அத்தியாயம்-5-1

சாஸ்திரிகள் அங்கிருந்து சென்றவுடன்,”இன்னைக்கு காலம்பறதான் நீ வந்து இறங்கின..அதுக்குள்ளே உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திட்டார் பிள்ளையார்.” என்று சந்தோஷமடைந்த ருக்மிணியிடம், 

“ஐயாம் நாட் ரெடி நவ்..அடுத்த விநாயகர் சதுர்த்திலே ஆரம்பிக்கலாம்.” என்றான் ஜெய்.

“விளையாடறியா? ஒரு வருஷம் கழிச்சா..முடியாது டா..அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு என் மாட்டுப் பொண் கையாலே பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை நைவேத்தியம் பண்ணனும் நேக்கு..இன்னைக்கு மாமாகிட்டே கொடுத்தாச்சு..பொருத்தமான வரனா ஒரு வார்த்திலே கொண்டு வந்து குவிப்பர்.” என்றார் ருக்மிணி

“நோ..என் ஜாதகத்தைக் கிடப்புலே போடப் போறார் சாஸ்திரிகள் மாமா.” என்று அவர் மனத்தில் இருந்ததை முழுமையாகப் படித்திருந்தாலும் அதை முழுவதுமாக வெளியில் சொல்லவில்லை ஜெய்.

“நோக்கு எப்படி டா தெரியும்?

“தெரியும்”

எப்படி?

ஜெய்யிடமிருந்து பதில் வரவில்லை.  சாப்பாட்டில் கவனமாக இருந்தான்.  ஆனால் பதில் கிடைக்காமல் ருக்மிணி அவனை விடுவதாக இல்லை.

“எதுக்குடா அபசகுணமா பேசற?” என்று ருக்மிணி வருத்தப்பட,

“ஜெய்..அம்மா கேட்கறது கரெக்ட்..நீ வேண்டாம்னு சொல்றது உன் விருப்பம்..ஆனா சாஸ்திரிகள் மாமா ஒண்ணும் செய்யப் போகறதில்லைன்னு சொல்றது நல்லா இல்லை டா.” என்றார் பாலகிருஷ்ணன்.

“இட்ஸ் ட்ரு ப்பா..அவர் மனசுலே அந்த மாதிரிதான் நினைச்சர்.” என்றான் ஜெய்.

“அவர் மனசுலே நினைச்சது நோக்கு எப்படி டா தெரியும்?..காலம்பற என் மனசுல இருந்ததைக் கண்டுபிடிச்சியே அந்த மாதிரியா?”  என்று ருக்மிணி கேட்க,

“ஸேம் மா.” என்றான் ஜெய்.

“நிஜமாவா? எப்படின்னு சொல்லு டா?” என்று ஆர்வமானார் ருக்மிணி.

“நீ நேக்கு அம்மா..நீ எந்த நேரத்திலே என்ன நினைப்பேன்னு நேக்குத் தெரியும்..இந்த மாமாவை இன்னைக்குதான் பார்க்கறேன்..அவர் மனசுல நினைக்கறதைக் கண்டு பிடிக்கறதும், நீ நினைக்கறதைக் கண்டு பிடிக்கறதும் எப்படி ஒண்ணா இருக்க முடியும்?” என்று அவரைச் சுத்த விட்டான் ஜெய்.

“ஆமாம் டா..வேற வேற தான்..அப்ப எப்படி ஸேம்னு சொன்ன?.” என்று கேட்டார் ருக்மிணி.

“கண்டுபிடிச்சது நானில்லை…என்னோட AI” என்றான் ஜெய்.

“அது எப்படி டா.” என்று கேட்டார் ருக்மிணி.

“நான் என்னோட B2I2 யூஸ் பண்ணி என்னோட AI மாதிரி யோசிச்சேன்.” என்றான் ஜெய்.

“நேக்கு இதெல்லாம் கேட்டாலே தலையைச் சுத்தறது..ஸிம்பில் A,B வைச்சு உன்னாலதான் இப்படி குழப்ப முடியும்.” என்றார்.

“இட்ஸ் ஸிம்பில் மா..என்னோட பிளெஸ்ட் இண்டலிஜன்ஸ் (blessed intelligence) அண்ட் பிளெஸ்ட் இண்டியுஷன் (blessed intuition) தான் என்னோட ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் (artificial intelligence).…

என் கண் எதிர்லே இருந்த அந்த மாமா தான் என்னோட இன்ஃபர்மேஷன்..அவரோட முகத்தோட எக்ஸ்பரெஷன் (expression)..வார்த்தைகள்ள இருந்த ஹெஸிடெஷன் (hesitation) இரண்டும் என்னோட டேட்டா (data)..விச் ஜஸ்ட் நீடட் கான்ஃபிகரேஷன் (which just needed configuration).” என்றான் சாப்பாட்டை தொடர்ந்தபடி.

அதற்கு,“நான் நம்ப மாட்டேன்.” என்றார் ருக்மிணி.

“நம்பாதே..உன்னை நான் நம்பவும் சொல்லலை.” என்றான் ஜெய்.

“ஏன் டா நோக்கு மட்டும்தான் ஆண்டவன் ஆசிர்வாதத்திலே அறிவும், உள்ளுணர்வும் இருக்கா? நேக்கு இல்லையா? என்று கோபமாகக் கேட்டார் ருக்மிணி.

“இருக்கே..எல்லா ஜீவராசிக்கும் அறிவு, உள்ளுணர்வு இரண்டும் இருக்கு..ஆனா என்கிட்டே மட்டும் தான் இன்ஃபமேஷனை டேட்டாவா மாத்தற டிரான்ஸ்ஃபர்மெஷன் (transformation) டெக்னிக் இருக்கு..உன்கிட்டே இல்லை.” என்றான் ஜெய்.

“நேக்கு மாமாவை நன்னா தெரியும்…மனசுலே ஒண்ணு வைச்சிண்டு வெளிலே ஒண்ணு பேச மாட்டர்..அதுவும் கல்யாணம் விஷயத்திலே.” என்று அடித்துப் பேசினார் ருக்மிணி.

“ஆமாம் டா ஜெய்..இந்தக் காலனிக்கு வந்ததுலேர்ந்து அவரைப் பரிச்சயம்..நேக்கும் அவர் அந்த மாதிரி மனசுலே நினெச்சிருபர்ன்னு தோணலை டா.” என்றார் பாலகிருஷ்ணன்.

“ஒரு வருஷம் முன்னாடி இதே மாமாவை நான் வேற விதமா அனலைஸ் பண்ணியிருப்பேன்..ஒரு மாசத்திலே எவ்வளவு ஜாதகம் அதுலே எத்தனை பொண்கள், எத்தனை பையன்கள்..அதுலே எத்தனை கல்யாணத்திலே முடியறதுன்னு நாலு கேள்வி கேட்டு என் டர்ன் எப்பன்னு சொல்லியிருப்பேன்..அதுக்கு வெறும் இண்டலிஜன்ஸ்..அறிவு மட்டும் போதும்..லைக் எ ஸையன்ஸ் பாட் (like science bot)..

இப்ப நான் வேற மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன்..அறிவும், உள்ளுணர்வும் சேர்த்து..லைக் எ ஸொஷியல் பாட் (like a social bot)..அதான் அவர் சொல்றது, சொல்லாதது இரண்டுத்தையும் கோத்து அவர் முடிவை உங்களுக்குச் சொன்னேன்.” என்றான் ஜெய்.

“எதுக்கு டா இரண்டு பாட்..இரண்டும் எதுக்கு வேற மாதிரி யோசிக்கணும்?” என்றார் ருக்மிணி.

“அதான்  நமக்கும், பாட்டுக்கும் உள்ள வித்தியாசம்..நமக்குத் தேவைப்பட்டா நம்மளாலே நம்மளைத் தனித் தனியா பிரிச்சு தெளிவா யோசிக்க முடியும்..பாட்டை தனித் தனியா பிரிச்சாதான் அதாலே தெளிவா யோசிக்க முடியும்..

ஆஸ்பத்திரிலே ECGயை அனலைஸ் செய்யற AI யும், ஆத்துக்கு வர்றவாளுக்கு ‘ஹலோ’ சொல்ற AIயும் இஸ் நாட் ஸேம்.” என்றான் ஜெய்.

“நேக்கு ஒண்ணும் புரியலேடா..விட்டுடூ என்னை.” என்று சரணடைந்தார் ருக்மிணி. ஆனால் பாலகிருஷ்ணனுக்கு ஜெய்யின் பேச்சு சுவாரஸியமாக இருந்தது. எனவே,

“இன்னும் ஸிம்பிலா சொல்லேண்டா ஜெய்.” என்றார்.

“அம்மாவுக்காக பையன் யோசிக்கறது, அதே பையன், கணவனா மனைவிக்கு யோசிக்கறது..மனுஷா பாராபட்சம் பார்ப்பா.. AI அதெல்லாம் பார்க்காது.” என்றான் ஜெய்.

“என்ன டா சொல்ற?” என்று இப்போது ருக்மிணி  கேட்க,

“இன்னைக்கு காலம்பற கார்லே வர்றசே உன் மனசிலே நீ  நினைச்சதை கண்டுபிடிச்சது என் AI ஆனா அதை வெளியே சொன்னது உன் பையன் ஜெய்..அதனால் தான் முழுசா சொல்லாம, நீ என்னோட அம்மான்னு நோக்கு நான் சலுகை காமிச்சேனோல்யோ?” என்று கண்சிமிட்டியபடி கேட்டான் ஜெய்.

அதைக் கேட்டு அதிர்ச்சி தாங்காமல் அவனருகிலிருந்த சேரில் அமர்ந்து கொண்டார் ருக்மிணி.

அதைக் கேட்ட பாலகிருஷ்ணனோ,“வேற என்ன டா நினைச்சா உங்கம்மா?” என்று ஆவல் தாங்காமல் கேட்டார்.

“சொல்லட்டான் ம்மா?” என்று ருக்மிணியிடம் ஜெய் அனுமதி கேட்க,

ஒருவேளை அவன் AI தவறாக இருந்தால் என்ற அல்ப ஆசையில்,”சொல்லேன்..நேக்கு என்ன பயம்?” என்று வீம்பாக பதில் கொடுத்தார் ருக்மிணி.

“இவனோட இனி ஜாக்கிரதையா இருக்கணும்.” என்று அசால்டாகப் பதில் கொடுத்து விட்டு அவன் சாப்பாட்டைத் தொடர்ந்தான் ஜெய்.

ருக்மிணியின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியே அவன் சொன்னது சரிதான் என்று சொல்லாமல் சொல்ல உடனே பாலகிருஷ்ணன் ஜெய்யை அணைத்துக் கொண்டு,”ப்ரிலியண்ட்.” என்றார்.  

ருக்மிணியோ,”பகவானே(baghawanae).” என்றார்.

“நோ..நோ…நோ பகவானே..ஸே பாட்டே (bottae).” என்றான் ஜெய்.

“போடா..நேக்கு பகவான் தான்.” என்று சொல்லி, சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்யின் தட்டில் சாஸ்திரிகள் மாமா கொண்டு வந்திருந்த பிரசாதத்திலிருந்து இரண்டு கொழுக்கட்டைகளை வைத்தார்.

உடனே,“என்ன ம்மா நீ..இப்படி என்னை ஒவர்ஸட்ஃப் செய்யறே.” என்று கோபப்பட்டான் ஜெய்.

“பிரசாதம் டா..சாப்பிடு..விக்னத்தை களைஞ்சு, கேட்ட வரத்தைக் கொடுக்கற விநாயகரோடது.” என்றார் ருக்மிணி.

அவன் தட்டில் போட்ட இரண்டு கொழுக்கட்டைகளைத் தீவிரமாகப் பார்த்து கொண்டிருந்தான் ஜெய்.  ஒன்று எல்லாரும் செய்வது போல் சிமிழ் வடிவத்தில், சாதாரண தோற்றத்துடன் இருக்க, மற்றொன்றும் அதே வடிவத்தில் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கோடு இருந்தது. குமிழ் போல் இருந்த இடத்திலிருந்து கீழ்வரை  கொழுக்கட்டை இரண்டு பிரிவாக தெரிந்தது. கொழுக்கட்டையின் குமிழ் பிள்ளையாரின் கிரீடமானது, அதற்கு கீழே ஒற்றைக் குங்குமப் பூ திலகமானது, இரண்டு மிளகு இரண்டு கண்களானது, இரண்டு பாதாம் துண்டுகள் இரண்டு தந்தமானது.

அவன் தட்டை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ஜெய்யிடம்,”குங்குமப் பூ, பாதாம் யூஸ் பண்ணியிருந்தாலும் மிளகை வைச்சு உப்புக் கொழுக்கட்டைக்குன்னு குறிப்பு கொடுத்திருக்கா.. வித்தியாசமான லுக்..நன்னா பண்ணியிருக்கா.” என்றார் ருக்மிணி.

“யெஸ்..A2I2.” என்றான் ஜெய்.  

“இந்த AIயை கொஞ்ச நாழி மறந்திட்டூ நன்னா சாப்பிடு ஜெய்.” என்றார் ருக்மிணி.

என்ஜினியரின் இன்ஸ்பிரேஷ்னான டீச்சரோ ஆரம்பக்கட்டத்தில் இருந்தாள் ; இன்ஃபர்மெஷன் கலெக்‌ஷன் (Information collection). டீச்சரின் இன்ஸ்பிரெஷனான என்ஜினியரோ கடைசி கட்டத்தில் இருந்தான் ; டேட்டா கான்ஃபிகரெஷன் (Data configuration). இருவருக்குமிடையே நோ கனெக்‌ஷன் (no connection).

அந்த இரண்டு கொழுக்கட்டைகளையும் ரசித்து, ருசித்து சாப்பிட்ட ஜெய், அவனின் AI இரண்டுமே  உணரவில்லை, அவனுடைய காண்டக்ட் லிஸ்ட்டில் பவியைச் சேர்ப்பதற்காக பிள்ளையார் எடுத்த முதல் அதிரடி ஆக்‌ஷன் பவியின் கொழுக்கட்டைப் ப்ரிப்பரெஷனென்று (preparation).

**********

From here, the story is based on discussions.

Information  – source or or point of origin of thought and after that the thoughts are termed as Data. This story is written based on this assumption.