ஷிவா லேகா இருவரும் ஒருசேர “வாங்க” என அழைத்தனர் அமர்ந்திருந்தபடியே.

சுந்தரம் அங்கேதான் இருந்தார்.. அண்ணனை வரவேற்றார். 

முக்கிய நபர்கள் மட்டுமே இருந்தனர்.. இந்த பூஜையில்.

திறப்புவிழாவினை பெரிதாக செய்வதாகத்தான் ஏற்பாடு.. முன்பு, அதாவது சந்துருவிடம் பொறுப்பு செல்லுவதற்கு முன். இப்போது வடிவேலு  எதிலும் கவனம் எடுத்துக் கொள்ளவில்லை. அதனால், அமைச்சர் வரவில்லை திறப்புவிழாவிற்கு. ஆனால், அலுவலக பணியாளர்கள்.. சொந்தங்கள் நண்பர்கள் என விழா இனிதாக நிறைவாக நடந்தது.

ஷிவா நிறைவாக உணர்ந்தான்.. பூஜையெல்லாம் முடிந்து, கார்கள்.. அணிவகுத்து ஷோரூம் உள்ளே வந்து நின்றது. முழுதான ஷோரூமாக இப்போதுதான் மாறிற்று. அத்தனை கார்களும் மின்விளக்குகளின் எதிரில் சூரிய சந்திரனாக ஜொலித்தது.  

பெரியவர்கள் எல்லோரும்.. ஷெட்டில் அமர்ந்து காலை உணவினை உண்டுக் கொண்டிருந்தனர். 

இப்போது ஷிவா சந்துரு அழைத்திருந்த விருந்தினர்கள் வர தொடங்கினர். 

சந்துரு முன்பே இரண்டு வாடிக்கையாளர்களை.. பெற்றிருந்தான். எனவே, அவர்களின் கார் புக்கிங் வேலைகளும்.. தொடர்ந்து கார்களை ஓட்டி பார்க்க.. சிலபல ப்ரீ ரைட்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.. அந்த நடைமுறைகளும் தொடங்கியது.

காலை பதினோரு மணிக்கு மேல்.. ஷிவா சந்துரு இருவரும் அங்கேயே அமர்ந்து.. வாடிக்கையாளர்களை கவனித்து பேசிக் கொண்டிருந்தனர். சந்துரு இன்முகமாக கார்களை பற்றி விளக்கி.. அதனை மார்க்கெடிங் செய்துக் கொண்டிருந்தான். ஷிவாவிற்கு பெரிதாக இதெல்லாம் வரவில்லை.. நேராக டெஸ்ட் டிரைவ் அனுப்பிவிட்டான்.

பெண்கள் பெரியவர்கள் எல்லோரும் வீடு வந்தனர். எல்லோரும் தீஷி வீடுதான் வந்தனர், அங்கேதான் மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார் சுந்தரம்.

ஷிவா மதியமாக தன் அலுவலகம் கிளம்பிவிட்டான்.

தீஷி, பெரியவர்களை பொறுப்பாக வரவேற்றாள். தன் பெரியப்பாவிடம் “பெரியப்பா.. ஜூஸ் எடுத்துட்டு வரவா” என்றாள்.. கேள்வியை அவரிடம் கேட்டுவிட்டு.. பதிலை தன் பெரியம்மா அம்மா முகத்தில் கண்டாள்.

வசந்தி லதாவின் முகத்தினை பார்த்தார்.. அதில் இசைவு தெரிய.. வசந்தி கணவனிடம் தலையாட்டினார் ‘ஆம்’ என. 

வடிவேல் “சரிம்மா.. கொடேன்.. எங்க பொண்ணு முதல்முதலில் வீட்டுக்கு கூப்பிட்டு.. கவனிக்கிறாள்.. அதனால் எது கொடுத்தாலும் சரிதான்.. என்ன மருமகளே சரிதானே” என்றார், லேகாவை பார்த்து.

லேகா எதிர்சோபாவில் அமர்ந்துக் கொண்டே “நீங்க சொன்னால் சரிதான் மாமா” என்றாள்.

தீக்ஷி “அண்ணி உங்களுக்கு..” என்றாள்.

“எனக்கு லெமன்தான் தீக்ஷி.. இருக்கா.. இல்ல, காரில் இருக்கு தீஷி” என்றாள்.

தீக்ஷி “அண்ணி, மாங்காய் இருக்கு.. லெமன் இருக்கு.. ஆரஞ்சு இருக்கு.. என்ன வேண்டும்ன்னு சொல்லுங்க கொண்டு வரேன்” என்றாள்.

வசந்தியும் லதாவும் லேசாக தங்களை தாங்களே பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். வடிவேல் “பாரேன்.. இவளை. சந்துரு நல்லா வளர்த்துட்டான் போலவே.. என்ன ரமேஷ்.. உன் பையன் டபுள் ப்ரோமோஷன் ஆகிட்டான்.” என்றார்.

லேகா “அப்படி சொல்லுங்க மாமா” என்றாள் பெருமிதமாக.

தீக்ஷியும் “ம்.. நான் சந்துரு ட்ரைனிங்தான்.. நீங்களும் அப்படி சொல்லுங்க மாமா” என்றாள் பெருமிதமாக.. தன் மாமனார் ரமேஷிடம்.

சுந்தரத்திற்கு பெண்ணின் பேச்சில் பெருமைதான்.

வடிவேல் “சரி சரி என்ன சமையல்” என்றார்.

ரமேஷ் இப்போது “என் மருமக இரண்டு பேரினை.. சமையலுக்கு என ஏற்பாடு செய்திருக்காள்.. பூஜை நடந்ததால் சைவம்தான் சாப்பிடனுமாம்.. இங்க பார்.. சாம்பார்.. வத்தல் குழம்பு.. பொரியல்.. கூட்டு.. எதோ காசி அல்வாவாம்.. வடை பாயசம்.. என கல்யாண விருந்து போல ஏற்பாடு.. ம்..” என்றார்.. இப்போது மருமகளின் புகழ் பாடி.

தீக்ஷி எல்லோருக்கும் குடிப்பதற்கு எடுத்து வந்தாள். 

லேகா “தீக்ஷி.. நீ எடுத்துட்டு உட்கார்..” என்றாள். இருவரும் பேசித் தொடங்கினர்.

லதா வசந்தி வடிவேல் மூவரும் தீஷியின் கவனிப்பில் மதிய உணவு முடித்துக் கொண்டு அவரவர் இடம் கிளம்பினர். 

லேகா, உறங்கிக் கொண்டிருந்தாள். 

சுந்தரம் ரமேஷ் இருவரும் ஹால் டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டே படுத்துக் கொண்டிருந்தனர். 

தீக்ஷி வளர்ந்துவிட்டாள் போல.. கொஞ்சம் கொஞ்சம் இந்த பெரியக் குடும்பத்தினை சமாளிக்க கற்றுக் கொண்டாள். இது இப்படியென ஏற்றுக் கொண்டாள் போல.

சந்துரு இப்போது அழைத்து மனையாளிடம் பேசினான்.. “எல்லோரும் சாப்பிட்டாங்களா” என. தீக்ஷி பதில் சொல்லிக் கொண்டே.. பாத்திரங்களை ஒழித்து போட்டுக் கொண்டிருந்தாள். 

இருவரும் நடந்தவைகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

!@!@!@!@!@!@!!@!@!

இரண்டு வருடம் சென்று..

தீக்ஷி தங்களின் அப்பார்ட்மெண்டில் பரபரப்பாக தங்களின் இருவரின் உடைகளையும் பேக் செய்துக் கொண்டிருந்தாள்.. அத்தோடு, கூலர், ஸ்கின் கேர்.. ஹேர் கேர் வகைகளையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

சந்துரு, இப்போதெல்லாம் ஷிவாவோடு போட்டிப் போட்டுக் கொண்டு தொழிலில் மூழ்கிவிட்டான்.. போல. அதிகம் பேசுவதில்லை.. வம்பிழுப்பதில்லை.. தோரணையான ஆண்மகனாக மாறியிருக்கிறான் இப்போது.. ம், ஒருவயதேயான தன் மகனை தூக்கிக் கொண்டு.. காரிலிருந்து இறங்கிய சந்துருவை பார்த்ததும்.. லேகாவிற்கு இப்படிதான் தோன்றியது.

சந்துரு உள்ளே வந்தான்..

லேகா “ஏன் டா.. டைம் ஆகலையா.. தீக்ஷி பாவம் தனியாக பேக் செய்துட்டு இருப்பா..” என்றாள்.. தம்பியின் கையிலிருந்த பெரிய பேக்’கினை வாங்கிக் கொண்டு.

சந்துரு “ஆமாம் தனியாகத்தான் பண்ணுவா.. அவ நேற்றே வந்துட்டு போயிட்டா.. எனக்கு வர முடியலை.. அப்புறம் தேவ் என்னை பார்க்காமல் ஏங்கி போயிடுவான்தானே” என சொல்லிக் கொண்டே குழந்தையை தனக்கு மேல் தூக்கி போட்டு பிடித்தான்.

தேவ் பொக்கைவாய் சிரிப்போடு.. மாமனை நோக்கி கை நீட்டிக் கொண்டே.. கீழே வந்து மாமனின் கைகளில் விழுந்தான். துளி பயமில்லை அந்த துறுதுறு விழிகளில்.. சந்துரு “மிஸ் பன்னுவதானே என்னை..” என கேட்டான்.

குழந்தை அதற்கும் அந்த  சிரிப்பினையே பதிலாக தந்தது.

லேகா “என்ன சாப்பிடற மாமா வரேன்னு சொன்னார்.. பிடிகொழக்கட்டை செய்தேன்.. எடுத்து வரவா” என்றாள்.

சந்துரு “ம்..” என்றான்.

ஷிவா வந்தான் அந்த நேரத்திற்கு. ஷிவா மாலையில், வீடு  வந்திட வேண்டும்.. சென்னையில் இருந்தால்.. என  மகன் தேவ்நந்தனின் ஆர்டர்.. இல்லை, மனைவியின் ஆர்டர்தான். வெளியில் சொல்லும் போது மகனோடு விளையாட என சொல்லிக் கொள்ளுகிறான் ஷிவா. முன்போல்தான்.. ஷிவா இப்போதும் டயர்ட் ஆகுவதேயில்லை.. மகனோடு விளையாடும் போதும்.

லேகா சந்துருவிற்கு சிற்றுண்டியோடு வந்தாள்.

ஷிவா “என்ன பாசமலர்கள்.. இன்னமும் கிளம்பவில்லையா! இங்கே இருந்தால்.. தீக்ஷி டென்ஷன் ஆக போறா.. அவளை யார் பார்ப்பது.. சந்துரு மாப்பிள்ளை” என்றான் ஷிவா ராகமாக.

சந்துரு “நீங்கள் நேற்று வளர்த்த பயிர்.. இன்று நாங்கள் வளர்க்கிறோம்.. இன்னம் டைம் இருக்குங்க” என்றான்.

ஷிவா புன்னகைத்தான் ஏதும் பேசவில்லை.. தேவ் இப்போது ஷிவாவிடம் தாவினான். தாவிய பிள்ளையை வாங்கிக் கொண்டு.. “உன் அத்தை பாவம் டா” என்றான் சின்ன குறையாக.

சந்துரு கடகடவென உண்டுவிட்டு “லேகா கிளம்புகிறேன்.. ஏதாவதுன்னா கூப்பிடு.. தேவ் தூங்கும் போது கூப்பிடாத.. அவன் விழித்திருக்கும் போது எனக்கு மறக்காமல் கூப்பிடு.. அப்போ அப்போ ஷிவாவை என் ஷோரூம் போய் ஒரு விசிட் பார்க்க சொல்லு.. ஞாபகப்படுத்து. அவர்தான் ஒருமாசம் பார்த்துக்கிறேன்னு சொன்னார்..” என்றான்.

ஷிவா “நீ என்ன பண்ணு ஷேகர்.. ஷோரூமை கையில் எடுத்துக் கொண்டு போய்டு. என்னை நம்பாத” என்றான்.

லேகா புன்னகைத்தாள்.

சந்துரு இருவரையும் முறைத்தான்..

ஷிவா “கீழ விழுந்த ரெகார்ட் மாதிரி.. என்னிடம் ஒரு ஐம்பது தரம்.. சித்தப்பாவிடம் ஒரு ஐம்பது தரம் சொல்லியிருப்பான் லகு.. இந்த இரண்டுநாளில் மட்டும். கிளம்பு சந்துரு.. மணியாச்சு” என்றான் சற்று இறுகிய குரலில்.

சந்துரு “வரேன் லேகா… தேவ் பத்திரமா இருடா.. பைய்..” அவனை தூக்கி சுற்றி முத்தமிட்டு.. ஷிவாவிடம் கொடுத்தான் “பைய் மாம்ஸ்” என விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

ஷிவபாலன் குடும்பம் புன்னகையோடு  வழியனுப்பியது சந்துருவை.

இந்த வருடங்களில்.. தொழிலை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருந்தான். தீவிரமான உழைப்புதான் காரணம். முன்னோர்கள் ஆசியும் சேர்ந்திருக்க.. வளர்ச்சி.. ஷிவா சந்துரு இருவருக்கும் கைவர பெற்றது எனலாம். ஷிவாதான் காரணம் சிலபல நேரங்களில் சந்துரு இப்படி விளையாட்டாக இருப்பதற்கு எனலாம். அவனின் உழைப்பினை கண்டு, ஷிவாதான் கணக்கு வழக்குகளில் உதவி செய்கிறான். அதிகம் சந்துருவிற்கு பெர்டன் வேண்டாம் என.

ஷிவா சந்துரு இருவரும்.. எதிரெதிரே நின்று பொருந்திக் கொண்டனர் தங்களுக்குள்.

இப்போது சந்துரு போனில் அழைத்தான் “தீக்ஷி.. ஏதாவது வேண்டுமா” என்றான்.

“நீங்க வந்தால் மட்டும் போதும்.. அப்பா வந்துட்டு இருக்கார்.. எங்க இருக்கீங்க.. ஹல்ப் ஹௌவரில்  கிளம்பனும்.. சீக்கிரம் வாங்க” என்றாள்.

சந்துரு “வந்துட்டேன்..” என சொல்லி அழைப்பினை துண்டித்தான். முகத்தில் அலட்சியத்தின் சாயல்.. “மணி ஆறுதான் ஆகுது அதற்குள்” என தனக்குள் சொல்லிக் கொண்டு தனது காரின் வேகத்தை கூட்டிக் கொண்டு பயணித்தான்.

இன்று இரவு 8 மணிக்கு மும்பைக்கு விமானம். அங்கிருந்து, அதிகாலை 3:30க்கு லண்டன் விமானம்.

‘போட்டு வைத்த லண்டன் திட்டம் ஓகே கண்மணி..’ என  இப்போதெல்லாம் சந்துரு தன்னவளிடம் பாடிக் கொண்டே இருக்கிறான் இந்த ஒருமாதமாக.

பெண்ணவள் சென்ற வருடம் முதல்.. வேலைக்கு செல்லத் தொடங்கிவிட்டாள். இரண்டுமாதம் முன்பு அவளின் படிப்பும் முடிந்தது. அதிலிருந்து சந்துருதான் கேட்டுக் கொண்டிருந்தான்.. “லண்டன் போலாமா தீக்ஷி..” என.

தீக்ஷி முதலில் சங்கடமாகத்தான் கணவனை ஏறிட்டாள்.

சந்துரு “அஹ.. எய்ம் பண்ணது நடக்கனுமில்ல. என்ன உன் அப்பா கூடத்தான் இப்போது போவியா.. என்கூட வா.. நான் கூட்டி போறேன்.. உன் ஆசையை நான் புல்பில் பண்றேன்” என்றான் கண்சிமிட்டி.

தீக்ஷி “உண்மையா அப்படிதானே சொல்றீங்க.. இல்ல, கிண்டல் பண்றீங்களா” என்றாள்.

கணவன் “அடி ஏய்.. உண்மையா கேட்க்கிறேன். சந்துரு வொர்த் டி.. என்ன ஆசையோ கேளு.. செய்கிறேன். ஆனால், முதல்முதலில் என்னிடம் சொன்னதை, நான்தான் செய்வேன்.. உங்க அப்பாகூட எல்லாம் நீ லண்டன் போக வேண்டாம். ம்.. நாம போலாமா” என்றான் காதலாக.

 தீக்ஷி கணவனின் கைகளுக்குள் அடங்கிக் கொண்டாள்.. “லண்டன் மட்டுமில்ல எங்க கூட்டி போனாலும் வருவேன்..” என்றாள் தானும் காதலாக.

சந்துரு “வாவ்.. என் பொண்டாட்டி வயசுக்கு வந்துட்டா..” என அவளின் காதில் ரகசியமாக கத்திவிட்டு அவளை இறுக்கமாக அனைத்துக் கொண்டான்.

சந்துரு “எப்படியோ, தட்டு தடுமாறி.. மூணு வருஷம் கழிச்சி.. ஹனிமூன் போறோம் டி நாம” என சொல்லி தன் காதலை தொடர்ந்தான் தன்வளிடம்.

‘உண்மைதான்’ என ஜன்னல் வழி வந்த காற்றும் இவர்களை சில்லென மோதி அமோதித்தது.

சந்துரு வீடு வந்தான்.. தீக்ஷி தயாராகியிருந்தாள். கணவனை கண்டதும் முறைத்தாள்.

சந்துரு “ப்ளீஸ் டி.. ஹனிமூன் போறோம் டி.. சாந்தி சாந்தி” என அவளை உள்ளே நகர்த்திக் கொண்டு சென்றான்.

இருவரும் அடுத்த பதினைந்து நிமிடத்தில் வெளியே வந்தனர்.

சுந்தரம் டிரைவரோடு வந்தார்.. சாமான்களை எடுத்து காரில் வைத்துக் கொண்டிருந்தார். நால்வரும் ஏர்போர்ட் கிளம்பினர்.

தீக்ஷி அப்பாவை கட்டி அனைத்து “பைய் ப்பா.. ரீச் ஆகிட்டு கூப்பிடுறேன்” என சொல்லி விடைபெற்றுக் கொண்டு.. தன் கணவனோடு நடந்தாள்.

சந்துரு கையசைத்து விடைபெற்றான் தன மாமனாரிடம். 

சந்துரு ஆனந்தமாக கிளம்பினான்.. ஒருகையில் லக்கேஜ் ட்ரல்லி மறுகையில் தன்னவளின் மென்விரல்களையும் பற்றிக் கொண்டு.. கிளம்பினான்..  புதிய அத்யாயம் நோக்கி.

$$சுபம்$$