Advertisement

சாம் எல்லோரிடமும் சென்றான்.. விளையாடினான்.. நிற்காமல் ஓடினான். ஸ்ரீக்கு மட்டும் கொஞ்சம் பயந்தான், மற்றபடி சாம்தான் அங்கே நாயகன்.. நேரம் ஆக.. ஆக சாம் என்னமோ போலானான்.. அழ தொடங்கினான். வாமிட் எடுத்தான்.

அவ்வளவுதான் ஷிவா “மது.. வா“ என சொல்லி   அவளை கைபிடித்து அழைத்துக் கொண்டு மேடையிலிருந்து கீழே இறங்கினான். மகனை வாங்கிக் கொண்டான், தன் தந்தையிடம் “அப்பா.. இங்க பார்த்துக்கோங்க.. அல்மோஸ்ட்.. ஃபங்க்ஷன் முடிஞ்சிது.. நாங்க கிளம்பறோம்.. இவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்..” என்றான்.

கணேசன் என்ன சொல்லுவது என தெரியாமல் நின்றார். கோதைதான் ”சரி ப்பா.. நீங்க போயிட்டு இங்க வந்திடுங்க.. சாப்பிட்டுதான் வீட்டுக்கு போகனும், வெயிட் பண்றோம், வாங்க” என சொல்லி அனுப்பி வைத்தார்.

ஆனால், சாம் ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் ஆனான். குறைந்தது நான்கு மணி நேரமாவது அப்ஸர்வேஷனில் இருக்க வேண்டும் என்றனர்.

போனில் அழைத்து ஷிவா, தன் தந்தையிடம் சொன்னான். 

எல்லோருக்கும் சங்கடமாக போகிற்று. முன்பே ஷிவாவிற்கு இந்த விழாவில் விருப்பமில்லை, அவனுக்கு தகுந்தாற்போல்.. குழந்தைக்கு நலமில்லாமல் போகவும்.. பெற்றோர் முகமே வாடிப் போனது.

மற்றவர்கள் இங்கு வேலையை பார்த்தனர்.

மருத்துவர்களிடம், கணேசன் மாலை வந்து பேசினார். இப்போதுதான் வரவேற்பு முடிந்தது.. என பேசினார்.

மருத்துவர்களும் ‘இரவு வீட்டுக்கு கூட்டி போகலாம், கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றனர். இரவு சாம் வீடு வந்தான். நன்றாக இருந்தான்.. வாமிட் ஏதும் இல்லை. ஆனால், உணவும் உண்ணவில்லை.

ஷிவா, வீடு வந்ததும் தன் அன்னையிடம் சத்தம்போட்டான் “இப்படி ஏதாவது ஆகும்ன்னுதான் பங்க்ஷன் வேண்டாம்ன்னு சொன்னேன். இப்போ எதுக்கு இந்த விழா..” என்றான், மகனின் சோர்ந்த தோற்றத்தை பார்க்க முடியாதவனாக

கோதை “என்ன டா, குழந்தைக்கு கொஞ்சம் முடியலை அவ்வளவுதானே.. சரியாகிடுவான். என்ன இப்போ.. எங்க ஆசைக்கு ஒரு பங்க்ஷன் செய்துக்க கூடாதா.. கல்யாணத்தையும் அப்படி யாருக்கும் தெரியாமல் செய்தாகிற்று“ என்றார்.

ஷிவா “எல்லாம் உங்க ஆசைபடிதானே நடக்குது. அதை ஊருக்கே சொல்லனுமா?. எல்லோரும் எப்படி எங்களை பார்க்கிறாங்க.. “ என்றவன் நிற்காமல் மேலே சென்றுவிட்டான். இதற்கு மேல் இருந்தால்.. ஏதாவது பேசிவிடுவோம் என சென்றுவிட்டான்.

பெரியவர்கள் எல்லோருக்கும் வருத்தமானது. மதியம் உண்டு முடித்து.. ஒரு வேன் கிளம்பி இருந்தது சென்னை நோக்கி. இப்போது வீட்டு மனிதர்கள் மட்டுமே இருந்தனர்.

மது “அத்தை.. நீங்க ஏதும் நினைக்காதீங்க அத்தை” என்றாள்.

கோதை ”நான் ஒன்னும் நினைக்கலை  மது. நீ மேல போ.. குழந்தையை தூக்கிக் கொண்டு.. அவன் அதற்கும் கத்த போறான். கொஞ்சம் ரெஸ்ட் எடு..” என்றார்.

மது பட்டு புடவைதானே கட்டி இருக்கிறாள்.. அதனால் ஒன்றும் சொல்லாமல் மேலே போனாள்.

ஷிவா, அறையில் உடை மாற்றி.. பெட்டில் விரிப்பு விரித்து வைத்திருந்தான். மது, சாம்மோடு வர.. அவனை வாங்கி பெட்டில் விட்டான்.. மருத்துவமனையிலேயே, சாம்மின்  உடைகளை களைந்து விட்டனர்.

இப்போது ஹக்கீஸ் கழற்றி.. மகனுக்கு ஹாட் டவல் பாத் கொடுக்க தொடங்கினான். மது அப்படியே அமர்ந்துக் கொண்டாள். ஷிவா அதையெல்லாம் கவனிக்கவில்லை. அவன் முகம் அப்படியே கோவத்தில் தகிக்கிறது.

பார்த்த மது, திருமணத்தன்று போல இன்றும் ஏதோ தவறு நடந்துவிட்டது.. என புரிந்துக் கொண்டவள் மிரண்டுபோய் அமர்ந்திருந்தாள்.

இப்போதுதான் ஷிவா நிமிர்ந்து “மது.. அடுத்த டோஸ் எப்போ கொடுக்கணும்.. டைம் ஆகிடுச்சா..” என்றான்.

மது திடுக்கிட்டு எழுந்தாள் “எ..என்ன.. ங்க” என்றாள்.

ஷிவா “மது.. என்னாச்சு…” என்றான். அவளை இப்போதுதான் பார்த்தான்.. பட்டுபுடவை, நகை.. ஓய்ந்த தோற்றம் என நின்றிருந்தாள்.. மது.

ஷிவா “சாரி.. நீ ட்ரெஸ் மாத்தி பிரெஷ் ஆகு.. நா.. நான் அப்புறம் வரேன்..” என்றவன் வெளியே சென்றான். மீண்டும் எதோ தோன்ற ஷிவா, ”மது.. அவனுக்கு அடுத்த டோஸ் எப்போ கொடுக்கணும்” என்றான்.

மது ”இன்னும் ஒன் ஹௌர் இருக்கு..” என்றாள் சின்ன குரலில்.

ஷிவா அவளின் உச்சந்தலையை வருடினான்.. “கொஞ்சமா ஏதாவது சாப்பிடுறியா” என்றான்.

மது “இல்ல.. வேண்டாம்” என்றாள்.

ஷிவா “எனக்கு பசிக்குது.. ப்ளீஸ் ஏதாவது சாப்பிடு.. உனக்குன்னு கேட்டால்தான் கொடுப்பாங்க.. நான் எடுத்துட்டு வரேன்” என்றான். மது புன்னகைத்தாள் லேசாக.

ஷிவா “பார்த்துக்க..” என மகனை கண்காட்டிவிட்டு சென்றான்.

கீழே எல்லோரும் வாடி போய் இருந்தனர். ஷிவாவிற்கு தன்னை நினைத்தே சங்கடமாக “அப்பா.. .மாமா” என இருவரையும் அழைத்தான் “சாம் நல்லா இருக்கான்.. ஒன்னும் பிரச்சனையில்ல.. எனக்குதான் டென்ஷன்.. அம்மா..” என அழைத்தான்  “சாரி” என்றான்.

சித்ரா “நீங்களும், மதுவும் ஏதும் சாப்பிடல மாப்பிள்ளை.. முதலில் சாப்பிடுங்க, வயிறு காலியாக இருக்க கூடாது.” என்றார்.

ஷிவா அமைதியாக இருக்கவும்.

சித்ரா கிட்சேன் சென்றார்.. கோதை தோசை ஊற்ற.. இவர் சட்னி அறைக்க தொடங்கினார். வேலைகள் நடந்தது.

ஷிவா உண்டான்.. “மதுவிற்கு தோசை கொடுங்கம்மா” என்றான். அவளிற்கும் வாங்கிக் கொண்டான்.

பின் அன்னையிடம் ஷிவா “ம்ம்மா.. நாங்க ஊருக்கு கிளம்பறோம்.. ஒரு டூ ஹௌவர்ல.” என்றான்.

கோதை “குழந்தைக்கு உடம்பு முடியலை.. நீங்களும் ரெஸ்ட் எடுக்கணும்.. எப்ப்டிபோவ.. நாளைக்கு போங்க..” என்றார்.

ஷிவா “ப்ளீஸ் ம்மா.. அவனுக்கு உடம்பு முடியலை.. நான் நாளைக்கு அவனுக்கு எப்போதும் பார்க்கிற டாக்டர் கிட்ட பார்க்கணும்.. இ.இங்க எனக்கு செட் ஆகலை.. ப்ளீஸ்” என்றான்.

கோதை அமைதியாக கணவரை பார்த்தார். கணேசன் ‘போகட்டும்’என தலையசைத்தார்.

தண்டபாணி “மாப்பிள்ளை.. கார் ஓட்டனுமே.. உங்களால் முடியுமா.. தரணியை கூட அனுப்பறேன்.. அவனையாவது கூட்டி போங்க..” என்றார்.

ஷிவாவினால் மறுக்க முடியவில்லை.. “அவனுக்கு ஒகேன்னா.. வரட்டும்..” என்றவன் மேலே செல்ல திரும்ப.. தரணியின் குரல் “மாமா ஸ்ரீ போகட்டும்..” என்றான் கொஞ்சம் சத்தமாக.

ஷிவா “மாமா.. நான் பார்த்துக்கிறேன். மாமா” என்றான். ஷிவாவிற்கு, அவன் தன்னை குற்றவாளியை போல பார்ப்பது பிடிக்காது. இப்போதும், அவன் தன்னோடு வரவில்லை எனவும் கோவம்தான் வந்தது. அப்படி என்ன செய்துவிட்டேன் நான்.. என. சொன்னவன் மேலே சென்றான்.

எல்லோரும் தரணியை முறைத்தனர். தரணி வெளியே சென்றான் 

ஷிவா, மதுவிற்கு உணவு கொண்டு வந்து கொடுத்தான்.. மது “நீங்க சாப்பிட்டீங்களா” என்றாள்.

அவளின் கணவன் “ம்.. நீயும் சாப்பிட்டு கிளம்பு, சென்னை போகனும்..” என்றான்.

மது “ஏன்.. அத்தை” என்றாள்.

ஷிவா “அவங்களை எல்லாம் பார்த்தால்.. சரியா வராது. எனக்கு, இங்க.. நீ, வரியா எப்படி” என்றான். மது, அதன்பின் உண்பதற்கு தவிர  வாயை திறக்கவில்லை.

ஒருமணி நேரம் சென்று, சாம்மோடு கீழே வந்து.. அவனுக்கு கொஞ்சம் தோசை ஊட்டினாள்.. மருந்துக் கொடுத்தாள்.. அவனும் விளையாட தொடங்கினான். 

மது மேலே செல்லவில்லை. தரணி இவளிடம் “ஏன் டி.. முடியுமா.. இப்படி அவசரப்படுறார்.. காலையில் போங்களேன்.. அப்படியே மேட் போர் ஈச் அதர் கப்பில் மாதிரி.. உடனே கிளம்பறீங்க..” என காய்ந்தான்.

மது “டேய்.. பேசாமல் இரு டா..” என அவனை அடக்கினாள்.

எப்படியோ ஷிவாவே, தன்னுடையது மதுவினுடையது.. குழ்ந்தையினுடையது என எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு கீழே வந்தான், கிளம்பியும் விட்டான். 

அவனோடு.. ஸ்ரீ ஒரு காரில்.. தரணி ஒரு காரில் என எல்லோரும் பின் தொடர்ந்தனர். 

ஷிவா எங்கும் நிறுத்தவில்லை. சாம் காரில் விழித்திருந்தான். அவனோடு பேசியபடியே வந்தனர் இருவரும்.

விடியலில் முன்பின் நேர வித்தியாசத்தில் சென்னை வந்து சேர்ந்தனர். 

ஷிவா பொறுமையாக பொருட்களை எடுத்துக் கொண்டான். மது குழந்தையோடு வீடு வந்தாள். 

ஷிவா “ஏசியிலேயே வந்திறுக்கான்.. ஹாலில் விடு அவனை” என்றான். தானே சென்று விரிப்பு எடுத்து வந்தான். சைகையில் ‘நீயும் தூங்கு’ என்றான். அவளுக்கு தேவையானதை எடுத்து வந்து கொடுத்தான். 

மது ரெப்ரெஷ் செய்து வந்தாள்.. ஷிவா, அவளின் கையில் ஹார்லிக்ஸ் கொடுத்தான்.. எதும் பேசாமல் வாங்கி குடித்தாள்.

மது, சாம்மின் அருகில் படுக்க.. குழந்தையின் அடுத்த பக்கம் ஷிவா வந்து படுத்துக் கொண்டான்.. சற்று நேரத்தில். 

ஷிவா “மது.. தூங்கிட்டியா” என்றான் ஆழ்ந்த குரலில்.. 

மது “ம்கூம்..” என்றாள்.

ஷிவா “எனக்கு.. வேற நல்ல மெமரியை தருவேன் ப்ரியா.. அ..அங்க என்னால் முடியலை.. சாரி” என்றான்என்னமோ வலி இருந்தது அவன் குரலில்..

மது, குழந்தையின் மேல் இருந்த அவனின் விரல்களை பற்றிக் கொண்டாள் “அஹ.. ப்ரியாவா..” என்றாள்.

ஷிவா பதில் சொல்லவில்லை.

மது “என் மேல கோவமில்லையே.. இதையும் உங்களை கேட்டாமல் செய்திட்டேன்.. சாரி” என்றாள்.

ஷிவா “ஹேய்… மது சாரி எல்லாம் சொல்லாத.. ப்ளீஸ். எனக்கு நீ அதிகம் மது.. அதான் நான் தள்ளாடுறேன்” என்றான், யாசகனான குரலில்.

மது “ஷிவா “ என அதட்டினாள்.

ஷிவா “க்கும்.. ம்.. இன்னும் கூப்பிடேன்“ என்றான் கரகரப்பான குரலில்.

மது “ம்கூம் தூக்கம் வருது.. குட் மோர்னிங்.. “ என்றாள், சிரித்துக் கொண்டே.

ஷிவா அவளின் விரல்களை இறுக்கமாக பற்றிக்கொண்டான்.

“எந்த காற்றின் அலாவலில் 

மலர் இதழ்கள் அவிழ்ந்திடுமோ..

எந்த தேவ வினாடியில்..

மனத்திரைகள் திறந்திடுமோ..”

Advertisement