Advertisement

மதுர ப்ரியம்!..

11

ஷிவாவிற்கு, மனதே சரியில்லை.. ’நான்தான் அவளை தப்பாக பார்க்கிறேனா.. அவள், நான் கோவமாக பேசிய போதும் ஒன்றும் சொல்லாமல் கிளம்பி சென்றாளே.. எனக்குதான்.. தப்பாக தோன்றுகிறதோ..’ என தன்னையே நொந்துக் கொண்டிருந்தான். ஆனால், மதுவின் பார்வை அவனுள் ஓரு தடுமாற்றத்தை தந்திருந்தது.

இரவு, ஜெயாம்மா வந்துவிட்டார் போல, ஊரிலிருந்து. தன் மகன் வீட்டில் பையை இறக்கி வைத்தவர் நேராக ஷிவா வீட்டிற்கு வந்தார்.. ஷ்யாமை பார்க்க. கதவை திறந்த ஷிவா சந்தோஷமாக வரவேற்றான் ஜெயாம்மாவை.

ஜெயாம்மாவிற்கு ஷியாம்’மை பார்த்து அழுகையே வந்துவிட்டது.. “என்ன ஆச்சு இவனுக்கு.. ஏன் இப்படி இளைச்சு போய் இருக்கான்.. கண்ணு மட்டும்தான் தெரியுது” என ஷிவாவை கேட்டார்.

ஷிவாவும் பொறுமையாக பதில் சொன்னான்.

ஜெயம்மா “ஏன் ப்பா.. உங்க அம்மா அப்பா எல்லாம் இருக்காங்களா.. உன் பொண்டாட்டிக்கும் உனக்கும் என்னதான் பிரச்சனை, ஏன் தனியா பிள்ளையோட கஷ்ட்ட்படுற.. ஏன் இரண்டு பக்க உறவும் வரலை.. இந்த வயதில் குழந்தை அம்மாவோடு இருப்பதுதான் சரி..” என பல கேள்விகளை அங்கிருந்த ஒருமணி நேரத்தில் ஷிவாவிடம் கேட்டுவிட்டார்.

ஷிவா எதற்கும் பதில் சரியாக சொல்லவில்லை.. “இதோ அவனுக்கு.. பிஸ்கட் கொடுக்கணும்.. வெந்நீர் கொடுக்கணும்.. அதெல்லாம் நல்லா விளையாடுறான்.. நாங்க சாப்பாடு வாங்கும் இடத்தில், இவனுக்கு எதோ ஹெல்த் பவுடர் தரேன்னு சொல்லி இருக்காங்க.. சரியாகிடுவான்” என பிடிக் கொடுக்காமல் பேசி சமாளித்தான்.

ஜெயம்மா சார்ட் டெம்பர்.. எனவே “என்னமோ போங்க பா.. இந்த காலத்து பசங்ககிட்ட எதையும் பேச முடியதில்லை.. கேள்வி கேட்க முடியதில்லை.. இப்படி முகத்தை இறுக்கமாக வைச்சே தள்ளி போயிடுறீங்க.. அவன், அதான் என் பையன்.. ஒருபக்கம் இப்படிதான் பேசவே மாட்டான். ம்.. நீ அதுக்கு மேல.  கேட்கமாட்டேன்தான், ஆனால், இந்த குழந்தையை பார்க்க கொஞ்சம் கஷ்ட்டமாக இருக்கு அதான். போப்பா.. அப்பா அம்மாவையாவது கூட்டிட்டு வந்து வைச்சிக்க.. குழந்தைக்கு நீ கொடுக்கிற கவனிப்பு போதாது ப்பா.. இல்லை, பெத்தவகிட்ட விட்டுடு.” என்றுவிட்டார் கடைசியாக.

ஷிவா, அதை தப்பாக எடுக்கவில்லை.. பதிலும் சொல்லவில்லை.  காதில் வாங்கிக் கொண்டே தன்னுடைய வேலையை செய்தான்.

சொல்லுவதெல்லாம் சொல்லிவிட்டார் ஜெயாம்மா. பின் ஷ்யாமை எடுத்துக் கொண்டு பேச தொடங்கினார். ஷியாம் கொஞ்ச நேரம் அவரிடம் செல்ல சிணுங்கினான்.. பின், அடையாளம் தெரிந்ததோ என்னமோ.. விளையாடினான் அவரோடு.. என்ன! முன் போல, அவரின் கையில் அடங்கவில்லை.. தவழ்ந்து.. தத்தி.. விழுந்து.. என ஷியாம் அவரை பிஸியாக்கினான்.

இரவு உணவு வந்தது.. 

ஷிவா மகனுக்கு உணவை எடுத்து கொடுக்க ஆயுத்தமானான்.. 

ஜெயம்மா “நான் வேண்ணா.. வீட்டிலிருந்து இட்லி எடுத்து வரவா.. நான் இருக்கும் வரை வீட்டு சாப்பாடே தரேன்னே..” என்றவர் எழுந்தார்,

ஷிவா “அய்யோ வேண்டாம் ஜெயம்மா.. மது, இதை அவனுக்காகவே ஸ்பெஷல்லா ப்பிர்பர் செய்துக் கொடுப்பா.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சையில்லை.. நீங்க உட்காருங்க” என்றான்.

ஜெயம்மா ‘யாரு மது’ என கேட்க்க வந்ததை விழுங்கிக் கொண்டவர் “கொடு ஷிவா, நான் கொடுக்கிறேன்” என சொல்லி உணவை வாங்கிக் கொண்டார். நடைமுறை பழக்கமாக.. அந்த இடியாப்பாத்தையும்.. ஒரு வாய் உண்டு பார்த்தார். பருப்பு தண்ணீரில்.. காய்கறிகள் போட்டு.. கூட்டு போன்று ஒன்று சாம்’க்கு இருந்தது தொட்டுக் கொள்ள.. அதையும் ஒருவாய் உண்டு பார்த்தார்.. அவரின் வாய் தன்போல “சும்மா சொல்ல கூடாது.. பக்குவமாய் செய்திருக்காங்க  ப்பா.. ஆமாம், இதுக்கு காசு ஜாஸ்தி கொடுக்கிறியோ..” என்றார், சாம்’க்கு உணவை ஊட்டிக் கொண்டே..

ஷிவா, மகனுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்த படியே “அதெல்லாம் இல்லை, குழந்தை சாப்பாட்டுக்கு, நான் என்னான்னு காசு வாங்கன்னு சொல்லிட்டாங்க.. இதுவரை ஏதும் கொடுத்ததில்லை.. இந்த பாத்திரத்துக்கு மட்டும் காசு கொடுத்தேன்” என்றான்.

ஜெயம்மா “பரவாயில்லையே..” என்றார்.

சாம்’க்கு உணவு ஊட்டி முடித்து.. ஜெயம்மா வீடு சென்றார். நேரம் ஆகிவிட்டதால்.. ஷ்யாம்மை வீட்டிற்கு எடுத்து செல்லவில்லை. ஷியாம், ஜெயாம்மா செல்லவும் அழத் தொடங்கினான். 

ஷிவா, அப்படியே அவனை அணைத்துக் கொண்டு போய்.. பெட்டில் விட்டான் உறங்குவதற்கு. தந்தை மகன் இருவரும் சற்று நேரம் விளையாடினர்.. அடித்து பிடித்து. சாம், புதிதாக வந்திருந்த நான்கு பற்களோடு.. சிரிக்க.. சிரிக்க.. ஷிவாவிற்கு குஷியாக, விளையாட்டு நீண்டது, ஒருவழியாக மகனை சோர்வாக்கி உறங்க வைத்தான், ஷிவா.

மகனும் உறங்கிவிட ஷிவாவிற்கு.. மதுவின் நினைவுதான் வந்தது.. ‘ஏன் வந்தால் இன்று’ என தொடங்கி.. ‘அவளின் பார்வையில்.. பேச்சில்  தெரிந்த்தது என்ன’ என அவனின் யோசனை நீண்டது. மனதே சரியில்லை.. ஷிவாவிற்கு. மனது சரியில்லை எனில் அவன் அதிகம் தேடும் வஸ்துவை எடுத்தான் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து.. 

இரண்டு மணி நேரம் சென்று ஒரு ஆன்லைன் மீட்டிங் வேறு இருக்கிறது அவனுக்கு. ஆனாலும், எதையும் கருத்தில் கொள்ளாமல் அந்த திரவத்தை உள்ளே இறக்கினான். இன்னமும் அவனின் நினைவு லியோனாவையே சுற்றியது.. ஆனால், ஆங்காங்கே மதுவின் பேச்சும் சிரிப்பும் அவனுள் வந்து போகியது புதிதாய். 

ஷிவா ‘ஜெயம்மா சொல்றது போல.. அம்மாவிடம் பேசனுமோ.. தனியே இருப்பதால்.. நான் தடுமாருகிறேனா.. அந்த பெண் இயல்பாக பேசியதை நான்.. தவறாக எண்ணுகிறேனோ..’ என மேலும் மேலும் யோசனை. ஒருகட்டத்தில் அந்த ப்ரண்ட்டி முழுவதையும் தீர்த்தான் ஷிவா.. தன்னிலை மறந்து.. ஹாலிலேயே கிடந்தான்.

இரவில் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது.. எந்த அழைப்பும் இவனை நினைவுக்கு கொண்டு வரவில்லை. 

மதுவிற்கும், உறக்கம் இல்லை.. ‘எதையோ  ஷிவா மறைக்கிறார்.. அவருக்கு திருமணம் ஆகவில்லை.. சாம் அவரை கொண்டு இல்லை..’ என அவளின் ஆராய்ச்சி சென்றது. எனவே, உறக்கமில்லை.

இரண்டு நாள் சென்று, மது வந்தாள் சாம் பார்க்க. கையில் சொன்னது போலவே ஹெல்த் மிக்ஸ் எடுத்து வந்திருந்தாள்.. இந்த முறை ஐந்து மணிக்கு வந்தாள்.. சாம் அப்போதுதான் எழுந்திருப்பான் என எண்ணி வந்தாள்.

வீட்டில் சாம் இல்லை, அவனை, ஜெயம்மா எடுத்து சென்றிருந்தார். எனவே, ஷிவா மட்டும்தான் இருந்தான். கதவை திறந்ததும் மதுவை பார்த்தவன் கண்கள்.. ‘அவளை எதிர்பார்த்தேன்’ எனும் செய்தியை.. அவளுக்கு கடத்திவிட்டது போல.. மது “ஹாய்.. சாரி லேட் ஆகிடுச்சு” என்றபடி உள்ளே வந்தாள்.

ஷிவா “என்ன.. எதுக்கு சாரி” என்றான் ஒன்றுமே தெரியாதவன் போல..

மது அவனை பார்த்தாள்.. “எதுக்கு சாரின்னு தெரியாதா.. உங்களுக்கு அக்கறையே இல்லை..” என்றவள், நொடி நேரம் சென்று “பையன் மேல” என்றாள்.

ஷிவாவிற்கு அந்த பெண்ணின் மலர்ந்த முகமும்.. இந்த அதிக பேச்சும்.. பிடித்துதான் போனது.. தன்னை அறிந்தும்.. அறியாமலும்..  புன்னகைத்தான்.. தடுமாற்றம் சங்கடமென இரண்டையும் தாண்டிய புன்னகை.. அவன் உதடுகளிலும் கண்ணிலும். 

மது, அதை கண்டும் காணாதவள் போல.. “இந்தாங்க.. கஞ்சி மாவு.. இதை, ஒரு டம்ளர் தண்ணிரீல் கலந்து அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கணும்.. கெட்டியாகி.. மாவு வாசனை போனதும்.. சர்க்களை சேர்த்து ஆற வைத்து.. பால் கலந்து  கொடுக்கணும்..” என்றவள், கிட்செனிதான் அந்த பாக்’கை எடுத்து வைத்தபடியே தான் இருந்தாள். 

ஷிவாவும் அங்கேதான் நின்றிருந்தான்.. “ஐயோ! இவ்வளோ பொறுமை எனக்கு இருக்குமா தெரியலையே..” என்றான்.

மது அவனையே பார்த்தாள் “இருக்கே.. நிறைய இருக்கே உங்ககிட்ட.. தனியே கை குழந்தையை பார்க்கிற பொறுமை இருக்கே.. அதனால், இதுவும் ஈஸிதான்” என்றாள் சின்ன குரலில்தான் சொன்னாள். ஆனால் வார்த்தைகள் மென்மையாக இதமாக வருடியது அவனின் செவிகளை.

ஷிவா, மீண்டும் அவளின் பார்வையிலும் வார்த்தையிலும் கரைய தொடங்கினான்.. மூளை, ‘வேண்டாம் வேண்டாம்.. இன்னொருவரை ஏமாற்றாதே.. அவளுக்கு உன் கதை தெரிந்தால்.. வேதனைபடுவாள்.. சின்ன பெண்.. எதோ பேசுகிறாள்.. இளகாதே’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.. ஆனால், அவனின் பார்வை.. அவளை தாண்டவில்லை.

இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில்.. விலகும் எண்ணமே பிரதானம்.  ஆனால், என்னமோ, தங்களுக்கு நடுவில் நின்று செலுத்தும், அகப்படாத அந்த அர்த்தத்தை இருவரும் தேடுகின்றனர் போல.. அப்படியே நின்றனர்.

மெல்ல சுதாரித்த மது “எ..எங்க சாம்..” என்றாள்.

ஷிவா, சுதாரித்து வெளியே வந்தபடி “ப..பக்கத்து வீட்டில், ஜெயாம்மா எடுத்து போயிருக்காங்க.. இப்போதான் போனான்.. நீங்க.. நீ.. காபி குடிக்கிறியா..” என்றான்.

மது “ம்.. கொடுங்க” என்றாள்.

அன்று போலவே இன்றும்.. வீடே மணக்க மணக்க தனக்கும் அவளுக்கும் ப்ளாக்காபி போட்டான் ஷிவா.

மது தனக்கான் கப் வாங்கிக் கொண்டாள் “காபி மேகர் இருக்கு.. வேறு என்ன வைச்சிருக்கீங்க..” என்றாள்.

ஷிவா “சின்ன ஸ்டீம்மர் இருக்கு.. ஜூஸ்சர்.. ஓவென்.. டோஸ்ட்டர்.. அவ்வளவுதான்” என்றான் சிரித்துக் கொண்டு.

மது “அப்போ நீங்க குடும்பஸ்தன்தான்.. எத்தனை வருஷம் ஆகுது  கல்யாணம் ஆகி..” என்றாள். எப்படியாவது அவன் யார் என தெரிந்துக் கொள்ளும் ஆவலில்.

ஷிவா, மதுவை இமைக்காமல் பார்த்தான்.

மது அவனை பார்க்கவில்லை..

ஷிவா “ம்.. அவளை பார்த்த போதே எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சி.. சொல்ல போனால்.. நியர்.. த்ரீ இயர்ஸ்..  அவ ரொம்ப அழகு.. அவ ரொம்ப போல்ட்.. அங்க.. எனக்குன்னு யாருமில்லைன்னு பீல் செய்துகிட்டு இருந்த போது.. என்னை தேடி வந்து காதலித்தாள். எ..என்னை ராஜாவாக உணர வைத்தாள்.. நானும் அவளின் அன்பில் முழ்கினேன்.. என்னை மறந்தேன்.. அம்மா அப்பா மறந்தேன்.. என் நாடு மறந்தேன்.. நட்பு மறந்தேன்.. அவளே கதியென இருந்தேன்” என தன்னுடைய இறந்தகாலத்தை சொன்னான்.

தான், அவள் மேல் பித்தாக இருந்ததை.. ஒன்றுவிடாமல் அவளிடம் பகிர்ந்தான்.. எதையும் மறைக்கவில்லை.. அவளை கேட்க்காமல், அவளுக்கே தெரியாமல்.. அவளை கர்பமாக்கியது வரை சொன்னான்.. அவள் எப்படி தன்னை விட்டு சென்றாள்.. அவளை எங்கே கண்டான்.. எப்படி மகனோடு இங்கே வந்தான் என ஒருமணி நேரம் தன் நிலையை, அவளுக்கு சொன்னான், ஷிவா.

மது, தன்போல் வாய்மூடி கேட்டுக் கொண்டாள்.. அவனின் இறந்த காலத்தை. அவளின் மனது, ஷிவாவிற்கு எதிராகத்தான் இருந்தது. ‘இப்படி தன்னை மறந்தா ஒருவன் காதலிப்பான்..  அப்போ, கல்யாணம் ஆகாமலே குழந்தையா.. அப்போ எல்லாம் இவராக செய்தது.. அதுவும் இத்தனை வருடம் பெற்றோருடன் பேசாமலா இருப்பார்.. இங்கே வந்துவிட்டார்.. பிறகு என்ன..’ என எல்லாம், ஷிவாவிற்கு பாதகமாகத்தான் அவள் சிந்த்னையில் பதிந்தது. 

ஆனால், இந்த தவறுகள் எல்லாம் இவன்தான் செய்தான்.. என, அவன் வாய்மொழியாக சொல்லும் போதும்.. பெண் மனம், அதை ஏற்க மறுக்கிறது.. 

மது ஏதும் சொல்லாமல் அப்படியே பார்த்திருந்தாள் அவனை.. ‘அதெப்படி இருவர் நிகழ்வில்.. ஒருவர் மட்டும் பழி ஏற்பது.. இவர் ஒன்றும் ஏமாற்றவில்லையே.. இவர் திருமணத்திற்கு கேட்டார் தானே.. முறையான வாழ்வை ஏற்காதவளுக்கு.. குழந்தை வந்தாலாவது.. அதில் பிடிப்பு வரும் என எண்ணியிருப்பார்.. அதனால், முழுவதும் இவர் மேல் தவறில்லை..’ என அவளின், மூளை அடித்துக் கொண்டது அவளின் மனதிடம். அன்பு எதையும் ஏற்கும்.. காரணமே இல்லாமல். அப்படிதான் ஆனது மதுவின் நிலை. உறைந்த நிலையில் அமர்ந்திருந்தாள்.

ஷிவா, அவளை பார்த்தான்.. அவளின் நிலை கொஞ்சம் புரிய.. அவள் யோசிக்கட்டும் என எண்ணி, மகனை அழைத்துவர சென்றான்.

சற்று நேரத்தில் மகனை அழைத்து வந்தான். மது கையில் தண்ணீரோடு அமர்ந்திருந்தாள்.. சாம், மதுவை பார்த்ததும் கைகால்களை உதைத்துக் கொண்டு.. அவளிடம் தாவி.. அவளை முத்தமிட்டு.. கடித்து தன் சந்தோஷத்தை.. வெளிப்படுத்தினான் குழந்தை.

ஷிவா “மது ஓகே வா.. டேய்.. சாம்…” என்றான் இருவரையும் பார்த்து.

மதுவும் எல்லாம் மறந்து சிரித்தபடியே “ம்.. ஷிவா… என்னை ரொம்ப தேடியிருக்கான் போல..” என சொல்லி குழந்தையோடு விளையாடினாள் பெண்.

சற்று நேரம் ஏதும் பேசவில்லை ஷிவா. அவர்கள் இருவரையும் தனியே விட்டு.. தான் அறைக்குள் சென்றுவிட்டான்.

நன்றாக விளையாட தொடங்கினான் சாம். மதுவும்..”சாம் காணோம்.. பிடி” என அவனுக்கு புது விளையாட்டுகள் சொல்லிக் கொடுத்தாள்.. நேரம் சென்றது.

ஷிவா, இப்போது வெளியே வந்து.. பிரட் எடுத்து ரோஸ்ட் செய்ய தொடங்கினான்.. கொஞ்சமாக பாக்கெட் சூப் பவுடர்  கொண்டு சூப் செய்தான்.. இது எல்லாம் மதுவின் பார்வையில் பட்டது.. எதையும் அவள் கண்டுக்கொள்ளவில்லை.. சாம்’மோடு விளையாட்டில் எதையோ தொலைக்கவும்.. தேடவும் செய்துக் கொண்டிருந்தாள் பெண்.

ஷிவா, தான் செய்தவைகளை கொண்டு வந்தான்.. ஷிவா ”மது.. ஸ்னாக்ஸ் டைம்.. உங்க அளவுக்கு இருக்காது.. ஜஸ்ட் டைம் பாஸ்க்கு” என சொல்லி அவளிடம் சின்ன கப்பும்.. தட்டும் நீட்டினான்.

மது மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.. குழந்தைக்கு என.. ஷிவா, கொடுத்த.. ஆப்பிள் ஜூஸ்சை, சாம்க்கு கொடுத்தாள், பெண்.

பின் தான் உண்டாள்.. ரசித்து உண்டாள் “நல்லா இருக்கு எல்லாமே.. தேங்க்ஸ் ஷிவா..” என்றாள், அந்த பாத்திரங்களை தேய்த்தபடியே.. 

ஷிவா, சாம்’க்கு முகம் கழுவி.. அவனின் உடையை மாற்றிக் கொண்டே.. மதுவின் மேலொரு கண் வைத்திருந்தான். அவள் சொன்னதை கேட்டுக் கொண்டான் பதில் பேசவில்லை.

மது “சரி, சாம் நான் டாடா… பை..” என சொல்லிக் கொண்டே அவனை வாங்க கை நீட்டினாள்..

ஷிவா குழந்தையை அழகாக அவளிடம் கொடுத்தான்.. எங்கும் சலனமே இல்லை அவனிடம்.. ஆனால், மது அவனை கவனித்தாள் சலனத்தோடு.. அழகாக தூக்கி கொடுத்தான் சாம்’மை.. விரல் நுனி கூட அவள் மேல்படவில்லை. மது, மெச்சிக் கொண்டாள் அவனை.. ‘நீ அவ்வளோ கெட்டவனில்லை’ என.

சாம் அவளின் ஜிமிக்கியோடு விளையாடினான்.. மது காதுகளை பிடித்துக் கொண்டு “போதும் டா.. வலிக்கிறது” என செல்ல அழுகையில் சொல்ல..

சாம் சிரித்தான் அழகாக..

ஷிவா “டாக்ஸி புக் செய்யறேன்..” என்றான்.

மது “ம்..” என்றாள்.

ஷிவாவிற்கு, அவளொரு வார்த்தை கூட தன்னிடம் பேசாதது என்னமோ போல இருந்தது.. அமைதியாக டாக்ஸி புக் செய்தான்.

டாக்ஸி வரவும் “கிளம்பு மது..” என்றான்.

சாம் அழ அழ.. மது கிளம்பினாள். 

ஷிவாவிடம் குழந்தையை கொடுத்தாள்.. இந்த முறையும்.. சாம்மின் இடுப்பிள் கை வைத்து அலேக்காக தூக்கிக் கொண்டான் ஷிவா.

பின், மகன் அழவும்.. அவளோடு லிப்ட் வரை நடந்தபடியே வந்தான்.. “என்ன மது, இந்த பையனோட அப்பா.. ரொம்ப கொடுமைகாரன் தானே.. அதான் இந்த தனிமைவசம்.. நீ என் கல்யாணம் பத்தி பேசவும், சொல்லிட்டேன்.. உன்னை டிஸ்ட்ரப் பண்ணனும்ன்னு சொல்லலை.. ம்..” என்றான், சமாதனாமாக.

மது “இல்ல.. இல்ல.. பரவாயில்லை..” என்றவள். “பை ஷிவா” என விடை பெற்று கிளம்பினாள்..

மதுவின், மனது அடக்கிய அழுகையில் விம்மியது.. அவனை குற்றவாளி என விலகவும் முடியவில்லை. நீ ஒன்றும் செய்யவில்லை என ஆறுதலும் சொல்ல முடியவில்லை.. லிப்ட் வரை.. உடன் வந்தவனை ஏறிட்டும் பார்க்காமல் வந்தவள், காரில் அமர்ந்து விம்ம தொடங்கினாள்.

ஷிவாவிற்கோ, பெரிய குழப்பம்.. அவள் ஏன் நெருங்குகிறாள் என கணிக்க முடிந்தவன்.. தன் நிலையை சொல்லி.. நான் நல்லவனில்லை என காட்டும் எண்ணம்தான் அவனுக்கு. ஆனால், அப்படி தானே காட்டிய அந்த பிம்பத்தில்.. அவளின் சோர்வான முகமும்.. பேச்சில்லா நேரமும்.. பிரதிபலிக்க.. அவனை என்னமோ செய்தது இந்த நிலை. எதோ ஒரு தவிப்பு.. தவறுதான்.. தான் எதற்கும் ஆசைப்பட கூடாதுதான்.. தெரிகிறது. ஆனால், மனம் எனும் விலங்குக்கு.. தெரியவில்லையே அது. தவிக்கிறான்.

“எங்கயோ போ..

நான் தொலைந்தேனோ 

தெரியாதே.. 

இப்போ அங்கே இனி

நான் போக முடியாதே..

தேவை மட்டும்  உன் 

உறவென்று மனம் சொல்லுதே..”

Advertisement