“ஹான் தெரியும் போ மா!” என்றவள், மும்முரமாகச் சம்பூர்ணத்துக்குப் பேன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஹே, நல்லாயிருக்குடி! இன்னும் நல்லா கொல்லு, அங்கே அரிக்கிறது,” என்றாள் தங்கை சம்பூர்ணம்.
“ஹான், இப்போ ஓகேவா?” என செம்பருத்தி கேட்க, துளசி சிரித்துக்கொண்டே பார்த்தாள். வீடே கலகலவென இருந்தது.
“ரோஜா அக்கா வந்துச்சா?” என செம்பருத்தி கேட்டாள்.
“ம்ம் வந்தா வந்தா,” என செல்வி சலித்துக்கொண்டே கூற, “என்னாச்சு, மறுபடியும் சண்டையா? என்னப்பா ஆச்சு?” எனத் தந்தை பாரியிடம் கேட்டாள்.
“அவ பையனாப் பொறக்க வேண்டியது,” எனப் பாரி கூற, “அது ஒண்ணுதான் குறைச்சல்,” என செல்வி உள்ளிருந்து சத்தம் போட்டார்.
செம்பருத்தி சிரித்துக்கொண்டே, “என்னதான் நம்ம எல்லாரும் இருந்தாலும் ரோஜா அக்கா மேல பாசம் கூடத்தான். ஏன்ப்பா அப்படி?” எனக் கேட்க, “இல்லையே, எனக்கு எல்லாப் பொண்ணுங்களும் ஒண்ணுதான்,” என்றார் பாரி.
“அது பச்சைப்பொய்,” என்று சம்பூர்ணம் கூற, “ஆமா,” என்றாள் துளசியும்.
செல்வி உள்ளிருந்து வந்தவர், “ஏன்னா, அவள் தான் உங்க ஆத்தா போல. அதான் உங்கப்பனுக்கு ஸ்பெஷல்,” என்றார் செல்வி.
“ஆமா, இப்போ என்ன பண்ணப்போற?” என பாரி கேட்க, இருவரும் வாய்மொழியாக சண்டையிட்டுக்கொண்டார்கள். அவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி தாமரை அமர்ந்திருந்தாள். அவள் யாரிடமும் எதுவும் பேசமாட்டாள், ஓர் ஆக்சிடென்ட்டில் சுயநினைவை இழந்துவிட்டாள்.
“என்ன ஒரே சத்தமா இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் கர்ணன்.
“ஒண்ணுமில்ல மாப்பிள்ளை, வாங்க வாங்க! செல்வி, காபி தண்ணி வை!” எனப் பாரி கூற, இப்படியே அந்த இரண்டு நாட்களும் கலகலவெனச் சென்றது.
பிரிய மனமில்லாமல் புறப்பட்டாள் செம்பருத்தி.
“என்னாச்சுடி?” என சம்பூர்ணம் கேட்க, “இல்லடி சும்மா! இந்த ரெண்டு நாள் வேகமா ஓடிடுச்சு. ஒரே ஊர்ல இருந்துகிட்டு, இத்தனைக்கும் ஒரு அரை மணி நேர டிராவலில்தான் நான் வேலை செய்றேன். ஆனாலும் கூட, தூரத்தில் இருக்கிற மாதிரி தோணுது,” என்றாள் செம்பருத்தி.
“சரி, நான் புறப்படுறேன். இன்னும் மூணு மாசம்தானே,” என செம்பருத்தி மனதைத் தேற்றிக்கொண்டாள். ஆனால், இனி அவள் போர்க்களத்தில் மாட்டிக்கொள்ளப்போகிறாள்.
கர்ணன் அவளுக்காகக் காரில் காத்திருந்தான்.
வீட்டில் இருக்கும் அனைவரும் அவளை வழியனுப்பி வைத்தார்கள்.
“ஹே, டெலிவரிக்கு வந்திடு,” எனத் துளசி சொல்ல, “கண்டிப்பா அக்கா,” எனச் சொல்லிக்கொண்டே காரில் ஏறினாள்.
“பாவம், பொக்குன்னு போறா பாப்பா,” எனப் பாரி வருத்தத்துடன் கூற, “நீ மட்டும் கைய உடைச்சுக்காம வந்திருந்தால் டெய்லி போயிட்டு வந்திருப்பா! என்ன பண்றது, நம்ம குடும்ப சூழ்நிலை இப்படி இருக்குது,” என்றார் செல்வி.
“மா, அப்பாவை எதுவும் சொல்லாத! தேவையில்லாம பேசுற வேலை வச்சுக்காத,” என எகிறிக்கொண்டு வந்தாள் சம்பூர்ணா.
பாரி புன்னகையுடன், “சீக்கிரமே கை சரியானதும் வேலைக்குப் போயிடுவேன்,” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணும் போக வேணாம். நான் அதுக்குள்ள வேலைக்குப் போயிடுவேன்,” என்றான் தர்மன்.
“டேய், இப்போதான்டா செம்பருத்தி கிளம்புனா. இன்னும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்திருக்கலாம் தம்பி நீ,” என்றாள் துளசி.
“ச்ச, பார்க்க முடியலையே!” எனத் தர்மன் வருத்தப்பட, “டெலிவரிக்கு வரேன்னு சொல்லியிருக்கா,” என்றாள் துளசி.
“அப்படின்னா ஓகே அக்கா,” எனத் தர்மன் தன் அப்பாவை விசாரித்துவிட்டு, அன்னையைப் பார்க்க உள்ளே சென்றான்.
“மாமா, இங்கேயே நிறுத்துங்க,” என செம்பருத்தி கூற, “எங்கன்னு சொல்லு பொண்ணு! நான் வீட்டு முன்னாடி நிறுத்திடுறேன்,” எனக் கர்ணன் கூறினான்.
“இல்ல மாமா! வேணாம், இங்கேயே நிறுத்துங்க. அவங்க வீட்ல நாய் இருக்கு.”
கர்ணன் சிரித்துக்கொண்டே, “நம்ம வீட்ல அழகி (நாயின் பெயர்) இருக்காளே? அப்புறம் என்ன உனக்கு நாய் மேல பயம்?”
“அய்யோ மாமா! இந்த நாய் ஜெர்மனி நாயாம், எனக்குப் பயம். தொத்து கால் போட்டுக்கிட்ட வருது, எனக்குப் பயம் மாமா,” என வியர்க்கக் கூறியவளைப் பார்த்து சிரித்தான் கர்ணன்.
“மாமா ப்ளீஸ்,” என செம்பருத்தி கேட்க, “சரி, என்னமோ போ!” என காரை நிறுத்தியவன், அவள் வீட்டுக்குள் செல்லும்வரை பார்த்தான்.
செம்பருத்தி கையை காட்டிவிட்டு உள்ளே சென்றாள் புன்னகையுடன். அதன் பிறகுதான் கர்ணன் புறப்பட்டான். அவள் இறங்கியதிலிருந்து வீடு வந்து சேரும்வரை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் குருசேத்ரன்.
அவள் வீட்டுக்குள் வந்ததும், அருகில் அழைத்து அமர வைத்து கதை அளந்தார்கள் மணியம்மையும், சாந்தாவும்.
“மேடம், ஒரு முக்கியமான விஷயம்.”
“சொல்லு மா ஸ்வீட்டி?” என்றார் மணியம்மை.
“மேடம்,” என சிணுங்கிக்கொண்டே நின்றாள் செம்பருத்தி.
“சும்மாடா!” என மணியம்மை சிரிக்க, “இந்த வாரத்தில் அக்காவுக்கு டெலிவரி. எனக்கு ஒரு ரெண்டு நாள் மட்டும் வீட்டுக்கு அனுப்ப முடியுமா? அக்கா ஆசையா கேட்டா! அஞ்சு வருஷம் ஆகுது கல்யாணம் ஆகி… இதுதான் முதல் குழந்தை,” என செம்பருத்தி விளக்கினாள்.
“ஓகே மேடம், தேங்க்ஸ்,” என உற்சாகத்துடன் கூறிவிட்டு, “பேக் வச்சுட்டு வரேன்,” என அறைக்குச் சென்றாள்.
அவள் வெளியே வந்த நேரம், அங்கே அவளை முறைத்துப்பார்த்துக்கொண்டே சென்றான் குருசேத்ரன்.
‘இந்த மலைக்குரங்கு எதுக்கு என்னை முறைச்சுப் பார்க்குது?’ என நினைத்தவள் கண்டுகொள்ளாமல் சென்றாள் மணியம்மையைப் பார்க்க.
சுப்ரியா அவனுக்கு போன் செய்து எவ்வளவோ எடுத்துக்கூறினாள்.
“என்னால எந்த கவுன்சிலிங்கும் அட்டென்ட் பண்ண முடியாது. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், நான் எதுக்கு அதை பண்ணணும்? உன் வேலையைப் பார்த்திட்டுப் போ,” என்றான் கால் மேல் கால் போட்டுக்கொண்டே.
“ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ குரு. இந்தப் பிரச்னையை நம்ம சீக்கிரமா சரி பண்ணிடலாம். நான் சொல்றதை…” என அவள் ஆரம்பிக்க, “ப்ளீஸ், நீ கிளம்பலாம்.”
“குரு!”
“என்னோட பிரச்னையை எப்படி சரி பண்ணனும் அப்டின்னு எனக்குத் தெரியும். அதோட சொல்யூஷனைக்கூட நான் கண்டுபிடிச்சிட்டேன். நீ கிளம்பலாம்,” என்றவன், “ஶ்ரீராம்!” என உரக்க அழைத்தான்.
இதற்கு மேல் வேலைக்காகாது என நினைத்த சுப்ரியா அங்கிருந்து புறப்பட்டாள்.
“பாஸ்,” என ஶ்ரீராம் வந்து நிற்க, “உனக்கு ஒரு முக்கியமான வேலை,” எனக் கோப்பை அவன் பக்கம் தள்ளியவன், “எனக்கு ஃபுல் டீட்டெயில்ஸ் வேணும், அதுவும் ரெண்டு நாளில்,” என குருசேத்ரன் சொல்லி முடிக்க, “ஓகே சார்,” என வாங்கிச் சென்றவன், ஒரு சில நொடிகளில் மீண்டும் உள்ளே வந்தான்.
“என்னாச்சு?” என குருசேத்ரன் கேட்க, “பாஸ், இது…?” எனக் கோப்பையைக் காட்டினான்.
“ஆர் யூ ஆஸ்கிங் கொஸ்டின்ஸ்? அதுவும் என்கிட்ட…” என அவனை உறுத்துப்பார்த்தான் குரு.
“ச… சாரி சார்! இன்னி… இன்னைக்கே உங்களுக்கு எல்லா விவரமும் கண்டுபிடிச்சு சப்மிட் பண்ணிடுவேன்,” என ஓடி விட்டிருந்தான் ஶ்ரீராம்.
குருசேத்ரன் அப்படியே சுழல் நாற்காலியில் சாய்ந்தான்.
எப்பொழுதும் இரவு உணவுக்கு இதுவரை வந்ததே கிடையாது. ஆனால், இன்று வந்தான், அதுவும் செம்பருத்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது.
மணியம்மை தனது மகனைப் பார்த்ததும், “குரு, வாயேன் சாப்பிடலாம்,” என அழைத்தார்.
“ம்ம்,” என வந்து அமர்ந்தான்.
உடனே புரை ஏறியது அவளுக்கு.
“சாப்பிடக்கூடத் தெரியாதா உனக்கு? தண்ணி குடி,” என மிரட்டினான்.
செம்பருத்தி பதட்டத்துடன் எழுந்தாள்.
“என்னாச்சுமா?” என மணியம்மை கேட்க, “போதும் மேடம்,” என அவள் நகர, “இதை யார் சாப்பிடுவா?”
“அது… அது வந்து… எனக்குப் போதும்!”
“உன்னோட சாப்பாடு மொத்தத்தையும் முடிச்சுட்டு, எங்க வேணாலும் போ!” என்றவன், “மா, சொல்லுங்க, இல்லைனா பனிஷ்மென்ட்,” என்று குரு ஆரம்பிக்க, “செம்பா, சாப்பிட்டுப் போயிடுமா! இல்லைனா அவன் வீட்டையே சுத்தச் சொல்லுவான்,” என மணியம்மை கூறினார்.
அவனை முறைத்துக்கொண்டு சாப்பிட்டாள்.
குருசேத்ரன் எதையும் கண்டுகொள்ளாமல் உணவில் கவனம் செலுத்தினான்.
செம்பருத்தி அவருக்கான மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு வந்தாள்.
அவள் சென்றதும் குரு வந்தான்.
“என்னடா கண்ணா?” என்று மணியம்மை கேட்க, “சும்மா வந்தேன், ஏன் வரக்கூடாதா?” என்று குரு கேட்க, “அப்பா சாமி! எதுவுமே சொல்லக் கூடாதாடா!” என மணியம்மை சொல்ல, மெதுவாகப் புன்னகை செய்தான்.
“அச்சோ குரு, நீ சிரிச்சா எவ்வளவு அழகு தெரியுமா? என் கண்ணே பட்டுடும், என் தங்கம்,” என கொஞ்சினார்.
“ஹான், தூங்குங்க!” என கிளம்பினான்.
“இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போயேன்,” என மணியம்மா கூற, “இருந்துட்டாப் போச்சு! நீங்க தூங்குங்க, நான் லேப்டாப் எடுத்துட்டு வரேன்,” எனச் சென்றவன், தன் அன்னையின் அறையில் இருக்கும் டீப்பாயில் அமர்ந்துகொண்டான்.
அவர் தன் மகனைப் பார்த்துப் புன்னகையுடன் அப்படியே உறங்கினார்.
விடிய விடிய தனது அன்னையையே பார்த்துக்கொண்டே வேலை செய்தான்.
செம்பருத்தி அலாரம் வைத்துக்கொண்டவள், வழக்கம் போல மணியம்மை பாத்ரூம் செல்ல எழுப்ப வேண்டும் என கதவைத் திறந்தாள்.
அங்கே குரு அமர்ந்திருக்க, “அய்யோ, மலைக்குரங்கு!” என கத்திவிட்டாள்.
“அய்யோ!” என்று மணியம்மை எழுந்து அமர்ந்தார்.
குருசேத்ரன் அவளையே கோபமாகப் பார்த்தவன், லேப்டாப்பில் கவனம் செலுத்தினான்.
“என்னம்மா ஆச்சு? நானே பயந்துட்டேன்,” என மணியம்மா கூற, “மேடம், அது வந்து…” என குருசேத்ரனைப் பார்த்தாள் செம்பருத்தி.
“சொல்லு மா!” என அவர் கேட்க, “ஒன்… ஒண்ணுமில்ல மேடம். அது, நான் உங்களைப் பாத்ரூம் எழுப்ப வந்தேன்,” என்றாள்.
“சரி மா!” என மெல்ல எழுந்தவர் பாத்ரூம் செல்ல, செம்பருத்தி வேகமாக அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.
‘மலைக்குரங்கா நான்! இருடி, உனக்கு இருக்கு!’ என்றவன், உடல் நெளித்துச் சோம்பல் முறித்தான்.