Advertisement

ஷிவா, இப்போது மதுவிடமிருந்து மகனை வாங்கிக் கொண்டு.. அங்கிருந்த சோபாவில் அமர்ந்து.. எல்லோரையும் பார்த்தான். 

தண்டபாணி “டிபன் சாப்பிடலாமா.. இல்லை, காபி தர சொல்வா” என்றார்.

வித்யா வந்து “வாங்க தம்பி” என்றாவர்.. தண்ணீர் கொடுத்தார் குடிக்க.

சித்ரா ”வாங்க மாப்பிள்ளை” என்றார்.. திருமணத்தின் போது.. தன் முகம் பார்த்து கூடபேசவில்லை மாமியார் என எண்ணியவன்.. அவரின் வரவேற்பை ஏற்பது போல தலையசைத்தான்.

சாம் கீழே இறங்கி விளையாட சென்றான். 

கோதைக்கும், பெண்ணின் சொந்தம் மத்தியில்.. ஷிவா நிற்கும்போது பேச்சுகள் வரும் என தெரியமே, அதனால்தான்.. அவனை வரவேற்ப்பிற்கு முன்பே சென்று.. வீட்டில் பார்க்க சொன்னார், கோதை.

ஷிவா, அந்த கூட்டத்தில் தடுமாறி போனான்… பெண்களின் பார்வை.. எடைபோட்டது. பணமிருக்குமோ.. நல்ல வசதியோ.. என நோட்டமிட்டது. திணறினான் ஷிவா. 

மதுவின் பெரிய்ப்பா மகன் வந்தான்.. ஷிவாவின் அருகில் அமர்ந்து பேச தொடங்கினான் “எத்தனை வருடம் ஆச்சு, அங்கிருந்து வந்துங்க..” என்றார் ஒருவர்.

ஒருவர் “திரும்ப அங்கேதும் வேலை இருக்குங்களா.. போகனுமா” என்றார்.

பெண்களில் ஒருகுரல் “சீக்கிரம் இன்னொரு பிள்ளையை பெத்துக்க மது..” எனக் கேட்டது.

அவ்வளவுதான் மது “ஏங்க.. வாங்க சாப்பிடுங்க” என்றாள்.

ஷிவா முயன்று ஒன்றுமே நடவாத பாவனையில் ”வேண்டாம்..” என்றான் சட்டென.

மது உஷாறாகிவிட்டாள்.. “நீங்க வாங்க சாப்பிடுங்க” என்றாள். அதை பார்த்து தண்டபாணி ”வாங்க மாப்பிள்ளை சாப்பிடுங்க” என்றார். ஷிவா எழுந்தான்.

மது எதோ சரியில்லை என உணர்ந்தவள்.. அவனுக்கு பரிமாறத் தொடங்கினாள்.. சாம் விளையாடிக் கொண்டிருந்தான். இன்னும் அவனுக்கு உணவு ஊட்டவில்லை. வித்யா ”நீ போ மது.. சாம்’மை பாரு, நான் இங்க பார்க்கிறேன்” என்றார்.

மது “இல்ல அத்த.. அவன் பிஸ்கட் சாப்பிட்டான்.. கொஞ்சம் நேரம் ஆகும்.. நீங்க அவங்களை பாருங்க” என உறவுகளை கண்காட்டி சொன்னாள். எல்லா சொந்தமும் இருந்ததால் அப்படி சொன்னாள்.

ஷிவா உண்டு முடித்ததும்.. மது “அம்மா, அவர் லேட்டாதான் வந்தார்.. கொஞ்சம் பர்சேஸ் போகணும்ன்னு சொன்னார்.. நாங்க கிளம்பறோம்” என்றாள்.

சித்ரா “ஏன் டி, மதியம் சாப்பாடு சாப்பிட்டுதான் போவாங்கன்னு, உங்க மாமியார் சொன்னாங்க..” என்றார்.

மது “அம்மா.. நான் சொல்லிக்கிறேன்.. நான் டிபன் மட்டும் எடுத்துட்டு போறேன்” என்றவள் அடுத்த பத்து நிமிடத்தில்.. எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பிவிட்டாள், கணவன் மகனோடு.

ஷிவாவிற்கு, தன் மேலேயே கோவமாக வந்தது.. ’இதற்குதான்.. எங்களுக்கு யாரும் வேண்டாமென எண்ணினேன்.. இப்போது பார்.. தேவையில்லாமல் எல்லோருமே என்னை கேள்வி கேட்க்கிறார்கள்.. நான் அங்கே போனால் என்ன.. போகாவிட்டால்.. இவர்களுக்கு என்ன.. அடுத்த குழந்தை.. அப்படியே இந்த மதுவை.. ‘ என திரும்பி பார்த்து முறைத்தான் அவளை.

அவளை திட்டவும் முடியாமல்.. தன் கோவத்தை கட்டுபடுத்தவும் முடியாமல் மதுவை முறைத்தபடியே வந்தான். ஒருகட்டத்தில் ஷிவா “ஏன் மது.. உடனே கிளம்பிட்ட.. உங்க மக்களை பார்க்கனும்ன்னு ஆசையாகதானே கிளம்பின.. அம்மா கூட சாப்பிட்டு வாங்கன்னுதானே சொன்னாங்க..” என்றான் ஒருமாதிரி குரலில்.

மது “ஒண்ணுமில்ல.. சாம் நைட் சரியாக தூங்கலையில்ல அதான், வந்துட்டேன். நீ… நீங்களும் டயர்டா இருக்கீங்கல்ல.. அதான்.” என்றாள்.

ஷிவா இந்த கடைசி வாக்கியத்தில் கோவமாகி “என்ன மது.. நான்.. என்னை பத்தி உனக்கு ரொம்பதான் அக்கறை..” என்றான்  குரலில் நக்கல்தான் இருந்தது.

மது எதும் பதில் பேசாமல்.. கணவனை முறைத்தாள். எதாவது பேசினால்.. தன்னை முறைத்தே சாவடித்து விடுவான் என தெரிந்து சாம்மோடு சேர்ந்து வேடிக்கை பார்க்கும் வண்ணம் முகத்தை திருப்பிக் கொண்டாள். 

ஷிவா “இங்க பாரு.. அடுத்த பிளான் என்ன.. சொல்லு.. நீயும் உங்க மாமியாரும் சேர்ந்து ரிசப்ஷன் ஏற்பாடு செய்துட்டீங்க..  அடுத்தது என்ன.. ம்.. எதோ இருக்கும் போலவே..” என்றான் ஒருமாதிரி குரலில். சொந்தங்கள் எல்லாம் பேசியது.. அவனுடைய குற்றவுணர்வை தூண்டிவிட்டது இப்போது.

காரிலேயே சாம்க்கு உணவு ஊட்டினாள்.. அதுவே வீடு வந்த பிறகும் தொடர்ந்தது. பேச்சில்லை. சாமின் மழலை சத்தம் மட்டுமே கேட்டது வீட்டில்.

மது உண்டு முடித்து.. தனக்கும் ஷிவாவிற்குமான உடைகளை எடுத்து வந்து ஹாலில் வைத்தாள்.. பேக் செய்து வைத்திருந்தாள்.. என்னமோ திரும்பவும் பிரித்து அடுக்கினாள் அதை. தங்கள் மூவருக்கும் ஒரே வண்ணத்தில் உடை.. சாம்க்கும் ஷிவாவிற்கும் வேட்டி சட்டை அதே பெர்ப்பில் வண்ணத்தில்.. இவளின் புடவை எல்லோ வித் பெர்ப்பில் நிறத்தில் இருந்தது. ஷிவாவின் கண்கள் இதை பார்த்துக் கொண்டது.

மாலை ஐந்து மணிக்கு சேலம் கிளம்பினர். மது அவனின் மனம் புரிந்து பேசவேயில்லை. ஷிவா வரும் வழி முழுவதும்.. எப்படி இதை சரி செய்வது.. நான் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும்..காலையில் எனக்காக தன் அம்மா வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாள்..நான் அவளை பார்க்க வேண்டும்.. கோவம் கொள்ள கூடாது.. என எண்ணிக் கொண்டே வந்தான்.

பத்துமணிக்கு வீடு வந்து சேர்ந்துவிட்டனர். வழியில் எங்கும் நிறுத்தவில்லை, ஷிவா. வீட்டுக்கு வந்துதான் உண்டனர்.

உறவினர்களுக்கு என தனியாக.. வீட்டின் அருகிலேயே மண்டபம் எடுத்திருந்தனர். எல்லோரும் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தனர். உணவு பரிமாற அவர்களை கவனிக்க என கணேசன் அங்கு நின்றுக் கொண்டார்.

கோதை இவர்களை கவனித்துக் கொண்டார். ஆர்த்தி எடுத்து மகன் பேரன் மருமகளை ஆனந்த கண்ணீரோடு உள்ளே அழைத்தார் கோதை. மதுவிடம் விளகேற்ற சொன்னார். மகனையும் மதுவையும் அமர்த்தி பாலும் பழமும் கொடுத்தார்.

ஹரிணி வீடியோ காலில் அழைத்தாள்.. அண்ணனிடமும் அண்ணியிடமும் பேசினாள். சாம்மோடும் பேசினாள். மது இதுவரை பேசவில்லை ஹரிணியிடம்.. இதுதான் முதல்முறை. ஹரிணி நன்றாக பேச.. மது இப்போதுதான் சிரித்து இயல்பாக பேசத் தொடங்கினாள். ஷிவாவின் மனது சுட்டது.. ‘அவளை கஷ்ட்டபடுத்திகிறேனே நான்.. இதற்குதான் வேண்டாமென்றேன்..’ என அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மது பேசிமுடித்து.. உணவு என்ன என பார்ப்பதற்காக தன் மாமியாரிடம் சென்றாள்.

ஷிவா, தனதறைக்கு சென்றான்.. கட்டில் பெரிதாகி இருந்தது.. இன்னொரு கபோர்ட் வந்திருந்தது.. தன்னுடைய பழைய சாமான்கள் காணாமல் போகியிருந்தது. ஷிவாவிற்கு இதமாக இருந்தது அந்த சூழல்.. இப்போதுதான் ‘அவளை பார்த்துக் கொள்ள  வேண்டும்.. என்னிடம் அவளை வரவைக்க வேண்டும்.. ஏன் எனக்கு எல்லோரின் பேச்சும் கோவத்தை கொடுக்க வேண்டும்..’ என எண்ணிக் கொண்டே இவன் உள்ளேவர.. எல்லோரும் என்னை சூழ்ந்து நிற்க்கிறார்கள்.. என இன்பமாக உணர்ந்தான். ஆக, இதமும் உண்டு அவளால்.. வருத்தமும் உண்டு அவளால்.. என எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தான்.

குளித்து இலகு உடைக்கு மாறினான்.. எதையும் மனதில் எடுக்ககூடாது.. அவளை நான் கவனிக்க வேண்டும்.. என்னோடு இருக்கும்போதும் அவள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.. மற்றது பிறகு.. அவள் முகம் இதே சிரிப்பை எப்போதும் கொண்டிருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

ஷிவாவை உண்பதற்கு அழைக்க வந்தாள் மது.. ஷிவா மொட்ட மாடியில் நின்றிருந்தான்.

மது வருவதை.. ஷிவா உணர்ந்தாலும் திரும்பி அவளை பார்க்காமல் நின்றிருந்தான். தனிமை.. அவர்களுக்குள் வாய்க்கும் முதல் தனிமை.. மது “என்னங்க.. சாப்பிட வாங்க.. பசிக்கலையா..” என்றாள்.

ஷிவா “இங்க வா..” என்றான் திரும்பியும் பார்க்காமல்.

மது வந்து நின்றாள் சிரித்த முகமாக.. ஷிவா “என்ன ஸ்மையில்.. என்ன சந்தோஷமா இருக்க..” என்றான், அவளை அறிய முற்பட்டவனாக வினவினான்.

மதுவின் சிரிப்பு கொஞ்சம் குறைந்தது ”இல்ல, அத்தை.. உங்க ஸ்கூல் டேஸ் பத்தி சொன்னாங்க..” என்றவள் நிமிர்ந்து கணவனை பார்த்தாள்.. அவன் கோவமாக இருக்கிறானா என.

ஷிவா லேசான புன்னகைமுக்மாகவே இருந்தான்.. மது தொடர்ந்தாள் “நீங்க, உங்க மார்க்ஸ் குறைந்தால்.. உங்க அம்மாக்கு பயந்து தெரு கார்னரில் நிப்பீங்கலாம்.. உங்க அப்பாகிட்ட சைன் வாங்கிட்டு போயிடுவீங்கலாம்.. அதை கொஞ்சம் காமெடியா சொன்னாங்க அத்தை.. அப்படியே வந்தேனா அதான்.. நீங்க அவ்வளோ பயப்படுவீங்களா அத்தைக்கு” என்றாள் கிண்டலாக புன்னகைத்துக் கொண்டே.

ஷிவா கொஞ்சம் இலகுவாகினான்.. ”ம்.. அவ்வளோ வீக் மது நான்..” என தலை கோதிக் கொண்டவன் “எ..என்னை எப்படி மது பிடித்தது..” என்றான் சட்டென.

மது, கன்னம் சிவக்க தன் கையை அவன்புறம் நீட்டினாள்.. அவன் தயங்கியபடியே நிற்க.. மது தானாக தன் கையோடு.. அவனின் கையை பிணைத்துக் கொள்ள.. ஷிவா “ஹேய்.. பார்த்து வலிக்க போகுது..” என்றான்.. அவளின் வலது கையில்தானே காயம் அதான் பதறினான்.

மது ”இல்ல.. ஒண்ணுமில்ல.. உங்களுக்கு பிடிக்கலையா..” என்றாள்.. ஷிவா வெறுமையாக பார்த்தான். மது “இல்ல.. நீங்க கேட்டீங்களே.. எப்படி பிடித்ததுன்னு.. உங்களுக்கு பிடிக்கலையா” என்றாள் அழுத்தமான குரலில்.

ஷிவா, தன் விரல்களோடு கோர்த்திருந்த அவளின்  கைகளை பார்த்துக் கொண்டே “யார் யாரோ வந்து போயிட்டாங்களே.. நா.. நான் எப்படி உன்மீது.. க்கும், நேசம்.. அன்பு.. இருக்குன்னு சொல்றது.. இப்படி.. தயக்கமா.. ஒருமாதிரி அன்ஈசியா இருக்கு.. நீயே எடுத்துக்கயேன்.. இப்படி..” என தன் கை கோர்த்துக் கொண்டவளின்  கைகளையே பார்த்திருந்தான்.

மது ஸ்தம்பித்து நின்றாள்..

ஷிவா “ம்.. என்னை இப்படி.. ஏதாவது செய்து திருப்பி கொடுப்பியா.. எ..னக்கு உன்னை எ..எப்படி.. தொடங்குவதுன்னு தெரியலை.. அத்தோட.. எல்லா பேச்சுக்களும்.. ஏதேதோ பேச்சுக்களும் என் காதில் விழுது.. எ..என்னை நிலையிழக்க செய்யுது.. நிறைய யோசிக்கறேன்.. சொல்லேன் எ.. எனக்கு அன்பிருக்க..” என்றான் நிதானமான குரலில்.

மதுவிற்கு அழுகைதான் வந்தது.. ஷிவா அவள் அழுவதை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

“உன் அன்பு எனும் பானம்

என் உசிர் வரவேண்டும்

உன் மூச்சு காற்றில் நான் முழ்கி

மாய்ந்திட வேண்டும்..”

Advertisement