருவார்த்தை பேசவில்லை கன்னத்தை காட்டியபடி அவள் நின்ற விதமே அவரின் கண் முன்னே நின்றது.

அறைக்குள் வந்த கன்யாவோ வெடித்து அழுது கொண்டிருக்க ராம் அவளின் பக்கத்தில் அமர்ந்து அவளை தேற்றிக் கொண்டிருந்தான்.அப்போது அறையினுள் நுழைந்த அன்பு,

“கனி…என்னடி இது இப்படி அழாதடீ….நான் நிஜமா மறந்துட்டேன்டீ….நீயாவது நியாபகபடுத்தியிருக்கலாம்ல…”என்று கேட்க கன்யா அவரை வெறுமையாக பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.

“ம்மா….இதே நிதிக்கா பிறந்த நாள்னா மறந்து இருக்க மாட்டீங்க அப்படிதானமா….”என்று ராம் நக்கலாக கேட்க,

“நீயும் ஏன்டா என்னை புரிஞ்சிக்கமாட்டேங்குற….நான் என்ன தான்டா செய்வேன்….”என்று அன்பு புலம்ப ஆரம்பிக்க,

“ம்ம்ம்மா….போ நாங்க இன்னும் சாப்பிடல…போய் சாப்பாடு எடுத்துட்டு வா போ….”என்று கன்யா பேச்சை பாதியில் நிறுத்தி அனுப்பி வைத்தாள்.பின் தாய் புலம்ப ஆரம்பித்தாள் அவரை வேறு மீண்டும் தேற்ற வேண்டும் என்று தான் இவ்வாறு செய்தது.அன்றைய இரவு கன்யாவின் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் உறங்கினர்.

இளங்கோவின் மனதில் கன்யாவின் மௌனம் பெரிய தாக்கத்தை உருவாக்கி இருந்தது.ஶ்ரீநிதிக்கு இன்று தங்கையை வகையாக எதுவும் செய்ய முடியவில்லையே என்று நினைத்தவள் அடுத்த முறை அவளை சிக்க வைக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க தொடங்கினாள்.அன்புவிற்கு சின்ன மகளின் மனது புரிந்தாலும் எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் இருந்தார்.அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது கன்யாவின் வாழ்விலும் அந்த விடியல் நல்ல விடியலாக இருந்தது.

காலைவேளையில் வேகாமாக தனது பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் தன்யா அப்போது அறைக்குள் வந்த ஆரி அவளின் கைகளை பிடித்து ஒரு கவரை திணிக்க முதலில் முரண்டு பிடித்து வாங்க மறுத்தாள்,

“இதை நீ வாங்கல அதுக்கு அப்புறம் அண்ணன் பேசவே மாட்டேன்…..”என்று முறைத்துக் கொண்டு கூற,

“ப்ச் கொண்டா….”என்று தன்யா கவரை வாங்கி பார்க்க அதில் இந்த வார இறுதியில் இருவருக்குமான படத்திற்கான டிக்கெட் இருந்தது.

“இந்த வாரம் போறோம்….உனக்கு இப்ப சந்தோஷம் தான….”என்று தங்கையின் கன்னம் பற்றி கேட்க,

“வாவ் சூப்பர் ண்ணா….ஜாலி…..ஐ ம் ஹேப்பி…..”என்று அவள் குதூகலிக்க,

“ஆனா ஒரு கண்டீஷன்….இந்த வீக்குள்ள உன்னோட ஒவர்க் எல்லாம் முடிச்சுக்க…அப்ப தான் அம்மாகிட்ட பேச முடியும் ஓகே….”என்று நல்ல அண்ணனாக தங்கையை வழி நடத்தினான்.

கல்லூரியில் கன்யா எப்போதும் போல் அனைத்து வேண்டாத வேலைகளையும் செய்து அனைத்து பேராசிரியர்களிடமும் திட்டு வாங்கினாள்.அன்றைய வகுப்புகள் அனைத்தும் முடிந்ததும் கன்யாவின் தோழி,

“ஏன்டீ இப்படி எல்லா மேம் கிட்டேயும் திட்டுவாங்குறதே வேலையா வச்சுருக்க….”என்று கேட்க,

“நான் என்னடி பண்ணேன்…..அவங்க தான் உனக்கு பாடத்தில டவுட் இருந்தா கேளு சொன்னாங்க நான் கேட்டேன் அதுக்கு என்னை திட்டுறாங்க….”என்று பாவமாக உதட்டை பிதுக்கி கூறினாள்.

“என்னமோ போடி….நான் கிளம்புறேன்….”என்று கூறிவிட்டு அவள் கிளம்பிவிட,கன்யா வழக்கமாக அமரும் மரத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள்.எப்போதும் கன்யா கல்லூரி விட்டவுடன் வீட்டிற்கு செல்லமாட்டாள்.வீட்டில் நிதி இருப்பாள் என்பதால் சற்று நேரம் மரத்தடியில் அமர்ந்துவிட்டு மெதுவாக தான் செல்லுவாள்.இன்றும் அதே போல அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“என்ன மேடம் இன்னைக்கு பன்னு எதுவும் எடுத்துட்டு வரலையா….”என்று ஆரியின் குரல் அருகில் கேட்கவும் திரும்ப,அவளின் அருகில் வெகு சாதாரணமாக அமர்ந்தான் ஆரி.ஆரிக்கு முதல் நாள் கன்யாவிடம் பேசும் போதே புரிந்தது அவளை போலவே அவளது மனமும் ஒரு குழந்தை என்று அதனால் தான் அவளிடம் தன்னை மறந்து பேசினான்.

இன்று விளையாட்டை முடித்துவிட்டு கிளம்பியவன் எதர்ச்சையாக மரத்தை பார்க்க அவனது நினைப்பை பொய்யாக்காமல் கன்யா அமர்ந்திருந்தாள்.ஏனோ கால்கள் அவள் இருக்கும் இடம் நோக்கி பயணித்தது அவன் மனதும் அவளை நோக்கி பயணிக்க தொடங்கியிருந்தது.ஆனால் அதை ஆரியநாதன் தான் அறியவில்லை.ஆரி அவன் மனதை அறியும் போது கன்யாவை தொலைத்துவிட்டு தான் தேடுவான்.

Advertisement