Advertisement

நான்கு மாதங்கள் வேகமாக கடந்திருந்தது… 
ஆனந்தன் மற்றும் அமுதாவின் சதாபிஷேக விழாவை முன்னிட்டு ப்ரனேஷின் வீடு விழாக் கோலம் பூண்டிருந்தது. தங்களின் செல்ல பேத்தி அபிசாரா வீடு திரும்பியதும் விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று ஆனந்தனும் அமுதாவும் உறுதியாக கூறிவிட, இன்னும் ஒரு வாரத்தில் ஆனந்தனின் 81வது பிறந்தநாளே வந்துவிடும் நிலையில் நாளை தான் விழா கொண்டாடப்பட இருக்கிறது.
இன்று காலையில் தான் சர்வேஷ் குடும்பத்துடன் அபிசாரா சென்னை வந்து இறங்கி இறக்கிறாள். ப்ரனேஷ் வீட்டில் சர்வேஷின் குடும்பமும் இனியமலரின் தங்கை அவந்திகாவும், அவந்திகாவின் பன்னிரண்டு வயது மகளும் விழாவிற்காக வந்திருக்கின்றனர்.
[அவந்திகா – இனியமலரின் சித்தி(மாற்றாந்தாய்) மகள். ப்ரனேஷின் மருத்துவமனையில் மருத்துவராக பனி புரிகிறார். பெற்றவர்களின் பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு உதாரணம் போல் இனியமலருக்கு அவளது சித்தி செய்த பாவங்களில் கசடு அவந்திகா மேல் தான் படிந்தது. போராட்டமான திருமண வாழ்வில், திருமணமாகி பத்து வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை என்ற காரணத்தால் அவந்திகாவின் கணவன் அன்னையின் பேச்சைக் கேட்டு இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டான். அவன் மறுதிருமணதிற்கு சம்மதித்து ஒரு வாரங்கள் கடந்திருந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவந்திகா கணவனை மன்னிக்க மனமின்றி கருவுற்றிருப்பதை சொல்ல விரும்பாமல் தனியே வந்துவிட்டார். பெற்றோரிடம் செல்ல மனமின்றி ப்ரனேஷ் இனியமலரின் அரவணைப்பில் தனியே மகளுடன் வாழத் தொடங்கி, இன்றுவரை மகளுடன் தனியாகத் தான் இருக்கிறார். மனம் உடைந்திருந்த இனியமலர் மற்றும் அவந்திகாவின் தந்தை உடல் நலக் குறைவில் இறந்ததும், அவந்திகா தனது அன்னையை முதியோர் இல்லத்தில் சேர்த்து இருந்தார்.]
அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ப்ரனேஷ் கைபேசியில் அழைப்பு வரவும் எழுந்துச் சென்றார்.
அபிசாரா அன்னையைப் பார்த்து, “அனு எப்போ வருவா மா?” என்று கேட்டாள். 
மணியை பார்த்த இனியமலர், “இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள வந்திருவா” என்றார்.
நேத்ரா, “அனுவோட கடமை உணர்ச்சியை கண்டு நான் வியக்கேன்(வியக்கிறேன்)என்று ‘ஒஸ்தி’ திரைபடத்தில் சிம்பு பேசுவது போல் கூற,
இனியமலர், “இதில் இவங்க அப்பா ஸ்ட்ரிக்ட்… அதான் வேற வழி இல்லாம, மனசே இல்லாம தான் ஹாஸ்பிடல் கிளம்பி போனா” என்று கூற, 
அவந்திகாவின் மகள் யான்விஸ்ரீ நேத்ராவைப் பார்த்து முகத்தை சுளித்தபடி, “நீங்க சிம்பு ஃபன்ஆ?” என்று வினவினாள்.
நேத்ரா, “ச…ச… அதில் அவன் எங்க ஊரு பாஷை பேசி இருப்பான்…” என்று பெருமையாக கூறினாள்.
அமுதா, “மலர்… சாயுங்காலம் பூ அனுப்புறதுக்கு போன் பண்ணி நியாபகப் படுத்திட்டியா?” என்று வினவ,
இனியமலர், “பண்ணிட்டேன் அத்தை” என்றார்.
அதன் பிறகு விழா ஏற்பாடுகள் பற்றிய பேச்சு சிறிது நேரம் சென்றது.
அவர்களின் பேச்சில் சலிப்படைந்த யான்விஸ்ரீ அபிசாராவிடம், “அக்கா வாங்க நாளைக்கு என்ன ஹேர் ஸ்டைல் பண்ணலாம்னு பார்க்கலாம்” என்று அழைத்தாள்.
நேத்ரா, “நாளைக்கு பாட்டி தான் கல்யாணப் பொண்ணு” என்று கூற,
யான்விஸ்ரீ, “நான் தான் பொண்ணு தோழி… ஸோ நானும் அழகா இருக்கணும்” என்று கூற, அனைவர் முகத்திலும் மென்னகை அரும்பியது.
இனியமலர், “போ அபி… பண்ணி விடு” என்று கூற,
நேத்ரா, “ஆமா க்கா இல்லைனா ‘சந்தைக்கு போகணும், ஆத்தா வையும்’ னு ராகம் பாடிட்டு இருப்பா” என்று கூற,
சிறுமி இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி நேத்ராவை முறைக்க, நேத்ரா கிண்டலான பார்வையுடன், “நான் என்ன பேசினேன்னு புரிஞ்சுதா?” என்று கேட்டாள். 
“பெருசா என்ன சொல்லி இருக்க போறீங்க! ஏதோ ஒரு சினிமா பட டயலாக்கா தான் இருக்கும்… உங்க பாடி லாங்குவேஜ் வச்சு, என்னை கிண்டல் பண்றீங்கனு புரிஞ்சுது… அது போதும்” என்றாள்.
அனைவரும் சிரிக்க, நேத்ரா அவந்திகாவை பார்த்து, “சித்தி, உங்க பொண்ணு பிஞ்சிலேயே விளஞ்சுட்டா” என்ற பொழுது,
யான்விஸ்ரீ, “உங்களை மாதிரி” என்று முடிக்க, நேத்ரா அவளை முறைக்க, அவள் அழகு காட்டினாள்.
அபிசாரா, “சரி சரி… வா, என்னோட ரூமுக்குப் போய் ட்ரை பண்ணலாம்” என்றதும் சிறுமி துள்ளி குதித்துக் கொண்டு ஓடினாள்.
தனது அறைக்கு செல்லும் முன் கூடத்தில் இருந்த தந்தையைப் பார்த்த அபிசாரா அவரிடம் சென்று, “என்ன ப்பா! யாரும் வராங்களா?” என்று கேட்டாள். 
“ஹ… ஆமா டா… என்னோட பிரெண்ட் குடும்பத்துடன் வரேன்னு சொன்னான்” 
“ஓ… பங்சனுக்காக வராங்களா?” 
“இல்லை டா… சும்மா தான் வராங்க… இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போன் பண்ணி வரதா சொன்னான்” 
“ஓ… யாரு ப்பா?” என்று அவள் வினவிய போது யான்விஸ்ரீ அவளை அழைத்தாள்.
அவள், “நான் ஸ்ரீயை ரெடி பண்ணிட்டு வரேன் ப்பா” என்றுவிட்டு கிளம்ப, ப்ரனேஷ் சத்தமின்றி பெருமூச்சை வெளியிட்டார்.
அப்பொழுது அங்கே வந்த ஆனந்தன், “என்ன விஷயம் ப்ரனேஷ்?” என்று வினவ,
ப்ரனேஷ் விஷயத்தை கூறவும், ஆனந்தன் அவரின் தோளை தட்டி, “கவலைப்படாத எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்றார்.
“தேங்க்ஸ் டாட்” என்றபடி தந்தையை அணைத்து விடுவித்தார். இந்த வயதிலும் தந்தையின் பேச்சும், அணைப்பும் அவருக்கு யானை பலத்தை கொடுத்தது.

 

 

தே நேரத்தில் மதிவர்மனை கைபேசியில் அழைத்த ஆதிரா அவன் அழைப்பை எடுத்ததும், “அண்ணா ஒரு ஹெல்ப்… என்னோட வண்டி திடீர்னு ஸ்டார்ட் ஆகலை… இப்போ என்னை வந்து பிக்கப் பண்ணிக்க முடியுமா?” 
“இப்போ எங்க இருக்கிற?” 
“xxxயில் இருக்கிறேன்” 
மணியை பார்த்தவன், “சரி வெயிட் பண்ணு… சஞ்சயை அனுப்…” என்றவனது பேச்சை இடையிட்டவள், “அந்த குரங்கை ஒன்னும் அனுப்ப வேணாம்… உன்னால் முடிந்தால் வா… இல்லை நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன்… அரைமணி நேரம் ஆட்டோக்கு வெயிட் பண்ணி, ஆட்டோவே வரலைன்னு தான் உனக்கு கூப்பிட்டேன்… அதுவும் அப்பாக்கு தான் முதல்ல கூப்பிட்டேன்… அப்பா வெளியே இருக்கிறதா சொல்லவும் தான் உன்னை கூப்பிட்டேன்” என்று பொரிய,
அவன், “சரி… சரி… நானே வரேன்… பதினைஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு” என்றான். 
“ஹ்ம்ம்” என்றபடி அவள் அழைப்பைத் துண்டித்தாள். 
சஞ்சயை தனது அறைக்கு வர சொன்ன மதிவர்மன் அவன் வந்ததும், “உனக்கும் ஆதிக்கும் ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டான். 
ஒரு நொடி திடுகிட்டவன் அதை மறைத்துக் கொண்டு, “இல்லையே… ஏன் டா திடீர்னு கேட்கிற?” என்று வினவினான்.
சஞ்சய் அதிர்ச்சியை சாமர்த்தியமாக மறைத்ததாக நினைக்க, மதிவர்மன் பார்வையிலிருந்து அது தப்பவில்லை. நேரமின்மை காரணமாக வந்து கேட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அதை புறம் தள்ளியவன் ஆதிரா அழைத்ததைக் கூறி, “வீட்டுக்கு போனா, லன்ச் முடிச்சிட்டு வர மாதிரி தான் இருக்கும்… பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு கிளம்பினான்.
‘அந்த குரங்கு என்ன சொல்லுச்சுன்னு தெரியலையே!’ என்று நினைத்தபடி சஞ்சய் வேலையை தொடர முயற்சித்தான். ஆனால் வேலையில் முழுவதுமாக கவனத்தை செலுத்த முடியாமல், ‘வர்மா என் கிட்ட கேட்ட மாதிரி அவ கிட்ட கேட்டா, என்ன சொல்லுவா? என்னை மாதிரி ஒன்னுமில்லைனு சொல்லுவாளா? இல்லை எதையாவது உளறுவளா? அவ உளறி, வர்மா என் கிட்ட கேட்டா, நான் என்ன செய்ய?’ என்ற விடை அறியா கேள்விகளை மனதினுள் கேட்டுக்கொள்ள மட்டுமே முடிந்தது.
சிறிது நேரம் மனதினுள் குழம்பியவன் இறுதியில், ‘வர்மாவை சமாளிக்கிறதை விட இந்த குரங்கை சமாளிக்கிறது தான் கஷ்டமப்பா!’ என்று வாய்விட்டே புலம்பினான்.
பின், ‘சரி இதை அப்பறம் பார்த்துக்கலாம்… இப்போ வேலையை பார்ப்போம்’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு வேலையை ஆரம்பித்தான்.
சொன்னது போல் பதினைந்து நிமிடத்தில் தங்கை சொன்ன இடத்திற்கு சென்ற மதிவர்மன் தங்கையுடன் நின்றுக் கொண்டிருந்த அவளது நெருங்கிய தோழி அனன்யாவை பார்த்ததும் தங்கையை முறைத்தான்.
அவனது முறைப்பில் அனன்யா தோழியின் கையை பற்ற, ஆதிரா அவளது கையை இறுக்கமாக பற்றி ஆறுதல் அளித்ததோடு தமையனை பார்த்து, “அனுவை அவ வீட்டில் விட்டுட்டு நாம நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றாள் வெகு சாதாராண குரலில்.
மதிவர்மன், “ஆதி!” என்று கோபத்துடன் அழைக்க,
அவளோ, “இன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு நான் தான் இவளை கூட்டிட்டு போயிட்டு வீட்டில் விடுறதா பிளான்… உன்னால் முடியலைனா கிளம்பு… நான் ஆட்டோவில் இவளை ட்ராப் பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு போயிக்கிறேன்” என்று அசால்ட்டாக கூறி மதிவர்மனின் தங்கை என்று நிரூபித்தாள்.
மதிவர்மன் கோபத்தை அடக்கியபடி, “வண்டியில் ஏறுங்க” என்றான்.
இருவரும் பின் இருக்கையில் அமர்ந்ததும் வண்டி கிளம்பியது.

 

 

பிசாரா யான்விஸ்ரீக்கு சிகை அலங்காரம் செய்துக் கொண்டிருந்த போது, அங்கே வந்த இனியமலர், “அபி… அப்பா பிரெண்ட் ஃபமிலி வந்திருக்காங்க… அப்பா உன்னை கூப்பிடுறாங்க” என்றார்.
சிகை அலங்காரத்தில் கவனமாக இருந்தபடி அவள், “இதோ முடிஞ்சிரும்… ஜஸ்ட் டூ டு த்ரீ மினிட்ஸ் மா” என்றாள். 
“சரி டா… முடிச்சிட்டு கொஞ்சம் ரெப்ரெஷ் ஆகிட்டு வா” என்றுவிட்டு சென்றார்.
அப்பொழுது அங்கே வந்த நேத்ரா, “ஒரே ஓல்டீஸ்ஸா இருக்கிறாங்க… செம போர்… கண்ணுக்கு குளிர்ச்சியா எதுவும் இல்லை” என்று கூற,
சட்டென்று அவள் புஜத்தில் ஒரு அடி போட்ட அபிசாரா கண்டன குரலில், “என்ன பேச்சு இது?” என்றபடி பார்வையால் யான்விஸ்ரீயை சுட்டிக் காட்டினாள்.
நேத்ரா வாய் அசைப்பில் ‘சாரி’ என்று கூற,
யான்விஸ்ரீயோ, “சின்ன பொண்ணு முன்னாடி சைட் அடிக்கிறதைப் பத்தி நீங்க பேசினதுக்கு தான் இந்த அடி” என்று கூற,
நேத்ரா சிறு அதிர்ச்சியுடன், “நீ நிஜமாவே பிஞ்சில் விளைஞ்சவ தான்” என்று கூற,
அபிசாரா, “ஸ்ரீ இப்படியெல்லாம் பேசக் கூடாது” என்றாள். 
“போங்கக்கா நீங்க இன்னும் அந்த காலத்து ஸ்டைல்லேயே இருக்கிறீங்க” 
“எல்லாம் என் நேரம்” என்று அபிசாரா கூறினாள்.

 

திரா அன்று மருத்துவமனையில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டே வர, அனன்யாவின் கவனமோ மதிவர்மனிடம் எப்படி பேசுவது என்றதில் இருந்தது.
அனன்யா ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “வர்மா…” என்று அழைக்க, அவன் சட்டென்று திரும்பி அவளை கடுமையாக முறைக்கவும், தடுமாறியபடி முதல் முறையாக, “அண்…” என்று அழைக்க ஆரம்பித்தவள் மதிவர்மனின் அக்னி பார்வையில் ‘அண்ணா’ என்ற வார்த்தையை தொண்டை குழியினுள் தள்ளியபடி பயத்துடன் தலையை தாழ்த்தியபடி அமைதியானாள்.
ஆதிரா, “இப்போ எதுக்கு உனக்கு இவ்ளோ கோபம்?” என்று சண்டைக்கு வர,
மதிவர்மன் இறுகிய குரலில், “உன் பிரெண்ட்கு சப்போர்ட் பண்ணிட்டு என் கிட்ட வராதேனு நான் முன்னாடியே சொல்லி இருக்கிறேன்” என்றான். 
“சப்போர்ட் பண்ணலை, நியாயத்தை கேட்கிறேன்” 
அவன் தங்கையை கடுமையாக முறைக்க, அவள், “உன்னை இவ கூட சிரிச்சு பேசுனு சொல்லலை… எப்பவாது பார்க்கிறப்ப இப்படி முறைக்காம சாதாரணமா இருனு தான் சொல்றேன்… சும்மா மூணு வருஷமா அதே கோபத்தை பிடிச்சு தொங்கிட்டு இருக்கிற!”
மதிவர்மன் நிதானமான குரலில், “உன்னோட வண்டி உண்மையிலேயே ஸ்டார்ட் ஆகலையா?” என்று வினவ,
ஆதிரா கோபத்துடன், “நீ வண்டியை நிறுத்து… நாங்க ஆட்டோலேயே போய்க்கிறோம்” என்று கூற, மதிவர்மன் அலட்சியமான தோள் குலுக்கலுடன் வண்டியை தொடர்ந்து ஓட்டினான்.
ஆதிரா கோபத்தை கட்டுபடுத்த கைபையில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தினாள்.
அனன்யா மெல்லிய குரலில், “ஆதி ப்ளீஸ், எனக்காக சண்டை போடாத…” என்று கெஞ்சினாள்.
தனக்காக தோழி தமையனுடன் சண்டையிடுவதில் அவளது மனம் வெகுவாக வருந்தியது. பிரச்சனை வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் அனன்யா ஆட்டோவில் செல்லலாம் என்றாள், ஆனால் அவளது நேரம்! அரை மணி நேரமாக காலியான ஆட்டோ எதுவும் வராததால் தற்போது மதிவர்மனுடன் இந்த பயணம். இப்போழுது கூட ஒரு விஷயத்தை தெளிவு படுத்தவே அவனிடம் அவள் பேச முயற்சித்தாள், ஆனால் அவனது கோபத்தில் பயத்துடன் அமைதி ஆகிவிட்டாள்.
அதன் பிறகு வண்டியில் மௌனமே ஆட்சி செய்ய, மதிவர்மன் ப்ரனேஷ் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்.
கீழே இறங்கிய பின், “தேங்க்ஸ் ஆதி” என்ற அனன்யா மறந்தும் மதிவர்மன் பக்கம் திரும்பவில்லை. அவனும் இவளது நன்றியை எதிர்பார்க்கவில்லை.
அவள் சென்றதும் அவன் வண்டியை திருப்பிய போது, ஆதிரா தனது கோபத்தை மறந்து சிறு ஆச்சரியத்துடன், “அண்ணா! அப்பா கார் இங்க நிக்குது” என்றாள்.
அவள் சொன்ன பிறகே அதை கவனித்தவன் வண்டியில் இருந்து இறங்கி வேகமாக வீட்டினுள் செல்ல, ஆதிராவும் அவன் பின்னால் சென்றாள்.

 

நேத்ரா அபிசாராவின் அறையில் இருந்த உப்பரிகையில் நின்றபடி கைபேசியில் தோழியுடன் பேசிக் கொண்டிருக்க,
சிகை அலங்காரத்தை முடித்த அபிசாரா யான்விஸ்ரீ முகத்திற்கு திருஷ்டி கழித்தபடி மென்னகையுடன், “ரொம்ப அழகா இருக்கிற டா” என்றாள்.
“தன்க் யூ அக்கா” 
“சரி நீ போ… நான் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்” 
“நான் போய் எல்லார் கிட்டயும் காட்டுறேன்” என்றபடி மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து ஓடிய யான்விஸ்ரீ அறை வாயிலில் திரும்பி நின்றபடி, “அபி அக்கா” என்று அழைத்தாள்.
அபிசாரா திரும்பி பார்த்ததும் அவள் விரிந்த புன்னகையுடன், “லவ் யூ அக்கா” என்று கூறி இதழ் குவித்து முத்தபிட,
அபிசாராவும் புன்னகையுடன், “லவ் யூ டா” என்று கூறி கண்களை மூடி இதழ் குவித்து முத்தம் கொடுத்தபடி கண்களை திறக்க, அவள் முன் அக்னி பார்வையுடன் அய்யனார் போல் மதிவர்மன் நின்றுக் கொண்டிருந்தான்.
அபிசாரா பெரும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள். 

நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement