Advertisement

மதுர ப்ரியம்!

27

சாம் எழுந்துக் கொண்டான்.. அதை தொட்டு மது எழுந்தாள்.. அவனுக்கு பால் கலந்துக் கொடுத்தாள். மது, ஷிவா உறங்குவதால்.. குழந்தையோடு, ஒரு அறையில் இருந்துக் கொண்டாள். 

சாம், விளையாடினான்.. ரையிம்ஸ் ஒருபக்கம் ஓடியது.. மதுவிற்கு அதெல்லாம் காதல் கீதமாக மாறியது போல.. அப்படியே அதோடு இணைத்து பாடியே படியே.. ”கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க” என பாடியபடியே  நேற்று எடுத்து சென்ற பாக் எல்லாம் பிரித்து.. துவைக்க வேண்டிய துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

மதுவிற்கு, என்னமோ வேலை செய்ய பிடிக்கவில்லை.. மனது அதிகாலையிலேயே நின்றது. அந்த நிகழ்வுகளை அசை போட்ட படி.. சோர்வாக அமர்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஷிவா, எழுந்து பார்க்க ஹாலில் இவர்கள் இருவரையும் காணாமல்.. எழுந்து வந்தான்.. அவன் வேலை செய்யும் அறையில் சத்தம் கேட்டது.. எதோ கரடி.. காடு.. என. அங்கே வந்து சத்தமில்லாமல் நின்றான். இவள் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க.. சாம், அதை எடுக்க விடாமல் அதன் மேல் படுத்து உருண்டுக் கொண்டிருந்தான். இடையில், அவள் கொஞ்சலாக மிரட்டடுவது.. சாம் ‘ஆ… ஹ.. ஹாக்க நோ… ம்..தூ…’ என எதோ கொஞ்சுவதுமாக இருவரும் எதோ செய்துக் கொண்டிருந்ததை பார்த்த ஷிவா அப்படியே நின்றான். 

காலையில் அவனின் மனது இதமாக உணர்ந்தது.. ஷிவா “எவ்வளோ சத்தம்.. எப்படி தூங்கறது நான்.. ஏன் பேபி நீ சொல்லமாட்ட..” என்றான் அதட்டலாக, மகனை பார்த்து.

சாம், தந்தையை பார்த்ததும் சிரித்துக் கொண்டே.. ஓடி வந்து அவனின் கால்களை கட்டிக் கொண்டான். ஷிவா மகனை தூக்கிக் கொண்டான்.

மது “சாம் பேபி, சத்தமில்லாமல் எப்படி விளையாடுறது..கேளு. மணி ஒன்பது டா… நாம எழுப்பினோமா.. இதெல்லாம் ரொம்ப ஓவர் டா.. பசிக்குது.. காபி குடிக்கிராறா..“ என்றாள், இவளும். 

ஷிவா லேசாக முறுக்கிக் கொண்டு மகனை பார்த்து “ஏன் என் மகாராணி என்னிடம் கேட்கமாட்டாங்களா..” என்றான், ரசனையான குரலில்.

மது பதிலே சொல்லாமல், சிரிப்பை விழுங்கிக் கொண்டு கிட்சென் சென்றாள். ஷிவா மகனோடு, அவளின் பின்னாலேயே வந்து ஹால் சோபாவில் அமர்ந்தான்.

சற்று நேரத்தில் மது “சாம் குட்டி, காபி ரெடி.. ப்ரஷ் செய்தால் குடிக்கலாம்..” என்றாள்.

ஷிவா, சோர்வாக எழுந்து சென்றான். பின் வந்தான்.

மது ஹாலில் காபியோடு ப்ரெட் எடுத்து வைத்து அமர்ந்திருந்தாள். அவனுக்கும் நான்கு துண்டு பிரட்.. காபி கொடுத்தாள். தானும் அப்போதுதான் காபி குடித்தாள்.. ஷிவா “ஏன் மது, நீ இன்னும் குடிக்கலையா.. எப்போ எழுந்த..” என்றபடி காபியை மிடரு பருகினான்.

மது “6:3௦க்கு..” என்றவள் ப்ரெட்டின் ஓரங்களை எடுத்துவிட்டு, உண்டாள். 

ஷிவா ”காபி சூப்பர்..” என்றான். 

காலை உணவை ஆர்டர் செய்திருந்தாள். அவர்கள் வந்து அழைத்தனர்.. மது, அதை வாங்க சென்றாள்.

ஷிவா, லாப் எடுத்து அமர்ந்துக் கொண்டான். 

மது, சாம்க்கு உணவு கொடுக்கும் வேலையை பார்த்தாள். 

மது குளித்து வந்தாள்.. “ஷிவா, சாப்பபிடவறீங்களா..” என்றாள்.

ஷிவா, அவளின் முதல் அழைப்பில் பதில் சொல்லவில்லை.. லாப்பில் கவனமாக இருந்தான்.

மது “ஷிவா” என அழுத்தம் திருத்தமாக அழைக்கவும்தான் திரும்பி பார்த்தான்.

ஷிவா “ப்ளீஸ்.. கொஞ்சம் வொர்க் இருக்கு..” என லாப்போடு தனியறைக்கு சென்றுவிட்டான்.

மது, உண்டு முடித்து.. சமையல் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். 

சாம், ரயிம்ஸ் பார்ப்பது.. எதையாவது  எடுப்பது.. விளையாட்டுப் பொருட்களோடு விளையாடுவது என சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் மது பிரிட்ஜ் திறக்க அதிலிருந்த சாக்லேட் பேக்’கை பார்த்துவிட்டான். மதுவிடம் “ம்.. தூ.. சாக்கி… சா..க்.. கி ஆ… ஆ..” என தன் வாயை திறந்து காட்டி, அது வேண்டும் என மதுவிற்கு புரிய வைத்துக் கொண்டிருந்தான், சாம்..

மதுவிற்கு, அவனின் செய்கையை பார்க்கவே அழகாக தெரிந்தது. ஆனாலும், மது “நோ… அங்க ஒன்னுமில்லையே.. என்ன, டானிக்கா..” என்றாள் கண்களை உருட்டி, மிரட்டலாக.

சாம், செல்லமாக கொஞ்ச தொடங்கினான் “ஆ.. ம் தூ.. சாக்.. கி.. ஆ..” என கொஞ்சியவன், அழ தொடங்கினான் சற்று நேரத்தில்.

மது “வேண்டாம் சாம் குட்டி, பீவர் இப்போதுதான் சரியாகியிருக்கு.. நாளைக்கு தரன்.. இன்னிக்கு நோ.. நாளைக்கு” என சாமாதனாம் செய்ய.. குழந்தை பிடிவாதம் பிடித்து அழ தொடங்கினான். சத்தம் அதிகமாகியது.

ஷிவா, வெளியே வந்தான் “மது… என்ன.. அவனை பாரேன் கொஞ்சம்.. எனக்கு கால் பேச முடியலை..” என்றான் சத்தமாக.

மது அவனை தூக்கிக் கொண்டு கிட்சென் சென்றாள். கையில் முறுக்கு ஒன்று கொடுத்தாள்.. சாம், இப்போது வேண்டாமென தலையசைத்தான்.  தான் ஒருவாய் கடித்தாள் மது. சாம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். மது அவனுக்கு கொஞ்சம் கொடுக்க.. அவனும் கடித்தான் வரவில்லை.. சாம் அதை கோவமாக பார்த்தான், மது, அந்த முறுக்கை  அவனின் கையில் கொடுத்தாள். சாம்,அதை கடித்து மெல்ல தெரியாமல் வாயில் ஊரவைத்து.. மதுவை பார்த்து முழித்தது.

மது “கொஞ்சமா சாப்பிடனும் சாம்…” என்றாள்.. சாம்’முடியாது’என தலையசைத்து.. விழித்தபடியே முறுக்கை உண்டான். அதில் ஒருபத்து நிமிடம் அமைதியாக இருந்தான் குழந்தை.

இப்படியே அவனை சமாளித்தபடி சமைத்து முடித்தாள்.. சாம்க்கு ஊட்டி முடித்தாள். ஷிவா, வெளியே வருவதாக இல்லை போல, என எண்ணி.. அவனுக்கு உணவை டப்பாக்களில் பிசைந்து வைத்து, தண்ணீர் பாட்டிலோடு உள்ளே வைத்தாள். 

மது உண்ணும்போது தன் வீட்டிற்கு அழைத்து பேசினாள், அடுத்து கோதைக்கும் பேசினாள். பின் சாம்’மை உறங்க வைக்க முயன்றாள். அவன் பேசிக் கொண்டே இருந்தான். இன்னும் மும்முரமாக விளையாண்டான். மது அப்படி இப்படி என கதைச் சொல்லி உறங்க வைக்க மணி மூன்றுக்கு மேல்.. மது அப்படியே தானும் உறங்கி போனாள்.

ஷிவா, மாலை ஐந்து மணிக்குதான், வெளியே வந்தான். மதுவும் சாம்’மும் உறங்க, தான் சென்று குளித்து வந்தான். காபி கலந்தான்.. மதுவை  சென்று காபியோடு எழுப்பினான்.

சாம் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனிற்கு இரு தலையணைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, ரெப்ரெஷ் செய்துக் கொண்டு வெளியே வந்தாள் மது.

ஷிவா, எதோ நியூஸ் சேனல் வைத்து பார்த்துக் கொண்டிருந்தான். இவள் வரவும், காபி எடுத்து அவளின் கையில் கொடுத்தான் “சாரி, வொர்க். வொர்க் ப்ரம் ஹோம்.. எடுத்திருக்கேன். அதான், காலையில் அவனை பார்த்துக்க முடியலை” என்றான்.

மது ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தாள்.

ஷிவா “சாம் ரொம்ப படுத்திட்டனா..” என்றான், இயல்பான குரலில்.

மது “இல்ல, இல்ல.. அவனுக்கு எப்போதும் அத்தை இருப்பாங்கல்ல.. அவங்க அவன் அழவும் எடுத்து கொடுத்திடுவாங்க, அதான் என்கிட்டயும் சாக்லேட் கேட்டு அழுகை.” என்றவள் ப்ரெட் எடுக்க கை நீட்ட.. ஷிவா, அதனை எடுத்து.. காலையில் அவள் செய்தது போன்று, ஓரங்களை எடுத்துவிட்டு, அவளிடம் நீட்டினான்.

இருவருக்கும் சொல்லிக் கொள்ள வார்த்தைகள் தேவையாக இருக்க வில்லை..  மது, அதனை வாங்கிக் கொண்டாள்.. அவளே “எப்போ பெங்களூர் கிளம்பனும் “என்றாள்.

ஷிவா “சென்னை பிரான்ச்க்கு ட்ரான்ஸ்பர் கேட்டிருக்கேன்..” என்றான், அவளையே பார்த்துக் கொண்டு.

மது அமைதியாகினாள்.. ஷிவாவே தொடர்ந்தான் “நீ இங்கதானே கேட்ட.. அதான்” என்றான்.

மது தலையை அசைத்தாள் ஏதும் பேசாமல் ‘ஆம்’ என்பதாக. 

ஷிவா “க்கும்..” என எதோ சொல்ல வருபவன் போல, தன் தலையை கோதிக் கொண்டான். அவள் அமர்ந்திருந்த ஒற்றை சோபாவின்.. பக்கவாட்டில்.. வந்து அவளோடு அமர்ந்தான். அவனிற்கு இடம் விடுவது போல.. சற்று சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள் மது.

ஷிவா “நாம கொஞ்சம் லவ் பண்ணலாமா.. கல்யாணம் ஆகிடுச்சின்னு.. என்னை நான் எதுக்கும் போர்ஸ் பண்ணிக்க கூடாதுன்னு நினைக்கிறேன். உன்னையும் அப்படிதான்.. எதுக்கும் போர்ஸ் பண்ண மாட்டேன்.. சாம், க்கும்.. அவனை உன்னால் பார்க்க முடிந்தால்.. ஒகே,” என இன்னும் எதோ கேட்க வர. 

 

Advertisement