Advertisement

அன்று அபிசாராவை சென்னைக்கு வரச் சொன்ன ப்ரனேஷ், அடுத்த நாள் தனது மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் புகழ்வேந்தனை கைபேசியில் அழைத்தார்.
புகழ்வேந்தன் அழைப்பை எடுத்ததும், ப்ரனேஷ், “குட் மார்னிங்… நான் டாக்டர் ப்ரனேஷ் உங்க பொண்ணு ஆதிராவோட பிரெண்ட் அனன்யாவோட அப்பா” என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள,
புகழ்வேந்தன் மென்னகையுடன், “அண்ட் எங்க வீட்டு மருமக அபிசாராவோட அப்பா” என்றதும்,
ப்ரனேஷ் சிறு அதிர்ச்சியுடன், “நீங்க… இப்போ என்ன சொன்னீங்க?” என்று தெளிவு படுத்திக்கொள்ள கேட்க,
புகழ்வேந்தன், “நீங்க சரியா தான் கேட்டீங்க… இதை பற்றி பேச தான் உங்களை பார்க்க உங்க ஹாஸ்பிடல் வந்திருக்கிறேன்… இப்போ தான் உள்ளே நுழையிறேன்” 
“ஒன் மினிட் ரிசெப்ஷனில் இருங்க… நான் வரேன்” என்றபடி தனது அறையை விட்டு வெளியே வந்தார்.
“நோ பார்மாலிட்டீஸ்… உங்க ரூம் சொல்லுங்க… நானே வரேன்” 
“இதோ வந்துட்டேன்… ஜஸ்ட் பியூ செகண்ட்ஸ்” 
“ஓகே” என்றபடி புகழ்வேந்தன் அழைப்பைத் துண்டிக்க, சொன்னது போல் சில நொடிகளில் ப்ரனேஷ் அங்கே வந்தார்.
ப்ரனேஷ் வந்த வேகத்தில் மருத்துவமனை ஊழியர்களிடம் சிறு பரபரப்பு எழ, அதை கண்டுக் கொள்ளாதவர், “வாங்க… என்னோட ரூமுக்கு போய் பேசலாம்” என்றபடி புகழ்வேந்தனை அழைத்துச் சென்றார்.
இருவரும் அறையினுள் சென்று அமர்ந்ததும், புகழ்வேந்தன், “வெல்… நீங்களும் அபிசாரா மதிவர்மன் பற்றி பேசத் தான் எனக்கு காள் பண்ணி இருப்பீங்கனு நினைக்கிறேன்” 
“ஆமா… மதிவர்மன் சொல்லி தான் நீங்க வந்தீங்களா?” 
“வர்மா சொல்லி வரதா இருந்திருந்தால், நான் உங்க வீட்டிற்குத் தான் வந்திருப்பேன்” 
“ஓ” 
“வெல் மிஸ்டர் ப்ரனேஷ்… நம்ம பசங்க தான் மூடி மறைக்கிறாங்க, நாம ஓப்பன்னா பேசலாம்னு நினைக்கிறேன்” 
“கண்டிப்பா… அண்ட் இந்த மிஸ்டர் வேணாம்… ஜஸ்ட் ப்ரனேஷ் போதும்” 
புகழ்வேந்தன் மென்னகையுடன், “பைன்… நீங்களும் என்னை புகழ்னே கூப்பிடுங்க” 
ப்ரனேஷும் மென்னகையுடன், “ஓகே… இப்போ உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க” 
புகழ்வேந்தன், “நான் என்னோட யூகத்தில் தான் இங்கே வந்தேன்… பொதுவா வர்மா யாருடனும் சட்டுன்னு பழகிட மாட்டான், ஆனா பழகினவங்க கூட கலகலப்பா இருப்பான்… ஆனா கடந்த நாலு வருஷமா அவன் கலகலப்பா இருந்ததை எண்ணி எடுத்திடலாம், அவ்ளோ இறுகி போய்ட்டான்… எப்போதுமே வர்மா கிட்ட இருந்து விஷயத்தை வாங்கவே முடியாது… அவனா சொல்ல நினைத்தால் மட்டுமே அவன் கிட்ட இருந்து விஷயத்தை தெரிஞ்சுக்க முடியும்… அவன் பிரெண்ட் கிட்ட கொஞ்சம் விசாரிச்சேன்… நான் யூகித்தது வர்மாவும் அபியும் விரும்பி இருக்கணும், நாலு வருஷத்துக்கு முன்னாடி அவங்களுக்குள் ஏதோ சண்டை வந்து பிரிஞ்சு இருக்கணும்… அபி கிட்ட கல்யாணத்தை பத்தி பேசி இருக்கிறீங்களா? அபி என்ன சொல்றா?” 
“நீங்க சொன்னது சரி… அவங்களுக்குள்ள என்ன சண்டைனு எனக்கு தெரியாது, ஆனா தப்பு அபி பக்கம் தான் இருக்கும்…” என்று ஆரம்பித்து தனக்கு தெரிந்ததை சொன்ன ப்ரனேஷ் இறுதியாக, “அபி மதிவர்மன் நடுவில் இருக்கும் பிரச்சனை வேணா நான் யூகித்ததா இருக்கலாம் ஆனா அவங்க விரும்புறாங்கனு நான் நூறு சதவிதம் உறுதியாவே சொல்வேன்…” 
“ஸோ நீங்க சொல்றதை வைத்து பார்க்கும் போது, அபி வேணும்னே வர்மாவை விலக்க ஏதோ பேசி இருக்கணும்” 
“ஹ்ம்ம்” என்று ப்ரனேஷின் குரல் சுருதி இறங்கி வந்தது.
பின் ப்ரனேஷ் சிறு தவிப்புடன், “இதனால் அபி மேல் கோபப்பட்டு…” என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுதே புகழ்வேந்தன், “அபி தான் எங்க வீட்டு மருமகள்… அதில் எந்த மாற்றமும் இல்லை… அபியோட அப்போதைய மனநிலையை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது, ஆனா வர்மா!!!” என்று நிறுத்தியவர் ஒரு நொடி இடைவேளையின் பின், “வர்மாவை பொறுத்தவரை எப்போதுமே தப்புக்கு தண்டனை தான்… தப்பை மன்னிக்கவே மாட்டான்… பட்…” என்று சிறு பெருமூச்சை வெளியிட்டவர், “பார்க்கலாம்… காதல் சிலதுக்கு அப்பாற்பட்டது… அபி மேல் அவன் கொண்டுள்ள காதல் அவன் மனதை மாற்றும்னு நம்புவோம்” 
“ஹ்ம்ம்… அபி தைரியமான கலகலப்பான பொண்ணு… அதே நேரத்தில் சென்சிடிவ்வும் கூட… இந்த விஷயத்தை பத்தி நான் அபி கிட்ட இதுவரை பேசலை. எனக்கு அவளோட காதல் பத்தி தெரியும்னு கூட அவளுக்கு தெரியாது… நேரில் பேசிக்கலாம்னு இதுவரை பேசலை… அபி இப்போ…” என்ற ப்ரனேஷின் பேச்சை இடையிட்ட புகழ்வேந்தன், “திருநெல்வேலியில் இருக்கும் உங்க தம்பி சர்வேஷ் வீட்டில் இருக்கிறாள். அவரோட இன்ஜினியரிங் காலேஜ்ஜில் வேலை பார்க்கிறா… போன வாரம் தான் பிஹெச்டி முடிச்சு இருக்கிறா” என்றார். 
ப்ரனேஷ் ஆச்சரியத்துடன் பார்க்க, புகழ்வேந்தன் மென்னகையுடன், “என்னோட யூகங்கள் இதுவரை தப்பானது இல்லை… அதான் எங்க வீட்டு மருமகளை பத்தி கொஞ்சம் விசாரிச்சேன்…” 
ப்ரனேஷ் மென்னகையுடன், “கொஞ்சம் விசாரிச்சதுக்கே இப்படி பிட்டு பிட்டு வைக்கிறீங்க!” 
புகழ்வேந்தன் அதே புன்னகையுடன், “அபி பிஹெச்டி முடிஞ்சதும் உங்க கிட்ட பேச வந்தேன்” 
“ஹ்ம்ம்.. நீங்க என்ன பிளானில் இருக்கிறீங்க?” 
“நீங்க…” என்று ஆரம்பித்த புகழ்வேந்தன், “இந்த ‘ங்க’ வேணாமே! எப்படியும் மோர் ஆர் லெஸ் சேம் ஏஜ் தான் இருக்கும்… பிரெண்ட்லியா பேசிக்கலாமே!” 
“அது” என்று ப்ரனேஷ் சற்று தயங்க,
“பையனோட அப்பானா ரெண்டு கொம்பா முழைச்சு இருக்குது! கம்மான் ப்ரனேஷ்… லெட்ஸ் பி பிரெண்ட்லி” என்று புகழ்வேந்தன் கூறவும், ப்ரனேஷ் விரிந்த புன்னகையுடன், “ஓகே” என்றார்.
புகழ்வேந்தன், “அபி வர்மா பத்தி வீட்டில் பேசிட்டியா?” 
“இல்லை… என் மனைவி அபி விஷயத்தில் ரொம்ப சென்சிடிவ்… அபி சென்னை வந்ததுக்கு அப்பறம் சொல்லிக்கலாம்னு நினைச்சேன்… பட் என்னோட அப்பாக்கு விஷயம் தெரியும்… என்னை மாதிரி அப்பாவும் கெஸ் பண்ணி என்கிட்ட கேட்டாங்க..” 
“நானும் இன்னும் வீட்டில் பேசலை… என் மனைவி கிட்ட இன்னைக்கு பேசிடுவேன்… மே பீ என்னை மாதிரி ராணியும் கெஸ் பண்ணி இருக்கலாம்… எங்க பரென்ட்ஸ் கிட்ட அபி வந்ததுக்கு அப்பறம் சொல்லிக்கலாம்” என்றவர், “எங்க பாமிலி பத்தி சொல்லலையே!”
“அனு சொல்லி இருக்கிறா” 
“இருந்தாலும் நானும் சொல்லிடுறேன்” என்று ஆரம்பித்து தனது குடும்பத்தை பற்றி சுருக்கமாக கூற, ப்ரனேஷும் அவர் குடும்பத்தை பத்தி சுருக்கமாக கூறினார்.
பின் புகழ்வேந்தன், “அபி எப்போ சென்னை வரா?” 
“நாலு மாசம் ஆகும்” 
“வர்மா ஆரம்பிக்கப் போற பொட்டிக் அதுக்குள்ள சக்செஸ்புல்லா ரீச் ஆகிடும்… அபி வந்ததும் ஜஸ்ட் சின்னதா ஒரு மீட் வச்சிக்கலாம்… தென் கல்யாணம் பிக்ஸ் பண்ணிடலாம்” 
“ஈஸியா சொல்றீங்க” 
“சொல்ற!” என்று புகழ்வேந்தன் திருத்த, ப்ரனேஷ் மென்னகையுடன், “சரி… சொல்ற… பட் அதை நடைமுறை படுத்துறது ஈஸினு தோணலை” 
“பார்த்துக்கலாம்” 
“வர்மாக்கு கோபம் அதிகமா வருமோ?” என்று ஒரு தந்தையாக மகளை நினைத்து ப்ரனேஷ் வினவ,
புகழ்வேந்தன், “அவன் கோபம் நியாயமானதா இருக்கும்” என்றார்.
சிறு பெருமூச்சை வெளியிட்ட ப்ரனேஷ், “ஹ்ம்ம்… பார்க்கலாம்” 
“இந்த நாலு வருஷ பிரிவும், அவங்களோட காதலும் அவங்களை கல்யாணத்தில் இணைக்கும்…” 
“கல்யாணம் முடிவில்லை… அது தான் வாழ்க்கையின் தொடக்கம்” 
“கண்டிப்பா அவங்க வாழ்க்கை நல்லா இருக்கும்… கவலைப்படாத” 
ப்ரனேஷ் மென்னகையுடன், “எனக்கும் அபி, வர்மா மேல் நம்பிக்கை இருக்குது” என்றவர் இண்டர்காம் எடுத்து இரண்டு பழச்சாறு கொண்டு வர சொன்னார்.
அதன் பிறகு சிறிது நேரம் பொதுவான விஷயங்கள் பேசி, பழச்சாறு அருந்திவிட்டு புகழ்வேந்தன் கிளம்பினார்.
ப்ரனேஷ் தந்தையை கைபேசியில் அழைத்து புகழ்வேந்தனுடன் பேசியதை பற்றி கூறினார்.
வீட்டிற்கு சென்ற புகழ்வேந்தன் தனிமையில் மித்ராணியிடம், “ராணி வர்மா கல்யாணம் பற்றி பேசணும்” என்றார்.
மித்ராணி, “நாம பேசி என்ன பண்ண! அவன் சம்மதிக்கணுமே!” 
“அவன் கல்யாணத்தை மறுக்க காரணம் என்னவா இருக்கும்னு நினைக்கிற?” என்று அழுத்தமான பார்வையுடன் வினவ,
மித்ராணி, “இந்நேரம் நீயும் கெஸ் பண்ணி இருப்ப!” 
“வெளிப்படையா பேசலாம் ராணி” 
“அபிசாரா” 
“ஹ்ம்ம்… நான் இப்போ அபியோட அப்பா கிட்ட பேசிட்டு தான் வரேன்” 
மித்ராணி அவரை முறைக்க, புகழ்வேந்தன், “அடுத்த முறை கண்டிப்பா உன்னை கூட்டிட்டு போறேன்… வர்மா அபியை விரும்புறதை நீ எப்படி கண்டு பிடிச்ச?” 
“என் மகனை எனக்கு தெரியாதா! நாலு வருஷத்துக்கு முன்னாடியே அவன் முகத்தை வச்சே கண்டுபிடிச்சுட்டேன்… நான், வர்மா, ஆதி மூணு பேரும் ஷாப்பிங் போயிருந்தப்ப மாலில் அபியும் அனுவும் வந்திருந்தாங்க… அப்போ வர்மாவோட பார்வையை வச்சு கண்டு பிடிச்சேன்… நீ?” 
“நானும் நாலு வருஷத்துக்கு முன்னாடி கெஸ் பண்ணேன் பட் அவங்க பிரிஞ்சதுக்கு அப்பறம் தான் கெஸ் பண்ணேன்… டின்னர் டைம் ஆதி அபி ஊருக்கு போய்ட்டதால அனு அப்செட்னு சொன்னப்ப வர்மா முகத்தில் அப்படி ஒரு இறுக்கம் வந்துது அண்ட் பாதி சாப்பாட்டில் எந்திருச்சு போய்ட்டான்… அப்பறம் சஞ்சய் கிட்ட பேச்சின் நடுவில் அனுவோட அக்கா பெயர் என்னனு மறந்துட்டேன்னு சொன்னதும் அவன் அபிசாரா னு சொன்னான்… ‘உனக்கு எப்படி தெரியும்?’ னு கேட்டதும் ‘வர்மா சொன்னான்’ னு சொன்னான். நான் ‘வர்மாக்கு அனு அக்காவை தெரியுமா?’ னு கேட்டதும் ‘இல்லை அங்கிள்… அது ஆதி வர்மா கிட்ட சொன்னப்ப கவனிச்சதை வச்சு சொன்னேன்’ னு சமாளிச்சான்… அதுக்கு அப்பறமும் சஞ்சய் கிட்ட வேணும்னே தெரியாதமாதிரி வர்மா யாரை லவ் பண்றான்? என்ன பிரச்சனை? னு நிறைய கேள்விகள் நிறைய முறை கேட்டிருக்கிறேன்… அவன் வர்மா கிட்ட ஏதாவது உளறி வர்மா என் கிட்ட பேசுறானானு பார்க்க நினைத்தேன் பட் இன்னையவரை வர்மா இதை பத்தி பேசவே இல்லை… ஒன்னு சஞ்சய் இதை பத்தி வர்மா கிட்ட சொல்லி இருக்க மாட்டான் இல்லை வர்மா நம்ம கிட்ட பேச விரும்பலை” 
“ஹ்ம்ம்… இப்போ என்ன திடீர்னு அபி அப்பாவை போய் பார்த்து பேசிட்டு வந்திருக்க?” 
“வர்மாக்கு வயசு ஏறுதே!” 
“அது இந்த நாலு வருஷமா தெரியலையா?” 
“நீ ஏன் அமைதியா இருந்த?” 
“சரி விடு” 
“கேட்ட கேள்விக்கு பதில்” 
மித்ராணி முறைப்புடன், “வர்மா சின்ன குழந்தை இல்லை… அவன் வாழ்க்கையை அவனே சரி செய்வான்னு நினைத்தேன்” 
“ஹ்ம்ம்… அந்த நம்பிக்கையில் தான் கல்யாணம் பேசிட்டு வந்திருக்கிறேன்” 
“வாட்!” 
“கல்யாண நாள்-லாம் குறிக்கலை” என்று புகழ்வேந்தன் உதட்டோர சிரிப்புடன் கூற,
மித்ராணி முறைப்புடன், “ஏன்! அதையும் செய்திருக்க வேண்டியது தானே!” என்று காரமாக கூற,
புகழ்வேந்தன் மென்னகையுடன் மித்ராணி தோளை சுத்தி கைபோட்டு மெல்லிய அணைப்புடன் நெற்றியில் முட்டியபடி, “அல்லிராணி! உன் செல்ல மகனோட கல்யாணத்தை நீ தான் முடிவு செய்வ போதுமா!” என்றார்.
மித்ராணி புகழ்வேந்தனை தள்ளிவிட்டபடி முறுக்கிக்கொள்ள, புகழ்வேந்தன் புன்னகையுடன், “நீ மாறவே இல்லை அல்லிராணி” என்றபடி மீண்டும் அணைத்தார்.
“செய்றதை செஞ்சுட்டு இப்போ ஒன்னும் கட்டி பிடிச்சு கொஞ்ச வேணாம்” என்று மித்ராணி கறாராக கூற,
புகழ்வேந்தன், “அப்போ கிஸ் பண்றேன்” என்றவர் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு காதலுடன், “லவ் யூ அல்லிராணி” என்றார்.
எப்பொழுதும் போல் கணவனின் காதலில் கரைந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவர் அமைதியாக இருக்க, புகழ்வேந்தன் மெல்லிய அணைப்புடன் ப்ரனேஷிடம் பேசியதை பற்றி கூறினார்.
மித்ராணி, “ஹ்ம்ம்… அபி சென்னை வந்ததுக்கு அப்பறமே அத்தை கிட்டயும் அம்மா கிட்டயும் சொல்லிக்கலாம்” என்றார்.
புகழ்வேந்தன் மித்ராணியை தோளோடு அணைத்து கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி, “இப்பவாது சொல்லுடி” என்று கொஞ்ச,
மித்ராணி அறியாதவர் போல், “என்ன சொல்லணும்?” என்றார்.
புகழ்வேந்தன் முகத்தை மட்டும் சற்று விலக்கியபடி பார்க்க, அவரது பார்வையில் மித்ராணி மெல்லிய குரலில், “லவ் யூ ஸோ மச் வசி” என்றார்.
அப்பொழுதும் புகழ்வேந்தன், “அவ்ளோ தானா!” என்று வினவ,
மித்ராணி மென்னகையுடன், “அவ்ளோ தான்…” என்றபடி எழ, புகழ்வேந்தனோ மித்ராணி விலகும் முன் கையை பிடித்து இழுத்து தனக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டே விட்டார்.
 

நான்கு மாதங்கள் கழித்து இன்று… 

மதிவர்மனும் ஆதிராவும் கிளம்பிச் சென்ற பிறகு புகழ்வேந்தன் கலைவாணி மற்றும் கமலாவிடம் மதிவர்மன் அபிசாரா காதலைப் பற்றி சுருக்கமாக கூறவும் இருவரும் பிடிவாதமாக உடனே அபிசாராவை பார்க்க வேண்டும் என்று கூறினர்.
புகழ்வேந்தன், “அதான் நாளைக்கு பர்னேஷ் பரென்ட்ஸ் சதாபிஷேக பங்ஷனுக்கு போறோமே! நாளைக்கு பார்த்துக்கோங்க” என்று சொல்லிப் பார்க்க,
கலைவாணியோ, “கூட்டத்தில் விழா பரபரப்பில் பார்க்க முடியாது… எங்க பேத்தியை நிதானமா பார்த்து பேசணும்…” 
“அம்மா நாளைக்கு பங்ஷன் வச்சுகிட்டு இன்னைக்கு அவங்க பிஸியா இருக்க மாட்டாங்களா?” 
“ஒரு அரை மணி நேரம் போதும்” 
மித்ராணி, “அத்தை…” என்று ஆரம்பிக்க,
அவரோ, “நீங்க என்ன சொன்னாலும் எங்க முடிவில் மாற்றம் இல்லை… ராஜாவோட காதல் பத்தி தெரிஞ்சும் நாலு வருஷம் ரெண்டு பேரும் அமைதியா இருந்து இருக்கிறீங்க!” என்று சிறு கோபத்துடன் கூறினார்.
கமலாவும், “தம்பி நீங்க சம்பந்தி கிட்ட கேட்டுத் தான் பாருங்களேன்” என்றார்.
 புகழ்வேந்தன், “நாம கேட்டா எப்படி மறுப்பாங்க?” 
“அப்புறமென்ன!” என்று கலைவாணி கூற, புகழ்வேந்தன் முறைப்புடன், “பங்ஷன் பிஸியில் நாம ஏன் அவங்களுக்கு தேவை இல்லாத டென்ஷன் கொடுக்கணும்?” என்றார்.
கலைவாணி, “நீ பேசுறியா? இல்லை அனு கிட்ட நம்பர் வாங்கி நான் பேசட்டுமா?” என்று வினவ, கமலாவின் முகமும் அவரை ஆதரிப்பது போல் இருக்க, புகழ்வேந்தன் மித்ராணியை பார்த்தார்.
மித்ராணி, “சரி பேசுங்க… ஆனா கட்டாயம் இல்லை… அவங்க ப்ரீயா இருந்து வீட்டில் கெஸ்ட் இல்லைனா மட்டும் பார்க்கலாம்னு சொல்லுங்க… ஜஸ்ட் அ பிரெண்ட்லி விசிட், பார்மலா எதுவும் இல்லைனு சொல்லுங்க” 
“சரி நான் பேசிட்டு வரேன்” என்றபடி எழுந்து சென்றவர் ப்ரனேஷை கைபேசியில் அழைத்தார்.

Advertisement