Advertisement

மூன்று வாரங்கள் கடந்திருந்தது…
ஞாயிறு காலையில் ஒரு பக்கமாக திரும்பி படுத்து உறங்கிக் கொண்டிருந்த மதிவர்மனின் பின்னால் நின்றபடி அவன் கன்னத்தில் இதழ் பதித்தபடி, “குட் மார்னிங் மதி” என்றாள் அபிசாரா.
அவன் கண்களை திறவாமல் மென்னகையுடன் அவளது இடையை வளைத்து அவளை மஞ்சத்தில் சரிக்க, அவள் அதிர்ச்சியுடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவன் முகம் மென்னகையில் கனிந்து கனவில் சஞ்சரித்தபடி இருந்தது. அவன் அப்படியே அவள் இதழ்களை நெருங்கவும் இவள் அதிர்ச்சியுடன் சற்று விலகியபடி, “மதி” என்று சற்று குரலை உயர்த்தினாள்.
சட்டென்று கனவில் சஞ்சரித்த மாயவலை அறுபட மதிவர்மன் கண் திறந்தான்.
அபிசாரா அவசரமாக கட்டிலின் மறுபக்கம் இறங்கி நிற்க, அவனுக்கு தான் செய்ய இருந்த காரியம் புரிந்து பேச வாய் திறக்கும் முன் அவள் அவசரமாக, “நான் உன்னை எழுப்ப தான் செய்தேன்… நீ தான்…” என்று இழுத்து நிறுத்தினாள்.
‘அப்போ இவ கன்னத்தில் முத்தம் கொடுத்தது கனவா நிஜமா?’ என்று குழம்பியவனின் பார்வை அரை நொடி அவள் இதழில் பதிந்து மீள, அவன் மனம், ‘ஸ்ப்பா… லிப்ஸ்டிக் போடாமேயே பளபளக்கும் உதட்டை ஆராய்ச்சி பண்ண மனசு துடிக்குதே! இனி இவ கண்ணை தவிர எங்கேயும் பார்க்கக் கூடாது’ என்ற அவசர முடிவை எடுக்க, அவனது மனசாட்சியோ, ‘அவளோட விழி மொழியில் கௌந்தவன் தானே நீ!’ என்று கூற, ‘அதனால் தானே இவ முழிக்கிறதுக்கு முன்னாடி எழுந்து, தூங்கினதுக்கு அப்புறம் வரேன்’ என்று கூறிக் கொண்டான்.
கஷ்டப்பட்டு மனதை அடக்கியபடி அவளை அமைதியாகப் பார்த்தான்.
‘பார்வையிலேயே முத்தம் கொடுத்ததை நம்ம வாயாலேயே சொல்ல வச்சிருவான்… எஸ் ஆகிடு அபி…’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவள் புன்னகையுடன் தலை சரித்து, “என்ன எந்திருக்கிற ஐடியா இல்லையா?” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.
அவளது வசீகர புன்னகையும் கண்சிமிட்டலும் அவனை கொள்ளையடிக்க அதற்கு மேல் தாங்காது என்ற எண்ணத்துடன் எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.
‘இன்னைக்கு புதுசா இருக்குதே… இவளோட பார்வையும் செயலும் சரி இல்லையே! தள்ளி இருந்தாலே நெருங்க துடிக்கும் மனதை அடக்க முடியாம தானே இவ கண்ணில் சிக்காம தப்பிச்சுட்டு இருக்கிறேன்… குள்ளச்சி நெருங்கி வந்து கொல்றாளே!’ என்று அவன் புலம்பிக் கொண்டிருக்க,
அபிசாரா மென்னகையுடன், ‘இனி என்னிடம் இருந்து எப்படி தப்பிக்கிறனு பார்க்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.
மறுவீடு முடிந்து வந்ததில் இருந்து மதிவர்மன் தனிமையில் அபிசாராவை முற்றிலும் தவிர்த்தான். தங்கள் அறைக்கு வெளியே அவளுடன் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அறையினுள் அவள் விழிக்கும் முன் எழுந்து, உறங்கிய பிறகே அறையினுள் வருவது என்று கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தான். அதற்கு காரணம் தன்னை மீறி அவளை நெருங்கிவிட்டு பின் நெருக்கத்தின் நடுவில் அவளது வார்த்தைகள் நினைவிற்கு வந்து சட்டென்று விலகி அவளைக் காயப்படுத்தி விடக் கூடாதே என்பதே.
குற்ற உணர்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்த அபிசாரா அவனது விலகலில் மனம் வருந்தினாலும் அவனை நெருங்கத் தயங்கினாள்.
ஆனால் இவர்களின் நிலையை உணர்ந்த மித்ராணி முன்தினம் அபிசாராவிடம் தனியாக பேசினார்.
மித்ராணி, “உங்களுக்குள் என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியாது, ஆனா தவறு வர்மா பக்கம் இல்லைனு தெரியும்…” என்றவரின் பேச்சை இடையிட்ட அபிசாரா சற்று கலங்கிய குரலில், “நான் தான் தப்பு பண்ணிட்டேன் அத்தை… மதியை ரொம்ப காயப்படுதிட்டேன்” என்றாள்.
“காதலுக்கு தப்பை மன்னிக்கவும் மறக்கவும் சக்தி உண்டு… நீ முதல்ல இப்படி குற்ற உணர்ச்சியில் தவிக்கிறதை நிறுத்து… இப்படி பீல் பண்றதால் நடந்ததை மாத்த முடியாது, ஆனா நீ நினைத்தால் இனி நடப்பதை நல்ல விதமா மாத்த முடியும்” 
அபிசாரா சிறு தவிப்புடன் பார்க்க, அவளது கன்னத்தை தட்டிய மித்ராணி, “அவன் விலகினா என்ன! நீ அவனை விலக விடாமல் உன் காதலால் கட்டிப்போடு… உன் காதல் தான் அவன் காயத்திற்கு மருந்து” என்றதும் ‘சரி’ என்பது போல் தலையாட்டினாள்.
இரவு முழுவதும் மித்ராணியின் அறிவுரைகளை யோசித்ததின் பலனே அபிசாராவின் இன்றைய நெருக்கம்.
மாமியார் போட்ட கோட்டில் ரோடு போடுபவளாக பழைய சாரா மீண்டிருந்தாள்.
குளித்துவிட்டு இடுப்பில் துண்டுடன் வெளியே வந்தவன் உடை மாற்றும் அறைக்கு செல்லும் முன் கையில் துண்டுடன் அவனை நெருங்கியவள், “எவ்வளவு ஈரம்! முடியை நான் துவட்டி விடவா?” என்றபடி அவன் தலையில் கை வைக்கப் போக,
அரை நொடி அதிர்ந்து சுதாரித்தவன், “நானே துவட்டிக்கிறேன்” என்றான்.
இதுவரை எப்போதாவது அவனை இந்த கோலத்தில் பார்க்க நேர்ந்தால், சங்கடத்துடன் தலையைக் குனிந்துக் கொண்டோ, அறையை விட்டு வெளியேறியோ இருப்பவள் இன்று இயல்பாக நெருங்கவும் அவளது நெருக்கத்தில் அவனது இதயம் ஒரு நொடி தாளம் தப்பியது.
அவனது அரை நொடி அதிர்வை கண்டுக் கொண்டவள் மனதினுள் குத்தாட்டம் போட்டாள். அரை நொடி தான் என்றாலும் இதுவரை அவளிடம் சாயும் மனதை சிறிதும் வெளிகாட்டாமல் கட்டுப்பாடுடன் இருந்தவனின் விழிகளில் தெரிந்த முதல் உணர்வலையில் அவளது மனம் வெகுவாக மகிழ்ந்தது.
தனது மகிழ்ச்சியை மனதினுள் மறைத்துக் கொண்டவள் இயல்பான குரலில், “நானே துடைத்து விடுறேன்” என்றபடி அவனது பதிலை எதிர் பார்க்காமல் அவனது புஜத்தை பற்றி தள்ளியபடி கட்டிலில் அவனை அமர வைத்து தலையைத் துவட்ட ஆரம்பித்தாள்.
அவளது அருகாமையைத் தடுக்க முடியாமல், தடுக்கத் தோன்றாமல் கண்களை மூடியபடி கட்டுண்டு அமர்ந்திருந்தான்.
நூலிழை இடைவெளியில் நின்றபடி அவள் அவனது சிகையை துவட்டிக் கொண்டிருந்தாள். அவளது புடவை லேசாக அவனது கன்னத்தில் உரச, அவனின் உணர்ச்சிகள் பேயாட்டம் போட்டது.
அவளது இடையை வளைக்கத் துடித்த கரங்களையும், அவளது நெஞ்சில் முகம் புதைக்க துடித்த மனதையும் அடக்க பெரும்பாடு பட்டவன் தாள முடியாமல் சட்டென்று எழுந்துவிட்டான்.
அவன் முகத்தை தன் வயிற்றோடு அழுத்தி பிடித்து அவனது உச்சியில் இதழ் பதிக்கத் துடித்த மனதை சிரமத்துடன் அடக்கியபடி அவள், “என்னாச்சு?” என்று வினவினாள்.
உணர்ச்சிகளின் போராட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவன், அவளை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாத இயலாமை தந்த கோபத்துடன், “என்னடி என்னை மயக்கப் பார்க்கிறியா?” என்று சீறினான்.
ஒரு நொடி அவனது வார்த்தைகளில் கலங்கியவள் அடுத்த நொடி நிமிர்ந்து நின்றாள்.
உதட்டோர மென்னகையுடன் சிறு நக்கல் கலந்தக் குரலில், “இப்படி எல்லாம் செஞ்சா நீ மயங்கிடுவியா? இத்தனை நாள் இது எனக்கு தெரியாமப் போச்சே!!!” என்றாள்.
அவன் அவளை முறைக்க, அவளோ நிமிர்வுடனே, “உடம்பை காட்டி உன்னை மயக்குற அளவுக்கு நான் கீழ்தனமானவள் இல்லை… உன் சாரா அப்படி பட்டவளானு யோசி?” என்று கூறி வெளியேறி இருந்தாள்.
தன்னவளை தானே காயப்படித்திவிட்ட கோபத்தில் தன்னையே திட்டிக் கொண்டவன் தன் கன்னத்தில் தானே அடித்துக் கொண்டான்.
சில நிமிடங்களில் அபிசாரா காப்பியுடன் வந்த போது அவன் கிளம்பி முடித்து இருந்தான்.
அவள் அமைதியாக காபியை அவனிடம் நீட்ட, அதை வாங்கியவன் அவள் கண்களை பார்த்தபடி, “அம் சாரி… நான் அப்படி பேசி இருக்கக் கூடாது… அம் ரியலி சா…” என்றவனின் பேச்சை இடையிட்டவள், “விடு… உன் காயத்தை விட இது பெரிதில்லை” என்றாள்.
“தேங்க்ஸ்… பட் எனக்கு கொஞ்சம் டைம் கொடு… என் மனம் முழுசா பழசை மறக்கிற வரை என்னை நெருங்காதே ப்ளீஸ்” 
“உன் காயம் ஆருற வரை விலகி இருக்க நினைக்கிற உன் முடிவை நான் மறுக்கவோ தடுக்கவோ மாட்டேன் ஆனா நான் இயல்பா தான் இருப்பேன்… தலை துவட்டி விடுறது, உனக்கு உடை எடுத்து வைப்பது, உணவு பரிமாறுவதுனு உன்னைக் கவனிக்கிறது எல்லாம் சாதாரண விஷயம்… நான் அதைச் செய்யத் தான் செய்வேன்… அண்ட் நீயும் இனி என்னிடமிருந்து ஓடி ஒளியாம இயல்பா பேசிப் பழக முயற்சி பண்ணு…”  என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறி இருக்க, அவன் தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டான்.
எல்லோரையும் தண்ணி குடிக்க வைத்த மதிவர்மனை தண்ணி குடிக்க வைக்கும் முடிவில் மதியின் சாரா களம் இறங்கி இருந்தாள்.
சதீஷின் குடும்பத்தினர் மதிவர்மன் ஆதிராவிற்கு பரிசளித்த வளமனைக்கு(Bungalow) குடியேறி இருந்தனர். இந்த மூன்று வாரங்களில் ஆதிரா சஞ்சய்யின் வீட்டில் இன்றியமையாதவளாக மாறி இருந்தாள். இத்தனை வருடங்கள் சதீஷின் அன்னையின் கெடுபிடிகளில் ஓய்வின்றி உழைத்த நிவேதாவிற்கு ஓய்வு அளித்த ஆதிரா வீட்டின் பொறுப்பை தனது கையில் எடுத்து இருந்தாள்.
காலையில் எழுந்ததும் சதீஷுடனான நடைப்பயிற்சியில் ஆரம்பிக்கும் ஆதிராவின் நாள் அடுத்து நிவேதாவுடன் இறக்கைப் பந்தாட்டம் விளையாடுவது, அடுத்து அனைவருக்கும் சத்துமாவு காஞ்சி கொடுப்பது, சமையல் செய்பவரிடம் அன்றைய உணவு பட்டியலைச் சொல்வது, மற்ற வேலையாட்களுக்கும் அன்றைய வேலைகளை பட்டியலிடுவது, பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவமனைக்கு செல்வது, மாலையில் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் வேலையாட்களின் வேலைகளை மேற்பார்வையிடுவது, நிவேதா நடத்தும் பாட்டு வகுப்பை ரசித்து கவனிப்பது, அடுத்த நாளுக்குத் தேவைப்படும் மருத்துவ குறிப்புகளை சேகரிப்பது, அவ்வப்போது சஞ்சய்யை கண்டுக்கொள்ளாமல் வெறுப்பேற்றுவது என்று வெகு வேகமாக சுழலும்.
சஞ்சய் பெயரில் இருக்கும் கலைக் கல்லூரிக்கு காலையில் சிறிது நேரம் சென்று மேற்பார்வை பார்க்க சதீஷை பழக்கி இருந்தாள். காலையில் நிவேதா விளையாடுவதையும் மாலையில் சிறுவர்களுக்கு பாட்டு சொல்லி கொடுப்பதையும் எதிர்த்து போர்க் கொடி தூக்கிய சதீஷின் அன்னையை வெகு சுலபமாக சமாளித்த ஆதிரா இவை இரண்டிலும் நிவேதாவை ஈடுபடுத்தத் தான் சற்று சிரமப்பட்டாள்.
சதீஷின் அன்னையின் உடல் ஆரோக்கியத்தையும், தேவைகளையும் பூர்த்திச் செய்ய ஒரு ஆளை தனியாக நியமித்து இருந்தாள். மேலும் அந்த ஆளின் முக்கிய வேலை, அவர் நிவேதாவை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வதே ஆகும்.
ஆக மொத்தம் தனது வருகையால் சஞ்சய் குடும்பத்தின் தரத்தை உயர்த்தியதோடு அன்பையும் மகிழ்ச்சியையும் வாரி வழங்கியவள் தனது குறும்புப் பேச்சில் வீட்டை உயிர்ப்புடன் வைத்திருந்தாள்.
இவ்வளவு வேலைகளையும் செய்பவள் சோர்வு சிறிதும் இன்றி உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் திகழ்வதற்கு முக்கிய காரணம் சஞ்சய். மற்றவர்களை கவனிப்பவளை நேரத்திற்கு பழச்சாறு மற்றும் உணவை எடுத்துக்கொள்ள செய்வான். அவற்றை விட அவளது அமைதியை பொருட்படுத்தாமல் கைபேசி வாயிலாக அவன் பேசும் கொஞ்சலான காதல் மொழிகளே அவளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
சஞ்சய் மீதான கோபத்தைத் துறந்திருந்தவள் தற்போது சில நேரங்களில் அவனது பேச்சிற்கு பதிலாக மென்னகையுடன் கூடிய சிறு வெட்கத்தை வெளிபடுத்த ஆரம்பித்து இருந்தாள்.
ஞாயிறு அன்று காலையில் நிவேதாவுடன் விளையாடிவிட்டு அறையினுள் வந்தவள் வியர்வையை துண்டு கொண்டு துடைக்க ஆரம்பித்தாள். முன்தினம் தோழி ஒருத்தியின் இரவுபணியை சற்று நேரம் பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய காரணத்தினால் காலையில் சற்று தாமதமாக எழுந்தவள் நடைபயிற்சி செல்லாததால் இரவு உடையிலேயே விளையாட சென்றிருந்தாள். வேர்வையில் உடம்போடு ஒட்டியிருந்த மேல் சட்டை அவளது வரிவடிவத்தை எடுத்துக்காட்ட, சஞ்சய்யின் மோகப் பார்வை வேட்கையுடன் அவளை அங்கம் அங்கமாக மொய்த்தது.
சஞ்சயின் பார்வையைக் கவனிக்காதவள் சாதாரணமாக துண்டைக் கொண்டு கழுத்து வளைவில் வடிந்துக் கொண்டிருந்த வியர்வையைத் துடைத்த போது சஞ்சய், “அந்த துண்டா நான் இருக்க ஆசைப்படுறேன்” என்றான்.
அவனது வார்த்தைகளை விட அவனது பார்வையின் வீரியத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவள் சட்டென்று திரும்பிக்கொள்ள, அவன் அவளை நெருங்கி  பின்னால் இருந்து அணைத்து கழுத்தோரத்தில் முத்தமிட்டான். அவள் உணர்வு போராட்டத்துடன் துண்டை இறுக்கமாக பற்றிக்கொள்ள, சஞ்சயின் உதடுகள் கழுத்தில் இருந்து காதுமடல் வாயிலாக கன்னத்திற்கு முத்த ஊர்வலம் நடத்த, இடையூறாக இருந்த துண்டை அகற்றிய அவனது இடது கரமோ வயிற்றில் இருந்து கழுத்து வளைவிற்கு மெதுவாக ஊர்வலம் சென்றது.
அவள் உதட்டை கடித்தபடி அவன் தோளில் தலைச் சாய்க்க, முத்தமிட்டபடி பற்களிடம் இருந்து அவள் இதழ்களை விடுவித்தவன் தன் இதழ் கொண்டு சிறை செய்தான்.
மென்மையாக ஆரம்பித்த இதழ் முத்தத்தின் வேகம் கூடிக் கொண்டே சென்றது. ஒற்றை முத்தத்தில் தனது தாபம் மொத்தத்தையும் அவன் காட்ட, பெண்ணவள் அவன் கைகளில் உருகி தோய்ந்தாள்.
தன்னவளை கைகளில் ஏந்தி மஞ்சத்தில் சரித்தவன் முத்தத்தைத் தொடர, அடுத்து யார் யாரை கொடுத்தார்கள், எடுத்துக் கொண்டார்கள் என்று வரையறுக்க முடியாத இனிய தாம்பத்தியம் அரங்கேறியது.
கூடல் முடிந்ததும் காதலுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டவன், “இவ்வளவு காதலை வச்சுட்டு ஏன்டி இத்தனை நாள் தள்ளியே இருந்த?” என்று கேட்டான்.
அவள் செல்ல முறைப்புடன், “இவ்வளவு காதலை வச்சுகிட்டு சார் ஏன் ஒரு வருஷம் விலகி ஓடினீங்க?” 
“பழசை ஏன் கிளருற?” என்று குழைவுடன் கேட்டபடி அணைப்பை இறுக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அவனது முத்தத்தில் கரைந்தாலும், “ஒரு மாசம் கூட காத்திருக்க முடியலை… நான் உனக்காக ஒரு வருஷம் காத்திருந்தேன்” 
“அதுவும் இதுவும் ஒன்னா?” 
“ஏன்?” 
“அப்போ நீ என் மனைவி இல்லை… அண்ட் இப்படி நெருக்கத்திலும் இல்லை” என்றவனின் கை அவள் உடலில் ஊர்வலத்தை ஆரம்பிக்க,
அவனது கைகளைத் தடுத்தவள், “என்னை ஒரு வருஷம் சுத்தலில் விட்டதுக்கு இன்டென்ஷிப் முடியுற ஒரு வருஷத்துக்கு உன்னை சுத்தலில் விடனும் நினைத்தேன் ஆனா…” என்றவளின் பேச்சை இடையிட்டவன் உல்லாச சிரிப்புடன்,
“மேடம் ஐயா கிட்ட மயங்கிட்டீங்க” என்றான். 
“அய்யோடா நினைப்பு தான்!” என்றபடி அவன் நெஞ்சில் கைவைத்து அவனைத் தள்ள,
அவனோ, “மயங்காதாவ ஏன்டி…” என்று ஆரம்பித்து சில அந்தரங்க வார்த்தைகளை அவள் காதில் கிசுகிசுக்க,
“ஏய்!!” என்று சிணுங்கியபடி அவள் அவன் நெஞ்சில் மஞ்சமடைய, அவன் மீண்டும் அவளைக் கொள்ளைக் கொண்டான்.
அதன் பிறகும் அவளை விடாமல் ஒன்றாக குளித்து கிளம்பியவன் சிறு பதற்றத்துடன், “ஆரு” என்று அழைத்தான்.
அவள், “என்னாச்சு?” 
“அது… வந்து… நான் எந்த முன்னேற்பாடும் பண்ணலையே!” என்றான்.
அவள் உதட்டோர புன்னகையுடன், “ரொம்ப சீக்கிரம் கவலைப்படுற!!” என்று நக்கலுடன் கூற,
அவன் குற்ற உணர்ச்சியுடன் அவள் கைகளைப் பற்றியபடி, “சாரிடி… நான்… நான்…” என்று திணறினான்.
அவனது கன்னத்தை தட்டியவள், “கவலைப்படாத ஒரு பிரச்சனையும் இல்லை” என்றாள்.
“எப்படி சொல்ற?” 
“எனக்கு தெரியும்” 
“எப்படி?” 
“நான் ஒரு டாக்டர்” 
“என்ன தான் நீ டாக்டரா இருந்தாலும் இதெல்லாம் கடவுள் முடிவு செய்றது தானே! சாரி டா… உன் படிப்பை பத்தி யோசிக்காம நான் சுயநலமா…” என்று குற்ற  உணர்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தவனின் வாயை தன் கரம் கொண்டு மூடியவள், “இதில் என்ன சுயநலம்? நானும் விருப்பத்துடன், ஆசையுடன் தானே உன்னுடன் இருந்தேன்!” என்றாள்.
“இருந்தாலும்… ப்ச்.. நான் தானே…” என்று அவன் வெகுவாக வருந்த,
அவள், “இவ்வளவு பீல் பண்ணி இந்த மொமென்ட்டோட இனிமையை கெடுக்காத” என்றாள்.
“இப்போ இனிமையா இருந்தாலும் பின்னாடி…” 
“நான் தான் சொல்றேன்னே! நீ பீல் பண்றது போல் எதுவும் நடக்காது” 
“அது எப்படி உறுதியா சொல்ற?” 
“அதான் சொன்னேனே…” என்றவளின் பேச்சை இடையிட்டவன், “சும்மா டாக்டர்னு சொல்லாத… நிஜமாவே நீ உறுதியா சொல்றனா, எப்படினு விளக்கமா சொல்லு” என்று அவன் விடாமல் வாதிட,
அவள், “எனக்கு இப்போ டேட் தான்…” என்றாள் சிறு கடுப்புடன்.
“என்ன டேட்?” என்று அவன் புரியாமல் வினவ,
அவள், “டியூப் லைட்” என்று முணுமுணுத்தபடி மூன்று விரல்களை காமித்தாள்.
அப்பொழுது புரிந்துக் கொண்டு, “ஓ” என்றவன் அதன் பிறகே நிம்மதியானான். ஆனால் அடுத்த சில நொடிகளில், “அப்போ உடனே மூணு நாளுக்கு நான் பட்டினியா!!” என்று சிறு அதிர்ச்சி கலந்த கவலையுடன் வினவ, அவள் அவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தாள். 
“ஹி… ஹி…” என்று அசடு வழிந்தவன், “கடுமையா உழைச்சதில் ரொம்ப பசிக்குது… சாப்பிட போகலாமா?” என்று வினவ, அவள் தலையணையைக் கொண்டு அவனை மொத்த ஆரம்பித்தாள்.

                    நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

 

Advertisement