Advertisement

மதுர ப்ரியம்!..

23

மதுவிற்கு, அதிகாலையிலேயே விழிப்பு வந்தது.. அது ஷிவாவின் நடமாட்டம் காரணமா.. இல்லை, அவள் எப்போதும் எழும் பழக்கமா என தெரியவில்லை, விழிப்பு வந்தது.. என்னமோ எழ முடியவில்லை.. அசதி அவளை கண் திறக்கவிடவில்லை. எனவே, உறங்கிவிட்டாள்..

பின்தான் எழுந்தாள். எழுந்து, பால் எடுத்து வைத்து, குளிக்க சென்றாள். 

தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்தாள். சரி, கணவன் என்ன செய்கிறான் என பார்க்க.. நேற்று அவனிருந்த அறைக்கு செல்ல.. அங்கே இல்லை அவன். அவனின் லாப்.. போன் ஏதும் இல்லை. வீடு முழுவதும் தேடினாள்.. கணவனை. காணவில்லை.. மது சற்று நேரம் அப்படியே கிட்சென் மேடையில் அமர்ந்துக் கொண்டாள். வேலை செய்ய மூளை மறுத்தது.

அவருக்கு, யார் நான்.. எதை நோக்கி நான்.. என பெரிய கேள்வி எழுந்தது அவளுள்.. தொண்டை அடைத்துக் கொண்டது. திக்கற்று திணறும் அகதியாக நின்றாள். எல்லாம் என் சொந்தம்.. ம்.. என் சொந்தம், நானாக  எனதாக்கிக் கொண்டது, ஆனால், அதற்கான அங்கீகாரம் அன்பு அல்லவா.. அது இல்லையே.. என தொண்டை அடைத்தது பெண்ணுக்கு.

மணி 6:15, அவளின் அன்பு ஆவேசம் கொண்டது. போனை எடுத்து.. ஷிவாவிற்கு அழைக்க தொடங்கினாள். கோவம் கோவம் மட்டுமே இப்போது. அவளின் அழைப்பு அவனை எட்டவில்லை. கண்கள் உடைபெடுத்தது. எல்லாம் தெரிந்தும்.

மதுவிற்கு தெரியுமே, ஷிவா, தன்னுடைய இந்த அவசர திருமணத்தில்.. இப்படி அவனை கேட்காமல் செய்தததில் கோவம் கொள்வான்.. சட்டென தன்னை  பார்க்க மாட்டான்.. பேசமாட்டான்..  என அவளுக்கு புரியுமே.. அது தெரிந்துதானே.. அமைதியாக இருந்தாள்.. ஆனால், இப்படி காலை வேளையில்.. சொல்லாமல் கொள்ளாமல்.. தன்னிடம் மகனை கூட ‘பார்க்க சொல்லி சொல்லாமல்’ செல்லுவான் என சற்றும் எதிர்பாக்கவில்லை பெண். இப்போது இந்த செய்கை தாக்க.. அவனை அழைத்தாள்.. பாவம், அவனின் தொடர்புக் கிடைக்கவில்லை, அவளுக்கு.

இப்போது கோதை வரும் சத்தம் கேட்டது. தானும் வேலையை பார்க்க தொடங்கினாள்.

கோதை “என்ன, மது ஹாலில்தான் தூங்கினியா” என்றார்., கொஞ்சம் அதிர்ச்சியாக. பேரன் அங்கே உறங்குவது பார்த்து கேட்டார்.

மது தலையை மட்டும் ஆம் என்பதாக அசைத்தாள். கணேசன் இதை பார்த்தபடியே வந்தார். “எங்க ம்மா, அவன்” என்றார்.

மது “தெரியலை மாமா” என்றாள். சொல்லி சென்றால், சொல்லலாம்.. இப்போது தெரியாததை.. எப்படி சொல்லுவது. எனவே தெரியாது என்றாள்.. அவளின் முகம்.. நேற்று போலில்லை என தெரிந்தது பெரியவர்கள் இருவருக்கும்.

மது இருவருக்கும் காபி கொடுக்க.. வாங்கிக் கொண்டனர். கோதை “மது, நான் பேசறேன்.. வரசொல்றேன்.. என்ன நினைச்சிட்டு இருக்கான்..” என்றார், அவருக்கும் கோவமே. அத்தோடு  மருமகளின் முகம் வாடுவது.. அவருக்கும் பிடிக்கவில்லை.. எப்படி இதை எதிர்கொள்வது எனவும் கோதைக்கு தெரியவில்லை. தான் மகனை தவறாகத்தான் வளர்த்துவிட்டோமோ என தோன்ற, கோதை “ஏங்க, இப்படி இருக்கான் அவன்.. திரும்ப திரும்ப.. யாரையும் அவன் நினைக்க மாட்டானா.. என் வளர்ப்பு தப்பாபோச்சேங்க” என அழுக தொடங்கிவிட்டார்.

மதுவிற்கு சங்கடமாக போனது, தன் மாமியரிடம் “அத்தை, நீங்க பீல் பண்ணாதீங்க.. அவருக்கு, என்மேல கோவம்.. நா.. ன்.. பேசுகிறேன். காலையில் கூப்பிட்டேன் போன் போகலை.. நான் பேசுகிறேன் அத்தை.. நீங்க வொர்ரி பண்ணீக்காதீங்க..” என்றாள் தன்மையாக, தன்னுடைய வருத்தத்தை மறைத்துக் கொண்டு.

சாம் அப்போதுதான் சினுங்கத் தொடங்கினான். மது அவனை கவனிக்க தொடங்கினாள்.. முதலில் குழந்தைக்கு ஒன்றும் புரியாமல் அழுதான்.. பின் மது சமாதானம் செய்யவும்.. சாம் அழுகையை நிறுத்தி “ப்பா.. அப்பா” என்றான்.

மது “வருவாங்க.. ஆபீஸ் போயிருக்காங்க” என ஏதேதோ கூறி விளையாட்டு காட்டி, அவனை சமாதானம் செய்தாள். பாத்ரூம் கூட்டி சென்று.. ஹக்கீஸ் நீக்கி.. அவனை சுத்தம் செய்து.. அவனுக்கு இருந்த.. பால்  பற்களை சுத்தம் செய்து.. அப்போதே உடம்பிற்கு குளிக்க வைத்து கூட்டி வந்தாள்.

ஹாலில் அமர்ந்து, அவனுக்கு உடை மாற்றி.. கருப்பு பொட்டு அவனுக்கு வைப்பதில்லை.. எனவே கோதையிடம் “அத்த, ஏன் சாம்க்கு பொட்டு வைப்பதில்லை” என்றாள்.

கோதை அதற்கு “அவன் தான் வேண்டாம்ன்னு கத்தினான்.. சர்தான் போடான்னு விட்டுட்டேன்.. எல்லாம் வைச்சிருக்கேன்.. இரு எடுத்து வரேன்” என்றார்.

மது “வேண்டாம் அத்தை.. அவர் வேண்டாம்ன்னு சொல்லிட்டாரில்ல.. வேண்டாம்.. பையன்தானே.. அதுவும் ரெண்டு வயசு ஆகபோகுதே.. வேண்டாம் அத்தை..” என்றாள் ஒரே முடிவாக.

கோதை புருவம் உயர்த்தி.. தன் கணவரை பார்த்தார்.. என்னமோ நிறைவாக இருந்தது இருவருக்கும். 

மது, சாம்க்கு  உடைமாற்றி.. பூஜை அறைக்கு தூக்கி சென்று.. அவனை நிற்க வைத்தாள். தான் விளகேற்றினாள்.. இரு கை கூப்பி.. இவள் வாங்கினாள். சாம், திரு திருவென மது செய்வதை பார்த்திருந்தான்..  தானும் வனங்கினான்.. தன் பிஞ்சு விரல்களால். பின், மது நமஸ்கரிக்க.. சாமும் அப்படியே செய்தான். மதுவிற்கு, குழந்தையின் சைகையில்  சிரிப்பு வர.. குழந்தையை மெதுவாக அணைத்துக் கொண்டாள். அப்படியே வெளியே கூட்டி வந்தாள்.

சாம்’க்கு அதன்பின்தான் பால் கிடைத்தது.. கோதைக்கு மனது தாங்கவில்லை.. என்னடா இது குழந்தை எழுந்து முக்கால் மணி நேரம் ஆக போகுது.. இன்னுமேதும் கொடுக்கவில்லையே வயிற்றுக்கு.. என எண்ணிக் கொண்டேதான், இவர்களின் செய்கையை பார்த்திருந்தார்.  ஆனால், வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை.. மதுவிற்கு இருக்கும் ஒரே ஆறுதல்.. இப்போது குழந்தை மட்டும்தான்.. என தோன்ற.. அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தார். காலை டிபன் செய்ய தொடங்கினார் கோதை.

சாம் விளையாட தொடங்கினான்.. என்ன, மதுவின் பின்னாலேயே சுற்றினான்.. எதோ ஒரு காரை கையிலெடுத்துக் கொண்டு.. “ம்..அது..” என அழைத்தபடியே குதிங்கால்கள் தரையில் படாமல்.. அவள் செல்லும் இடமெல்லாம் நடந்துக் கொண்டே இருந்தான்.

எல்லோரும் உண்டு, சாம்க்கு உணவு ஊட்டி முடித்து.. மது “அத்தை, நான் அம்மா வீட்டுக்கு போய் பார்த்துட்டு வரேன்” என்றாள்.

கோதை “ஏன் மது, ஷிவா வந்திடட்டுமே.. முதல்முறை சேர்ந்து போகனுமில்ல..” என்றார்.

மது “அத்தை அதெல்லாம் இப்போதிக்கு நடக்குமா தெரியலை.. பாவம் எல்லோரும், அங்கே யோசிச்சிகிட்டே இருப்பாங்க.. ப்ளீஸ்.. நோ போர்மாலிட்டீஸ்.” என்றாள்.

கணேசன் “சரி ம்மா.. நாங்களும் வரோம்..” என்றனர்.

மது சந்தோஷமாக “வாங்க.. போகலாம்” என்றாள்.

மது டாக்ஸி புக் செய்தாள். எல்லோரும் கிளம்பினர்.

மது வீட்டில் நேற்று போல இல்லை.. எல்லோரும் இவர்களை பார்த்ததும் சிரித்த முகமாக வரவேற்றனர்.. என்ன, மாப்பிள்ளை வருவாரென எட்டி பார்த்தனர்.. மது “அப்பா, அவருக்கு வேலை.. பெங்களூர் போயிட்டார்.. காலையிலேயே..” என்றாள், நல்லவிதமாக.

வித்யா “ம்.. பார்க்கிறேன் டி.. பார்க்கிறேன்..” என்றார்.. அடுத்து பேசுவதற்குள், சித்ரா.. வித்யாவின்  கையை பிடித்திருந்தார்.. அதனால் வேறு பேசவில்லை, வித்யா. 

ஆனால் வித்யா, மதுவிடம் சின்ன குரலில் ”கெட்டிகாரியின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளுன்னு பார்க்கிறேன் டி..” என்றார் மதுவிற்கு மட்டும் கேட்கும் குரலில். 

மது கோவமாக “கெட்டிகாரிதானே அத்தை.. உண்மையாக்கிடுவேன். ம்.. அப்புறம் ஏன் காலையிலிருந்து கூப்பிடலை.. கல்யாணம் ஆனா பெண் என்ன செய்வான்னு கூட கேட்கலை. என்ன அப்பா… நீங்க கூட போன்  செய்யலை..” என்றாள் கேள்வி கேட்டும் த்வனியில்.

தண்டபாணி” அப்படியில்ல டாம்மா.. நீங்க, எப்படி என்னான்னு.. உன்னை கேட்க.. கூப்பிடலாம்ன்னு இருந்தேன்.. நீயே வந்துட்ட.. டா. எப்போ கூப்பிட சொல்லு.. மாமா மச்சானுக்கு கூப்பிட்டு, மருவிருந்தை சிறப்பா செய்யணும் மதும்மா.. என்ன சம்பந்தி, நான் சொல்றது.. இதுக்கு மட்டும், மாப்பிள்ளை முடியாதுன்னு சொல்லிட கூடாது. மாப்பிள்ளை எப்போ.. ப்ரீன்னு கேட்டு சொல்லுங்க.. விருந்தை சிறப்பா செய்யனும் நாங்க. சரிதானேங்க” என தன் சம்பந்தியை பார்த்து கேட்கவும் செய்தார்.

கணேசன் ”கண்டிப்பா.. செய்யனுங்க. அதெல்லாம் முறைதானே. சொந்தமெல்லாம் உங்களை கேட்குமே.. பையன்கிட்ட பேசிட்டு சொல்லிடுறோம். சிறப்பா செய்திடலாம்” என்றார் சிரித்த முகமாக.

கோதைக்கு தன் கணவரின் பேச்சு பயத்தை தந்தது.. ‘அவன் வந்து என்ன சொல்ல போறானோ..’ என எண்ணிக் கொண்டே கிட்சென் சென்றார்.

சித்ரா “உட்காருங்க.. வாங்க.. ஜூஸ் குடிக்கலாம்..” என்றார்.. முகம்காட்டி பேசினார் கோதையிடம் இப்போதுதான்.

கோதை அவரிடமிருந்த ஜூஸ் தாங்கிய பெரிய தட்டை.. வாங்கி அந்த மேடையில் வைத்தார்.. வித்யா, அபர்ணா, மது அங்கேதான் இருந்தனர்.. அவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு “அண்ணி, நேற்று, அவன்.. செய்ததுக்கு மன்னிச்சிடுங்க..” என்றார்.

எல்லோரும் “ஐயோ..” என்றனர் ஒருசேர..

மது “அத்தை..” என்றாள்.

கோதை “இது.. உங்களுக்கு எல்லாம் புரியாது மது.. அண்ணி, அவன் ரொம்ப நல்லவன்.. அதான், நம் முகத்தை அவனால் பார்க்க முடியலை.. அதான், அவன் தங்கலை. கண்டிப்பா.. உங்க பெண் நல்லா இருப்பா.. நீங்க கவலைபடாதீங்க.. மது அவனை கூட்டி வந்திடுவா.. கவலை படாதீங்க.. “ என்றார்.

சித்ரா “சரியாகட்டும் அண்ணி.. அவ ஆசைப்படி எல்லாம் நடந்துதுல்ல.. அப்போ, அவள்தான் பொறுப்பு.. நான் ஏதும் கேட்க மாட்டேன்.. அவதான் பார்த்துக்கணும்.. நீங்க வாங்க.. ஜூஸ் குடிங்க” என சொல்லி அந்த ட்ரையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார்.

மது அமைதியானாள்.. அன்னையின் பேச்சில். அபர்னாவ்ளின் அருகில் வந்து “சரியாகிடும்..மது” என்றாள்.

பின் ஜூஸ் குடித்து கீழே சென்றாள். மெஸ்சில் எல்லோரையும் பார்த்தாள்.. சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.. சாம் அவளோடுதான் இருந்தான்.. அவன் எல்லோரையும் ஈர்த்தான்.. விளையாடினான்.. ஓடினான்.. அந்த இடம் கலகலப்பானது.. அவனால்.

மது வேலை கெட வேண்டாம் என அவனை எடுத்துக் கொண்டு.. மேலே வந்தாள்.. கணேசனிடம் ஓடினான், சாம். அங்கே அபர்ணா அவனின் மகன்.. ஸ்ரீ என எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்தனர் குழந்தையோடு.. அங்கேதான் சாம் சென்றான்.

இப்போது மது தனதறைக்கு சென்றாள்.. ஷிவா அந்த நேரம் சரியாக அழைத்தான்.. வீடியோ கால் அழைப்பு. அவள், அந்த அழைப்பை துண்டித்துவிட்டு.. எப்போதும் போல அழைத்தாள் அவனுக்கு.

அவன் எடுத்தான் “ஹலோ..” என்றான்.

மதுவிற்கு காலையிலிருந்த கோவம் இப்போது மட்டுபட்டிருந்தது எனவே “எதுக்கு கூப்பிட்டீங்க” என்றாள்.

ஷிவா “உன் மிஸ்டு கால் வந்திருந்தது.. சொல்லு மது” என்றான் ஒன்றுமே நடவாத குரலில்.

மது “இப்படிதான் சொல்லாமல் போவீங்க்ளா..” என்றாள்.

அவ்வளவுதான் ஷிவா “ஏன் சொல்லணும்.. நீ சொன்னியா” என்றான், இந்த வார்த்தை எப்போது, அவள் வாயிலிருந்து வரும்.. தான் பேசலாம் என காத்திருந்தவன் போல பட்டென சொன்னான்.

மது அமைதியானாள்.

ஷிவா “நீ ஏன் என்கிட்டே பேசலை மது.. இவ்வளோ போர்ஸ், டாமினேஷன் ஏன் மது.. என்கிட்டே. அப்போதும் அப்படிதான்.. என்னை துரத்தி.. என்னை யோசிக்கவிடாமல்.. ச்ச, நீயும் அப்படிதானே மது செய்த..” என்றான் ஆழ்ந்த குரலில்.

மதுவின் கைகள் நடுங்கியது.. தொண்டை வறண்டது.. பேச்சு வரவில்லை.. அவளுக்கு.

ஷிவா “நேசம்… உன் நேசம் என்னை அழுத்துது மது.. நான் ஏற்கனவே, திக்கற்று வந்திருக்கிறேன். எனக்கு பயமாக இருக்கு.. உன் அன்பு.. ஆவேசாம இருக்கு என்னிடம்.. எனக்கு திரும்பவும் திக்கு தெரியலை.. உன் விருப்படி உடனே கல்யாணம் என முடிவெடுத்துட்ட.. எ… எனக்கு, என்னமோ, நான் முன்னாடி  செய்தது எல்லாம், அதுதான்.. என் விருப்பம்தான் நடக்கணும்ன்னு எண்ணி செய்தது.. எனக்கு அப்படியே நடக்குது போல மது.. எனக்கு பயமா இருக்கு.. நீ என்னை பழிவாங்குறீயா..” என்றான் ஓய்ந்த குரலில்.. தடுமாற்றத்துடன் பேசினான் ஷிவா.

மது அவசரமாக அனிச்சையாக “அய்யோ! இல்ல ஷிவா.. இல்ல..” என்றாள்.

ஷிவா, அமைதியாக இருந்தான்.. வந்ததிலிருந்து வேலை ஓடவில்லை அவனுக்கு. தான் இப்படி ஓடி வந்தது போல வந்தது தவறு என புரிகிறது.. ஆனாலும், அவளை ஏற்க முடியவில்லை அவனால். ‘ஏன் என்னை அழைத்து பேசவில்லை.. அவள். ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.. இவ்வளவு நடந்தும் கூட.. மது ஏன் இத்தனை நாள் என்னை அழைக்கவில்லை..’ என இருக்கவே செய்தது அவனுக்கு. மேலும்.. அவளிடம் சண்டையிட வேண்டும் என இருக்கிறது. ‘அவளுக்கு, அவள் நேசம் என்றால்.. எனக்கு, என் விருப்பமென ஏதும் இல்லையா.. நான் தோற்று வந்தவன்.. எனக்கான இடம் கொடுக்கவில்லையே அவள்.. வேண்டாம் எனதான் சொன்னேன்.. ஆனால், இவ்வளவு தெளிவாக அவள் நிற்பாள் என ஏன் என்னிடம் சொல்லவில்லை.. மது. எதுவாயினும் என்னிடம் தானே வந்திருக்க வேண்டும்.. தாலி கட்டிவிட்டால்.. எல்லாம் சரியா.. ஸ்ரீ பேசுகிறார்.. ஏன் இவள் பேசவில்லை.. என்னை என்னிடம்தானே கேட்டிருக்க வேண்டும் அவள்..’ என ஷிவா அவளின் காதல்.. தனக்கு கர்வத்தை.. தருகிறது என தெரியாமல்.. அவளிடமே அந்த கர்வத்தை கொட்டிக் கொண்டிருந்தான்.

ஷிவா “ஆமாம், என்ன தெரியும் என்னை பத்தின்னு.. இப்படி உன் வாழ்க்கையை அவசர அவசரமா.. எனக்கு கொடுத்த.. நான் நிறைய குடிப்பேன்.. தெரியமா உனக்கு. இன்னும் மனிதர்களை தெரியலை எனக்கு.. உலகத்தை தெரியலை எனக்கு.. பாரேன், நீயும் என்னை வளைச்சுட்டதானே..  ஹ… ஹா… இன்னும் நாலு வருடம்.. அங்கே சாம்’மை கூட்டி போகணும்.. அவ இப்போ ஒன்னும் சொல்லாமல் இருக்கா.. அடுத்த வருஷமே வந்து குழந்தை வேணும்ன்னு சொன்னால் என்ன செய்வ.. கூடவே நான் வேண்டும்ன்னு சொன்னால் என்ன செய்வ.. சொல்லு மது.. எதுவுமே கேட்க்காமல்.. தெரியாமல் இப்படிவந்து நிக்கிற.. எந்த தைரியம் மது உனக்கு..” என்றான்.

மது அமர்ந்துக் கொண்டாள் “இல்ல.. அப்படீல்லாம் நடக்காது.. பாலாஜி அண்ணாவும், ஸ்ரீ அத்தானும் அதெல்லாம் பேசிட்டாங்க…”  என்றாள் சன்ன குரலில்.

ஷிவா அமைதியானான், பின் “ஓ.. அவங்கள நம்பிதான் இந்த கல்யாணமா.. அப்போ நான் வேண்டாமில்ல” என்றான், குதர்க்கமாக.

மது “அய்யோ… ஷிவா” என அழுதாள்..என்ன பேசுவது இவரிடம் எனதான்  தோன்றியது அவளுக்கு “ஏன் இப்படீல்லாம் பேசறீங்க.. எ..என்னை பிடிக்காதா.. பி..பிடிக்கலையா” என்றாள் அழுகையான குரலில்.

ஷிவா “அஹ… அப்படியில்ல மது, நான் உன்னை காயப்படுத்தறேன்.. தெரியுது எனக்கு. ஆனால், உன்கிட்ட, என்னால் பொய்யாக முடியாது. உன்கிட்டதான் வருவேன்.. உண்மையானவனாக வருவேன்.. கொஞ்சம் நீ கஷ்ட்ட்படுவ மது.. அந்த உண்மை, நிறைய பேசும் மது உன்கிட்ட…இந்த மாதிரி நீ கஷ்ட்டபடுவ.. எனக்கே தெரியுது.. தயாராகிக்க. ஆனால், இனி நீ கூப்பிடாத.. எனக்கு கொஞ்சம் டைம் கொடு.. ப்ளீஸ் இதையானும் செய்..” என்றான் அழுத்தமாக.

மதுவிற்கு கரகரவென இப்போதுதான் கண்ணிலிருந்து நீர் இறங்கியது.. 

போனை வைத்துவிட்டான்.

“வான் வருவான்.. வான் வருவான்..

வருவான்.. 

வான் வருவான்.. வான் வருவான்..

வருவான்..

தொடுவான்..

மழை போல் விழுவான் 

மர்மம் அறிவான்..

என்னுள் ஒளிவான்.. 

அருகில் நிமிர்வான்…”

Advertisement