Advertisement

மதுர ப்ரியம்!..

26

மது பேசவேயில்லை.. ஷிவா மட்டுமே பேசினான். 

மதுவிற்கு புரிந்தது எல்லாம்.. ஷிவா, எதோ குற்றம் செய்தவராக தன்னை உணர்ந்து, தன்னிடம் நெருங்க தயங்குகிறார். அன்று சென்றது.. அந்த குற்ற உணர்வில்..அத்தோடு,  நானும் பேசததால் சென்றுவிட்டார். ஆனால், இதை எப்படி மறைய செய்வது.. அவரிடமிருந்து.. அந்த யோசனைதான் அவளுக்கு. 

சாம் அழவும்.. மதுவை அழைத்து விட்டனர். மது “நீங்க சாப்பிடுங்க ஷிவா, நான் சாம்’மை தூங்க வைக்க போறேன்” என்றவள் கீழே சென்றாள் அவசரமாக.

உண்மையாகவே ஷிவா அவளின் கரிசனையில் சந்தோஷித்து போனான். இப்படி குழந்தையை அவள் கவனிப்பாள் என அவன் எண்ணவேயில்லை.. குழந்தையும் அவளோடு ஒட்டிக்கொண்டதே.. என சிந்தனை அவனுக்கு.

ஷிவா, கீழே வந்து, உணவு உண்டு.. ஹாலிலேயே படுத்துக் கொண்டான். அவனின் அத்தையின் குடும்பம் இரவில் வந்தனர். அவர்களோடு.. இவனும் சேர்ந்து படுத்துக்கொண்டான். நிம்மதியாக உறங்கினான்.. என்னமோ மதுவிடம் தன்னை பகர்ந்தது.. நிம்மதியை தந்திருந்தது அவனுக்கு.

மறுநாள் 

அதிகாலையிலேயே கோதையின் சொந்தம் ரயில்வே ஸ்டேஷன் வந்துவிட்டதாக போன் செய்திருந்தனர். 

கணேசன், கோதையின் சொந்தங்களை அழைத்துவர கிளம்பினார்.  

பதினோரு மணிக்கு வரவேற்பு தொடங்குவதாக ஏற்பாடு. 

அதிகாலையில் மது எழுந்து வந்தாள். கோதை ”மது, சாம் இன்னும் எழலையா.. தனியா விட்டு வந்தியா” என்றார்.

மது “ம்.. அவர் எங்க அத்தை” என்றாள் அவரிடமே. கோதைக்கு பெருமூச்சு எழுந்தது.. ஷிவா, ஹாலில்தான் படுத்திருந்தான்.. அதிகாலையில்தான் பார்த்த கோதைக்கு.. ‘என்ன செய்வது அவனை..’ எனதான் தோன்றியது, அன்னைக்கு. அவனை எழுப்பி தங்களின் அறையில் சென்று படுக்க சொன்னார்.

இப்போது மது தனக்கான காபியை கலந்துக் கொண்டாள், பின் மது “அத்தை, நான் எட்டு மணிக்கு பார்லர் போகனும்..” என இவள் தயங்க.

கோதை “சாம்’மை நாங்க பார்த்துக்கிறோம்.. எத்தனை பேர் இருக்கோம்” என்றார்.

மது “இல்ல அத்தை.. அவர்.. ஷிவா கொஞ்சம் கன்ப்யூசடா இருக்கார்.. இ.. இப்போ இந்த மேக்கப் எல்லாம் வேண்டாமே. அதான் சொல்லலாம்ன்னு.. நீங்களே போனில் சொல்லிங்க.. நான் பேமென்ட் போட்டு விட்டுடுறேன்னு சொல்லிடுங்க.. ப்ளீஸ் அத்தை” என்றாள்.

கோதை “என்ன சொன்னான் அவன்” என்றார் கொஞ்சம் கோவமான குரலில்.

மது “அவர் இதை பற்றி எல்லாம் ஏதும் சொல்லலை.. ஆனால், பீல் பன்றார். எனக்கும்  இந்த ரிஷப்ஷன் வைத்திருக்க வேண்டாமோன்னு.. அவரை பற்றி யோசிக்காமல் செய்திட்டமோன்னு தோணுது. சாரி அத்தை.. நான் அவரை கேட்டிருக்கணும்..” என்றாள்.. குற்றவுணர்ச்சியான குரலில்.

கோதை மருமகளையே பார்த்திருந்தார்.. அவருக்கு கண்ணில் நீர் வந்தது.. அதை மறைத்துக் கொண்டார், எப்படிப்பட்டவள் இவள்.. இவளுக்கும் கனவுகள் இருக்காதா.. என மகன் மீது கோவமாக வந்தது “அதெல்லாம் யோசிக்காத இது எங்களுக்காக.. பெரியவங்க எங்களுக்காக.. எங்க சொந்தம்பந்தம் மத்தியில், நாங்க எங்க பிள்ளைகளுக்கு செய்வது, இது.. இதில்  அவனை எதுக்கு கேட்கணும்.. அவன் கேட்டானா.. நான் சொன்ன போது, அவன் கேட்டானா?.. அப்போ நானும் கேட்க மாட்டேன்.. நீ போ மேக்கப் போட்டுட்டு வா..” என்றார், தன் அழுகையை கட்டுப்படுத்திய குரலில்.

மது “அத்தை.. நீங்களும் அப்படி பேசாதீங்க. நா… நானே தாயராகிக்கிறேன்.. சாம் சத்தம் கேட்க்குது.. நான் பால் எடுத்துட்டு போறேன்” என்றவள், மேலே அவசர அவசரமாக ஓடினாள்.

கோதைக்கு சங்கடமாகிப் போனது.. இந்த புடவை.. நகை.. போட்டோ.. மேக்கப் இவற்றை எல்லாம் எப்படி விசாரித்தாள்.. தேடி எடுத்தாள்..  என எண்ணம் ஓடியது அவருள். 

ஏதும் பேசமுடியவில்லை அவரால். வேலைகள் சரியாக இருந்தது. ஷிவா, வாசலில் இருந்தான். உள்ளே வந்தான்.. அன்னை காபி கொடுக்க வாங்கிக் குடித்தான். கோதை “ஏன் டா, என்னாச்சு.. அவகிட்ட என்ன சொன்ன..” என்றார்.

ஷிவா இந்த வரவேற்பை நினைத்து மருகிக்கொண்டிருந்தான். அவனுக்கு இன்னுமும் இவளோடு நிற்க சங்கடமாக இருக்கிறது.. மதுவிடம் நேற்று இரவு கூட சொன்னான் “நாளைக்கு.. ப்ளீஸ் என்னை ஏதும் தேடாதே.. நா..நான் இன்னமும் இந்த ரிஷப்ஷனை ஏற்கும் நிலையில் இல்லை.. உ..உனக்கு அது புரியும்ன்னு நினைக்கிறேன்.. எ..எல்லாவற்றுக்கும் எனக்கு கொஞ்சம் டைம் கொடேன்..” என்றிருந்தான் ஷிவா. இப்போது அன்னை கேட்க்கவும் ’நான் சொன்னதை, இவள் சொல்லிருப்பாளோ.. அதான், அம்மா கேட்க்கிறாங்க’ எனத்தான் எண்ணினான்.

சரியாக அந்த நேரம் குழந்தையோடு மது வந்தாள்.. இவன் அமைதியாக மதுவை கூர்ந்து பார்த்தான்.. அன்னைக்கு பதில் ஏதும் சொல்லாமல். கோதை ”என்ன டா.. அவளை முறைக்கிற” என்றார்.

மது “என்ன அத்த.. என்ன ஆச்சு” என்றாள், பதறிவளாக.

ஷிவா எழுந்து மேலே சென்றுவிட்டான்.

மது, தன் அத்தையிடம் என்னவென வினவினாள். கோதை ஏதும் சொல்லவில்லை..”ஒண்ணுமில்லை டா.. நீ குழந்தைக்கு பாரு” என்றார்.

மது “அத்த.. அவன் பாலே சரியா குடிக்கலை.. என்னோ தும்மிட்டே இருக்கான்” என்றாள் கவலையாக.

கோதை “அலைச்சல்தான்.. விடு, இட்லி கொடுத்துக்கலாம்.. ஏதாவது பெரசிட்டம்ல் வைச்சிருக்கியா.. கொடுத்திடு..” என்றார்.

மது எல்லாம் கேட்டுக் கொண்டாள்.. சாம் சரியாக விளையாடவில்லை.. மதுவின் கையிலேயே இருந்தான். மது அமர்ந்துக் கொண்டாள்.. மதுவிற்கு என்னமோ பயம் வந்தது. ஒன்றும் புரியவில்லை.. கணவன் நேற்று இரவு பேசும்போதே முகம் சரியில்லை.. அவன் இன்னமும் தான் தொலைத்த வாழ்வை நினைத்து வருந்துகிறான் என புரிகிறது. இப்போதும்.. கோதை அதை கண்டுக்கொண்டாரா.. அதனால், இப்போது ஏதேனும் கேட்டாரா.. அதான் என்னை பார்த்தாரா.. என புரியவில்லை அவளுக்கு. அத்தோடு, குழந்தைக்கு இப்படி இருக்கவும் இன்னும் பயம் அதிகமானது. அமைதியாக அமர்ந்தாள் சாம்மோடு.

பாவம் மது குழம்பி போனாள்.. கணவனும் முறைத்துவிட்டு சென்றான்.. குழந்தையும் அழுதுக் கொண்டிருக்கிறது.. என்னமோ இந்த நிமிடம் அவளின் வாழ்க்கை எங்கோ தொலைந்து விட்டதாக உணர்ந்தாள் பெண்.. எப்போது ஷிவா என்னை பார்ப்பான்.. நான் எப்படி தனியாக சாம்’மை வளர்ப்பேன்.. என பூதாகரமாக சிந்தனை வந்துவிட்டது அவளுள். அக்ளக்கமே இருந்தது அந்த விழிகளில். திருமணம் முடிந்து ஒருமாதம் சென்றிருந்த நிலையில்.. மதுவின் கண்கள் கனவுகளை சுமப்பதற்கு பதில் கலக்கத்தையேசுமந்திருந்தது.

சரியாக அந்த நேரம்.. ஷ்ரவனும் தரணியும் இப்போது, கணேசனோடு வந்தனர். 

மதுவிற்கு, தரணியை பார்த்தும் ஒரு ஆசுவாசம்.. ஆறுதல் வந்தது. மது வாய் திறந்துக் கூட ‘வாவென’ சொல்லவில்லை, தலையசைத்து ‘வா’வென்றாள், கலங்க இருந்த கண்களை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தரணி அவளை சிரித்த முகத்துடன் எதிர்பார்க்க.. அவளின் வாடிய முகம் ஏதோ செய்தது.. அவனை. என்னவென கேட்க நினைத்தான்.. கணேசன் அவர்களோடுதான் உள்ளே வந்தார், அதனால் எதும் கேட்க முடியவில்லை அவனால். தன்போல ஷ்ரவனும்.. தரணியும் அவளின் இருபுறமும் அமர்ந்தனர்.

ஷ்ரவன் “சாம் குட்டி..” என அழைத்தான். சாம் அழத் தொடங்கினான். 

மது “அவனுக்கு கொஞ்சம் முடியலை போலடா.. சினுங்கிகிட்டே இருக்கான்..” என்றாள்.

தரணி “ஏன் பாப்பா.. ஒருமாதிரி இருக்க” என்றான்.

அவ்வளவுதான் மது கண்ணில் தண்ணீர் விட்டுவிட்டாள், சட்டென.

ஷ்ரவன் குழந்தையை தாஜா செய்துக் கொண்டிருந்தான் “வா.. பிஸ்கட் வாங்கி வரலாமா.. இல்ல, காரில் போலாம் வா..” என இப்போது தாங்கள் வந்த காரின் சாவியை காட்டினான். சாம் இப்போது “ம…தூ.. காத்…” என சொல்லி ஷ்ரவனிடம் தாவினான்.

மது, தரணியிடம் என்ன சொல்லுவது என தெரியாமல் சட்டென கண்களை துடைத்துக் கொண்டு “காபி குடிச்சியா தரணி..” என்றவள் எழுந்து உள்ளே சென்றாள்.

தரணி ஏதும் சொல்லாமல்.. அவளையே பார்த்திருந்தான்.. மது உள்ளே சென்றவள், எங்கேயோ காணவில்லை, அவனின் கண்ணில் படவேயில்லை.. தரணிக்கு எப்போதும் போல அதே கோவம் வந்து நின்றது.. ‘இவளுக்கு இது தேவையா’ என.

ஏதும் கேட்க்கவும் முடியாமல்.. பேசவும் முடியாமல், கிளம்பிவிட்டான் நண்பன், தரணி.

எல்லோரும் ஹோட்டளுக்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர். மணமக்கள் மேடையில் வந்து நின்றனர். மணமக்கள் என சொல்லும் படி எந்த அலங்காரமும்.. இல்லாமல் இயல்பாக வந்து நின்றனர். 

வரவேற்பு தொடங்கியது.

ஷிவா சாண்டல் நிற பேண்ட்.. அவள் கொடுத்த பெர்ப்பில் நிறஷர்ட்.. இவள் மாமப்ழ நிறபுடவை.. சாம் வேட்டி சட்டையில் அழகாக நின்றான். கையில் பிரேஸ்லெட்.. காதில் ஒற்றை கல் தோடு.. விரலில் மோதிரம்.. அத்தோடு அவனின் துறுதுறுப்பும் சேர.. அந்த இடம் அவனால் மட்டுமே கொஞ்சம் கலையாக.. உயிர்ப்புடன் இருந்தது. மற்றபடி எல்லோரின் முகத்திலும் ஏனென்றே தெரியாத ஒரு இறுக்கம். அதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. 

ஷிவா சிரிக்கவேயில்லை.. மதுவும் அப்படியே, கணவன் காலையிலிருந்து சரியில்லை.. அத்தோடு சாம்’மிற்கும் முடியவில்லை எனவும்.. அவளும் பயந்துவிட்டாள். சிரிப்பை மறந்தாள்.

உள்ளூரில் எல்லோரையும் அழைத்திருந்தனர் கோதை தம்பதி. ஷிவாவின் அலுவலக, மற்றும் தன் தொழில் நண்பர்கள்.. மதுவின் மெஸ் ஆட்கள்.. காஞ்சிபுரத்தில் தெரிந்தவர்கள் என எல்லோரையும் இரு வீட்டாரும் முறையாக அழைத்திருந்தனர்.

பாலாஜி வந்துவிட்டான் குடும்பத்தோடு. தினேஷ், ஜெயாம்மா என இவர்களும் குடும்பத்துடன் காலை உணவுக்கே வந்துவிட்டனர். நேரம் இனிமையாகத்தான் அவர்களுக்கு சென்றது. 

ஷிவா மது இருவரும் ஒட்டவைத்த புன்னகையோடு.. எல்லோரையும் வரவேற்று.. புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். சாம், ஷ்ரவன் பொறுப்பானான்.

கணேசன் தம்பதிக்கும்.. தண்டபானி தம்பதிக்கும்.. இருவரையும் ஜோடியாக பார்க்க நிறைந்து போனது. ஷிவா, மதுவிடம்  எல்லோரையும் அறிமுகம் செய்தான்.. அவளிடம் பேசினான். அதுதான் அவர்களின் கண்களில் தெரிந்தது. திருமணம் முடித்து திரும்பியும் பார்க்காமல்.. பெண்ணை வீட்டில்விட்டு சென்றவன் முகம்  இப்போது தெரியவில்லை.. இப்போது அருகருகே நிற்க்கும் அமைதியான இருவரின் முகம்.. நிறைவை கொடுத்தது பெற்றவர்களுக்கு. ஆயிரம் கஷ்ட்டங்கள் வந்தாலும் சேர்ந்தே இருக்கட்டும் என கடவுளிடம் ப்ராத்தனை வைத்துக் கொண்டனர்.

 

Advertisement