Advertisement

மதுர ப்ரியம்!

16

மதுவின் வீடு.. இன்னும் இயல்புக்கு வரவில்லை. தரணியும் மதுவும் மட்டுமே எல்லோரிடமும் பேசி தேற்றினர். 

சித்ரா, தன் அண்ணனிடம் இந்த செய்தியை சொல்ல.. மதுவின் ஜாதகத்தை தங்கள் ஜோதிடரிடம் காட்டுவதாக கூறி, மதுவின் ஜாதகத்தை கேட்டார்.. ஞானப்பிரகாசம்.

சித்ராவும் போனில் அனுப்பி வைத்தார்.

அமைதியாகத்தான் நாட்கள் சென்றது.

ஒருவாரம் சென்று ஷிவா.. தனது சொந்த ஊருக்கு கிளம்பினான். மாலையில் கிளம்பினான்.. மதுவிற்கு ‘உணவு வேண்டாம்’ என மதுவிற்கு செய்தி அனுப்பினான்.

மது, செய்தியை பார்த்தாள். உடனே பதில் அனுப்பவில்லை. 

மது, உண்டு முடித்து, இரவில் ஷிவாவிற்கு மெசேஜ் செய்ய தொடங்கினாள் “எப்போது கிளம்பினீங்க.. போய் சேர்ந்துட்டீங்களா..  சாம் சாப்பிட்டானா..” என்றாள்.

ஷிவாவும் வாய்ஸ் நோட் அனுப்பினான். அப்போதும் ட்ரிவிங்கில்தான் இருந்தான்.. ”இல்ல மது.. ஆன்தி வே.. சாம்க்கு ஆப்பிள் கொடுத்தேன்.. எங்காவது நிறுத்தனும்.. சாப்பிடனும்” என்றான் லேசியான குரலில்.

மது “ஏன் குரல் டல்லா இருக்கு ஷிவா” என்றாள். 

ஷிவா “அப்படி எல்லாம் இல்லையே.. சா..சாம் இன்னும் சாப்பிடலை, அதான் என்ன கொடுக்கிறது என பார்த்துகிட்டு இருக்கேன்..” என்றான் தடுமாற்றம் இல்லாமல்.

மது “சாப்பிடுங்க ஷிவா.. குழந்தைக்கு பசிக்குமே..” என்றாள்.

ஷிவா “ம்… சாப்பிடனும். வேற பிடிக்குதோ, பிடிக்கலையோ.. சாப்பிடனும் மது. என்ன செய்வது..எல்லாம் நேரம். நா.. நான் இப்படி தனியா இங்கே வருவேன்னு நினைச்சதே இல்லை மது.. எப்படி இருந்தாலும் குடும்பமாகதான் வருவோம் என எண்ணி இருந்தேன்.. அ..அவளை விட்டு எ..என்னை நான் யோசித்ததேயில்லை.. மது..” என நிறுத்தினான்.

மதுவின் மனமும் கலங்கத் தொடங்கியது.. அமைதியாகிவிட்டாள்.

ஷிவா அவளின் அமைதியில் கொஞ்சம் தெளிந்துக் கொண்டான்.. “சாரி மது, சாரி.. கொஞ்சம் டிஸ்ர்ட்ப்டா இருக்கேன்… உளறுகிறேன் தானே..” என்றான், தன்னையே புரியா குரலில் அவளிடம் நியாயம் கேட்டான்.

மது “இல்ல, அப்படி இல்ல.. நீங்க எதோ எல்லாவற்றையும் மறந்துட்டீங்கன்னு நினைச்சேன்.. இ.. இப்ப இவ்வளோ பீல் பண்ணுவீங்கன்னு தெரியலை..” என்றாள்.

ஷிவா “மறந்துட்டேன்… அப்படிதான் நினைக்கிறேன்.. நினைச்சேன், ஆனால், முடியலையே.. மறந்துக் கொண்டே இருக்கிறேன்.. அஹ.. சரிதானே.. மது, அதிகமா பேசறேன்னு நினைக்கிறேன்.. சரி போயிட்டு மெசேஜ் செய்யறேன்..” என்றான் தெளிந்துவிட்டக் குரலில்.

மது “சாம்.. சாம் எங்க..” என்றாள்.

ஷிவா “இங்கதான் பேசு மது, அவனுக்கு கேட்க்கும்..” என்றான்.

மது “சாம் குட்டி..“ என அழைத்தாள்.

சாம் “அஹ… ஹ..ஹா…” என குஷியானான்.. எதோ ராகம் பாடினான் குழந்தை.

மது “டாடா போறீங்களா.. மதுகிட்ட சொல்லவேயில்ல… பேட் பாய் நீ…” என்றாள். அவள் ஏதோ சொல்லுகிறாள் என அமைதியாகினான் குழந்தை.

ஷிவா “டேய் மது உன்னை அப்பா மாதிரி பேட்ன்னு சொல்றா டா..” என்றான்.

சாம் சிரித்தான், தந்தையின் பேச்சை கேட்டு.

மது “ஹலோ.. என்ன குழந்தைகிட்ட என்னை போட்டுக் கொடுகிறீங்களா.. சாம், உன் டாட் பேச்சை கேட்க்காதே..  நீ டாட்டா போனால் என்கிட்டே பை சொல்லணும் புரியுதா.. நான் உனக்குன்னு புட் கொடுக்கிறேன்னில்ல.. அப்போ என்கிட்டே சொல்லணும் சரியா” என்றாள்.

ஷிவா சிரித்துக் கொண்டே “ஓகே சொல்லுடா.. இனி முன்னாடியே சொல்லிடுவோம்.. சாம்” என்றான் அவள் சொல்லுவது சரிதானே குழ்ந்தைக்கு என தனியாக ஏதேனும் செய்துக் கொடுக்கும் போது, நான் முன்பே சொல்ல வேண்டும் என புரிந்தது அவனுக்கு. 

சாம் ”மா..ஆ.. ஹ..கா..” என எதோ ராகம் பாடினான்.

மது “ஒகே வா.. குட் பாய். பை சாம்.. பை ஷிவா” என்றவள் போனை வைத்தாள்.

மதுவிற்கு, ஷிவாவின் மனம் புரிகிறது.. ஆனால், அது இவளுக்கு தடுமாற்றத்தை உண்டாக்கியது.. அவன் இருக்கும் நிலையில் நான் வேறு.. ஏதேனும் பேசி விடபோகிறேன்.. என யோசிக்க தொடங்கினாள்.

ஷிவாவிற்கும் அப்படியே அதிகமாக பேசுகிறோமோ.. மதுவிடம் பேசும் போது.. நான் என்னோ ஆகி விடுகிறேன்.. நானாக இருப்பதில்லை. இனி அவளிடம் பேசும்போது இப்படி உளறக்கூடாது. என எண்ணிக் கொண்டான்.

மது மனதில் ஏதும் பாரம் ஏறவில்லை நாட்கள் இனிமையாக சென்றது.

மதுவின் ஜாதகத்தை தங்களின் ஜோதிடரிடம் பார்த்த, அவளின் தாய் மாமா ப்ரகாசம்.. எதோ பரிகாரம் செய்ய வேண்டும் என்றார்.

அப்போதுதான் மதுவின் வீடு கொஞ்சம் மீண்டது. பெண்ணுக்கு எப்படியும் திருமணத்தை முடித்தாக வேண்டும் என சித்ரா.. முடிவோடு இருந்தார். எனவே அண்ணன் என்ன  சொல்கிறார் என கேட்டு செய்வதற்கு ஏற்பாடாகினார்.

மதுவின் குடும்பம் ராமேஸ்வரம் சென்றனர்.. வித்யாவை வர வேண்டாம் என்று விட்டனர், அபர்ணா கருவுற்றிருப்பதால். தரணி ஷ்ரவன் அவர்களோடு சென்றான். மெஸ் விடுமுறை அறிவித்திருந்தனர். 

ஷிவா, ஊரிலிருந்து வந்துவிட்டான். ஆனால், மதுவின் மெஸ் இல்லை. ஷிவா கொஞ்சம் அவஸ்த்தைப் பட்டான். அன்னை கோதைக்கு உறவு வகையில் திருமணம் இருந்தது. எனவே ஷிவாவின் பெற்றோர் அடுத்த வாரம்தான் வருகின்றனர்.

அதனால், ஷிவா, தானே சாதம் வைத்துக் கொண்டான். குழந்தைக்கு தேன்மொழி, பருப்பு ரசம் என கொடுத்தாள். ஷிவா, கஞ்சி செய்து பழகிக் கொண்டதால்.. கொஞ்சம் சமாளித்தான், ஒரு வாரம் முழுவதும்.

ஷிவாவிற்கு சின்ன சின்ன ப்ராஜெக்ட்கள் வரத் தொடங்கியது. சின்ன வேலைகளை தன் கம்பெனிக்கு.. என எடுத்துக் கொண்டான். கொஞ்சம் ஆட்களை சேர்த்துக் கொண்டான். இப்போதெல்லாம் இரண்டு கம்பெனியில் வேலை பார்க்கிறார்களே.. அதனால் ஷிவாவின் கம்பெனிக்கும் ஆட்கள் கிடைத்தார்கள். என்ன, பலசமயம் வேலை தாமதம் ஆகிடிடும். ஷிவா கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படி ஷிவா கொஞ்சம் வேலையில் கவனம் வைக்க.. மீண்டும் சாம்க்கு உடல் நலமில்லாமல் போனது. அன்று பாலாஜியின் வீட்டு விஷேஷத்திற்கு சென்று வந்த பிறகு.. சளி காய்ச்சல் என அவஸ்த்தைப்பட்டான். கோதை கொஞ்சம் கஷாயம் அது இது என கை வைத்தியம் செய்தார்.

இப்போது அங்கே சென்று வந்தது.. மீண்டும் சென்னையிக்கு வந்ததும் தண்ணீர் மாறியது என மீண்டும் உடல் நலவில்லாமல் போனது. ஆனால், பெரிதாக குழந்தையும் படுத்தவில்லை. சளிதான் தொல்லை.. எனவே மருந்துக் கொடுத்தான் ஷிவா. இரண்டு நாட்களில் அது சரியாகிவிட்டது.

ஷிவாவிற்கு அலுவலக வேலை இழுக்க.. ஷிவா சற்று டென்ஷன் மகனின் உடல்நிலை குறித்து. பாலாஜியும் மனைவியை இங்கே அழைத்து வந்துவிட்டான். அவனும் வீடு அலுவலகம் என பிசியாக இருந்ததால்.. இருவரும் தங்களுக்கு தாங்களே உதவ முடியாமல் போனது.

சாம் உணவு சரியில்லாதது.. சளி.. தாத்தா பாட்டியை விட்டு வந்த ஏக்கம் என எல்லாம் சேர்ந்து சற்று அழுகை பிடிவாதம் என இருந்தான் சாம்.  

ஷிவாவிற்கு மகனின் பிடிவாதம் நச்சு நச்சு என அழுவது எல்லாம் கோவத்தை தர.. மகனிடம் கோவப்பட தொடங்கினான், அதட்டினான். வாக்கரில் விட்டான். மகன் இப்போது வாக்கரில் ஓடி பழகிக் கொண்டான். அதிலும் ஒருநாளைக்கு நான்குமுறை விழுந்து கால் கைகளில் அடி.. அழுகை. என சாம் ரகளையை ஆரம்பித்திருந்தான்.

ஷிவாவிற்கு மகனை கவனிக்க முடியாமல் கொஞ்சம் டென்ஷன் ஆனது.

சாம் இன்று காலையிலிருந்து வாந்தி எடுக்க தொடங்கினான். சளிதான்  இருந்தது. இவனும் மருத்துவரிடம் காட்டி மருந்து வாங்கி கொடுத்துக் கொண்டிருந்தான். இரவு நன்றாகத்தான் உறங்கினான். என்னமோ, காலையில் கஞ்சியை குடித்ததும் வாந்தி.

ஷிவா, என்னவென தெரியாமல் தடுமாறினான். உடனே மகனோடு.. மருத்துவமனை சென்றுவிட்டான். அன்னைக்கு கூட அழைக்கவில்லை.. அவர்கள் விழாவில் இருப்பார்கள். எனவே, இவன் சென்றுவிட்டான்.

மருத்துவர்கள்.. என்னவென பார்த்தனர்.. எதோ வாயில் எடுத்து போட்டிருப்பான் போல.. அவனின் உணவு பற்றி விசாரித்தனர். ஏதும் பொருந்தாமல் உண்ணவில்லை.. அதனால் ஏதாவது விளையாடும் போது வாயில் போட்டிருப்பான் என்றார் அங்கிருந்த நர்ஸ். வாமிட் நிற்பதற்கு மருந்து கொடுத்தனர்.. மாலை வரை பாருங்கள். மீண்டும் வாமிட் வந்தால்.. வந்துவிடுங்கள் என அறிவுரை சொல்லி அனுப்பினர்.

Advertisement