Advertisement

மதுர ப்ரியம்!..

ஷிவா, அன்று இரவே, டாக்ஸியில் பெங்களூர் கிளம்பினான். அவனுக்கு, நிறைய வேலைகள்.. அத்தோடு மதுவை.. மதுவின் ப்ரியத்தை தாங்க.. ஏற்க.. மனது இன்னும் தயராகவில்லை.. அதனால், கிளம்பிவிட்டான்.

சாம் அழுகைதான் ஆனாலும் ஏமாற்றி விட்டு.. கிளம்பினான். கிளம்பும் முன் ஷிவா, மதுவின் கன்னம் தட்டி “மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணனும்.. சாம்’மை அடாப்ட் பன்னனும் நீயும் நானும்.. நமக்கு நிறைய கடமைதான் இருக்கு மது.. நீ..” என எதோ சொல்ல வர.

மது, ஷிவாவின் கைகளை பற்றிக் கொண்டாள் “சரி கடமை இருக்கட்டும்.. நாம சேர்ந்தே செய்துக்கலாம். அதுக்காக, இப்படி அவசர அவசரமாக எங்கிட்ட இருந்து தப்பிச்சு போகனுமா, நான் என்ன அப்படியா உங்க மேல பாஞ்சிடுவேன்” என்றாள், விளையாட்டு குரலில்.

ஷிவா, தலையை குனிந்துக் கொண்டான்  ஒரு ஷனம்.. பின் மகனை கையில் வைத்திருந்தவளின் உதடுகளை ஆவேசமாய் வன்மையாக சிறை செய்து.. நகர்ந்தான் அடுத்த ஷனத்தில். 

மதுவும் சாமும் ஒன்று போல திருதிருவென விழித்து நிற்க.. ஷிவா “நான் பாஞ்சிடுவேன்னுதான் கிளம்பறேன்.. ம்..” என சொல்லி தன் தலையை கோதிக் கொண்டான்.

மது இமை தட்டி.. இன்னும் விழி விரித்து கணவனை விழுங்கினாள்.. காதலாக.

சாம் “ப்பா… நா.. எ..” என கேட்டான். அதில்தான் பெற்றோர்கள் உணர்வு பெற.. சிரித்துக் கொண்டனர் இருவரும்

ஷிவா, மகனின் கன்னத்தில் முத்தம் வைத்தான் மென்மையாய். பின் மனையாள் கன்னத்திலும் முத்தம் வைத்து.. “அதிகமா பேச கூடாது, ம்..” என்றான்.

மது “பேசுவேன்.. அப்போதானே, உண்மையெல்லாம் தெரியுது..” என்றவள்.. இரண்டடி பின் சென்றாள்.

ஷிவா “அஹ.. அந்த பயமிருக்கணும்..” என்றான். அவள் பின்னால் நகர்வதை பார்த்தவன்.

பின் மகனிடம் திரும்பி “அம்மாவை பார்த்துக்க.. கொஞ்சமாக குறும்பு செய்யணும்.. ஒகே..” என்றான். செல்லாமாக புகார் சொல்லும் குரலில்.

குழந்தைக்கு என்ன புரிந்ததோ.. கால்கள் இரண்டையும் உதைத்துக் கொண்டு.. சிரித்தான். தானும் தந்தைக்கு முத்தம் தந்தான். மது நடுவில் வந்து “மதுக்கு” என கன்னம் காட்டினாள்.. சாம் அழகாக மதுவிற்கும் முத்தம் வைத்தான். இப்போது அவளை நிறைவாக பார்த்தான். 

கார் அருகில் வந்துவிட்டதை உணர்ந்து.. தனது உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான், ஷிவா. மூவருக்கும் பிரிய மனதில்லை.. ஆனால், இது தற்காலிகம் என எண்ணி பெரியவர்கள் இருக்க.. ஒன்றுமே புரியாத குழந்தை.. “அப்பா..ப்பா..” என அழத் தொடங்கியது.

ஷிவா, மதுவை கீழே வர வேண்டாம் என பணித்து, கிளம்பினான்.

மது, மகனை சமாதானப்படுத்தத் தொடங்கினாள்.

மது, மெஸ் பார்க்க தினமும் சாம்மோடு சென்றுவிடுவாள்.. இரவில், தரணி கொண்டு வந்து விடுவான்.. சிலநாட்கள் வித்யா அத்தையோடு வருவாள்.. இல்லை, அங்கேயே தாங்கிக் கொள்வாள். 

கோதை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை.. வந்து, ஒரு வாரம் தங்கி செல்லுவார். கோதை அப்போதெல்லாம் மதுவை கவனிக்க தவறுவதில்லை. கோதை ‘அவனை கவனி.. தனியே விடாதே.. நீயும் போய் வா..’ என்பார்.

அதனாலோ என்னமோ மதுவும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பெங்களூர் பயணமானாள், சாம்மோடு. 

ஒருவாரம் அவன் வரவு, மறுவாரம்.. இவள் அங்கே பயணம் என நகர்ந்தது நாட்கள். தந்தையை பார்த்தாலே சாம் குதிப்பான்.. மதுவின் பேச்சை கேட்கமாட்டான்.. சாப்பிடமாட்டான்.. சாக்கி கேட்பான் இப்படி நிறைய. ஆனால், தம்பதிகளுக்கு.. ஒருவரின் அருகாமையில் மற்றவர் இருப்பதே போதுமானதாக இருந்தது.

நெடுநேரம் சாம் தந்தையோடு விளையாடுவான். குழந்தைக்கு ஓய்வே தேவையாக இருக்காது போல.. விளையாடிக் கொண்டே இருப்பான். மது, சமையல்.. கணவனின்  உடையை துவைப்பது, வீட்டை ஒழுங்கு செய்வது என ஏதேனும் செய்தபடி இருவரையும் பார்த்திருப்பாள். அவ்வபோது, நடுவில் வந்து அவர்களின் விளையாட்டை கெடுத்துவிட்டும் செல்லுவாள். 

உறங்கும் போது.. கண்டிப்பாக ஷிவாவின் தோள்கள்தான் இருவருக்கும். சாம் ஒரு தோளில் உறங்க.. மதுவும் ஏதேனும் பேசியபடியே இருப்பாள்.. கணவனின் மறுதோளில். இப்படி வார இறுதி என்பது.. அவர்களின் காதல் தினங்களாக மாறியது.

அன்றும் அப்படிதான் மதுவும் சாம்’மும் பெங்களூர் வந்திருந்தனர்.

இரவு, அவர்களின் நேரம் தொடங்கியது.. சாம் ஒருபுறம் உறங்க.. இவள் அவனின் மறு தோளில் சாய்ந்துக் கொண்டு.. ஒன்றுமே இல்லாத பேச்சுக்களை ஆரம்பித்தாள். மது “ஏன், நான் செய்திருந்த தேங்காய் பர்பியை சரியாகவே சாப்பிடலை நீங்க.. என்னாச்சு.. டேஸ்ட் நல்லா இல்லையோ” என்றாள்ள்.

ஷிவா “ப்ரியா எவ்வளோ சாப்பிடுறது.. வைச்சிட்டு போ.. டூ டேஸ் இருக்குமில்ல சாப்பிட்டுக்கிறேன்..” என்பான் பொறுமையாக.

மது “எதுக்கு, நீங்க, உங்க போதைக்கு யூஸ் பண்ணிக்கவா..” என்றாள்.

ஷிவா “ஹே ய்ய்ய்யய்ய்ய்யய்… எ..என்ன.. என்ன“ என்றான் கோவமாக.

மது அவனிடமிருந்து எழுந்து “இல்ல.. இல்லைங்க சும்மா கேட்டேன்..” என சொல்லிக் கொண்டே சென்றுவிட்டாள்.. ஹாலுக்கு.

ஷிவா, மகனை மெதுவாக மெத்தையில் விட்டு.. இருபுறமும் தலையனை வைத்து.. விட்டு ஹாலுக்கு வந்தான்.

மது, இப்போது மகனை சென்று பார்த்தாள்.. குழந்தைக்கு போர்த்தி விடவில்லை ஷிவா. எனவே, அவனுக்கு போர்த்தி விட்டு வெளியே வந்தாள் மது. ஷிவா, அவள் செய்கையை பார்த்திருந்தான்.. அவன் வந்ததும், ஷிவா “என்ன கேட்ட, இல்லை, என்ன சொன்ன..” என்றான் அதட்டலாக. 

மது, அமைதியாக அந்த பெரிய சோபாவில் கால்களை நீட்டி அமர்ந்துக் கொண்டாள்.. கொஞ்சம் கோவம் இருந்தது அவளுக்கு.. பிரிட்ஜ்ஜில் இன்னமும் பாட்டில் இருக்கிறது.. அது, முழுதாக அவன் போதையை இன்னும் விடவில்லை என காட்டுகிறது. எனவே, கோவம் அவளுக்கு.

ஷிவா, அவளை பார்த்து முறைத்தபடியே நின்றான் “என்ன சொல்லு.. என்ன பேச்சு” என்றான் கோவமாக.

மது “பிரிட்ஜ்ஜில் பார்த்தேன்..” என்றாள்.

ஷிவா, கொஞ்சம் டென்ஷன் ஆகினான் ’கண்டுபிடித்து விட்டாளா’ என. மதுவின் பாதம் அருகே வந்து அமர்ந்தான்.. அவளை சமாதானம் செய்யும் குரலில் “இப்போவெல்லாம் அதை யூஸ் பண்றதே இல்லை, எப்போவாதுதான் எடுக்கிறேன். வீக் எண்டு அங்க வதிடுறேன், இல்லை.. நீ வந்துடுற.. அப்புறம் எப்படி. அங்கே வந்ததை நினைத்துக் கொண்டே அடுத்த இரண்டுநாள். அடுத்த இரண்டுநாள்.. எப்படா.. அடுத்த வீக் எண்டுன்னு ஓடுது. ஆனாலும், உனக்கு இவ்வளவு பேச்சு ஆகாது டி.. “ என்றவன் அவளின் பாதங்களை பிடித்தான் இதமாக.

மது “இல்ல பொய் சொல்றீங்க.. ஒன்னு ரெண்டுன்னா பரவாயில்ல.. அத்தனை பாட்டில் எதுக்கு.. பூஜை போடவா..” என்றாள்.

ஷிவா “ஆமாம், எல்லாம் ரிச் சரக்கு டி.. என்ன, கீழ எடுத்தா கொட்ட முடியும்.. இருக்கட்டும், அப்போ அப்போ செலெபரேஷ்ன்னா வேணுமில்ல.. வாழ்க்கைன்னா.. கொஞ்சம் கிக் வேணுமடி..” என்றான் கண்ணடித்து.

மதுவிற்கு கோவம்தான்.. அவனின் வார்த்தைகளில். எழுந்து சென்றுவிட்டாள், மகனிருக்கும் அறைக்கு. 

ஷிவா, ஹாலிலேயே அமர்ந்திருந்தான். இவனால் முழுதாக இன்னும் அந்த பாட்டில் வஸ்த்துவை  மறக்க முடியவில்லை. அவளும் இங்கு வரும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். இவனும் ‘சரி தூக்கி போட்டுடுறேன்.. இல்லை, இப்போ எல்லாம் எடுப்பதில்லை.. குறைச்சிட்டேன்’ என்கிறான். ஆனால், முழுதாக விட்டதாக தெரியவில்லை மதுவிற்கு.

ஷிவா, யோசனையோடு அமர்ந்திருந்தான்.. என்னமோ அவள் கத்துவதும், சண்டையிடுவதும் இந்த ஒரு செயலுக்காக மட்டும்தான். ஷிவாவிற்கு புரிகிறது.. இவள் இப்படி தன்னிடம் உரிமை எடுப்பதால் கூட அவனிற்கு இன்னும் இன்னும் மதுவை பிடிக்கிறது.. ஏனோ அவள் முகம் வாட பிடிப்பதில்லை.. ஆனாலும், அவனால் பொய் சொல்ல முடிவதில்லை. அங்கேயே, உறங்க தொடங்கினான் ஷிவா.

இப்படி வார இறுதி என்பது.. அவர்களின் காதல் அடிபிடி சண்டை தினங்களாக மாறியும் விடும் சிலநாட்கள். 

!@!@!@!@!@!@!

ஆகிற்று மாதங்கள். இன்று சாம்மின் பிறந்த நாள்விழா.. எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினர் எல்லோரும். ஷிவா காலையில்தான் பெங்களூரிலிருந்து வந்தான். மதுவும் ஷிவாவும் சேர்ந்து மகனை  எழுப்பும் போது “ஹாப்பி பர்த்டே..” எனப் பாடி எழுப்ப.. சாம் சிரித்துக் கொண்டே எழுந்தான், புது பூவாக.. 

சாம்க்கு, அந்த பர்த்டே பாடல் மிகவும் பிடிக்கும்.. அதை எப்போதும் கேட்டாலும் தலையை ஆட்டிக் கொண்டே.. கிளாப் செய்வான்.. ஆனால், கண்டிப்பாக கேக் அல்லது சாக்லேட் கொடுக்க வேண்டும், பாடல் பாடி முடித்ததும். தரணியின் பிறந்தநாள்.. ஷ்ரவனின் பிறந்தநாள்.. அப்பாட்மென்டில் சில கொண்டாட்டங்கள்.. என எல்லாவற்றுக்கும் இப்படிதான் பாடல் பாடி முடித்ததும் கேக் கொடுத்தனர். அதன் பழக்கம் அவனுக்கு.

இப்போது சாம் அந்த பாடல் கேட்டதும் சிரித்துக் கொண்டே எழ.. தந்தையும் எதிரில் இருக்க.. சாம் “ப்பா…” என தாவினான் ஷிவாவிடம். 

ஷிவா, மகனின் நெற்றியில் முத்தம் வைத்தான். சென்ற பிறந்த நாளின் போது இருந்த கலக்கம்.. ஒதுக்கம்.. கோவம்.. வெறுமை.. ஏதும் இப்போது இல்லை அவனிடம். மகனை அன்பாக அரவணைத்துக் கொண்டான்.

இப்போது மது மீண்டும் அந்த பாடலை பாட தொடங்க.. சாம் கைதட்டி ரசிக்க தொடங்கினான்.. “ம்மா.. யா..க்கு ஹாப்..பி பர்த்டே..” என மழலையில் கேட்கவும் செய்தான்.

ஷிவா, தன்னிடமிருந்து பெரிய சாக்லேட் கவரை எடுத்து.. மகனிடம் நீட்டவும்.. அந்த ஆலிவ் விழிகள் தெரித்து.. விரிந்தது, சந்தோஷத்தில். உடனேயே அந்த விழிகள் அன்னையைதான் பார்த்தது.. ’எங்கே வேண்டாமென சொல்லிடுவாளோ’ என. 

மது “ம்.. குட்டிக்குத்தான் இது” என்றாள் சாக்லேட்பார்த்து.

அப்போதுதான் குழந்தை வாங்கிக் கொண்டான்.

மது “ஹாப்பி பர்த்டே சாம்..” என சொல்லி தானும் அவனுக்கு முத்தம் வைக்க.. சாம், தானும் மதுவிற்கு முத்தமாகக் கொடுத்தான்.

மாலையில் சின்னதாக ஓரு விழா.

மூவரும் ஒரே கலரில் உடை அணிந்துக் கொண்டு நின்றனர். கோதை கணேசன்.. பேரனுக்கு செயின் பரசளித்தனர். மது வீட்டினர்.. மோதிரம் பரிசளித்தனர். 

ஷ்ரவனும் தரணியும் சேர்ந்து அவன் ஓட்டுவது போல கார் வாங்கி இருந்தனர். சாம்க்கு, அதுதான் மிகவும் பிடித்திருந்தது போல.. அதிலேயே அமர்ந்திருந்தான்.

Advertisement