Advertisement

மதுர ப்ரியம்!

6

அன்பு என்பது சிலசமயம் ஆள கூடியது.. பலசமயம் அடிமை செய்ய கூடியது. 

ஷிவா, தன் தங்கையின் திருமணத்தை ஊர் மெச்ச செய்தான். தந்தையாக கணேசன் நகை, புடவை சீர் என செய்தாலும்.. தங்கையின் திருமணத்தை இது வரை தன் சொந்தங்கள் மத்தியில் நடத்துயிராத வகையில், ஆடம்பரமாக அண்ணன் ஷிவா செய்து முடித்தான்.

அத்தனை பெருமை கோதைக்கு. தன் சொல் பலித்துவிட்டது.. தன் மகன் சிறப்பாக இருக்கிறான்.. எங்கள் இழுபறி நிலை மாறி.. தாராளமாக எல்லாம்  செய்யலாம்.. என்ற நிலை வந்துவிட்டது என அன்னைக்கு ஆனந்தம். 

திருமணம் முடிந்து, மகளை நல்ல விதமாக புகுந்த வீடு அனுப்பி வைத்தனர். அடுத்த ஒரு வாரத்தில் ஷிவா கிளம்பினான். கோதை அவனிடம் திருமணம் பற்றி சொல்லி.. கேட்டுக் கொண்டுதான் அவனை ஊருக்கு அனுப்பினார்.

ஷிவா, வந்து சேர்ந்தான்.. வேலையில் கவனம் வைத்தான். அன்னை அடிக்கடி போன் செய்தார்.. மகன் நல்ல விதமாகத்தான் பேசிக் கொண்டிருந்தான்.. ‘உன் ஜாதகம் பார்த்தோம்.. கல்யாணம் ஆக லேட் ஆகுமாம்.. ஏதோ பரிகாரம் செய்யணுமாம்.. எப்போ ப்பா வர..’ என்பது வரை எல்லாம் பேசிக் கொண்டுதான் இருந்தனர்.

அடுத்து ஒரு மூன்று மாதங்களில் அன்னை தந்தையை அதிகம் அழைக்கவில்லை ஷிவா. இவர்களும்.. மகள் வரபோக இருக்க.. அவளும் தாய்மையை அடைய.. அங்கே செல்லுவது, மகளுக்கு உதவுவது என இருந்தார் கோதை.. அதனால் மகனிடம் எப்போதாவது பேசுவது என நாட்கள் சென்றது.

ஹரிணியின் வளைகாப்பு முடிந்தது.. ஹரிணியை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஹரிணி கேட்க தொடங்கி விட்டாள் “ஏன் ம்மா.. அண்ணன் கூப்பிறதே இல்லை… என்ன? சண்டை போட்டிய?” என்றாள்.

கோதைக்கும் அப்போதுதான் யோசனையே தொடங்கியது.. ஆனாலும் பெண்ணுக்கும் சமாதானம் சொன்னார் “அவனுக்கு வேலை ஜாஸ்தி டி.. அத்தோடு டைம் டிப்பிரென்ட் வேற இருக்குல்ல..” என்றார்.

ஹரிணி “சரிதான், வாரத்தில் ஒருநாள் கூப்பிட மாட்டானா?.. நான் வந்திருக்கேன்.. எப்படி இருக்க.. என்னான்னு.. இன்னும் கேட்கவேயில்லை. உன் பையனுக்கு சம்பாதிக்கிரோம்ன்னு திமிரு..” என்றாள் விளையாட்டாய்.

கோதை மகளிடம் சமாதானமாக பேசி.. அமைதியாக்கினார்.

ஹரிணி, பத்து நாட்கள் விடுமுறையில் வந்திருந்தாள். அவளும் வேலைக்கு செல்வதால்.. சென்னை கிளம்பிவிட்டாள் விடுமுறை முடிந்து. கோதைதான், மகளுக்கு பிரசவம் பார்க்க சென்னை செல்ல வேண்டும், அடுத்த ஒரு மாதத்தில். 

ஷிவா அங்கே தடுமாறி நின்றிருந்தான்.. கொஞ்சம் தடம் மாறியும் நின்றிருந்தான். 

லியோனா, அவள் பெயர். அவனின் மேலதிகாரின்யின் மகள். ஒரு பார்ட்டியில் அவளை, அவனக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஜோன்ஸ். அவர் “ஹேய் ஷிவ்.. என்னுடைய பெண்.. லியோனா” என்றார்.

லியோனா அவனை பார்த்த பார்வையே.. ஒரு அதிசயத்தை பார்ப்பவள் போல, அவனை விழி விரித்து பார்த்தாள். அவளின் விழி விரிப்பில்.. அவளின் ஆலிவ் நிற விழி.. அவனை தனக்குள் எடுத்துக் கொண்டது போல.

ஷிவா, முதலில் பவ்யமாக தனது மேலதிகாரின்யின் மகள் என வணக்கம் சொல்லி தள்ளி நின்றான்.

சற்று நேரத்தில் அவளே வந்து பேசினாள் அவனிடம். அப்போதுதான், அவளை பார்க்கவே நிமிர்ந்தான், ஷிவா. சற்று அசட்டையாகத்தான் நோக்கினான். ஆனால், அவளின் பார்வை.. அவனையும் அளவிட வைத்தது. ஷிவா அவளை பார்வையால் அளவிட தொடங்கினான்.. மெழுகு சிலை.. தந்த மேனி.. என அவன் பத்தாவது.. பனிரெண்டாவது வகுப்பில் படித்த.. தமிழ் வர்ணனைகள்தான் நினைவில் வந்தது அவனுக்கு.. அவளின் நிறத்தை பார்த்து. 

இங்கே.. வெளிநாடு வந்த பின் அந்த நிறம் பழக்கம் என்றாலும்.. அசரடிக்கும் அழகில்.. தன்னையே ஈர்ப்பாய் பார்க்கும்.. இந்த பெண்ணின் நிறம்.. அவனை ரசிக்க வைத்தது. மெல்லிய தேகம்.. அவளை எடுத்து காட்டும் சின்ன உடை.. உதடுகள் செர்ரிதான்..  ஆனால், அதையெல்லாம் விட, விழுங்குவது போல.. அவளின் கண்கள்.. ஆலிவ் நிற விழி கொண்ட கண்கள்.. அவனை சொல்லாமல் கொள்ளாமல்.. அவள் பக்கம் ஈர்த்தது.

லியோனா ‘உங்க நிறம் எனக்கு பிடித்திருக்கிறது’ எனத்தான் பேச்சை தொடங்கினாள் பெண். மெல்ல மெல்ல ஒன்றாக பேச தொடங்கினர் இருவரும். பார்ட்டி முடியும் நேரம் அவனின் எண் வாங்கிக் கொண்டாள்.. அவனை அடுத்த வாரம் ட்டேடிங்க்கு அழைத்தாள் லியோனா.

ஷிவா ஸ்தம்பித்து நின்றான். ‘நான் ஏன்’ எனதான் முதலில் தோன்றியது. 

அவனின் பார்வையை உணர்ந்து.. லியோனா, சிரித்துக் கொண்டே “கண்டிப்பாக வரனும்” என்றாள். ப்பா அந்த சிரிப்பு.. அவனை அடித்து போட்டது. அவனால் அதிலிருந்து மீறவோ.. மீளவோ  முடியவில்லை. நம்மூரில் சொல்வார்களே.. ‘மோகினி அடிச்சிடுச்சு’ என அப்படிதான் ஆனது அவனுக்கு.

ஷிவாவிற்கு என நிறைய கட்டுபாடுகள் உண்டு.. அவன் தனக்கு தானே நிறைய கட்டுப்பாடுகள் கொண்டவன். மாதத்தில் ஒருதரம் தான் ட்ரிங்க்ஸ். மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் அவுட்டிங். தன்னுடைய செலவு கணக்கை கூட எழுதி வைப்பான். அனாவசியமாக செலவு செய்ய மாட்டான். அத்தோடு பெண் என்பவள்.. திருமணத்திற்கு பிறகு, நான் அறிய வேண்டிய பொக்கிஷம் எனத்தான் அவனின் எண்ணம்.

ஷிவா, கல்லூரி காலத்தில் கூட பெண்களோடு பேசுவான்.. பழகுவான்.. ஆனால், மனதை கொடுத்ததில்லை. அப்படியும் யாரும் அவனை அணுகியதில்லை. எனவே ஷிவா தன்னுடைய கொள்கைகளை பேணி வந்தான் போல. சந்தர்ப்பம் அமையாதவரை எல்லோரும் நல்லவர்கள் தானே.

ஷிவாவும், அப்படிதான்.. லியோனாவை தவிர்த்திடு தவிர்த்திடு.. என மூளை இந்த ஒரு வாரமாக சொல்லிக் கொண்டே இருந்தது. வேலையில் கவனம் பதிகிறது, ஆனால், அதற்கு சமமாக அவளிடமும் கவனம் சென்றது. 

லியோனாவும் இந்த ஒருவாரமாக, தினமும் தன்னுடைய தோட்டத்திலிருந்து மலர்களை புகைப்படம் எடுத்து அனுப்புவாள், தன்னுடைய மொம்மைகளை.. தன் வளர்ப்பு பிராணியை என எல்லாவற்றையும் அனுப்புவாள், அவனுக்கு. அதில் அழகான வாழ்த்துகளும் வார்த்தை வடிவமாக வந்தது. 

ஷிவாவும்.. நன்றி என பதில் அனுப்புவான். 

இரண்டு நாட்கள் சென்று.. மாலையில் ஒருமுறை அழைத்தாள்.. அவனை. ஷிவா, எடுப்பதா வேண்டாமா என யோசனையில் அமர்ந்துவிட்டான். 

பின் லியோனா “சந்திப்போம்..” என செய்தி அனுப்பி வைத்தாள்.

இப்படியே அந்த வாரம் சென்றது.. வார இறுதியில் லியோனா அழைத்தாள் அவனை. ஷிவா “இந்த வாரம் ப்ரெண்ட்ஸ் கூட வெளியில்போறேன்”என சொல்லி தப்பித்தான் அவளிடமிருந்து.

அடுத்த வாரமும்.. லியோனாவின் செய்திகளும் படங்களும் என சென்றது.. ஷிவாவிற்கு நாட்கள் கடந்தது. அண்ட் வாரமும் தப்பித்துக் கொண்டான் ஷிவா.

அடுத்த வாரத்தில், லியோனா அழைத்தாள். தயங்கினாலும் பேச தொடங்கினான். மெல்லிய சாரலாக அவர்களின் பேச்சு தொடங்கியது. காலை மாலை இருவரும் அழைத்து பேச தொடங்கினர்.

அந்த வார இறுதி நாளும் விடிந்தது.. லியோனா உரிமையாக அழைத்தாள் ஷிவாவை.

ஷிவாவின் மனதில் போராட்டம் தொடங்கியது. ஆசைக்கும், தனது கொள்கைகளுக்கும் நடுவில் போராடினான். லியோனா, மதியம் லஞ்ச்க்கு  ஹோட்டல் பெயர் சொல்லி.. டேபிள் புக்.. செய்து அழைக்கவும்.. ஷிவாவின் ஆசையே வென்றது. அவளை, அவள் சொன்ன நேரத்திற்கு சந்தித்தான்.. ஹோட்டலில்.

அவள் தன்னை எந்த கண்ணோட்டத்தோடு பார்க்கிறாள் என தெரிந்தும்.. அவளை தவிர்க்க முடியாமல்.. ஷிவா அங்கே சென்றான். லியோனா, இன்று பேரழகியாக இருந்தாள்.. செர்ரி நிற உடை.. கையில் ஒயின்.. மிக மெதுவாக அதை பருகிய படியே.. அந்த ஆலிவ் கண்களால்.. தன்னையே பார்ப்பவள் மேல் பித்தானான், ஷிவா.

அவனிற்கு, காதல் எது தெரியும்.. காமம் எது தெரியும்.. லியோனாவை பார்க்கும் முன் வரை. இப்போது எல்லாம் மறந்து போகிற்று.. அழகாக தன்னுடைய விரல் பற்றிக் கொண்டு.. “என் வீட்டில் நான் ஒரே பெண்.. இப்போதுதான் படிப்பு முடிச்சேன். வரலாறு எனக்கு பிடிக்கும், அதில்.. இப்போது கேரிஜ்வேட் நான், அப்பாவோட போர்ம்ஸ் பார்த்துக்கிறேன்.. இயற்கைன்னா எனக்கு பிடிக்கும்.. அத்தோடு பெட்ஸ்சும்..” என கதை படித்தவளின் கையை.. விலக்க முடியவில்லை அவனால். மேற்கொண்டு ஏதும் பேசவும் முடியவில்லை அவனால்.

மாலையில், அவளுடைய ஃபோர்ம்ஸ்க்கு அழைத்து போனாள் பெண்.. அங்கே பெரிய தோட்டம் இருந்தது. கேரட் பயிர் செய்திருந்தாள்.. அருகில் குதிரை இருந்தது.. மாடுகள், எப்படியும் முப்பது மாடுகளிருக்கும்.. எல்லாம் ஜெர்சி வகையை சேர்ந்தவை போல.. கறவைக்காக வளர்க்கப்படுகிறது என பார்த்தாலே தெரிந்தது அவனிற்கு.  நான்கு நாய்கள் என சின்ன பண்ணை அமைப்பை கொண்ட இடமாக இருந்தது அந்த இடம். 

மாடுகள் எல்லாம் பனியையும் தாங்கும் வண்ணம்.. பெரிய.. ஒரு குடோன் போன்ற அமைப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தாள். நான்கு பணியாளர்கள் கைகளில் பாதுகாப்பு உடைகளுடன் அதனை பராமரித்துக் கொண்டிருந்தனர்.

பண்ணையில் வீடு இருந்தது.. இரண்டு அறைகள்.. மேலே இரண்டு அறைகள் என அழகாக இருந்தது அந்த வீடு.. கொஞ்சம் பழமையும் கலந்து இருந்தது.

ஷிவாவிற்கு, அந்த வீட்டின் உள் செல்ல.. செல்ல.. மனம் பதைபதைக்க தொடங்கியது. பெரிதான வீடு.. வேலையாட்கள் என யாருமில்லை.. இருவர் மட்டுமே அங்கே. இவன் ஏதும் பேசவில்லை.. இன்னமும் அவள் பேச்சை நிறுத்தவில்லை. 

அவனின் கைகளை பிடித்திருந்த, அவள் விரல்கள்.. தனிமையில் அவனிடம் உரிமை எடுக்க தொடங்கியது. அந்த உரிமையை அவன் இழக்கத் தயாராக இல்லை.. மெல்ல மெல்ல அவளுள் தொலைய தொடங்கினான். கண்களை மூடிக் கொண்டான்.. தன்னுடைய ஆசைகளுக்காக, தன்னை.. தன் கொள்கைகளை.. இழக்க தொடங்கினான். 

தவறு என தெரிந்தே ஒரு பெண்ணோடு தன் இரவை பகிரும் ஷிவாவின் நிலை தடதடக்க தொடங்கியது.. உள்ளே பூகம்பம்.. வெளியே அவளின் மென் தீண்டல்.. உயர் இனிக்க.. தொடங்கியது.

ஷிவா.. மனசாட்சி எனும் பூகம்பத்தை தன்னுள் புதைத்து.. அவளுள், அந்த பூகம்பத்தை தேட தொடங்கினான்.. வெற்றி அவனுதே.. அவன் இதுவரை கண்டிராத.. பொக்கிஷத்தின் அத்தனை காட்சிகளும் அவனுக்காக  விரிந்து.. அவனை கிறங்க வைத்தது. சுகம் தந்தது.

“அலறுது அலறுது இருதயம்..

அதிருது அதிருது அடிமனம்..

கதறுது  கதறுது இளமனம்..

உன் மோகம் கூப்பிடுதே..”

ஷிவாவிற்கு உறக்கம் வரவில்லை.. தன் செயல் குறித்து.. மனசாட்சி மீண்டும் குரலெழுப்பியது. அவனை உலுக்கியது.. அமைதியாக எழுந்து அந்த அறையிலிருந்து வெளியே வந்தான். 

லியோனாவும்.. “ஷிவ்..” என அழைத்துக் கொண்டே அவனோடு வந்தாள்.. “ஏன்.. உங்களுக்கு பிடிக்கலையா?” என்றாள் பெண்.

ஷிவா, அவளை நேருக்கு நேராக பார்த்தான். அவன் மனதில் ‘என்னை இவள் புரிந்துக் கொள்ள முயல்கிறாளா?’ என்ற வினா வந்தது. அதில் பெரிய நிம்மதி வர.. ‘தன்னையும் தன் கொள்கைகளையும் மீட்டுக் கொள்ளலாம்’ என்ற எண்ணமும் வந்தது இந்த நொடி அவனுள். 

ஷிவா “நாம் கல்யாணம் செய்துக்கலாமா” என்றான்.

லியோனா ‘ஏன்’ என்பதாக பார்த்தாள். இத்தனை நாட்களில் அவளிடம் அப்படி அவன் கேட்ட்கவே இல்லையே.. எனவே, குழப்பமாக பார்த்தாள் அவனை.. ‘ஏன் என்னை பிடிக்கலையா.. இல்லை, பயமா.. இல்லை, என்மேல் நம்பிக்கை இல்லையா..’ என்ற குழப்பம் அவளுக்கு.

ஷிவா “என்ன.. சொல்லு, கல்யாணம் செய்துக்கலாமா.. உனக்கு என்னை பிடிச்சிருக்குதானே” என்றான்.

லியோனா அவனை பின்னிலிருந்து அணைத்துக் கொண்டாள்.. அவனின் தேகம் சிலிர்க்கத்தான் செய்தது.. அதை உணர்ந்தவள்.. “என் கூட வாங்க” என மேலே அழைத்து சென்றாள்.

பெரிய கண்ணாடி அறை அது. அது எப்படி என்றால்.. பொழியும் பனியை ரசிக்கும் இடம் அது. வானத்தின் வெள்ளை நிற திரவ்மாக.. தாய் பாலாக  சுரக்கும்.. அழுத்தத்தை ரசிக்கும் இடம். சுவராக, மேலும்.. கீழும்.. பக்க வாட்டில்.. என எல்லாம் கண்ணாடிகள்.  அண்ணார்ந்து வானத்தை பார்த்தால்.. இருட்டில்.. சின்ன சின்ன வெள்ளை புள்ளிகளாக பனி துகள்கள்.. அப்படியே நட்சத்திரம் தங்கள் மேல் விழுவது போல தோன்றும்.. அங்கே கூட்டி சென்றாள் பெண்.. அவனை அங்கே நிறுத்தி.. மீண்டும் உள்ளே சென்று.. ஒரு டின் பீர் எடுத்து வந்தாள்.. அவனை பின்னோடு கட்டிக் கொண்டு.. தான் கொஞ்சம் பருகி, அவள் கொஞ்சம் பருகினாள். வேறு பேசவில்லை அவள்.

ஷிவாவிற்கும் ‘என்ன கேட்பது.. இனிமையான நேரத்தை ஏன் வீணடிப்பானே’ என தோன்ற.. ஆசைகள் மீண்டும் மேலெழும்பி அவனை, அவள்மேல் பித்தாக்கியது.

இப்படியே மீண்டும் அவர்களின் நாட்கள் சென்றது. வார இறுதி நாட்களில் இங்கே வந்து விடுவர் இருவரும். நொடிகளை வீணாக்காமல் இருவரும் கூடி களித்தனர். அவ்வபோது ஷிவாவே கேட்பான்.. ‘திருமணம் செய்துக்கலாம்..’ என்பான். அவள் பதிலே சொல்லுவதில்லை.

மாதங்களாக.. இருவரும் ஒரே வீட்டில் வாழ தொடங்கினர். ஷிவாவிற்கு இப்போது அதிக நம்பிக்கை வர தொடங்கிவிட்டது. அவளை தன் காதலால் கட்டி வைக்க முடியும் என தோன்றியது. 

தொடங்கினான்.. தன் காதல் இம்சைகளை.. அவளை சமைக்க வைத்தான்.. தான் அருகில் நின்று.. தோசை ஊற்ற சொல்லிக் கொடுத்தான். சாம்பார் வைப்பது.. காபி போடுவது.. என ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தான். தானும் அவளுக்கு தன்னுடைய உணவு வகைகளை சமைத்து கொடுத்தான்.

லியோனாவிற்கு, அதெல்லாம் ஒத்துக் கொள்ளுவது பெரிய போராட்டமாக இருந்தது.. சமையல் என்பதே கடுப்பாக ஆனது. ஆனாலும், அவனுக்காக செய்தாள் பெண். ஆனால், உணவு.. பழக்க வழக்கம் ஒத்துக் கொள்ளவில்லை.

ஷிவா, நிறைய உதவினான்.. அவளுக்கு எல்லாம் செய்துக் கொடுப்பான்.. சமையலுக்கு உதவி செய்வான்.. துணி துவைக்க உதவினான்.. வீடு துடைத்து கொடுத்தான்.. அவளுக்கு நிறைய இனிப்பு உணவு வகைகள் செய்து கொடுத்தான். எல்லாம் செய்தான்.. தன் காதலின் ஆளுமையை காட்டினான் ஷிவா.

மீண்டும் ஷிவா கேட்டான் “கல்யாணம் செய்துக்கலாம்” என.

லியோனாவிற்கு.. இவனின் தொல்லைகள்.. அன்புத் தொல்லைகள்.. அதிகமாகியதாக எண்ணம் வந்தது. இந்த நிலையில் அவனின் இந்த கேள்வியில் பெண் “பார்க்கலாம் ஷிவ். இன்னும் கொஞ்ச நாள்.. பார்க்கலாம்.. இன்னும் நான் நிறைய பழகனுமில்ல..” என்றாள் முதல்முறை வாய் திறந்து.

ஷிவாவிற்கு அவளின் பதிலில் நம்பிக்கை வந்தது.. ’நான் அவளை மாற்றிடுவேன்’ என தோன்றியது.

 

Advertisement