Advertisement

அன்று இரவு இமை மூடி படுத்திருந்த மதிவர்மன் மற்றும் அபிசாராவின் மனமும் நினைவலைகளில் மிதந்து பின்னோக்கிச் சென்றது…
அபிசாராவிற்கு சாவிகொத்தை பரிசளித்த அன்று இரவு மதிவர்மன் கைபேசியில் அவளை அழைத்தான்.
புது எண்ணாக இருக்கவும் யோசனையுடன் அழைப்பை எடுத்தவள், “ஹலோ” என்றாள்.
“ஹாய் சாரா… மதிவர்மன் பேசுறேன்” என்றான். 
சட்டென்று இதயம் படபடக்க, “நம்பர் எப்படித் தெரியும்?” 
அவன் மென்னகையுடன், “உன்னைப் பற்றிய விவரங்கள் நேத்தே தெரியும்னு சொன்னேனே” 
“ஓ” 
“என்ன பண்ணிட்டு இருக்கிற?” என்று மதிவர்மனும், 
“என்ன விஷயமா போன் பண்ணீங்க?” என்று அபிசாராவும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
மதிவர்மன், “இன்னைக்கு என்ன புதுசா மரியாதை கொடுத்துப் பேசுற?” 
“அது” என்று அவள் தயங்க,
அவன், “இந்த அமைதியான அபியை விட ஒருமையில் பேசி படபட பட்டாசா பொரிந்த சாராவை தான் எனக்கு பிடிச்சு இருக்குது…” என்றான். 
வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்றதொரு புது உணர்வை அனுபவித்தவள் சிரமத்துடன் வரவழைத்த இயல்பு குரலில், “உங்க உயரம் தெரிந்த பிறகு இந்த பன்மை தானா வருது” என்றாள். 
“6.3 ஃபீட்(feet) இருந்தா மரியாதைக் கொடுப்பாங்கனு எனக்குத் தெரியாம போச்சே!” 
“மதி!” என்று அவன் மென்னகையுடன் சிணுங்கலாக அழைக்க,
அவன் உற்சாகத்துடன், “ஹே! இப்போ என்னச் சொல்லி கூப்பிட்ட?” என்று கேட்டான்.
அப்பொழுது தான் தன்னை அறியாமல் அவனது பெயரை சுருக்கி ‘மதி’ என்று அழைத்ததை உணர்ந்தவள் தயக்கத்துடன், “சாரி… அது தெரியாம…” என்று இழுத்தாள்.
“அப்படியே கூப்பிடு… என்னை யாரும் ‘மதி’னு கூப்பிட்டது இல்லை” என்றான்.
“என்னையும் ‘சாரா’னு யாரும் கூப்பிட்டது இல்லை” 
“அபிசாரா ஒளி தருபவள்… சாரா ஹப்பினெஸ், ஜாய்… எப்படிப் பார்த்தாலும் உன்னோட பெயர் ரொம்ப அழகா இருக்குது உன்னை மாதிரியே” 
அவள் சிறு வெட்கத்துடன், “தேங்க்ஸ்” என்றாள்.
“நீ இவ்வளவு மென்மையானவனு நான் நினைக்கலை…” 
“நியாயத்துக்கு குரல் கொடுத்து சண்டைப் போட்டா அடாவடினு சொல்லிடுவீங்களா?” 
“இந்த ‘ங்க’ வேணாம்” 
“அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” 
“எனக்கு அது பிடிக்கலை” 
“மரியாதைக் கொடுக்கிறதை பிடிக்கலைன்னு சொல்றது நீங்களா தான் இருக்கும்” 
“நீ கொடுக்கும் மரியாதை எனக்கு வேணாம்… அது ஏதோ டிஸ்டன்ஸ் தருது” 
அரை நொடி மௌனித்தவள், “பேச்சை மாத்திட்டீங்க” என்று கூறி பேச்சை மாற்றினாள். 
அதை அவனும் உணர்ந்தான் தான் இருப்பினும், “இன்னும் நீ ங்க விடலை” என்றான். 
“ப்ச்” 
“கோபம் வந்தா தான் ஒருமையில் பேசுவியா?” 
“சரி பதில் சொல்லு” என்று இறங்கி வந்தாள். 
அவன் மென்னகையுடன், “என்ன பதில்?” என்றான். 
“நான் அடாவடியா?” 
அவன் சிரிப்புடன், “நான் தான் அடாவடி சாராவை தான் பிடிச்சு இருக்குதுனு சொன்னேனே!” 
“நான் ஒன்னும் அடாவடி இல்லை” 
“சரி மென்மையும் அடாவடியும் கலந்த அழகான காட்டுப்பூ” 
“..” 
“என்ன சரியா?” 
“எதுக்கு போன் பண்ணனு சொல்லலை” என்று மீண்டும் பேச்சை மாற்றினாள். 
“பேசணும் தோணுச்சு… அதான் போன் பண்னேன்” 
“சரி வைக்கவா” 
“ஏன்?” 
“அதான் பேசியாச்சே” 
“அப்படியா?” 
“ஆமா” 
“திடீர்னு ஏன் இந்த தயக்கம்?” 
“தயக்கமா? என்ன தயக்கம்?” 
“சாரா” என்று அவன் ஆழ்ந்த குரலில் அழைக்க, அது அவளது உயிர்வரை தீண்டியது.
அந்த உணர்வைத் தாங்கிக்கொள்ள முடியாமல், “ப்ளீஸ்… நான் யார் கிட்டயும் இப்படி பேசியது இல்லை” என்றாள்.
“நான் மட்டும் தினமும் ஒருத்தி கிட்ட பேசிட்டா இருக்கிறேன்?” என்று சற்று காரத்துடன் கேட்டான். 
“நான் பேசியது இல்லைனு தான் சொன்னேன்… நீ பேசிட்டு இருக்கிறனு சொல்லலை” என்று அவனது சாராவாக பொரிந்தாள்.
அதில் சட்டென்று அவன் முகத்தில் புன்னகை மலர, “ஓகே… ஓகே… கூல்… நாளைக்கு மீட் பண்ணலாமா?” என்று இறங்கி வந்தான். 
“எதுக்கு?” என்று காரம் குறையாமலேயே கேட்டாள்.
அதில் இன்னும் கவரபட்டவனாக விரிந்த புன்னகையுடன், “அதே மால்… அதே ஃபுட் கோர்ட்… அதே நேரம்… நாளைக்கு பார்க்கலாம்…” என்றான். 
“நான் வரேன்னு சொல்லலையே!” 
“கண்டிப்பா வரணும்னு சொல்லலை… வந்தா சந்தோஷப்படுவேன்” 
“வரலைனா?” 
“உன்னைத் தேடி நான் வந்துட்டுப் போறேன்” 
“எதுக்கு?” 
“அதை நேரில் சொல்றேன்” என்றவன், “ஓகே… நாளைக்கு பார்க்கலாம்… குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
காதலைச் சொல்லாமலேயே மற்றவரின் காதலை உணர்ந்துக் கொண்டவர்களின் மனம் ஆண்டாண்டு காலம் பழகியதொரு உணர்வை பெற்றது.  இருவருக்குமே இது ஜென்ம பந்தமாகவே தோன்றியது.
அடுத்த நாள் வலியையும் வேதனையையும் தரப்போவதை உணராமல் இருவரும் கனவில் சஞ்சரித்தனர்.
அடுத்த நாள் மதிவர்மன் சொன்ன நேரத்திற்கு அந்த பேரங்காடிக்கு சென்றபோது முன்தினம் சந்தித்த அதே இடத்தில் ஒரு மேசையில் அபிசாரா அமர்ந்திருந்தாள்.
“ஹாய் சாரா” என்று உற்சாசக் குரலில் கூறிய மதிவர்மன் அவள் எதிரில் அமர்ந்தான்.
“ஹாய்” என்றவள், “இப்பவாது என்ன விஷயம்னு சொல்லு” என்றாள்.
அவன் மென்னகையுடன், “என்ன அவசரம்?” என்றான்.
“அம்மா…” என்று ஆரம்பித்தவள் அரை நொடி இடைவெளிவிட்டு, “கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க… சீக்கிரம் போகணும்” என்றாள். 
“போன் பண்ணி சொல்லி இருந்தா நாம நாளைக்கு கூட மீட் பண்ணி இருக்கலாமே!” 
“இல்லை பரவாயில்லை சொல்லு” என்றாள் வரவழைத்த மென்னகையுடன்.
காற்சட்டைப் பையில் வைத்திருந்த ஒற்றை சிகப்பு ரோஜாவை அவள் முன் நீட்டியவன் வசீகர புன்னகையுடன், “ஐ லவ் யூ ஸோ மச் ப்ரம் பாட்டம் ஆஃப் மை ஹார்ட்… வில் யூ…” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
இகழ்ச்சியான குரலில், “இதை மாதிரி எத்தனைப் பேர் கிட்ட சொல்லி இருக்க? ஐ மீன் நான் எத்தானாவது?” என்று கேட்டாள்.
அவன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க, அவள், “முதல்ல என் கிட்ட காதலைச் சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்குது?” என்று அடுத்த கேள்வியால் மேலும் அவனை தாக்கினாள். 
“என்ன சொன்ன?” என்று அவன் கோபத்துடன் சீறியபடி எழுந்து நிற்க,
அவள் மனதின் வேதனையை மறைத்துக் கொண்டு வரவழைத்த நிதான குரலில், “உண்மையைத் தானே சொல்றேன்… உன்னோட தகுதி என்ன? வேந்தன் குரூப் எம்.டி… இதில் உன்னோட சொந்த முயற்சியில் சுயமா நீ எதைப் பண்ணி இருக்க? எல்லாமே உன் அப்பாவோட உழைப்பு மட்டும் தானே!” என்றாள். 
தனது காதலைக் கொச்சைப் படுத்தியதோடு தன்மானத்தைச் சீண்டியதில் பெரிதும் கோபம் கொண்டவன் ரௌத்திரம் மின்னிய விழிகளுடன், “தன்க் யூ” என்று கூறி அவளை திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டான்.

                     நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement