Advertisement

மதுர ப்ரியம்!

4

இன்று,

இரவு மணி பத்து.

மது, பேசிமுடித்து வந்து அமர்ந்தாள். மதுவின் தந்தை தண்டபாணி, விஜயா இருவரும் கீரை ஆய்ந்துக் கொண்டிருந்தனர்.

தரணி, வேலை முடித்து அப்போத்துதான் வந்தான். தரணி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான். தரணி “மது.. காபி“  என்றபடி அமர்ந்தான்.

மது “ஏன்டா லேட்.. எல்லோரும் சாப்பிட்டாச்சி, இன்னிக்கு பரோட்டா.. உன் கூட சேர்ந்து சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்..” என போனில் எதையோ பார்த்துக் கொண்டே பேசினாள் பெண்.

தரணிக்கு, வேலை பளு காரணமாக மதுவின் பேச்சு ஏதும் மண்டையில் ஏறவில்லை.. அப்படியே அமர்ந்துக் கொண்டான். 

மீண்டும் மது, தரணியிடம் “ஏன் டா லேட்..” என போனை கீழே வைத்து விட்டு கேட்க தொடங்கினாள். 

அவ்வளவுதான் தரணிக்கு எங்கே, என்ன கோவமோ கத்தினான் “ஏன் இப்படி கேள்வியா கேட்க்கிற, நீ வந்து இந்த வேலையை செய்து பாரு தெரியும், லேட் ஆகிடுச்சி விடுவியா” என கத்தினான். கத்தியவன் தலையை சோபாவில் சாய்த்து.. மேலே பார்த்து அமர்ந்துக் கொண்டான்.

தரணியின் சத்தத்தில் விஜயா “என்ன டா, அவகிட்ட எரிஞ்சி விழற..” என அதட்டவும், மது அமைதியாக எழுந்து தனதறைக்கு சென்றுவிட்டாள்.

விஜயா “பாரு.. மது முகமே வாடி போச்சு.. காலையிலிருந்து எத்தனை வேலை தெரியுமா.. சும்மாவா இருக்கா அவ.. என்னமோ நீ மட்டும்தான் வேலை பார்க்கிறா மாதிரி பேசற…” என திட்டத் தொடங்கினார் மகனை.

மதுவிற்கு, காலையிலிருந்து அவ்வளவு வேலை. இவர்களின் மெஸ் என்பது கொரொனோ நேரத்தில் தொடங்கப்பட்டது. அதாவது, அங்கேயே டேபிள் போட்டு உணவு வழங்கும் மெஸ் அல்ல, சமைத்து பார்சல் கட்டி தரும் மெஸ். கொரோனோ நேரத்தில்  விடுதிகள் கூட மூடியிருந்த பொழுதுதான் இவர்கள், காஞ்சிபுரத்திலிருந்து சென்னை குடி பெயர்ந்தனர். எனவே, அப்போது தேவையாக இருந்தது.. இவ்வாறாண  விடுதிகள்தான். எனவே, அதனை தொடங்கினர்.

கராணம் மதுதான்.  

அன்று..

உண்டு முடித்து, ஸ்ரீ எழுந்து தங்களின் அறைக்கு சென்றுவிட்டான். விஜயா, உண்டு.. மதிய சமையலுக்கு தேவையான காய்கறி எல்லாம் நறுக்கி கொடுத்துவிட்டு, தனதறைக்கு வந்தார், மகனை பார்க்க.

விஜயா “என்னடா அங்க ஏதும் வீடு பார்த்திருக்கியா..” என்றார், முகம் நிறைய புன்னகையோடு.

அப்போதுதான் ஸ்ரீக்கு, தான் அன்னையை அங்கே அழைத்து செல்வது பற்றி தன் மாமாவிடம் பேசியிருந்தது நினைவிலேயே வந்தது. ஆனால், இப்போது ஸ்ரீ பேச வந்த செய்தி இதுவல்லவே.. எனவே, தலைகுனிந்தான்.

நிமிர்ந்து அமர்ந்து சங்கடமாக அன்னையை பார்த்தான்.

விஜயா “என்ன ப்பா” என்றார் மகனின் பார்வை மாற்றத்தை கண்டுக் கொண்டு.

ஸ்ரீ, கட்டிலிருந்து எழுந்து தன் அன்னையின் அருகே அமர்ந்தான்.. “அம்மா  நான்.. நான்.. அது, எப்படி சொல்றது. நீ என் நிலையை புரிஞ்சிக்கணும் ம்மா.. எனக்கு இந்த குடும்பம்.. எ..எல்லாம் ரொம்ப முக்கியம் அம்மா, எதுக்காகவும் நான் அதை விடமாட்டேன்..” என்றான் சம்மந்தமே இல்லாமல்.

வித்யாவிற்கு எதற்கு இந்த வார்த்தைகள் என நெஞ்சு பதற தயாராகியது.. வேகமாக இதயம் துடிக்க “எ..ஏன் என்ன ஸ்ரீ” என்றார்.

ஸ்ரீ “நான், நம்ம அபர்ணா இருக்கால்ல.. அ..ப்பாவோட அக்கா பெண்.. அபர்ணா, அவளை விரும்பறேன். கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன்” என கண்ணிமைக்கும் நேரத்தில்.. எல்லோரின் கனவு கோட்டையையும் தூள் தூள்ளாக்கினான்.

வித்யாவிற்கு, அந்த ஷணம் பேச்சு மூச்சு ஏதும் வரவில்லை. ஆனால், இப்போது “என்ன டா சொல்ற… என்ன டா சொல்ற..” என எழுந்து நின்றார்.

ஸ்ரீ கலவரமாக எழுந்து நின்றான்.

வித்யா “ஏன் டா…யாருடா அவங்க எல்லாம்.. எ..எப்படி  ‘நம்ம..’  யாரு? நம்ம அபர்ணா.. எ..எப்படி டா அவளை தெரியும்” என்றார், காட்டமானக் குரலில்.

ஸ்ரீ எழுந்து நின்று, மெதுவான குரலில் “என் காலேஜ் ஜூனியர் ம்மா.. ரொம்ப நல்ல பெண்..” என முடிக்க கூட இல்லை.. “சட்” என ஒரு சத்தம் வந்தது.

வித்யா, ஸ்ரீயை அடித்திருந்தார். அடித்தவர் அழ தொடங்கினார்.. ”அய்யோ.. அய்யோ.. ஏமாந்து போயிட்டனே.. என் ரத்தம் என் ரத்தம்ன்னு இறுமாப்போடு இருந்துட்டனே.. எல்லோரும் சொல்லுவது போல.. அவங்க வாரிசுன்னு நிருபிச்சிட்டானே..” என பெருங் குரலெடுத்து அழத் தொடங்கினார்.

தரணியும் சித்ராவும் ஹாலில் இருந்தனர். மது டீ போட்டுக் கொண்டிருந்தாள். எனவே, தரணி முதலில் ஓடினான். பின்னாலேயே சித்ராவும் சென்றார். 

வித்யா, மீண்டும் அழ தொடங்கினார் தன் அண்ணியை பார்த்து. தன் கணவர் செய்த துரோகத்தை விட மகனின் இந்த பேச்சும்.. செயலும் வித்யாவை தாக்க.. தன் அண்ணியை பார்த்தவர் குற்றம் செய்த உணர்வில், தன் மகன் சொல்லியதை ..கூறிக்கொண்டே அழ தொடங்கினார். 

டீ எடுத்துக் கொண்டு வந்தாள் மது.. அத்தையின் அழுகை சத்தம் கேட்க்கவும் விரைந்து சென்றவள்.. ஸ்ரீயின் பெயர் அடிபடவும்.. அப்படியே அந்த அறையின் ஓரம் நின்றுக் கொண்டாள். எல்லாம் கேட்டும் கொண்டாள்.

திருடன், நிலவறையில் பதுங்கிய நிலை இப்போது அவளின் நிலை. இரண்டு கைகளிலும் டீ டம்பளர்.. ஆட்டம் காணத் தொடங்கியது. ‘அத்தான் விரும்புகிறாரா..’ வாய்விட்டு கதறி தனது நேசத்தை சொல்ல முடியவில்லை அவளால். தனது கனவு காதல்.. தன்னுடைய காலடியிலேயே விழுந்து நொறுங்கும் சத்தம்.. தனக்கான இதயத்தில் இப்போது வலியாக உணர்ந்தாள், பெண். 

என்ன செய்வது என தெரியாமல் மீண்டும் அடுப்பங்கறை சென்று.. டீயை வைத்தவள். தங்களுக்கு.. என உள்ள அறையில் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள், மது.

அது பழைய காலத்து வீடு. அறைகள் என நிறைய இல்லை. இரண்டு அறைகள்தான். ஒன்று வித்யாவின் குடும்பத்திற்கு.. அடுத்தது தண்டபாணி குடும்பத்திற்கு. பெரியவர்கள் எல்லோரும் ஹாலில்தான் உறங்குவது. மது வயது வந்த பின், அவளுக்கு எனதான் அந்த அறை. அதில்தான் தண்டபாணி குடும்பத்தின் பீரோ, மற்றும் முக்கிய பொருட்கள் இருக்கும். இரவில் மது சென்று உறங்குவாள் அவ்வளவே.

அங்கே வித்யா சொல்லி முடித்ததும்.. தரணிக்கு, மது நினைவுதான் வந்தது. தரணியிடம் ஏதும் நேரடியாக அவள் சொல்லியதில்லை என்றாலும்.. மதுவின் எண்ணம் கொஞ்சம் கொஞ்சம் புரிந்திருந்தது.. அவனுக்கு ‘அவளுக்கு ஸ்ரீ என்றால் இஷ்ட்டம்’ என. எனவே தனது தோழியை தேடி வெளியே வந்தான்.

வித்யாவின் அழுகையையும் புலம்பலையும் கேட்ட சித்ரா.. வெறித்து பார்த்தார் ஸ்ரீயை. வேறு என்ன சொல்லுவது என தெரியவில்லை. நெஞ்ச்சடைத்தது அவருக்கு. ஆனால், நாத்தனாரின் எதிரில் காட்டிக் கொள்ள முடியவில்லை. வித்யா, மகனை திட்டி தீர்த்து அழுதுக் கொண்டிருந்தார்.

சித்ரா “விடுங்க அண்ணி, எதோ இது மட்டும் சந்தோஷம்.. அவங்க அப்பா சொந்தத்தை உங்ககிட்ட சேர்க்கிறானே.. யாரோ தெரியாத இடம் இல்லையே..” என சொல்லி தன் முந்தானையால் கண்ணின் ஓரங்களை துடைத்துக் கொண்டு எழுந்து சென்றார்.

வித்யாவிற்கு, தன் அண்ணியின் எண்ணம் தெரியுமே.. எனவே இன்னும் அழுகையாக வந்தது.. “போடா.. வெளிய போடா நீ” என மீண்டும் அவனை அடிக்க தொடங்கினார்.

தரணி, வெளியே வந்து மதுவை தேடினான். மது அறைக்குள் இருப்பது  தெரிய.. கதவை தட்டினான் “மது..மது..” என நான்கு முறை அழைத்தான். 

அதன்பிறகு குரல் கொடுத்தாள்  மது “வரேன்” என.

 

Advertisement