Advertisement

மதுர ப்ரியம்!

3

ஷிவசங்கர்.. 32. கணேசசெல்வன் கோதை தம்பதியின் சீமந்த புத்திரன், அவனிற்கு அடுத்து ஹரிணீ என்ற பெண். கணேசனுக்கு தருமபுரி சொந்த ஊர். வேலை காரணமாக சேலம் வந்து குடியேறினார். 

கணேசனுக்கு இரயிவேயில் கிளெர்க் வேலை. அன்னை கோதை, ஒரு டிகிரி முடித்திருந்தார். பிள்ளைகள் வளர்ந்த பின் அதை பயன்படுத்தி.. அருகில் உள்ள ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். குவார்ட்ஸ் வாழ்க்கை. அமைதியான சீரான வாழ்க்கை முறை அவர்களுடையது.

கணேசன், சாந்த குணம்.. அதிர்ந்து பேசமாட்டார். பிள்ளைகளை அதட்ட கூட மாட்டார். ஒருமுறை ஹரிணீ, பள்ளி வேனில் இருந்து இறங்கும் போது.. கீழே விழுந்துவிட்டாள். இவள் இறங்குவதற்கு முன் வேன் நகர தொடங்கிவிட்டதுதான் அதற்கு காரணம். அருகில் இருக்கும்பெரிய பெண் ஒருவள் வண்டியை தட்ட, வேன் நின்றுவிட்டது,அதனால் பெரிய ஆபத்து தடுக்க்ப்பாட்டது. அதில், நான்காம் வகுப்பு படிக்கும் ஹரிணீக்கு, கீழே விழுந்து அடி. தெருவே கூடி, பள்ளி வேன் ஓட்டுனர்.. நடத்துனரோடு.. சண்டையிட.. கணேசனோ, அமைதியாக தன் மகளை கையில் பிடித்துக் கொண்டு.. தன் மனையாளின் பேச்சுகளையும் நிறுத்துமாறு.. சொல்லிக் கொண்டு.. நின்றிருந்தார் மனிதர். அப்படி ஒரு குணம் அவருக்கு. 

எதற்கும் பிள்ளைகளை வற்புறுத்தமாட்டார். எல்லாம் பிள்ளைகள் விருப்பம்தான். என்ன தேவையோ அதை முகம் சுளிக்காமல் செய்து தருவார். வேலை முடிந்தால்.. வீடு. வீடு விட்டால் வேலை இதுதான் தெரியும் அவருக்கு. மனையாளை வேலைக்கு கூட்டி செல்லுவது, மகளை டியூஷன் கூட்டி செல்லுவது என இருப்பார், கணேசன். 

அன்னை கோதைதான், கண்டிப்பு வீட்டில். வீட்டு நிர்வாகம் அவர்தான். கோதைக்கு இந்த இடிச்சிக்கோ பிடிச்சிக்கோ வாழ்க்கையில் ஒரு அதிருப்தி. கைக்கும் வாய்க்கும் சரியாக இருப்பதாக எண்ணம்.. ‘ஆசையாக இன்னொரு புடவையை எடுத்துக் கொள்ள முடிகிறதா… வருடத்தில் ஒரு நாள் ஹோட்டல்.. அதற்கே அந்த மாசம் கையை கடிக்கும்’ என புலம்புவார், கோதை. குடும்பம், பிள்ளைகள் படிப்பு, ஊரில் பெரியவர்களின் மருத்துவம்.. தவிர.. இவரின் அக்கா கணவர் பிஸினெஸ் என எதோ செய்ய.. அவருக்கு லோன் போட்டு கொடுத்திருக்கிறார் தன் கணவர்.. மாதத்தில் அதை பிடித்துக் கொள்வர். அவர்களிடம் அதை பேசி வாங்குவதற்குள்.. ஜீவன் போகிவிடும்.. கோதைக்கு. இது எல்லாம் சேர்ந்து அவரை இப்படி யோசிக்க சொல்லியது போல.

அதனாலோ என்னமோ கோதைக்கு சொகுசான வெளிநாட்டு வாழ்க்கையின் மீது மோகம் உண்டு எப்போதும். அதனாலேயே தன் பிள்ளைகளை வளர்க்கும் போதே.. வெளிநாட்டு வேலை.. சம்பளம்.. என அதன் பெருமையாக சொல்லி சொல்லி வளர்த்தார். அதனாலோ என்னமோ இரு பிள்ளைகளும் வெளிநாட்டில்தான் இருக்கிறார்கள். இல்லை, இப்போது ஷிவா, இங்கே வந்துவிட்டான். அவன் வந்தது இன்னும் தெரியாதே கோதைக்கு.

ஷிவா ஹரிணீ இருவரும்  நன்றாக படித்தனர். ஷிவசங்கர், பள்ளி படிப்பில் கொஞ்சம் சோர்ந்து இருந்தாலும் கல்லூரியில் இஞ்னியரிங் எடுத்தான். கோதை ஆசைப்பட்டபடி பெரிய கல்லூரி இல்லைதான்.. ஆனால், மகன் படிப்பில் கவனம் வைக்க தொடங்கினான்.. கல்லூரியில்.

அடுத்து, சென்னை வந்து சேர்ந்தான். ஒரு பெரிய யூனிவெர்சிட்டியில் MS நானோ டெக்னாலாஜி எடுத்து பயின்றான். அதில் அவன் கோல்ட் மெடல்.. பிடித்து செய்தான் தன் படிப்பை, எனவே நன்றாக தேர்வாகினான். அத்தோடு, எடுத்ததும் நல்ல வேலை..  ஒரு பெரிய மென்பொருள் நிறவனத்தின் தலமை அலுவகம் அவனை தனக்குள் வாரி எடுத்துக் கொண்டது.

அங்கே முன்று வருடம்.. பாலாஜியும் அவனுக்கு அங்கேதான் பழக்கம். அதன்பின் ஷிவாவிற்கு அங்கே வேலை பிடிக்கவில்லை. மேற்கொண்டு தனது வேலையை வெளிநாடுகளில் தேடினான். சரியாக அமைந்தது ஒரு சிம்கார்ட் நிறுவனத்தில் வேலை. அதை பற்றிக் கொண்டு வெளிநாடு பறந்தான் ஷிவா.

ஹரிணீ அண்ணனை பின்பற்றி இஞ்னியரிங் படித்தாள். அவளும் சென்னையில் ஆறுமாதம் வேலை பார்த்தாள். பின் திருமணம் செய்து கனடா அனுப்பி வைத்தனர் பெண்ணை. ஹரிணீயின் திருமணத்திற்கு வந்தான் ஷிவா. அதற்கு பார்த்தது, அதன்பின் அவனை இன்னும் பெற்றோர் பார்க்கவேயில்லை.

காரணம், என்ன பெரிய காரணம்.. எல்லாம் காதல்தான். ஷிவாவிற்கு, பள்ளி படிக்கும் வரை எல்லாம் விளையாட்டுதான். மதிப்பெண் என்பதை அவன் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், அதற்காக குறைவு என்றில்லை 70-80குள் மார்க் வந்துவிடும்.

ஷிவாவிற்கு கல்லூரியில் சேரும் போதுதான்.. அன்னையின் திட்டும், தந்தையின் அமைதியும் எதையோ சொல்லியது. அது தொட்டு ஷிவா கவனமானான் படிப்பில்.

சிவாவின் கல்லூரி நாட்கள் வீட்டிலிருந்து அவனை பிரித்தது. எனவே, சிலநாட்கள் கல்லூரி ஹாஸ்ட்டல், அதன்பின் இறுதி வருடத்தில் ரூம் எடுத்து தங்கினான். PG படிக்கும் போதும் ரூம்மெடுத்து தங்கிதான் அவனின் காலம் சென்றது. எனவே, எதை மிஸ் செய்தான் என்றால்.. சாப்பாடு சாப்பாடுதான். என்னமோ உணவு ஒத்துக்கொள்ளாது பெரும்பாலும்.. முக்கால்வாசி நாட்கள் நூடுல்ஸ் தான் அவன் உண்பது. என்ன சாப்பிட்டாலும் அவனுக்கு வீட்டு உணவு போன்று ருசிக்காது. அதனாலோ என்னமோ உணவின் மேல் அவனுக்கு தீராத தாகம் வந்தது.

ஷிவாவிற்கு, சட்டென பிடித்தம் என வருவது சிரமம்.. எதிலும் ஈடுபட்டு விளையாடவோ.. ஒருவரிடம் தன் கருத்தை பகிரவோ விருப்பப்பட மாட்டான். விளையாட்டு என்றால் பள்ளி படிக்கும் போது முன்னால் நின்றவன்.. இப்போதெல்லாம் ரெலாக்ஸ்க்காக கூட விளையாடுவதில்லை. 

கலகலப்பான சுபாவிதான். ஆனால், வீட்டை விட்டு வந்து.. வருடங்கள் ஆக ஆக… படிப்பு, பொருளாதாரம், தான் கண்ட ஏமாற்றாம் எல்லாம் அவனை.. தனியனாக, தாய் தந்தைக்கு கூட பதில் சொல்ல முடியாதவனாக மாற்றிவிட்டது. 

கல்லூரியில் படிக்கும் போது.. மனது தன் அன்னை சொன்னதை தவிர வேறு எதிலும் செல்லுவதில்லை. அன்னையும் எப்போதும் அப்படிதான் ‘படி.. நல்ல செட்டில் ஆகு… வெளிநாடு போ.. அப்புறம் உன் வாழ்க்கை பற்றி யோசி’ எனத்தான் அவரின் அறிவுரை இருக்கும். அதனாலோ என்னமோ.. தன்னை தானே தள்ளி வைத்தான். தனக்கென நேரம் எடுக்க தவறினான்.. pg படிக்கும் போது, மாலையில், சின்னதான ஒரு கம்பெனியில் வேலை செய்தான்.. அதன்பின் படிப்பு என எதற்கும் நேரம் ஒதுக்காமல்.. தன்னை கூட கவனிக்க தவறி ஓடினான்.

அதை தொட்டு வீட்டில் பேசுவது வாரத்தில் ஒருநாள் என்றானது.. அப்போதும் அன்னை கோதை அவனை கேள்விகளால் துளைத்து விடுவார்.. ‘என்ன.. ட்ரெஸ் எல்லாம் வாஷ் செய்துட்டியா.. வாடகை கொடுத்துட்டியா.. இந்த மாசம் சம்பளம் வந்ததா.. காலேஜ் போறீயா.. நாங்க எதற்காவது பணம் அனுப்பனுமா’ என்பார்.

தந்தை கணேசன் “விடு அவனை.. படிக்கட்டுமே நிம்மதியாக, எதுக்கு இப்போது வேலை..” என அப்போதே கேட்பார்.

கோதை உடனே ஆரம்பிப்பார் “ம்.. போதும் என் கஷ்ட்டம் என்னோடு போதும். மாச சம்பளம் வைத்தியத்துக்கும் சாப்பாட்டுக்குமே சரியா போகுது.. என் பையனை நல்ல காலேஜில் சேர்க்க முடிந்ததா.. அவனாக சம்பாதித்து இந்த pg சேர்ந்திருக்கான்.. நம்மளாக ஏதும் கொடுக்க முடிந்ததா.. இல்லையே, எதோ அப்போ அப்போ கொஞ்சம் பணம் அனுப்பறோம்.. இப்போது, ஹரிணீ, காலேஜ் முடிக்க போறா கல்யாணத்துக்கு என்ன பண்றது.. இதுல.. பையன் படிக்கட்டுமாம்.. இவர் அப்படியே கலெக்டர் வேலை பார்க்கிறார்..” என பழைய பல்லவியை மீண்டும் பாடி தீர்த்திடுவார் கோதை.

ஆனால், அப்படி ஒன்றும் கஷ்ட ஜீவனம் இல்லைதான். என்ன மாமியார்க்கு ஊரில் உடல் நலமில்லாத வேலையில்.. கணேசன் பணம் அனுப்புவார், அதற்குதான் இந்த பேச்சு, கோதை. மகனை சம்பாதிக்க வைத்து, அவன் தேவைகளை பார்க்க செய்துவிட்டார். மகளை நல்ல கல்லூரியில் சேர்த்துவிட்டார். தன்னுடைய சம்பளத்தில் பெண்ணுக்கு எனத் தனியாக எடுத்து வைத்து விடுவார். இப்படி கணவரிடம் பேசினாலும், கோதை சாமார்த்தியம் இல்லை என்றால், இப்போது அவர்களின் ஓய்வு காலத்தில் மகன் கையை எதிர்பார்த்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், அப்படி இல்லாமல் கணேசன் கோதை இருவரும் தங்களை தாங்களே பார்த்துக் கொள்கின்றனர். தவறு செய்ததால் மகனிடம் பேசாமல் கௌரவமாக இருக்கின்றனர், இன்றுவரை. ஆனால், குற்றவுணர்வில் அவன் பேசவில்லை என்பதாகவும் சொல்லலாம்.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!@!

மது ப்ரியா 26. தண்டபாணி சித்ரலேகா தம்பதியின் சீமந்தபுத்ரிதான் மது, அவளிற்கு அடுத்து ஷ்ரவன்  என்ற தம்பி.  சொந்த ஊர் காஞ்சிபுரம். அங்கே தண்டபாணி ஒரு பட்டுமாளிகையில் சூப்பெர்வைசர் வேலை. அளவான குடும்பம், நிறைவான வாழ்க்கை அவர்களுடையது.

ஆனால், மதுவிற்கு ஒன்பது  வயது, ஷ்ரவன் நான்கு வயது. அப்படி இருக்கும் போது.. தண்டபாணியின் தங்கை விஜயா.. தன் கணவர் தன்னைவிட்டு பிரிந்து சென்றதால்.. நிர்கதியாய் தன் அண்ணன் வீடு வந்து சேர்ந்தார். 

விஜயாவிற்கு, ஸ்ரீனிவாசன் 13, தணிதரன் 8, என இரண்டு மகன்கள். தண்டபாணி ஓய்ந்து போனார். இவரும், தன் தங்கையின் கணவரை தேடாத இடமில்லை. அத்தோடு, தன் தங்கையை கொடுத்த இடத்தில் முறையிடவும் செய்தார். ஆனால், அவர்களோ ‘எல்லா  தவறும் உன் தங்கை மேல்தான்.. என்ன செய்தாலோ புருஷனை.. அவன் எங்களைவிட்டு போயிட்டான்’ என பேசினர்.

விஜயா அப்படி அடாவடியில்லை சாந்தமானவர். அவரின் கணவரும் மெடிக்கல் ரெப் என பணியாற்றிக் கொண்டிருந்தார். அழகான இரு மகன்கள் என வாழ்க்கை நன்றாகத்தான் சென்றது. 

Advertisement