Advertisement

மதுர ப்ரியம்

29

முதல்  வருட திருமணநாள் ‘ஷிவாப்ரியா’ இருவருக்கும். மது, மகனோடு பெங்களூர் வந்திருந்தாள். இரவு, ஸ்ரீ வீட்டில்தான் விருந்து.. என முடிவானது. 

ஷிவாமது இருவருக்கும், ஸ்ரீ அழைத்து வாழ்த்து சொல்லவும்   ஷிவா அதனை ஏற்றுக்கொண்டு பேச தொடங்கினான். ஷிவா “வெளியில் போகலாம்.. பாவம், மதுவும் எப்போதும் கிட்செனில் இருக்கா… சிஸ்ட்டருக்கும் அப்படிதானே டின்னெர் வெளியில் பார்த்துக்கலாம்” என்றான்.

ஸ்ரீ “அப்போ வீட்டுக்கு வரமாட்டீங்க” என்றான் கேள்வியாய்.

ஷிவா “ச்ச.. ச்ச அப்படியல்ல… கண்டிப்பா வரோம் ஸ்ரீ..” என்றான், பதறி போய் சொன்னான்.

ஸ்ரீ இடைமறித்து “எப்படி.. இத்தனை மாசம், வாரம் தவறாமல் வந்தீங்களே அப்படியா” என்றான் கிண்டலாக.

மது இந்த உரையாடலை  ஸ்பீக்கரில் கேட்டுக்  கொண்டிருந்தாள்தான். அவளிற்கும், அங்கு செல்லாதது குற்றவுணர்வாகதான் இருந்தது. எனவே, மது “சரி.. சரி.. அத்தான், அங்க வரணும் அவ்வளவுதானே.. அதுக்கு பாவம் அவரை ஏன் டென்ஷன் பன்ற..” என்றாள் டென்ஷனான குரலில்.

ஸ்ரீ “ஹோ… நான் டென்ஷன் பண்றேன்.. கல்யாணம்  ஆனதிலிருந்து இங்கே வரவேயில்ல நீங்க.. நான் டென்ஷன் பன்றேன்..” என்றான் கோவமாக.

ஷிவாஅலுவலகம் கிளம்பத் தொடங்கினான்.. அங்கே நிற்கவில்லை.

மது “ஆமாம், நீங்கதான் வந்து பார்க்கணும் எங்களை, நீங்க வந்து பார்த்தீங்களா அத்தான் முதலில்.” என எல்லாவற்றையும் அவன் பக்கம் திருப்பினாள் மது.

ஸ்ரீ “அடிபாவி, எப்போ நீ வரன்னு சொன்னீயா.. நீ வரதும் தெரியறதில்ல போறதும் சொல்றதில்ல… விளையாடுறீயா” என சண்டைக்கு தயாரானான்.

மது தன்னை பற்றி எல்லாம் சொல்லுகிறாரே.. என யோசித்தவள் “எங்க வெட்டிங்டே அதுவுமா.. ஏன் இப்படி கம்ப்ளைன்ட் பண்றீங்க.. அத்தான். இருக்கட்டும் அப்புறம் பேசிகிறேன். நான்தான் பாவம். அபர்ணாவை வேலை வாங்காதே.. அவ, குழந்தையோடு கஷ்ட்டபட வேண்டாமே… ஆர்டர் செய்திடுங்க.. எனக்கு ப்ரான் வேண்டாம்.. சாம்க்கு, கீ ரோஸ்ட் கண்டிப்பாக வேண்டும்.. சரி, ஈவ்னிங் வந்திடுறோம்… அப்புகிட்ட சொல்லிடுங்க அத்தான். அவருக்கு டைம் ஆச்சு.. அப்புறம் பேசறேன்” என்றாள், கொஞ்சம் சமாதனம் செய்யும் குரலில்.

ஸ்ரீ “ம்… ஹாப்பி  ஆன்வசெரி… இப்படி புருஷனோட சந்தோஷமா இரு..” என வாழ்த்தினான்.

மது “ம்.. நன்றி, இந்த விஷ் கொஞ்சம் லேட்..” என்றாள் முறுக்கிய படியே.. இன்னும்.

ஸ்ரீ என்ன சொல்லுவது அவளிடம், சண்டை போட முடியவில்லை.. அவனால் “நேரில் நீ  வந்த உடனே சொல்றேன்.. இரு அப்புகிட்ட தரேன்..” என்றவன் மனையாளிடம் கொடுத்தான்.

அபர்ணா வாழ்த்துகள் சொன்னாள்.. மது “தேங்க்ஸ் அப்பு. இரு உங்க அண்ணாகிட்ட கொடுக்கிறேன்.. அவர் கிளம்பிடுவார்..” என சொல்லி, கணவரிடம் கொடுத்தாள்.

அபர்ணா, ஷிவாவிடம் பேசினாள் “அண்ணா.. வாழ்த்துக்கள்.. ஈவ்னிங் சீக்கிரம் வந்திடுங்க..” என்றாள்.

ஷிவா “தேங்க்ஸ் மா… வந்திடுறோம்..” என சொல்லி குழந்தையை பற்றி விசாரித்து பேசிக் கொண்டிருந்தான். 

பின் ஸ்ரீ, பேசி.. அதன்பின்தான் போனை வைத்தனர் இவர்கள்.

இரவு, ஸ்ரீ வீட்டில் எல்லோரும் சந்தித்துக் கொண்டனர். ஷ்ரவன் வந்திருந்தான், இப்போது. பேச்சுக்கள் கலகலப்பாக சென்றது.

 குழந்தைகளுக்கு, முதலில் ஊட்டத் தொடங்கினார்கள் பெண்கள் இருவரும். ஸ்ரீ அப்போதுதான் ஷிவாவிடம், மது முதல் முதலில்.. அவளின் விருப்பத்தை சொல்லியது பற்றி சொல்லத் தொடங்கினான்.

ஸ்ரீ “இந்த பால்கனியில் இருந்துக் கொண்டு, ஒருநடு ராத்திரியில்.. வயிற்று பிள்ளைகாரி ஏதோ ஆதங்கத்தில் ‘ஏன் மது கல்யாணம் செய்துக்கலைன்னு’ கேட்ட கொடுமைக்கு.. போட்டாளே ஒரு வெப்பன்’னை உங்க   பொண்டாட்டி, அதில் ஆடிப்போன அப்பு அன்னிக்கு தூங்கவேயில்ல.. அதைவிட.. கொடுமை, ஹிரோஷிமா மாதிரி.. எங்க தரணி எந்திரிக்கவே இல்லை இன்னும்.” என்றான் சிரித்தபடி.. ஷ்ரவனும் சிரித்தான்.

அபர்ணா “ஆமாம் அண்ணா, என் பயத்துக்கு அப்போ அளவேயில்லை..” என எதொ பேசிக் கொண்டிருக்க..

மது, அமைதியாகிவிட்டாள். அவளின் மனது, தரணி என்ற பெயரிலேயே நின்றது. அவன் காலையில் அழைத்தான் “ஹாப்பி அன்வசெரி டி..“ என்றான்.

மது “ஹேய் தேங்க்ஸ் டா.. ஞாபகம் இருக்கா உனக்கு”  என்றாள்.

தரணி பதில் சொல்லாமல் ”சாம் எப்படி இருக்கான்..” என்றான்.

மது “டேய், நேற்றுதான் வந்தோம்.” என்றாள்.

தரணி “சரி, வைக்கட்டுமா” என்றான். அவ்வளவுதான் தரணியின் பேச்சு. எப்போதும் ஷிவாவை பற்றி ஒருவார்த்தை கேட்கமாட்டான். ஷிவாவை, அதிகம் சந்திக்க மாட்டான், தவிர்த்திடுவான். இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். யார் என்ன கேட்க முடியும். அப்படியேதான் மதுவும். ஆனால், அவளின் மனது தன் நண்பனின் சகஜ நிலைக்காக.. ஏங்கியது. 

சிலசமயங்களில் மது, தரணியிடம் தன் கணவன் குறித்து பேசுவாள்.. ‘அவர் என்னடா செய்தார், நான்தானே டா.. கல்யாணம் செய்துகிட்டேன்.. நீ என்கிட்டே பேசுற, அவர்கிட்ட பேசமாட்டீயா’ என்பாள்.

தரணிக்கு, இந்த விஷயம் பேசும் போது மட்டும் காது கேட்க்காது, போனில் அழைப்பு வரும், மீட்டிங் இருக்கும்.. இப்படி ஏதாவது  ஒன்றை சொல்லி அந்த பேச்சிற்கு பதில் சொல்லமட்டான். மதுவிற்கு, ஷிவாவின்  மேல் கோவம்.. தரணிக்கு, என எண்ணிக் கொள்வாள்.

இப்போது லேசாக தரணி நினைவில் முகம் வாடியது,  அவளிற்கு.. தன்னுடைய கொண்டாட்டங்களில் எல்லாம் தரணிதான் முதல் நபர். என்னமோ இன்று அவனில்லை எனத் தோன்றியது.

அமைதியாக அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு, மகனுக்கு  ஊட்டிக் கொண்டிருந்தாள். 

ஷர்வன், தன் அக்காவின் முகம் பார்த்தான்.. பேச்சை வேறு பக்கம் மாற்றினான்.

சற்று நேரத்தில் மது இயல்பாகி விட்டாள். 

எல்லோரும் அமர்ந்து உண்டனர். நேரம் கடந்தது. உறங்கும் மகனை தூக்கிக் கொண்டு, ஷிவாவும் மதுவும் வீடு வரும் போது மணி இரவு ஒன்று.

ஸ்ரீ ‘இங்கே தங்கிவிட்டு காலையில் செல்லாம்’ என்றான். 

ஷிவா ‘இல்லங்க, எனக்கு வொர்க் இருக்கு.. லேட்டா எழுந்தால் கூட, அப்படியே மேனேஜ் செய்து கிளம்பிடுவேன்..’ என சொல்லி கிளம்பினர்.

அன்றைய நாள் இப்படிதான் முடிந்தது. அடுத்த இரண்டே நாளில் விடுமுறை வர.. சென்னை வந்தது, ஷிவாவின் குடும்பம். 

@#@#@#@#@#@#@#@#@#@

சாம், ப்ளே ஸ்கூல் செல்ல தொடங்கினான். மது, தன் தாய் வீட்டின் அருகிலேயே.. மகனை சேர்த்திருந்தாள். சாம்மின் கண்களும், நிறமும் எல்லோரையும் ஈர்த்தது. சாம்க்கு, இப்போது நிறைய நட்பு கிடைத்தது. அழகான நாட்கள்தான் தொடங்கியது, இந்த இந்தியாவில். இப்போது இதுவும் அவனின் தாய்நாடு.. தமிழ்தான் புரியும் அந்த பச்சை கண்ணனுக்கு. பக்கா தமிழனாக வளர தொடங்கினான் சாம் என்கிற இஷாந்த்.

கோதையும் கணேசனும் வந்தனர் பேரன் பள்ளி செல்லும் அழகை பார்க்க.        

மது, மெஸ் வேலைகளை பார்க்க சென்றாள்.. கணேசனும் மருமகளோடு சென்றார். அங்கு, பேசியபடியே உதவியும் செய்வார். மதியம் பேரனை அழைத்து வருவார். அவனை உண்ண வைத்து, சிலநாட்கள் உறங்க இங்கே தூக்கி வந்திடுவார். அழுதான் என்றால், விட்டுவிட்டு, தான் மட்டும் வீடு வந்திடுவார். கோதை அங்கே சமையல் செய்து வைத்திருப்பார்.. ஏதேனும் மெஸ்ஸிலிருந்து எடுத்து வருவார். மது, வாரமொரு முறை கோதையையும் இங்கே வர செய்திடுவாள். குடும்பங்கள் இரண்டும் சகஜமாக பழக்தொடங்கியது.

ஷிவா, சென்னையில் தனக்கான வேலை மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்தான். எனோ அதிகமாக குடும்பத்தை தேடினான். அதிலும், மது.. அவளின் சமையல்.. அவளின் அருகாமையை தேடினான். ஆனால், என்னமோ அவனுக்கு இன்னும் வேலை மாற்றல் கிடைக்கவில்லை. இப்போதெல்லாம் மகன் வகுப்பு செல்ல தொடங்கியது முதல்.. எதற்கு, அவர்களை அலைய வைக்க வேண்டும் என, தானே சென்னை வந்துவிடுகிறான்.

இந்த மாத இறுதியில் விடுமுறைக்கு ஹரிணி இந்தியாவிற்கு வந்தாள். தன் மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டு, மறுவாரம்.. சென்னைக்கு, தன் அண்ணன் வீட்டுக்கு வந்தாள்.

கோதையும், கணேசனும் அங்கேதான் இருந்தனர். மகளை பேரன் பேத்திகளை ஆசையாக வரவேற்றனர். வீடே, பிள்ளைகளால் கலகலப்பானது.

ஹரிணி, அண்ணன் மேல் இப்போதும் ஒரு கோவம் உண்டு. சட்டென, அவனிடம் அழைத்து பேசிடமாட்டாள். மதுவிடம், பேசும் போது..  அண்ணன், அருகில் இருந்தால் பேசுவாள். மற்றபடி.. பிறந்தநாள் வாழ்த்து.. தீபாவளி வாழ்த்து என மெசேஜ் அனுப்புவாள்.. அவ்வளவுதான்.  

மதுவிடம் ஒதுக்கம்  எப்போதும் காட்டியதில்லை, ஹரிணி. நன்றாகவே பேசுவாள் போனில். அப்படியேதான் நேரிலும்.. நன்றாக மதுவோடு பேசினாள்.. ஹரிணி. ஹரிணியின் கணவர் வரவில்லை.. விடுமுறை இல்லை அவருக்கு. பிள்ளைகளோடு.. இவள் மட்டுமே வந்திருந்தாள்.

மதுவின் பெற்றோர் வந்து ஹரிணியை பார்த்து சென்றனர்.

ஷிவா, வந்தான் வார இறுதியில்.. தங்கை பிள்ளைகளை இப்போதுதான் பார்க்கிறான்.. ஐந்து மூன்று வயதில்.. பெரியவன் மகன், அவனை பார்த்திருக்கிறான்.. ஒருவயதில். இளையவள், பெண் குழந்தை.. அவளை,  தாய்மாமன் இப்போதுதான் பார்க்கிறான். மணிவிழியால் ஷிவாவை பார்த்து.. மிரண்ட அந்த மூன்று வயது பெண்.. தன் தங்கையை நினைவூட்டினால் அவனுக்கு. 

சாம், “ப்பா…” என ஓடி வந்து தந்தையை கட்டிக் கொண்டான்.

ஷிவாவை பார்த்ததும்.. சரளமான ஆங்கிலத்தில்.. அந்தக் குட்டி பெண்.. ‘யாரிது..’ என கேட்டு, தன் அன்னையின் அருகில் வந்தது. 

ஹரிணி அமைதியாக இருந்தாள்..

ஷிவாவும் அவள் மொழியில்.. பேசத் தொடங்கினான்.  நடுவில் யாரும் பேசவில்லை. அந்த குழந்தை.. சாம்’மை பார்த்தது.. ஷிவாவை பார்த்தது.. சாம், ஷிவாவிடம் விளையாடவும்தான்.. ஷிவாவின் அருகில் வந்தாள் குழந்தை.. அப்படிதான் அவளிடம் பேச தொடங்கினான் தாய்மாமன்.

பெரியவன் கொஞ்சம் தயங்கினான்.. பின் கோதை, கணேசன் எல்லாம் சொல்லவும்.. மாமா என பேசத் தொடங்கிவிட்டான்.

அடுத்த ஒருமாதம் இங்கேதான் ஹரிணி. கோதைக்கு வேலை சரியாக இருந்தது.  மது எப்போதும் போல மெஸ் சென்றாள். ஹரிணி, பிள்ளைகளை பார்த்துக் கொண்டாள்.

வாரத்தில் இரண்டு நாட்கள்.. மது அவர்களை வெளியே அழைத்து சென்றாள். கோவில், ஷாப்பிங், பீச், பார்க்.. என ஊர் சுற்றினர், பெண்களும் பிள்ளைகளும்.

Advertisement