Advertisement

பகுதி – 02

யாஷ்மிதனிடம் கையெழுத்து வாங்க வந்த ராகவ் இவன் நிலையைப் பார்த்து பதறினான். ஃபைலை மேஜை மீது வைத்து விட்டு சார்.. சார்.. என்ன ஆச்சு என்றவன் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தில் லேசாக நீர் தெளிக்க..

யாஷ்மிதன் மெதுவாக கண்களைத் திறந்தான்..  ஒண்ணு இல்ல ராகவ்.. கொஞ்சம் தலைசுத்தல். சரியாப்போகும்.

டாக்டர்க்கு கால் பண்ணவாங் சார்.

அதெல்லாம் வேணாம் ராகவ். கொஞ்சம் நேரம் நான் தனியா இருக்கனும். யாரையும் உள்ள அனுப்ப வேணாம் ப்ளீஸ்..

“ஓகே சார்” என கூறியவன் அமைதியாக கதைவை மூடி விட்டு வெளியே வந்தான்.

“மீண்டும் தனது மொபைலை யாஷ்மிதன் பாரத்தான். கட் பண்ணிட்டாளா? இந்த அம்மாவுக்கு மனசாட்சியே இல்லையே. இவளா எனக்கு லைஃப் பார்ட்னர். இப்ப நினைச்சாலும் தலைய சுத்துதே. இதுல தேவதைனு வேற வர்ணனை. இந்த அம்மாவுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா?” என பலவாறான சிந்தனையில் யாஷ்மிதன் உழன்று கொண்டிருந்தான்.

‘திரும்ப கால் பண்ணி பாக்கலாமா? ஒருமுறை பேசியதே போதும் போதும்னு இருக்கு. வேணாம்டா சாமி’ என நினைத்துக் கொண்டான்.

எத்தனை முறை யோசித்தாலும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீட்டில் இருப்பு கொள்ளாமல் ராகவ்வை அழைத்து பொறுப்பை ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு கிளம்பினான்..

வழி முழுவதும் அருக்காணியின் நினைவுகளை சுமந்து கொண்டு வந்து சேர்ந்தான். வீட்டிற்குள் நுழைந்தவனின் விழிகள் தனது அம்மாவை தேடியது. அம்மா.. அம்மா..

“ஆச்சரியத்துடன் வானதியின் விழிகள் விரிய. யாஷ் போன உடனே வந்து நிக்கற. உடம்புக்கு எதுவும் முடியலையா? என்னப்பா” என யாஷ்மிதனின் நெற்றியை  தொட்டு பார்த்தாள்.

“உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கு. மனசு தான் சரியில்லை” என்று சோஃபாவில் அமர்ந்தான்.

“கல்யாணம்னு சொன்ன உடனே மனசு அலைபாயுதா? இந்த வயசுல இதெல்லாம் சகஜம் தான் யாஷ்” என மெல்லிதாக புன்னகைத்தாள். பொண்ணு கிட்ட பேசிட்டியா யாஷ். ரொம்ப பிடிச்சிருக்குமே.

ஆமா.  பொண்ணோட பேச்ச கேட்டு அப்படியே மயங்கிட்டேன். அதே சந்தோஷத்துல தான் வீட்டுக்கு வந்தேன்.

அவ்வளவு பிடிச்சிருக்கா யாஷ். எனக்கும் கூட அவள பார்த்த அந்த நொடியே ரொம்ப பிடிச்சி போய்டுச்சி.

“நான் ரொம்ப கடுப்புல பேசிட்டு இருக்கேம்மா. டென்ஷன் பண்ணாதிங்க” என குரலை உயர்த்தி தன் கோவத்தை வெளிக்காட்டினான்.

நான் உனக்கு என்னம்மா கெடுதல் பண்ணேன். எதுக்கு இப்படி ஒரு பொண்ண பாத்து வச்சிருக்கிங்க. என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எப்படிம்மா அவ பேர சொல்லுவேன். முதல்ல கல்யாண பத்திரிக்கைல அவ பேர போட முடியுமா? நான் எவ்வளவு மாடர்ன்.

டேய்! கொஞ்சம் மூச்சு விட்டு பேசி. அவ பேருக்கு என்ன குறைச்சல். பொண்ண நேர்ல பாத்தா நிஜமாவே மயங்கி போய்டுவடா. அவள பாத்த அடுத்த நொடி எப்ப கல்யாணம்னு கேட்ப. அவ்வளவு அழகா இருப்பாடா.

உன் பொய்ய நம்பி நான் பொண்ணு பாக்க வரமாட்டேன். ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோங்க. எனக்கு ரொம்ப படிக்கலனா கூட பரவால. என்னோட தகுதிக்கு ஏத்த மாதிரி கொஞ்சமாவது மாடர்னா இங்கிலீஷ் பேச தெரிஞ்ச பொண்ணா பாருங்க. நான் பார்ட்டி அது இதுனு அடிக்கடி வெளிய போவேன். இந்த மாதிரி பொண்ணெல்லாம் கூட கூட்டிட்டு போக முடியுமா?  முக்கியமா பொண்ணு எனக்கு அடங்கி போறவளா இருக்கனும்.

யாஷ்மி கண்ணா, அவள ஒருமுறை நேர்ல பாருடா. உனக்கு ரொம்ப பிடிக்கும்.  இங்கிலீஷ் தெரிஞ்சா என்ன? தெரியாட்டி என்ன? எனக்கு கூட தான் பெருசா இங்கிலீஷ் தெரியாது. ஓரளவு புரியும். உங்கப்பா என்னைய கல்யாணம் செய்துக்கலையா? நாங்க வாழலையா?

அம்மா. சும்மா சாமாளிக்காதிங்க. உங்க காலம் வேற. எங்க காலம் வேற. எனக்கு அவ பேச்சு,  அவ பேரு எதுவும் பிடிக்கல. ப்ளீஸ்.. என்ன விட்ருங்கம்மா. நாளைக்கு பொண்ணு பாக்க நான் வரமாட்டேன்.

இதோ பாருடா. நாளைக்கு பொண்ணு பாக்க போறோம். அவ தான் எனக்கு மருமக. இத யாரும் மாத்த முடியாது. காலைல ஏழு மணிக்கு ரெடியா இரு. உன்னோட உடன்பிறப்பு நிச்சயத்துக்கு வராளாம்.  இப்ப அவ புருஷனுக்கு லீவ் கிடைக்கலையாம்.

நடக்காத விஷயத்துக்கு இப்ப சமீராவ எதுக்கு கூப்பிடனும். அவளாவது அங்க சந்தோஷமா இருக்கட்டும். எனக்கு கல்யாணமே வேணாம் விட்ருங்க. ப்ளீஸ்.. இந்த பொண்ணுக்கு பொய் வேற சொல்லி கல்யாணம். கடவுளே!

அவள இந்த வீட்டுக்கு கொண்டு வர இன்னும் எத்தனை பொய் வேணாலும் சொல்லுவேன் டா.

சொல்லிக்கோங்க. எனக்கென்ன. நீங்க தான் பின்னாடி கஷ்டப்பட போறிங்க.

வெட்டி பேச்சு வேணாம். இந்த அம்மா வேணும்னு நினைச்சா நாளைக்கு நீ கிளம்பற யாஷ்.

யாஷ்மிதன் மௌனங்களோடு சில கணம் போராடிவிட்டு கனத்த மனதோடு தனது அறைக்கு சென்றான்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இயற்கை அன்னை தன் செல்வத்தை  வாரி வழங்கி   கொட்டி வைத்திருந்தாள். பசுமையான வயல்களுக்கிடையே சிவப்பு  வண்ணத்தில் தாவணி அணிந்து வண்ணத்துப்பூச்சியாக சிறகடித்து  வலம் வந்து கொண்டிருந்தாள் அருக்காணி.

“அருக்காணி! போதும் வா புள்ள. வீட்டுக்கு போலாம். உங்கப்பனுக்கு நீ இல்லாம சோறு இறங்காது. ஊர்ல இல்லாத புள்ளைய பெத்து வளத்துட்டானாம்” என வள்ளியம்மா சலிப்போடு கூறினார்.

பாட்டி என் கோவத்த கிளப்பாத சொல்லிட்டேன்.

“உன்னோட ராமாயணத்த கேட்க எனக்கு நேரம் இல்ல. நாளைக்கு மாப்ள வீட்டுல இருந்து உன்னைய பொண்ணு பாக்க வராங்க. அதுக்கான ஏற்பாடெல்லாம் செய்யனும். நீ கெளம்பு. வீட்டுல போய் பேசிக்கிடலாம்” என அவளது கைகளை பற்றி இழுத்துக்கொண்டு சென்றார்.

“எங்கம்மா போன. நாளைக்கு பொண்ணு பாக்க வராங்க. இன்னும் இப்படி பொறுப்பில்லாம வயக்காட்டுல சுத்திட்டு இருக்க. அந்த சுபாவ வர சொன்னேன். பியூட்டி பார்லர் போயிட்டு ஃபேசியல் , ஐபுரோனு என்னென்னமோ சொல்றாங்க. அதெல்லாம் பண்ணிட்டு வாம்மா” என தாய் வளர்மதி கூற.

நான் இந்த கல்யாணமே வேண்டாம்னு சொல்றேன். நீங்க பியூட்டி பார்லர் வேற போக சொல்றிங்களா? நான் எங்கயும் போக மாட்டேன். எதுவும் பண்ணமாட்டேன்.

நீ என்ன செய்யனும். உனக்கு எது வேணும், வேண்டாம்னு நாங்க தான் முடிவு பண்ணனும். இது உங்கப்பாவோட ஆசை. நீ கட்டுப்பட்டு தான் ஆகனும்.

எனக்கு கல்யாணமே வேண்டாம். என்ன நிம்மதியா இருக்க விடுங்கம்மா.

கழுத வயசாகுது. உன் இஷ்டத்துக்கு விட முடியாது.

அப்போ உண்மைய சொல்லி கல்யாணம் பண்ணுங்க. எதுக்கு பொய் சொல்லனும்.

அப்படி தான் பொய் சொல்லுவேன். நல்லது நடக்க நாலு பொய் சொல்லலாம். தப்பே இல்லடியம்மா.. அவங்க வீட்டு அம்மா  நீயே தான் மருமகளா வரனும்னு ஒத்த கால்ல நிக்குதுடி. எங்களுக்கும் அந்த குடும்பத்த ரொம்ப பிடிச்சிருக்கு.

உங்களுக்கு பிடிச்சா சரின்னு சொல்லிடுவிங்களா? வாழ்க்கை என்னோடது.

இப்ப யாருடி இல்லனு சொன்னாங்க. விசாரிச்ச வரைக்கும் அந்த மாப்ள ரொம்ப தங்கமான பையனு சொன்னாங்க. பொண்ணையும் வெளி ஊருல கட்டி கொடுத்துட்டாங்க. நமக்கு ஏத்த மாதிரி அவங்களும் நல்ல வசதி. இதுக்கு மேல இன்னும் என்னடி வேணும்.

அம்மா நான் சொல்றத..

நீ ஒண்ணும் சொல்ல வேணாம். நான் சொன்னத மட்டும் செய் என்றார் வளர்மதி.

“என்ன சத்தம்” என கேட்டுக்கொண்டே மூர்த்தி வந்தார்.

உங்க செல்ல மகளுக்கு பொய் சொல்லாம கல்யாணம் பண்ணனுமாம். அவ நெனைக்கிற நெனைப்பு இங்க நடக்காது. நல்ல குடும்பம். நல்ல பையன். இந்த இடத்தையே முடிச்சிடலாங்க. அவங்களும் உறுதியா தான் இருக்காங்க.

எனக்கும் பிடிச்சிருக்கு வளர். என் பொண்ணு நான் கிழிச்ச கோட்ட தாண்ட மாட்டா. நீ போய் ஆக வேண்டியத பாரு என்றார்.

தந்தையின்  பேச்சை மீறவும் முடியாமல் தனது விருப்பத்தை சொல்லவும் முடியாமல் விக்கித்து நின்றவள் இறுதியாக  கைப்பாவையாக அவர்கள் பேச்சிக்கு கட்டுபட்டாள். ஆனாலும் மனதிற்குள் எப்படி இந்த நிச்சயதார்த்தம் நிறுத்துவது என்ற  சிந்தனை ஒவ்வொரு நொடியும் ஓடிக்கொண்டிருந்தது.

அன்று இரவு உறக்கமில்லாத இரவாகவே இருவருக்கும் இருந்தது. பொழுது விடிந்ததே தெரியாமல் யாஷ்மிதன் விழிமூடா சிந்தனையில் உறக்கமின்றி படுத்திருந்தான்.

“வானதியின் அழைப்பு அவனது சிந்தனைகளை சிதறடித்தது..யாஷ் கண்ணா.. டைம் ஆகுது. சீக்கிரம் ரெடியாகுப்பா” என குரல் கொடுத்தார்.

“ஹிக்கும். அந்த மூஞ்சிய பாக்க ரெடியாகனும் வேற. இப்படியே போனா கூட போதும்” என நினைத்து கொண்டான்.

வேண்டா வெறுப்பாக மெதுவாக எழுந்து காலைக்கடன்களை முடித்து குளித்து ரெடியாகி கீழே இறங்கி வந்தான்.

யாஷ்மிதனைப் பார்த்த வானதி ஏங்க நம்ம பையனுக்கு இப்பவே கல்யாண கதை வந்துடச்சில்ல.

ஆமா ஆமா. நீ சொன்னா சரியா தான் இருக்கும் என்றார் சங்கர்.

“இதுக்கு பேர் தான் சத்திய சோதனையா? இன்னும் என்னெல்லாம் நடக்கப்போவதோ தெரியலையே” என யாஷ்மிதன் மனதில் புயலடிக்கத் தொடங்கியது.

“என்னங்க ஐய்யர வர சொல்லிட்டிங்களா? அட்ரஸ் சொன்னிங்களா?” என வளர் சங்கரிடம் கேட்க.

சொல்லிட்டேம்மா. நேரா பொண்ணு வீட்டுக்கு வந்துடுவார்.

அம்மா. நான் இன்னும் பொண்ணையே பாக்கல. அதுக்குள்ள எதுக்கு ஐய்யர வர சொல்றீங்க.

அதெல்லாம் நேர்ல பாத்தா உனக்கு பொண்ண ரொம்ப பிடிக்கும். நிச்சயதார்த்த தேதி வைக்க தான் ஐய்யர வர சொன்னேன் யாஷ்.

நிச்சயதார்த்த தேதியா? அம்மா என்றான்.

“நல்ல நேரத்துலயே கிளம்பனும். வாங்க. யாஷ் வா கண்ணா” என வானதி காருக்கு அருகில் சென்றார்.

யாஷ்மிதன் பேச கூட முடியாமல் மௌனமாக காரில் வந்து அமர.  அனைவரும் அமர்ந்தனர். கார்  பைத்தூர் கிராமத்தை நோக்கி ஊர்ந்து சென்றது.

பைத்தூர் கிராமத்தில் வளர்மதியின் வீடே மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தது. அனைவரும் பரபரப்பாக ஓடிக்கெண்டிருந்தனர்.

“பாட்டி வள்ளியம்மா வளரை அழைத்து புள்ள ரெடி ஆகிட்டாளா” என கேட்டார்.

“ரெடி ஆக சொன்னேன். நான் தான் இங்க சமையகட்டுல வேலையா இருக்கேன். நீங்க பாருங்க அத்தை” என்றாள்.

என்னமோ கல்யாணமே நடக்கப்போற மாதிரி ஆர்ப்பாட்டம் பண்றிங்க. பொண்ண பாத்துட்டு தேதி வைக்க போறாங்க. அவ்வளவு தான. இதுக்கு ஏன் இத்தன ஆட்டமோ. ம்ம்ம்ம். நான் போய் பாக்கறேன் என்றார்.

“அருக்காணி.. அருக்காணி… என்னடியம்மா பண்ற.. மாப்ள வீட்டுல வர நேரம் ஆகுது. நீ ரெடி ஆகிட்டியா?” என கேட்டுக்கொண்டே வந்தார்.

“பாட்டி நான் உச்சகட்ட கோவத்துல இருக்கேன். இப்படியே ஓடிப்போயிடுங்க” என்றாள்.

“உன் கோவத்த கொண்டு குப்பைல போடு. என் அல்லி ராணி எம்புட்டு அழகா இருக்க” என அவளது கன்னத்தை நீவி நெட்டி முறித்தார்.

இப்ப மலந்த மரோஜாப்பூ மாதிரி இருக்கா என் பேத்தி. மாப்ள வந்து பாத்தா மயங்கி போய்டுவான் .

பாட்டி கடுப்பேத்தாதிங்க என சொல்லும் போதே வாசலில் கார் சத்தம் கேட்டது. கார் உள்ளே வர ..

வானதி அசந்து போய் வீட்டை பார்த்தார்.. நல்ல வசதி தான் போல. எவ்வளவு பெரிய வீடு.. நமக்கு ஏத்த குடும்பம் தான் என்றாள்.. மூவரும் காரிலிருந்து கீழே இறங்கினார்கள்.

கார் சத்தம் கேட்டு இவர்களை வரவேற்க வளர்மதியும், மூர்த்தியும் வெளியே வந்தனர். அவர்களின் பின்னால் பாட்டி வள்ளியம்மா வர.

வளர்மதியும் மூர்த்தியும் எல்லாரும் வாங்க என கையெடுத்து கும்பிட்டு வரவேற்பு கொடுக்க..

“வள்ளி பாட்டியோ டுமீல்.. டுமீல்.. டுமீல்” என்றார்…

தொடரும்….

Advertisement