Advertisement

மதுர ப்ரியம்!

14

ஷிவா, தன் அன்னை தந்தையை அழைத்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தான். சாம், வரும் வழி முழுவதும் ஷிவா.. இல்லை தாத்தா கணேசனோடு மட்டுமே இருந்தான் பாட்டியோடு பழவில்லை இன்னமும்.

கணேசன் பேரனை ஷிவாவும் கோதையும் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தார்.. அப்போது திருதிருவென வெறித்தவன்.. தன் தந்தையை பார்த்ததும் பெருங்குரலெடுத்து அழுதான் சாம்.

ஷிவா பதறி.. தன் அன்னையிடமிருந்து விலகி “சாம்… சாம்.. பயந்துட்டியா.. ஒன்னுமில்ல ஒன்னுமில்ல டாட்.. இங்கதான் இருக்கேன்.. நோ.. அழாத…  காம் டா.. குட்டு, காம்..” என தன் தோளில் சாய்ந்த மகனை, ஷிவா சமாதானம் செய்வதை கோதை இமைக்காமல் பார்த்திருந்தார். 

என் மகன்.. தந்தை.. அதுவும் இப்படி ஒரு பொறுப்பான தந்தையா.. என பார்க்கப் பார்க்க.. தன் அன்னையிடம் ஷிவா “இருங்க ம்மா… அவன் பயந்துட்டான்.. இருங்க” என்றான். கோதைக்கு இந்த சமாதானத்தை தன் மகன் தன்னிடம் சொல்லவும் புதிதாக இருந்தது.. இந்த நிமிடம் அவருக்கு. அவரின் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிமிடங்கள் இதுவெல்லாம்.

கோதைக்கு ஷிவாவின் நிலை தெரிந்ததும்.. மனது பதறியது.. நான் மகனுக்கு சம்மதம் சொல்லிருக்க வேண்டும்.. யாரையோதிரும்னம் செய்துக் கொள் என சொல்லி இருக்க வேண்டும் எனதான் எண்ணினார் கோதை.

ஆனால், அன்னை மனதின் அடியாழத்தில் அவரின் மனதை சூழ்ந்த செய்தி ‘நான் என் மகனை தவறாக வளர்த்து விட்டேனோ.. வளர்க்க தெரியாமல் வளர்த்து இப்படி ஏமாற செய்து விட்டேனோ’ என இருந்தது. ஆனால், இந்த நொடி.. அன்னைக்கு தன் வளர்ப்பில் குறை இருப்பதாக தெரியவில்லை.. சொல்ல போனாள் பூரித்து போனார் கோதை ‘இவன் ஏமாந்து வந்தானே தவிற.. யாரையும் ஏமாற்றவில்லை. அத்தோடு, எப்ப்டியோ போகட்டும்.. என நினைக்காமல் குழந்தையை பெற்று.. இத்தனை சட்டங்களுக்கு நடுவில் அவனை தாங்கி, இப்படி பாதுக்காக்கிறானே என பூரித்து பார்த்திருந்தார் கோதை.

சாம் சமாதானம் ஆகினான் சற்று நேரத்தில்.. ஷிவா, மகனை நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு “தாத்தா.. இது, இது பாட்டி… சாம்மோட பாட்டி.. ஹாய் சொல்லு.. பட்டியைஅழ வேண்டாம் சொல்லு” என்றான்.

சாம் தந்தையின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டே தாத்தாவை பார்த்தான்.. பாட்டியையும் பார்த்தான்.. கோதை கண்களை துடைத்துக் கொண்டு “சாப்பிட்டானா குழந்தை” என்றார்.

ஷிவா “ம்.. சாப்பிட்டான்ம்மா… தூக்கம்தான் அழுகை.. இல்லைன்னா, பாலாஜி கிட்ட இருப்பான்..” என சொல்லிக் கொண்டிருக்க.. கோதை “ஹாய் சாம்..” என்றார் குழந்தையை பார்த்து.

பின் மகனிடம் திரும்பி கோதை “இதென்ன பேர் சாம்’ன்னு நல்ல பேரா வைக்க மாட்டியா” என்றார், அத்தனை சோகத்திலும்.

ஷிவா “வைக்கலா ம்மா.. நீயே வையேன். அங்கே இ.. இப்படிதான் கூப்பிட்டாங்க.. அதான், அப்படியே நானும் கூப்பிடுறேன்..” என்றான் இதில் என்ன இருக்கு என்ற குரலில்.

சாம், கோதை அழைத்ததும் அழுகையை நிறுத்திருந்தவன், மீண்டும் அழ தொடங்கினான்.

ஷிவா “டேய் பாட்டி டா” என அறிமுகம் செய்து வைத்தான்.. “ஹாய் சொல்லு” என்றான்.

சாம், உதடுகள் வெம்ப.. விம்ப தொடங்கினான்.. கோதை “வேண்டாம் ப்பா.. நீ உன் அப்பன் கிட்டேயே இரு.. தூங்கி எழு.. அப்புறம் பேசலாம்” என்றார் சிரித்த படியே.

ஷிவா ஏதும் சொல்லவில்லை.. அமர்ந்து, மகனை மடியில் போட்டுக் கொண்டு.. “ஹரிணிக்கு மாப்பிளைக்கு எல்லாம் தெரியுமா, என்னை பற்றி… என்ன சொன்னாள்?.. அவள் பசங்க நல்லா இருக்காங்களா” என கேட்க தொடங்கினான்.

கணேசன் “டேய்.. எதுவும் முழுசா தெரியாது.. அதே சமயம் தெரியாமலும் இல்லை. பேசிக்கலாம் வா. நீ இந்தியா வந்து எத்தனை நாளாகுது.. இப்போது என்ன செய்யற.. அங்கே வேலையை விட்டுட்டியா.. இல்லை, லீவில் வந்திருக்கியா..” என்றார்.

ஷிவா பதில் சொல்லினான். இன்னும் நிறைய உண்டு இவர்களுக்குள் பேச.. ஆனால், எதையும் மகனிடம் சட்டென கேட்க முடியவில்லை இவருவராலும்.

இப்போது குழந்தை உறங்கி இருக்க.. ஷிவா “அப்போ கிளம்பளாமா பா..” என்றான்.

கணேசன் கோதையை பார்த்தார்.

கோதை “நீ கிளம்பு ப்பா.. நாங்க அப்புறம், அங்க ஊரில் சின்ன வேலையிருக்கு.. முடிச்சிட்டு வரோம்..” என்றனர்.

ஷிவா விடவில்லை.. எப்படி என் பெற்றோர் முகத்தில் விழிப்பேன் எனத்தான் இவ்வளவு நாள் தயங்கினான். இப்போது அந்த தயக்கமெல்லாம் எங்கே என தெரியவில்லை.. ஷிவா “என்ன ப்பா, அதெல்லாம் முடியாது நீங்க என் கூட வரீங்க.. என்ன இப்போ, ஒருவாரம் சென்று வேலையை பாருங்க.. நானும் வரேன்.. இப்போ என் கூடதான் வரணும்” என்றான் பிடிவாதமாக.

அவனின் பிடிவாதம் வென்றது. இதோ இன்று இரவே சென்னை வந்து சேர்ந்தனர் மூருவரும். அதிகம் பேச்சில்.. பயணத்தில். 

ஷிவா மகனை பற்றி பேசினான்.. இப்போதைய சென்னை வாழ்க்கை பற்றி சொன்னான்.. அவ்வளவுதான். தந்தை அவ்வபோது லேசாக ‘உனக்கும் அந்த பெண்ணுக்கும் டிவோர்ஸ் ஆகிடுச்சா பா..’ என்றார்.

ஷிவா “எல்லாம் பிரச்சனை இல்லாமல் முடிந்தது பா.. நீங்க எதை பற்றியும் கவலைப் படாதீங்க.. ஒரு பிரச்சனையும் வராது. நான் பார்த்துக்கிறேன்” என்றான், விருப்பு வெறுப்பு இல்லாத குரலில். இதற்கு பிறகு, இதை பற்றி கேட்க்காதீர்கள் என்ற உடல்மொழியும்.. குரலும் அதில் தெரிந்தது பெற்றோருக்கு.

சாம் எழுந்துக் கொண்டான்.. அதன்பின் பெரியவர்களைக் காயப்படுத்தக் கூடாது என ஷிவா கொஞ்சம் தளர்ந்துப் பேசினான்.. பழைய கதைகள் பேசத் தொடங்கினான். அப்படியே சென்னை வந்தனர்.

கோதை வீட்டை பார்த்து “எதுக்கு டா இவ்வளோ பெரிய வீடு..” என்றார் முதலில்.

ஷிவா “அம்மா..” என்றான் அவ்வளவுதான்.

கோதை சுற்றிலும் எல்லாவற்றையும் பார்வையிட்டார். அவரை பொறுத்தவரை.. நிறைய சாமான்கள் குழந்தைக்கு என இருந்தது.. சமைப்பதற்கு என ஒன்றுமில்லை. 

ஷிவா அன்னை தந்தைக்கு என ஒரு அறை காட்டினான். அங்கே, கட்டிலில்லை.. எனவே, தன்னுடைய அறையில் உறங்க சொன்னான்.. கோதை “நீ பையனோட எப்போதும் போல இரு டா.. எங்களுக்கு என்ன.. நாங்க பார்த்துக்கிறோம்..” என்றுவிட்டார்.

உண்டு வந்துவிட்டனர்.. எனவே, கணேசன் “கோதை பால் வாங்கி வரவா.. ஏதாவது குடிக்கிறியா” என்றார், கோதையின் மனமறிந்த கணவர். ‘சரி’ என்றார், கோதை.

ஷிவா “நான் வர சொல்றேன் பா” என்றான்.

தந்தை “இரு பா.. நான் போய் பார்த்துட்டு வரேன். என்ன இப்போ.. சென்னை தானே, எங்க இருக்குன்னு நான் பார்த்துக்கிறேன்” என சொல்லி கிளம்பினார்.

ஷிவா, சாம்’மோடு பாத்ரூம் சென்றான்.. அவனின் தேவைகளை பார்த்து கவனித்து.. குளிக்க வைத்து என அரைமணி நேரமாக ஷிவா.. அங்கே நின்றான். பின் சாம்’மை உடைமாற்றி அனுப்பி விட்டு, தான் குளித்து வந்தான்.

அதற்குள் கணேசன் பால் பிஸ்கட் பழங்கள் என வாங்கி வந்தார். 

கோதை பால் காய்ச்ச சென்றார்.

ஷிவா “ம்மா, காபி மேக்கர் இருக்கு ம்மா.. நான் டிக்காஷன் போறேன் ப்ரெஷாக “ என்றான்.

கோதை “டேய் பாத்திரம் மட்டும் எங்க இருக்குன்னு சொல்லு போதும்.. எனக்கு அதெல்லாம் எப்படியோ, என்னமோ.. அப்புறம் பார்க்கலாம், ஒரு கப் காபி கலந்து குடிக்கிறேன் முதலில்.. அப்புறம்தான் அடுத்த பேச்சே..” என்றவர், பாத்திரம் தேட தொடங்கினார்.

ஷிவா, பாத்திரம்.. சர்க்கரை.. காபி பவுடர்  இருக்குமிடம் சொல்ல.. கோதை காபி கலந்து குடித்துதான் அமர்ந்தார். அவருக்கு காபி இல்லாமல் வேலை ஓடாது.

கணேசன் “காபி இல்லைன்னா… கோதைக்கு, சாந்தமும் லேது.. சௌவுக்கியமும் லேது..” என்றார் சிரித்துக் கொண்டே.

கோதை அது உண்மை என்பதாக சின்னதாக கணவரை பார்த்து சிரித்தார். 

அன்னை தந்தையின் பேச்சுகளையும் குறிப்புகளையும் மகன் பார்த்துக் கொண்டே இருந்தான்.. ‘தான் எதை சம்பாதித்தேன் இந்த வாழ் நாளில்.. ஒரு பெண்ணின் வெறுப்பை.. பெற்றோரின் கோவத்தை.. இப்படி வேண்டாததை தானே சம்பாதித்தேன்.. வேறு எதை சம்பாதித்தேன் நான்..’ என ஒரு கேள்வி அவனுள் பயணப்பட்டது. 

“நடு காற்றில்…தனிமை வந்ததே..

அழகிய ஆசை உணர்வு தந்ததே…

உலகம் மாறுதே.. உயிர் சுகம் தேடுதே..”

Advertisement