Advertisement

ஷிவா “ம்.. உங்களுக்கு எல்லாம் பாக்கெட் பால் குடிச்சி பழக்கமாகிடுச்சி… அதான், இது பிடிக்களை.. நல்லா இருக்கும் மது” என்றான்.

மது கையை கட்டிக் கொண்டு நின்றாள் சுவரின் ஓரம்.. கண்கள் அவனேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.. ஷிவா பேசவும்.. “இல்ல, அப்படியே பால் பவுடர் சாப்பிடுவேன்.. காபின்னா, ஆவின்தான் வேணும்..” என்றாள்.

ஷிவா “பயங்கர டேஸ்ட்டுங்க உங்களுக்கு..” என சொல்லி, ஒரு காபியை அவளிடம் நீட்டினான். காபின் மணம் நாசி வழி நுழைந்தது.. காபி மணம் புத்துணர்ச்சி தரும்.. மதுவிற்கும் அப்படியே.. முன்பிருந்த தயக்கம் தடுமாற்றம் ஏதும் இல்லை.

மது “உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்.. உண்மையா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா.. உங்க பையனா.. சாம்” என்றாள்.

ஷிவா திணறி போய் நின்றான்.. அவனின் நிறத்தை வைத்து இப்படி கேட்க்கிறாள் என அவனுக்கு புரிகிறது.. எனவே “ஏன் ரொம்ப அழகா இருக்கானா.. அதான் நம்பவில்லையா நீங்க” என்றான்.. கொஞ்சம் இலகுவான குரலில்.

மது “பாலாஜியே.. என்னை, வா போன்னு சொல்றார்.. நீங்களும் அப்படியே கூப்பிடுங்க” என்றாள்.. காபியை பருகியபடியே..

ஷிவா ஒரு நிமிடம் ஊன்று பார்த்தான் மதுவை.. மது நிமிரவில்லை.

ஷிவா “ம்.. என் தங்கையும் இப்படிதான் இருப்பாள்..” என்றான்.

மது சிரித்தாள்.. ஷிவாவை பார்த்து. ஷிவா அந்த சிரிப்பில்.. தான் தவறு செய்ததாக உணர்ந்தான்.. இல்லை,உணர்த்தினாளா தெரியாது. ஷிவாவின், முகத்தில் ஒரு மாற்றம் வந்தது.. எதும் பேசாமல் அப்படியே மதுவை பார்த்தான்.

மது “ஒன்னு சொல்லுவேன் தப்பாக எடுக்க கூடாது. உங்களை சுற்றி எந்த உறவும் இல்லை, என்னை தங்கைன்னு சொல்லி நானும் இல்லாமல்.. இல்ல, என்னுடைய பிரெண்ட்ஷிப்பும் இல்லாமல் போகிட போது..” என்றாள் வெடுக்கென.

ஷிவாவின் முகம் பயம் கொண்டது.. கோவத்திற்கு பதில். ஏதும் பேசாமல் இருந்தான்.

மது “இல்லங்க.. அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க ஷிவா.. இப்படி ப்ரெண்ட் மாதிரி கூப்பிடுங்க.. அப்படின்னு சொன்னேன்.. உறவு எல்லாம் வேண்டாம். ம்..” என்றாள் சமாதானமாக.

ஷிவா அமைதியாகவே இருந்தான்.

இருவரும் காபியை பருகினர்.

மது “பாலாஜி சர்க்கு குழந்தை பிறந்துடுச்சா..” என்றாள்.

ஷிவா “அஹ..” என நிமிர்ந்து அமர்ந்தான் “இல்லை, இன்னிக்கு இல்லை, நாளைக்குள்ள நடந்திடும்.. அவன் ரொம்ப டென்ஷனா இருக்கான் போல.. பேசியே கொல்றான்..” என்றான் .

மது “நீங்க ரிலாக்ஸ் ஆகிட்டீங்களா.. நான் சொன்னதிலேதும் கோவமில்லையே” என்றாள்.

ஷிவா ஜீவனில்லாமல் சிரித்தான் “இல்லை.. நீங்க சொல்றது சரிதான்.. உறவு எனக்கு அமையாது போல..” என சொல்லி, காபி கப்போடு கிட்சேன் சென்றான்.

மதுவிற்கு மனது முழுவதும் நெருடல்தான்.. ஆனால், அவன் தங்கை என அழைப்பதற்கு.. இது எவ்வளவோ மேல் என எண்ணிக் கொண்டு.. அங்கேயே அமர்ந்திருந்தாள்.. பதிலேதும் சொல்லாமல்.

ஷிவா வெளியே வந்தான் “சாரி.. “ என்றாள்.

ஷிவா “விடுங்க மது.. என் தங்கைக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்கு.. நீ, அவளை விட சின்னவளாகதான் இருப்ப.., அதனால்.. நோ ப்ரோப்லம்.. எப்படி கூப்பிட்டால் என்ன..” என்றான்.

மது “ம்.. அதுதானே. மதுன்னு கூப்பிடுங்க போதும். சாம் ரொம்ப இளைச்சு போயிட்டான்.. நான் அவனுக்கு சத்து மாவு கஞ்சி செய்து தரேன்.. நீங்க பே செய்துடுங்க..” என்றாள் வியாபாரியாக.

ஷிவா சிரித்தான் “கண்டிப்பா செய்திடுறேன்.. நீங்க அக்கறையா சொன்னதே போதும்.. எவ்வளோ ஆகும் சொல்லுங்க கொடுத்திடலாம்” என்றான்.

மது “கம்மியாதான் வரும் கேட்டு சொல்றேன்..” என்றாள்.

ஷிவா லாப் எடுத்து அமர்ந்தான்.

மது யோசனையாக “நீங்க.. உண்மையாகவே மேரீடா..” என்றாள், பட்டென. கேட்டுவிட்டவளுக்கு அவளை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லை.. கீழே குனிந்துக் கொண்டாள்.

ஷிவா நிமிர்ந்து பார்த்தான் “என்னை பொருத்தவரை நான் திருமணம் ஆனவன்.. குடும்பஸ்தன்” என்றான், தெளிவாக.

இந்த பதிலில், மது, அவனை வெறித்து பார்த்தாள். மனதில் மீண்டும் என் விருப்பம் தப்பாகுமோ என எண்ணம் வந்தது.. தெளிவாக இருந்த மனம் மீண்டும் குழம்பியது, அவளுக்கு.

ஷிவா பேசினான் “மனது விரும்பிவிட்டால்.. நமக்கெல்லாம் திருமணம் முடிந்ததாக தானே தோணும்.” என்றான் ஒரு பெருமூச்சு விட்டு.

மதுவிற்கு இப்போது தோன்றியது ‘அப்போது கல்யாணம் நடக்கலையோ..’ என. மது அவனையே பார்த்திருந்தாள்.. ஷிவா எதோ சொல்ல வாயெடுத்தான். சாம் அழத் தொடங்கினான்.

மது எழுந்தாள்.. ஷிவா அப்படியே அமர்ந்திருந்தான்.

மது, உள்ளே செல்ல.. கட்டிலில் எழுந்து அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தான். மதுவை பார்த்ததும்.. அழுகையை நிருத்தி புன்னகைத்தான். மது “சாம்குட்டி… வாங்க..” என சொல்லி வாரி எடுத்துக் கொண்டாள்.

ஷிவா, லியோனாவின் நினைவில் அமர்ந்திருந்தான். 

இப்போது மது சாம்’மை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்று.. அவனின் ஹக்கீஸ் நீக்கி.. இடுப்பு வரை தண்ணீர் ஊற்றி கழுவிட்டு.. அவனின் முகம் கழுவி.. கூட்டி வந்தாள் ஹாலுக்கு.

ஷிவா அப்படியே லாப்பில் அமர்ந்திருக்கவும். தானே கிட்சென் சென்றாள்.. வெந்நீர் வைத்து அந்த பால்பவுடர்.. சர்க்கரை.. சேர்த்து எடுத்து வந்தாள்.. அவனின் பாட்டில் தேடினாள்.. சட்டென அவளின் கண்ணில் படவில்லை. மது “ஷிவா பாட்டில் எங்கே” என்றாள்.

ஷிவா அமர்ந்திருந்தாலும்.. மதுவை சுற்றியே அவனின் பார்வை இருந்தது.. ஆனால், சிந்தனை வேறிடத்தில்.. எனவே, அவள் கேட்க்கவும்தான் நினைவு வந்தவன்.. எழுந்து வந்தான்.. மேலே உள்ள ராக்கில் பாட்டில் இருக்க.. எடுத்து, மதுவிடம் கொடுத்தான். மீண்டும் வந்து தன்னிடத்தில் அமர்ந்துக் கொண்டான்.

மது பாலை பொறுமையாக ஆற வைத்து.. பாட்டிலில் நிரப்பி எடுத்து வந்தாள்.. சாம் கீழேதான் அமர்ந்திருந்தான்.

சாமிற்கு புகட்ட தொடங்கினாள் மது.

ஷிவா, லியோனாவை காதலித்த போது.. இதெல்லாம் அவனின் கனவு காட்சிகள்.. என்ன மதுவிற்கு பதில் அந்த இடத்தில் லியோனா இருந்தாள், அவ்வளவுதான் வேறுபாடு. 

அது அப்படி இல்லை.. அவ்வளவும் வேறுபாடு ஆகிற்றே.. கனவில் என்ன வேண்டுமானாலும் காணலாம்.. ஆனால், இங்கே நடப்பது நிஜம். அந்த நிஜம் அவனை ஸ்தம்பிக்க செய்துக் கொண்டிருக்கிறது.

அவனால் எதையும் ஏற்கவும் முடியவில்லை.. விளக்கவும் முடியவில்லை.. கனவுகள் கண்முன்னே நடக்கிறது.. யாரோ ஒரு பெண்.. இதுவரை.. நான் கண்டே இராத பெண்.. நிற்கிறாள், அந்த இடத்தில். இவள் ஏன் இங்கு வந்தாள்.. எதற்காக இவனிற்கு எல்லாம் செய்கிறாள்.. என அவனின் மூளை கேள்விக் கேட்டுத் தொடங்கியது.

ஷிவா, எதோ படத்தின் காட்சியை பார்ப்பது போல சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தவன், தன்னிலை உணர்ந்தான். அவனின் மனது எதோ தவறு செய்வதாக உணர்ந்தது.. “மது..” என்றான்.

அந்த குரல் அவன் காதிலேயே விழவில்லை.. மது நிமிரவில்லை. இப்போது சத்தமாக அழைத்தான்.. “மது” என.

மது நிமிர்ந்தாள் .

ஷிவா “போதும்.. நா..நான் கொடுக்கிறேன்.. நீங்க.. நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சு கிளம்பு.. வீட்டில் தேடுவங்கல்ல” என்றான்.

மது “இதோ குடிச்சிட்டான்.. இன்னொரு பத்து நிமிஷம்” என்றாள், ஷிவாவை பார்க்காமல்.

ஷிவா என்ன செய்தவது என பார்த்து நின்றான்.

சாம்.. பால் குடித்து முடித்து, மதுவின் மடியிலிருந்து கீழே இறங்கினான்.. இப்போது எழுந்து நின்று நடக்க பழகிக் கொண்டிருக்கிறான்.. எனவே விளையாட தொடங்கினான்.

மதுவிற்கு, அப்படி உடனே செல்ல மனதில்லை போல.. அவனின் விரல் பிடித்து இரண்டு அடி எடுத்து வைக்க செய்தாள் பெண்.. அவன் அப்படி நடந்ததும்.. மது கை தட்டி ஆரவாரம் செய்ய.. எதோ சாதித்த புன்னகையோடு தன் தந்தையை பார்த்து சிரித்தான் சாம்.

ஷிவா தன் மகனை பார்த்து புன்னகைத்தான்.. மீண்டும் மதுவிடம் “மது கிளம்பு” என்றான், வேண்டுதலாக.

மது யோசனையோடு பார்த்தாள் ஷிவாவை. ஷிவா, மதுவை பார்க்கவில்லை.. தடுமாறினான்.

மதுவிற்கு என்னமோ போலானது ”நாளைக்கு வரேன் சாம்குட்டி” என அவனை முத்தமிட்டு, “வரேன் ஷிவா” என சொல்லி கிளம்பினாள் பெண். 

ஷிவா மனது கேட்க்காமல் “இரு, மது டாக்ஸி புக் செய்யறேன்..” என்றான்.

மதுவின் முகம் நிம்மதியை காட்டியது.. எதோ புரிந்த சந்தோஷம் அவளிடம் வந்து அமர்ந்துக் கொண்டது. 

சாம்’மை கையில் எடுத்துக் கொண்டாள்.. அவனோடு “நான் சத்து மாவு கஞ்சி எடுத்துட்டு வரேன் சாம்.. நீ இன்னும் நல்லா ஆக்கிடுவ அதை குடிச்சா” என பேச தொடங்கினாள்.

டாக்ஸி வர.. மது வாய் பேசாமல் ஷிவாவிடம் கண்ணால் விடைபெற்றாள்.. அவனும், அவனை அறியாமல் அவளின் கண்களை பார்த்தான்.. அவள் தலையசைக்கவும்.. ஷிவாவின் தலை, தன்போல அசைந்தது.. தன்னையே நொந்துக் கொண்டு.. கீழே பார்த்தான் ஷிவா.

ஷிவா, அவள் கிளம்பியதும், சோபாவில் விட்டத்தை பார்த்து சாய்ந்துக் கொண்டான் ‘என்ன நடக்கிறது..’ என ஓடியது அவனின் மனதில்.

மதுவிற்கு, காரில் செல்ல செல்ல.. அவசரமாக தன்னை வெளியே அனுப்பிய ஷிவாவையே எண்ணிக் கொண்டிருந்தாள். 

“யாரோ மனதிலே

ஏனோ கனவிலே

நீயா உயிரிலே..

தீயா தெரியலே..

காற்று வந்து மூங்கில் 

என்னை பாட சொல்கின்றதே..

மூங்கிலுக்குள் காற்று இல்லை.. 

ஊமை ஆகின்றதோ..”

Advertisement