Advertisement

மதுர ப்ரியம்!

13

மது, ஷிவா.. சாம், வந்து சென்றதிலிருந்து ஒரே யோசனை அவளுக்கு.. இப்போதுதான் அவனை தள்ளி வைக்கலாம்.. இரக்கம் மட்டும் போதும் என எண்ணி, அப்பா சொல்படி கேட்டு திருமணத்திற்கு சம்மதம் சொன்னேன்.. இப்போது வந்து நிற்கிறான்.. எதற்கு வந்தான், கையில் குழந்தை வேறு.. என தன்னிடமே பேசிக் கொண்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அப்பாவின் விருப்பத்திற்கு தான் தலை அசைத்திருக்க கூடாதோ.. இப்போது அந்த ஷிவாவின் பின்னாலேயே மனம் செல்லுகிறது.. ச்ச, என்ன பெண் டி நீயி.. என தன்னையே சபித்துக் கொண்டிருந்தாள்.

அவனை தன் குடும்பம் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டு எனக்கு திருமணம் செய்து வைக்காது என தெரிகிறது இவளுக்கு, ஆனால்.. மனம் என்னமோ அவனிடம் சென்று நிற்கிறது. இது இரக்கம் என அவளுக்கு புரிகிறது, ஆனாலும், அந்த இரக்கத்தின் வழியே விருப்பமும் அவளுள் நுழைந்துவிட்டதே.. என்ன செய்வாள் அவளும். தன்னோடு போராடிக் கொண்டிருக்கிறாள்.

முன்பே தன் ஆசை நிறைவேறவில்லை.. இப்போது மீண்டும் ஒரு நடக்காத விஷயத்தில் விருப்பம்.. மது!… நீ ஏன் இப்படி இருக்க.. வானத்தில் நடக்கவும்.. பூமியில் பறக்கவும் நினைக்காதே.. என சொல்லிக் கொண்டாள்.

தரணி வந்து “என்ன உனக்கு இப்படி ஒரு பிரெண்ட்டா.. மது. எவ்வளோ நல்ல மனசு வீட்டுக்கு வரார்.. அதுவும் குழந்தையோட.. என்ன கொடுத்தார்..” என்றான் ஹாலில் அமர்ந்துக் கொண்டு.

அவன் சாதரணமாகத்தான் கேட்டான்.. ஆனால், மதுவின் மனது தவறு செய்வதாக உணர்ந்தது. அத்தோடு இதை கேட்டுக் கொண்டிருந்த சித்ராவின் மனது என்னமோ செய்தது.. அமைதியாக மகள் என்ன சொல்லுவாள் என பார்க்க தொடங்கினார்.

மது “டேய்.. ஏன் டா… இப்படி கேட்க்கிற.. குழந்தைக்காக வந்தார் டா.. அவனுக்கு என் ஜிமிக்கை பிடிக்கும், அதை இழுத்துட்டே இருப்பான்.. அதான், எனக்கு அதையேதான் கிப்ட் பண்ணியிருக்கான் சாம்.. “ என்றாள் சத்தமாக எரிச்சலான குரலில்.

தரணி “ஹேய்.. நான் என்ன சொன்னேன்.. இவ்வளோ பெரிய மனிதன்னு சொன்னேன்.. அவ்வளோதான். அவர்க்கு கீழ பத்து பேர் வேலை பார்க்கறாங்க.. பாலாஜியும், இவரும் சேர்ந்து சின்னதாக ஒரு பிஸினெஸ் பண்றாங்க, அதை தவிர.. கிளைன்ட் ஏஜென்ட் இவரு.. அப்படி சொன்னேன்.. பயங்கர டேலண்ட்.. பாலாஜி இவரை பயன்படுத்தி நிறைய கிளைன்ட் எங்க கம்பெனிக்கு பிடித்திருக்கிறார்.. இப்படி உனக்கு பிரின்ட்டா இருக்காரே.. வீட்டுக்கு வந்து பார்க்கிராறேன்னு சொன்னேன் டி..” என்றான் புரிய வைக்கும் குரலில்.. ஆனால், பின்னொரு நாளில் இவனே சென்று.. அவரின் மரியாதையை வாங்க போகிறோம் என தெரியாமல்.

மதுவிற்கு இது எதுவும் தெரியாது. எதோ, தரணி போல வேலை.. நல்ல கிரேட்டில் இருப்பார் ஷிவா என எண்ணம் அவ்வளவுதான். மற்றபடி.. இவன் சொல்லும் அளவிற்காக ஷிவா கெட்டிக்காரனா! என பார்த்திருந்தாள் இப்போது.

ஷிவா, வீடு வந்து சேர்ந்தான்.. மகனுக்கு உணவு ஊட்டினான். ‘அவள் தெளிவாக இருக்கிறாள்..’ அதுதான் இன்றைய நாளில் அவன் கண்டு கொண்ட செய்தி.. என் கதையை கேட்டதும் பெண் தெளிவாகிவிட்டாள்.. போதும், என்னை பார்க்க கூட வேண்டாம்.. அவளிடம் நல்ல நட்பை வளர்க்க வேண்டும்.. குழந்தையோடு தனியாக வந்து உணவு என கேட்ட போது.. எல்லாம் செய்துக் கொடுக்கிதாள், இப்போதுவரை அப்படியே, அவள் கண்ணில் இன்று சாம்’மை பார்த்தும் வந்த சந்தோஷம் உண்மையானது.. அது போதும் எனக்கு. அழைத்து பேசனும் அவளை..’ என கொஞ்சம் அவளை நடுவில் நிறுத்தி நல்லவிதமாக இருந்தான் ஷிவா.

மகனுக்கு தேவையானதை கவனித்தான் தந்தை. 

சாம், உண்டு விட்டு, குஷியாக விளையாடினான். ஷிவா.. லாப்பெடுத்து அமர்ந்துக் கொண்டான். வேலையில் கவனம் செல்லவில்லை.. சற்று நேரம் அமர்ந்து முயன்று கவனத்தை கொண்டு வந்தான். 

சரியாக அவன் வேலையை தொடங்கும் நேரம், சாம் வந்து தந்தையின் அருகே தலை சாய்ந்துக் கொண்டான். ஷிவா, அவனை மடியில்  போட்டுக் கொண்டு.. அமர்ந்து வேலையை செய்ய.. சற்று நேரத்தில் சாம் உறங்கிவிட்டான்.

மகனை படுக்கையில் விட்டவன்.. பின் வந்து அமர்ந்து வேலையை பார்த்தான். கொஞ்சம் முடிக்க வேண்டியதை முடித்துதான் நிமிர்ந்தான். 

மணி பதினோன்றுக்கு மேல்.. பீர் எடுத்துக் கொண்டான். அது இல்லாமல் அவனுக்கு உறக்கம் வருவதில்லை இரவில். பொறுமையாக  அதனை ரசித்து ருசித்து குடித்தான். மனது மதுவை நாடியது இயல்பாய்.

முயன்று தன்னை இழுத்தான் அவளிடமிருந்து.. ’சாம்மோடு அடுத்த நான்கு மாதத்தில் அங்கே செல்ல வேண்டும்.. டிக்கெட் பார்க்கணும்.. கொஞ்சம் கிளைண்ட் பிடிக்கணும்.. என தன்னை அதில் செலுத்தினான்.

ஒரு அறை மணி நேரம் சென்று.. மீண்டும் மது வந்து நின்றாள் அவனின் சிந்தனையில்.. ‘இது என்ன.. யாரவள்.. என்னையொரு பார்வைதான் பார்த்தாள்.. நான் இழந்ததை மறக்க வைத்து.. அவளிடம் அடைக்களம் அடைகிறேன்.. வேண்டாமே..’ என எண்ணிக் கொண்டே, பிரிட்ஜில் இருந்து அவனின் பிராண்டி எடுத்து வந்தான்.. கடகடவென குடித்தான் கணக்கில்லாமல்..  ‘அவள் நேசத்தை உணர்ந்துக் கொண்டு நான் படும் பாடு இருக்கிறதே.. எதற்கு இந்த மனம் எனக்கு..  முன்பும் ஒருத்தி.. இப்போது இன்னொருத்தி.. நாளை யாராவது வந்தால்.. அங்கும் நிற்பேனோ..’ என தன்னையே கேள்விக்கேட்டுக் கொண்டு உண்ணாமல் படுத்துக் கொண்டான் ஷிவா.

இதுவே வழக்கமானது. ஷிவாவிற்கு, தன் மேல் இரக்கம் கொண்டு ஒரு பெண் பார்க்கிறாள் என்பது சந்தோஷமோ சந்தோஷம்.. அதை சாத்தியப்படுத்திக் கொள்ள அவன் எண்ணவில்லை.. அது நடக்காது, அது தவறு என அவனின் மனசாட்சி சொல்ல.. அவளை தன்னுள் அனுமதிக்கவும் முடியாமல்.. விலக்கவும் முடியாமல்.. தடுமாறுகிறான் ஷிவா.

ஷ்ரவன், பெங்களூர் சென்றான். அவனிடம் அபர்ணாவிற்கு சொன்னது போல.. இஞ்சிபுளி செய்து கொடுத்துவிட்டாள்.. அதை தவிர நட்ஸ்.. ஸ்வீட் என வாங்கி கொடுத்தாள் மது.

தண்டபாணி, மதுவின் ஜாதகத்தை.. தனக்கு தெரிந்தவர்களிடம் கொடுத்தார். முன்பே சொந்தத்தில் கேட்டிருக்க.. அவர்களுக்கும் போன் செய்து பேசி ஜாதகத்தை அனுப்பி வைத்தனர், பெற்றோர்.

வீட்டில் ஒரு இதமான மனநிலை.. அவளின் அன்னையும் தந்தையும் வாய் திறந்தால்.. ’மதுவின் கல்யாணத்துக்கு இது தேவை.. புடவை சேர்க்கணும்.. செலவை குறைங்க..’ என பேச்சுகள் அதை சுற்றியே நகர தொடங்கியது.

மது மனதளவில் வாட தொடங்கினாள். என்னமோ திருமணம் என்பது முன்பே என்னை புரியாதவனிடம் நான் எப்படி பொருந்தி போவேன் என எண்ணியவள்.. இப்போது, ஷிவாவின் கால் தடம் மனதில் வந்த பிறகு இன்னமும் பயந்தால்.. திருமணத்திற்கே சம்மதம் சொல்லி இருக்க கூடாது. எல்லோரும் எதிர்பார்ப்பதை நான் பொய்யாக்க போறேனோ.. எனக்கும் வருகிறவனை எப்படி ஏற்பேன்.. அய்யோ.. என பல யோசனைகள் அவளுக்கு. அதில் ஷிவாவின் முகம் அதிகம் நினைவில் வந்தது.. நானும் யாருக்கும் தொந்திரவு தரமால் இப்படியே இருந்திடலாம்.. என பல யோசனைகள்.

“ஏதோ ஒன்று என்னை தடுக்குதே..

பெண் தானே நீ என்று முறைக்குதே..

என்னுள்ளே காயங்கள் ஆறாமல்

தேராமல்… நின்றேனே.. விசிறியாய்.. 

உன் கைகள் வந்தாலும்..

வாங்கமல் சென்றேனே..”

ஆனால், எதையும் காட்டிக் கொள்ளவில்லை, குறிப்பாக தரணியிடம் எதையும் சொல்லவில்லை.. முதல்முறை. ம்.. தரணியிடம் தன் மனதை மறைப்பது இதுவே முதல்முறை அவளுக்கு. அவன் எப்படியும் கண்டுக் கொள்வான்.. ஆண்டவா என்னை ஏன் சோதிக்கிற.. என வேண்டிக் கொண்டாள். எனவே, அவனிடம் கவனமாக பேச தொடங்கினாள் பெண்.

நாட்கள் சென்றது.. 

இன்று மாலை, மதுவின்  தந்தை வந்து பேசினார்.. “மதும்மா.. ஒரு ஜாதகம் பொருந்தி வந்திருக்கு.. இந்த வாரத்தில் உன்னை, பெண் பார்க்க வருவாங்க.. டா..” என்றார்.

மது கொத்தமல்லி ஆய்ந்துக் கொண்டிருந்தாள்.. அமைதியாக கேட்டுக் கொண்டாள் ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றாள். 

தரணி இரவில் வந்து ஆர்பாட்டமாக “மது.. எப்படி இருந்தாலும் சரி.. முதல் மாப்பிள்ளையை ஒகே சொல்லிடு.. அதுதான் எப்போதும் பெஸ்ட்டா இருக்கும்..” என்றான் விவரம் கேட்க்காமல்.

மது “டேய்.. என்ன எதுன்னு தெரியாமல் எப்படி சம்மதம் சொல்றது..” என்றாள் எரிச்சலாக.

தரணி “மாமா.. மாப்பிளை விவரம் சொல்லையா நீங்க, பாருங்க மது கேட்க்கிறாள்” என சிரித்துக் கொண்டே மதுவை மாட்டி வைத்தான்.

மது எரிச்சலின் உச்சத்தில் இருந்தாள்.

மதுவின் தந்தை  “ம்.. சரிதானே தரணி. மாப்பிள்ளை பேரு கொண்டப்பன்.. அருண்ன்னு கூப்பிடுறாங்க.. வெளிநாட்டில் வேலை.. அது, எந்த ஊர் பேர் போட்டிருந்தது.. தரணி, இந்த போனில் பார்த்து சொல்லேன்..” என சொல்லி போனை அவனிடம் கொடுத்தவர் மீண்டும் சொல்ல தொடங்கினார்.

தந்தை “உங்களை மாதிரி கம்பெனியில் வேலை பார்க்கிறார் பா.. கூட பிறந்தது ஒரு அக்கா. அவங்கள பட்டுகோட்டை கிட்ட கட்டிகொடுத்திருக்காங்க.. அப்பா அம்மா மட்டும் இங்க இருக்காங்க.. கல்யாணம் ஆகிட்டால், மதுவை கூட்டி போகிடுவார்.. மது வேலைக்கு போகனும்ன்னாலும் ஒகே.. இல்லை, இதே போல அங்கே ஏதாவது செய்யட்டும்ன்னு சொல்றாங்க.. மாப்பிள்ளையின் அம்மாவிற்கு இவளை ரொம்ப பிடிச்சிட்டுது.. இந்த மெஸ் அவள்தான் நடத்துகிராளாம் என கேட்டார்.. தைரியமான பெண்ணைத்தான் என் பையனுக்கு பிடிக்கும்.. இப்படிதான் இருக்கணும் என பேசிகிட்டே இருந்தாங்க. பையன் இன்னிக்கு வந்திடுவாராம்.. இரண்டு நாளில் வறோம் என சொல்லிட்டாங்க..” என முழு விவரமும் சொன்னார்.

தரணி “மெல்போன் டா மது.. செம பிளேஸ்டா.. ம்.. நான் போகிறேன் ம்.. நான் போகிறேன் மேலே.. மேலே.. பூலோகமோ காலின் கீழே..” என பட..

மது “டேய்..” என்றாள். அவளின் மனதுள் ‘வெளிநாடு மாப்பிள்ளை கண்டிப்பாக மறுத்துவிடலாம்’ என எண்ணம். எனவே அமைதியாக எழுந்து சென்றாள் உள்ளே.

தரணி இன்னும் அதே இரண்டு வரியை பாடிக் கொண்டிருந்தான்.

தண்டபாணி, அழைத்து சொல்லி இருந்தார்.. வித்யா, ஸ்ரீ.. இருவரையும் வர சொல்லி பேசிக் கொண்டிருந்தார். சித்ராவின் அண்ணனுக்கு பேசினார்.. விஷயத்தை சொன்னார்.. “சும்மா பார்க்க வராங்க..” என பேசி வைத்தார் அழைக்கவில்லை.

 

 

Advertisement