Advertisement

மதுர ப்ரியம்!

19

ஷிவா, காரில் வீடு வர வர.. மது குரலே அவனுள் எதிரொலித்தது. நானும் ப்ராஞ்ச் போட வேண்டி இருக்கும்.. என்ற வார்த்தை அவனுள் மெல்லிய கண்ணீர் படலத்தை தந்திருந்தது. இருபத்தி ஒன்பது வயதில்.. காதல் என்பது.. இதுவரை கண்டிராத ஒரு உலகில்.. நான் ராஜா என நிருபிக்கும் முயற்சியோ.. யாரின் கைக்கும் கிடைக்காத ஒரு வெண்ணிலவு என் சொந்தமென.. அதன் நிழலில் ஒதுங்கி.. நிஜமில்லா வாழ்வில் நிஜத்தை தேவையில்லாமல் தேடிவிட்டேனோ.. யோசனைதான்.

ஷிவாவிற்கு என முன்பெல்லாம் கொள்கைகள் உண்டு. திருமணம் என்பதில் தனக்கிருந்த நம்பிக்கையை பற்றி நினைவு வந்தது இப்போது அவனுக்கு.. இயலாமையாக ஒரு சிரிப்பு வந்தது அவனுள்.. கழுத்தில் உரசிய அந்த ஸ்படிகமாலை.. முன்பிருந்த ஒழுக்கத்தை அவனுக்கு நினைவுப்படுத்தியது.

ஷிவா தன்னுடைய தவறை எண்ணி லட்சத்தி என்பதாவது முறையாக வாடிப்போனான் இப்படியோரு வாழ்க்கை.. காதல்.. அன்பு நேசம் கிடைக்கும் என தெரிந்திருந்தால்.. தெரிந்திருந்தால்.. என அந்த ஸ்ட்யரிங்கில் குத்திக்கொண்டே வந்தான்.. அங்கே இருந்த ஹாரன் ஒலித்துக் கொண்டே இருந்தது.. அவன் அடிக்க அடிக்க. என்னை இந்த நேசம் பயமுருத்துகிறது.. நான் உடைபட்ட சிலை.. இனி இது கோவிலில் இருக்க தகுமோ.. ம்… தகுமோ.. என எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.

மது மருத்துவமனையில், அமைதியாக கண்மூடி சாய்ந்திருந்தாள்.. சொல்லும் வரையே தயக்கம் எல்லாம்.. இப்போது, அவளுள் ஒரு திடம் வந்துவிட்டது. என்னை பிடிக்கவில்லை என இல்லையே அவருக்கு.. முன் நடந்ததை நினைத்து வருந்தி.. என்னை தள்ளி வைக்கிறார்.. இருக்குமே, இல்லாமல் எப்படி இருக்கும், அதற்காக நிகழ்காலத்தை எப்படி மறுக்க முடியும்.. அவசரமில்லை.. மாறட்டும்.. என திடமாக இருந்தாள்.

ஷ்ரவன், வந்து சேர்ந்தான் பெங்களூரிலிருந்து.. தன் தமக்கையை பார்க்க. ஸ்ரீ’யால், அபர்ணாவை தனியே விட்டு வர முடியவில்லை. தன் மாமாவிடம் போனில் பேசி விசாரித்தான் அத்தோடு ‘இங்கே கூட்டி வாங்க மாமா, ப்ளாஸ்டிக் சர்ஜெரி செய்ய இங்கே பார்க்கலாம்.. இங்க ட்ரீட்மென்ட்டும் நல்லா இருக்கும் நீறைய ஆப்ஷன்ஸ் இருக்கும் மாமா.. அவளை கூட்டி வாங்க.. இங்க பார்க்கலாம்” என்றான், அவள் எளிதில் வரமாட்டாள் என தெரியும், ஆனால், இங்கே சிகிச்சைகள் அதிகம் என மாமாவிடம் சொல்லி.. அவளை அழைத்து வரும்படி சொன்னான், தன் மன திருப்திக்காக.

ஸ்ரீ இன்னமும் அவளை தன் தேவதையாகவே பார்க்கிறான்.. அதில் எந்த மாற்றமும் இதுவரை இல்லை.. எனவே, அழைத்தான். 

இப்போது, காலை உணவோடு வந்தான் தரணி. மதுவின் முகம் கலக்கமாக இருக்கவும் ”ஏன் மது வலிக்குதா” என்றான்.

மது எழுந்து அமர்ந்து “எரியுது.. டா” என்றபடி தந்தையை பார்த்தாள்.. அவள் எதிரில் சொல்லிவிட்டதால், அவர் முகம் பார்த்தாள்.

தண்டபாணி “சரியாகிடும் ம்மா.. சாப்பிட்டு மாத்திரை போட்டு தூங்கு.. சரியாகிடும், டாக்டர் கிட்ட கேட்க்கலாம்” என்றார்.

தரணி “சரி மது, நான் கிளம்பறேன்.. கால் பண்றேன்” என சொல்லி கிளம்பினான் அலுவலகத்திற்கு.

மது உண்டு முடித்து, மாத்திரைகள் உண்டு மருத்துவரின் வரவுக்காக காத்திருந்தாள்.

அவரின் தந்தை, மெஸில் என்ன சமையல்.. யார்யார் வேலைக்கு வந்தார்கள்.. காலையில் ஸ்ரீ தன்னிடம் பேசியது என மகளிடம் எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

அன்று இரவு மது, ஷிவாவிடம்  மெசேஜில் ‘எங்கிருக்கிறீங்க’ என அனுப்பினாள். ஷிவா பெங்களூர் ரீச்சீடு அஃப்ட்டர்நூன். நீ எப்படி இருக்க.. வீட்டுக்கு போயாச்சா” என கேட்டு செய்தி அனுப்பினான்.

மது “சாம் வந்திருக்கானா” என்றாள் பதில் சொல்லாமல்.

ஷிவா ”ம்.. அம்மா சாம் வந்திருக்காங்க.. அப்பாக்கு நாளைக்கு புட் கொடுத்திடு.. இன்போர்ம் செய்ய மறந்துட்டேன்.” என அனுப்பினான்.

அதன்பிறகு, மது தன் நிலையை அனுப்பினாள்.

இப்படியே இவர்கள் பொதுவாக பேசினர். தான் மனதை சொன்னதற்கு மதுவும் பதில் கேட்கவில்லை, ஷிவாவும் அவள் தன் மனதை பகிர்ந்ததாக எனவும் காட்டிக் கொள்ளாமல்.. பொதுவாகவே பேசினார் இருவரும்.

மறுநாள்தான் மது வீடு வந்து சேர்ந்தாள். மருத்துவர்கள் தண்ணீர் படகூடாது என்றனர். மறுநாள் பரிசோதனைக்கு வர சொல்லினர். விரல் தோலில் சுருக்கங்கள் வந்திருந்தது பிசியோ தெரப்பி தினமும் வரவேண்டும் என்றனர்.. அப்போதுதான் விரல்கள் பழைய நிலைக்கு வரும் என்றனர்.. அந்த சுருக்கங்கள் போக கிரீம் கொடுத்திருந்தனர். கையில் மணிக்கட்டு பகுதியில் மட்டும் வேண்டுமால் தோல் மாற்று சிகிச்சை செய்துக் கொள்ளாம் என்றனர். 

மது கவனமாக இருந்தாள். ஹாலில் அமர்ந்துக் கொண்டாள், வேலைகள் பெரிதாக ஏதும் செய்யவில்லை, தன் அன்னை அத்தையோடு பேசியபடியே அமர்ந்துக் கொண்டாள்.. ஷிவா சாம் என்ன செய்கிறார்கள்.. என உள்ளே ஓடிக் கொண்டே இருந்தது. மேலே செல்லவில்லை.

சித்ரா “கொஞ்சம் ரெஸ்ட் எடேன் மது..” என்றார்.

ஏதும் காதில் வாங்கவில்லை மது. அமர்ந்துக் கொண்டே இருந்தாள் மதியம் உண்டு முடித்துதான் மேலே தனறைக்கு சென்றாள். மருந்தின் தாக்கமோ.. அயர்வோ ஏதோ ஒன்று, நன்றாக உறங்கினாள் பெண்.

ஷ்ரவன் நேற்று வந்தவன் நேற்று இரவே ஊருக்கு கிளம்பி சென்றுவிட்டான் வேலை இருப்பதால். 

மதுவிற்கு அடுத்த நாட்கள், பிசியோ.. மருத்துவமனை.. மருந்து உறக்கம் என நாட்கள் சென்றது. வீடே மதுவிடம் சொல்லிய வார்த்தைகள்.. ‘ஸ்ரீ அங்கே கூப்பிடுறானே.. போய் வைத்தியம் பார்க்கலாமே’ என சொல்லிக் கொண்டே இருந்தனர்.

மது ஷிவாவிற்கு அழைக்கவில்லை. அவனுக்கு வேலை என்ன ஆகிற்று என்பது பற்றி ஷிவாவும் தானாக சொல்லவில்லை. மதுவிற்கு இதென்ன என தோன்ற அமைதியாக இருந்துக் கொண்டாள் பெண்.

வீட்டில் பெங்களூர் என்ற பேச்சுக்கு ஏதும் பேசவில்லை.. முன்பானால் பொங்குவாள்.. ’ஸ்ரீ இல்லாமல் ஏதும் நடக்காதா.. என்ன இப்போ நான் பார்த்தக்கிறேன்’ என வெடுக்கென பேசி விடுபவள் இப்போது அமைதியாகவே இருந்தாள்.

தரணிக்கு இவளின் அமைதி பயத்தை தர.. அவளை எப்படியேனும் இடம் மாற்றம் செய்திடலாம்.. என எண்ணி, அவளிடம் ‘ஏன் மது  ஒருதரம் போயிட்டுத்தான் வாயேன் மது..’ என சப்போர்ட் செய்தான் பெரியவர்களுக்கு சாதகமாக.

அந்த ஒருவாரம் அப்படியே சென்றது.

மது யோசிக்க தொடங்கினாள். 

இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே, மது எதிர்பாராமல் ஷிவா, மதுவிற்கு  செய்தி அனுப்பினான்.  “காட் ஜாப் மது. கொஞ்சம் அதில் பிஸி.. அத்தோட சாம் அழுகை.. அவனுக்கு கோல்ட் அதனால் என்னால சரியா உன்கிட்ட பேச முடியலை.. இப்போ ப்ரீயா, கால் செய்யவா?” என கேட்டு காலையிலேயே செய்தி அனுப்பி இருந்தான்.

மதுவிற்கு மீண்டும் ஒரு மந்திர புன்னகை.. தானே அழைத்தாள்.

ஷிவா “ஹலோ குட் மார்னிங்.. மது” என்றான் ஆழ்ந்த அமைதியான குரலில்.

மது “சொல்லுங்க” என்றாள் அழுத்தமான குரலில்.

ஷிவா ”என்ன மது, குரலே சரியில்லையே.. இன்னும் சரியாகலையா எப்படி இருக்க நீ, முதலில் அதை சொல்லு.” என்றான்.

மதுவிற்கு என்னமோ தொண்டையை அடைத்துக் கொண்டது. நிறைய பேச கோவப்பட எண்ணுகிறாள்.. ஆனால், அவனின் நிலையை புரிந்தவளுக்கு அமைதிதான் வருகிறது.. “இல்ல.. பரவாயில்ல” என தொடங்கித் தன்னுடைய மருத்துவம் பற்றி சொன்னால் பெண்.

பின் “கங்கராட்ஸ் ஷிவா…” என்றாள்.

ஷிவா “தேங்க்ஸ் மது..” என்றவனுக்கு நிறைய பேச வேண்டும், ஆனால், தான் பேசும் விஷயங்கள் அவளின் மனதை புண்படுத்தும்.. என்ன இருந்தாலும்.. மதுவை என்னால் தள்ளி வைக்கவோ.. அவள் முகம் வாடுவதை காணவோ.. முடியாது. என்னை… என், பழைய வாழ்க்கையை மறந்து.. புதிய  பாதைக்கு மனதால் செல்ல வழி வகுத்து தந்தவள்.. அவளை வாட வைத்து பார்க்க என்னால் முடியாது என எண்ணியவன் “மது ஒன் மன்த் நான் பிசி மது.. எங்களோட.. அந்த சின்ன ஆபீசை மேனேஜ் செய்ய.. ஒரு ஆளை ரெடி  பண்ணனும்.. எனக்கு 5௦ பெர்சென்ட் பெங்களூர்லதான் ஜாப். அங்கே டூ வீக்ல ஜாயின் பண்ணனும்.. நடுவில் சாம்.. அப்பா அம்மா.. என்ன செய்ய போறேன்னு தெரியலை… மண்டைகாயுது மது.” என்றான்.

மதுவிற்கு வருத்தமாக இருந்தது.. அவன் வாழ்வில் நான் இல்லையே சாம் அம்மா அப்பா என யோசிக்கிறான்.. நான் இல்லையே என எண்ணினாள் பெண். மீண்டும் அவளே, நேற்று சொல்லி இன்று நடக்க வேண்டும் என நினைப்பியா நீ.. என தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.

அது ஷிவாவிற்கு புரிந்தது போல.. “உங்க சாப்பாடு இல்லாமல் என்ன செய்ய போகிறேன்னு தெரியலை.. மோஸ்ட்லி, சென்னைக்கே வந்திடுவேன்.. இருந்தாலும் இப்போதிக்கு அங்கேதான் ஜாப். சாரி மது.. உண்மையாகவே உன் பேச்சை கேட்க கூடாதுன்னு இல்லை, உன்னை.. க்கும், நாம் நினைப்பது நடக்கும் என இல்லை.” என்றான் திடமான குரலில்.

மது “நாமன்னு சொன்னால்..” என்றாள், கேள்வியாய் கேட்டாள்.

ஷிவா ”மது ப்ளீஸ்.. நான் என்ன சொல்றேன்னு புரியும் உனக்கு..” என்றான்.

மது “ம்.. ஆனால், நான் சொல்றதும் உங்களுக்கு புரியுது.” என்றாள்.

ஷிவா பொறுமையாக “மதும்மா… ப்ளீஸ், என் வாழ்வில் நான் முடிவெடுத்து தப்பாகி.. திசை.. கண்டம்.. மாறி, விரோதியாக மாறி.. ஒன்னுமில்லாதவனாக இருக்கேன். நான் தப்பாகிட்டேன் மது.. தோற்றுவிட்டேன் மது.. எனக்கே என்னை தெரியலை மது” என தன் நெற்றியை நீவிக் கொண்டே சின்ன குரலில் அவளிடம் பேசினான்.

மது அமைதியாக இருந்தாள்.

ஷிவா “எனக்கு, யாரிடமும் இப்படி நான் பேசியதில்லை.. சொல்ல போனால், என் வாழ்க்கை.. நான் தோற்றேன் ஜெயித்தேன்.. மற்றவர்களுக்கு என்ன.. எனதான் இருந்திருக்கிறேன். என் அம்மா அப்பா உற்பட எல்லோருக்கும் நான் இன்னமும் திமிர் கொண்டவன்தான். ஆனால், உன்கிட்ட என்னால் முடியலை மது.. இந்த ஒரு வாரமா என்னை நீ எவ்வளோ டிஸ்டர்ப் செய்ய்கிறேன்னு உனக்கு தெரியாது. ஆனால், உனக்கு நான் மேட்ச் இல்லை மது. இது எ.. க்கும், என்னோட வாழ்க்கை மது.. நான்தான் தப்பு செய்தேன்.. நான்தான் அனுபவிக்கனும். நான்  மேனேஜ் செய்துக்கிறேன்.. மது. என் மேல இரக்கப்படாத மது. உன் இரக்கம் என்னை தடுமாற வைக்குது.. நீ ரொம்ப தூரம் போகணும்.. பெஸ்ட் விஷ்ஷஸ்.. குட்பை.. ப்ளீஸ்” என்றான்.

மது அவன் வைத்து விடுவானோ என எண்ணி அவசரமாக “இருங்க ஷிவா, இருங்க.. என் அன்பு.. நான்.. நான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா.. சரி விடுங்க.. என்னை பிடிக்குமா பிடிக்காதா.. நேரா ஒரு வார்த்தையில் சொல்லுங்க” என்றாள்.

ஷிவா அமைதியாகினான்.

மது “நான் நிறைய எதிர்பார்த்திட்டேன் ஷிவா.. ஏமாந்துட்டேன். அதனால் இந்த தோல்வியும் பெரிதல்ல.. சொல்லுங்க.. என்னை பிடிக்குமா பிடிக்காதா..” என்றாள்.

ஷிவா ”மது.. எனக்கு எதுவும் தெரியலை மது.. நான் அப்புறம் பேசறேன்” என்றவன் சொல்லாமல் கொள்ளாமல் போனை வைத்துவிட்டான்.

மது அப்படியே எழவே தோன்றாமல் கண்ணில் நீர் வழிய படுத்துக்கொண்டாள். 

“நெடுங்காலமாய் புழங்காமலே..

என்னுள்ளே நேசம் கிடக்கின்றதே..

உன்னை பார்த்ததும் உயிர் தூண்டவே..

உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே..”

வீட்டில், அதிகம் மது யாரிடமும் பேசுவதில்லை. ஷிவாவை எந்த விதத்திலும் அவள் தொந்திரவு செய்யவில்லை. கைக்கு அதிகம் வேலை கொடுப்பதில்லை.. கை கொஞ்சம் பரவாயில்லை.. ஆனால், மது எந்த அறுவை சிகிச்சையும் செய்துக் கொள்ளமாட்டேன்.. இதே போதும் என வீட்டில் எல்லோரிடமும் சண்டை.. சத்தம். அதன்பின் யாரும் அதை பற்றி பேசவில்லை. விரல்களும் இப்போது பரவாயில்லை.. அசைக்க முடிகிறது. ஆனால், முன்போல  இயல்பாய் இல்லைதான் விரல்கள்.

மதுவிற்கு, வேலை வேலை எந்நேரமும் வேலைதான் நடந்தது. மாவு.. சாம்பார் பொடி.. மிளகாய் பொடி.. என தன் கோவத்தை அதில்தான் காட்டினாள், புதுவேலையில். ஆனால், அது அவ்வளவு ஈசியாக இல்லை.. மதுவிற்கு. முன்போல உத்வேகம் இல்லை.. ஷிவா மேலான கோவம் கூட கண்ணீராகவும்.. தனிமையாகவும் கடத்துவதால்.. அவளின் வேலையில் அவளே தடையாய் நின்றாள் சிலசமயம். ஆனால், அதையும் அவ்வபோது தகர்த்துக் கொண்டு.. வேளையில் கவனம் செலுத்துகிறாள்.. சொல்ல போனால் போராடுகிறாள்.

ஷிவா, சென்னையில் அந்த வீட்டை அப்படியே வைத்தான். தன் குடும்பத்தோடு பங்களூர் சென்றான். கம்பெனியில் வீடு கொடுத்திருந்தனர். இன்னும் அவனுக்கு ப்லேஸ்மென்ட் சரியாக முடிவாகவில்லை.. வேலை சென்னையில் அமைவதற்கும் வாய்ப்பு இருந்தது. எனவே, சென்னையில் வீடு அப்படியே வைத்திருந்தான்.

பெங்களூர் வாழ்க்கை சாம்க்கு பழகிவிட்டது. ஆனால், கோதைக்கு இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் தடுமாறுகிறார். 

இப்போது கோதைக்கு ஒரு திடம் வந்துவிட்டது. எனவே, மகனிடம் திருமணம் பற்றி ஜாடைமாடையாக பேசுகிறார்.. ’இன்னும் எத்தனை நாள், நாங்க உன்கூடவே இருக்க முடியும்.. நல்லாதாக ஒரு பெண் பார்க்கிறேனே.. நீ எப்படி சொல்றயோ அப்படியே பார்க்கிறோம். இந்த வயதில் தனியாக நின்று என்ன செய்ய போற.. காலம் எங்கையோ இருக்கு டா.. உன் பையனை யோசி.. அவன் வளர்ந்து கேட்க்கும் போது, நல்லாவா இருக்கும்.. அவன் உன்னை ஏதும் நினைக்க கூடாதுல்ல..’ என எல்லா வகையிலும்.. தங்களுக்கு தெரிந்தது போல் எல்லாம் ஷிவாவை இந்த இரண்டு மாதத்தில், கரைத்தார்.

அதனால் ஷிவாவிற்கு,  எப்போதும் மதுவின் நினைவு தளர்வதேயில்லை.. வேலையில்.. வீட்டிலே.. என எல்லா இடத்திலும் அவள் நிறைந்து நின்றாள். அதை எப்போதும் போல அவனும் ஏற்றான்.

தரணிக்கு, மதுவின் நிலை பார்க்க என்னமோ போல இருந்தாலும்.. ஷிவா இங்கே இல்லை.. மெஸ்ஸில் உணவும் வாங்குவதில்லை.. பாலாஜி மூலம் அவன் வேறு ஊரில் வேலைக்கு சென்றுவிட்டார் ஷிவா.. என தெரிந்ததும் தரணிக்கு நிம்மதி. அவளை அவள் போக்கில்விட்டான். பேசவில்லை.. அவளிடம் நெருங்கவில்லை.

Advertisement