Advertisement

மதுர ப்ரியம்!

15

கோதை, எப்படியோ மகன் இங்கே வந்து விட்டான். எதையும் யோசிக்காமல்.. குழந்தையை பார்க்கிறான் என்ற எண்ணம் மேலே இருந்தாலும். அடிமனம் பயம் கொள்ள தொடங்கியது அன்னைக்கு. தங்களை பார்த்து தெளிந்த மகனின் முகம், அன்னைக்கு  ஒரு பயத்தையும் தந்தது.. முகத்திலே எதையும் காட்டவில்லையே.. அவன். தோற்றேன் என அழவில்லையே.. என்னை தேற்றுகிறானே..அன்றி, எதையும் பகிரவிலையே.. முழுவதும் சொல்லவில்லை என்றாலும்.. ஓரளவு, இதும்மா.. இப்படி ம்மா.. என சொல்லவில்லையே.. என தோன்றியது அன்னைக்கு. எனவே, மகன் மனதளவில் எப்படி இருக்குகிறானோ என கோதைக்கு பயம்.

அடுத்த நான்கு நாட்களும், அன்னை தந்தைக்கு எல்லாம் செய்தான் ஷிவா. அன்னை சமைக்கிறேன் என்றதும் ஊரிலிருந்து வந்த மறுநாளே எல்லோரும் ஷாப்பிங் சென்று.. சமையல் சாமான்கள் வாங்கி வந்தனர்.

கோதையும், பேரனுக்கும் மகனுக்கும் தன் கையால் சமைத்து பரிமாறினார். ஷிவா, அன்னையின் சமையலை ஏதும் புகழ்ந்து சொல்லவில்லை.. ஆனால் அவனின் கண் வழி அந்த செய்தி இருந்ததை அன்னை படித்துக் கொண்டார். முன்போல..ஒரு தோசைக்கே அன்னையை புகழும் மகனை காணோம் இப்போது. அன்னையின் மனம் வாடியது. ஆனால், இத்தனை அடிகளுக்கு பிறகும் மகனை இப்படி திடமாக பார்ப்பதே பெரிது என கோதை தன்னை சமாதானம் செய்துக் கொண்டார்.

சாம், தாத்தாவிடம் கூட ஒட்டிக் கொண்டான்.. கோதையிடம் கொஞ்சம் தயங்கினான். கோதை, ஷிவாவிடம் அடிக்கடி பேசுவது, அருகில் அமர்வது என எல்லாவற்றையும் பார்த்தவன் என்ன நினைத்தானோ கோதையை பார்த்தால் அழ தொடங்கினான்.

ஷிவாதான், தன் அன்னைக்கும் மகனுக்கும் நடுவில் சமாதானம் செய்து, அவரை.. சாம்மோடு பேச வைக்க தொடங்கினான். அதுவே அடுத்த நான்கு நாட்கள் பெரிய வேலையாக இருந்தது ஷிவாவிற்கு.

தினமும் ஷிவா, மதுவிற்கு ஒரு செய்தியை அனுப்பினான்.. அவளை விசாரித்து இல்லை.. பொதுவான செய்தி.. அதாவது, பகிர்வு செய்தியில் ஏதோ ஒன்றை அவளுக்கு அனுப்புகிறான். என்னமோ அவளோடு தொடர்பில் இருக்கவே அவன் எண்ணினான்.

அம்மா சமையல் நன்றாக இருக்கிறது.. வீடு சுத்தமாக இருக்கிறது. மகன் அடிக்கடி தன்னை பார்க்கிறான்.. நிரம்ப்ப விளையாடுகிறான் என ஷிவா,கொஞ்சம் இளகி இருக்கிறான். ஆனால், மது நினைவு இல்லாமல் இல்லை. 

அவள் உணவு அனுப்பும் பாத்திரங்களை மேலே ஷெல்பில் வைத்திருந்தான். என்னமோ அதை அடிக்கடி பார்க்க தோன்றுகிறது.. எதோ அவளின் மெஸ் உணவு.. இத்தனை நாள் எதோ சக்தியை தந்திருந்ததாக உணர்ந்தான் இந்த நாட்களில். என்னமோ மிஸ்.. எல்லாம் சரியாக இருக்கிறது.. ஆனால், என்னமோ எனக்கானது என தோன்றவில்லை அவனுக்கு.

இரவில் பெற்றோருக்கு தெரியாமல்.. பீர் அருந்தினால் தான் உறக்கமே வருகிறது அவனுக்கு.. அப்போதெல்லாம் கண்டிப்பாக மதுவின் நினைவும், அவளின் ஜிமிக்கையும் அவனின் நினைவில் வந்துவிடுகிறது. முன்பு தவிர்க்க.. நினைத்தான்.. இப்போதெல்லாம்.. அதையும் வேண்டி நிற்பவன் போல.. கண்களை திறந்துக் கொண்டே அவளை பார்க்க தொடங்கினான்.. கனவில். 

எல்லாம் யாருமில்லா இரவில் மட்டும்தான்.. பகலில் பொறுப்பான தந்தை அவன்.. அப்போதெல்லாம் மது என் கதையை கேட்டு விலகி விட்டாள்.. நல்லா இருக்கட்டும் என தனக்கு தானே சொல்லிக் கொள்ளும்.. அளவிற்கு நல்லவன். 

ஷிவா அன்னை தந்தையோடு எப்போதும் போல இருந்தான். அவர்களும் பேரனோடும், மகனோடும்.. இயல்பாக பேசி சிரித்தனர். ஆனால், இந்த மூவருக்கும் நடுவில்..முன்போல ஒரு நெருக்கம் வரவில்லை. இவர்களாக முயன்றும் வரவைக்கவில்லை.

பெரியவர்கள் இருவரும், சமையல்.. மாலையில் பேரனோடு.. தாத்தா பாட்டி இருவரும் அருகில் இருக்கும் கோவில் செல்லுவது அல்லது பார்க் செல்லுவது என எல்லோரும் எதையோ மீட்க.. ஒன்றுமில்லை.. ஏதும் நடக்கவில்லை.. என தங்களுக்கு தாங்களே போராடிக் கொண்டனர்.

ஆனால், ஷிவாவின் பெற்றோருக்கு, பேரனின் கண்ணும் நிறமும் கொஞ்சம் நாட்கள் ஆகும் சமாதானம் ஆகுவதற்கு என சொல்லியது. அவனை பார்க்கும் போது.. அத்தனை அழகு என் பேரன் என எண்ணினாலும்.. அவனின் பிறப்பு கண்டிப்பாக பேசு பொருளாகும்.. எப்படி சமாளிக்க போறானோ மகன்.. அவனுக்கு என இனி வாழ்க்கை இல்லையா.. இப்படியே எத்தனை நாள் இருப்பான்.. என பல யோசனை அவர்களுக்குள். 

ஆனால், இந்த யோசனைகள் எல்லாம் கூட அவர்களுக்கு வரக்கூடாதோ என்ற எண்ணமும் இருந்தது அவர்களுக்கு. சிலவற்றை காலம் மட்டுமே சரி செய்ய முடியும் என விட்டனர். இப்போது மகன் வந்துவிட்டான் என்பதே போதும் என எண்ணினர்.

மதுவின் வீட்டில் சென்ற ஞாயிறு இருந்த  நிலை இப்போது இல்லை.

ம்.. மறுநாள் திங்கள் கிழமை ஒன்பது மணிக்கு மேல் ஜோதிடரிடம் செல்லாம் என முடிவாகி இருந்ததால். தண்டபாணியும் சித்ராவும் கிளம்பி தயாராக இருந்தனர்.

மணி பத்தும் ஆகிற்று மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து அழைப்பே வரவில்லை தண்டபானிக்கு. தண்டபாணி அழைத்தாலும் எடுக்கவில்லை அவர்கள்.

வித்யா, சித்ரா, தண்டபாணி மூவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. மது மெஸ் வேலையை பார்த்துக் கொண்டுக் கீழே நின்றிருந்தாள்.

தரணி அலுவலகம் சென்றுவிட்டான்.

ஷ்ரவன் காலையிலேயே அழைத்து அன்னை தந்தையிடம் பேசி இருந்தான்.. அவர்களும் இன்று நாள் குறித்து விடுவோம் என எல்லாம் பேசி இருந்தனர்.

இப்போது பெரியவர்கள் மூவரும் என்னவென தெரியாத குழப்பத்தில்.. தங்களுக்கு இவர்களின் அறிமுகம் செய்த தூரத்து சொந்தத்திடம் பேசத் தொடங்கினர்.

மதியம் வரை பெரியவர்கள் வெளியே செல்லாததால்.. மது வேலையிலோரு கண்ணும் இவர்கள் மீது ஒரு கண்ணும் வைத்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள்.

நேரம் ஆக ஆக என்னமோ சரியில்லை என தோன்றியது பெண்ணுக்கு.. எனவே, தரணியிடம் அழைத்து சொன்னாள்.

மது, தன் தந்தையின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டாள்.. என்ன கேட்பது என தெரியவில்லை. பொறுமையாக “என்ன ப்பா.. ஏன் எ..எங்கயும் போகலையா..“ என்றாள்.

வித்யா “மாப்பிள்ளை வீட்டில் போன் செய்தால்.. எடுக்கவில்லை.. டா” என்றார் தடுமாற்றமாக.

மதுவின் முகம் எரிச்சலை காட்டியது..  ‘ஆமாம், அப்போவே நினைத்தேன்.. ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு பேசும் போதே..’  என நினைத்தவள் ஏதும் கேட்க்காமல் அமர்ந்துக் கொண்டாள்.

சித்ரா “இல்ல மது, ஏதாவது அவசர வேலையா இருக்கும்.. நா.. நாங்க பார்த்துக்கிறோம்.. நீ போ டா..” என அனுப்பி வைத்தார்.

தரணியும் போன் செய்து தன் மாமாவிடம் பேசினான். கணேசன் “மாப்பிள்ளை வீட்டில் போன் எடுக்கலை.. நமக்கு அறிமுகம் செய்து வைத்தவங்களை கேட்டோம்.. அவங்களுக்கும் போன் எடுக்கலையாம்.. நேரில் பார்த்துட்டு சொல்றோம்ன்னு சொல்லி இருக்காங்க..” என்றார்.

தரணியும் இதை மதுவிடம் சொன்னான். மது ஏதும் காட்டிக் கொள்ளவில்லை. வேலையை பார்க்க தொடங்கிவிட்டாள். ஆனால், மனமெல்லாம் மத்தாப்பூ வண்ணம். சத்தமே இல்லாமல், வண்ண வண்ணமாக சந்தோஷமாக வெடித்துக் கொண்டிருந்தது.

மாலையில் ஏழு மணிக்கு முழு விவரமும் தெரிந்தது. மாப்பிள்ளை வீட்டார் வெளியூர் சென்றுவிட்டனராம்.. இந்த சம்பந்தம் அவர்களுக்கு ஒத்து வராதாம்.. எதோ மனது ஒத்துக்கலையாம். என்ற செய்தி வந்தது.

கணேசன் “பரவாயில்லை.. என்னான்னு சொல்லுங்க..” என அழுத்தி கேட்கவும்.

அந்த மூன்றாம் நபர் “அருண், அதான் மாப்பிள்ளைக்கு ஏதோ ப்ரோமோஷன் வரவேண்டி இருந்ததாம்.. நேற்று இரவு, அது இல்லை என ஈமெயில் வந்துவிட்டதாம்.. உடனே, எதோ அவங்க மனசில் தோனிடுச்சி போல.. அதான், பொண்ணு பார்த்துட்டு வந்து இப்படியோரு செய்தி வந்ததும் கொஞ்சம் சங்கடம்.. அதான்.. சட்டுன்னு கிளம்பி திருத்தணி போயிட்டாங்களாம்.. அவங்களுக்கு எப்படி இதை சொல்றதுன்னு.. யோசனை. அவங்க வேறு இடம் பார்த்துக்கிறாங்கலாம்.” என்று சொல்லிவிட்டார் அவர். 

மதுவின் வீடே ஸ்தம்பித்து போனது இதை கேட்டு. கைகூடி விடும் என எண்ணியே விட்டனர் வீட்டில் எல்லோரும்.. இப்போது, இந்த செய்தி வலித்தது. அப்படியே அமர்ந்துவிட்டனர்.

தரணிதான், ஸ்ரீக்கும், ஷர்வனுக்கும் செய்தியை சொன்னான். ஸ்ரீ “மது எப்படி டா இருக்கா.. அழுதாளா” என்றான்.

தரணி “இல்ல, அப்படில்லாம் ஒண்ணுமில்ல.. நார்மலா இருக்கா ஸ்ரீ..” என்றுவிட்டான்.

மதுவிற்கு அன்று இரவு நல்ல உறக்கம். குடும்பத்தில் யாரும் உறங்கவில்லை.

மறுநாள் மது சீக்கிரமாக எழுந்து வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டாள்.

தரணி கேட்டான் “என்ன டி, கொஞ்சம் கூட கவலையே இல்லையா” என.

அப்போதே வித்யா அதட்டினார் “எ..எதுக்கு அவ கவலைபடனும்.. நம்ம மதுவை கட்டிக்க, அவங்களுக்கு கொடுத்து வைக்கல.. நீ போ மது.. வேலையை பார்.. கண்டதையும் பேசிகிட்டு..” என்றார், மகனைப் பார்த்து முறைத்தபடியே.

மது லேசாக சிரித்தாள்.. பின் “போடா.. போய் கிளம்புற வழிய பார்” என்றாள் சாதாரணமான குரலில்.

தரணி மாடி ஏற போனாவன், அவளிடம் “ம்.. சரியில்லையே நீ” என்றபடி மேலே ஏறினான்.

மது “போடா.. போ” என்றாள் சிரித்த முகமாக.

தரணியின் மனதில் எதோ நெருடியது.. மீண்டும் அவளுக்கு என்ன ஆகிற்று.. ஏன் இவள் இப்படி இருக்கிறாள்.. சரியில்லையே.. அமைதியாக இருந்திடுவாள்தான். ஆனால், இத்தனை நடந்திருக்கிறது.. இப்போது இயல்பாக இருக்கிறாளே.. என்னமோ சரியில்லை.. என எண்ணிக் கொண்டே தன் வேலைகளை பார்த்தான்.

மதுவிற்கு சந்தோஷத்தில் வேலைகள் ஓடியது. எதையும் நினைக்கவில்லை.. இந்த வரன் இல்லை.. நான் கேட்டதை அந்த ஆண்டவன் வைத்திருக்கிறான்.. போல. ஒருவேளை.. நான் நினைத்ததை வைத்திருக்கிறானோ.. எங்கே!, அவர்தான்.. அம்மா வந்துட்டாங்க சாப்பாடு வேண்டாம் என செய்தி அனுப்பிவிட்டாரே.. என தோன்றி கண்ணீரை கொடுத்தது அவளுக்கு.

மதுவின் விரல்கள் ஷிவாவிற்கு அழைக்க பரபரத்துக் கொண்டிருந்தது. பேசணும் இது எனக்கு கடவுள் கொடுக்கும் ஒரு குறிப்பு போல.. அடுத்து என்ன என நான்தான் பார்க்க வேண்டும்.. என தோன்றுகிறது அவளுக்கு. ஆனால், ஷிவா, தன்னிடம் இனி பேச கூட முடியாது. மேலும் எப்படி நான் பேசுவேன் அவரிடம்.. என்னவென சொல்லுவேன் அவரிடம்.. புரியலையே.. உணமையாகவே நான் நினைத்தது எனக்கு கிடைக்குமா.. என புரிந்ததும் அழுகையாக வருகிறது அவளுக்கு.

எல்லாவற்றையும் மனதிலேயே வைத்துக் கொண்டாள் மது. தரணியின் கண்ணில், அதிகம் படுவதில்லை அவள். பேசுவதில்லை அதிகம்.. வேலை வேலை எனதான் இருந்தாள் மது.

 

ஷிவாவின் அன்னையும் தந்தையும் ஊருக்கு கிளம்பினர். ஷிவா “ஏன் பா..” என்றான். 

கணேசன் “வேலை இருக்கு ஷிவா.. வீட்டை அப்படியே போட்டு வந்துட்டோம்.. நீ வான்னு சொன்னாலும் கேட்க்கமட்டீன்கிற.. நீ சண்டே வரணும்.. இரண்டு நாள் வந்துட்டு போடா..” என்றார் தந்தை.

ஷிவா “கண்டிப்பா வரேன் பா.. சண்டே எல்லோரும் சேர்ந்து போலாம் ப்பா..” என எவ்வளவோ சொன்னான், பெற்றோர்க்கு, வீடு அப்படியே இருப்பதால் கிளம்பினர்.

ட்ரைன்னில் டிக்கெட் புக் செய்து கொடுத்தான் மகன். தான் வருவதாக வாக்குறுதி கொடுத்துதான் அனுப்பினான் அவர்களை. 

அன்று இரவே ஷிவா, மதுவிற்கு அழைத்தான். மது எடுக்கவில்லை. ஷிவாவிற்கு, என்னமோ சின்னதாக எதிர்பார்த்துவிட்டான்.. தான் அழைத்ததும் அவள் எடுத்திடுவாள் என எதிர்பார்த்துவிட்டான் ஷிவா. எனவே, அவள் எடுக்கவில்லை என்றதும் மீண்டும் ஒருமுறை தன் பழைய கதையை நினைத்துக் கொண்டவன் அமைதியானான்.

எப்போதும் போல ஷிவா, தனக்கு இன்று இரவிலிருந்து உணவு வேண்டும் என செய்தி அனுப்பி வைத்தான்.

மது பத்து நிமிடம் சென்றுதான் பார்த்தாள். பார்த்ததும், கண்ணீர் வழிய நின்றாள்.. இந்த முறை கண்ணீரில் உப்பில்லை போல.. ஆனந்தமாக இருந்தது அழுவது அவளுக்கு. 

மது போனை கையில் எடுத்துக் கொண்டு தன்னறைக்கு வந்தாள். மதியம் உணவினை பார்சல் செய்து அனுப்பியாகிவிட்டது. எனவே, சற்று நேரம் ஓய்வுதான்.. கணேசன் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். சித்ராவும், வித்யாவும் சற்று படுத்திருந்தனர். இவள் தனதறைக்கு வந்துவிட்டாள்.

என்னமோ மனதின் ஒரு குரல் அழுத்தி அழுத்தி சொன்னது ‘ஷிவாவிற்குள்ளும் எதோ ஓடுது உன்னை பற்றி.. விட்டுடாதே..’ என சின்ன குரல் கேட்டது அவளுக்கு.

தன் போனில் அவன்  அழைப்பு வந்திருந்ததை பார்த்தாள்.. இன்னுமின்னும் ஆனந்தமாக அழுதாள்.. முதலொரு தோல்வி. இன்னமும் மறக்க முடியாத தோல்விதான். இப்போதும்  என்னென்னமோ நடந்து.. மீண்டுமொரு துளிர் தெரிகிறது அவளின் வறண்ட நிலத்தில்.. ஆனால், எப்படி நீர் பாய்ச்சுவது.. எப்படி அதை வளர்ப்பது.. என தெரியவில்லை பெண்ணுக்கு.. கைகள் நடுங்க.. போனோடு நின்றிருந்தாள்.

ஆனால், மதுவிற்கு என்ன சொல்லி அழைக்க இப்போது.. என தோன்றியது. எங்கேனும், அவர் உணவு பற்றி மட்டும் பேசி முடித்துவிட்டாள் என தோன்றியது.

பாலாஜி, அன்று அவ்வளவு பேசும் போது.. ஷிவா அமைதியாக தானே இருந்தார். ஆனால், நான் தனியா சென்று ‘என்ன’ என கேட்ட போது.. என்னிடம் எதையும் மறைக்காமல் சொன்னாரே.. என்மேல என்னமோ ஒரு சாப்ட்கார்னர் இருக்கு.. அ..து.. அப்போ, எ..எனை பிடிக்கும் தானே அவருக்கு.. என தனக்கு தானே முதலில் திடப்படுத்திக் கொண்டாள், மது.

அவளுக்கு எந்த பற்றுதலும் இல்லை அவனிடத்தில்.. ம்.. அவன் என் கல்லூரி தோழன்.. என் எதிர் வீடு.. என எந்த பற்றும் இல்லை.. திடீரென வந்தான்.. நான்கு நாட்கள் முன்பு கூட உணவு வேண்டாம் என்றான்.. இப்போது மீண்டும் வந்து நிற்கிறான்.. நான், எ..எப்படி, எ..என்ன சொல்லி பேசுவது. ம்.. உன்னை பிடிக்கும்ன்னு சொல்லுவதா.. ம்.. அப்படி எப்ப்டி சொல்ல முடியும் என்னால்.. என்னதான் பிடிக்குது..’ என ஆயிரம் கேள்விகள் அவளிடம்.

ஆனால், எந்த கேள்விக்கும் அவளிடம் பதிலில்லை. அஹ.. இந்த அன்பு நேசமெல்லாம் இப்படிதான்.. எவ்வழி வருமென தெரியாதே.. வந்த வழி தேடி சென்றால்.. அந்த அன்பு அழகிழக்குமே.  அன்பில் ஆக சிறந்ததே.. ஒருவரை அப்படியே நிறை குறையோடு ஏற்றுக் கொள்வது. மதுவிற்கு, ஷிவாவின் போராட்டமான காலம்.. புரிந்தும், அவனை தேடுகிறாள்.. அப்படி என்னதான் இருக்கிறது அவனிடம் என தெரியவில்லை அவளுக்கு.

மது, ஷிவாவிற்கு அழைத்துவிட்டாள்…

ஷிவா “ஹலோ.. ப்ரீ ஆகிட்டியா“ என்றான்.. சின்ன நிராசையான குரலோ அது.

மதுவிற்கு இந்த குரலை எதிர்கொள்ள முடியவில்லை.. அவளுக்கு பல எதிர்பார்ப்பு, இதில் இந்த குரல் சேரவேயில்லை.. தடுமாறிய படியே “இ… ஆமாங்க கொஞ்சம் வேலை.. முடிந்தது எல்லாம், சொல்லுங்க” என்றாள்.. ஆர்வமான குரலில்.

ஷிவா “ஏங்க.. என்ன ஏதுன்னு ஒரு மெசேஜ் கூட அனுப்பலை..  ஏதடா ஒருத்தன் அம்மா வந்திருக்காங்க, வாங்கன்னு சொன்னேனே.. என்னான்னு கேட்ப்போம்ன்னு தோணிச்சா.. அன்னிக்கும் அதே போலதான்..” என எதோ சொல்ல வந்தவன் நிறுத்திக் கொண்டு “வீட்டுக்கு வாங்கன்னு சொன்னேனில்ல” என்றான் தொண்டையை கணைத்தபடி.

மது “இ.. இல்ல.. வேலை.. அத்தோட நிறைய நடந்துடுச்சி… எ..என்னால் பேசவே முடியலை ஷிவா..” என்றவளுக்கு துக்கம்தான் தொண்டையை அடைத்தது.. கொஞ்சம் நிறுத்தினாள்.

ஷிவா “என்ன மது…” என அழைத்தான் அக்கறையாக.. 

அவளுக்கு கண்கள் உடைப்பெடுத்தது.. ஷிவாவின் குரலில்.

ஷிவா “எ.. என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு… என்னாச்சு” என்றான் அதட்டலாக.

மது “அது ஒண்ணுமில்ல..” என்றாள்.

ஷிவா “அப்போது நிறைய இருக்குன்னு அர்த்தம்..” என்றான் ஆழ்ந்த குரலில்..

மது அமைதியாகவே இருந்தாள்.

ஷிவாவிற்கு அதற்குமேல்.. என்ன பேசுவது என தெரியவில்லை.. அதிகமாக உரிமை எடுக்கிறோமோ.. என தோன்றியது “ஒரு கால் வருது, நான் கூப்பிடுறேன் மது” என்றான்.

மது இப்போதும் ஏதும் பேசவில்லை.

ஷிவா “மது.. “ என்றான் அழுத்தி.

மது “ம்… சொல்லுங்க.. சரி, ஓகே… சாம் எப்படி இருக்கான்..” என்றாள்.

ஷிவா “ம்.. நல்லா இருக்கான். உங்களை தேடினான்.. அப்புறம் பாட்டி தாத்தாவை பார்த்ததும் மறந்துட்டான் போல.. ஆனால், இ.. இன்னிக்கு கொஞ்சம் தேடுறான்..” என்றான், என்ன குரலிது என விளங்கவில்லை அவளுக்கு.

மதுவிற்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை.. பரஸ்பரம் இருவருக்கும் தெரியும்.. குழந்தை எப்படி என்னை தேடும்.. ஷிவா பொய் சொல்லுகிறான் என தெரியும். ஷிவாவிற்கும் அதேதான், தான் பொய் சொல்லுகிறோம் என தெரியும். ஆனால், என்ன பேசுவது என தெரியாமல் இப்படி நிகழ்கிறது. தங்களுக்கே.. சங்கடமாகியது. அமைதியாக இருந்தனர் இருவரும்.

ஷிவா “டேக் கேர் மது.. பை” என சொல்லி போனை வைத்துவிட்டான்.

மதுவிற்கு ஓயாத கடல் மனதுதான். இன்னமும் அலை அடிக்கிறது அவள் மனதில்.. ஆனால், மேலே எம்பி அந்த நிலவை தொடும் வன்மையான  அலையல்ல.. மிதமாய், பிறை நிலா தெரியும் நாளில்.. தென்றலோடு.. அந்த பிறை நிலவை பார்த்தாலே போதும் என்ற மென் அலை.. அவள் மனதில்.

“உன்பனிதுளி பனித்துளி

பனிதுளி பனித்துளி என்னை 

சுடுவது சுடுவது ஏனோ..

என் சூரியன் சூரியன் சூரியன்

அதில் உருகுது உருகுது ஏனோ..”

Advertisement