Advertisement

வார இறுதியில்.. ஷிவா வருவான்.. ஒருமுறை அவன் வரும்போது திருப்பதி சென்றனர், பின் அவர்களின் குலதெய்வம் கோவிலுக்கு என குடும்பமாக சென்று வந்தனர். மது பொறுமையாக கோதைக்கும், ஹரிணிக்கும் ஒத்து போகினாள். அந்த விடுமுறை ஹரிணிக்கு இன்பமாக சென்றது. கோதைக்கும் தன் மகளை இப்படி கவனித்து அனுப்ப, அவளின் நலன் கேட்க.. தங்களுக்கு பின் அண்ணன் என்ற உறவு இருக்கிறது என நிம்மதி வந்தது. அதை மதுதான் செய்து தந்தாள் என்பதில் அவர்களுக்கு சந்தேகமே இல்லையே.  

ஷிவா, இங்கே வருவானா.. தங்களிடம் பேசுவனா.. அவனை பார்ப்போமோ என்ற நிலை மாறி, அவனை சுற்றி.. அவனின் குடும்பம் இருக்கிறது.. என்பதே அவனின் பெற்றோருக்கு நிம்மதி. அந்த உறவு, தன் மகளின் மேலும் அக்கறை கொள்ளும் என தெரிந்தபின் நிறைவானது பெற்றவர்களுக்கு. வயதான நிலையில் வேறு ஏதும் தேவையாக இருக்கவில்லை அவர்களுக்கு.

ஹரிணி தன் இருப்பிடம் கிளம்பினாள். எல்லோருக்கும் வீடே விரோச் என ஆனது. சாம் தேடினான் ”ம்மா.. ண்ணா.. க்கா” என கேட்டவும் செய்தான். கோதைதான் சமாதானம் சொல்லுவார். கணேசன் பேரனை பார்க் கூட்டி போய்.. அவனை விளையாட பழக்கினார்.

ஒருவழியாக ஷிவாவிற்கு சென்னைக்கு மாற்றல் கிடைத்தது. ப்பா… எல்லோரின் முகத்திலும் நிம்மதி ரேகைகள்.

கோதையும் கணேசனும், பெங்களூர் சென்று.. மகனின்  ஜாகை மாற்றத்திற்கு உதவி.. அவனை சென்னை கொண்டு வந்து சேர்த்தனர். 

ஷிவா, சென்னை வந்து சேர்ந்தான்.

எதோ பெரிய வேலை சரியாக நடந்தது போல இருந்தது மது கோதைக்கு, இருவருக்கும். கணேசனும் கோதையும் சேலம் கிளம்பினர், மகனை மருமகளிடம் சேர்ப்பித்துவிட்டு.

ஷிவப்ரியாவின் வாழ்க்கை இப்போதுதான்  அர்த்தமாகியது. கணவன்தான் காலையில் காபி கொடுத்து, அவளை எழுப்புவது. ம்.. மதுவிற்கு பிடிப்பது போல.. பால் கலந்த காபி. இப்போதெல்லாம் பால் இருக்கிறது பிரிட்ஜ்ஜில்.. பொறுமையாக அதை காய்ச்சி.. டிகாஷன் போட்டு.. காபி கலந்து மனையாளை எழுப்புவான், ஷிவா. வீட்டில் அவனின் வேலை இது மட்டும்தான்.

எப்படியும் ஐந்து மணிக்கே அவன் எழுந்திடுவான்.. மதுவும் அவ்வாறுதான். ஆனால், கணவன் இப்போது அவளை சோம்பேறியாக்கி.. தன்னுடைய காபிக்கும் அடிமையாக்கி இருந்தானே.. அதனால், விழிப்பு வந்தாலும்.. கணவனின் கவனிப்பிற்காக காத்திருப்பாள் பெண்.

ஷிவா, எப்போதும் இரவு பனிரெண்டு மணிக்கு மேல்தான் வருவது. விடியற்காலை நேரம் அவர்களுக்கானது. 

இன்றும் அப்படியே, மதுவை எழுப்பினான் ஷிவா.. “மது.. வா..” என எழுப்பினான். மது ப்ரெஷ்ஷாகி வந்தாள். கிட்செனில் சமையலுக்கு பருப்பை வைத்தாள் குக்கரில்.

ஷிவா “ப்ரியா..” என்றான்.

மது வந்து கணவனின் அருகில், அவனை இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.. ஷிவா “பார்த்துடா, காபி” என்றவன் டீபாய் மீதிருந்து அவளுக்கான காபியை எடுத்துக் கொண்டுத்தான்.

மது பொறுமையாக பருகத் தொடங்கினாள். 

ஷிவா “ம்.. இன்னிக்கு என்ன அமைதியா இருக்க “என்றான் கணவன்.

மது “இல்ல, ஜெயம்மா ஊரிலிருந்து வந்திருக்காங்க.. ஈவ்னிங் வந்தாங்க.. எப்போ குழந்தை பெத்துக்க போற கேட்டாங்க.. தள்ளி போடாதீங்கன்னு அட்வைஸ்.. என்னால் முடியலை” என்றாள் சலித்துக் கொண்டே.

ஷிவா “ம்.. என்ன முடியலை. இப்படி நாலுபேர் கேட்டால்தானே நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும். அதென்ன அக்கம் பக்கத்தில் யாருமே பேச கூடாதுன்னு நினைக்கிறீங்க.. அவங்க எல்லாம் பேசினால்தானே நம்ம வாழ்க்கையே மாறும். கண்டிப்பா சீக்கிரமாக பெண்ணு பெத்துக்கிறோம் டி.. ம்.. ஒரே பாட்டில் ஓஹோன்னு ஆகறோம்” என்றான், மென்மையாக  கேலியான குரலில்.

மதுவும்  மிதப்பான புன்னகையோடு “அப்புறம் அந்த மேக்னாவாசு, பிப்டீன்த் ப்ளோர்ல இருக்கால்ல.. அவங்களுக்கு, மூனும் பாய் பேபியாம்.. என்கிட்டே பெருமை பேசறா.. என்னால் தாங்க முடியலை.” என்றாள் மிதப்பான குரலில்.

ஷிவா அதே கேலி பார்வையோடு “இல்ல, முதலில் ஜெயாம்மா.. பத்திதான் சொன்ன.. அதுதான் முதலில்.” என்றான் அதே மென்மையான குரலில்.

மது இப்போது அடக்க முடியாமல் சிரித்தாள் அவனின் அலட்டலில்லாத பாவனையில்.. ஷிவாவும்  சிரித்தான் மென்மையாய்.. “என்ன.. வேற, ம்.. சொல்லு அடுத்த காசீப் சொல்லு..” என்றான்.  

மது “காசிப் சொல்லவா… புதுகார் வாங்கி இருக்கார்.. No16 C.. தெரியமா.. நாளைக்கு எங்களுக்கு ட்ரீட். இன்னும் வீட்டுக்கே வரலை.. புக்கிங் ஆகிடுச்சு.. பெருமை தாங்கல.. எதோ போர்ச் ப்ரண்ட்டாம்..” என்றாள்.

ஷிவா “ம்.. பெருசா இல்லையே. என்ன கடனை வாங்கிட்டு, இங்க வந்து இருந்தாரே.. No11, அவர் என்ன ஆச்சு..” என்றான் அவளின் பேச்சை மாற்றும் விதமாக.

மது எழுந்து கிட்சென் சென்றபடியே “கேஸ் போகுது போல..” என்றாள்.

வெங்காயத்தை அவனின் கையிலேடுத்துக் கொடுத்தாள்.. ஷிவா அதை உரிக்கத் தொடங்கினான். இருவருக்குள்ளும்.. பேச்சுகள் சென்றது. பெரும்பாலும்.. நிறைய காசீப் பேச்சு சென்றது.

இருவரும் சிரித்தபடியேயும் வருந்தியபடியேயும் பேசி கொண்டே வேலையை பார்த்தனர். மது “ஷிவா ரொம்ப பேசறோம்.. இதெல்லாம் தப்புதானே” என்றாள் பேசுவதெல்லாம் பேசிவிட்டு,

ஷிவா அவளின் அருகில் வந்து ரகசிய குரலில்.. ”தப்பே இல்ல.. இது நல்லது.. உளவியல் ரீதியா ஹஸ்பன்ட் அண்ட் வைப் காசீப் பேசறது நல்லது. ம்.. அவர்களின் மன அழுத்தம் குறையும். ம்.. நாம பேசினால் நல்லது.. மத்தவங்ககிட்ட வம்பு செய்ய, மனசை கஷ்ட்டபடுத்த பேச கூடாது..” என்றான்.

மது “ம்.. நாம ரொம்ப நல்லவங்க தானே..”  என்றாள் ராகமாக.

ஷிவா “என்னடி ரொம்ப நல்லவங்க.” என்றான் மென்மையாக சிரித்தபடியே.

மது அவனின் கள்ள சிரிப்பை.. ஓரகண்ணால் ரசித்துக் கொண்டாள்.

ஷிவா “சரி, அதைவிடு. இந்த வருஷம் அ..அங்க ஆஸ்டின் போகனும்.. எனக்கும் சாம்’க்கும் டிக்கெட் போட்டுக்கவா.. நீ, நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வந்திடுவா..” என்றான்.

மது “என்னை கூட்டி போறேன்னு சொன்னீங்க. பாஸ்போர்ட் அப்பலே பண்ணீங்க..” என்றாள் கேள்வியாய்.

ஷிவா “ம்.. போலாமா.. நீ சங்கடப்பட மாட்டீயே” என்றான்.

மது “தெரியலை.. கன்போர்மாக ஏதும் சொல்ல முடியாது” என்றாள் 

ஷிவா கையை கழுவிக் கொண்டு, அவளை இடையோடு அணைத்தான் “போலாம்.. உனக்கு எந்த கஷ்ட்டமும் வராது..” என்றான் ஆழமான குரலில்.. தனக்கும் சொல்லிக் கொண்டான் போல.

மகன் எழுந்துக் கொண்டான். அதன்பின் சாம்’மை கவனிக்க சென்றான் ஷிவா. மது சமையல் முடித்து தோசை உற்றினாள்.. ஷிவாவிற்கு,  உணவை பேக் செய்தாள்.. 

தந்தையும் மகனும் குளித்து வந்திருந்தனர். சாம் “ம்மா… பூஸ்ட்” என்றான், பழகிய வார்த்தைகளை சரளமாக பேசுகிறான் சாம்.

மது, மகன் கையில் பூஸ்ட் கொடுத்தவள், அவசரமாக குளிக்க சென்றாள். குளித்து வந்தவள்.. பூஜை அறையில் விளக்கேற்றினாள். 

ஷிவா.. உடையணிந்து வந்தான்.. பூஜை அறை சென்று, சிறிது நேரம் நின்றான்.. தனக்கு இந்த அருமையான வாழ்வை தந்த கடவுளின் முகம் பார்த்து நிறைவாய் நன்றி சொன்னான். மகனிற்கும் மனையாளுக்கும் திருநீறு எடுத்துவந்து பூசி விட்டு, உண்பதற்கு அமர்ந்தான்.

சாம், தந்தையிடம் தான் கலர் செய்திருந்த வானவில் படத்தை காட்டினான். ஷிவா “சூப்பர் டா.. என்ன இது” என்றான்.

சாம் “ரெயின்போ” என்றான் பளீச் என சிரித்துக்கொண்டு.

ஷிவா “ரெயின்போல்ல.. என்னென்ன கலர்ஸ் இருக்கு..” என்றான்.

சாம் அன்னையை  பார்த்தான்.. ஷிவா “ம்.. சொல்லுங்க” என்றான்.

மது அமைதியாக சிரித்தாள்.. அன்னையிடமிருந்து உதவி கிடைக்கவில்லை. இப்போது  சாம் தந்தையை பார்த்தான் திருதிருவென.. மதுவிற்கு, அவனின் பார்வை ஈர்க்க.. மகனின் அருகில் சென்று நின்றுக் கொண்டாள்.

ஷிவா “ரெட்.. ஆரஞ்சு எல்லோ..” என  ஷிவா சொல்ல சொல்ல மகனும் திரும்ப சொன்னான் மழலையில்.. மகன் முடிக்கவும், மது கிளாப் செய்தாள்.. அன்னை பாராட்டவும் சாம்.. முகத்தில் பெருமையான புன்னகை. 

ஷிவாவும் எழுந்து சென்று கைகழுவி வந்தான்.. மகனை ஏந்திக் கொண்டான். மது அவன் உண்டவைகளை எடுத்து வைத்து, கிளம்பினாள்.

மூவரும் கிளம்பினர். சாம் இப்போதெல்லம் நிறைய கேள்வி கேட்க தொடங்கியிருந்தான். மது பாதி பதில் சொல்லுவாள்.. அவளுக்கு பொறுமை சற்று குறைவு. ஷிவாதான் பொறுமையாக ‘பலூன் ஏன் கடையில் இருக்கு’ என்ற கேள்விக்கு கூட பொறுமையாக பதில் சொல்லுவான். ஷிவா, பொறுமையை கற்றுக் கொண்டிருந்தான்.

அவர்களை இறக்கிவிட்டான்.. மகன் முத்தம் வைத்து “பை ப்பா..” என்றான். ஷிவா, காதலாக மனையாளை நிமிர்ந்து பார்த்தான். மது, அதே காதலோடு தன்னிரு கைகளையும் சேர்த்து உதட்டில் வைத்து.. ஒருசின்ன பறக்கும் முத்தம் தந்தாள் கணவனுக்கு. மென்மையாக சிரித்தபடி, அதை ஒரு கையில் பிடிப்பதாய் சைகை செய்துக் கொண்டு.. “லவ் யூ டூ…”  என்றபடி வண்டியை கிளப்பினான் ஷிவா. 

ஷிவாவிற்கு மகன் வரைந்த வானவில்லே மனதில் நின்றது. வானவில் என்பது ஒரு நல்ல சகுனத்தின் அறிகுறி.. சுபத்தின் குறியீடு.. அப்படிதான் அங்கு. அவனுக்கு, அங்கே சொல்லப்படும் ஒருகதை நினைவு வந்தது இப்போது. பிரளயத்தின் போது.. நோவான், படகில் தப்பிக்கிறார் கடவுகளின் ஆணைப்படி, உலகில்  உள்ள உயிரினங்களோடு. கடலில் ஒருபடகில் பயணிக்கிறார்.

பல ஆண்டுகள் கடந்தும் கரைகாண முடியவில்லை அவரால். அப்போது கடவுளை வேண்ட.. கடவுள்.. அந்த நோவாவிற்கு காட்டிய குறியீடுதான் வானவில், அவர் சொன்னாரம்  “வான்வில் சுபத்தின் அடையாளம்.. இனி உங்களை அழிக்கும் சக்தி ஏதும் வாராது, அதற்கான அடையாளம் இந்த வானவில்’ என்றாராம். இந்த எண்ணத்தினுடே வண்டியை செலுத்தினான்.. ‘இனி எந்த தடையுமில்லை.. எந்த பிரளயமும் இல்லை..’  என அவன் மனத்தில் மது சாம் இருவருமே நிறைந்து நின்றனர்.. சுபத்தின் குறியீடாக.

“தேய்கின்ற  நிலவோடும்

தேயாத கனவோடும்

தோள் சேர்ந்து நடப்பேனே..

என் தூரம் கடப்பேனே..              

காதல் கொஞ்ச்ம்  

காற்றுக் கொஞ்சம்..

Advertisement