Advertisement

அத்தியாயம் -37(2)

 குறைந்த கால இடைவெளியில் ட்ரஸ்ட்டீ மாற்ற பட்டது ஏன் என கேட்டார்.

எனது வேலைப் பளு காரணமாக என் மனைவிக்கு பொறுப்பு கொடுத்தேன், அவள் கர்ப்பமாகவும் அவளது உடல் நிலை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஆகவே மீண்டும் நானே பொறுப்புக்கு வந்து விட்டேன் என்றான் பிரவா.

“அப்படியா… உங்க சித்தப்பா வேற மாதிரி சொன்னாரே? உங்க வைஃப் நேர்மையா நடந்துக்கிறதால உங்களால பொய் கணக்கு எழுத முடியலை, அதனால திரும்பவும் நீங்களே வந்திட்டதா அவர் சொன்னது பொய்யா?” எனக் கேட்டார் அதிகாரி.

“அந்நிய செலவாணி கேஸ்ல அரெஸ்ட் ஆகியிருக்கிறவர் பொய் எல்லாம் சொல்ல மாட்டார்தான் ஸார், நீங்க ஆய்வு பண்ணி அறிக்கை ரெடி பண்ணுங்க” என்ற பிரவா, மலரிடம் “கமிட்டிக்கு நம்ம ஸ்டாஃப்ஸ் கோ ஆபரேட் பண்ணுவாங்க, நீ கிளம்பு” என்றான்.

பிரவாகனை பொருட்டாகவே நினைக்காமல் தன் வேலையில் கவனம் வைத்தார் அதிகாரி.

மலருடன் அங்கிருந்து வெளியில் வந்த பிரவா, “வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு” என்றான்.

“என்னத்த போய் ரெஸ்ட் எடுக்க?” கவலையாக சொன்னாள்.

“அக்கவுண்ட்ஸ் க்ளியரா இருக்கு. கான்ட்ராக்ட் விஷயம் எல்லாம் ஒண்ணுமில்லாம செய்திடலாம். கொஞ்ச நேரத்துல ட்ரஸ்ட் மெம்பர்ஸ்கிட்ட என்கொயர் பண்ண போறார், ம்ம்ம்… அவர் மொத்தமா குடையட்டும், அப்பதான் எங்கங்க அடைக்கலாம்னு ஐடியா கிடைக்கும்” சர்வ சாதாரணமாக சொன்னான்.

“இவ்ளோ கூலா சொல்றீங்க, அவர் கொடுக்க போற ரிப்போர்ட் வச்சுதான்…”

“ஆமாம் அவர் ரிப்போர்ட் வச்சுத்தான், ஆனா நமக்கு பாதகமா எப்படி ரிப்போர்ட் கொடுப்பார்? எல்லாம் நமக்கு சாதகமாதான் இருக்கும்” என்றான்.

இவனை நோக்கி வந்த தமன், “ஏகாம்பரம் ஸாரை தூங்க வச்சாச்சுங்க ஸார். டூர் போயிருக்க இந்த ஆஃபிசரோட ஃபேமிலிய கூட எங்க இருக்காங்கன்னு ட்ரேஸ் பண்ணியாச்சுங்க ஸார். இவர் வைஃப், மகன், மருமக, பேரன் எல்லாரும் இப்ப கேரளால இருக்காங்க ஸார், எக்ஸாக்ட் லொகேஷன்…” என்றவன் ஒரு சுற்றுலா தளத்தின் பெயரையும் சொன்னான்.

பிரவா அவனை முறைக்க, அருகில் நின்றிருந்த மலரை அப்போதுதான் கவனித்த தமன் தன் தலையில் தட்டிக் கொண்டே பாவமாக விழித்தான்.

மலர் தன் கணவனை கண்களாலேயே சுட்டெரிக்க, “ஒன்லி மிரட்டல்தான் மலர், யாரையும் ஹார்ம் பண்ண மாட்டேன்” என்றான் பிரவா.

“அவர் ஃபேமிலி பக்கம் யாராவது போனா நான் சும்மா இருக்க மாட்டேன்” என கடுமையான குரலில் சொன்னாள்.

“இத இப்படித்தான் டீல் செய்யணும் மேடம். அவர் ரிப்போர்ட் சாதகமா இல்லைனா ட்ரஸ்ட், ஹாஸ்பிடல் எல்லாம் நம்ம கை விட்டு போய்டும். கமிட்டில இருக்க மத்த நாலு பேருக்கும் ஆல்ரெடி நிறைய கொடுத்தாச்சுங்க மேடம், இவர் மட்டும்தான்…” தமன் விளக்கிக் கொண்டிருக்க, அவன் முதுகில் தட்டிய பிரவா, “என்னடா ஆச்சு உனக்கு?” என இரைந்தான்.

மலர் கோவமாக டியூட்டி மருத்துவர் அறைக்குள் சென்று விட்டாள்.

“வாய வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியா? அவகிட்ட என்ன சொல்லணும் சொல்லக் கூடாதுங்கிற அறிவு கூட கிடையாதா மேன் உனக்கு?” என தமனை கடிந்தான் பிரவா.

“மேடத்தை சமாதானம் செய்யதான்…” வாக்கியத்தை நிறைவு செய்யாமல் திணறினான் தமன்.

“வந்து பேசிக்கிறேன் உன்னை…” கோவமாக சொன்னவன் மலரிடம் சென்றான். அவள் தலையை கையில் தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“எல்லாமே ஃப்ரீ ஹாஸ்பிடல் நம்மள விட்டு போகாம இருக்கதானே மலர்? நான் நல்லவனா இல்லையாங்கிறத ஆப்போசிட்ல உள்ளவங்கதான் தீர்மானம் செய்றாங்க. இப்ப என்ன நிலைமைனு பார்க்காம இவர் ஏன் பழச எல்லாம் குடையறார்? நீ அப்செட் ஆக எதுவும் இல்லை இதுல” என்றான்.

நீர் திரையிட்ட கண்களோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “தப்பு செய்றவங்கள நீங்க மிரட்டறதையே என்னால டாலரேட் செய்ய முடியலை. நேர்மையா இருக்கிறது குத்தம்னு இவரை இவர் ஃபேமிலி வச்சு கார்னர் பண்ணுவீங்களா?” எனக் கேட்டாள்.

“அடடா… யாரையும் எதுவும் செய்ய போறதில்லை. சும்மா…”

“அடுத்த வார்த்தை பேசாதீங்க. அப்படி நீங்க செய்யக் கூடாதுன்னா கூடாதுதான்” கட்டளையாக சொன்னாள்.

அவளை எரிச்சலாக பார்த்தவன், “எதுவும் செய்யல, போதுமா? கிளம்புடி முதல்ல” என்றான்.

எழுந்து கொண்டவள் அவன் கையை பிடித்துக்கொண்டு, “இப்பன்னு இல்ல எப்பவும் இப்படி செய்யக் கூடாது, என் மேல பிராமிஸ்” என்றாள்.

“மலர்!” பற்கள் நெறி பட அழைத்தவன், “இந்த டைம்ல போய் பிராமிஸ் அது இதுன்னு… செய்ய மாட்டேன்னா செய்ய மாட்டேன்” என்றான்.

துப்பட்டா கொண்டு தன் கண்களின் ஈரத்தை ஒற்றி எடுத்தவள், “பிஸிகலா துன்புறுத்தாம இப்படி மிரட்டி பயப் படுத்தி மனசால துன்புறுத்துறது கூட ஹார்ம்தான்” என்றாள்.

“என் வசதிகள் எனக்கு போதும்னு வறட்டு பிடிவாதத்தோடு நேர்மையா இருக்குறது ரொம்ப ஈஸி மலர். சுத்திலும் அயோக்கியனுங்களா இருக்கிறப்போ ஒரு பெரிய இன்ஸ்டிடியூசன்ல எல்லா நேரத்திலும் நேர் வழில போயே காரியம் சாதிக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனத்தோட உச்சம். பிராக்டிகாலிட்டி தெரியாம பேசக்கூடாது” என்றான்.

“ஓகே, மிரட்டல் வேணாம், வேற ஏதாவது யோசிங்க” என்றாள்.

“நான் பார்த்துக்கிறேன்”

முறைத்துக் கொண்டிருந்தவனை கெஞ்சலாக பார்த்துக் கொண்டே கிளம்ப தயாரானவள் குழந்தைகளின் அசைவை உணர்ந்தாள்.

உடனே அவனது கையை எடுத்து தன் வயிற்றில் வைத்தாள். குழந்தைகளின் அசைவை உணர்ந்த அவன் முகத்திலும் மனதிலும் அந்த சூழலின் சூடு குறைந்து குளுமை பரவியது.

“ட்ரை டு பீ கைண்ட் அண்ட் கம்பாஸினேட் (கருணையும் இரக்கமும் உள்ளவராக இருக்க முயற்சி செய்யுங்கள்)” என்றாள்.

அவளை லேசாக தோளோடு அணைத்து, “கண்டதையும் யோசிச்சிட்டே நைட் சரியா தூங்கல போல நீ. ரொம்ப டயர்டா தெரியற” என்றவன் அதற்கு மேல் அவள் அங்கிருக்க அனுமதிக்கவில்லை.

மலர் சென்ற பின் அவள் முன்னிலையில் அதிகாரியின் குடும்பம் பற்றியும் லஞ்சம் கொடுத்தது பற்றியும் பேசியதற்காக தமனை திட்டினான் பிரவா.

“ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபீசரா இருக்கார். நெகடிவா எதுவும் நடந்திடுமோனு டென்ஷன் ஆகிட்டேன் ஸார்” என காரணம் சொன்னான்.

“எந்த டென்ஷனும் வேணாம். அவர் வேலைய அவர் செய்யட்டும், தலையிட கூடாதுன்னு என் வைஃப் சொல்லிட்டா. என்ன வேணா ரிப்போர்ட் கொடுக்கட்டும். அவர் ரிப்போர்ட்னால ட்ர்ஸ்ட்டுக்கு எந்த ஆபத்தும் இல்ல” என்றான் பிரவா.

தமன் கேள்வியாக பார்க்க, “அவர் ரிப்போர்ட்தான் கொடுக்க முடியும். எதுவா இருந்தாலும் செயல் படுத்த போறது கவர்ன்மெண்ட்தான்” என்றான்.

இப்போதும் தமன் புரியாமல் பார்க்க, “எல்லாத்துக்கும் விலை இருக்கு தமன், இப்ப சூழல் நமக்கு சாதகமா இல்லாததால காஸ்ட்லியா இருக்கும், அவ்ளோதான் மேட்டர்” என சொல்லி தோள்களை குலுக்கினான்.

“ஸார்?”

“ரூலிங் பார்ட்டி இங்க நடத்துற கேம்பெயின் செலவு முழுக்க நம்மளது. பொதுப் பணித்துறை அமைச்சர் மகளுக்கு லாஸ்ட் இயர் மெடிக்கல் காலேஜ்ல சீட் அலாட் பண்ணினோமே…” என நினைவு கூர்ந்தான்.

முதலாளியின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட தமன் ஐந்து நிமிடங்களில் அந்த அமைச்சர் ஈரோட்டில் அவரது வீட்டில் இருப்பதாக தகவல் சொன்னான்.

 “அவரை நைட் மீட் பண்ணணும், பேசிட்டு சொல்லு” என்றவன் ட்ரஸ்ட் உறுப்பினர்களை சந்திக்க மீட்டிங் ஹால் சென்றான். கமிட்டியின் கேள்விகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என முன்னரே விளக்கியிருந்தான்தான். இப்போது இன்னொரு முறை சுருக்கமாக சொன்னான்.

நான்கு மணி நேரம் ட்ரஸ்ட் உறுப்பினர்களை விசாரணை செய்தது குழு. இன்னொரு நாள் வர வேண்டி இருக்கும் என சொல்லி அன்றைய ஆய்வை முடித்துக் கொண்டனர்.

வீட்டுக்கு செல்லாமல் இரவே ஈரோடு சென்று விட்டான் பிரவா.

 என் ஆர் ஐ மாணவியின் பெற்றோர் வந்திருக்க அவர்களின் தேவைகளை கவனித்தான் தமன்.

விஷ்ணுவின் செயல்களால் கல்லூரியில் நிலைமை கட்டுக்குள் இருந்தது.

ஈரோட்டில் இருக்கும் அமைச்சருடன் நள்ளிரவு வரை பிரவாகன் பேசிய பேரம் அவனது திருப்திக்கு படியவில்லை. சமயம் கிடைத்தால் என்ன லாபம் பார்க்கலாம் என நினைக்கும் அரசியல்வாதிகள்தானே அதிகம். அவரிடம் அதீதமாக தொங்க பிரியப் படாமல் கிளம்பி விட்டான்.

அடுத்த நாளே முதலமைச்சரை சந்திக்க முன் அனுமதி பெற முயன்றான். தேர்தல் நேரம் என்பதால் அனுமதி கிடைப்பது தள்ளிப் போனது. அவரை சந்தித்து விட்டால் பிரச்சனையை சரி செய்து விடலாம் என நம்பிக்கையாகவே இருந்தான்.

இரண்டு நாட்களில் அந்த மாணவிக்கு செயற்கை சுவாசம் நீக்க பட்டு விட்டது. ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டாள்.

அவளுடைய காதலன் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும் அவனுடன் பிரேக் அப் ஆகியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்தாள் அந்த பெண்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement