Advertisement

சாம், காலையில் எப்போதும் போல இருவரையும் எழுப்பினான், தனது சுப்ரபாதத்தால். அதன்பின் ஷிவாவிற்கு நேரம் சென்றது. 

பாலாஜி, ஷிவா கொடுத்த ஹோர்லிக்ஸ் குடித்துவிட்டு, வீடு கிளம்பினான். 

ஜெயாம்மா, பத்து மணிக்கு குழந்தைக்கு இட்லி கொண்டு வந்து கொடுத்தார். அதனுடனேயே மெஸ் எண்ணும் கொடுத்து சென்றார்.

ஷிவா, செக்யூரிட்டியை அழைத்து.. வீட்டை சுத்தம் செய்வதற்கு ஆட்கள் யாராவது இருப்பார்களா என வினவினான். அவர்களும் ஒருமணி நேரத்தில் ஏற்பாடு அனுப்புவதாக சொல்லினர்.

ஷிவா அதற்கு, தானும் தன் மகனும் குளித்து வந்தனர்.. மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தான். தனக்கு ஆர்டர் செய்தான். செக்யூரிட்டி சொல்லிய பெண்மணி ஒருவர் வந்தார் வீட்டை சுத்தம் செய்ய.

நேரம் சென்றது.

பனிரெண்டு மணி போல ஜெயாம்மா கொடுத்த அந்த மெஸ்.. எண்ணிற்கு அழைத்தான். அந்த பக்கம் எடுக்கப்பட்டது ஷிவா “மா..மாமி கிட்சென்.. மெஸ்…” என வினவினான்.

அந்த பக்கமும் ஒரு பெண்ணின் குரல்.. “ஹலோ மாமிஸ் கிட்சென்” என சலிப்பிலாத இனிமையான குரலாகவே ஒலித்தது.

ஷிவா “தான் இருக்குமிடம் சொல்லி” மெஸ் பற்றி விசாரிக்க தொடங்கினான்.

அந்த பெண்ணும் பொறுமையாக “தினமும் வேண்டுமா.. இல்லை ஏதாவது டெர்ம்ஸ் இருக்கா” என்றாள்.

ஷிவா “இல்லைங்க தினமும் வேண்டும்.. நானும் பத்து மாத குழந்தையும் இருக்கோம்..” என்றான்.

அந்த பெண் “ஓகே.. குழந்தைக்கு தாராளமாக கொடுக்கலாம். நாங்க எங்க டேம்ர்ஸ் சொல்றேன்..“ என ஆரம்பித்தாள்.. “காலை உணவு வழங்குவதில்லை சர். மதியமும் இரவு என இருவேளை மட்டுமே இங்கே. ஒரு சாப்பாட்டிற்கு, மதியம் *** இவ்வளவு ரூபாய், இரவு இவ்வளவு *** ரூபாய். 

கேரியார் சர்வீஸ் சர்.. பிளாஸ்டிக் நாங்க அனுமதிப்பதில்லை. அதனால், மறுநாள் பாத்திரங்களை துலக்கி தயாராக வைத்திருக்க வேண்டும். துலக்காமல் கொடுக்க கூடாது.

வாரத்தில் ஒருநாள் எங்களின் டெலிவெரி செய்யும் ஆட்கள் விடுப்பு எடுப்பார், அப்போது நீங்கள் வந்து உணவை வாங்கி செல்ல வேண்டும். வீக்லி பேமென்ட் சர்.. சண்டே உங்களுக்கு வேண்டாம் என்றால் முன்னமே சொல்லி விட வேண்டும். 

அப்புறம் முக்கியமாக, இன்று உணவு வேண்டாம் என்றால், முதல்நாளே எங்கள் வாட்ஸ்சப் குரூப்பில் மெசேஜ் போட்டிடனும். இல்லை என்றால்.. இருமடங்கு வசூலிக்கப்படும் அன்றைக்கு மட்டும். உணவு வீணடிப்பது எனக்கு பிடிக்காது. வேற..” என அவள் யோசித்தாள்.

ஷிவாவிற்கு அதையெல்லாம் கேட்டதும் தலை சுற்றியது “இதுக்கு நானே சமைத்து சாப்பிட்டுடுவேனே..” என்றுவிட்டான் வாய்விட்டு.

அந்த பெண் “சந்தோஷம்.. ஆல் தி பெஸ்ட்… தேங்க்ஸ் போர் காலிங்” என வைக்க போக.

ஷிவா அதை சரியாக அனுமானித்து “ஹலோ ஹலோ.. ஜஸ்ட் கிட்டிங்.. ப்ளீஸ் ஹெல்ப் அஸ்..” என்றான் வேண்டுதலான குரலில்.

அந்த பெண் “சரியா சொல்லுங்க வேணுமா.. வேண்டாமா” என்றாள்.

ஷிவா “நானும் என் குழந்தையும் மட்டும் தனியாதான் இருக்கோம்.. நீங்கள் இல்லாமல் எங்கள் வாழ்வு செழிக்காது.. கருணை காட்டுங்கள்..” என செந்தமிழில் வேண்டினான்.

அவளும் அலுவக விஷயங்களுக்காக.. அவனின் தகவல்களை கேட்டு தெரிந்துக் கொண்டாள். பின் இறுதியில் “குழந்தைக்கு எத்தனை மாசம் சொன்னீங்க..” என்றாள்.

அவனும் சொன்னான்.

அந்த பெண் “சரி கேட்டு சொல்றேன்.. ஏதாவது அரேஞ் பண்ண முடியுமா என.. நீங்கள் ரெகுலராக வாங்கினால் மட்டும்.” என்றாள் சிறந்த முதலாளியாக.

ஷிவா “ம்…கண்டிப்பா சாப்பாடு நல்லா இருந்தால்.. உங்கள் சேவை எங்களுக்கு தேவை” என்றான்.

அந்த பெண் “ஓகே.. இன்னிக்கு லஞ்ச் டைம் முடிந்தது. டின்னெர் வேணும்ன்னா.. மெசேஜ் பண்ணுங்க.. தேங்க் யூ” என போனை வைக்க போனாள்.

மீண்டும் ஷிவா அவசரமாக “ஹலோ, மிஸ்… உங்க யுவர் குட் நேம் ப்ளீஸ்…” என்றான்.

அந்த பெண்ணும் “மதுப்ரீயா” என்றாள்.. மதுரமான குரலில்.

ஷிவா “தேங்க்ஸ்” என சொல்லி வைத்தான். அழைப்பை துண்டித்தவனுக்கு ஒரு பெரிய பாரம் இறங்கிய நிம்மதி. 

சாம், தன்னுடைய உறங்கும் நாற்காலியில் உறங்கியிருக்க.. ஷிவா, தானும் மகனை பார்த்தபடியே சோபாவில் உறங்க தொடங்கினான்.

இரவு உணவு வந்தது.. குழந்தைக்கு என இடியாப்பம்.. சர்க்கரை.. பருப்பு தண்ணீரில் உப்பு.. மிளகுதூள்  சேர்த்து, அதற்கு தொட்டு கொள்ள ஏதுவாக சிறிய டப்பாவில் கொடுத்திருந்தனர். இவனுக்கு சப்பாத்தி குருமா என மிதமான உணவு.

ஷிவா, மகனுக்கு ஊட்டி முடித்தான். ஜெயாம்மா மாலையில் வந்து, சாம்’மை பார்த்து சென்ற போது சொல்லியிருந்தான்.. தான் உணவு வாங்கிக் கொள்வதாக. அவரும் சரி என குழந்தையை பார்த்து சென்றார்.

ஷிவா, இப்போது உணவு ஊட்டி முடித்து.. குழந்தையை ஜெயாம்மா வீட்டிற்கு தானே கூட்டி சென்றான். 

நாராயணனும்.. ஜெயாம்மாவும் இவர்கள் இருவரையும் வரவேற்றனர். ஷ்யாம், ஜெயாம்மாவை பார்த்ததும் தாவியது அவரிடம்.

நாராயணன் சற்று நேரம் ஷிவாவோடு பேசத் தொடங்கினார். லேசாக அவரிடம்.. மனையாளை பிரிந்து வந்துவிட்டேன் எனும் விதமாக சொல்லிவிட்டான். அவரும் துருவாமல்.. எங்கு வேலை.. என்ன.. என வினவினார்.

ஜெயாம்மா டீ கொண்டு வந்து கொடுத்தார்.. மறுக்க முடியாமல் வாங்கி பருகினான். 

பின் மகனை விட்டு, தான் வீட்டிற்கு சென்றான்.

உணவின் பேக்கிங்.. அழகாக இருந்தது.. சின்ன ஹாட்பாக் போன்ற பாத்திரத்தில் நான்கு சப்பாத்தி.. சின்ன சில்வர் சம்படத்தில் குருமா.. தயிர் ஒரு சின்ன சில்வர் கப்பில்.. என பாந்தமாக இருந்தது.

ஷிவா உண்ணத் தொடங்கினான்.. அமிர்தமாக உள்ளே இறங்கியது உணவு. நீண்ட.. பல வருடங்கள்.. சென்று ஒரு வீட்டு சாப்பாடு.. அதன் வாசம்.. ருசி.. எல்லாம்  அவனின்  உயிர் வரை சென்றது. மனது நிர்மலமானது.. உணவுக்கும் உணர்வுக்கும் பெரிய சம்ம்மந்தம் உண்டு.. அது அவனின்  விழியின்  ஓரம் கண்ணீராக கசிய.. திருப்தியாக உண்டான், ஷிவா.

உண்டு முடித்து பாத்திரங்களை கழுவி.. எடுத்து வைத்தான். தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு.. ஹாலில் அமர்ந்தான். 

ஜெயாம்மா, சாம்’மை உறங்க வைத்து தூக்கி வந்தார். மகனை அப்படியே பெட்ரூமில் படுக்க வைத்தான் ஷிவா.

பின், மதியம் பேசிய அந்த எண்ணுக்கு அழைத்தான் ஷிவா.

அந்த பக்கம் எடுத்ததும், ஷிவா “ஹலோ.. ப்ரியா இருக்காங்களா” என்றான்.

மதுப்ரியாவும் “சொல்லுங்க சர், நான்தான் பேசறேன்..” என்றாள்.

ஷிவா “சாப்பாடு ரொம்ப நல்லா இருந்ததுங்க.. அப்படியே எங்க வீட்டு சாப்பாடு மாதிரியே இருந்ததுங்க.. தேங்க்ஸ் ங்க” என்றான் உணர்வு பூர்வமாக.

ப்ரியா “என்ன சர், பாரீன் ரிட்டனா..” என்றாள் சாவகாசமானக் குரலில்.

ஷிவாவிற்கு.. இந்த சாவகாசமான குரலும்.. கேள்வியும் ஆச்சர்யமாக இருந்தாலும்  “ஆமாங்க.. எங்களுக்கெல்லாம்தான் சாப்பாட்டோட அருமை தெரியும்.. சரிதானே” என்றான், உணர்ந்து.

மது “ம்.. சரிதான். ஆனால், வந்த புதிதில் இப்படிதான் சொல்லுவாங்க.. மூணு மாசம் ஆகினால், காரம் இல்லை.. உப்பு இல்லை.. என இந்த சாப்பாட்டைத்தான் குறையும் சொல்லுவாங்க.. எனிவே, உங்களுக்கு நன்றி சர். அப்புறம் அட்வன்ஸ்.. பே பண்ணனும் சர்.. அக்கௌன்ட் டிடைல்ஸ் அனுப்பறேன்.. பாருங்க..” என்றாள்.

ஷிவா “மெஸ்சுக்கு அட்வான்ஸ்சா..” என்றான்.

மது “ம்.. சர்.. பாத்திரம் எல்லாம் சும்மா வருமா சர். நீங்கபாட்டுக்கு.. சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டா.. நாங்க எங்கே போவது, அதான் சின்ன தொகை முன்பணமாக கேட்க்கிறோம்.” என்றாள்.

ஷிவாவிற்கு சிரிப்பாக வந்தது அவளின் பேச்சில்.. கலகலவென சிரித்தான் “ஏது அந்த பாத்திரங்களுக்கு.. அட்வான்ஸ் வேறையா..” என்றான்.

மது “என்ன சார் செய்யறது.. கம்பெனிக்கு கட்டுபடியாக மாட்டேங்குது.. பாத்திரம் வாங்கி.. எல்லாவற்றையும் தொலைச்சிடுறாங்க.. இல்லை, காணோம் சாசு கொடுகிறோம்ன்னு சொல்றாங்க.. கொடுப்பதில்லை.. ஏதாவது கேட்டால், நம்மகிட்ட கஸ்ட்டமர்   வரமாட்டாங்க.. அதான் இப்படி” என்றாள்.

ஷிவா சுவாரசியமாக “இவ்வளவு ரூல்ஸ் போட்டும் உங்ககிட்ட எப்படி சாப்பாடு வாங்கறாங்க..” என்றான்.

மது “ஓகே சர்… பே பண்ணிடுங்க.. ஏதாவது கம்ப்ளைன்ட் இருந்தா சொல்லுங்க.. தேங்க் யூ” என சொல்லி போனை வைத்துவிட்டாள் பெண்.

ஷிவா “ப்பா..உஷார்தான்” என வாய்விட்டு முனகியபடியே வெளியே வந்தான்.

ஷிவா, தனது பால்கனியில் சென்று நின்று.. வாகன நெரிசல்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். மனது எதையும் யோசிக்க தயாராக இல்லையென அவனின் புன்னகை சொல்லியது போல.. வாட புன்னகையோடு.. அவனின் இரவு கழிந்தது.

“நானே இல்லாத ஆழத்தில்

நான் வாழ்கிறேன்..

கண்ணாடியாய் பிறந்தே..

காண்கின்ற எல்லாமுமாய்.. 

நானே ஆகிறேன்..

கரை வந்த பிறகே.. 

பிடிக்குது கடலை..”

  

Advertisement