Advertisement

மது இடைமறித்தாள்.. முதலில் தங்களின் வாழ்க்கை பற்றி சொல்ல வருகிறான் என நினைத்தாள், இப்போது சாம் பற்றி சொல்லவும், உடனே இடைபுகுந்தாள் “ஏன், பார்க்க முடியாது” என்றாள்.

ஷிவா “இரு டா.. நான் பேசி முடிக்கிறேன்.. நீ அவனை நல்லா பார்த்துக்கிற.. ஆனால், அவன் உன் வயதுக்கு.. பொறுப்புக்கு மீறிய விஷயம்தானே.. அதனால் சொல்றேன்.. கேட்க்கிறேன். இனி ஆயுசுக்கும் நீதான் அவனுக்கு அம்மா..” என சொல்ல.. மது நிமிர்ந்து ஷிவாவை பார்த்தாள்.

ஷிவா “ம்.. நீதானே அம்மா. அது உனக்கு தெரியும் தானே..” என்றான் சந்தேகமாக.

மது “நான் என்ன அவ்வளோ சின்ன பெண்ணா ஷிவா.” என்றாள்.

ஷிவா “ம்.. நீ அவ்வளோ வளர்ந்த பெண்ணும் இல்லை..” என்றான் அழுத்தமாக.

மது “தனியா ஒரு பிஸ்னெஸ் ரன் பண்றேன்..” என்றாள்.

ஷிவா “அஹ.. அதனால் எல்லாம் சரியாக செய்துடுவியா..” என்றான், அவளின் அருகிலிருந்து எழுந்துக் கொண்டான்.  அவளின் எதிரில் நின்றான். ஷிவா “இப்பவும் உன் டிசிஷன் தப்புதான் மது..” என்றான்.

மது,தான் அவனை திருமணம் செய்துக்கொண்டது பற்றி சொல்லுகிறான் என உணர்ந்தாள் “அப்படியல்ல.. ஷிவா, எனக்கு சாம்’மை ரொம்ப பிடிச்சது ஷிவா.. அந்த குழந்தையை வைச்சுகிட்டு எப்படி கஷ்ட்ட்பட்டீங்க நீங்க.. என்னை மாதிரி நீங்களும் ஏமாந்து.. அதான், உங்களை தாண்டி என்னால் வேற யோசிக்க முடியலை..” என்றாள் பெண்.

ஷிவா, அவளின் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கிக் கொண்டான். ஆனாலும் எதும் கேட்க்காமல் அங்கும் இங்கும் நடந்தான்.

மது “ஏன் ஷிவா, சாம்’மை நல்லா பார்த்துக்கலையா.. இப்போ ஏன் இத பேசறீங்க..” என்றாள்.

ஷிவா “ஹேய்.. நான் அப்படியா சொன்னேன்.. நீ கஷ்ட்டபடுறேன்னு கேட்க்கிறேன்.. உனக்கு எதாவது கஷ்ட்டமாக இருந்தால்.. நான் அவனை பத்துநாள் பார்த்துக்கிறேன். கேட்க்கிறேன்.. இப்போவே கூட்டிட்டு போகலை..” என்றான் மெதுவான குரலில்.

மது அமைதியாக அமர்ந்தாள்.

ஷிவா அவளின் கீழே அமர்ந்தான்.. “மது.. சின்ன பிள்ளைன்னு சொன்னேனே.. அப்படியேன்னு காட்டுற பாரு..” என்றான்.

மது தெளிவான குரலில் “என்ன ஆச்சு.. ஏன் என்கிட்டே சாம் இருக்க கூடாதா” என்றாள் ஒருமாதிரி.

ஷிவா “அப்படி சொல்லல.. உன்கிட்ட விட்டுட்டுதானே போனேன்.. இவ்வளோ நாள். இது உன்னை மனதில் யோசித்து கேட்பது. நல்லா  கேட்டுக்கோ.. உனக்கு கஷ்ட்டமா இருக்கா.. உனக்கு இந்த பொறுப்பெல்லாம் அதிகம்தானே.. சின்ன பெண்தானே நீ. எனக்கே அவன் செய்யறது சிலசமயம் கோவம் வரும்.. நீ அங்கேயும் பார்க்கணும். அதான், உன் மெஸ் அதையும் பார்க்கணும்.. இவனையும் பார்க்கணும், அதான் கேட்க்கிறேன். நான் இதை கேட்கனும் தானே.. எனக்கு தெரியுமே.. குழந்தை என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என.. அதான் கேட்க்கிறேன்.. நீ என்னை தப்பா பார்க்க கூடாது. அவனுக்கு எப்போதும் நீதான் பொறுப்பு” என்றான்.

மது கடைசி வார்த்தையை பிடித்துக் கொண்டாள் “அப்போ, நான் சொல்றதை கேளுங்க.. அவன் என் கூடத்தான் இருப்பான். நீங்க அப்படி நான் கஷ்ட்டபடுவேன்னு நினைத்தால்.. வீக் எண்டு வந்திடுங்க.. சேர்ந்து பார்த்துக்கலாம்.” என்றாள்.

மது இப்போது “ஏன் ஷிவா, நான் சரியா அவ..னை.. பார்த்துக்கலையா.. இல்ல, என்னை நீங்க நம்பலையா” என்றாள்.

ஷிவா அவளின் மடி மீது தன் முழங்கையை வைத்தான்.. நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தான் ஒரு நிமிடம் பின் “சாரி ப்ரியா.. நான் நிறைய யோசிக்கிறேன் ப்ரியா. எப்படி யோசிக்காமலிருக்க முடியும்.. நா.. நான், என்போல.. ஒருவரை மணந்திருந்தால் சரிக்கு சரியாக பேசலாம்.. அவரிடம் எதிர்பார்க்கலாம். உன்னிடம் எனக்கு எதிர்பார்க்க முடியாதே.. இன்னும் இன்னும் என் குற்றயுணர்வு அதிகமாக தானே ஆகுது. அதான் உன்னை  கேட்கிறேன்.” என்றான். 

மதுவிற்கு, ஷிவா அப்படி சொல்லவும், அவன் தன்மேல் வைத்திருந்த கையை தட்டிவிட்டு எழுந்தாள் “போங்க.. நீங்களும் உங்க யோசனையும்.. சாம்.. சாம்குட்டி.. என்னை பற்றி.. யாருமே நினைக்க மாட்டாங்கடா..” என அழுகை வர.. குரல் கரகரத்தது. மீண்டும் அமர்ந்தாள் அங்கேயே.

ஷிவா “மது.. ஷ்.. எதுக்கு அழுகை.. அவனை எழுப்பாத” என்றான். அவள் தன் கைகளை தட்டியதில்.. தன் கைகளை தனக்கு பின்னால் ஊன்றி அமர்ந்தவன்.. அவளையே பார்த்திருந்தான்.

மது “அவனை எழுப்புவேன்.. நீங்க இவ்வளோ திங்க் பண்ணா எப்படி.. முன்னாடியே, உன்னை பிடிக்கலை மதுன்னு சொல்ல வேண்டியது தானே..” என்றாள்.

ஷிவா புன்னகை முகமாக “அதுவும் முடியலையே டி.. அப்படிதான் உன்னை விட்டு போலாம்ன்னு பெங்களூர் வேலைக்கு போனேன். அப்புறமும் என்ன என்னமோ பேசி.. இப்படி வந்து நிக்கிறேன். பாரேன் பைத்தியமா இருக்கேன்.. ஏதாவது மந்திரிச்சி விடு அப்போவாது இது தீருதா பார்க்கலாம் ” என்றான் பாவமான குரலில்.

மது கன்னம் சிவக்க.. “சாம்மோட அம்மான்னு சொல்லிட்டு.. என்கிட்டே இருந்து அவனை பிரிக்கிறீங்க தானே.. சும்மா தேவையில்லாததை பேசி.. என்னை ஏன் டென்ஷன் பண்றீங்க..” என்றவள் காபிகப், ப்ரெட் பிளாட் எடுத்துக்கொண்டு கிட்சென் சென்றாள்.

ஷிவா “அதான் சொன்னேனே.. என் மூளையில் என்ன ஓடுதோ அதை கேட்ப்பேன்.. பேசுவேன்.. எனக்கு பொய்யா இருக்க பிடிக்காது.. அப்படி இருந்துதான் இப்படி ஆகிட்டேன்” என்றான்.

மது அங்கிருந்தே முறைத்தாள்.

ஷிவா எழுந்து உள்ளே வந்தான்.

மது “அ.. அவங்களை, அந்த பெண்ணை இன்னும் மறக்கலையா..” என்றாள், சின்ன குரலில். 

ஷிவா, லேசாக சிரித்தான்.. “நீ என்ன நினைக்கிற” என்றான்.

மது முறைத்தாள் “எனக்கு கேட்க ரைட்ஸ் இருக்கு.. உங்களுக்கு பதில் சொல்ல மட்டும்தான் ரைட்ஸ் இருக்கு. என்னை கேள்வி கேட்க இல்லை” என்றாள், புருவம் உயர்த்தி.. அதிகாரமாக.

ஷிவா “அடிம்பிடிச்சி நான்தான் வேணும்ன்னு கல்யாணம் செய்துகிட்டதானே.. அப்போ, கண்டிப்பா பதில் சொல்லணும்” என்றான் கர்வமாக. குரலில், அத்தனை வசீகரம் வந்துவிட்டது சட்டென. உரிமையாக, அவளின் விரல்களை எடுத்து தன் தோள்கள் மேல் வைத்தான்.. அவளின் பாத நுனியை.. தன் பாத விரல்களால் தீண்டும் வண்ணம் நெருங்கினான் அவளை.. “இப்போ சொல்லு” என்றான், அவளின் கண்களை பார்த்து. 

மது வண்ணமாக மாறி போனாள். தன்னவனின் செய்கையில். காதல்.. நேசம்.. எல்லாம் எப்படி வதைக்கும் என தெரியும் அவளிற்கு.. எப்படி  ருசிக்கும் என உணர வைத்தான் அவளின் கணவன். இப்போதுதான் சற்று நேரத்திற்கு முன்.. நீ கஷ்ட்டப்படுவ, நான் குழந்தையை எடுத்து போகவா.. என்றான், இப்போது நான் கேட்ட கேள்வியிலேயே என்னை திருப்பி கேட்டு உரிமை கொள்கிறான்.. என அவனின் கண்களையே பார்த்திருந்தால் பெண்.

ஷிவா ஆழமான குரலில் “நீ என்னிடம் நெருங்கியதை உணர்ந்தவன் நானடி.. நீ சொல்ல கூட இல்ல, உன் பார்வையை உணர்ந்தவன் நான். அதை தவிர்த்தவனும் நான். எனக்கு, என்மீதுதான் கோவம்.. குழப்பம்.. நான் எப்படி உன்னிடம், என்னை ஒப்புவிப்பது எனத்தான் குழப்பம்.. மத்தபடி, அ..அவள், என்னுடைய இறந்தகாலம். ம்.. எஸ்.. விரும்பினேன்.. என் பக்கம் மாற்றிடலாம் என பொய்யாக வாழ்ந்தேன்.. எல்லாம் என் தவறுதான்..” என்றவன், அவளை விடுத்து தள்ளி நின்றான். 

மது அவன் விட்டதும் அப்படியே கிட்சென் மேடையில் சாய்ந்து நின்றாள்.. அவனுக்காக பாவம் பார்க்கவில்லை அவள்.. என்னை எப்படி கேட்டான் இப்போது.. என எண்ணிக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

ஷிவா “அப்படி கேட்காதே” என்றான்.

மது “எல்லாம் தெரிந்துதான்.. உங்களை விரும்பினேன்.. நீங்க அப்படி, சாம் பற்றி கேட்டதும், நானும் கேட்டேன்” என்றாள்.

ஷிவா அவளை திரும்பி பார்த்தான். கைகட்டி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் நெருங்கினான். அவளின் கைகளை தனக்குள் எடுத்துக் கொண்டான்.. அவளின் உச்சியில் முத்தம் வைத்தான்.. மது அசையாமல் நின்றாள்.

மது கணவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.. முகத்தை அவனின் நெஞ்சில் புதைத்துக் கொண்டாள்.. “சாரி எல்லாம் சொல்லமாட்டேன்” என்றாள்.

ஷிவா அமைதியாக சிரித்தான்.. மது “நான் எதுக்கு சொல்லன்னும் நீங்கதான்  சொல்லணும்.. என்னை கோவப்படுத்தினால் இப்படிதான் நானும் யோசிப்பேன்” என்றாள்.

ஷிவா அமைதியாக சிரித்தான். 

மது “என்ன கிண்டல் பண்றீங்களா..” என்றாள்.

ஷிவா “நான் சொன்னது உண்மைதானே..” என்றான்.

மது ‘தன்னை சின்ன பெண் என அவன் சொன்னதை’ சரியாக கணித்தாள்.. “பரவாயில்ல.. அப்படிதான்.” என அவனின் நெஞ்சில் புதைந்துக் கொண்டாள். இருவருக்கும் தங்களை நினைத்தேசிரிப்பு வந்தது.

“நேசங்களால் கைகள் இணைந்ததே..

கை சேர்வதால் கவலை மறந்ததே..

தோள் சாயவும்.. தொலைந்து போகவும்..

கடைசியாக ஓரிடம் கிடைத்தே..”

சாம் “ம்…தூ…” என்றான் அழுகையினோடே..

Advertisement