Advertisement

மூன்று  குழந்தைகளும் வீட்டை கலகலப்பாகியது. பெரியவர்களை சுறு சுறுப்பாக வைத்திருந்தனர்..பால் கலக்க..ஏதேனும் உண்பதற்கு கொடுக்க.. வெந்நீர் வைக்க என நேரம் சரியாக இருந்தது. பெரிய்வர்களும் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து சிரித்தனர்.. பேசினர். 

ஷிவா வந்து சேர்ந்தான் இப்போது. காலையில் இருந்த உடையில்லை இப்போது, ஒரு காஸுவல் உடைக்கு மாறி இருந்தான். வந்தவன் ஸ்ரீ அபர்ணா சுவாதி இருப்பதை பார்த்து லேசாக சிரித்தான்.. சாம் ”ப்பா..” என ஓடி  வரவும்.. ஷிவா சிரித்த முகமாக மகனை அள்ளிக் கொண்டான்.

நேரே தன் அறைக்கு சென்றுவிட்டான்.

யாரும் ஏதும் பேசவில்லை. வெளியே வரவேயில்லை.

சாம் சற்று நேரத்தில் தன் தந்தையிடமிருந்து வெளியே வந்து விளையாட தொடங்கிவிட்டான்.

இரவு சடங்குகள் செய்ய வேண்டும் என கோதை தன் கணவரிடம் முனுமுனுக்க தொடங்கினார். பாலாஜி பூ பழங்களென வாங்கி வர சென்றான்.

மதுவிற்கு இப்போதுதான் பயமெடுத்தது.. அவனை தனியே சந்திக்க வேண்டுமே.. அப்போதே என் முகத்தை பார்க்காமல் இது சரியாக இருக்காது என மறுத்தவர்… இப்போது இவ்வளவு பிடிவாதம் பிடித்து கட்டிக் கொண்டேனே.. என்ன பேசுவாரோ.. முதலில் என்னை பார்ப்பாரா.. என பதட்டமாகியது.

கிட்செனில் பூரிக்கு உருளை கிழங்கு குருமா செய்துக் கொண்டிருந்தவளுக்கு.. வேர்க்க தொடங்கியது.

சுவாதி “நீ உட்கார், நான் பார்க்கிறேன்” என்றாள்.

மது “குழந்தையோடு நீ இவ்வளவு நேரம் இருப்பதே அதிகம்.. உன்னை கஷ்ட்டப்படுத்தறேனா.. நீ உட்கார்ங்க சுவாதி, நான் ஈசியா செய்துடுவேன்.. இருங்க” என சொல்லி அருகில் வைத்துக் கொண்டே வேலையை பார்த்தாள். அபர்ணாவும் வந்து சேர்ந்துக் கொண்டான்.

கோதை.. பூரி போடத் தொடங்கினார்.. சாம் உண்டான், அடுத்து ஸ்ரீக்கும் தன் கணவருக்கும் கொடுத்தார்.

பாலாஜி வந்தான். அறையை அலங்காரம் செய்ய ஸ்ரீயும் பாலாஜியும், ஷிவா இருக்கும் அறைக்கு சென்றனர். லாப்பில் வேலையிலிருந்தான் ஷிவா, இவர்கள் வரவும் வென விழித்தான். பாலாஜியின் கையில் ஏதேதோ இருக்க.. கூடவே ஸ்ரீ இருக்க.. என்ன சொல்லுவது என தெரியாமல்.. எழுந்து நின்றான். 

பாலாஜி “இங்க இருக்கியா.. அந்த சேரில் உட்கார்..” என்றான் கடுப்பான குரலில்.

ஷிவா “டேய்.. “ என திணறினான்.. அவனுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. இன்னும் இன்னும் அவன் சங்கடம்தான் கொண்டான்.. என்னமோ என்னை எல்லோரும் அழுத்துகிறார்கள் என.

பாலாஜி “நீ அந்த ரூமுக்கு போ” என்றான்.

ஷிவா ஏதும் பேச முடியாமல்.. தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்றான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் மது, ஸ்ரீயும் பாலாஜியும் இருக்கும் அறைக்கு  வந்தாள்.. இருவரும் அப்போதுதான் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். மது “அத்தான்..” என்றாள் ஸ்ரீயை பார்த்து.

ஸ்ரீ “ம்…” என்றான்.

மதுவின் கைகள் நடுங்கியது.. முகம் முழுவதும் வேர்த்து இருக்க.. சின்ன குரலில் “க்கும்.. இ..ப்போ, இதெல்லாம் வேண்டாமே அத்தான். அ..அவர்க்கு.. க்கும், கொஞ்சநாள் ஆகட்டுமே அத்தான்.. ப்ளீஸ்.. அத்தைகிட்டையும் சொல்லிடுங்களேன்..” என்றாள் கைகள் நடுங்க.. குரல் நடுங்க.. சொன்னாள்.

ஸ்ரீக்கும் பாலாஜிக்குமென்ன செய்தேன்றே தெரியவில்லை. அமைதியாக அப்படியே எல்லாவற்றையும் வைத்தனர். மது வெளியே சென்றுவிட்டாள். 

இருவரும் வெளியே வந்தனர். ஹாலில் அமர்ந்துக் கொண்டனர்.

கோதை எதோ நடந்திருக்கிறது என உணர்ந்தார்.. தன் மருமகள் சென்றதை நேரத்தை கவனித்தாரே.. “பாலாஜி வா,நாம நாலுபேரும் சாப்பிடுவோம்” என்றார்.

மதுவிற்கு இன்னும் தன் கணவனை அழைக்கவில்லையே, தன் அத்தை என எண்ணம். எப்படி சொல்லுவது என தயங்கினாள். எல்லோருக்கும் அந்த எண்ணம் இருந்தாலும் கோதை எதோ செய்ய நினைக்கிறார் என அமைதியாகினர்.

மது “அத்த, அ..அவரை சாப்பிட..க்கும் கூப்பிடுங்க அத்தை” என்றாள்.

கோதை “அவன் வீடுதானே, அவனே வந்து சாப்பிடட்டும்.. இல்ல, நீ போய் கூப்பிடு டா.. என்ன பாலாஜி” என்றார்.

பாலாஜி “மது போ மது.. இனி நீதான் எல்லாம்.. தயங்கினால் எப்படி.. போ மது” என்றான்.

மது “நீங்க சாப்பிடுங்க,நான் பார்த்துக்கிறேன்” என்றாள். எல்லோரும்  சிரிப்பு வந்தது. 

பாலாஜி “நாங்க கொஞ்ச நேரத்தில் போயிடுவோம் மது..நீ தனியா மாட்டிக்க போற, பார்த்துக்கோ” என்றான் சிரித்தபடியே.

மது பாலாஜியின் வார்த்தையை யோசித்தாள். மது “சரி சாப்பிடுங்க, நான் போய் கூட்டி வரேன்” என சென்றாள்.

ஷிவா, இருக்கும் அறைக்கு சென்றாள் மது. லேசாக கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.. ஷிவா கீழே அமர்ந்திருந்தான். அந்த அறையில்.. கட்டில் சேர் என ஏதும் இல்லை.. எனவே லாப்போடு கீழே அமர்ந்திருந்தான்.

மது “ஷிவா,சாப்பிட வாங்க” என்றாள்.

ஷிவா அவளை நிமிர்ந்து பார்த்தான்.. ஒருவார்த்தை என்னிடம் பேசவில்லை.. கேட்கவில்லை.. என்னை கார்னர் செய்துக் கல்யாணம் செய்துக் கொண்டவள்தானே எனதான் முதலில் தோன்றியது “எனக்கு தெரியும், நான் சாப்பிட்டுக்குவேன்.. நீ.. நீங்க போங்க” என்றான்.

மது “ஷிவா, சாரி” என்றாள்.

ஷிவா ஏதும் பேசவில்லை.

மது “நீங்க கோவப்படுங்க, என்மேல மட்டும். ஆனால் எல்லோருக்கும் தெரியுற மாதிரி கோவப்படாதீங்க.. அது.. சங்கடமாக இருக்கு. வாங்க வந்து சாப்பிட்டு போங்க” என்றவள்.. திடமான குரலில். வெளியே சென்றும்விட்டாள். 

அவளுக்கும் கோவம் இருக்குமே.. காலையிலிருந்து இன்னும் கணவனின் முகம் பார்க்கவில்லை.. என்னுடைய வழி தவறுதான். ஆனால், எல்லாம் அவனுக்காக என்பது ஏன் புரியவில்லை.. கண்களை மூடிக் கொண்டு அவனிடம் வந்துவிட்டேன்.. இனி எப்படி என்னிடம் பாராமுகம் கட்டலாம்.. போங்க.. என்னை, நிமிந்து கூட பார்க்க கூடாத தவறா நான் செய்தேன்.. என கோவம்.. சங்கடம் வர.. சென்றுவிட்டாள்.

மதுவின் மனது அவனிடமே நின்றுவிட்டது. கோதை “நீ சாப்பிடு மது” என்றார்.

மது “ம்..” என்றாள். உண்டாள். கணவனை எதிர்பார்க்கவில்லை. அவனின் கோவம் இப்போதிக்கு குறையும் என தோன்றவில்லை. எனவே உண்டாள். கணவனுக்கு என எடுத்து வைத்தாள்.

எல்லோரும் கிளம்பினர். கோதை கணேசன் நேரமாக சென்று படுத்துக் கொண்டனர். 

சாம் தங்களோடு இருக்கட்டும் என்றார், கோதை. மது “அத்தை.. “ என்றாள் கண்ணில் வலியோடு. கோதை ஒன்றும் சொல்லாமல் குழந்தையை அவளிடமே விட்டு சென்றார்.

மது அமைதியாக ஹால் சோபாவில் சாம்மோடு அமர்ந்துக் கொண்டாள்.. எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு அமைதியாக.. குழந்தையை மடியில் சாய்த்து உறங்க வைக்க முயன்றாள். 

சாம் உறங்கியதும்.. தானும் அவனுமாக.. சோபாவில் உறங்கினர்.

நீண்ட நேரம் சென்று.. ஷிவா வெளியே வந்தான்.. அந்த சின்ன சோபாவில் இருவரும் படுத்திருப்பதை பார்த்தான். இவள் கிட்ட தட்ட விழும் நிலையில் இருப்பதை பார்த்தவன்.. அப்படியே நின்றான்.. தன் அறையிலிருந்து வந்த ஒளியில்.. அவளின் அசந்த முகம் தெரிய.. நெஞ்சுக்குள் ஒரு அச்சம் வந்தது.. எப்படி நேர் செய்வேன்.. எப்படி இவளை எதிர்கொள்வேன்.. என்பதுதான்.

விரிப்புகளும் போர்வைகளும் எடுத்து வந்து.. மதுவை எழுப்பினான் “கீழ படு..” என்றான்.

மது “சாம்..” என்றாள்.. உறக்கத்தினோடு.

ஷிவா ”இங்கதான் இருக்கான்..” என மகனை தூக்கி.. அவளின் அருகில் விட்டான்.. இருவருக்கும் சேர்த்து போர்த்தி விட்டான். 

மது “தேங்க்ஸ்..” என்றாள்..

ஷிவா சென்றுவிட்டான்.. உண்பதற்கு. தனிமையில் இருவரும் உறங்குவதை பார்த்துக் கொண்டே உண்டான். மனதில் சலனமேதான்.. என்னமோ வலிக்கிறது.. சொல்ல முடியவில்லை.. தன்னுடைய கற்பனைகள் காட்சிகள் எதிலும் இப்படி ஒரு நிகழ்வு வந்ததே இல்லை.. மனதில் இதம் பரவுகிறது.. உணவு இறங்கவில்லை.. ஆனால், வயிறு நிறைந்துவிட்டது. 

தானும் அவர்களின் அருகே.. ஒரு பெட்ஷீட் எடுத்து வந்து உறங்கினான்.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து கிளம்பிவிட்டான் பெங்களூர்க்கு, முதல் விமானத்தில்.

 

Advertisement