Advertisement

மதுர ப்ரியா!..

22

ஷிவா சாம்’மை.. அவனுடைய அந்த நாட்டின் கார்டியனிடம் காட்டி வந்தான். அங்கு இருபது நாட்கள் இருந்தான். லியோனைவை அவன் பார்க்க எண்ணினான். ஆனால், அவளுக்கு திருமணம் அடுத்த மாதம் இப்போது போய் அவளை தொந்திரவு செய்யாதே என்றனர்.

ஷிவாவிற்கு, அந்த செய்தி பாதிப்பை தரவில்லை. அவள் மகனை கேட்ப்பாளா என பேசி தெரிந்துக் கொண்டான். அவர்களின் சட்ட ஆலோசகர்.. சாம் பற்றி எந்த எண்ணமும் லியோவிற்கு இல்லை.. சட்டபடி அவள் தாய் என்பதால்.. அவனின் பாதி செலவை ஏற்பது அவள் பொறுப்பு.. என்பதால்.. ஒரு குறிப்பிட்ட தொகையை டெப்பாசிட் செய்வாள்.. அது அவளின் வருமானத்தை பொருத்து  அமையும்.. எப்படியும் இந்த வருடத்திற்கான, தொகையை கொடுத்திடுவாள் என தெளிவாக தெரிவித்தார். 

ஷிவாவிற்கு தன் மகன் சுமையல்ல.. ஆனால், சட்டம் அப்படிதான் சொல்லுகிறது. எனவே, அதனை ஏற்பான். எல்லாம் பேசி முடித்தாகிற்று. 

ஷிவா, தன்னுடைய பிஸினெஸ்க்கு என தனியாக இரண்டு மூன்று க்ளைண்ட்ஸ்’களை பார்க்கச் சென்றான். அதுவும் நல்ல விதமாகவே சென்றது. ஒரு நல்ல மனநிலையில்தான் இந்தியா வந்து சேர்ந்தான் ஷிவா.

ஆனால், வந்தவனுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.. அத்தோடு சேர்த்து, அவசப்படுத்தலும் இருந்தது. அவன், தன் முந்தைய வாழ்விலும் ஒரு அவசரம் அவனுக்கு இருந்தது. அவள், அவனை யோசிக்கவே விடவில்லை.. நெருங்கினாள்.. இது காதலா.. ஈர்ப்பா என உணரும் முன்பே.. அவளின் அழகு அவனை நிலைகுலைய செய்திருந்தது. ஆனால், எது எப்படி இருந்தாலும்.. தவறு என்று அவனுக்கு புரிந்தது.. அதுதான் அதன் பலனை வரிந்து தானே ஏற்றுக் கொண்டான்.

இப்போது மது விஷயத்திலும் ஷிவாவிற்கு நெருக்கடி. ம்.. அப்படிதான் உணர்ந்தான்.. ‘அவள் கையில் குழந்தையோடு இருக்கும் உன்னையே திருமணம் செய்துக் கொள்ள எண்ணுகிறாள்.. எவ்வளவு நல்ல பெண்.. இந்த சம்பந்தம் இனி தேடினாலும் உனக்கு கிடைக்குமா.. கை குழந்தையை பார்த்துக் கொள்ளுகிறேன் என்கிறாள்.. என ஆயிரம் நிறைகள், அவள் மேல் இருப்பதாக பெற்றோர் சொல்லவும். 

ஷிவா, தன்னை குறித்தே நொந்து போனான். தனக்கு வேறு வழி இருப்பதாக அவனுக்கு பிடிபடவில்லை.. இயல்பாய் அவளை மனதில் ஏந்திக் கொள்ள ஆசைக் கொண்டவன்தான், ஷிவா. ஆனால், இன்று  நெருக்கடியால் எல்லோரின்  முன்பும் தன்னுடையவளாக ஏற்றுக் கொண்டான். ஆனால், அவன் இன்னும் அவளை மனதில் ஏந்திக் கொள்ளவில்லை. என்னமோ அவளை இயல்பாக நெருங்க முடியவில்லை.. அருகில் அமர்ந்திருந்தவளை பார்க்கவே  சங்கடமாகி போனது.. பார்க்கவும் இல்லை அவன். தூய்மையானவளை நான் நெருங்குவது பிழைதானே நீ மனதில் மீண்டும் நடுக்கம். 

அத்தோடு சொந்தங்கள் எல்லோரும்.. என்னை எதோ குற்றம் செய்தவன் போல பார்ப்பதாக தோன்றியது. மது வீட்டிலிருந்து யாரும் அவனோடு ஒன்றவில்லை.. பேசவில்லை. தண்டபாணி “வாங்க மாப்பிள்ளை” என்றார். ஸ்ரீ அழைத்தான். மற்றபடி யாரும் ஏதும் பேசவில்லை.. ஏன் என்னை பார்க்க கூடயில்லை.. வலிக்கிறது. இதனால்தானே யாரும் வேண்டாம் என்றிருந்தேன்.. எதோ போலிருக்கிறது.. நான் மீண்டும் மீண்டும் நாணி கூனி போகிறேன்.. எனக்கு இது வேண்டாம்.. பாலாஜி கூட என்னை புரிந்துக் கொள்ளவில்லை.. என் மனதில் இருப்பதை உணரவில்லை.. கேட்க கூட இல்லை. மது நீ கூட.. என்தான் அவனின் எண்ணம்.

அதனாலோ என்னமோ நிற்க முடியவில்லை அவனால்.. எங்காவது செல்ல வேண்டும் எனதான் எண்ணம், என்னை பற்றி யாரும் யோசிக்கவில்லை.. பின் எதற்கு நான் இங்கு.. எங்கே செல்லுவது என தெரியாமல் காரெடுத்துக் கொண்டு ஒரு மால் சென்று அமர்ந்துக் கொண்டான்.

மது அந்த ஹால் சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஷிவா எங்கே சென்றான் என சலசலப்பு எழுந்தது. பாலாஜி கார் சாவி இருக்கிறதா என பார்த்தான்.. இல்லை, கீழே செக்யூரிட்டி எண் எது என ஷிவாவின் தந்தையிடம் வினவினான்.

அவர் சொல்ல.. பாலாஜி அந்த எண்ணுக்கு அழைத்து கேட்க கேட்க, ஷிவாவின் கார் கம்பொண்டை கடந்திருந்தது.

மதுவை, தரணி கோவமாக பார்த்தான்.. அவனுக்கு இன்னும் சமாதானம் ஆகவில்லை.. தன் அண்ணன் மீதும் கோவம். இதற்கு சம்மதித்த தன் மாமா மீதும் வருத்தம். அப்படி என்ன! அவள் விருப்பத்தை செய்து தருவது.. இது நல்லதில்லை என சொல்லவில்லையே இவர்கள், அப்படி என்ன அன்பு அவள் மீது.. இப்படி இவள் நிற்பதை பார்க்க வேண்டுமா… ஒரே பெண், எப்படி எல்லாம் திருமணம் செய்ய வேண்டும் என எண்ணினோம்.. பாரு, வீட்டுக்கு வந்தா.. தாலி கட்டினவனை காணோம்.. என தோழியை கண்ணால் எரித்துக் கொண்டிருந்தான்.

மதுவின் அத்தை சித்ரா இருவரும் கண்கலங்க நின்றிருந்தனர். சித்ராவிற்கும், வித்யாவிற்கும் மீண்டும் ஸ்ரீயின் மேல் கோவம்.. ஸ்ரீயினால்தான்.. இவள் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாள்.. இப்படி இரண்டாம் தாரமாக செல்ல என் மகளுக்கு என்ன தலைஎழுத்து.. காதல் என்றாலும் ஒரு வரைமுறை இல்லையா.. இதென்ன காதல்.. இப்போது பார்.. இவள் தனியே நிற்கிறாள். என ஸ்ரீயை முறைத்தனர்.

ஸ்ரீ எல்லோரின் பார்வையையும் உணர்ந்து.. பாலாஜியிடம் விசாரிக்கத் தொடங்கினான். கணேசன் தன் மகனை போனில் அழைக்கத் தொடங்கினார். போனை எடுக்கவில்லை ஷிவா.

கணேசன் தண்டபாணியிடம் வந்து நின்றார்.. ”வந்திடுவான் சம்பந்தி.. பாலாஜியை அனுப்பறேன்.. நீங்க எல்லோரும் உட்காருங்க..” என்றார்.

தண்டபாணி எதையும் முகத்தில் காட்டவில்லை.. பெண் வாழ்க்கை இது எனவே, அமைதியாக “உட்காருங்க ம்மா” என்றார், தன் மனையாள்.. தங்கை.. அபர்ணா என எல்லோரையும் பார்த்து சொன்னார்.

கொஞ்சம் அந்த இடம் சலசலப்பாக இருந்தது.

மது எழுந்து, கோதையின் கையில் இருந்த சாம்’மை வாங்கிக் கொண்டாள் இப்போது. சாம்’மிற்காகதான் இந்த திருமணம் என ஷிவாவிடம் சொல்லி.. அவனை முற்றிலும் யோசிக்க விடாமல் செய்து திருமணம் முடித்திருந்தார் கோதை. ம்.. தன் மகனிடம் எந்த தயவு தாட்ச்சண்யமும் காட்டவில்லை. முதல்முறை நீ முடிவெடுத்தாய் தவறானது.. அதன் பலன் ஆயுளுக்கும் நீ அனுபவிக்க போகிறாய். ஆனால், இந்த பெண்.. உன்மேல் கருணை கொண்டு.. காதல் கொண்டு.. உன்னை மணக்க நினைக்கிறாள்.. ஏன் வேண்டாம். இது நாங்கள் பார்த்து செய்யும் திருமணம்.. இதுதான் உன் முதல் திருமணம்.. அமைதியாக ஏற்று.. வாழ்வை நெறி செய்துக் கொள். இல்லை, நாங்கள் போகிறோம், எப்போதும் போல உன் வாழ்வை நீயே பார்த்துக் கொள். என பலவாறு அவனை பயப்படுத்தி.. ஒதுக்கி.. பிடித்ததையே அவசர அவசமாக அவனிடம் திணித்துவிட்டனர்.

ஷிவா, அதனால்தானே என்னமோ தெரித்துவிட்டான்.

கோதை தன் பேரனை மதுவிடம் கொடுத்தார். போனில் இப்போது ஷிவாவை அழைத்தார். ஷிவா ஓய்ந்து போனான். இத்தனை முறை.. எல்லோரும்  அழைக்கவும்.

ஷிவா அந்த அழைப்பை ஏற்றான்.. ஆனால், ஏதும் பேசவில்லை. கோதை “என்ன டா, எங்க டா போன.. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சி.. ஒழுங்கா வீட்டுக்கு வா” என்றார்.

ஷிவா “க்கும், எனக்கு முக்கியமான மீட்டிங்க இருக்கு.. ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..” என்றவன் போனை, சைலென்ட்டில் வைத்துவிட்டான்.

கோதைக்கு கோவம்தான்.. ஒன்றும் சொல்ல முடியவில்லை. எல்லோரிடமும் ”வந்திடுவான்.. வேலைதான்.” என்றார் சிரித்த முகமாக.

எல்லோருக்கும் புரியுமே.. யாரும் ஏதும் கேட்கவில்லை. எல்லோரும் கடிகாரத்தை தங்கள் பார்வையாலே நகர வைத்தனர்.. அப்படிதான் போல,  நகர மறுத்தது போல நேரம்.. யாருக்கு என்ன பேசுவது என தெரியவில்லை.

மது எதையும் பொருட்படுத்தவில்லை.. சாம்’மோடு விளையாடத் தொடங்கினாள்.. அவளுக்கு இப்போதுதான் திருமணம் முடிந்தது என சொன்னால் நம்பமுடியாது. 

மதிய நேரம் சாம்க்கு உணவு கொடுக்க தொடங்கினார். பாலாஜியின் மனைவி.. தேன்மொழி எல்லோரும் உணவு பரிமாறினார். மதுவும் கூடவே நின்றுக் கொண்டாள்.. உண்ணவில்லை, சித்ராவிற்கு உணவே இறங்கவில்லை. எல்லோருக்கும் அப்படிதான் இருந்தது.

கோதை பாலாஜி.. மது என மூவரும் உண்ணவில்லை.. “இப்போ ஷிவா வந்திடுவான்” என்று சொல்லியே நேரம் கடத்தினர்.

தண்டபாணி “நாங்கள் கிளம்புகிறோம்“ என்றார். வேறு என்ன செய்வது.. யாருக்கும் ஏதும் தெரியவில்லை.. நேரம் கடக்கிறதே தவிர.. அடுத்து என்ன என யாரும் கேட்கவோ யோசிக்கவோ முடியவில்லை.

கணேசன் “எல்லாம் சரியாகிடுங்க.. மது இனி எங்கள் பெண்.. கவலை படாதீங்க.. உங்கள் மாப்பிள்ளை பொறுப்பானவன்..எதோ.. நேரம்.நீங்க எதையும் மனதில் வைக்காதீங்க, உங்க பெண் சந்தோஷமாக வாழ்வதை நீங்க பார்க்கத்தான் போறீங்க.. நல்லதே நடக்கும்” என்றார். பாவம் பெண்ணை பெற்றவர்கள் பாடு அவருக்கும் தெரியுமே.. தன் மகன்.. இந்த திருமணம் எல்லாம் அவர்களை நெருடியிருக்கும் என உணர்ந்தவர்.. தண்டபாணியின் கைகளை பிடித்துக் கொண்டு சொன்னார், இந்த வார்த்தையை. பெண்கள் எல்லோருக்கும் கண் கலங்கியது. பதில் பேசவில்லை.. அமைதியாக எல்லோரிடமிருந்தும் விடை பெற்றனர். மதுவிடம் தலையசைத்து விடை பெற்றனர். யாரும் அவளை நெருங்கவில்லை.

ஸ்ரீ, அபர்ணா, குழந்தை.. இங்கே இருந்துக் கொண்டனர்.

கோதை “மது சாப்பிடு வா” என்றார்.

குழந்தையோடு சுவாதியும், அபர்ணாவுமிருக்க..

மது “அபர்ணா, சுவாதி பாப்பாவை தூங்க வைக்கிறீங்களா.. வாங்க” என சொல்லி மற்றொரு அறையில் இரு அன்னைகளையும்  அபர்ணாவையும் இருக்க செய்து வெளியே வந்தாள்.

ஸ்ரீயை தன் மாமனாரின் அறைக்கு செல்ல பணித்தாள். அவனும் சென்று படுத்துக் கொண்டான்.

பின் மது தன் அத்தை அழைத்துக் கொண்டு உண்பதற்காக வந்தாள். பாலாஜி கோதை மது மூவரும் உண்டனர். பாலாஜி “மெஸ்ஸியம்மா.. உங்க ஸ்பெஷல் டிஷ் என்ன” என்றான்.

மது “என்ன அண்ணா.. எல்லாம் சமைப்பேன்” என்றாள். யாருக்கு என்ன பேசுவது என தெரியாமல் ஏதேதோ பேசியபடியே நேரம் கடத்தினர்.

மாலை நேரம் ஷிவாவிற்கு கோதையும் பாலாஜியும் மாறிமாறி அவனுக்கு அழைத்து பார்த்தனர். எடுக்கவில்லை அவன்.

சாம் எழுந்துக் கொண்டான். மது அவனை கவனித்தாள்.. பின், மது திருமண பட்டு புடவையை.. இப்போதுதான் மாற்றிக் கொண்டாள், வீட்டில் உடுத்தும் ஒரு காட்டன் புடவையை கட்டிக் கொண்டு வந்தாள். 

கோதை  “மது சாமிக்கிட்ட விளக்கு ஏத்து டா.. தினமும் இதை நீ செய்யனும்.” என்றார்.

மது தலையசைத்து பூஜை அறை சென்று விளக்கேற்றி கைகூப்பி நின்றாள்.. மதுவிற்கு முருகன்தான் பிடித்த கடவுள்.. அங்கே திருச்செஞ்ந்தூர் முருகன் கையில் வேலுடன் கம்பீரமாக அவளின் முன் நின்றார்.. மது தனக்கு தெரிந்த முருகன் பதிகம் சொல்லிவிட்டு மனமுருக வேண்டிக் கொண்டாள்.

 

Advertisement